recent posts...

Sunday, April 11, 2010

கவுத்துட்டானுங்களே...

ஒரு மரத்தை கடந்து செல்லும் போது, ஒரு கணமாவது நின்று, அதன் இருப்பை தன் மனதுள் பதிந்து கொள்ளாமல் நகரமாட்டேன்னு goodnewsindia.com ஸ்ரீதரன், ஏதோ ஒரு பதிவில் எழுதியிருந்தார்.
கிட்டத்தட்ட என் பழக்கமும் அதுதான். இதற்கு நான் வளர்ந்த சூழலும் காரணம். என் பெற்றோர்களும் செடி கொடி மரம் வைப்பதில் தீவிரமானவர்கள். வீட்டுக்குள்ள என்ன இருக்குமோ இல்லியோ, அது ரெண்டாம் பட்சம். வீட்டுக்கு வெளீல பச்சைப் பசேல்னு வச்சிருபாங்க. ரம்யமான சூழல், வாடகை வீடானாலும், சொந்த வீடானாலும், விடாது தொடரும்.
எனக்கும் அது பழகிப் போச்சு. ஊரு விட்டு ஊரு வந்து, அமெரிக்காவில் அல்லாடும்போதும், தங்கும் சூழலில் ஒரு பசுமை இருக்கணும்னு ஸ்ட்ராங்கா ஒரு ஃபில்ட்டர் போட்டுத்தான் வீடை தேடுவது வழக்கமாய் இருந்தது.

மரம் ஒரு பிரமிப்பு. ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு விதமான அழகு. மரங்களால் கிடைக்கும் பயன் எல்லாம் தனிக்கதை. எல்லாருக்கும் தெரிஞ்ச கதை. அதை இங்க ஆராய வேணாம். ஒரு மினிமம் கியாரண்டியாக நிழலையாவது தரும்.
சுட்டெரிக்கும் வெயில் கொண்ட சென்னைக்கு மரத்தின் அவசியம் மிகப் பெரியது. ஆனால், பலருக்கும் அது விளங்குவதில்லை. மிக்காறும் மக்கள், மரங்களை குப்பை உற்பத்தி செய்யும் ஆலையாக பார்க்கிறார்கள். இலை கொட்டுமாம், பெருக்கி சுத்தப்படுத்தரது பெரிய வேலையாம்.
மெனக்கெட்டு ஆள் சேர்த்து சென்ற விடுமுறையின் போது, தெருவில் வைத்த மரங்களில் பாதி சரியாக பராமரிக்கப்படலையாம். பாதி வளந்துக்கிட்டு இருக்குதாம். வருவது வரட்டும்னு பெருமூச்சுதான் விட முடியுது.

மரத்தை குப்பையாக பார்க்கும் கெம்மனாட்டிகள், அன்னையை விட சிறந்த சென்னையில் தான் இருக்காங்கன்னு நெனச்சா, அமெரிக்காவிலும் சில அல்லக்கைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்ப இருக்கர வீட்டுக்கு குடிபுகும் முன், வழக்கம் போல் 'பசுமை' எம்புட்டு இருக்குன்னு பாத்துட்டுதான் கையெழுத்து போட்டேன். பின் பக்கம், அடர்ந்த பசுமையில், குருவிக் கூடுகள் ஏராளமாய் இருந்தது. கீச் கீச்னு நாள் முழுவதும் ரம்யமா இருக்கும்.
அந்த வீட்டு ஓனர் வீட்டை சமீபத்தில் வித்துட்டு போயிட்டாரு. இப்ப சீனாக்காரனுவ புச்சா வந்திருக்காங்க. வந்து ஒரு மாசம் கூட ஆகலை. இன்னிக்கு காத்தால எழுந்துக்கும்போது கிர்ர்ர்ர்ர்னு சத்தம். என்னன்னு எட்டிப் பாத்தா பகீராயிடுச்சு. மரங்களை சர்ர்ர்னு வெட்டிக்கிட்டு இருந்தானுவ.
பத்தே நிமிஷம்தான், தரை மட்டம்.
விசாரிச்சா, குப்பை சேருதாம்.

யமகாதகர்கள். பில் கேட்ஸ் கணக்கா பேங்க்ல துட்டு இருந்திருந்தா, ஒரு செக் எழுதிக் கொடுத்து வீட்டை வாங்கி, மரங்களை காப்பாத்தியிருப்பேன். ஹ்ம்!

