recent posts...

Sunday, April 04, 2010

தண்ணீர் தண்ணீர்

மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம்.
தண்ணியிலிருந்துதான் எல்லாம் துவங்கியது. தண்ணியில்லாமதான் எல்லாமே முடியவும் போகுது.
தண்ணீரின் முக்கியத்துவம் எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சும், யாரும் அதை ரொம்ப சீரியஸா எடுத்து, பெருத்துக் கொண்டே வரும் தண்ணீர் ப்ரச்சனைக்கு முடிவு கட்ட மாட்றாங்க.

எனக்கு நினைவு தெரிஞ்ச காலத்துல, எங்க வீடு கட்டும்போது, இருபது ~ முப்பது அடி தோண்டியதும் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது ஞாபகம் இருக்கிறது.
'ஜல' ராசி ஜாஸ்தி எங்களுக்கு போலருக்கு. வற்றாக் கிணறாய் இவ்வளவு வருஷமும் இருந்து வந்திருக்கிறது.
எங்க ஏரியாவில் ஏப்ரல் மே ஆனால்,கிணறுகள் வற்றுவது அரங்கேறத் துவங்கி கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷம் ஆச்சு.
தெருவில் கிட்டத்தட்ட 100 வீடுகள். 100ல் 99 வீட்டில் கிணறு வற்றி, எல்லோரும் Boring போட்டு, அறுபது, எழுபது, எண்பது அடி என்று ஆழம் போட்டு, ஓரளவுக்கு ப்ரச்சனையை சமாளித்து வந்தனர்.
எங்க வீட்ல மட்டும், எங்க 30 அடி கிணறு, வற்றாமல், குடுத்துக்கிட்டே இருந்தது.

Boring போட்ட வீடுகளில், ஐந்தம்ச திட்டம் மாதிரி, ஒவ்வொரு அஞ்சு வருஷத்துக்கும், இன்னொரு இருவது அடியோ ஐம்பது அடியோ அதிகப்படுத்தினால்தான், தண்ணி வருங்கர நெலமையால், ஆழமாக்கிக்கிட்டே வந்தாங்க.

எங்க வற்றாக் கிணறும் கூட சென்ற வருஷம் வத்திப் போயி, சில பல டாலர்களில், சில நூறு அடிகள் ஆழத்தில், Boring போட்டு நாங்களும் ஜோதியில் ஐக்கியம் ஆயிட்டோம்.

இருக்கும் குளம் குட்டையெல்லாம், சமம் படுத்தி, ஃப்ளாட் கட்டிக்கிட்டே வந்தா, நிலத்தடி நீர் எப்படி ரீ-சார்ஜ் ஆகும்?
atleast, மரங்கள் நிறைய வளர்த்து, பூமியில் நிழல் படியச் செய்தாலே, நிலத்தடி நீரின் ஆழம் இவ்ளோ சீரழிஞ்சிருக்காதாம். படிச்சவங்க சொல்லறாங்க.

மனுஷனுங்க சுயநலம் நாளுக்கு நாள் தலகால் புரியாம அதிகரிச்சுக்கிட்டே இருக்கு. வருஷா வருஷம், இந்த தண்ணியில்லா கொடுமை அதிகமாகிக்கிட்டே இருக்கேன்னு, தண்ணில ஒக்காந்துக்கிட்டு வாய் கிழியப் பேசிக்கராங்க. அவங்க வீட்டுக்கு தேவையானதை, தண்ணி லாரி காரன்கிட்ட சில பல காந்தி நோட்டை கொடுத்து முடிச்சுக்கறாங்க. ஆனா, எவ்ளோ காலம் இப்படி இழுத்துக்கிட்டே போவாங்க?
தண்ணி லாரி காரன் எங்கேருந்து கொண்டாரான்? அவன் உரிஞ்செடுக்கர கெணத்துல மட்டும் என்ன ஆகாசத்துலேருந்து ஸ்பெஷலாவா தண்ணி கொட்டுது? அதுவும் ஒரு நாள் வத்திப் போகும்.

கடல்நீரை குடிநீரா மாத்தர திட்டம்தான் பின்னாளில் ஓரளவுக்கு நகரங்களின் தேவையை ஈடுகட்டலாம். ஆனா, அதுக்கும் புது டெக்னாலஜி வந்தாதான் நம்மள மாதிரி நகரங்களில் உபயோகிக்க முடியும். அரபு நாடுகளில், கடல் நீரை கொதிக்க வச்சு, நீராவியை கபால்னு புடிச்சு குடிதண்ணி ஆக்கராங்க. அவங்ககிட்ட எண்ணை இருக்கு, இதெல்லாம் பண்ணலாம். நமக்கு இன்னும் சிம்பிளா, நோவாம செய்யர மாதிரி செய்முறை வேணும். கண்டுபிடிப்பாங்க.

