நான் இன்னும் பாட்டை கேக்கலை. ஹிண்டுவி'ல் ரெவ்யூவிருக்காங்க.
recent posts...
Tuesday, April 27, 2010
Sunday, April 25, 2010
Bay Areaவில் மூன்று முக்கிய இசை நிகழ்ச்சிகள்
என்னதான் mp3யாக பாட்டை கேட்டாலும், நேர்ல ஒரு இசைக் கருவியை வாசிச்சுக் கேட்கும்போது அதன் சுகமே தனி. அதிலும், பெரிய இசை மேடைகளில், ஆயிரமாயிரம் வாட்டுகள் ஒலிபெருக்கியில் வாத்தியங்கள் முழுங்குவதை கேட்பது ஒரு பரவச நிலையளிக்கும் சுகம். அதிலும், மிக முக்கியமாய், நமக்கு ரொம்ப ரொம்பவே பிடித்துப் போன இசைக் கலைஞர்களை நேரில் பார்த்து, அவர்களின் திறமையின் வெளிப்பாட்டை லைவ்வாக பார்ப்பது விவரிக்க முடியாத திருப்தி.
கலிஃபோர்னியாவில், நான் ரொம்பவே ரசிக்கும் மூன்று கலைஞர்களின் ஆவர்த்தனம் நடக்க இருக்கிறது.
1) முதலாவதாக, ஏப்ரல் 30, மே 1ஆம் தேதிகளில், Hotel California புகழ், Eaglesன் இசை விருந்து San Jose , HP Pavillionல் நடக்க இருக்கிறது. டிக்கெட் விவரங்கள் இங்கே.
2) A.R.Rahman, ஜூன் 26ஆம் தேதி, Oakland வருகிறார். டிக்கெட் விவரங்கள் இங்கே
3) கடைசியாக, நமது அனைவருக்கும் பிரியமான SPB. ஏப்ரல் 25 ஆம் தேதி. (இன்னிக்கு, பாடி முடிச்சுட்டாங்க). 2007ல் இதே மாதிரி நிகழ்ச்சி, அருமையா இருந்தது, ஆனா, இம்முறை சித்ரா, யேசுதாஸ் மிஸ்ஸிங். அதனால, நான் போகாம விட்டுட்டேன்.
பாத்துட்டு சொல்றேன், எப்படி இருந்துச்சுன்னு. SPB, ஐ ஆம் த சாரி. வர முடியாம போயிடுச்சு.

Thursday, April 22, 2010
நித்தியிடம் ஒரு முக்கிய கேள்வி...
பிதாமகன்ல ஒரு ஜெயில் சீன்ல, ஒரு சேட்டு வருவாரு. அவரைப் பாத்து சூர்யா, "அதெப்படிடா, உன் மூஞ்சிய பாத்தா மட்டும் கைல இருக்கரதெல்லாம் எடுத்து குடுத்துடறானுங்க"ன்னு கேப்பாரு.
நித்தி கிட்ட இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேக்கப் போறதில்லை.
அதைவிட முக்கியமான கேள்வி.
நித்தி, கிட்டத்தட்ட நம்ம வயசுக்காரரு.
எனக்கெல்லாம் சில பல வருஷங்களுக்கு முன்னாலேயே, துரு பிடித்த ஆணியை புடுங்கி புடுங்கி, மண்ட காஞ்சு முடி கொட்டத் தொடங்கியாச்சு.
யாரு செஞ்ச புண்ணியமோ, மொத்தமா கபாலம் காலியாகாம, சீப்பெடுத்து சீவ முடியர அளவுக்கு, ஏதோ கொஞ்சம் தக்க வச்சிருக்கேன்.
ஒவ்வொரு தபா ஊருக்கு போகும்போதும், புச்சா ஹேர் ஆயில் என்ன வந்திருக்குன்னு பாத்துட்டு புடிச்சுட்டு வருவேன். அதுவும், இங்க இருக்கர சக வயது சகாக்கள் எல்லாம், திருப்பதி லட்டு எதிர்பாக்கர மாதிரி என் கிட்டயிருந்து எதிர்பாக்கர ஒரு விஷயம், "மச்சி எனக்கொரு பாட்டில்"னு முன்கூட்டியே ரிசர்வெ பண்ணி வச்சுப்பாங்க.
'ஆர்னிக்கா ப்ளஸ்னு' ஒரு பச்சக் கலர் பாட்டிலு. கொஞ்ச வருஷத்துக்கு முன் வரை, என்னையும் என்னை சுத்தியுள்ள நண்பர்களின் மண்டைக்கும் தோதான ஃபார்முலாவாக, அருமையாக வேலை செய்தது. ஆனா, சமீபத்தில், அதிலும் கலப்படம் ஏறி, 'தண்ணியா' வருது இப்பெல்லாம்.
ஸோ, இம்மீடியட்டா, ஏதாவது ஒரு நிவாரணி கெடச்சாவணும்.
நம்ம நித்தியப் பாருங்க, என்னமா சிலு சிலுன்னு, சிலுப்பி விட்டுக்கிட்டு திரியர மாதிரி முடிய வளத்து வச்சிருக்காரு.
இதனால் நான் நித்தியிடம் வேண்டிக் கேட்பது என்னவென்றால், என்ன ஒறம் போடறீங்க மண்டைக்கு?
இப்படி அடர்த்தியா கரு கருன்னு வளறுதே?
சீடர்கள் பதில் கூறினாலும், நன்மை பயக்கும்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு
ஹாப்பி வெள்ளி! :)

Sunday, April 18, 2010
காரவோக்கே - Hosana
ரொம்ப நாள் ஆசை, ஒரு பாட்டை karaoke ஸ்டைலில் பாடணும்னு.
