recent posts...

Wednesday, July 16, 2008

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு சுத்துது! டார்ச்சர் தாங்கல!

'அனாலஜி' வச்சு இலை மறைவு காயா இந்த விஷயத்தைப் பத்தி எழுதலாம்னு நெனைச்சேன். ஆனா, இருக்கர கொழப்பமே போதும், நான் வேர என்னத்துக்கு கொழப்பணும்னு, மனசுல பட்டதை, உள்ளதை உள்ளது படி, அப்படியே தட்டறேன், படிச்சுக்கோங்க.

சமீபத்திய பதிவுகள் சில படிச்சா தலை உண்மையிலேயே சுத்துது.

1) தமிழ்மணம் சென்ஸார் செய்வது பற்றி:
இது தனியார் குழுமத்தால் லாப நோக்கமில்லாமல் (தற்போதைக்கு) தன்னார்வத்துடன் நடத்தப்படும் திரட்டி. சகல விதமான பயணரும் வந்து போகும் இடமாக, இவர்கள் இதை உருவாக்க நினைப்பதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
'கெட்ட' வார்த்தைகள் சிலவற்றை முகப்பில் வராமல் தடுப்பது எந்த விதத்திலும் தவறாகாது. வரவேற்கத் தக்கதும் கூட.

(நானே கூட ஒரு புகைப்படக் குழுமத்தில் இருக்கிறேன். சமர்கிப்படும் புகைப்படத்தில் 'கேள்விக்குறியான' விஷயங்கள் இருந்தால், கண்டிப்பா, நாங்களும் சென்ஸார் செய்வோம். இதுல என்ன பெரிய ப்ரச்சனை இருக்கமுடியும்?)

தமிழ்மண சென்ஸார் இல்லாத காலத்தில் எனக்கே ரெண்டு மூணு தடவை தர்மசங்கடம் ஆயிருக்கு.
அலுவலக நண்பர்கள் சிலரிடம், தமிழ் பதிவுகள் பற்றி எடுத்துக் கூறி, திரட்டிகளை காட்டலாம்னு தமிழ்மணம் பக்கம் வந்தா, ஜூடான இடுகைகள் முழுக்க முழுக்க, 'பலான' மேட்டரே நிரம்பி வழிந்த நாட்களுண்டு.
இதைதான் கிழிக்கறீங்களா என்பது போல், அவங்க ஏளனமா பாக்கரதும், நாம டக்குனு ப்ரௌஸர மூடரதும் சில தடவை நடந்திருக்கு.

குறிப்பா, பெண் பதிவர்கள் நிலையை நெனச்சுப் பாருங்க? புருஷன் கிட்டையோ, வீட்லயோ, தானொரு ப்ளாகர் என்று கூறிக் கொள்ள முடியுமா? தமிழ்மண உரலை, தைரியமா ஈ.மடலில் அனுப்பி, வாசகர்களைச் சேர்க்க முடியுமா?

என்னை மாதிரி, நிஜப் பெயர் வெளியிடாமல் இருப்பவர்களுக்கும், கும்மி மட்டுமே அடிக்கும் தனிக்கட்டைகளுக்கும், இந்த 'கெட்ட' வார்த்தை பெரிய விஷயமா இருக்காது. ஏக்சுவலி, இது நமக்கு ஒரு பெரிய entertainmentம் கூட. ஆனா, பெரும்பான்மையான 'சாதா' ப்ரஜைக்கு, இதெல்லாம் அருவருப்பு.
ஓரக்கண்ணால், சைட் அடிப்பதர்க்கும், ஊரே பார்க்கும்போது, ஈஈஈ என்று பல்லிளித்து ஜொள் விடுவதர்க்கும் உள்ள வித்யாசம்.

'வெட்கம்' இல்லாதவங்க தான், ஈஈஈஈன்னு பல்லிளித்து ஊரே பார்க்கும் போது ஜொள்ளுவார்கள்.
சபை மரியாதை அறிந்தவர்கள் கொஞ்சம் டீஸண்டாதான் இருப்பாங்க.

2) தமிழ்மணத்தில் இணைந்து விட்ட ஒரே காரணத்துக்காக, மனதில் நினைத்ததைப் பற்றி எழுதாமல் இருக்கணுமா?
கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் இது. இணையம் தரும் அபரிதமான கட்டற்ற சுதந்திரம் லேசா இடிக்குது.
ஆனா, தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை உபயோகித்து, அவங்க திரட்டியில திரட்டப்பட்டு, அவங்க மூலமா வாசகர்கள் கிடைக்கணும்னா, அவங்க சொல்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஆகணும். அதிலென்னங்க குழப்பம்?

