என்னதான் mp3யாக பாட்டை கேட்டாலும், நேர்ல ஒரு இசைக் கருவியை வாசிச்சுக் கேட்கும்போது அதன் சுகமே தனி. அதிலும், பெரிய இசை மேடைகளில், ஆயிரமாயிரம் வாட்டுகள் ஒலிபெருக்கியில் வாத்தியங்கள் முழுங்குவதை கேட்பது ஒரு பரவச நிலையளிக்கும் சுகம். அதிலும், மிக முக்கியமாய், நமக்கு ரொம்ப ரொம்பவே பிடித்துப் போன இசைக் கலைஞர்களை நேரில் பார்த்து, அவர்களின் திறமையின் வெளிப்பாட்டை லைவ்வாக பார்ப்பது விவரிக்க முடியாத திருப்தி.
கலிஃபோர்னியாவில், நான் ரொம்பவே ரசிக்கும் மூன்று கலைஞர்களின் ஆவர்த்தனம் நடக்க இருக்கிறது.
1) முதலாவதாக, ஏப்ரல் 30, மே 1ஆம் தேதிகளில், Hotel California புகழ், Eaglesன் இசை விருந்து San Jose , HP Pavillionல் நடக்க இருக்கிறது. டிக்கெட் விவரங்கள் இங்கே.
2) A.R.Rahman, ஜூன் 26ஆம் தேதி, Oakland வருகிறார். டிக்கெட் விவரங்கள் இங்கே
3) கடைசியாக, நமது அனைவருக்கும் பிரியமான SPB. ஏப்ரல் 25 ஆம் தேதி. (இன்னிக்கு, பாடி முடிச்சுட்டாங்க). 2007ல் இதே மாதிரி நிகழ்ச்சி, அருமையா இருந்தது, ஆனா, இம்முறை சித்ரா, யேசுதாஸ் மிஸ்ஸிங். அதனால, நான் போகாம விட்டுட்டேன்.
பாத்துட்டு சொல்றேன், எப்படி இருந்துச்சுன்னு. SPB, ஐ ஆம் த சாரி. வர முடியாம போயிடுச்சு.
1 comment:
Rahman tour dates:
» 6/11 – New York @ Nassau Coliseum
» 6/12 – New Jersey @ Broadwalk Arena
» 6/13 – Washington, DC @ Patriot Center
» 6/18 – Chicago, IL @ Sears Center
» 6/19 – Detroit, MI @ Silver Dome
» 6/20 – Toronto, CA @ Air Canada Center
» 6/26 – San Francisco, CA @ Oracle Arena
» 6/27 – Los Angeles, CA @ Forum
» 6/30 – Vancouver @ PNE
» 7/03 – Houston, TX @ Toyota Center
» 7/05 – Dallas, TX @ American Airlines Arena
» 7/16 – Zurich @ Hallenstadion
» 7/17 – Paris, France @ Bercy
» 7/18 – Holland @ Amsterdam Arena
» 7/23 – United Kingdom @ LG Arena
» 7/24 – London @ O2
» 7/25 – London @ Wembley
Post a Comment