நேரம் கிடைக்கலை இதுவரை, இதைப் பற்றி ஆராஞ்சு மெனக்கெட. இன்னிக்கு ஆப்டுச்சு.
Audacityன்னு ஒரு ஓப்பன் ஸோர்ஸ் சாஃப்ட்வேர் இருக்கு. நம்ம 'அருமை'யான குரல்களை mp3யாக பதிவு பண்ணிக்கலாம்.
அதைத் தவிர, நம் வசம் உள்ள சினிமாப் பாடல்களை ஓட விட்டு, நாமும் சேர்ந்து பாடி, நம் குரலை மற்ற பாடல்களுடன் கலந்து விடலாம்.
100% காரவோக்கே செய்ய, ஒரிஜினல் ட்ராக்கில், ஒரிஜினல் பாடகர்களின் சப்தம் இல்லாமல் செய்ய வேண்டும் (vocal remover). என்னிடம் இருந்த mp3 கோப்புகளில் என்ன செஞ்சாலும், கொரல் போக மாட்டேங்குது.
சரி, ரொம்ப கஷ்டப் படவேணாம்னு, என் குரலை உயர்த்தி பாடி Vijay Prakash, Blaze குரலை அமுக்கி விட்டேன்.
கேட்டுப் பாருங்க. வால்யூமை குறைத்து வைத்து கேட்க்கவும்.
காது கிழிந்தாலோ, மயக்கம் வந்தாலோ கொம்பேனியார் பொறுப்பில்லை.
பாடல்: ஹோசானா
படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: விஜய் ப்ரகாஷ், Suzanne D'mello, Blaaze, சர்வேசன்
கேட்டுட்டு கருத்து சொல்லாம போயிடாதீங்கப்பு. நல்ல பாடகரை டமில் சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்க ;)

hosanna.mp3 |
கேட்டுட்டு கருத்து சொல்லாம போயிடாதீங்கப்பு. நல்ல பாடகரை டமில் சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்க ;)
Wednesday, April 14, 2010
பெண்ணொன்று கண்டேன்...
பொண்ணு பாத்த கதையை எழுதணும்னு இவிக கெளப்பி விட, இவிக நம்மள மாட்டி விட்டுட்டாக. தங்க்ஸை பாராட்டி எதுவோ எழுதப் போக, நம்ம பயோகிராஃபி எல்லாருக்கும் தெரிஞ்சு, இந்த தொடர்ல மாட்டி விட்டுட்டாங்க. இன்னும் ரொம்ப நாளைக்கு இந்த அனானி ஆட்டம் ஆட முடியாது போலருக்கு.
மேட்டருக்கு வரலாம். வாழ்க்கையில் மறக்க முடியாத/கூடாத நிகழ்வுகளில் இந்த வாழ்க்கைத் துணையை முதல்முறை மீட் செய்யும் படலமும் ஒன்று. சினிமால வர மாதிரி 'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி'ன்னெல்லாம் நம்ம படலத்தில் யாரும் பாடலை. ஆனாலும், நினைவில் தங்கிய நிகழ்வுதான் அது.
கடல் மலையெல்லாம் தாண்டி வந்து அசலூறில் வேலை செய்யும் எல்லோருக்கும் நிகழ்வது போல்தான் எனக்கும், பெண் பார்க்கும் படலம் துவங்கியது.
Airmail கவரில் ஃபோட்டோக்கள் வரத் துவங்கின. Airmail கவரில் ஏறுவதர்க்கு முன், சில பல ஃபில்டர்களை கடந்து வருவதால், எல்லாமே தேவதைகள் படம்தான்.
ரூம்-மேட்ஸுகள் ஒவ்வொருத்தருக்கும் இந்த விவகாரம் பேரலலாக நிகழ்ந்ததால், எல்லாரும் ஃபோட்டொஸ்களை அலசி ஆராஞ்சு, எப்படி 'லாக்' பண்றதுன்னு ஒரு முடிவுக்கு வந்திருந்தோம்.
அதாவது ஃபோட்டோவை பாத்ததும் நமக்கு ஒரு ஃப்ளாஷ் மனசுக்குள்ள பாயணும். "எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ"ன்னு, அப்பதான், அவிக நமக்கே நமக்குன்னு அர்த்தம்.
எக்ஸ்பீரியன்ஸ்ட் பயலுவளும், இந்த ஃப்ளாஷ் விஷயம் நெசம்தான்னு சொல்லி நம்பிக்கை பாச்சியிருந்தாங்க.
எல்லா பயலும், அவங்கவங்க வீட்ல இருந்து AirMail படம் வந்ததும், "மச்சி ஃப்ளாஷ் வந்துதா? இல்லன்னா, அடுத்த ஃபோட்டோ கேளு"ன்னு பீதியை கிளப்பி விடும் அளவுக்கு இந்த ஃப்ளாஷ் மேல நம்பிக்கை வந்துடுச்சு எல்லாருக்கும்.
அப்படியாக ஒரு சுபயோக சுபதினத்தில், அம்மிணி ஃபோட்டோ நமக்கு வர, நமக்கு விஷுக்னு ஃபிளாஷ் வர, எல்லாரும் விசிலடிச்சு, 'இவிகதான்'னு முடிவு பண்ண, நம்ம தங்க்ஸ் 'லாக்' ஆனாங்க.
நாம 'லாக்' பண்ணிட்டோம், அந்த விஷயம் அவிகளுக்குத் தெரியுமான்னும், அவிக 'லாக்' பண்ணுவாங்களான்னும் சந்தேகம் வந்துது. நம்ம அளகு அப்படி.