எனக்கென்னமோ, அவங்க சட்டதிட்டங்கள் ஓரளவுக்கு ஞாயமானதாதான் தெரியுது. ரொம்பப் பெரிய சென்ஸார்ஷிப் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனா, சில சமயங்களில், எப்பவாச்சும், கொஞ்சம் 'ஏ' கலந்து பதிவுகள் போடும் பதிவர்களுக்கு இது நெருடலான விஷயம்தான்.
இந்த மாதிரி நேரங்களில், பதிவர்கள், நினைப்பதை எழுதுவது அவங்க சுதந்திரம்.
தமிழ்மணத்துக்கு, ஏதாவது பிடிக்கலண்ணா, (preferably, சிறு விளக்கம் தந்து), அதை * செய்து மறைப்பது, அவங்க சுதந்திரம்.

better yet, தமிழ்மணம், பதிவர்களுக்கு சில வசதிகள் செய்து கொடுக்கலாம்.
உ.ம். NotForThamizmanam னு லேபிள் வச்சு பதிவு போட்டா, இதை திரட்டாமல் இருக்கலாம்.
எப்பயாச்சும், 'ஏ' பதிவு போட விரும்பும் பதிவர்கள், இந்த லேபிளைப் போட்டு, இதை பொதுப் பக்கத்தில் தெரியாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

3) படைப்பாளிகளின் சுதந்திரம்?
தமிழ்மணத்தில் இணைந்துதான் வாசகர்கள் பெறணுங்கர கட்டாயம் இருந்ததுன்னா, யாரும் பெரிய படைப்பாளி இல்லீங்க.
எனக்குத் தெரிஞ்சு, நாம இங்க அடிக்கரதெல்லாம், சும்மா வெட்டிப் பேச்சும், கும்மியும்தான்.

நான் எழுத (ஹிஹி, எல்லாம் நேரம்) ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆகப் போவுது. என் கண்ணுல பட்டதெல்லாம், நல்ல பொழுதுபோக்குப் பதிவுகளும் (லக்கி, வெட்டி, கொத்ஸ், பெனாத்ஸ்,பாலா,கானா,... இந்த மாதிரி), ஓரளவுக்கு சுமார் கவிதைகளும் (ஷைலஜா, நிலவு நண்பன்,...), ஒரு சில 'விஷயமுள்ள' பதிவுகள் (விக்கிபசங்க, VSK, அனுராதா, தருமி, KRS, ...), பலப்பல கும்மி பதிவுகளும் (கோவி, ஆசிப், குசும்பன்,...), மிகச் சில சுவாரஸ்யமான குழுப்பதிவுகள் மட்டும்தான்.

பெரீரீரீரீய படைப்பாளிகங்கர பட்டம் தாங்கி, யாரும் தமிழ்மணத்துல திரியரதா தெரியல. யாரையாச்சும் மிஸ் பண்ணிட்டா சொல்லுங்க, படிச்சு பாக்கறேன்.

4) மொத்தத்தில் எரிச்சல் தரும் விஷயம்?
தமிழ்மணம் systematicஆக சில விஷயங்களை செய்யாதது. குழுமத்தில் இருப்பவர்களின் Ego அவ்வப்போது வெளியில் எட்டிப் பார்த்து, 'சார்பற்ற' அவர்களது செயல்பாட்டை கேள்விக் குறியாக்குவது போன்ற செயல்பாடுகள்.
You have devised rules -> just enforce the damn thing and not make a big fuss about it when you implement it. எல்லா செயலபாட்டுக்கும் பத்து பக்க வெளக்கம் கொடுக்கப் போகும்போதுதான், ப்ரச்சனைகள் ஊதப்படுகிறது.
one-liner explanation would do. என்னக் கேட்டா, * போடுமி இடத்திலேயே ஒரு விளக்கத்தை அடைப்புக் குறீல போட்டுட்டா, வேலை முடிஞ்சது. உ.ம் (blocked).

இன்னும் நல்லா செய்யணும்னா, இதை systematicஆ செய்யலாம். தமிழ்மணப் பதிவர்கள் யாராவது 50 பேர், அந்த மஞ்சள் பொத்தானை ஒரு பதிவுக்கு அழுத்தினால், அதை முகப்பிலும்/சூடிலும்/பின்னூட்டப் பகுதியிலும் திரட்டாமல் விட்டுவிடலாம்.

யோசிங்க. எவ்வளவோ பண்ணிட்டோம், இதை சேக்க என்ன பெரிய கஷ்டம் இருக்கப் போவுது?

சூடான இடுகைகள் -> இத தூக்கணும்னு சொல்ல ஆசைதான். இந்த கட்டத்தில் இடம் பிடிக்கதான், ரூம் போட்டு யோசிச்சு எல்லாரும் தலைப்பு வைக்கறோம். ஆனா, personally, இது இல்ல்ன்னா, முகப்பே ஒரு 'விரக்தியா' இருக்கு. வெறும், பொழுது போக்குக்காக வாசிக்க வரும் பதிவர்களுக்கு, இது இல்லன்னா, ஒரு பெரிய இழப்புதான்.
இருந்துட்டுப் போவட்டும் - ஆனா, மேலே சொன்ன, systematic ரிமூவல் இருந்தா நல்லது. மஞ்ச ஐக்கானை கருவிப்பட்டையில் வைத்தல் கூடுதல் நலம். பதிவ படிச்சுட்டு க்ளிக்க வசதியா இருக்கும்.


