recent posts...

Wednesday, April 14, 2010

பெண்ணொன்று கண்டேன்...


பொண்ணு பாத்த கதையை எழுதணும்னு இவிக கெளப்பி விட, இவிக நம்மள மாட்டி விட்டுட்டாக. தங்க்ஸை பாராட்டி எதுவோ எழுதப் போக, நம்ம பயோகிராஃபி எல்லாருக்கும் தெரிஞ்சு, இந்த தொடர்ல மாட்டி விட்டுட்டாங்க. இன்னும் ரொம்ப நாளைக்கு இந்த அனானி ஆட்டம் ஆட முடியாது போலருக்கு.

மேட்டருக்கு வரலாம். வாழ்க்கையில் மறக்க முடியாத/கூடாத நிகழ்வுகளில் இந்த வாழ்க்கைத் துணையை முதல்முறை மீட் செய்யும் படலமும் ஒன்று. சினிமால வர மாதிரி 'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி'ன்னெல்லாம் நம்ம படலத்தில் யாரும் பாடலை. ஆனாலும், நினைவில் தங்கிய நிகழ்வுதான் அது.

கடல் மலையெல்லாம் தாண்டி வந்து அசலூறில் வேலை செய்யும் எல்லோருக்கும் நிகழ்வது போல்தான் எனக்கும், பெண் பார்க்கும் படலம் துவங்கியது.
Airmail கவரில் ஃபோட்டோக்கள் வரத் துவங்கின. Airmail கவரில் ஏறுவதர்க்கு முன், சில பல ஃபில்டர்களை கடந்து வருவதால், எல்லாமே தேவதைகள் படம்தான்.
ரூம்-மேட்ஸுகள் ஒவ்வொருத்தருக்கும் இந்த விவகாரம் பேரலலாக நிகழ்ந்ததால், எல்லாரும் ஃபோட்டொஸ்களை அலசி ஆராஞ்சு, எப்படி 'லாக்' பண்றதுன்னு ஒரு முடிவுக்கு வந்திருந்தோம்.
அதாவது ஃபோட்டோவை பாத்ததும் நமக்கு ஒரு ஃப்ளாஷ் மனசுக்குள்ள பாயணும். "எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ"ன்னு, அப்பதான், அவிக நமக்கே நமக்குன்னு அர்த்தம்.
எக்ஸ்பீரியன்ஸ்ட் பயலுவளும், இந்த ஃப்ளாஷ் விஷயம் நெசம்தான்னு சொல்லி நம்பிக்கை பாச்சியிருந்தாங்க.
எல்லா பயலும், அவங்கவங்க வீட்ல இருந்து AirMail படம் வந்ததும், "மச்சி ஃப்ளாஷ் வந்துதா? இல்லன்னா, அடுத்த ஃபோட்டோ கேளு"ன்னு பீதியை கிளப்பி விடும் அளவுக்கு இந்த ஃப்ளாஷ் மேல நம்பிக்கை வந்துடுச்சு எல்லாருக்கும்.

அப்படியாக ஒரு சுபயோக சுபதினத்தில், அம்மிணி ஃபோட்டோ நமக்கு வர, நமக்கு விஷுக்னு ஃபிளாஷ் வர, எல்லாரும் விசிலடிச்சு, 'இவிகதான்'னு முடிவு பண்ண, நம்ம தங்க்ஸ் 'லாக்' ஆனாங்க.

நாம 'லாக்' பண்ணிட்டோம், அந்த விஷயம் அவிகளுக்குத் தெரியுமான்னும், அவிக 'லாக்' பண்ணுவாங்களான்னும் சந்தேகம் வந்துது. நம்ம அளகு அப்படி.
நம்ம ஊரு பொண்ணுக பாதி பாவம். அப்பா இவன் தான் மாப்ளன்னு, எவன கை காட்டறாரோ, அவனத்தான் கட்டிக்கறாங்க. நம்ம தங்க்ஸ் அப்படிப்பட்ட ரகம் போலருக்கு. நம்மையும் மதிச்சு, பொண்ணு பாக்க வரட்டும்னு சொல்லியிருக்காங்கல்ல.