நம்ம ஊரு பொண்ணுக பாதி பாவம். அப்பா இவன் தான் மாப்ளன்னு, எவன கை காட்டறாரோ, அவனத்தான் கட்டிக்கறாங்க. நம்ம தங்க்ஸ் அப்படிப்பட்ட ரகம் போலருக்கு. நம்மையும் மதிச்சு, பொண்ணு பாக்க வரட்டும்னு சொல்லியிருக்காங்கல்ல.
இந்த களேபரம் ஆரம்பிக்கரதுக்கு முன்னாடி, நம்ம அளகை ஃபோட்டோ புடிச்ச கதை பெரிய கதை. என் நண்பனின் அண்ணன் பெரிய ஃபோட்டோகிராஃபர். அவர் கிட்ட நம்ம நைக்கானையும் மூணு ரோலையும் கொண்டு போய், 'அண்ணே படம் புடிக்கணும்னே'ன்னு செந்தில் கணக்கா கெஞ்சி, மொட்டை மாடில நின்னு, ஒக்காந்து, படுத்து, சட்டையோட ஒண்ணு, டிஷர்ட்டோட ஒண்ணு, திரும்பிப் பாத்து ஒண்ணு, வானத்தை பாத்து ஒண்ணு, கீழப் பாத்டு ஒண்ணு, டக்-இன் பண்ணி ஒண்ணு, கேஷுவலா ஒண்ணு, கை கட்டி ஒண்ணு, கை நீட்டி ஒண்ணு, சிரிச்சுக்கிட்டு ஒண்ணு, சீரியஸா ஒண்ணு, பாவமா ஒண்ணு, கெஞ்சலா ஒண்ணு, கொஞ்சலா ஒண்ணுன்னு, மூணு ரோலையும் காலி பண்ணி, ப்ரிண்ட் போட்டு, 72 படங்களில், அஞ்சை தேத்தி, அந்த அஞ்சில், மூணை 'சீசீன்னு' வீட்ல தூக்கிப் போட்டு, ரெண்டில், ஒண்ணு ரொட்டேஷனுக்கும், ஒண்ணு, backupஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ரொட்டேஷனில் விட்ட படம், எம்புட்டு காறித்துப்பல்களுக்கு அப்பால அம்மிணி வீட்டுக்கு போச்சோ தெரீல, ஒரு வழியா ஃபர்ஸ்ட்டு ரவுண்டு பாஸ் ஆகி, பையன கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க.
மெனக்கெட்டு ரெண்டு மாசம், ஓடி ஆடி, ஒடம்பை தேத்தி, 3 packs டெவலப் பண்ணி, மெட்ராஸ் நல்ல மெட்ராஸுக்கு ஒரு டிக்கெட்டை போட்டு கெளம்பிப் போனேன்.
கும்பலா, ரெண்டு மூணு கார்ல பொண்ணு வீட்டுக்கு போயி, 'அமெரிக்க மாப்பிள்ளை'யின் கெத்தோடு, யாரிடமும் அதிகம் பேசாமல், நைக் ஷூவை மட்டும் வெளியில் கழட்டி, சாக்ஸோடு உள்புகுந்து, 'யா யா'ன்னு எல்லா கேள்விக்கும் அளந்து விட்டுட்டு, சைலண்ட்டா குந்திக்கினு இருந்தேன்.
'பொண்ண காஃபி கொண்டாரச் சொல்லுங்கோ'ன்னெல்லாம் யாரும் சொல்லலை. ஆனா, போனதும் காஃபி வந்தது. அதுவரை காட்டிய கெத்தெல்லாம் பறந்து போய், ஹீஹீன்னு இளிச்சுக்கினே காஃபியை வாங்கிக் குடிச்சாச்சு.
பக்கத்துல குடும்ப சகா ஒண்ணு, மெதுவா காத கடிச்சு, 'பொண்ணோட அக்கா அழகா இருக்காங்கல்ல'ன்னு சொல்லிச்சு. "டேய், ரொம்பத் தேவை இப்ப. பொண்ணு எப்படி"ன்னு? பேச்செடுத்தா. "உனக்கு ரொம்ப ஓவரு இதெல்லாம்"னு நெக்குலா பதில் வருது.
பொண்ணு கிட்ட பையன் பேசட்டுமேன்னு, பக்கத்து வீட்டு சகா, எடுத்து விட்டாரு.
நம்ம இதுவரை, பொண்ணுகளை தூர நின்னு கலாட்டா பண்ணியும், அவிக மேல் இங்க் அடிச்சும், சைக்கிள் காத்தை எறக்கி விட்டும் மட்டுமே பழக்கப் பட்டவங்க, தனியா கூட்டிட்டுப் போயி என்னத்த பேசரதுன்னு, கண்ணு இருட்டிப் போயிடுச்சு.
இருந்தாலும், அசராம, அமெரிக்கா மாப்பிள்ளையின் கெத்துடன், "யா. ஓ, ஓகே"ன்னு பந்தாவா எழுந்து போயி பக்கத்து ரூமுக்கு போயி. "ஹலோ, ஹவ் ஆர் யா."ன்னு ஆரம்பிச்சு, அப்பரம் என்ன பேசனேன்னு எனக்கே ஞாபகம் வரலை. அவங்களும், காவுக்கு கொடுத்த, ஆடு மாதிரி, 'வந்துட்டானுங்கய்யா'ன்னு ஒரு லுக் விட்டுக்கிட்டு இருந்தாங்க.
ரெண்டு நிமிஷத்துலையே, பேசனது போதும்னு, நைனா கொரல் விட்டாரு.
