நேத்து அமெரிக்க வாழ் இந்திய 'தேசி'களின் மேம்பாட்டுக்காக ஒரு மிக முக்கிய ஆய்வு நிகழ்த்தியதைப் பற்றி எழுதிக் கதறியிருந்தேன்.
இன்றைக்கு, நம்ம தமிழ் தேசிப் பண்பாளர்களின் அட்டகாசத்தைப் பத்திச் சொல்லி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த விழைகிறேன்.
CTAன்னு ஒரு தொண்டு ஸ்தாபனம். California Tamil Academy இதன் விரிவாக்கம். சில நூறு தொண்டார்வலர்கள் சேர்ந்து, தங்கள் சொந்த நேரத்தில், வார இறுதியில் ஒன்று கூடி, ஆயிரம் சிறுவர் சிறுமிகளுக்கு தமிழ் சொல்லித் தாராங்க. ஒரு குட்டி பல்கலைக்கழகம் மாதிரி செயல்படராங்க. பாராட்டத்தக்க அரிய பெரும் செயல்.
இதில் ஈடுபடும் தொண்டார்வலர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்தப் பள்ளியில், தங்கள் பிள்ளைகளைத் தமிழ் படிக்க அனுப்பி வைக்கும், டமில் தேசிகளை அதற்கு மேல் பாராட்ட வேண்டும்.
இந்த ஊர் வேளை பளுவில், கணவனும், மனைவியும் ஆளுக்கு ஒரு மூலையில் மாய்ந்து மாய்ந்து வேலை செய்து, அவர்களுக்கு ஹப்பாடான்னு உட்காரக் கிட்டும் வார இறுதி நாட்களில் பாதியை, தங்கள் பிள்ளைகள் தமிழ் பயிலச் செலவிடுவது, அருமையான விஷயம்.
சென்ற வாரம், இந்த CTAவின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இங்கே அருகில் உள்ள campbell நகரத்தில் ஒரு நல்ல அரங்கத்தை வாடகைக்குப் பிடித்து, கிட்டத்தட்ட 500 மாணவர்களின் (3 வயது முதல் 15 வயது வரை இருப்பாங்க) நிகழ்ச்சிகள், காலை எட்டுக்கு தொடங்கி, சாயங்காலம் 4 வரை வரிசையா நடந்தது. பாட்டு, நடனம், நாடகம், அது இதுன்னு அருமையா செஞ்சாங்க பசங்க.
ஆனா பாருங்க, இந்த வேடிக்கை பாக்க ஒக்கார கும்பல் இருக்கே, ரொம்பக் கொடுமை பண்ணாங்க. சின்னப் பசங்க, கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணி, அழகா பாட்டோ, நாடகமோ, நடனமோ அரங்கேத்தும்போது, அமைதியா இருந்து ரசிச்சுத் தொலைக்காம, சதா சர்வ நொடியும், தொணத் தொணத் தொணன்னு பேசிக்கிட்டே இருந்தானுங்க.
அஞ்சு நிமிஷத்து ஒரு தபா, ஒருங்கிணைப்பாளரும், அமைதி அமைதின்னு சொல்லிப் பாக்கறாரு, ஒரு பயலும் கண்டுக்க மாட்றான்.
இந்த இங்கிதம் தெரியா காட்டுமிராண்டி கும்பலை பத்தி முன்னமே தெரிஞ்சிருக்கும் போல, Silence Pleaseனு பெருசு பெருசா அட்டையில் எழுதி,மூணு நாலு தன்னார்வலர்கள், மேடைக்கு முன்னாடி, அப்பப்ப நடந்துக்கிட்டே இருந்தாங்க.
என்ன பண்ணியும், சில தடித் தோல் டமில் தேசிகளுக்கு எந்த சொரணையும் இல்லை. அவங்க பாட்டுக்கு அவங்க ஊர் கதையை பேசிக்கிட்டு, ரொம்பவே டார்ச்சர் கொடுத்துட்டாங்க.
பேசித் தொலஞ்சே ஆகணுங்கர கட்டாயம் இருக்கரவங்க, அரங்கத்தை விட்டு எழுந்து போய் பேசிட்டு வரணுங்கர இங்கிதம், எம்புட்டு படிச்சும், இம்புட்டு தூரம் வந்தும், நம்ம தேசிகளுக்கு இல்லாம போனது ரொம்பவே பெரிய சோகம்.
ஆனா, கெரகம் புடிச்சவனின், இயல்பே இதுதானான்னு கேட்டீங்கன்னா, அதுதான் இல்லை. இதே கும்பல், ஒரு அமெரிக்க நிகழ்ச்சிக்கோ, ஆங்கில சினிமா தியேட்டருக்கு, வேற ஏதாவது ஒரு கண்றாவிக்கோ போனா, தொரை மாதிரி வாய்ல வெரல வச்சுக்கிட்டு ஒக்காருவான்.
இது என்ன உளவியல் காரணமோ தெரியல. தேசிகள் ஒன்று பட்டால், எருமைக் கூட்டம் மாதிரி ஆயிடறோம். தனி மனித சுய டிஜிப்ளின் கொஞ்சம் கூட இல்லாத கூட்டம் நம்ம கூட்டம்!
ஹ்ம்!
CTAக்கு ஒரு ஓ! அடுத்த முறை, சைலன்ஸ் ப்ளீஸ்னு சொல்லிட்டு, ஒரு சாக்பீஸை எடுத்து அரங்கத்துக் கண்மணிகள் மேல விட்டெறியுங்க. அப்பவாச்சும் சொல்ப விநாடிக்கு, அமைதி கிட்டும்! ஸ்ஸ்ஸ்!
