recent posts...

Monday, July 28, 2008

Cuil, the GOOGLE challenger, fails my test

Cuil என்ற ஒரு புதிய search engine உருவாகிக் கொண்டிருக்கிறது. Googleன் முன்னாள் ஊழியர்கள் இணைந்து உருவாக்கி வரும் தளம் இது.

கூகிளின் ஆரம்ப காலத்தில், ஆர்பாட்டமில்லாமல், அதன் தரத்தின் ஒரே காரணத்தால் மட்டுமே பயனர்களின் கூட்டம் அதிகரித்து இன்று உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.

ஆனா, Cuil ஆரம்ப அடி எடுத்து வைக்கும்போதே, இரைச்சல் அதிகமாய் உள்ளது.
'worlds biggest search engine' என்ற அளப்பரை.
121,617,892,992 பக்கங்களை அலசி வைத்துள்ளோம் என்ற பரைசாற்றல் வேறு.

நிரை குடம் தளும்பாது என்ற நம்மூர் பழமொழியை மெய்விப்பது போல், இவங்க ரொம்பவே தளும்பராங்க.

சரி, இவ்ளோ தளும்பராங்களே என்னதான் செஞ்சு வச்சிருக்காங்கன்னு போய் எட்டிப் பாத்தேன்.

Surveysan என்ற உலகப் பிரசித்தி பெற்ற எனது ப்ளாகர் புனைப்பெயரைத் தேடினேன் (நிரை குடம் தளும்பக் கூடாதோ? :) ).

Cuilல் முதல் பக்கத்தில் வந்த 10 பதிவுகளில், ஒரே ஒரு பதிவுதான் சரியாய் இருந்தது, மத்ததெல்லாம் என்னன்னே தெரியல. -- நீங்களே பாருங்க.
ஆங்கில surveysanக்கே இந்த கொடுமைன்னா, தமிழ்ல தேடினா என்னாகும்னு பாத்தேன். சர்வேசன்னு அடிச்சா, 'please check your spelling'னு வருது.

என்ன கொடுமைங்க இது?

சரி, நம்ம கூகிளார் என்ன பண்றாருன்னு பாத்தேன்.
surveysan அடிச்சா, 6550 பக்கங்கள் வந்து நிக்குது. எப்படியும், இதில் சில பல ஆயிரம், 'நச்'னு நம்மள பத்தின பக்கங்கள் தான்.
சரின்னு, 'சர்வேசன்' அடிச்சு பாத்தேன், 8500 பக்கங்கள், 'நச்'னு காட்டுது.

ஸோ, இப்போதைக்கு, Googleதான் முன்னணியில்.

Cuil has a long way to go.

Cuil'ers, மொதல்ல செய்ய வேண்டியத, ஒழுங்கா செஞ்சு முடிஞ்சுட்டு, அப்பரமா, தளும்பரதை பத்தி யோசிங்க! அதுதான் வெற்றிக்கு வழி!

நீங்களும் டெஸ்ட் பண்ண உதவுங்க. எதையாச்சும் ரெண்டு தளங்களிலும் தேடி, என்ன கெடைச்சுதுன்னு பின்னூட்டுங்க! "கண்டதையும்" தேடி போடப்டாது.

;)

பி.கு: ஆங்கிலப் பதிவு இங்கே!

12 comments:

SurveySan said...

cuil is still in its infancy.

கூகிளை விட மூன்று மடங்கு அதிக பக்கங்களை தேடலாம் என்ற அளப்பரை கொஞ்சம் இல்ல, ரொம்பவே பெரிய வாய்ச்சவடால்.

jazz festival sunnyvale இத தேடினா, ஒண்ணுமே காணும்னு சொல்லுது. என்ன கொடுமைங்க இது?

தமிழ் சசி | Tamil SASI said...

Yes, it's an overhyped release.
They announced that they have better technology than google, indexed more pages than google, but...:-))

But they have different idea about presenting the search results which is promising.

Anyway, here is the explanation from Cuil

*****

This is because Cuil isn't set up as a massively parallel search network the way, say, Google is. Tom Costello had explained this to me a bit when we talked last week. Each of Cuil's search appliances is specialized to a particular subcategory of results. There are machines that understand and index sports; others are experts on medicine, etc. As these search machines get overloaded, Sollitto said, they drop offline for some queries, and the machines left online return less-than-relevant results that then appear at the top of users' pages.

http://news.cnet.com/8301-17939_109-10000670-2.html

SurveySan said...

Sasi,

//This is because Cuil isn't set up as a massively parallel search network the way, say, Google is.//

:) so,we have to use Google for some and Cuil for some depending on what we are looking for?
that doesnt sound like a successful recipe to me.

The overhype is going to irritate readers rather than incline them towards it.

a humble start would invite people to help them and grow them slowly.

அவங்களின் பதிவு formatம் எனக்கு ஏற்புடையதாய் இல்லை.

stanford jazz festivalக்கு ஒரு பக்கமும் கண்ணுல மாட்டாதது ரொம்பவே கொடுமை. :)

SurveySan said...

Sasi, linkக்கு நன்றி.
இவ்ளோ அலசல் ஏற்கனவே நடந்திருக்கா.


http://news.cnet.com/8301-17939_109-10000670-2.html

கொஞ்சம் கூட சோதனை செய்யாமல், வெளி வந்திருக்கும் Cuil, not so cool :)

SurveySan said...

http://broadstuff.com/archives/1100-An-initial-review-of-Cuil.html

SurveySan said...

http://youtube.com/watch?v=ZUhKqWOBm9w

புருனோ Bruno said...

//a humble start would invite people to help them and grow them slowly.//

இதில் கூளில் கில்லாடிகள்.

எதையுமே பீட்டா என்று தான் ஆரம்பிப்பார்கள்

அதிலும் சிலரை வைத்து மட்டுமே பரிசோதிப்பார்கள்

hype என்பதற்கு சரியான உதாரணம் ஜிமெயில் தான் :) :)

புருனோ Bruno said...

நான் சோதித்த வரையில், அவர்கள் குழந்தை (infant) இல்லை, இன்னமும் பிறக்கவேயில்லை (fetus)

புருனோ Bruno said...

என் கருத்துகள்
என் பதிவில் சற்று விரிவாக உள்ளன

கயல்விழி said...

//நான் சோதித்த வரையில், அவர்கள் குழந்தை (infant) இல்லை, இன்னமும் பிறக்கவேயில்லை (fetus)
//
முற்றிலும் உண்மை!

SurveySan said...

புருனோ Bruno,

your site is infected by malware, probably from one of the ad scripts.
It froze my IE and took me into a infinite IE launching mode :)

pls take care of it.

SurveySan said...

//நான் சோதித்த வரையில், அவர்கள் குழந்தை (infant) இல்லை, இன்னமும் பிறக்கவேயில்லை (fetus)///

True!