பலகாரம் சாப்பிட்டுட்டு எல்லாரும் எஸ்கேப் ஆயிட்டோம்.
குடும்ப சகா,"இன்னாடா, ஒகேவா'ன்னு கேக்க, "யா யா"ன்னு நான் இளிக்க, வண்டி கெளம்பிச்சு.
தூரத்தில், சன்னமான குரலில், "டாடி, ப்ளீஸ் நோஓஓஓஓஓஓஓஒ, இத விட என்ன பாழும் கெணத்துல கூட தள்ளுங்க, சந்தோஷமா விழறேன்னு" ஒரு பொண்ணு கொரல் கேட்டது, என் மனப்பிராந்தியான்னு இன்னி வரைக்கும் தெரியல்ல.
ஆனா, இன்றுவரை, எல்லாம் சுகமே, பரம சுகமே! ;)
இன்னும் அஞ்சு பேரை, இந்த மேட்டரை பத்தி எழுதச் சொல்லணும்னு ஒரு கடமை இருக்கு.
இந்தப் பதிவை படிக்கும், முதல் அஞ்சு பேரு, உடனே பின்னூட்டம் இட்டு, "உள்ளேன் ஐயா" சொல்லி, உங்க 'பெண்/பையன் பார்த்த' படலத்தை பதியவும்.
நீங்க பதிவர் இல்லன்னா, எனக்கு surveysan2005 at yahoo . comல் உங்க கதையை அனுப்பினா, நானே பிரசுரிக்கச் சித்தமாயிருக்கிறேன். don't escape, do write.
பதிவை படிச்சுட்டு பின்னூட்டம் போடாம எஸ்கேப் ஆனீங்கன்னா, என்ன ஆகும்னு உங்களுக்கே தெரியும். சோ, ரிஸ்க் எடுக்காதீங்க. பின்னூட்டிடுங்க.
Tuesday, April 13, 2010
சொராயாவை கல்லால் அடித்துக் கொன்ற கதை
தப்பு செய்யரவன் தண்டனை இல்லாமல் தப்பிச்சா பரவால்ல. ஆனா, ஒரு நிரபராதி கண்டிப்பா தண்டிக்கப்படக் கூடாதுன்னு ஏதோ படத்துல ஜிவாஜி சொல்லுவாரு.
நியாயமான டயலாக் அது.
தப்பே பண்ணவனா இருந்தாலும், நமக்கு வேண்டியவனா இருந்தா, அவனுக்கு தண்டனை கிட்டுவதை நம்மால் தாங்கிக்க முடியாது.
பெருமழைக்காலம் என்ற மலையாளப் படத்தில், ஹீரோ ஒரு கைகலப்பில், இன்னொருவரை கொன்று விடுவார். இது நிகழ்வது சௌதி அரேபியா. அங்க கொலைக்கு தண்டனை மரணம்.
கொலையே செய்தவராயிருந்தாலும், மீரா ஜாஸ்மீனின் கணவன் என்பதால் நமக்கு அவர் மேல் பச்சாதாபம் வருகிறது.
இதுவே, தப்பே செய்யாதவனுக்கு மரண தண்டனை கொடுத்து, அவனை தூக்கிலும் போட்டு கொண்ணுட்டா, நம்ம பிஞ்சு மனசு தாங்குமா?
கண்டிப்பா தாங்காது.
சமீபத்தில் பார்த்த 'stoning of Soraya' என்ற ஃபார்ஸி மொழிப் படத்தின் கரு இது.
இரானில் ஷெரியத் சட்டத்தின் படி, தவறிழைக்கும் பெண்ணுக்கு தண்டனை, மத்தவங்க எல்லாம் சேந்து கல்லால் அடித்துக் கொல்லுதலாம்.
எப்பயாச்சும் செய்தித்தாளில் மூலையில் இந்த மாதிரி செய்தி வரும். நாமும், மேலோட்டமா மேஞ்சுட்டு அடுத்த கிளு கிளு செய்தி பக்கம் கவனத்தை ஓட்டிடுவோம்.
இந்த மாதிரி ஒரு தண்டனைக்கு உட்பட்ட பெண்ணின் கதை பகீர் பகீர் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.
சொராயா, நான்கு குழந்தைகளின் தாய்.
இவளின் கணவனுக்கு, இன்னொரு திருமணம் செய்ய ஆசை. ஆனா, சொராயாவையும் இன்னொரு குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பண வசதி இருக்காது. சொராயாவும், விவாகரத்து கொடுத்து பிரிய சம்மதிக்கவில்லை.
கணவன், ஊர் பெருசுகள் சிலதுகளுடன் சேர்ந்து, சொராயா இன்னொருவருடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என்று கதை கட்டிவிட்டு, பஞ்சாயத்து கூட்டி, சொராயாவுக்கு, மரண தண்டனை வாங்கித் தருகிறான்.
திக் திக் கிளைமாக்ஸில், சொராயாவை, இடுப்பவரை ஒரு பள்ளத்தில் புதைத்து, கணவனும், இரு மகன்களும், கிராம மக்கள் அனைவரும் சுற்றி நின்று, கல்லால் அடித்துக் கொல்கிறார்கள்.
கடைசி காட்சிகளில், கல்லால் அடித்துக் கொல்லுவதை காண, கல் நெஞ்சம் வேணும்.
இதை எல்லாம் பாத்து ஏன் டிப்ரஸ் ஆகணும்? பாக்காதவங்க பாக்காம விட்டுடுங்க.
திடசாலிகள், பாக்கலாம். நல்ல படம். நல்லா எடுத்திருக்காங்க.
அனைவரின் நடிப்பும் அபாரம்.
