recent posts...

Sunday, March 21, 2010

பெண்களை நம்பவே நம்பாதே

இப்படி தலைப்பை வெக்க வெச்சுட்டாங்களேன்னு நெனச்சா எனக்கே வேதனையாதான் இருக்கு. வேறென்ன பண்றது, அடிமேல அடி விழுந்தா, அம்மிக்கல்லு கூட நகரத்தானே செய்யும்?

பொதுவாவே நானொரு சாப்பாட்டுப் பிரியன். வகை தொகையா சாப்பிடரதை ரொம்பவே ரசனையோடு எதிர்பார்த்து தினம் தினம் கையாள்பவன்.
ஒவ்வொரு வேளை உணவையும், பாத்தி கட்டி ஒரு வெட்டு வெட்டுவதை ப்ளான் பண்ணி எல்லா வேளையிலும் கடமையாக செய்து வருபவன்.
ஒரு வகையில், நான் இப்படி ப்ளான் பண்ணி, உணவு ஐட்டங்களை வெட்டி நொறுக்குவதில், எங்க நைனாவுக்கும் மம்மிக்கும் பெரும் பங்கு உண்டு.
பின்ன என்னா? என்னமோ வாழரதே வகை தொகையா சாப்பிடரதுக்குத் தான் என்பது போல் எங்க வீட்ல தினசரி பொழுது கழியும்.
காத்தால, 'கௌசல்யா' கேட்டுக்கிட்டே மெதுவா எழும்போதே, காஃபி மணமும், இட்லி/தோசை/பூரி/பொங்கல்/கிச்சடி/etc.. இதுல ஏதாவது ஒண்ணின் வாசம் மூக்கை துளைக்கும்.
நானும், நைனாவும், சக குடும்பமும், இதை மூக்குப் பிடிக்க மொக்கும் போதே, "லன்ச்சுக்கு என்ன பண்ணனும்?"னு பேச்சு எழும். ஆளாளுக்கு ஒரு டிஷ் கேட்க, மம்மி கூட்டி கழிச்சு, மதியானத்துக்கான மெனுவை ரெடி பண்ணுவாங்க.

வீக்-எண்டானா, லன்ச்சும், சக குடும்பம் சகிதமா, வாழையிலை போட்டுக்கிட்டு அடிச்சு தூள் கெளப்புவோம். சிக்கனோ/மீனோ மெனுவில் இல்லாத நாட்கள் மிகக் குறைவு.
சிக்கன் தம் பிரியாணி மாதத்தில் ஒரு தடவையாவது இடம் பெறும். அந்த நாள், ஒரு குட்டித் திருவிழா மாதிரி இருக்கும். என்னமோ, வீட்டுக்கு மன்மோகன் சிங் வர மாதிரி ஒரு பதட்டம் இருக்கும் எல்லார் கிட்டையும். ஆளாளுக்கு, ஒரு வேலையை மும்முரமா செஞ்சுக்கிட்டு, பிரியாணியை உருவாக்கி முடிப்போம். (இதைப் பத்தி தனிப் பதிவு அப்பாலிக்கா போட்டே ஆகணும்னு என் உள்மனசு சொல்லுது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைப் பதிவது, எமது வரலாற்று அவசியம் என்பதை நினைவில் கொள்க.)

இப்படி, வூடு கட்டி, வாழையிலையில், சிக்கனையும் மீனையும் தொம்சம் பண்ணும்போதே, "ராத்திரிக்கு சப்பாத்தி வித் சிக்கன் நல்லாருக்கும்ல?"ன்னு சக குடும்பத்தில் ஒரு சகா பேச்சைத் தொடங்கும். உடனே, அதை முன்மொழிந்து, வழிமொழிந்து, தீர்மானம் நிறைவேற்றப்படும். மம்மியும், சிரத்தையா, ராத்திரிக்கு ரெடி பண்ணிடுவாங்க.

