recent posts...

Wednesday, May 19, 2010

என் CEOவும் தேசிகளும்

தேசி: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இடப்பட்டிருக்கும் செல்லப் பெயர். 'பரதேசி'யின் சுறுக்கும் இது.

என் பழைய CEOவை உங்களில் சிலருக்கு நன்றாய் நினைவு இருக்கும். அவரு வேலையை விட்டுப் போய், புதிய CEO வேலைக்கு வந்து சில மாசங்களாச்சு. இவரும், திறமையான மனுஷன்.
நல்ல பேச்சுத் திறமை.
அதுவும், குறிப்பா motivational speech வழங்குவதில் அபாரமான திறமை இருக்கு இவருகிட்ட.
எவளோ நேரம் வேணும்னாலும், சலிப்பில்லாம கேட்டுக்கிட்டு இருக்கலாம் இவர் பேச்சை.

அப்பேர்பட்ட எங்க தலை, ஊர் ஊரா போய், உலகம் பூரா உள்ள எங்க கொம்பேனி மக்களிடம், சின்ன சின்ன கூட்டம் போட்டு, அவரின் எதிர்கால திட்டங்களை பேசி, ஒரு கலந்துரையாடல் செய்யறாரு. வழக்கமான கொம்பேனி மீட்டிங்குகளில் வரும், ஆயிரம் ஆட்கள் இல்லாமல், இந்த கலந்துரையாடல்களில், நூறு பேர் கிட்ட இருப்பாங்க.

சென்ற வாரம் ஒரு சுபயோக சுபதினத்தில், நானும் நூத்துல ஒருத்தனா போயி, கதை கேக்க ஒக்காந்தேன்.

மீட்டிங் ஆரம்பிக்கரதுக்கு ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி எங்க CEO மேக்-அப் எல்லாம் போட்டுக்கிட்டு (வீடியோ எடுத்தாங்க) ஜம்முனு வந்து நின்னாரு. வந்தவரு, சுத்தி ஒக்காந்திருந்தவங்க கூட்டத்துக்கு மத்தியில் சில பேருகிட்ட சிரிச்சு பேசிக்கிட்டு குசலம் விசாரிச்சுக்கிட்டு இருந்தாரு. அவருக்கு, பர்சனலா எல்லாரையும் தெரியாது, சும்மா 'நான் உங்களில் ஒருவன்'னு ஒரு இதைக் கொண்டுவர இப்படி ஒவ்வொருத்தர் கிட்டையும் 'பழகி'க்கிட்டு இருந்தாரு.

இதுல ஒரு விஷயம் அப்பட்டமா பளிச்னு தெரிஞ்சுது.

சிலிக்கான் வேலி(silicon valley)யில் உள்ள அநேகம் கொம்பேனி போலவே, எங்க கொம்பேனியிலும், 50% தேசிகள் தான் இருக்கோம்.
சுத்தி ஒக்காந்த கூட்டத்தில், randomஆ இன்னொரு வெள்ளைக் கார தொரைகிட்டை போயி எங்க CEO "ஹாய், எப்டீக்கீர?"ன்னு கேட்டா, அந்தாளும், ஒக்காந்துக்கிட்டே, "நான் நல்லாக்கீரேன்பா"ன்னு கேஷுவலா பதில் சொல்லிக்கிட்டு ஜாலியா பேசறான் தொரை.

இதே CEO, இதே கூட்டத்தில், வேறொரு இருக்கையில் இருக்கும், ஒரு 'தேசி' கிட்ட போயி நின்னு, "இன்னாபா சௌக்யமா"ன்னு கேட்டா, நம்ம தேசி, ஸ்டைலா ஒக்காந்துக்கினே "ஏதோ கீரேன்பா"ன்னு தொரை மாதிரி பதில் சொல்லாம, CEOவ பாத்ததும், நாட்டாமையை பாத்த கணக்குபிள்ளை கணக்கா, சடால்னு எழுந்து, துண்டை இடுப்புல கட்டிக்கிட்டு பணிவா நின்னு,"ஹிஹி நல்லா இருக்கேன்யா. நீங்களும் உங்க புள்ள குட்டிகளும் நல்லா இருக்கணும்யா"ன்னு பல்ல இளிச்சுக்கிட்டு அசடு வழிஞ்சுகிட்டு, ரொம்பவே பணிவா பேசறான்.

இந்த கூட்டத்தில், ஒரு அஞ்சாறு தொரைகள்கிட்டையும், அஞ்சாறு தேசிகள் கிட்டையும், இப்படி எங்க CEO போயி, சலாம் போட்டிருப்பாரு. ஒருத்தரை விடாம எல்லா தொரையும், ஒக்காந்துக்கிட்டே ஸ்டைலா கைகுலுக்கி பதில் சொன்னான். ஒருத்தரை விடாம எல்லா தேசியும், படால்னு எழுந்து நின்னு, ரொம்பவே பணிவான பாடி லேங்குவேஜில் கும்புடு போட்டான்.

என்ன கொடுமைங்க இது? இது நம்ம கலாச்சார பயக்க வயக்கத்தினால், நம்ம ரத்தத்தில் ஊரின நல்ல விஷயமா? இல்லை, காலா காலமாய், ஒருத்தரை மாத்தி ஒருத்தர் கிட்ட இன்னிவரைக்கும், அடிமையாவே வாழ்ந்த பழக்கத்தினால் ஏற்பட்ட, குறுகிய மனப்பான்மையின் பளிச்சென்ற வெளிப்பாடா?