ஸ்ஸ்ஸ்ஸ். இன்னும் நெறைய சொல்லிட்டே போகலாம்.
இப்போதைக்கு இது போதும்.

மொத்தத்தில்,
Everyone, Please Please, Grow Up!

எனக்கு, personalஆ எரிச்சல் தரும் ஒரு விஷயம், ரோம் நகரம் எரியும்போது ஃபிடில் வாசிச்ச கதையா, நம்ம பதிவர்கள் பெரும்பாலானோர், இந்த மாதிரி விவகாரப் பதிவுகளில், தங்களின் உண்மையான கருத்தை பதியாதது. எல்லாரும், எல்லாத்தையும் படிக்கராங்க (அதனாலதான ஜூடாவுது?), ஆனால், கருத்ஸ் சொல்லாம எஸ்கேப் ஆயிடராங்க. உங்க கருத்த, அங்கங்க அப்பப்ப போட்டு ஒடச்சாலே, பல விஷயங்கள் உடனடியாக 'நேராக' வழி பிறக்கும்.
இது, இந்தப் ப்ரச்சனைக்கு மட்டுமல்ல, எல்லா 'வெவகாரப்' பதிவுகளுக்கும் பொறுந்தும்.

ஸோ, பின்னூட்டத் தயங்காதீங்க. அங்கங்க, அப்பப்ப உங்க கருத்தைச் சொல்லத் தயங்காதீங்க! ஊருக்குள்ளதான், ஒண்ணும் கேக்காம, நடப்பவை நன்மைக்கேங்கரமாதிரி, வாழப் பழகிட்டோம், இங்கையாவது, கேள்விகள் கேளுங்க, எதையும் ஊதவிடாதீங்க.

so, அங்கங்க, அப்பப்ப, சொல்ல வேண்டியதைச் சொல்லுங்க!! என் வழி தனி வழின்னு போகாதீங்க. Come out of your shell! :)

ஓஹோ, எல்லாரும், இப்படிதான் நெனைக்கறாங்களா, அப்ப நாம இப்படி இதை இனி செய்யமுடியாதுன்னு, தெரிய வேண்டியவங்களக்குத் தெரிஞ்சாலே, பாதி விஷயங்கள் காத்திறங்கிப் போகும் ;)

வர்டா,

நன்றி!

பி.கு: இதுக்கு ஒரு சர்வே போடலாம்னு நெனைச்சேன். ஆனா, நான் கிறுக்கனதையெல்லாம் படிச்சுட்டு, இதுவா அதுவான்னு கேட்டா சரிவராது. இன்னொரு நாள் பாக்கலாம் ;)

69 comments:

Unknown said...

காமக்கதைகளில் காமம் என்று ஒரு வெங்காயமும் இல்லை என்பது வேறு விசயம்.ட்ரிபிள் எக்ஸ் படம்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டு சிலுக்கு சுமிதா துண்டை கட்டி குளிக்கற சீனை காட்டி ஒப்பேத்தற மாதிரி ரொம்ப சைவமான இடுகை தான் அதெல்லாம்.அதில் இலக்கியமும் இல்லை,போர்னோவும் இல்லை.

அந்த இடுகை சூடான இடுகைகள் பகுதிக்கு போகுதுன்னா அது தமிழ் சமுதாயத்தில் நிலவும் செக்ஸ் பஞ்சத்தை தான் காட்டுது..சிலுக்கு படத்தை க்ஷ்க்ஷ்க்ஷ் பட ரேஞ்சுக்கு மறைந்திருந்து முக்காடு போட்டு பார்க்கும் செக்ஸ் பஞ்ச நிலைக்கு ஆளாகியுள்ள தமிழ்மண்ணில் இதெல்லாம் தடை செய்யப்பட வேண்டிய விசயமா ஆனதில் ஆச்சரியமே இல்லை.

இதை பேசாம விட்டிருந்தா ஜட்டி கதை,நாப்கின் கதை,குறிக்கதை,யோனிக்கதைன்னு கொஞ்ச காலத்துக்கு பரபரப்பா இருந்து அப்புறம் சைலண்டா அமுங்கிருக்கும்..இப்ப தடை செய்ததால் அந்த கதைகள் தமிழ் இலக்கியத்தில் சாகாவரம் பெறவேண்டிய நிலையை அடைந்துவிட்டது.குஷ்பு சொன்ன பத்து பைசா பெறாத கருத்து அவரை தமிழ்மண்ணில் முதல்நிலை பெண்ணிய போராளியா ஆக்கின மாதிரி.

