வேலு (Whale) பாக்க பசிஃபிக் சமுத்திர ஓரம் இருக்கும் 'மாண்ட்டரே பே' என்ற ஊருக்கு போனோம். வழக்கம் போல் வேலுக்கும் எனக்கும் ஏழாம் பொறுத்தம் போல.
"கடலில் ஒரே கொந்தளிப்பு. மன திடமில்லாதவங்கெல்லாம் எஸ்கேப் ஆகிக்கங்க. வந்தே தீருவேன்னு நெஞ்சுல மஞ்சா சோறு இருக்கரவங்களெல்லாம், இந்த மாத்திரைய சாப்பிட்டுட்டு, கப்பலுக்கு வாங்க"ன்னு, காப்டெயின் சொன்னாரு.
"என்னாய்யா மாத்ர இது?"ன்னு கேட்டா, கடல் கொண்தளிப்புல, கப்பல் கன்னாபின்னான்னு ஆடும். அந்த ஆட்டத்துல, வயிறு கலங்கி உவ்வே பண்ணாம இருக்க மாத்திரைன்னாரு.
இன்னாய்யா கிண்டலு பண்ற, நாங்க யாரு? எத்தினி கடலு கடந்து வந்துருக்கோம், இதெல்லாம் எம்மாத்திரம்னு, மாத்திரையை, தலீவரு மாதிரி, கட்ட வரலுக்கு மேல வச்சு, சுவாய்ங்க்னு சுவீங்கம் மாதிரி விட்டெறிஞ்சேன் கடலுக்கு.
வயிறு கலங்கிய மீனேதாவது, சாப்டு நல்லாருக்கட்டும்னு உள்ளூர வேண்டிக்கினேன்.
கப்பல் கெளம்பிச்சு. பத்தே நிமிஷம் தான், வ்யிறு பெசஞ்சு, தலை வலிச்சு, காத்தெறிக்கின பலூன் கணக்கா ஒரு ஓரமா குந்திக்கினே, எப்படா மூணு மணி நேரம் முடியும், எப்படா கப்பல் கரையை தட்டும்னு ஒவ்வொரு நிமிஷமும், டார்ச்சரா போச்சு. விட்டெறிஞ்ச மாத்திரை கப்புலுக்கு உள்ளையே விழுந்திருந்தா, சொரண்டி எடுத்தாவது முழுங்கி, டூருக்கு குடுத்த காசுக்கு வேலு பாத்திருப்பேன்.
வேலு பாரு வேலு பாருன்னு, கப்பித்தான் அப்பப்ப கூவுனாரு, தூரத்துல தத்துனூண்டா கறுப்பா கடலுல ஏதோ தெரிஞ்சுது. என்ன வேலோ, என்ன சூலமோ, போங்கய்யா, கரையேத்திவிடய்யான்னு, கப்பித்தானுக்கு, அலகுகுத்தி காவடியெடுக்காத குறையா, மனசால வேண்டிக்கினு, ஒருவழியா கரையேறினோம்.
இதுவரை அஞ்சாறு வாட்டி, இந்த வேலு பாக்கும் படலம் நடந்திருக்கு. ஒரு தபா கூட டிஸ்கவரி சேனல்ல வர மாதிரி, வேலு பாத்ததே இல்லை. கறுப்பா ஏதோ கட்டை மெதக்கராமாதிரி தெரியும். ஒவ்வொரு தபாவும், இனி இந்த வெத்து வெட்டுக்கு வரக்கூடாதுன்னு தோணும், ஆனா, என்ன மாயமோ தெரீல, வருஷத்துக்கு ஒரு தபா இந்த மாதிரி வந்து பல்பு வாங்கிட்டு போயிடறேன்.
ட்ரிப்பில் பல்பு வாங்கிட்டு, கரையேறி, எத்தையாவது சாப்பிடலாம்னு தேடினா, ஒரு மனுஷன், பல பல கிளிகளை வச்சுக்கினு ஷோ காட்டிக்கினு இருந்தான்.
வந்ததுக்கு, இதையாவது படம் புடிப்போம்னு க்ளிக்கியது கீழே.
அ. ரொம்ப நேரமா க்ளிக்கிக்கினே இருந்தேன் எல்லா தத்தைகளையும். இந்த பச்சக் கிளி திடீர்னு, கொஞ்சம் குணிஞ்சு என்னை ஒரு லுக்கு விட்டுது. அப்ப கிளிக்கியது.
ஆ. இந்த மாதிரி ஒரு அழகு தத்தை நான் பாத்தது இல்லை. பாத்த ஒடன, கைல இருக்கரதை எடுத்து கொடுத்து, பின்னாடியே போயிடலாம் போல, ஒரு 'சாமியார்' தத்தை. செம லுக்குல்ல?