சொராயாவின் அக்கா சாராவாக நடித்தவர் கலக்கல் நடிப்பு. Passion of christல் ஏசுவாய் வருபவர், இதில் நிருபவராய் கொஞ்ச நேரத்துக்கு வந்துட்டுப் போறாரு.
சொல்ல மறந்துட்டேன். இது உண்மைக் கதையாம்.
ஹ்ம்!
அல்கொய்தா, தாலிபான் வகையராக்கள் அடிக்கடி அரங்கேற்றும் கொடுமையாம் இது.
2007ல் CNNல் வந்த ஒரு செய்தி (திடமனசுக்காரர்கள் மட்டும் பார்க்க) இங்கே
pic source: pingounica.com
உபரி தகவல்: (வெட்டி ஒட்டியது)
Women's rights violations happen all over the world. Whether it is stoning, honor killings, domestic violence, or many other atrocities toward women, we need your help. By registering your name and email address, you can be a part of our e-petition that will be sent to the United Nations general secretary and the United States' secretary of state. Lending your name will make a difference.
If you would like to get involved, there are a number of organizations supporting the film who are working on issues related to women‚ and human rights. Contact them today.
Human Rights Watch
350 Fifth Avenue, 34th Floor
New York, NY 10118-3299
Tel: 212.290-4700 Fax: 212.736.1300
hrwnyc@hrw.org
www.hrw.org
Vital Voices Global Partnership
Creating a Decade of Investing in Women to Improve the World
1625 Massachusetts Ave., NW, Suite 850
Washington, DC 20036
Tel: 202.861.2625 Fax: 202.296.4142
info@vitalvoices.org
www.vitalvoices.org
Women for Women International
Helping Women Survivors of War Rebuild Their Lives
4455 Connecticut Avenue NW, Suite 200, Washington, DC 20008
P. 202.521.9641 - F. 202.737.7709
www.womenforwomen.org
Thunderbird School of Global Management
We educate global leaders who create sustainable prosperity worldwide.
1 Global Place
Glendale, AZ 85306-6000 USA
Telephone - Main Switchboard: 602.978.7000
Toll Free: 800.848.9084 (within the United States)
www.thunderbird.edu
The Institute for the Economic Empowerment of Women
2709 W. I-44 Service Road
Oklahoma City, OK 73112
405.943.4474
www.ieew.org
Independent Women's Forum
All Issues Are Womenπs Issues
4400 Jenifer St.
Suite 240
Washington, DC 20015
(202) 419-1820
info@americansforunfpa.org
www.iwf.org
The Moral Courage Project
Robert F. Wagner Graduate School of Public Policy
New York University
The Puck Building
New York NY 10012
212-992-8704
www.moralcourage.com

Monday, April 12, 2010
ஏசுதாஸ், SPB, சித்ரா, ஜானகி - தேசிய விருது பாடல்கள்
ஏசுதாஸ் இதுவரை ஏழு தபா தேசிய விருது வாங்கியிருக்காரு.
SPB, ஜானகி, சித்ரா, தலா ஆறு தபா வாங்கியிருக்காங்களாம்.
எந்தெந்த பாட்டுக்கு எந்தெந்த வருஷம் வாங்கினாங்கன்னு, நோவாம, யூட்யூபும், விக்கியும் பாத்து தொகுத்த தொகுப்பு.
செம பாடல்கள்! பொறுமையா ஒவ்வொண்ணும் கேட்டு ஜென்ம சாபல்யம் பெறலாம்.
****விக்கியில் தவறிருக்காம். வெவரம் தெரிஞ்சவங்க விக்கியை சரி செய்யுங்கள். நன்றீஸ்****
S.Janaki
1962 கொஞ்சும் சலங்கை - சிங்கார வேலனே
1976 16 வயதினிலே - செந்தூரப் பூவே
1981 ஒப்போள் - ஏட்டுமானூர் அம்பலத்தில்
1982 மஞ்சில் விரிஞ்ச பூக்கள் - மஞ்சணி கொம்பில்
1984 சித்தாரா - வெண்ணெலோ கொடாரி அந்தம்
1992 தேவர் மகன் - இஞ்சி இடுப்பழகா
K.S.Chithra
1986 சிந்து பைரவி - பாடறியேன் படிப்பறியேன்
1987 நகத்ஷதங்கள் - மஞ்சள் பிரசாதமும்
1989 வைசாலி - இந்துபுஷ்பம் சூடி நிற்கும்
1996 மின்சாரக் கனவு - மானா மதுரை
1997 விராசத் - பாயலி சுன் முன் சுன் முன்
2004 ஆட்டோகிராஃப் - ஒவ்வொரு பூக்களுமே
K.J.Yesudas
1973 அச்சனும் பாப்பையும் - மனுஷன் மதங்கள சிருஷ்டிச்சு
1974 காயத்ரி - பத்மதீர்த்தமே உணரு
1977 சிட்சோர் - கொரி தேரா
1983 மேகசந்தேசம் - ஆகாச தேசனா
1988 உண்ணிகளே ஒரு கத பரயான்
1992 பரதம் - ராம கதா
1994 சொப்பனம்
S.P.B
1979 சங்கராபரணம் - ஓம்கார
1981 ஏக் துஜே கேலியே - தேரே மேரே பீச்சுமேன்
1983 சாகர சங்கமம் - வேதம் அணுவிணுவ
1988 ருத்ரவீணா - செப்பலணி உண்டி
1995 சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷர கவை
1996 மின்சாரக் கனவு - தங்கத் தாமரை மகளே

Sunday, April 11, 2010
கவுத்துட்டானுங்களே...