டின்னரை வெட்டோ வெட்டென்று வெட்டித் தள்ளும்போதே, (ofcourse,) "காத்தால நாஸ்தாக்கு இன்னா?"ன்னு கேட்டு வைப்போம். "இடியாப்பம், இட்லி, தோசை, ஆப்பம், கிச்சடி, ..." இப்படி ஆளாளுக்கு முன் மொழிஞ்சு வைப்பாங்க. வேர யாராவது வழி மொழிஞ்சு, தீர்மானம் நிறைவேத்தி, மீண்டும் 'கௌசல்யா', காஃபின்னு வாழ்க்கை ஓடிக்கிட்டு இருந்துச்சு.

இப்பேர்பட்ட ட்ரெயினிங்கில் வளர்ந்த எமக்கு, ஏழு கடலும், ஏழு மலையும் தாண்டி, அசலூறில் தங்கி, ப்ரெட்டும், ஃபாஸ்ட் ஃபுட்டும், ரூம் மேட்டுகளின் சமையலும், பெரிய இழப்பென நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா?

எப்படியோ, ஒண்ணு வரணும்னா, இன்னொண்ணை இழந்துதானே ஆகவேண்டியிருக்கு?

திரும்பவும், கௌசல்யா, காஃபி, இட்லி/கெட்டிச் சட்னி, வெங்காயச் சாம்பார், பெப்பர் சிக்கன், பிரியாணி, சப்பாத்தி, சால்னான்னு, இட்டு கட்டி அடிக்கும் நாள் என்னிக்கு வரும்னு ரொம்பவே ஏங்கத் தொடங்கிய வேளையில், ஒரு சுபயோக சுபதினத்தில், தங்கமணியின் வருகை.
மம்மி சமையல் ருசியா? தங்கமணி சமையல் ருசியா? என்ற பட்டிமன்றம் வைத்தால், யார் ஜெயிப்பாங்கன்னு, உங்களுக்கே தெரியும். 20 வருஷம், வசியம் செய்த, ரெசிப்பீஸை, நம் மூளையிலிருந்து சலவை செய்து எடுப்பது, அம்புட்டு ஈசி கிடையாது. ஸோ, i rest my case.

விஷயத்துக்கு வரேன்.
'கௌசல்யா' - லூஸ்ல விடலாம். நம்ம ஊரு மாதிரி, காலங்காத்தால எழுந்து, வாசல் தெளிச்சு கோலம் போடும் வசதிகள், இல்லை. ஸோ, கௌசல்யா சுப்ரஜா பாட்டு போடுவதெலாம் ரொம்ப எதிர்பாக்கப் படாது. லூஸ்ல விட்டுடுவோம்.
காஃபி? - இது கூட ஓகே. ப்ரூ காஃபியும், microwave பாலும், ருசியில்லாமல் இல்லை.
இட்லி/சட்னி? - ஹ்ம். இதெல்லாம் பேராசை. யாராவது வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தா, எதிர்பார்க்கலாம். மத்த நாட்களில், ப்ரெட்டும், கிஸான் ஜாமும் இருக்கவே இருக்கு. வயசாவுது, காத்தால ஹெல்த்தியா சாப்பிடரது நல்லதுதான். அதனால, இதையும் கூட லூஸ்ல விட்ருவோம்.
வெங்காய சாம்பார்/பெப்பர் சிக்கன்/பிரியாணி? - ஹ்ம். தினசரி கிட்டும் நாட்கள் போய், மாசத்துக்கு மூணு நாலு தபா கெடைக்குது. கெடைக்கரதை கொரை சொன்னா, அதுலையும் ஆப்பு விழும். ஸோ, ஸைலண்ட்டா நிறுத்திக்கிறேன். மம்மி கிட்ட ரெசிப்பி கேட்டு செய்யலாமேன்னு ஐடியா குடுத்தா, கொமட்ல குத்து விழுது. ஹ்ம்.

எல்லாத்தையும் பொறுத்துக்கலாம் மக்கள்ஸ். ஆனா, சமீபத்தில் ஒண்ணு நடந்தது, அதை மட்டும் என்னால தாங்கிக்க முடியலை. அதான், பொலம்பித் தள்ள வந்துட்டேன். அவ்வ்வ்வ்.

