கஞ்சத்துக்கும் சிக்கனத்துக்கும் தத்துனூண்டுதான் வித்யாசம்.
சில சமயங்களில், இக்கரையிலிருந்து அக்கரைக்கு நம்மையே அறியாமல் தாண்டித் தொலைத்து விடும் தருணங்கள் ரொம்பக் கேவலமானவை.
நான் கஞ்சம் கிடையாது; பெருசா சிக்கனம் பண்றவனும் இல்லைன்னே தோணுது;
செலவு பண்ண பெருசா யோசிச்சதெல்லாம் கிடையாது. ஊர் சுத்தரதலேருந்து, புது எலெக்ட்ரானிக்ஸ் வாங்கரது, அடிக்கடி கேளிக்கை வகையராக்களுக்கு செல்வது, இப்படி, எதிலும் குறை வைத்ததில்லை. அதாவது, எச்சைக் கையால் காக்கா ஓட்டாத கேட்டகரியில்லைன்னு சொல்ல வாரேன்.
ஆனா, சில தேவையில்லாச் செலவு ஐட்டங்களெல்லாம் யோசிச்சு ஒதுக்குவதுண்டு. உதாரணத்துக்கு, புது சொக்காவெல்லாம் காஸ்ட்லியா வாங்கரதிலெல்லாம் ஈர்ப்பு கிடையாது. சாதா கடைக்கு போயி, சாதா சட்டைதான் வாங்கிப் பழக்கம்.
என் வழி தனி வழி; நான் பாட்டுக்கு என் 'சிக்கன' வாழ்க்கை வாழ்வதில் யாருக்கும் ப்ரச்சனை இருக்கப் போவதில்லைன்னே இது நாள் வரை வண்டி ஓடிக்கிட்டிருந்தது. (தங்க்ஸுக்கு நம்ம வழி பழகிப் போச்சு, சொல்லிப் பிரயோஜனம் இல்லைன்னு)
ஆனா பாருங்க, சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள், ரொம்பவே டேமேஜாயி, என் பேரும் கெத்தும், டங்குவாரா கிழிஞ்சு தொங்குது.
அதாகப்பட்டது, கொஞ்ச நாளுக்கு முன்னாடி, வூட்டுக்கு தங்க்ஸின் சொந்தக்காரப் பொண்ணும், அவளின் நண்பர்களும் வந்தாங்க. ரெண்டு மூணு நாளு தங்கி, ஊர் சுத்திப் பாத்துட்டுப் போகலாம்னு ப்ளான்.
என் வீட்டில், தேவையான விஷயங்கள் எல்லாம் கீது; இந்த மாதிரி ஆத்திர அவசரத்துக்கு, air-bed ஒண்ணு இருக்கு. எப்பயாச்சும் வர விருந்தாளிக்குன்னு ஒரு பெரிய படுக்கை எல்லாம் வாங்கி வச்சு இடத்தை அடைக்க வேணாம்னு, இந்த ஏற்பாடு.
நண்பர்கள் குழாமுக்காக air-bedல் காத்தடிச்சு, குட் நைட் சொன்னா, மறு நாள் காத்தாலைக்குள்ள காத்தெறிங்கிப் போச்சு சர்வேஸ்னு, கேவலமான ஒரு லுக்கோட குட் மார்னிங் சொன்னாங்க;
இம்புட்டு வருஷமா டாலரை அள்ளிக்கினு இருக்கர, ஒரு extra bed கூட வாங்கி வைக்க முடியலையான்னு கேவலமான ஒரு லுக்கு.
air bedக்கு 'பஞ்சர்' ஒட்டி, மாரியாத்தாவை வேண்டி அடுத்த நாள் காத்தடிச்சதுல, கெட்டியா நிக்குது. அப்பாடா!
இது சிக்கனமா? கஞ்சத்தனமா?
குட் மார்னிங் சொல்லி குளிக்கக் கெளம்பினாங்க. எங்க வீடு பாருங்க, 30 வருஷப் பழசு. ப்ளம்பிங் எல்லாம் அந்தக் காலத்து டைப்பு. எங்க வூட்ல ஷவரில் சுடுதண்ணி தொறந்து விடும்போது, பக்கத்துவீட்ல பச்சைத் தண்ணி பைப்பை தொறந்து விட்டா, இங்க தண்ணி தீப்பிழம்பு மாதிரி திடீர்னு சூடா கொட்டும். உஷாரா இல்லன்னா, சுட்டுடும். அவங்களுக்கு, இதை எல்லாம் விவரிச்சுச் சொல்லி, குளிக்க அனுப்புணா, திரும்ப அதே கேவலமான லுக்கு.
workaround இருக்கர ப்ரச்சனை? இதை ஏன் பெருசுபண்ணி, புது வீடெல்லாம் தேடணும்? திரும்ப மூவிங் செலவு, அது இது, இதெல்லாம் எதுக்கு?
இது சிக்கனமா? கஞ்சத்தனமா?
மேலும் இமேஜ் டேமேஜ் ஆகி, ஸ்ஸ்ஸ்னு நகந்தப்பரம்தான் ஞாபகம் வந்துது, ஷாம்பூ காலியாகி மூணு நாள் ஆயிடுச்சுன்னு. கடைக்குப் போனா இது மறந்து போயிடும், அடுத்த முறை வாங்கணும்னு நெனைச்சிருந்தேன். அதுவரை, காலியான ஷாம்பூ பாட்டிலில், தண்ணிய ஊத்தி, என் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருந்தேன். உள்ளப் போனவங்க, குளிச்சுட்டு வந்ததும், மீண்டும் ஒரு கேவல லுக்கு.