வெட்டரதுக்கு முன்:



வெட்டிய பின்:


13 comments:

வடுவூர் குமார் said...

அட‌ப்பாவி! இப்ப‌டி மொட்டை அடிச்சிட்டாங்க‌ளே!!
ம‌ஸ்க‌ட்டில் கூட‌ ம‌ர‌ம் வ‌ள‌ர்க்க‌ அர‌சாங்க‌ம் யோசிப்ப‌தில்லை ஆனால் ந‌ன்கு வ‌ள‌ர்ந்த‌ ம‌ர‌த்தை எப்ப‌டித்தான் வெட்ட‌ ம‌ன‌து வ‌ருதோ?

SurveySan said...

மிகப் பெரிய மரம், எங்க ஊர்லதான் இருக்குது. http://www.flickr.com/photos/surveysan/2643142177/

SurveySan said...

வடுவூர், வீக் எண்டுல இன்னும் கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ரா தூங்கலாம். குப்பை அள்ள வேணாம். இந்த மாதிரி குறுகிய கணக்கு கூட்டல்கள்தான் காரணம் :(

வின்சென்ட். said...

நல்ல நேரம் அடியோடு வெட்டவில்லை. பாதி விட்டிருக்கிறார்கள். தழைத்து விடும். எல்லா இடத்திலும் இலையை குப்பை என்றே எண்ணுகிறார்கள். ஆனால் நான் எனது செடிகளை 75% காய்ந்த இலைகளை கொண்டுதான் வளர்த்து வருகிறேன்.ஆரோக்கியமாக வளர்கின்றன.

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2010/04/blog-post_12.html

விருதுகொடுத்திருக்கிறேன். வந்து பாருங்க

Ananya Mahadevan said...

சர்வே, சிந்திக்க வைக்கும் பதிவு.
இங்கே இவர்கள் பரவாயில்லை. பாலைவனமா இருந்தாலும் இந்தெ ஷேக் தொலைநோக்கோடு நிறைய மரங்கள் வளர்க்கிறார். வருங்கால சந்ததியினருக்கு நாம் தரும் சின்ன பரிசி என்கிறார். சில பல ஹெக்டேர்கள் நிலப்பரப்பில் ஃபாரஸ்டு ஏரியாவை நிர்மாணிக்கிறாராம். பெரிய ப்ராஜக்டாம். சந்தோஷமா இருக்கு!

பனித்துளி சங்கர் said...

/////ஒரு மரத்தை கடந்து செல்லும் போது, ஒரு கணமாவது நின்று, அதன் இருப்பை தன் மனதுள் பதிந்து கொள்ளாமல் நகரமாட்டேன்னு goodnewsindia.com ஸ்ரீதரன், ஏதோ ஒரு பதிவில் எழுதியிருந்தார்.
கிட்டத்தட்ட என் பழக்கமும் அதுதான்.//////////


இப்படியே அறிக்கை கொடுத்து கொடுத்து மொத்த மரத்தையும் காணாம ஆக்கிட்டோம் .

பனித்துளி சங்கர் said...

விழிப்புணர்வு மிகுந்த சிறந்த பதிவு பகிர்வுக்கு நன்றி ! தொடருங்கள் மீண்டும் வருவேன் .

SurveySan said...

வின்சென்ட், ///நான் எனது செடிகளை 75% காய்ந்த இலைகளை கொண்டுதான் வளர்த்து வருகிறேன்.///

சந்தோஷம். பகிர்வுக்கு நன்றி.

SurveySan said...

புதுகைத் தென்றல், விருதுக்கு நன்னி :)

SurveySan said...

அநன்யா,

///வருங்கால சந்ததியினருக்கு நாம் தரும் சின்ன பரிசி என்கிறார். சில பல ஹெக்டேர்கள் நிலப்பரப்பில் ஃபாரஸ்டு ஏரியாவை நிர்மாணிக்கிறாராம்.///

எல்லா தலைகளுக்கும் இந்த தொலைநோக்குப் பார்வை வந்தால் நல்லா இருக்கும் :(

SurveySan said...

சங்கர்,

//தொடருங்கள் மீண்டும் வருவேன் //
danks! வருகைக்கு நன்னி.

Anonymous said...

கோ கிறீன்னா கிறீனை (மரத்தை) போக வைனு நினைச்சுட்டாங்க போல. என்ன ஆளுங்க.