அத்தி பூத்தது போல் என்றாவது கிட்டும் இட்லி/கெட்டிச் சட்னி, சமீபத்தில் கிட்டும் பெரும்பாக்கியம் பெற்றேன். விசிட்டர் ஒருத்தருக்காக, மாவு அரைச்சு, மீதி வந்ததால், சில பல நாட்களுக்கு இட்லி தின்னும் பாக்கியம் கிட்டியிருந்தது.

இந்த கெட்டி சட்னி செய்ரது எவ்ளோ சிம்பிளான மேட்டர் மக்கள்ஸ்? தேங்காயையும், மொளகாவையும், உப்பையும் போட்டு அரச்சு, எண்ணையில் கடுகையும் கறிவேப்பிலையையும் தாளிச்சு கொட்டணும்? அம்புடுதேன்.
இதுலையும் ப்ராப்ளம்.
மொத நாள், இட்லியும், சட்னியும் வந்தது.
சட்னியில் கடுகும், கறிவேப்பிலையும் மிஸ்ஸிங்க்.
"இன்னாம்மா இது? தாளிச்சு கொட்னாதானே ஒரு டேஸ்ட்டு வரும்"னேன். ஒரு ஹிட்லர் லுக்கு பதிலா கெடச்சுது. "நாளைலேருந்து, கொஞ்சம் கறிவேப்பிலை தாளிச்சு கொட்டிடு, ப்ளீஸ்ஸ்ஸ்"னேன். "ஹ்ம்"னு பதில் கிடைச்சுது.
மறு நாள்.
இட்லியும், சட்னியும் வந்தது.
ஆவி பறக்கும் இட்லி. சட்னியில் கறிவேப்பிலை.
உள்ளூர எனக்கு குதூகலம். ஆஹா, நாம சொல்றதைம் மதிச்சு, அடுத்த நாளே இப்படி பறிமாரி திக்குமுக்காட வைக்கராங்களே தங்க்ஸ்னு.

இட்லியை மெதுவா வலிக்காம பிச்சு, கெட்டிச் சட்னியில் அழுத்தி ஒரு முக்கு முக்கி, மெதுவா வாய்ல போட்டேன். கண்ணை மூடிக்கிட்டு, அந்த சுவையை ரசிக்க ஆரம்பிச்சேன்.
சில பிரஹஸ்பதிகள், கறிவேப்பிலையை ஓரம் கட்டி வச்சுடுவாங்க. எனக்கு கறிவேப்பிலை டேஸ்ட் பிடிக்கும். கறிவேப்பிலை சாப்டா முடி கொட்டாதுன்னு எங்க பாட்டி சொல்வது, அசரீரீ மாதிரி கேக்கும் எனக்கு. அதனால, கறிவேப்பிலையை விட்டு வைப்பதில்லை.

வாயில் இருந்த இட்டிலித் துண்டையும், சட்டினியையும், ரசித்து ருசிக்கும்போது, கறிவேப்பிலை லேசாய் கசந்தது போலிருந்தது. இன்னாடா இப்படி இருக்காதேன்னு புத்தி சொல்லிச்சு.

அடுத்த துண்டை உடைச்சு, சட்டினியில் முக்கி, அதில் வரும் கறிவேப்பிலையை உற்றுப் பார்த்தேன். அதிர்ந்து போனேன்.
"ஓ மை லார்ட், ஏன்ஸர் மை ப்ரேயர்"னு சிவாஜி டயலாக் தான் மனசில் ஃபிளாஷ் பாக் ஆனது.
கறிவேப்பிலை, பச்சையாக இருந்தது.
தங்க்ஸை கூப்பிட்டு, "கறிவேப்பிலை, சரியா ஃப்ரை ஆகல போலருக்கே"ன்னு பயந்து கிட்டே சொன்னேன்.

குடுத்ததை சாப்பிட்டுக் கெளம்பாம, ஷெர்லாக் ஹோம்ஸ் கணக்கா, ஆராய்ச்சியா பண்றன்னு ஒரு லுக்கு விட்டாங்க.
"ஆமாமாம், ஃப்ரை எல்லாம் பண்ணலை, சும்மா பிச்சுத் தான் போட்டேன்"னு சொல்லிட்டு, விஜய்ஷாந்தி கணக்கா விஷுக் விஷுக்னு நடந்து எஸ்கேப்பிட்டா தங்க்ஸ்.