இதுல என் தப்பு நெசமா இல்லீங்க. ஆனாலும், இதை சிக்கனமா எடுத்துப்பாங்களா? கஞ்சத்தனமாவா?
அப்பாலிக்கா எல்லாரும் கெளம்பி ஊர் சுத்தப் போனோம். சமீபத்தில் stick shift கத்துக்கலாம்னு, ஒரு பழைய காரை வாங்கி வச்சிருக்கேன். ஜனவரியில் இந்த காரை வாங்கும்போது, செம குளிர். ஏசியெல்லாம் வேலை செய்யுதான்னு சரியா கவனிக்க முடியலை. இப்ப அடிக்கர வெயிலுக்கு, ஏசியில்லாம நெம்ப நெம்ப கஷ்டம்.
ஏசி சரியா வேலை செய்யாதுங்கரது மறந்து போயி, இந்த கும்பலை, 'நல்ல' காரில் கூட்டிச் செல்லாமல் இதில் ஏற்ற்க் கெள்ம்பினோம். கொதியோ கொதின்னு கொதிக்குது. நானும் ஏசியை போடறேன், ஃபுல்லா வெக்கரென், சூடாதான் காத்து வருது அதுல. பின்னாடி ஒக்காந்த கும்பல் "ஸ்ஸ்ஸ்ஸ் டூ ஹாட் யா"ன்னு அலப்பரை பண்ண, இந்த முறை தங்க்ஸ் என்னை பாத்து ஒரு கேவலமான லுக்கு விட்டா.
இது எந்த வகையை சேரும்?
மொத்தத்தில் இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆகிடுச்சு. ஊர் பூரா விஷயம் பரவிடும். வீழ்ந்த இமேஜை சரிசெய்ய சுலப வழியும் இல்லை. ஹ்ம்!
சுட சுட காரில் போயி, 'வேலு'ம், 'தத்தை'யும் பாத்து, அங்க பல்பு வாங்கின கதையை ஏற்கனவேதான் பொலம்பியாச்சே :(
"கெளம்புங்க, காத்து வரட்டும்" இது வூட்டுக்கு வந்த பொண்ணு அடிக்கடி சொன்ன டயலாக். ஒட்றாங்களாம் நம்மள.
கெளம்புங்க, காத்து வரட்டும் :)
கார்ட்டூன் புரியாதவங்க, பின்னூட்டவும் ;)
கார்ட்டூன் பாத்து கண்ணு கெட்டவங்களுக்கு, குளிர்ச்சியா ஒரு படம்:
15 comments:
ஃபிப்ட்டி ஃபிப்ட்டி:-)))))
//கார்ட்டூன் புரியாதவங்க, பின்னூட்டவும்//
எச்சக் கையால காக்காவைக் கூட ஒட்டாதவங்கன்னு எதோ சொல்வாங்களே, அது இதுதான?
ஒண்ணும் தப்பில்லை ஆசானே... இதெல்லாம் நாட்டுல ஜகஜம்...
:))
பறவைகள் கொத்திவிட்டனவா?
Unga wife oda manatha vaangiteengaley.....avanga reaction eppudi irunthuchi???
அட ஃப்ரீயா வுடுவீங்களா?, இதுக்கெல்லாம் பஜிவு போடுறீங்களே?
கார்ட்டூன் நெல்லாத்தான் கீது நைனா.
Danks Danks Danksu!
///பெரியசாமி said...
பறவைகள் கொத்திவிட்டனவா///
அவ்வ்வ்வ் :)
////துளசி கோபால் said...
ஃபிப்ட்டி ஃபிப்ட்டி:-)))))
////
:(
இன்னாது. அநன்யாக்கா சரி வுடுங்கனு சொல்றாங்க. அதுவே அவங்க ரங்கசா இருந்திருந்தா என்ன பண்ணி இருப்பாங்கனு கற்பனை பண்ணி பார்த்ததிலே த்ரில்லர் படம் பார்த்த மாதிரி இருக்கு.
சப்பை எழுத்து. 10 மைனஸ் கள்ள ஓட்டுடாவது போடணும். இருங்க போட்டுட்டு வர்றன். ஏன் தெரியுமா? அவங்க போனப்புறம் உங்க தங்கஸ் என்ன பண்ணினாங்கனு சொல்லவே இல்லையே. அதனால தான் அவ்ளோ கடுப்பு. ஏதாவது இன்டரெஸ்டிங்கா கிடைக்கும்னு பார்த்தா, சப். பார்ட் 2 போடலன்னா நாங்க வெளிநடப்பு செய்வோம்.
பெயர் சொல்ல விருப்பமில்லாதவர் விளக்கத்துக்கு ரொம்ப நன்றி:))!! அந்தப் படம்:))))!
பாருங்க எங்க ஊர் பேச்சு வழக்கில இருக்கும் அந்த வார்த்தையை எழுத்தில் இப்பதான் உங்க பதிவின் தலைப்பா பார்க்கிறேன்:))!
கஞ்ச.. சாரி கஷ்டப் பட்டு கொடுத்திருக்கும் விளக்கங்கள் ஏற்கப்பட்டன!!
அனாமிகா, பார்ட்2 எல்லாம் கிடையாது. இப்பவே சுற்றத்திலும் நட்பிலும் சில பேர் பதிவை படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. புகழ் மேலும் பரவி டாமேஜ் ஆக வேணாம்னு பார்ட்2 ஐடியா ட்ராப்ட் :)
ராமலக்ஷ்மி, விளக்கங்களை ஏற்றுக் கொண்டடதர்க்கு நன்றீஸ் :)
Post a Comment