13 comments:
எங்க ஊரு விசயகாந்து ஒரு படத்துல வில்லன் கும்பலைப் பார்த்து சுட்டுப் போட்டுடுவேன்னு சொல்லுவாரு.. எங்க சுடு பார்ப்போம்ன்னு சொல்வாய்ங்க... உடனே அந்த குரூப்பில் நிப்பாட்டி வச்சு இருக்கும் போலிஸைச் சேர்ந்த டம்மி வில்லன்களை சுட்டுப் போட்டதும் எல்லாரும் ஓடிப் போய்டுவானுக... அது மாதிரி யாராவது நாலு ஆளை டம்மியா ரெடி பண்ணி வச்சு பேசும் போது மானம் போற மாதிரி கிழிகிழின்னு கிழிச்சா மத்தவய்ங்க அமைதியாகிடுவாய்ங்க... இது தான் டமிலனுக்கான டெக்னிக்.
அடுத்த வாட்டி சுரேஷ் கோபியை கூட்டிண்டு போங்க. மனுஷன் டயலாக் பேசினா போதும், வேண்டாத பார்ட்டிங்க எல்லாம் தலை தெறிக்க ஓடிடுவாங்க. ரிலாக்ஸ் சர்! வழக்கம் போல படம்-திங்க் அவுட் ஆஃப் தி பாக்ஸ்! சூப்பர்!
தமிழ் பிரியன் - sema idea-nga !!
LOL !! :-)
I'll recomend the same ..
Surveysan, same blood in Milpitas Hall, but you got more blood seems...
.. as usual.. nalla post..
அது தமிழனோட பிறவிக்குணம் சார்...
எதுக்கும் தமிழ்பிரியனோட ஐடியாவை செயல்படுத்தப் பாருங்க.. :))
தமிழ் பிரியன், நெஞமாவே சூப்பர் ஐடியா. நம்ம ஆளுங்களுக்கு ஏத்தமாதிரி இருக்கு.
CTAக்கு ஒரு ஈ.மடல் அனுப்பறேன் ;)
அநன்யா, அறுக்கரதுக்கு நெறைய பேர் இருந்தாங்க.
இருந்தும், வேலைக்காகலை.
எனக்கென்னமோ தமிழி பிரியனின் ஐடியா சூப்பரா வொர்கவுட் ஆகும்னு தோணுது. முயற்சி பண்ணிப் பாக்கணும், அடுத்த கூட்டத்துல ;)
பாவக்காய், டாங்க்ஸ்:)
முகிலன், நன்றீஸ். முயற்சி செய்யாம விடப் போறதில்லை. என் நண்பனையே ஏற்பாடு பண்றேன், மாத்தி மாத்தி திட்டிக்கறோம் ;)
CTAக்கு அனுப்பியாச்சு.
வணக்கம். சென்ற வாரம் நடந்த CTA 2010 ஆண்டுவிழா நிகழ்ச்சிகளை காண வாய்ப்பு கிட்டியது.
ரொம்ப அருமையா இருந்தது நிகழ்ச்சிகள்.
ஒரே வருத்தம், பார்வையாளர்கள் மத்தியில் இருந்த 'தொண தொண' பேச்சு.
அதை விட பெரிய வருத்தம், ஒருங்கிணைப்பாளர்களால், பார்வையாளர்களை 'அடக்க' முடியாதது.
அடுத்த முறை, சற்று அதிகமாக ப்ரயத்தனம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வளவு அழகாக ஒரு நிகழ்ச்சியை அமைத்து, அதன் முழுச் சுவையும் பருக முடியாமல் போவது, ரொம்பவே சோகம்.
http://surveysan.blogspot.com/2010/05/cta-2010.html
நன்றீஸ்!
சர்...
//
தனி மனித சுய டிஜிப்ளின் கொஞ்சம் கூட இல்லாத கூட்டம் நம்ம கூட்டம்!
//
இது பஞ்ச்..
நம்ம தமிழ் தேசி கூட்டம் மட்டும் இல்லை..மொத்த தேசி கூட்டமே தனிமனித ஒழுக்கம் இல்லாத கூட்டம் தான். அப்படி வளர்க்கப்பட்டாச்சு..:-(
வெளியிலே மத்த இடங்களுக்குப் போறப்ப ஒழுங்கா இருந்தாலும் நம்ம கூட்டங்கள்ல அப்படி இருக்குறத ஒரு சொகமா நினைக்கிறாங்களே என்னவொ?
தமிழன் என்றோர் குணம் உண்டு தனியே அவனுக்கு ஒர் குணமுண்டுன்னு இதைத்த தான் சொல்றது.
துபாயிலும் இதே கதை தான் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். கேட்டால் எப்போதாவது ஒரு முறைதானே நாமெலாம் சந்தித்து கொள்ள முடிகிறது என்பார்கள்.
தமிழ்பிரியன் ஐடியாவை டிரைப் பண்ணிபாருங்க.ஆனா வெர்க் அவுட் ஆகாதுன்னு தான் தோனுது.
ஏன்னா ரெண்டு நாளுக்கு முன் நடந்த எங்கள் கூட்டத்தில் அமைதியா இருக்கலைன்னா ”சுறா” படத்தைப் போட்டுருவோம்னு கூட மிரட்டிப் பார்த்தோம் , ம்ஹூம் யாரும் பயப்படலையே
இந்தப் பதிவின் சில பகுதிகளை உங்கள் தளத்தையும் லிங்க் செய்து என் பதிவில் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.
ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்.
நன்றி!!
no objects. links are always welcome :)
நன்றி!
Post a Comment