ஒரு மரத்தை கடந்து செல்லும் போது, ஒரு கணமாவது நின்று, அதன் இருப்பை தன் மனதுள் பதிந்து கொள்ளாமல் நகரமாட்டேன்னு goodnewsindia.com ஸ்ரீதரன், ஏதோ ஒரு பதிவில் எழுதியிருந்தார்.
கிட்டத்தட்ட என் பழக்கமும் அதுதான். இதற்கு நான் வளர்ந்த சூழலும் காரணம். என் பெற்றோர்களும் செடி கொடி மரம் வைப்பதில் தீவிரமானவர்கள். வீட்டுக்குள்ள என்ன இருக்குமோ இல்லியோ, அது ரெண்டாம் பட்சம். வீட்டுக்கு வெளீல பச்சைப் பசேல்னு வச்சிருபாங்க. ரம்யமான சூழல், வாடகை வீடானாலும், சொந்த வீடானாலும், விடாது தொடரும்.
எனக்கும் அது பழகிப் போச்சு. ஊரு விட்டு ஊரு வந்து, அமெரிக்காவில் அல்லாடும்போதும், தங்கும் சூழலில் ஒரு பசுமை இருக்கணும்னு ஸ்ட்ராங்கா ஒரு ஃபில்ட்டர் போட்டுத்தான் வீடை தேடுவது வழக்கமாய் இருந்தது.
மரம் ஒரு பிரமிப்பு. ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு விதமான அழகு. மரங்களால் கிடைக்கும் பயன் எல்லாம் தனிக்கதை. எல்லாருக்கும் தெரிஞ்ச கதை. அதை இங்க ஆராய வேணாம். ஒரு மினிமம் கியாரண்டியாக நிழலையாவது தரும்.
சுட்டெரிக்கும் வெயில் கொண்ட சென்னைக்கு மரத்தின் அவசியம் மிகப் பெரியது. ஆனால், பலருக்கும் அது விளங்குவதில்லை. மிக்காறும் மக்கள், மரங்களை குப்பை உற்பத்தி செய்யும் ஆலையாக பார்க்கிறார்கள். இலை கொட்டுமாம், பெருக்கி சுத்தப்படுத்தரது பெரிய வேலையாம்.
மெனக்கெட்டு ஆள் சேர்த்து சென்ற விடுமுறையின் போது, தெருவில் வைத்த மரங்களில் பாதி சரியாக பராமரிக்கப்படலையாம். பாதி வளந்துக்கிட்டு இருக்குதாம். வருவது வரட்டும்னு பெருமூச்சுதான் விட முடியுது.
மரத்தை குப்பையாக பார்க்கும் கெம்மனாட்டிகள், அன்னையை விட சிறந்த சென்னையில் தான் இருக்காங்கன்னு நெனச்சா, அமெரிக்காவிலும் சில அல்லக்கைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்ப இருக்கர வீட்டுக்கு குடிபுகும் முன், வழக்கம் போல் 'பசுமை' எம்புட்டு இருக்குன்னு பாத்துட்டுதான் கையெழுத்து போட்டேன். பின் பக்கம், அடர்ந்த பசுமையில், குருவிக் கூடுகள் ஏராளமாய் இருந்தது. கீச் கீச்னு நாள் முழுவதும் ரம்யமா இருக்கும்.
அந்த வீட்டு ஓனர் வீட்டை சமீபத்தில் வித்துட்டு போயிட்டாரு. இப்ப சீனாக்காரனுவ புச்சா வந்திருக்காங்க. வந்து ஒரு மாசம் கூட ஆகலை. இன்னிக்கு காத்தால எழுந்துக்கும்போது கிர்ர்ர்ர்ர்னு சத்தம். என்னன்னு எட்டிப் பாத்தா பகீராயிடுச்சு. மரங்களை சர்ர்ர்னு வெட்டிக்கிட்டு இருந்தானுவ.
பத்தே நிமிஷம்தான், தரை மட்டம்.
விசாரிச்சா, குப்பை சேருதாம்.
யமகாதகர்கள். பில் கேட்ஸ் கணக்கா பேங்க்ல துட்டு இருந்திருந்தா, ஒரு செக் எழுதிக் கொடுத்து வீட்டை வாங்கி, மரங்களை காப்பாத்தியிருப்பேன். ஹ்ம்!
வெட்டரதுக்கு முன்:
வெட்டிய பின்:

Sunday, April 04, 2010
தண்ணீர் தண்ணீர்
மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம்.
தண்ணியிலிருந்துதான் எல்லாம் துவங்கியது. தண்ணியில்லாமதான் எல்லாமே முடியவும் போகுது.
தண்ணீரின் முக்கியத்துவம் எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சும், யாரும் அதை ரொம்ப சீரியஸா எடுத்து, பெருத்துக் கொண்டே வரும் தண்ணீர் ப்ரச்சனைக்கு முடிவு கட்ட மாட்றாங்க.
எனக்கு நினைவு தெரிஞ்ச காலத்துல, எங்க வீடு கட்டும்போது, இருபது ~ முப்பது அடி தோண்டியதும் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது ஞாபகம் இருக்கிறது.
'ஜல' ராசி ஜாஸ்தி எங்களுக்கு போலருக்கு. வற்றாக் கிணறாய் இவ்வளவு வருஷமும் இருந்து வந்திருக்கிறது.
எங்க ஏரியாவில் ஏப்ரல் மே ஆனால்,கிணறுகள் வற்றுவது அரங்கேறத் துவங்கி கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷம் ஆச்சு.
