எனக்கு இதுவரையில் வந்த தொடர் பதிவுகளில், மெத்தப் பிடித்தது, எட்டு மேட்டர் தொடர் பதிவுதான். நானும் பங்குகொண்டு என் வாழ்வில் 'நடந்த' எட்டு விஷயங்களை பிட்டு பிட்டு வைத்து மகிழ்ந்தேன்.
மற்ற பல தொடர் பதிவுகளும் சுவாரஸ்யமா இருந்தது. ஒரு சிலர் சேந்து, வரிசை கட்டி ஒரு குறு நாவலை எழுதி முடிச்சாங்க.
இப்ப, திரும்ப தொடர் பதிவு ஜுரம் அடிக்க ஆரம்பிச்சுருக்கு. இம்முறை ரொம்பவே சுவாரஸ்யமான தலைப்புடன் வலம் வருது.
சமீபத்திய 'தொடர் பதிவுகள்' வரிசையில் ஒண்ணுல இந்த மேட்டர் இருக்கு:
அயித்தானும் என்னைப்பாத்திட்டாரு, அவங்க அக்காதான்
எனக்கு முன்னமே பழக்கமாச்சே. இதுல திடும்னு ஒரு நாள்
”பொண்ணு பாக்கணுமாம்! லீவு போட்டுட்டு சென்னைக்கு
வரச்சொன்னாங்கன்னு ”அப்பா போன் செஞ்சதா மாமா
சொன்னாரு. எத்தனை தடவை பாப்பாங்கன்னு கோவம்மாத்தான்
கிளம்பிப்போனேன்.
சுவாரஸ்யமா இல்ல? 'கல்யாணம் கட்டிக்க பொண்ணு/பையன் பாத்த கதை'தான் தலைப்பாம்.
நானும் கோதாவில் சீக்கிரமா குதிக்கறேன். நம்ம புதுகைத் தென்றல் கூப்புட்டாக.
நாலு பேரை தொடர்ல சேத்து வுடறேன்.
ஆனா, இன்வைட் வராதவங்களும் கூட, அடிச்சு ஆட, சூப்பரான மேட்டர் இது. இதைப் படிக்கரவங்க எல்லாரும், உங்க எக்ஸ்பீரியன்ஸை பகிர்ந்துக்கிட்டா, நம்ம கலாச்சாரத்தின் பெரிய வீச்சான,கண்ணாலத்தின் அருமை பெருமைகள் பதிவுலகிலும், வரலாற்றிலும் இடம் பெறும். நல்ல சான்ஸு அடிச்சு ஆட, வீணாக்காதீர்கள், இன்றே குதியுங்கள்.
கல்யாணம் ஆகி நொந்து நூடுல்ஸாப் போயிருக்கரவங்களுக்கு, அந்த ஆரம்ப சொற்ப சந்தோஷ நாட்களை நினைவில் நிறுத்த நல்ல சந்தர்ப்பம். நழுவவிடாதீர்கள் ;)
படம் எப்டீகீது?
19 comments:
:))) ஆஹா! என்னா சிந்தனை
ஐய்யோ, அம்மா..இந்த சர்வே சிஸ்டத்துல ஆராவது எம்.எஸ் பெயிண்ட்டை அன் இன்ஸ்ட்டால் பண்ணுங்களேன்! ஒரு மூணு நாலு போஸ்ட்டா புலம்பிண்டே இருக்கேன். ஆரும் கண்டுக்கறதில்லை! இந்த 3 போஸ்டுலேயெ பெஸ்டு இந்த படம் தான். குட் கீப்பிட்டப்பு. பட்மெல்லாம் ஓக்கே, பதிவெங்கே?
//இந்த 3 போஸ்டுலேயெ பெஸ்டு இந்த படம் தான்//
:)
பட் இந்த படத்துலயும் பொட்டு & மீசை என்னமோ சொல்ல வர்றாருன்னு ஒரு மெசேஜ் கொடுக்குதே அதை கவனிச்சீங்களா? :))))) #ஹப்பாடா இப்பிடி எதையாச்சும் கமெண்டினாத்தான் மனசு நிம்மதியாவுது :)
படம் சூப்பரா இருக்கு.. என்ன ஒரு காதல் அந்த படத்துல ஆகா..
