recent posts...

Tuesday, April 13, 2010

சொராயாவை கல்லால் அடித்துக் கொன்ற கதை

தப்பு செய்யரவன் தண்டனை இல்லாமல் தப்பிச்சா பரவால்ல. ஆனா, ஒரு நிரபராதி கண்டிப்பா தண்டிக்கப்படக் கூடாதுன்னு ஏதோ படத்துல ஜிவாஜி சொல்லுவாரு.
நியாயமான டயலாக் அது.
தப்பே பண்ணவனா இருந்தாலும், நமக்கு வேண்டியவனா இருந்தா, அவனுக்கு தண்டனை கிட்டுவதை நம்மால் தாங்கிக்க முடியாது.
பெருமழைக்காலம் என்ற மலையாளப் படத்தில், ஹீரோ ஒரு கைகலப்பில், இன்னொருவரை கொன்று விடுவார். இது நிகழ்வது சௌதி அரேபியா. அங்க கொலைக்கு தண்டனை மரணம்.
கொலையே செய்தவராயிருந்தாலும், மீரா ஜாஸ்மீனின் கணவன் என்பதால் நமக்கு அவர் மேல் பச்சாதாபம் வருகிறது.
இதுவே, தப்பே செய்யாதவனுக்கு மரண தண்டனை கொடுத்து, அவனை தூக்கிலும் போட்டு கொண்ணுட்டா, நம்ம பிஞ்சு மனசு தாங்குமா?
கண்டிப்பா தாங்காது.

சமீபத்தில் பார்த்த 'stoning of Soraya' என்ற ஃபார்ஸி மொழிப் படத்தின் கரு இது.
இரானில் ஷெரியத் சட்டத்தின் படி, தவறிழைக்கும் பெண்ணுக்கு தண்டனை, மத்தவங்க எல்லாம் சேந்து கல்லால் அடித்துக் கொல்லுதலாம்.
எப்பயாச்சும் செய்தித்தாளில் மூலையில் இந்த மாதிரி செய்தி வரும். நாமும், மேலோட்டமா மேஞ்சுட்டு அடுத்த கிளு கிளு செய்தி பக்கம் கவனத்தை ஓட்டிடுவோம்.
இந்த மாதிரி ஒரு தண்டனைக்கு உட்பட்ட பெண்ணின் கதை பகீர் பகீர் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

சொராயா, நான்கு குழந்தைகளின் தாய்.
இவளின் கணவனுக்கு, இன்னொரு திருமணம் செய்ய ஆசை. ஆனா, சொராயாவையும் இன்னொரு குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பண வசதி இருக்காது. சொராயாவும், விவாகரத்து கொடுத்து பிரிய சம்மதிக்கவில்லை.
கணவன், ஊர் பெருசுகள் சிலதுகளுடன் சேர்ந்து, சொராயா இன்னொருவருடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என்று கதை கட்டிவிட்டு, பஞ்சாயத்து கூட்டி, சொராயாவுக்கு, மரண தண்டனை வாங்கித் தருகிறான்.

திக் திக் கிளைமாக்ஸில், சொராயாவை, இடுப்பவரை ஒரு பள்ளத்தில் புதைத்து, கணவனும், இரு மகன்களும், கிராம மக்கள் அனைவரும் சுற்றி நின்று, கல்லால் அடித்துக் கொல்கிறார்கள்.
கடைசி காட்சிகளில், கல்லால் அடித்துக் கொல்லுவதை காண, கல் நெஞ்சம் வேணும்.

இதை எல்லாம் பாத்து ஏன் டிப்ரஸ் ஆகணும்? பாக்காதவங்க பாக்காம விட்டுடுங்க.
திடசாலிகள், பாக்கலாம். நல்ல படம். நல்லா எடுத்திருக்காங்க.
அனைவரின் நடிப்பும் அபாரம்.
சொராயாவின் அக்கா சாராவாக நடித்தவர் கலக்கல் நடிப்பு. Passion of christல் ஏசுவாய் வருபவர், இதில் நிருபவராய் கொஞ்ச நேரத்துக்கு வந்துட்டுப் போறாரு.

சொல்ல மறந்துட்டேன். இது உண்மைக் கதையாம்.

ஹ்ம்!

அல்கொய்தா, தாலிபான் வகையராக்கள் அடிக்கடி அரங்கேற்றும் கொடுமையாம் இது.

2007ல் CNNல் வந்த ஒரு செய்தி (திடமனசுக்காரர்கள் மட்டும் பார்க்க) இங்கே

pic source: pingounica.com



உபரி தகவல்: (வெட்டி ஒட்டியது)
Women's rights violations happen all over the world. Whether it is stoning, honor killings, domestic violence, or many other atrocities toward women, we need your help. By registering your name and email address, you can be a part of our e-petition that will be sent to the United Nations general secretary and the United States' secretary of state. Lending your name will make a difference.

If you would like to get involved, there are a number of organizations supporting the film who are working on issues related to women‚ and human rights. Contact them today.

Human Rights Watch
350 Fifth Avenue, 34th Floor
New York, NY 10118-3299
Tel: 212.290-4700 Fax: 212.736.1300
hrwnyc@hrw.org
www.hrw.org

Vital Voices Global Partnership
Creating a Decade of Investing in Women to Improve the World
1625 Massachusetts Ave., NW, Suite 850
Washington, DC 20036
Tel: 202.861.2625 Fax: 202.296.4142
info@vitalvoices.org
www.vitalvoices.org

Women for Women International
Helping Women Survivors of War Rebuild Their Lives
4455 Connecticut Avenue NW, Suite 200, Washington, DC 20008
P. 202.521.9641 - F. 202.737.7709
www.womenforwomen.org

Thunderbird School of Global Management
We educate global leaders who create sustainable prosperity worldwide.
1 Global Place
Glendale, AZ 85306-6000 USA
Telephone - Main Switchboard: 602.978.7000
Toll Free: 800.848.9084 (within the United States)
www.thunderbird.edu

The Institute for the Economic Empowerment of Women
2709 W. I-44 Service Road
Oklahoma City, OK 73112
405.943.4474
www.ieew.org

Independent Women's Forum
All Issues Are Womenπs Issues
4400 Jenifer St.
Suite 240
Washington, DC 20015
(202) 419-1820
info@americansforunfpa.org
www.iwf.org

The Moral Courage Project
Robert F. Wagner Graduate School of Public Policy
New York University
The Puck Building
New York NY 10012
212-992-8704
www.moralcourage.com

5 comments:

ரவி said...

பின்னூட்ட மட்டுறுத்தல் இருக்கா என்ன ?

ரவி said...

அப்ப மீ த ப்ர்ஸ்ட்

ரவி said...

மற்றும் செக்கண்டு

SurveySan said...

ரவி, டாங்க்ஸ்.

///அப்ப மீ த ப்ர்ஸ்ட்///

:) என்ன இது சின்ன புள்ளத்தனமா, அதுவும் என் பதிவுல? you are the only-one.

என் கருத்துக்கள் ரொம்ப ஆழமா பாதிச்சுடுது எல்லாரையும். பின்னூட்ட முடியாம, படிச்சுட்டு ஒரு மயக்கத்துல போயிடறாங்க ;)

பனித்துளி சங்கர் said...

எப்பொழுதுதான் மாறுமோ இதுபோன்ற நிகழ்வுகள் !