அவ்வ்வ்வ்வ்வ். ஒரு கெட்டிச் சட்டினியில், தாளிச்சு கொட்டச் சொன்னா, எனக்கு இப்படி அல்வாவைக் கிண்டிக் கொடுக்கறாங்க சார்.
நான் இன்னா ஆடா, மாடா, எலை தழையை பச்சையா இப்படித் தின்ன?

பெண்களை நம்பலாமா சாரே? ஹ்ம்!

பி.கு: இப்படி பல எப்பிஸோட்ஸ் லைனா வர வாய்ப்பிருக்கு. வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த தங்க்ஸுக்கு என்றென்றும் கடமைப் பட்டிருந்தாலும், இந்த மாதிரி வாய்ப்பு குறைந்து கொண்டே வரவேண்டும் என்று எம்பிரானை வேண்டிக் கொள்ளாத நாளில்லை.
பெப்பரையும், தேங்காயையும் அரைச்சு ஊத்தி ஒரு பெப்பர் சிக்கன் பண்ணுவாங்க சார் எங்க மம்மி. ஹ்ம். இன்னும் கொஞ்ச மாசம் இருக்கு, அடுத்த வெக்கேஷனுக்கு. அவ்வ்வ்வ்.

disclaimer: தங்க்ஸ் படிப்பதில்லை என்ற ஒரே மன தைரியத்தில் இந்தப் பதிவு இயற்றப்பட்டுள்ளது ;)

41 comments:

SurveySan said...

உம்ம வூட்ல எப்படி? ;)

Ananya Mahadevan said...

//இதைப் பத்தி தனிப் பதிவு அப்பாலிக்கா போட்டே ஆகணும்னு என் உள்மனசு சொல்லுது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைப் பதிவது, எமது வரலாற்று அவசியம் என்பதை நினைவில் கொள்க// வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே! என்ன தைரியம் இருந்தா ஒரு தங்ஸ் கிட்டே இன்னொரு தங்க்ஸ் பத்தி கருத்து கேட்கலாம்? வெரி ஆஃப் த டூ மச் ஐ சே! ஒரு நாள் தாளிச்சு கொட்டலையாம், அதுக்கு இம்மாம் பெரிய பதிவு.. போங்கைய்யா, போங்க, புள்ளை குட்டிங்களை படிக்க வைய்யுங்க. கப்பித்தனமா பேசிகிட்டு!

Ananya Mahadevan said...

ஹய்யோ அம்மா, எளுதி, பாடினது பத்தாதுன்னு இப்போ படமெல்லாம் வரைய ஆரம்பிச்சுட்டீங்களா? இதுல இந்த படத்த மத்தவங்க காப்பி அடிக்காம இருக்கறதுக்கு சர்ன்னு சிக்னேச்சர் வேற போட்டுக்கறது!யப்பா..

வெட்டிப்பயல் said...

உங்களுக்கு இட்லி செய்து கொடுத்ததே தப்பு. அப்படியே தோசை சுட்டு சக்கரை வெச்சி கொடுத்திருக்கணும் :)

பெசொவி said...

@SurveySan

y blood?

same blood

hi.....hi!

ravi shankar said...

super. i really enjoy. i am not a blogger only reader for last one year. this is a best artical like pakkayam ramasamy artical in vikatan in few years back. you have good talent, please write more about this field. defiantly you will become a good comody writer

ravi shankar said...

super. i really enjoy. i am not a blogger only reader for last one year. this is a best artical like pakkayam ramasamy artical in vikatan in few years back. you have good talent, please write more about this field. defiantly you will become a good comody writer

ravi shankar said...

super. i really enjoy. i am not a blogger only reader for last one year. this is a best artical like pakkayam ramasamy artical in vikatan in few years back. you have good talent, please write more about this field. defiantly you will become a good comody writer

கோபிநாத் said...