இந்த களேபரம் ஆரம்பிக்கரதுக்கு முன்னாடி, நம்ம அளகை ஃபோட்டோ புடிச்ச கதை பெரிய கதை. என் நண்பனின் அண்ணன் பெரிய ஃபோட்டோகிராஃபர். அவர் கிட்ட நம்ம நைக்கானையும் மூணு ரோலையும் கொண்டு போய், 'அண்ணே படம் புடிக்கணும்னே'ன்னு செந்தில் கணக்கா கெஞ்சி, மொட்டை மாடில நின்னு, ஒக்காந்து, படுத்து, சட்டையோட ஒண்ணு, டிஷர்ட்டோட ஒண்ணு, திரும்பிப் பாத்து ஒண்ணு, வானத்தை பாத்து ஒண்ணு, கீழப் பாத்டு ஒண்ணு, டக்-இன் பண்ணி ஒண்ணு, கேஷுவலா ஒண்ணு, கை கட்டி ஒண்ணு, கை நீட்டி ஒண்ணு, சிரிச்சுக்கிட்டு ஒண்ணு, சீரியஸா ஒண்ணு, பாவமா ஒண்ணு, கெஞ்சலா ஒண்ணு, கொஞ்சலா ஒண்ணுன்னு, மூணு ரோலையும் காலி பண்ணி, ப்ரிண்ட் போட்டு, 72 படங்களில், அஞ்சை தேத்தி, அந்த அஞ்சில், மூணை 'சீசீன்னு' வீட்ல தூக்கிப் போட்டு, ரெண்டில், ஒண்ணு ரொட்டேஷனுக்கும், ஒண்ணு, backupஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ரொட்டேஷனில் விட்ட படம், எம்புட்டு காறித்துப்பல்களுக்கு அப்பால அம்மிணி வீட்டுக்கு போச்சோ தெரீல, ஒரு வழியா ஃபர்ஸ்ட்டு ரவுண்டு பாஸ் ஆகி, பையன கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க.
மெனக்கெட்டு ரெண்டு மாசம், ஓடி ஆடி, ஒடம்பை தேத்தி, 3 packs டெவலப் பண்ணி, மெட்ராஸ் நல்ல மெட்ராஸுக்கு ஒரு டிக்கெட்டை போட்டு கெளம்பிப் போனேன்.

கும்பலா, ரெண்டு மூணு கார்ல பொண்ணு வீட்டுக்கு போயி, 'அமெரிக்க மாப்பிள்ளை'யின் கெத்தோடு, யாரிடமும் அதிகம் பேசாமல், நைக் ஷூவை மட்டும் வெளியில் கழட்டி, சாக்ஸோடு உள்புகுந்து, 'யா யா'ன்னு எல்லா கேள்விக்கும் அளந்து விட்டுட்டு, சைலண்ட்டா குந்திக்கினு இருந்தேன்.

'பொண்ண காஃபி கொண்டாரச் சொல்லுங்கோ'ன்னெல்லாம் யாரும் சொல்லலை. ஆனா, போனதும் காஃபி வந்தது. அதுவரை காட்டிய கெத்தெல்லாம் பறந்து போய், ஹீஹீன்னு இளிச்சுக்கினே காஃபியை வாங்கிக் குடிச்சாச்சு.
பக்கத்துல குடும்ப சகா ஒண்ணு, மெதுவா காத கடிச்சு, 'பொண்ணோட அக்கா அழகா இருக்காங்கல்ல'ன்னு சொல்லிச்சு. "டேய், ரொம்பத் தேவை இப்ப. பொண்ணு எப்படி"ன்னு? பேச்செடுத்தா. "உனக்கு ரொம்ப ஓவரு இதெல்லாம்"னு நெக்குலா பதில் வருது.
பொண்ணு கிட்ட பையன் பேசட்டுமேன்னு, பக்கத்து வீட்டு சகா, எடுத்து விட்டாரு.
நம்ம இதுவரை, பொண்ணுகளை தூர நின்னு கலாட்டா பண்ணியும், அவிக மேல் இங்க் அடிச்சும், சைக்கிள் காத்தை எறக்கி விட்டும் மட்டுமே பழக்கப் பட்டவங்க, தனியா கூட்டிட்டுப் போயி என்னத்த பேசரதுன்னு, கண்ணு இருட்டிப் போயிடுச்சு.

இருந்தாலும், அசராம, அமெரிக்கா மாப்பிள்ளையின் கெத்துடன், "யா. ஓ, ஓகே"ன்னு பந்தாவா எழுந்து போயி பக்கத்து ரூமுக்கு போயி. "ஹலோ, ஹவ் ஆர் யா."ன்னு ஆரம்பிச்சு, அப்பரம் என்ன பேசனேன்னு எனக்கே ஞாபகம் வரலை. அவங்களும், காவுக்கு கொடுத்த, ஆடு மாதிரி, 'வந்துட்டானுங்கய்யா'ன்னு ஒரு லுக் விட்டுக்கிட்டு இருந்தாங்க.

ரெண்டு நிமிஷத்துலையே, பேசனது போதும்னு, நைனா கொரல் விட்டாரு.
பலகாரம் சாப்பிட்டுட்டு எல்லாரும் எஸ்கேப் ஆயிட்டோம்.