தமிழ்நாட்டின் நிஜமுகம் எதுவோ அது சூடான இடுகை பகுதியில் தெரியுது..அந்த விதத்தில் அந்த பகுதி ஒரு முகம் பார்க்கும் கண்னாடி மாதிரி..தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க தமிழ் சமுதாயம் ரொம்பவே வெட்கப்படுதுன்னு நினைக்கிறேன்..நிலைக்கண்ணாடி உண்மையை தான் காட்டும்...அதை கண்டு கோபப்படகூடாது.

SurveySan said...

///இதை பேசாம விட்டிருந்தா ஜட்டி கதை,நாப்கின் கதை,குறிக்கதை,யோனிக்கதைன்னு கொஞ்ச காலத்துக்கு பரபரப்பா இருந்து அப்புறம் சைலண்டா அமுங்கிருக்கும்///

மிகச் சரி.

ஆனா, சிலருக்கு இது தர்ம சங்கடமா இருந்திருக்கும் என்பதும் உண்மை.

////அந்த விதத்தில் அந்த பகுதி ஒரு முகம் பார்க்கும் கண்னாடி மாதிரி..///
வெரி ட்ரூ. அதனால தான், தவளைப் படமும் போட்டிருக்கேன். :(

வெண்பூ said...

சர்வேசன், ஏறத்தாழ இதே போன்ற யோசனைகளை நானும் தமிழ்மணத்திற்கு தெரிவித்திருக்கிறேன்.

http://blog.selvaraj.us/archives/290

நன்றி..

Unknown said...

என்னங்க தரும சங்கடம்? எல்லாம் பொய்யி..ஆபிஸில் எல்லார்க்கும் முன்னாடி "ஐயோ.அம்மா..அசிங்கம்னு.சீ.ச்சி' சொல்லிட்டு அவனே வீட்டுக்கு போயி அதை திருட்டுதனமா திறந்து பார்ப்பான்..

நான் தெரியாம தான் கேட்கறேன்..திரட்டிக்கு இதனால புது ஆட்கள் வருகை குறைந்தால் இப்ப என்ன நஷ்டம் வந்துவிடும்?அதுவே லாபநோக்கம் இல்லைன்னு சொல்லியாச்சு..அப்புறம் அதை பத்து பேர் படிச்சா என்ன,பத்தாயிரம் பேர் படிச்சா என்ன?.."இப்படித்தாண்டா எழுதுவோம்.படிச்சா படிங்க,படிக்கலைன்னா போய் தொலைங்கடா"ன்னு தில்லா எழுதணும்..அதுதான் எழுத்து...அவன் என்ன சொல்வான்,இவன் என்ன சொல்வான்னு காம்பரமிஸ் பண்ணிகிட்டு இருந்தா அப்புறம் அம்புலிமாமா பத்திரிக்கை தான் நடத்த முடியும்.

காமக்கதை பிடிக்கலைன்னு சொல்றவன் வீட்டுக்கு போயி குமுதத்தை எடுத்து வெச்சு நடுப்ப்க்கத்தை திறந்து வைத்து திருட்டுதனமா சுய இன்பம் அனுபவிப்பான்..இவன் பொதுவில் நடிப்புக்கு சொல்றதை எல்லாம் நிஜம்னு நம்பிக்கிட்டு இருந்தா நாமதான் கோமாளிங்க.

பெரியார் கொள்கையை பரப்பறேன்னு சொல்லிகிட்டு அவர்கிட்ட இருந்ததில் ஆயிரத்தில் ஒரு பங்கு துணிச்சலையாவது கற்றுகொள்ளாமல் பொதுபுத்திக்கு மண்டிபோடும் விதத்தில் இருந்தால் எப்படிங்க?எல்லா பயலும் அசிங்கம்,ஆபாசம்னு பேசிகிட்டு இருந்தப்ப பெரியார் தில்லா ஜெர்மனியில் அம்மணமா நின்னு போட்டொ எடுத்து "இதில் அசிங்கமும் இல்லை,ஆபாசமும் இல்லைடா..இதுதான் யதார்த்தம்னு" விடுதலையில் போட்டோவை போட்டார்.அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு துணீச்சலாவது இல்லைன்னா அப்புறம் பொது ஊடகத்துக்கு வருவதில் என்ன அர்த்தம்?

செக்சோடு வாழ கத்துக்கலைன்னா நம்ம சமுதாயம் பைத்தியகார விடுதியா மாறிடும்...இப்பவே அப்படித்தான் ஆகிட்டிருக்கு.

SurveySan said...

வெண்பூ, நன்றி.

நல்ல ஐடியாஸ்தான். ஏதாச்சும் செஞ்சா அவங்களுக்கும் நல்லது நம்மளுக்கும் நல்லது.

SurveySan said...