தெருவில் கிட்டத்தட்ட 100 வீடுகள். 100ல் 99 வீட்டில் கிணறு வற்றி, எல்லோரும் Boring போட்டு, அறுபது, எழுபது, எண்பது அடி என்று ஆழம் போட்டு, ஓரளவுக்கு ப்ரச்சனையை சமாளித்து வந்தனர்.
எங்க வீட்ல மட்டும், எங்க 30 அடி கிணறு, வற்றாமல், குடுத்துக்கிட்டே இருந்தது.
Boring போட்ட வீடுகளில், ஐந்தம்ச திட்டம் மாதிரி, ஒவ்வொரு அஞ்சு வருஷத்துக்கும், இன்னொரு இருவது அடியோ ஐம்பது அடியோ அதிகப்படுத்தினால்தான், தண்ணி வருங்கர நெலமையால், ஆழமாக்கிக்கிட்டே வந்தாங்க.
எங்க வற்றாக் கிணறும் கூட சென்ற வருஷம் வத்திப் போயி, சில பல டாலர்களில், சில நூறு அடிகள் ஆழத்தில், Boring போட்டு நாங்களும் ஜோதியில் ஐக்கியம் ஆயிட்டோம்.
இருக்கும் குளம் குட்டையெல்லாம், சமம் படுத்தி, ஃப்ளாட் கட்டிக்கிட்டே வந்தா, நிலத்தடி நீர் எப்படி ரீ-சார்ஜ் ஆகும்?
atleast, மரங்கள் நிறைய வளர்த்து, பூமியில் நிழல் படியச் செய்தாலே, நிலத்தடி நீரின் ஆழம் இவ்ளோ சீரழிஞ்சிருக்காதாம். படிச்சவங்க சொல்லறாங்க.
மனுஷனுங்க சுயநலம் நாளுக்கு நாள் தலகால் புரியாம அதிகரிச்சுக்கிட்டே இருக்கு. வருஷா வருஷம், இந்த தண்ணியில்லா கொடுமை அதிகமாகிக்கிட்டே இருக்கேன்னு, தண்ணில ஒக்காந்துக்கிட்டு வாய் கிழியப் பேசிக்கராங்க. அவங்க வீட்டுக்கு தேவையானதை, தண்ணி லாரி காரன்கிட்ட சில பல காந்தி நோட்டை கொடுத்து முடிச்சுக்கறாங்க. ஆனா, எவ்ளோ காலம் இப்படி இழுத்துக்கிட்டே போவாங்க?
தண்ணி லாரி காரன் எங்கேருந்து கொண்டாரான்? அவன் உரிஞ்செடுக்கர கெணத்துல மட்டும் என்ன ஆகாசத்துலேருந்து ஸ்பெஷலாவா தண்ணி கொட்டுது? அதுவும் ஒரு நாள் வத்திப் போகும்.
கடல்நீரை குடிநீரா மாத்தர திட்டம்தான் பின்னாளில் ஓரளவுக்கு நகரங்களின் தேவையை ஈடுகட்டலாம். ஆனா, அதுக்கும் புது டெக்னாலஜி வந்தாதான் நம்மள மாதிரி நகரங்களில் உபயோகிக்க முடியும். அரபு நாடுகளில், கடல் நீரை கொதிக்க வச்சு, நீராவியை கபால்னு புடிச்சு குடிதண்ணி ஆக்கராங்க. அவங்ககிட்ட எண்ணை இருக்கு, இதெல்லாம் பண்ணலாம். நமக்கு இன்னும் சிம்பிளா, நோவாம செய்யர மாதிரி செய்முறை வேணும். கண்டுபிடிப்பாங்க.
ஆனா, நிலத்தடி நீர் குறையும் வேகத்தைப் பார்த்தால், நம் வாழ்நாளிலேயே, பெரும்பான்மையான மக்கள் தொகை, தண்ணிக்கு அல்லாடும் காட்சியைக் காண வேண்டி வரும் என்பதில் சந்தேகமே இல்லை. வங்கிக் கணக்கில் எம்புட்டு துட்டு இருந்தாலும், ஒரு குடம் தண்ணியை காசு கொடுத்தாலும் கிட்டாத நிலை ஏற்படும் காலம் வெகு அருகாமையில் இருக்கிறது.
ஊருக்கு ஒரு Lakeம், நகரத்துக்கு ஒரு reservoirம் கட்டி, தண்ணி சுத்திகரிப்பையெல்லாம் திறம் படச் செய்து வரும், அமெரிக்காவே, தண்ணியை சேமிங்க சேமிங்கன்னு கூவிக்கிட்டு இருக்காங்க. வெயில் காலங்களில் செடிக்கு தண்ணி ஊத்தாதிங்க, அதைப் பண்ணாதீங்க, இதைப் பண்ணாதீங்கன்னு அலப்பரை பண்ணறாங்க.
நம்ம ஊரில் ஏப்ரல் மேயில் நாய் படாத பாடு பட்டாலும், ஜூன், ஜூலையிலிருந்து அதை மறந்து, அந்த வருஷம் திரும்ப ஒரு அஞ்சடி நிலத்தடி நீர் கீழப் போக என்னென்ன பண்ணனுமோ அதை திறம்படச் செய்றாங்க.
இப்படி புலம்பி ஒண்ணுமே ஆகப் போவதில்லை. தெருவுக்கு ஒருத்தராவது, கொஞ்சம் மெனக்கட்டு ஏதாவடு பண்ணினாத்தான் விமோச்சனம் வரும்.