'ஹ்ம். அந்தோ பரிதாபம்' :-)

Sri said...

'ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க', :-)

இதே அனுபவம் எனக்கும் நடந்துள்ளது. நிற்க. உங்களுக்கு சட்னி எனக்கு ரசம். என் தயார் இங்கு வந்த பொழுது ஏன் என்று கேட்டேன் - கொஞ்சம் போடா போட்டாத சாப்பிட கத்துக்கோ என்று சொல்லி விட்டார்கள் :(

SurveySan said...

அநன்யா ஜி,
// ஒரு நாள் தாளிச்சு கொட்டலையாம், அதுக்கு இம்மாம் பெரிய பதிவு.. ///

சொல்லுவீங்க சொல்லுவீங்க. தாளிச்சு கொட்டலைன்னா, டமில் கலாச்சாரம் இன்னாதுக்கு ஆவும்?
வந்துட்டாங்கய்யா சப்போர்ட்டுக்கு. இப்பதான் தெரியுது, வூட்டுக்கு வூடு வாசப்படின்னு ;)

SurveySan said...

வெட்டி, ////அப்படியே தோசை சுட்டு சக்கரை வெச்சி கொடுத்திருக்கணும் ///

உங்க வூட்டு ரெசிப்பியா இது? ;)

SurveySan said...

பெயர் சொல்ல விருப்பமில்லை,

same blood, பல வீட்டில் நடப்பதை கண்டு எண்ணில்டங்கா மகிழ்ச்சி பொங்குது ;)

SurveySan said...

ravi,
///super. i really enjoy.///

danks! :)

////you have good talent, please write more about this field. defiantly you will become a good comody writer////

nambitten ;)

SurveySan said...

கோபிநாந்த், பரிதாபமேதான் ;)

SurveySan said...

Sri,

////இதே அனுபவம் எனக்கும் நடந்துள்ளது. நிற்க. உங்களுக்கு சட்னி எனக்கு ரசம்////

ஆஹா. அந்தோ பரிதாபம்.
இதுல கொடுமை இன்னான்னா, தாயாரே உங்களுக்கு தாளிச்சு கொட்டலன்னா, தங்க்ஸ் உங்களுக்கு இன்னா சமைச்சு கொட்டுவாங்கன்னு நெனச்சா, ரொம்ப மனசு வருத்தப் படுது. யூ நீட் டு பி ஸ்ட்ராங்க் ஐ ஸே! ;)

Priya Venkat said...

\\\தங்க்ஸ் படிப்பதில்லை என்ற ஒரே மன தைரியத்தில் இந்தப் பதிவு இயற்றப்பட்டுள்ளது ///

தங்கமணிக்கு போன் பண்ணிட்டா போச்சு :) :)

SurveySan said...

Priya, :)
அதுக்கெல்லாம் ப்ளான் பண்ணாமையா, இவ்ளோ தைரியமா எழுதுவேன்?

கால்ல விழுந்துடுவேண்டியதுதான். ;)

Nanditha said...

My husband also was complaining (suggesting) initially and now he's proactive and cooks for me too and I hear no more complaints or suggestions. So I suggest that you start cooking and can eat whatever you like to eat. My kids do not like my cooking anymore and wants only their dad to cook as it tastes good than mine.

-Nanditha

SurveySan said...

Nandita,

very thoughtful solution to the problem. appreciate that :)

SurveySan said...

Nandita, send me your husbands email id. i would like some recipes from him. avvvvvv ;(

SurveySan said...

生氣,

///Actions speak louder than words.///

ofcourse. thanks. 氣生氣氣生!!!!

Murli said...

ஏப்பு... உனக்கு தட்டுல இட்டிலி விழுந்ததே பெரிசு....இதுல சட்டினி வேற கேக்குதோ.....


நடத்துங்க பாஸ்...

எனக்கு தட்டு கிடைக்கிறதே பெரிசு சில நேரத்துல....

SurveySan said...

@Murli

//எனக்கு தட்டு கிடைக்கிறதே பெரிசு சில நேரத்துல....//

:)

pudugaithendral said...