குடும்ப சகா,"இன்னாடா, ஒகேவா'ன்னு கேக்க, "யா யா"ன்னு நான் இளிக்க, வண்டி கெளம்பிச்சு.

தூரத்தில், சன்னமான குரலில், "டாடி, ப்ளீஸ் நோஓஓஓஓஓஓஓஒ, இத விட என்ன பாழும் கெணத்துல கூட தள்ளுங்க, சந்தோஷமா விழறேன்னு" ஒரு பொண்ணு கொரல் கேட்டது, என் மனப்பிராந்தியான்னு இன்னி வரைக்கும் தெரியல்ல.

ஆனா, இன்றுவரை, எல்லாம் சுகமே, பரம சுகமே! ;)

இன்னும் அஞ்சு பேரை, இந்த மேட்டரை பத்தி எழுதச் சொல்லணும்னு ஒரு கடமை இருக்கு.
இந்தப் பதிவை படிக்கும், முதல் அஞ்சு பேரு, உடனே பின்னூட்டம் இட்டு, "உள்ளேன் ஐயா" சொல்லி, உங்க 'பெண்/பையன் பார்த்த' படலத்தை பதியவும்.
நீங்க பதிவர் இல்லன்னா, எனக்கு surveysan2005 at yahoo . comல் உங்க கதையை அனுப்பினா, நானே பிரசுரிக்கச் சித்தமாயிருக்கிறேன். don't escape, do write.

பதிவை படிச்சுட்டு பின்னூட்டம் போடாம எஸ்கேப் ஆனீங்கன்னா, என்ன ஆகும்னு உங்களுக்கே தெரியும். சோ, ரிஸ்க் எடுக்காதீங்க. பின்னூட்டிடுங்க.

31 comments:

புதுகைத் தென்றல் said...

me the first

புதுகைத் தென்றல் said...

நல்லா நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க.

:))

புதுகைத் தென்றல் said...

ராஜா விருது கொடுத்த படத்தை எப்ப வலைப்பூவுல போடப்போறீங்க (மறந்துட்டீங்களோன்னு ஞாபகப்படுத்தினேன்)

SurveySan said...

புதுகைத் தென்றல், நன்றீஸ் :)

'கிங்'கை பதிந்தாச்சு.

SurveySan said...

என்ன கொடுமைங்க இது? எல்லாரும் இப்படி தல தெறிக்க ஓடிட்டீங்கன்னா யாருதா தொடர் எழுதரது?

பாவக்காய் said...

super thalai !!

SurveySan said...

பாவக்காய், டாங்க்ஸு.

ம்ம்ம்மாட்டிக்கினீங்கன்னு. கண்ணாலம் ஆயிடுச்சுன்னா, கதை எழுதுங்க உடனே :)

வடுவூர் குமார் said...

நல்ல அனுபவம் தான்.படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

Anonymous said...

ஸ்மைல்ஸ் இடம் மாறி இருக்கு. உங்க தங்க்ஸ் தானே கிணத்தில தள்ளிவிட சொல்லி அழுதாங்க. அப்ப அவங்க தானே SAD ஆக இருக்கணும்.

கோபிநாத் said...

படிச்சிட்டேன் தல ;)

aambalsamkannan said...

எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு தலைவா,ஆனா ஒரு வித்யாசம்.நிச்சியம் எல்லாம் முடிஞ்சி தான்
பொண்ணுகிட்ட பேச விட்டானுங்க, ரெண்டு நாள் கழித்துதான் போட்டோ
கிடைத்தது.சும்மா சொல்ல கூடாது

//அதாவது ஃபோட்டோவை பாத்ததும் நமக்கு ஒரு ஃப்ளாஷ் மனசுக்குள்ள பாயணும். "எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ"ன்னு, அப்பதான், அவிக நமக்கே நமக்குன்னு அர்த்தம்//

இப்படிதான் கடந்த பதினாளு நாள போயிகிட்டு இருக்கு தூக்கம், சாப்பாடு இல்லாம தலைவா.

அப்பாவி தங்கமணி said...

//சினிமால வர மாதிரி 'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி'ன்னெல்லாம் நம்ம படலத்தில் யாரும் பாடலை//

இப்படி வேற ஒரு ஆசையா பிரதர்? அவங்க பாடலாம்னு தான் நெனச்சாகளாம், பிறகு உங்களுக்கு கமல்ஹாசன் மாதிரி எதிர் பாட்டு பாட வரலன்னா நல்லா இருக்காது பாருங்க. அதான் உங்களுக்காகத்தான் பாடலயாம்

அப்பாவி தங்கமணி said...