செல்வன்,

////என்னங்க தரும சங்கடம்? எல்லாம் பொய்யி..ஆபிஸில் எல்லார்க்கும் முன்னாடி "ஐயோ.அம்மா..அசிங்கம்னு.சீ.ச்சி' சொல்லிட்டு அவனே வீட்டுக்கு போயி அதை திருட்டுதனமா திறந்து பார்ப்பான்..
/////

எல்லாரும் அப்படிப்பட்ட ஆளுன்னு எப்படிங்க நினைக்கறீங்க? குறிப்பா, பெண்களுக்கு பதிவுகள் காட்டும்போது, நெஜமாவே சில சமயம் தர்மசங்கடம்தான் இது :(


///இப்படித்தாண்டா எழுதுவோம்.படிச்சா படிங்க,படிக்கலைன்னா போய் தொலைங்கடா"////

கண்டிப்பா இப்படி செய்யலாம். ஆனா, அதுக்கு 'தனியார்' திரட்டியில் இருக்கக் கூடாது. அவங்க, வெறும், ஆள் சேர்க்க மட்டுமே நெனைக்கறாங்கன்னு அவசியம் இல்லை. இருக்கும் 100 பேர், முகம் கோணாமல், வந்து போகட்டும்னும் நெனைக்கலாமே. நான் திரட்டி நடத்தினால் கூட, இந்த மாதிரி, சின்ன சின்ன சென்ஸார் கண்டிப்பா செய்வேன். தொறந்து விட்டு, வந்து போகும், 'கலீஜெல்லாம்' சேத்து வைக்கவேண்டிய அவசியம் எனக்கும் இருந்திருக்காது :)

/////காமக்கதை பிடிக்கலைன்னு சொல்றவன் வீட்டுக்கு போயி குமுதத்தை எடுத்து வெச்சு நடுப்ப்க்கத்தை திறந்து வைத்து திருட்டுதனமா சுய இன்பம் அனுபவிப்பான்/////

கண்டிப்பா செய்வான். ஆனா, ஒரு வாத்தியார், 'காமம்' நார்மல்னு நெனச்சுக்கிட்டு, வகுப்பிலையே எல்லாருக்கு முன்னாடியும், பலான புத்தகம் படிக்க விடுவாரா? தேவைப்படுபவன், ஒதுக்கு புறமா போய் வாசிச்சிக்கட்டும்.
எழுதரதுல தப்பேயில்லை. இங்க தான், பல வயசுக்காரங்களும் வந்து போறாங்கன்னு சொல்றாங்களே? குறிப்பா, பெண்கள் வந்து போறாங்க.
ஒரு இங்கிதம் வேணுமில்லையா?

/////எல்லா பயலும் அசிங்கம்,ஆபாசம்னு பேசிகிட்டு இருந்தப்ப பெரியார் தில்லா ஜெர்மனியில் அம்மணமா நின்னு போட்டொ எடுத்து "இதில் அசிங்கமும் இல்லை,ஆபாசமும் இல்லைடா..இதுதான் யதார்த்தம்னு"////

அதுவும் ஜெர்மனியில்தான் செய்ய முடிஞ்சுது. நம்மூருக்குள்ள செய்ய, அவருக்கே மனசு வரல பாருங்க ;)

////ஆயிரத்தில் ஒரு பங்கு துணீச்சலாவது இல்லைன்னா அப்புறம் பொது ஊடகத்துக்கு வருவதில் என்ன அர்த்தம்?
////

'கெட்ட' வார்த்தையில் எழுதி பதிவு இடுவதுதான் துணிச்சல்னு என்னால ஒத்துக்க முடியலங்க.
துணிச்சல காட்ட, ஆயிரமாயிரம் வழி இருக்கு.
செக்ஸ் பத்தி எழுதுவதைப் பற்றி எனக்கு ஒரு தடையுமில்லை. எழுதுவதை வரவேற்கிறேன்.
ஆனா, அதை 'ஏ' சர்டிபிகேட் போட்டு, தனியா பட்டியலிடணும்.

அந்த வசதி வரும் வரை, திரட்டியும், பதிவரும், பொறுப்பா நடந்துக்கணும்.

SurveySan said...

break time.
later, thanks for stopping by :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

காமக் கதைகளில் காமம் இல்லை / இலக்கியமாக இல்லை என்பவர்களுக்கு :

action based(ஒரு வசதிக்காக இப்படிச் சொல்கிறேன்) காமம் வேண்டுமென்றால் அதற்கு பல வலைதளங்கள் இருக்கின்றன. நிச்சயம் என் பதிவில் இருக்காது. காமம் குறித்த பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன் கதைகளில். உதா : காமம் குறித்த பயங்கள், கேள்விகள், புனைவுகள், பணம் போன்ற விஷயங்கள் தீர்மானிக்கும் காம உறவுகள், ஃபேக் செய்தல் ...