ஓஹோ நீங்களும் தங்க்ஸ்களுக்கு எதிரா பதிவுபோடப்போறீங்களா. உங்க தங்க்ஸ் படிக்க மாட்டாங்கன்னு நினைச்சுத்தானே இப்படி பதிவு போடறீங்க. டோண்ட் ஒர்ரி அவங்க படிக்க நாங்க ஏற்பாடு செஞ்சிடறோம்.

இப்படிக்கு
தங்கமணிகள் நலச்சங்கம்
ஹைதை கிளை

pudugaithendral said...

இருங்க இதுக்கு ஒரு எதிர் பதிவு போடறேன். இப்பவே.

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2010/03/blog-post_24.html

எதிர் பதிவு போட்டாச்சு

Porkodi (பொற்கொடி) said...

டாக்குடர் சொன்னா பச்சையா சாலட்னு சாப்பிட முயற்சி பண்ணுவீங்க.. சரி, தாளிக்கறது எவ்ளோ கஷ்டமான வேலை தெரியுமா? இதுக்குனு ஒரு குட்டி பாத்திரம், ஸ்பூனு, கடுகு தெறிக்காம இருக்க ஒரு மூடி, எல்லாத்தையும் தேச்சு வெச்சு.. போங்க சார், போய் 100 கிராம் கடுகு, உ.பருப்பு எல்லாத்தையும் போட்டு தாளிச்சு ஒரு டப்பாவுல வெச்சுக்கோங்க.. வேணுங்கும் போது அள்ளி போட்டுக்கோங்க, யார் வேணான்னா? :)

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2010/03/blog-post_5598.html

தொடர் பதிவு போடுங்க

SurveySan said...

பொற்கொடி,

/////போய் 100 கிராம் கடுகு, உ.பருப்பு எல்லாத்தையும் போட்டு தாளிச்சு ஒரு டப்பாவுல வெச்சுக்கோங்க////

அவ்வ்வ்வ். என்ன கொடுமைங்க இது? ஒரு மனுஷன், சமையல்ல தாளிச்சு கொட்ட சொல்றதுக்கு உரிமை லேதா?
விட்டா, எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு, கொதிக்கர எண்ணையும், கடுகையும் வாயில போட்டுக்கங்கன்னு சொல்லுவீங்க போலருக்கே. ரங்கமணி யூனியன் கூடிய விரைவில் ஆரம்பிக்கணும் ;)

SurveySan said...

புதுகைத் தென்றல்,

interesting தொடர் பதிவு.
ஆனா, அந்த சோகக் கதையெல்லாம் ஏன் கெளற்றீங்க? ;)

ஆ! இதழ்கள் said...

தாயாரே உங்களுக்கு தாளிச்சு கொட்டலன்னா//

sri சொன்னது இப்படியோ,தாயார் வந்தப்போ தைரியம் வரவழைச்சு இவர் தங்க்ஸ்ட சொல்லிருக்காரு அதற்கு அவுங்க அம்மா இப்படி சொல்லிருக்காங்கனு நினைக்கிறேன்.

வெட்டி ரெசிப்பிய நினைச்சாலே பல்லெல்லாம் கூசுது. :P

என்ன கொடுமை சர்வேசன்? கமெண்ட்ஸ்ல ரங்க்ஸெல்லாம் கெஞ்சுது தங்க்ஸெல்லாம் ஆகுறத பாத்துக்கோனுது. தனித் தனியாவே இந்த பாடுன்னா, சங்கம் வச்சா ரங்க்ஸ் கதி அதோ கதி :(

ரவி said...

எனது தங்கமணியால் தங்களது இந்த இடுகை வரிக்கு வரி படித்து சிலாகிக்கப்பட்டது.

ஏன்யா என் பொழப்புல மண்ணை, மாங்கொட்டையை போட்டீர் ? ஒரு வீக் எண்டு என்னை பட்டினி போடுவதில் உமக்கென்ன அம்புட்டு ஆசை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

SurveySan said...