ஆனா, நிலத்தடி நீர் குறையும் வேகத்தைப் பார்த்தால், நம் வாழ்நாளிலேயே, பெரும்பான்மையான மக்கள் தொகை, தண்ணிக்கு அல்லாடும் காட்சியைக் காண வேண்டி வரும் என்பதில் சந்தேகமே இல்லை. வங்கிக் கணக்கில் எம்புட்டு துட்டு இருந்தாலும், ஒரு குடம் தண்ணியை காசு கொடுத்தாலும் கிட்டாத நிலை ஏற்படும் காலம் வெகு அருகாமையில் இருக்கிறது.

ஊருக்கு ஒரு Lakeம், நகரத்துக்கு ஒரு reservoirம் கட்டி, தண்ணி சுத்திகரிப்பையெல்லாம் திறம் படச் செய்து வரும், அமெரிக்காவே, தண்ணியை சேமிங்க சேமிங்கன்னு கூவிக்கிட்டு இருக்காங்க. வெயில் காலங்களில் செடிக்கு தண்ணி ஊத்தாதிங்க, அதைப் பண்ணாதீங்க, இதைப் பண்ணாதீங்கன்னு அலப்பரை பண்ணறாங்க.

நம்ம ஊரில் ஏப்ரல் மேயில் நாய் படாத பாடு பட்டாலும், ஜூன், ஜூலையிலிருந்து அதை மறந்து, அந்த வருஷம் திரும்ப ஒரு அஞ்சடி நிலத்தடி நீர் கீழப் போக என்னென்ன பண்ணனுமோ அதை திறம்படச் செய்றாங்க.

இப்படி புலம்பி ஒண்ணுமே ஆகப் போவதில்லை. தெருவுக்கு ஒருத்தராவது, கொஞ்சம் மெனக்கட்டு ஏதாவடு பண்ணினாத்தான் விமோச்சனம் வரும்.
குறைந்த பட்சம், தெரு ஒரு மரம் நடுதல்; தெரு வீடுகளில் நிலத்தடி நீர் சேகரிப்பு விஷயங்கள் ஒழுங்கா பராமரிக்கறாங்களான்னு கவனித்தல்; ஊரில் இருக்கும் குளம் குட்டைகளை யாராவது மூட முயற்சித்தால், உடனே ஒரு கும்பல் சேத்து, அதை விசாரிச்சு ஒரு stay வாங்குதல்; இந்த மாதிரி ஏதாச்சும் பண்ணனும். இல்லன்னா, எதிர்காலம் ரொம்பக் கேள்விக் குறியாதான் இருக்கு.

இந்த மாச National Geographic பத்திரிகையில், தண்ணியை அலசோ அலசுன்னு அலசி வச்சிருந்தாங்க. அதிலிருந்து, ரொம்ப சுவாரஸ்யமான சில புள்ளி விவரங்கள் உங்க கிட்ட சொல்லலாம்னு எழுத ஆரம்பிச்சா, வழக்கம் போல், பொலம்பல்ஸ் அதிகமாயிடுச்சு.
ஐ ஆம் த சாரி;

ரொம்பவே சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னன்னா, நம்ம பூமியில் இருக்கும் குடி நீரின் அளவு, பல கோடி வருஷமா அதே அளவுதான் இருக்காம். அதாவது, உதாரணத்துக்கு, டைனோசார் காலத்தில், 10 கோடி குடம் குடி தண்ணி பூமியில் இருந்தா, இப்பவும் அதே அளவு அப்படியே இருக்காம். கொஞ்சமும், கூடவோ கொறையவோ செய்யலையாம். டைனோசார் அன்னிக்கு குடிச்ச அதே தண்ணியத்தான் நாமளும் இப்பக் குடிக்கறோம்.
கடல் தண்ணி மேல போய், மழையா கீழ வந்து, திரும்ப கடலுக்கே திரும்பிப் போறது நடந்துக்கிட்டேதான் இருக்குது. அளவு குறையாம.
ஆனா, ஒரே வித்யாசம், நிலத்தடி நீரின் ஆழம் மட்டும் அதிகமாகிக்கிட்டே இருக்கு. மக்கள் தொகை ஜாஸ்தி ஆக ஆக, உரிஞ்சு எடுத்து எடுத்து இன்னும் கீழத்தான் அனுப்பிக்கிட்டே இருப்போம்.
ஒரு பக்கம் உற்பத்தியைப் பெருக்க, கடல் நீரை சுத்திகரித்தல் எல்லாம் முயன்றாலும், மிக மிக முக்கியமான தேவை, சிக்கனத்தைப் பேணுதல். கீழே இருக்கும் புள்ளி விவரங்களைப் பாருங்க, எதை குறைக்கணும், எதை கூட்டணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

 • 1 கிலோ மாட்டிறைச்சி உற்பத்தி பண்ண 3200 லிட்டர் நீர் தேவைப் படுதாம்;
 • 1 கிலோ பன்றி இறைச்சிக்கு 1,200 லிட்டர்;
 • 1 கிலோ கோழி இறைச்சிக்கு 805 லிட்டர்;
 • 1 கிலோ முட்டைக்கு 687 லிட்டர்;
 • 1 கிலோ உருளைக் கிழங்கு விளைவிக்க 53 லிட்டர்;
 • 1 கிலோ ஆரஞ்சு பழம் விளைவிக்க 94 லிட்டர்;
 • 1 கிலோ கத்திரிக்கா விளைவிக்க 45 லிட்டர்;