இலக்கியமில்லை எனச் சொன்னால்... முயற்சி தான் அது. சில கதைகளில் நேர்கோட்டுத் தன்மையற்ற எழுத்தையும் முயற்சித்திருக்கிறேன்; சில கதைகளில் நேரடிக் கதை கூறும் முறையையும். இலக்கியமாக எஞ்சுகிறதா என்பதை தேர்ந்த வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

Point No 2 & 3,I completly accept.

when we use tamizmanam,to reach many audiance,we need to have some minimum guidelines.

If people think that they do not have the freedom of expression,they need to be away from such restrictions imposed by TM.Rather compelling TM to allow all they,think is,something unacceptable.

புகழன் said...

//இங்கையாவது, கேள்விகள் கேளுங்க, எதையும் ஊதவிடாதீங்க.
//

சிலர் கேள்வி கேட்டே மேட்டரை ஊதி விட்டு விடுிகிறார்களே?

புகழன் said...

@ செல்வன்
///இப்படித்தாண்டா எழுதுவோம்.படிச்சா படிங்க,படிக்கலைன்னா போய் தொலைங்கடா"////


ஹலோ செல்வன் இதுதாங்க கருத்துத் திணிப்பு
கருத்துச் சுதந்திரம் இல்லை.

அவரவருக்கு பிடித்ததைப் படிக்கனும்னா அந்த மாதிரி விஷயங்களை வகைப்படுத்தி தனியாகப் போடுவதுதான் சரி.
இல்லையெனில் விரும்பாததையும்
விரும்பினாலும் தவிர்க்க நினைப்பதையும் வலுக்கட்டாயமாக படி என்று சொல்வது போல் ஆகிவிடும்.

Athisha said...

நீங்க தமிழ்மண நிர்வாகிங்களாணா!!!

SurveySan said...

Sundar,

//இலக்கியமில்லை எனச் சொன்னால்... முயற்சி தான் அது. சில கதைகளில் நேர்கோட்டுத் தன்மையற்ற எழுத்தையும் முயற்சித்திருக்கிறேன்; சில கதைகளில் நேரடிக் கதை கூறும் முறையையும். இலக்கியமாக எஞ்சுகிறதா என்பதை தேர்ந்த வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
////

in my personal view, there is nothing 'bad' about your 'kamam' posts. I read and liked the most recent one, myself :)

but, we cant expect the same level of comfort from other regular readers and the TM Admins.

let me ask you this - will you be comfortable sending your URL to your close family members and friends?

:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தக் கதைகளை என் குடும்ப உறுப்பினர்களும் (பெண்களும் அடக்கம்) மற்றும் நண்பர்களும் படித்திருக்கிறார்கள் (இதிலும் பெண்கள் உண்டு :) )

பலருக்குக் கதைகள் - rather தலைப்பு - பிடிக்கவில்லை என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும் !

என் பதிவிலேயே சில பெண்கள் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள். பெண்கள் படிக்க முடியாத கதை என்றெல்லாம் சொல்வது அவர்களைச் சிறுமைப் படுத்துவது போலாகுமென நினைக்கிறேன்.

நன்றி.

SurveySan said...

////இந்தக் கதைகளை என் குடும்ப உறுப்பினர்களும் (பெண்களும் அடக்கம்) மற்றும் நண்பர்களும் படித்திருக்கிறார்கள் (இதிலும் பெண்கள் உண்டு :) )
////

nice to know. but, honestly, i dont think i can show your stories to my friends and family, who are girls :)

பெண்களை தாழ்த்திப் பேசரமாதிரி இத எடுத்துக்கக் கூடாது.
சில விஷயங்கள் ஃப்ரீயா நண்பர்களுக்குள் பேசிக்கர மாதிரி, எல்லார் கிட்டையும் பேசிக்க முடியுமா என்ன?


///பெண்கள் படிக்க முடியாத கதை என்றெல்லாம் சொல்வது அவர்களைச் சிறுமைப் படுத்துவது போலாகுமென நினைக்கிறேன்.////

அவங்க படிக்க முடியாத கதைன்னு நானும் நெனைக்கல. ஆனால், 'பொதுவில்' படிக்க முடியாதுன்னு நெனைக்கறேன்.

///என் பதிவிலேயே சில பெண்கள் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள்///

அப்படியா? தேடிப்பாத்தேன் யாரும் கண்ணுல மாட்டலியே?
புனைப் பெயர்ல வராங்களோ ;) ?

btw, ஆணெல்லாம் ஆணுமில்லே, பெண்ணெல்லாம் பெண்ணுமில்லே.. என்பது சமீபத்திய தெளிவு :)

SurveySan said...

அதிஷா, //நீங்க தமிழ்மண நிர்வாகிங்களாணா!!!//

இல்லீங்க்ணா!

ILA (a) இளா said...