வர வர பெரிய ஒவியராகிட்டே போறீங்க.. எந்த நாட்டுக்கு போக விரும்பறீங்க..?
ஆயில்யன், டாங்க்ஸு. மீசையும் பொட்டும் வைக்கலன்னா, பையன் பொண்ணு மாதிரி தெரியாது. என் ட்ராயிங் ஸ்கில் அப்படி. ;)
அநன்யா, வருக அருக.
நன்றீஸ். வரஞ்சதி, டக்குனு வரஞ்சதும் இதுதான். இப்பெல்லாம், அதா வருது :)
ஓவியானாயிட்டேனாக்கும்.
பதிவு கூடிய விரைவில் வரும். 'எட்டு' மாதிரி எழுதணுமா, 'உண்மைக் கதை'னு பரபரப்பா எழுதணுமான்னு திங்கிங் :)
முத்துலெட்சுமி, நன்றீஸ்:)
போர போக்கப் பாத்தா, எந்த நாட்டுக்கு போனாலும் கஷ்டம்தான்னு நெனைக்கறேன். தங்க்ஸ் தேடிக்கிட்டு வந்து ஒதைக்கப் போறா ;)
அப்போ கல்யாணம் ஆகாத வாலிபர்கள் என்ன பண்றது?
மல்லாக்க படுத்து விட்டத்த பார்க்கவா?
காதல் ஜொள்ளுடன் படமெல்லாம் சரி. பதிவு சீக்கிரம் போடுங்க
நான் ஆரம்பிச்சு வெச்ச தொடர் பதிவு இந்த அளவுக்கு போகும்னு நெனைக்கல...நன்றி...நன்றி...நன்றி...ஆனா பொண்ணு பாக்க போன மேட்டர் எங்க பாஸ்...??? (ஆனாலும் தங்கமணி மேல இத்தனை பயம் வேண்டாம்....)
//பாலகுமாரன், வத்திராயிருப்பு. said... அப்போ கல்யாணம் ஆகாத வாலிபர்கள் என்ன பண்றது?
மல்லாக்க படுத்து விட்டத்த பார்க்கவா?//
உங்களுக்கும் இதுல வேலை இருக்கு பிரதர்...என்னனு தெரிஞ்சுக்கணும்ன நான் ஆரம்பிச்ச இந்த தொடர் பதிவ படிங்க http://appavithangamani.blogspot.com/2010/03/blog-post_23.ஹ்த்ம்ல் (அப்பாடா எப்படியோ இன்னிக்கி போனி ஓவர்...)
நல்ல தலைப்பு & நல்ல படம்.
உங்க போன பதிவ இப்பதான் பார்த்தேன். என்ன சர் 1rupee கறிவேப்பிலைக்காக தங்கமணிய இவ்வளவு பேர் முன்னாடி விட்டு கொடுத்துட்டீங்க. அவங்க சக்கரை வெச்சி கொடுத்தாலும் குருமா போட்டதா தான சொல்லி இருக்கனும். சரி.
படம் சூப்பர்:)!
hi ss - send me a mail on sriramskd@gmail.com
csm
பாலகுமாரன், காலம் கனியும் வரை, மத்தவங்க எழுதரத பாத்து உஷாராகரதுதான் உங்களுக்கு நல்லது :)
Ulagalavi,
//என்ன சர் 1rupee கறிவேப்பிலைக்காக தங்கமணிய இவ்வளவு பேர் முன்னாடி விட்டு கொடுத்துட்டீங்க//
அவ்வ்வ். அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்களே. சான்ஸ் கெடச்சா அடிச்சு ஆடிடணும் சாரே ;)
ராமலக்ஷ்மி, நன்றீஸ்.
csm, will do :)
Adichu ada poreengala!!! Seri Out aagama adungo.
Post a Comment