என் கிட்ட வந்து "ஹாய் மேன், ஆஃபீஸ் நேரத்துல பதிவெல்லாம் போட்டுக்கினு ஜாலியா போதா வாழ்க்கை"ன்னு கேட்டிருந்தா, பல்லக்கடிச்சுக்கிட்டாவது, இருக்கையை கெட்டியா புடிச்சுக்கிட்டு, "ஆமாம்பா. பாட்டு டவுன்லோடு பண்ண ரொம்ப நேரமாவுது. ஏதாச்சும் பண்ணுபா"ன்னு சொல்லலாம்னு இருந்தேன். ஆனா, என் கிட்டையே வரலை! :(


18 comments:

SurveySan said...

"நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்" etc.. etc.. யாரு எழுதினது?

Robin said...

மரியாதை கொடுத்து பேசுவதில் தவறொன்றுமில்லை.
மரியாதைக்கும் அடிமைத்தனத்திற்கும் வித்தியாசம் உண்டு.

pudugaithendral said...

:)) எல்லாத்துக்கும் ஒரு படம் வரைஞ்சு போட்டுடறீங்க. ம்ம்ம்
எங்களுக்கும் படம் வரைய சொல்லிக்கொடுப்பது

யாசவி said...

sarvesan,

Here singapore also same situation.

Infact they never expect you stand. But many of our indian stand and little bend then shake their hands.

Few people they have changed :)

பாவக்காய் said...

bharathi-aa thalaivaaa ?
CTA annual day programs paarka vandheegala ?

as usual.. kalakkal post thalai...

Anonymous said...

/"நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்"//
பாரதி என்று நினைக்கிறேன்.

ஹிஹி. கால்ம் மாறிட்டு வருகுது ஓய். எங்க ஜெனரேஷன் மாறிட்டுவருது. ஹி ஹி அப்படியே நீங்க ஓல்ட்டு ஜெனரேஷனு சொல்லிட்டேனே. ஹா ஹா ஹா.

SurveySan said...

Robin,
////மரியாதைக்கும் அடிமைத்தனத்திற்கும் வித்தியாசம் உண்டு////

எழுந்து நின்னா மரியாதைன்னு யாரு சொல்லிக் கொடுத்தது? ஒக்காந்தா என்ன மரியாதை குறைச்சல் ஆயிடுது?
ஊரிடுச்சு வோய் நமக்கு :)

SurveySan said...

புதுகைத் தென்றல்,

//ம்ம்ம்
எங்களுக்கும் படம் வரைய சொல்லிக்கொடுப்பது///

நான் வரஞ்சது படம்னு ஒத்துக்கிட்டதுக்கே, உங்களுக்கு ஒரு ஓ போடணும் ;)

SurveySan said...

யாசவி,

///But many of our indian stand and little bend then shake their hands.///

:) bending takes it too far. now, i am re-thinkng what Robin said. If the other party is so high and respectful, may be there is no harm in respecting? but, where should we draw the line? should we stand? should we bend? may be not :)

SurveySan said...

அனாமிகா,

//ஹிஹி. கால்ம் மாறிட்டு வருகுது ஓய். எங்க ஜெனரேஷன் மாறிட்டுவருது.///

நீங்க எழுந்துக்கரது இல்லங்கறீங்க? ரொம்ப திமிர் பிடிச்சவங்கங்க நீங்க, அப்படீன்னு யாரும் சொல்லலியா? :)

SurveySan said...

பாவக்காய்,

CTAக்கு போனேன். நண்பர்களின் குட்டீஸின் ஆட்டம் பார்க்க. அதைப் பத்தி தனியா ஒரு 'தேசி' பதிவு இன்று இரவு வரும் ;)

பாவக்காய் said...

http://www.youtube.com/watch?v=fDbZsZJKAo4

idhu enga kutties aattam.. cta-milpitas-il..naanga fremont, thoguthil irundhu vandhom..

SurveySan said...

பாவக்காய், வெரி நைஸ்! :)

நான் campbell போயிருந்தேன்.

SurveySan said...

பாவக்காய், CTAவை ஞாபகப் படுத்தியதுக்கு நன்னி.
எழுதியாச்சு: http://surveysan.blogspot.com/2010/05/cta-2010.html :)

SurveySan said...

பாவக்காய், CTAவை ஞாபகப் படுத்தியதுக்கு நன்னி.
எழுதியாச்சு: http://surveysan.blogspot.com/2010/05/cta-2010.html :)

வலை தளத்தான் said...

Sarvesa,
3000 varushama..kumbuttu kumbutte pazhakitta koottam idhu...ippo thideernu kumbudathe nnu sonna eppadi keppan? Kaalam marum..appo indha seen maarum..

SurveySan said...

வலை தளத்தான், உண்மை.
நிமிர்தலை இனிமுதல் தொடங்குவோம். கொஞ்சம் திமிர் காட்டினாதான், மேலெழ முடியும், அலுவலகத்திலும் சரி, சமூகத்திலும் சரி.

Anonymous said...

@SurveySan

//நீங்க எழுந்துக்கரது இல்லங்கறீங்க? ரொம்ப திமிர் பிடிச்சவங்கங்க நீங்க, அப்படீன்னு யாரும் சொல்லலியா? :)//

அட பாவி @&$%*#$^#*@ . இருங்க. இருங்க. உங்கள கவனிச்சுக்குறேன்.