போங்கய்யா நீங்களும் உங்க தடையும். தலைப்பை "ஆண்டியும் சாமியும்"னு வெச்சுட்டு 5 வது வரியிலிருந்து காமக்கதை (சரோஜாதேவி பொஸ்தகத்தை) copy-paste பண்ணினா என்ன பண்ண முடியும்? கண்ணாடி முன்னாடி நில்லுங்க.. ஆனா பிம்பம்தான் நாமன்னு நினைக்க கூடாது.

என் நிலைப்பாடு இதுதான். தலைப்பை வெச்சு கும்மி அடிக்கிற மக்கள் திருந்தனும்...

ILA (a) இளா said...

காமம் மட்டும்தான் சுதந்திரம்னு நாம நினைச்சோம்னா காந்தி வாங்கி குடுத்தது என்னவாம்?

SurveySan said...

ILA,

//தலைப்பை "ஆண்டியும் சாமியும்"னு வெச்சுட்டு 5 வது வரியிலிருந்து காமக்கதை (சரோஜாதேவி பொஸ்தகத்தை) copy-paste பண்ணினா என்ன பண்ண முடியும்?///

ஒண்ணியும் பண்ண முடியாது. இங்கதான், தனி-மனித *க்கம் எல்லாம் வருது :)

ஒரு மீட்டுங்குக்கு வரவங்கள, டீஜண்ட்டா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வாங்கன்னு மட்டும்தான் சொல்லமுடியும்.
உங்க எண்ணங்களையும் டீஜண்ட்டா வாச்சுக்கிட்டு வாங்கன்னு சொல்லமுடியுமா?

அப்படிதான் தலைப்பும், கண்ட்டெண்ட்டும் ;)

SurveySan said...

ILA,
//காமம் மட்டும்தான் சுதந்திரம்னு நாம நினைச்சோம்னா காந்தி வாங்கி குடுத்தது என்னவாம்?//

யாருக்கான கேள்வி இது?
:) எனிவே, காந்தி வாங்கிக் கொடுத்ததே இன்னும் முழுசா யாரும் அனுபவிக்கல, இதுல காமத்தின் சுதந்திரம் எல்லாம் கொண்டாட நெறைய நாளிருக்கு.
பக்குவம் வரல. மெதுவா வரும்.

btw, காமக் கதைகளுக்கு **** போட்டது, personally, I dont approve of. but, from TM standpoint, it makes sense.

Unknown said...

சர்வேசன்,

/எல்லாரும் அப்படிப்பட்ட ஆளுன்னு எப்படிங்க நினைக்கறீங்க? குறிப்பா, பெண்களுக்கு பதிவுகள் காட்டும்போது, நெஜமாவே சில சமயம் தர்மசங்கடம்தான் இது :(
//

பெண்கள் என்ன காம உணர்வு இல்லாத புனிதர்களா?பாக்கியராஜ் படத்துக்கு ஏன் அத்தனை பெண்கள் கூட்டமா கூடிச்சு?குமுதத்துக்கு ஏன் அத்தனை பெண் வாசகர்கள்?:-)

//கண்டிப்பா செய்வான். ஆனா, ஒரு வாத்தியார், 'காமம்' நார்மல்னு நெனச்சுக்கிட்டு, வகுப்பிலையே எல்லாருக்கு முன்னாடியும், பலான புத்தகம் படிக்க விடுவாரா? தேவைப்படுபவன், ஒதுக்கு புறமா போய் வாசிச்சிக்கட்டும்.
எழுதரதுல தப்பேயில்லை. இங்க தான், பல வயசுக்காரங்களும் வந்து போறாங்கன்னு சொல்றாங்களே? குறிப்பா, பெண்கள் வந்து போறாங்க.
ஒரு இங்கிதம் வேணுமில்லையா?//

காமக்கதை என்பதில் என்ன இங்கிதம் குறைந்துபோச்சுன்னு எனக்கு புரியலை...இது வகுப்பறையும் இல்லை, சுந்தர் வாத்தியாரும் இல்லை.

பொதுசனத்தின் வீட்டில் ஹாலில் இருக்கும் டிவியில் குத்து பாட்டா போட்டு தாக்கறாங்க.அதை குடும்பத்தோட உக்காந்து பாக்கத்தான் செய்கிறார்கள்.."சர்க்கரை வள்ளி கிழங்கு சமைஞ்சது எப்படி?" என்பதையும் "சோளிக்குள் இருப்பது என்ன?" என்பது போன்ற கலைத்துவமிக்க பாடல்களையும் டீக்கடை,மீட்டிங் லவுட்ஸ்பீக்கரில் கொளுத்தி தள்ளறான்..அதையும் உக்காந்து கேக்கத்தான் செய்யறாங்க.