இ. தத்துனூண்டு தெரிஞ்ச வேலு
ஈ. சக கப்பல் பயணி. குட்டிப் பாப்பாவின், நைனாக்கு டமில் படிக்கத் தெரியாது என்ற ஒரே மன தைரியத்தில், இந்தப் படம். யாரும் போட்டுக் குடுத்தறாதீங்கப்பு.
ஈ. இப்பெல்லாம் பறவைகள் மேல் எனக்கு ஈர்ப்பு. என் மேலும் பறவைகளுக்கு ஈர்ப்பு போல. கப்பலை பிந்தொடர்ந்து வந்த ஸீகல்ஸ்.
10 comments:
paavam again... whale parkka mudiyalaiyaa? I tried in long beach , and almost about to vomit... just escape...
>>
விட்டெறிஞ்ச மாத்திரை கப்புலுக்கு உள்ளையே விழுந்திருந்தா, சொரண்டி எடுத்தாவது முழுங்கி, டூருக்கு குடுத்த காசுக்கு வேலு பாத்திருப்பேன்.
>>
LOL :-)
better luck next time.. as usual nice writing thalai..
டாங்க்ஸ் பாவக்காய்.
நானும், இங்கே மூணு தபா பாத்தேன். san diego கிட்ட ஒரு தபா பாத்தேன். ஒன்னியும் பேரலை :)
கப்பல் அனுபவம் ‘கலக்கல்’:)!
கிளி மூக்கும் முளியுமா நல்லாயிருக்குன்னு ஃப்ளிக்கரில் சொல்லியாச்சு.
சாமியார் தத்தை பயமுறுத்துகிறார். ஒரிஜனல் நிறமா இது?
டமில் தெரியா நைனாக்களின் பாப்பாக்கள் தொடர்ந்து இடம் பெறுகிறார்கள்:))!
ஸீகல்ஸ் சூப்பர்.
என்னுடைய Sanfrancisco - Bay Area, Montrey Bay, Caramel அனுபவங்கள் நினைவிற்கு வருகின்றன ... அந்த ஒளிப்படங்களை நான் இன்னும் பதிவிடவில்லை :)
//இதெல்லாம் எம்மாத்திரம்னு, மாத்திரையை, தலீவரு மாதிரி, கட்ட வரலுக்கு மேல வச்சு, சுவாய்ங்க்னு சுவீங்கம் மாதிரி விட்டெறிஞ்சேன் கடலுக்கு.
வயிறு கலங்கிய மீனேதாவது, சாப்டு நல்லாருக்கட்டும்னு உள்ளூர வேண்டிக்கினேன்//
உண்மையாலுமா?
உங்களுக்காக திமிங்கலம் அந்தரத்துல எகிறி நின்னு முழுசா தெரியற போஸ் குடுக்க சொல்றேன் அடுத்த முறை :)
The Gull Shot is too Good !!!
Nice Candid of the small girl
African Grey Parrot looks Sleepy
Hasn't the Whale jumped that day ? Any shots of that ?
Danks everyone :)
Nathas, you must be a bird whisperer :). Yes! the grey parrot was sleepy. i took it when it opened its eyes for a brief moment.
என்னடா அது வேலு வேலுனு நானும் மண்டைய ஓடைச்சுட்டேன்... அப்புறம் பாத்தா அது whale ஆ? கஷ்டம்டா சாமி... கிளி போட்டோ சூப்பர்... நெஜமாவே நீங்க எடுத்ததா (!!!!!!!!)
அடே...இந்த பாப்பாவா... இவிக அப்பாரை எனக்கு நல்லாவே தெரியுமே... இருங்க இப்பவே தட்டி விடறேன் ஈமெயில்ஐ. அனேகமா law suit file பண்ணி சம்மன் வரும்னு எதிர் பாக்கலாம்....ஏதோ நம்மால ஆன நல்ல காரியம்... ஹி ஹி ஹி
@அப்பாவி தங்கமணி
ஐ லக் தட் புவ்வ்வ்வ்வ்வ்வ்ன்னாக்கா. ஹி ஹி.
அந்த இரண்டாவது பறவை, இவன்ல்லாம் நம்மள பாக்க வந்திட்டானேனு கேவலமா ஒரு லுக் விடுற மாதிரி இல்ல? ஹி ஹி
இங்கு கூட டால்பின் பார்க்க என்று ஒரு சிறு கப்பல் போகுது அதற்கு 20 ரியாலாம் அதோடு கூட அது வந்தா தான் பார்க்கமுடியும் என்ற டிஸ்கி வேறு!! பேசாமா ஜியாகிரபியில் பார்த்துக்கவேண்டியது தான்.
Post a Comment