//அதாவது ஃபோட்டோவை பாத்ததும் நமக்கு ஒரு ஃப்ளாஷ் மனசுக்குள்ள பாயணும்//

அதாவது பிரகாஷ்ராஜ் சொல்றாப்ல பல்பு எறியணும், மணி அடிக்கனும்கறீங்க. இப்படி எல்லாம் தங்கமணிகள் நெனச்சா....கொஞ்சும் யோசனை பண்ணி பாருங்க...

அப்பாவி தங்கமணி said...

ஆனாலும் , கலக்கல் கதை தான். சூப்பர். தொடர் பதிவை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி

முகிலன் said...

சிரிக்கச் சிரிக்க எழுதியிருக்கீங்க..

ஸ்வர்ணரேக்கா said...

//மொட்டை மாடில நின்னு.... கொஞ்சலா ஒண்ணு//

அடேயப்பா... இத்தனையா?

பொண்ணுங்க தேவலை போலயே!!!!

SurveySan said...

வடுவூர் குமார், நன்றீஸ்.

SurveySan said...

அனாமிகா துவாரகன், for the record, ஸ்மைலீஸுக்கே பஞ்சமே இல்லாத வாழ்க்கைதான் ஓடிக்கிட்டு இருக்கு :)

SurveySan said...

கோபிநாத், டாங்க்ஸ் தல.

SurveySan said...

அப்பாவி தங்கமணி, நன்றி.

எப்படியோ என்னத்தையோ கிறுக்கி தப்பிச்சுட்டேன் ;)

SurveySan said...

முகிலன், :) இப்படி எழுதாம உண்மை எல்லாம் சொன்னா, ஒத விழுமே ;)

SurveySan said...

ஸ்வர்ணரேக்கா, இதெல்லாம் கம்மிங்க. இதுக்கு மேல பெருசா மெனக்கெட்டவங்களும் உண்டு. :)

SurveySan said...

aambalsamkannan,

////இப்படிதான் கடந்த பதினாளு நாள போயிகிட்டு இருக்கு தூக்கம், சாப்பாடு இல்லாம தலைவா.////

ஹ்ம் :) அதெல்லாம் ஒரு காலம். அனுபவிங்க. இதெல்லாம் அப்பாலிக்கா கிட்டாது.

SurveySan said...

ஆள்பிடிக்கும் நேரம்.

உங்க கதையை, விரைவில் எழுதிடுங்கள் :)

(required)
1) பாவக்காய்
2) வடுவூர் குமார்
3) அனாமிகா துவாரகன்
4) கோபிநாத்
5) aambalasamkannan

(optional)
6) முகிலன்
7) ஸ்வர்ணரேக்கா

☀நான் ஆதவன்☀ said...

:)))))) நான் எழுத ரெடி தான்.... பட் முதல்ல பொண்ணு பார்க்க போகனுமே?

ராமலக்ஷ்மி said...

பதிவிட்டதுமே ஒன்றிற்கு இரண்டு முறையா ரசித்து வாசித்து விட்டு புத்திசாலித்தனமா எஸ்கேப்பிட்டேன். நேரம் கிடைத்து திரும்பி வந்து பார்த்தால் ஐந்துக்கு ஏழு பேரை மாட்டி விட்டுள்ளீர்கள்:)!

அந்த ஃபோட்டோ செஷன்..ரியலி சூப்பர்:)))!

Anonymous said...

@SurveySan

அவ்வ்வ்வ்வ்...... நான் சின்னப்பொண்ணுங்கோ. என்னைப் போய்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

SurveySan said...

நான் ஆதவன், கற்பனையா கூட அவுத்து விடலாம் :)

SurveySan said...

ராமலக்ஷ்மி, நன்றீஸ்.

எஸ்கேப்பிடலாம்னு ப்ளான் பண்ணி லேட்டா பின்னூட்டம் போட்டீங்கன்னாலும், விதிவலியதுங்க.

பாருங்க, அனாமிகா 'மீ த எஸ்கேப்' ஆயிட்டாங்க.

அவங்க இடத்தை நிரப்ப, வகையா நீங்க மாட்டிக்கினீங்க.

required)
1) பாவக்காய்
2) வடுவூர் குமார்
3) அனாமிகா துவாரகன் => ராமலக்ஷ்மி
4) கோபிநாத்
5) aambalasamkannan

;)

ராமலக்ஷ்மி said...

உங்கள் பதிலை நான் பார்க்கவே இல்லையே:))!

அநன்யா மஹாதேவன் said...

சாரி சர்வே,
இந்த போஸ்டு விட்டுப்போச்சு.. இப்போத்தான் படிக்கறேன்.. வழக்கம்போல செம்ம ஹ்யூமரஸா எழுதி இருக்கீங்க..

அந்த டாடீ ப்ளீஸ்ஸ் நோ... தான் சூப்பர் பஞ்ச்! :)

நைஸ்பா..