ஆ!, // சங்கம் வச்சா ரங்க்ஸ் கதி அதோ கதி ///

எந்த காலத்துல சங்கங்களால் ப்ரயோஜனமா இருந்திருக்கு? எல்லாம் கூடி சேந்து கும்மி அடிச்சு ஒப்பாரி வைக்கதான், நம்ம சோகக்கதையை சொல்லிக் கிட்டு ;)

SurveySan said...

ரவி,

///எனது தங்கமணியால் தங்களது இந்த இடுகை வரிக்கு வரி படித்து சிலாகிக்கப்பட்டது. ///

டாங்க்ஸ்! இனி, அவங்க பண்றது ஞாயம்தான்னு ஒரு தெம்பு வந்திருக்கும். உங்க கதி அதோ கதிதான் :)

///ஏன்யா என் பொழப்புல மண்ணை, மாங்கொட்டையை போட்டீர் ? ஒரு வீக் எண்டு என்னை பட்டினி போடுவதில் உமக்கென்ன அம்புட்டு ஆசை ///

நெனச்சேன். இந்தப் பதிவு ரங்க்ஸுகளுக்குத்தான் போட்டேன்.
வீறு கொண்டு எழுந்து, எதிர் கேள்வி கேக்க.
பாத்தா, தங்க்ஸெல்லாம், வந்து படிச்சுட்டு, நல்லா வேணும்னு அடிச்சு ஆடறாங்க. ஹ்ம் :(

ராமலக்ஷ்மி said...

என்னைக்காவது படிக்காமலா போயிருவாங்க? அன்னைக்கு இருக்குது கெட்டிச் சட்னிக்கும் ஆப்பு:))!

ஆனாலும் அநியாயத்துக்கு அருமையா எழுதியிருக்கீங்க:)!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அவ்வ்வ்வ்வ்வ். ஒரு கெட்டிச் சட்டினியில், தாளிச்சு கொட்டச் சொன்னா, எனக்கு இப்படி அல்வாவைக் கிண்டிக் கொடுக்கறாங்க சார்.
நான் இன்னா ஆடா, மாடா, எலை தழையை பச்சையா இப்படித் தின்ன?//
கெட்டி சட்னி செஞ்சு தர்றதே பெரிய விசயம்...இதுல தாளிக்கனுமோ... உங்கள தாளிக்கணும் மொதல்ல...உங்க தங்கமணி அட்ரஸ் கொஞ்சம் குடுங்க...எங்க சங்கம் சார்பா கொஞ்சம் training குடுக்க வேண்டி இருக்கு...(ஹா ஹா ஹா...வெச்சோம்ல...)

//வெட்டிப்பயல் said... உங்களுக்கு இட்லி செய்து கொடுத்ததே தப்பு. அப்படியே தோசை சுட்டு சக்கரை வெச்சி கொடுத்திருக்கணும் :)//
இது ரங்கமணிக்கு அழகு....நன்றிங்க வெட்டி

SurveySan said...

ராமலக்ஷ்மி, நன்றீஸ்.
படிச்சாலும், கால்ல விழுந்துட்டா எஸ்கேப் ஆகிடலாம். அதான், கல்லானும் கணவன், புல்லானாலும் புருஷனாச்சே ;)

SurveySan said...

அப்பாவி தங்கமணி,

////கெட்டி சட்னி செஞ்சு தர்றதே பெரிய விசயம்...இதுல தாளிக்கனுமோ... உங்கள தாளிக்கணும் மொதல்ல..////

நீங்கதானா அவிக. வாங்க வாங்க :)

Iyappan Krishnan said...

ஆஹா ஆஹா :))


சர்வேசு.. உம்ம அட்ரஸ் குடுத்தா இதை பிரிண்ட் எடுத்து தங்கமணிக்கு போஸ்ட்ல அனுப்பிடலாம்னு

SurveySan said...

Jeeves,

///சர்வேசு.. உம்ம அட்ரஸ் குடுத்தா இதை பிரிண்ட் எடுத்து தங்கமணிக்கு போஸ்ட்ல அனுப்பிடலாம்னு
////

nice try. Thangs hates blogs,so i am the escape ;)