 • 1 Jeans pant உருவாக்க 5,000 லிட்டர்;
 • 1 பருத்தி படுக்கை விரிப்பை உருவாக்க 4,800 லிட்டர்;
 • 1 கப் coffee உருவாக 63 லிட்டர்;
 • 1 கப் tea 15 லிட்டர்;
 • 1 குவளை beer 34 லிட்டர்;
 • 1 கப் பால் 91 லிட்டர்;

  பயங்கரமா இருக்குல்ல கணக்கு பாத்தா?

  so, இனி தண்ணீரை directஆ உபயோகிக்கும்போதோ, indirectஆ மேல் சொன்ன பொருட்களின் மூலம் உபயோகிக்கும்போதோ, ஒரு நொடி சிந்திங்க.

  சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா, கத்திரிக்கா பிரியாணி சாப்பிடலாமா?
  முழுக் குளியல் குளிக்கலாமா, காக்கா குளியல் குளிச்சா போதுமா?
  புது Jeans வாங்கலாமா, இருக்கரதையே துவைக்காம இன்னொரு வருஷம் போட்டா போதுமா?

  யோசிச்சுக்கோங்கப்பு, இல்லாட்டி, நாறிரும் நெலமை.

  ஒரு கப் டீ குடிச்சா, 15 லிட்டர் வீணாப்போவுதாம். என்ன கொடுமைங்க இது?

  டீ/காப்பி குடிக்காம இருக்க முடியாது. அப்பரம், வாழ்ந்து என்னா ப்ரயோஜனம். ஸோ, குடிக்கரவங்க திருப்திகரமா குடியுங்க. ஆனா, ஒரு மரத்தையாவது நட்டு வச்சுட்டு குடிங்க. ஒரு மரம் வளந்து ஆளானா, நீங்க குடிக்கர டீ/காப்பிக்கு தேவையான தண்ணிக்கு ஈடாயிடும்.


  பட உதவி: கருவாயன் (பின்னிட்டாருல்ல? இதைவிட எதிர்கால தண்ணீர் ப்ரச்சனையை எப்படி காட்ட முடியும்?)

  எல்லாரும் சேந்து அவருக்கு ஒரு ஓ போடுங்க!

  ஹாங், சொல்ல மறந்துட்டேன். PiTல் இம்மாத போட்டித் தலைப்பு தண்ணீர் தண்ணீர்.


 • 10 comments:

  Deepa said...

  சூப்பர்.

  இதோ.. என் பங்குக்கு தண்ணீர் தண்ணீர்

  SurveySan said...

  @Deepa நல்ல பதிவு உங்களது. குட்.

  கோபிநாத் said...

  நல்ல பதிவு அண்ணாச்சி ;)

  Ramesh Ramasamy said...

  தண்ணீரில் தன்னிறைவு அடைவோம்!!!

  http://www.getpersonas.com/en-US/persona/145254


  Firefox Theme, created for 'World water Day'

  enRenRum-anbudan.BALA said...

  மிக மிக அவசியமான இடுகை, பல தகவல்களை பலர் அறியத் தந்தமைக்கு பாராட்டும், நன்றியும்.

  குளிக்க ஒரு பக்கெட் தண்ணிக்கு மேல் செலவு பண்றவங்க எல்லாரும், அடுத்த ஜெனரேஷனின் நல்வாழ்வு பற்றி துளியும் அக்கறை இல்லாத ஜடங்கள் என்பது என் கருத்து.

  அது போல, பல் துலக்கும்போது, குழாயில் தண்ணீரை ஓட விடுவதால், உலகம் முழுதும் வீணாகும் தண்ணீர் மிக மிக அதிகம் என்று வாசித்துள்ளேன்.

  இந்தத் தகவல்களை வாசித்து, ஒரு 4 பேர் திருந்தினால் நல்லது தான்.

  எ.அ.பாலா

  முத்துலெட்சுமி/muthuletchumi said...

  அருமைங்க போஸ்டும் சரி போட்டோவும் சரி..
  இந்த மாதப்போட்டி நல்ல தீம்..

  SurveySan said...

  Danks everyone!

  Lets conserve water.

  SurveySan said...

  ஐம் ஆம் த சாரி. படம் வரைய நேரம் கிடைக்கலை; அப்பாலிக்கா வரும் ;)

  SurveySan said...

  added the 'art' :)

  SurveySan said...

  நடராஜர் water dance - http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_11.html?showComment=1271050331105_AIe9_BFRHZUL4FjeMlxSj-El2yg-iA52rhpSEw33ObM0VuQy8sTCt0Lm8r0xyPRIr-We-phhgnCe_ODXZo_MsaJw1yTFEe41wB129Bazjcxbq91LqikCmC-8I2p47o_iVmtAd5w94beOaqu7e1dKTJX37TTZZeCwGMO8n0KVcpbm9LCx2XE4a5jqINfH4tybQ5YzheOVxsxWPxt9Ymex8w8jV_mp4jqrRDPj8xvef53MCTdu2hVVtSg#c6608958717729783787