குறைந்த பட்சம், தெரு ஒரு மரம் நடுதல்; தெரு வீடுகளில் நிலத்தடி நீர் சேகரிப்பு விஷயங்கள் ஒழுங்கா பராமரிக்கறாங்களான்னு கவனித்தல்; ஊரில் இருக்கும் குளம் குட்டைகளை யாராவது மூட முயற்சித்தால், உடனே ஒரு கும்பல் சேத்து, அதை விசாரிச்சு ஒரு stay வாங்குதல்; இந்த மாதிரி ஏதாச்சும் பண்ணனும். இல்லன்னா, எதிர்காலம் ரொம்பக் கேள்விக் குறியாதான் இருக்கு.
இந்த மாச National Geographic பத்திரிகையில், தண்ணியை அலசோ அலசுன்னு அலசி வச்சிருந்தாங்க. அதிலிருந்து, ரொம்ப சுவாரஸ்யமான சில புள்ளி விவரங்கள் உங்க கிட்ட சொல்லலாம்னு எழுத ஆரம்பிச்சா, வழக்கம் போல், பொலம்பல்ஸ் அதிகமாயிடுச்சு.
ஐ ஆம் த சாரி;
ரொம்பவே சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னன்னா, நம்ம பூமியில் இருக்கும் குடி நீரின் அளவு, பல கோடி வருஷமா அதே அளவுதான் இருக்காம். அதாவது, உதாரணத்துக்கு, டைனோசார் காலத்தில், 10 கோடி குடம் குடி தண்ணி பூமியில் இருந்தா, இப்பவும் அதே அளவு அப்படியே இருக்காம். கொஞ்சமும், கூடவோ கொறையவோ செய்யலையாம். டைனோசார் அன்னிக்கு குடிச்ச அதே தண்ணியத்தான் நாமளும் இப்பக் குடிக்கறோம்.
கடல் தண்ணி மேல போய், மழையா கீழ வந்து, திரும்ப கடலுக்கே திரும்பிப் போறது நடந்துக்கிட்டேதான் இருக்குது. அளவு குறையாம.
ஆனா, ஒரே வித்யாசம், நிலத்தடி நீரின் ஆழம் மட்டும் அதிகமாகிக்கிட்டே இருக்கு. மக்கள் தொகை ஜாஸ்தி ஆக ஆக, உரிஞ்சு எடுத்து எடுத்து இன்னும் கீழத்தான் அனுப்பிக்கிட்டே இருப்போம்.
ஒரு பக்கம் உற்பத்தியைப் பெருக்க, கடல் நீரை சுத்திகரித்தல் எல்லாம் முயன்றாலும், மிக மிக முக்கியமான தேவை, சிக்கனத்தைப் பேணுதல். கீழே இருக்கும் புள்ளி விவரங்களைப் பாருங்க, எதை குறைக்கணும், எதை கூட்டணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.
1 கிலோ மாட்டிறைச்சி உற்பத்தி பண்ண 3200 லிட்டர் நீர் தேவைப் படுதாம்;
1 கிலோ பன்றி இறைச்சிக்கு 1,200 லிட்டர்;
1 கிலோ கோழி இறைச்சிக்கு 805 லிட்டர்;
1 கிலோ முட்டைக்கு 687 லிட்டர்;
1 கிலோ உருளைக் கிழங்கு விளைவிக்க 53 லிட்டர்;
1 கிலோ ஆரஞ்சு பழம் விளைவிக்க 94 லிட்டர்;
1 கிலோ கத்திரிக்கா விளைவிக்க 45 லிட்டர்;
1 Jeans pant உருவாக்க 5,000 லிட்டர்;
1 பருத்தி படுக்கை விரிப்பை உருவாக்க 4,800 லிட்டர்;
1 கப் coffee உருவாக 63 லிட்டர்;
1 கப் tea 15 லிட்டர்;
1 குவளை beer 34 லிட்டர்;
1 கப் பால் 91 லிட்டர்;
பயங்கரமா இருக்குல்ல கணக்கு பாத்தா?
so, இனி தண்ணீரை directஆ உபயோகிக்கும்போதோ, indirectஆ மேல் சொன்ன பொருட்களின் மூலம் உபயோகிக்கும்போதோ, ஒரு நொடி சிந்திங்க.
சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா, கத்திரிக்கா பிரியாணி சாப்பிடலாமா?
முழுக் குளியல் குளிக்கலாமா, காக்கா குளியல் குளிச்சா போதுமா?
புது Jeans வாங்கலாமா, இருக்கரதையே துவைக்காம இன்னொரு வருஷம் போட்டா போதுமா?
யோசிச்சுக்கோங்கப்பு, இல்லாட்டி, நாறிரும் நெலமை.
ஒரு கப் டீ குடிச்சா, 15 லிட்டர் வீணாப்போவுதாம். என்ன கொடுமைங்க இது?
டீ/காப்பி குடிக்காம இருக்க முடியாது. அப்பரம், வாழ்ந்து என்னா ப்ரயோஜனம். ஸோ, குடிக்கரவங்க திருப்திகரமா குடியுங்க. ஆனா, ஒரு மரத்தையாவது நட்டு வச்சுட்டு குடிங்க. ஒரு மரம் வளந்து ஆளானா, நீங்க குடிக்கர டீ/காப்பிக்கு தேவையான தண்ணிக்கு ஈடாயிடும்.
பட உதவி: கருவாயன் (பின்னிட்டாருல்ல? இதைவிட எதிர்கால தண்ணீர் ப்ரச்சனையை எப்படி காட்ட முடியும்?)
எல்லாரும் சேந்து அவருக்கு ஒரு ஓ போடுங்க!
ஹாங், சொல்ல மறந்துட்டேன். PiTல் இம்மாத போட்டித் தலைப்பு தண்ணீர் தண்ணீர்.

Subscribe to:
Posts (Atom)