"நிரோத்னா கருத்தடை மாத்திரை"யான்னு பாக்கியராஜ் ராதாவை அப்பாவியா கேக்கறார்..அந்த படத்தை குடும்பத்தோட உக்காந்து பாத்து வெள்ளிவிழாவுக்கு ஓட்டிதள்ளினாங்க..ஆனா, காமக்கதைன்னு தலைப்பு வெச்சா இங்கிதம் குறைந்து போயிடுது..இல்லையா?:-)

//செக்ஸ் பத்தி எழுதுவதைப் பற்றி எனக்கு ஒரு தடையுமில்லை. எழுதுவதை வரவேற்கிறேன். ஆனா, அதை 'ஏ' சர்டிபிகேட் போட்டு, தனியா பட்டியலிடணும்.//

இப்ப உங்க பதிவில் கூடத்தான் செக்சை பத்தி விவாதிக்கறோம்..இதை ஏ சர்ட்டிபிகேட் குடுத்து தனியா பட்டியலிட்டீங்களா என்ன?:-)

Unknown said...

புகழன்,

//ஹலோ செல்வன் இதுதாங்க கருத்துத் திணிப்பு
கருத்துச் சுதந்திரம் இல்லை.

அவரவருக்கு பிடித்ததைப் படிக்கனும்னா அந்த மாதிரி விஷயங்களை வகைப்படுத்தி தனியாகப் போடுவதுதான் சரி.
இல்லையெனில் விரும்பாததையும்
விரும்பினாலும் தவிர்க்க நினைப்பதையும் வலுக்கட்டாயமாக படி என்று சொல்வது போல் ஆகிவிடும்.//

கருத்தை எப்படி சார் வலைபதிவில் திணிக்க முடியும்? ஒவ்வொருத்தர் கையில் இருக்கும் மவுசையும் யாராவது பிடித்து அமுத்தி காமக்கதையை படித்தே ஆகணும்னு கட்டாயப்படுத்தினாங்களா என்ன?பிடிக்கலைன்னா அந்த பக்கத்தை திறக்கவே வேண்டாமே?

மீண்டும் சர்வேசன்,

//let me ask you this - will you be comfortable sending your URL to your close family members and friends? //

கடல்புறா எழுதிய சாண்டில்யன் கிட்டேயும் இந்த கேள்வியை கேட்கலாம் இல்லையா?மஞ்சளழகியை அவர் வர்ணித்ததை அவர் மனைவி ரசிச்சாங்களான்னு கேட்க முடியுமா?:-)

Boston Bala said...

---குறிப்பா, பெண் பதிவர்கள் நிலையை நெனச்சுப் பாருங்க? புருஷன் கிட்டையோ, வீட்லயோ, தானொரு ப்ளாகர் என்று கூறிக் கொள்ள முடியுமா? தமிழ்மண உரலை, தைரியமா ஈ.மடலில் அனுப்பி, வாசகர்களைச் சேர்க்க முடியுமா?---

ஆண் பதிவர்கள் நிலையை நினைத்துப் பார்க்க கனம் கோர்ட்டாரிடம் வேண்டுகிறேன். :P

ப்லாகர் என்றாலே காமலீலாவிநோதன் என்னும் பெயர் ஆணுக்கு கிடைத்தால் பரவாயில்லை என்னும் பிரயோகத்திற்கு கன்டனங்கள்.

உங்களுக்கு சில கேள்விகள்:
1. தமிழ்மண உரலை அன்றாடம் எத்தனை பேருக்கு அனுப்பி படிக்க சொல்கிறீர்கள்?

2. இதுவரை மொத்தம் எத்தனை பேருக்கு அனுப்பி இருக்கிறீர்கள்?

3. இதில் எவ்வளவு பேர் தொடர்ச்சியான வாசகர்கள் ஆனார்கள்?

---பெரும்பான்மையான 'சாதா' ப்ரஜைக்கு, இதெல்லாம் அருவருப்பு.---

4. இதற்கான கருத்துக் கணிப்பு எங்கே நடத்தப்பட்டது?

5. சாதா, ஸ்பெசல் பிரஜைகளின் குணாதிசயம் என்ன? எவ்வாறு சாதா என்று தரம் பிரிக்கப்பட்டார்கள்?

6. 51% பெரும்பான்மையா? அல்லது சிம்பிள் மெஜாரிட்டியா? 'கருத்தில்லை', 'பதிலளிக்க விருப்பமில்லை' என்று டிக் போட்டவர்கள் எவ்வளவு சதவிகிதம்?

------

எளிமையாக இன்னொரு Tab திறந்துவிட்டு, அதை ஓரமாகப் போட்டு, அதில் 'வயது வந்தோருக்கு மட்டும்' ஆன இடுகைகளைப் பொட்டிருக்கலாம்.

பதிவு எழுதுபவர்களுக்கும் சூடான தலைப்பு வைத்து, முகப்பில் வர ஆசை. தமிழ்மணத்திற்கும் நுட்பத்தில் முதலீடு செய்ய இயலாத நிலை!?

Unknown said...

//காமம் மட்டும்தான் சுதந்திரம்னு நாம நினைச்சோம்னா காந்தி வாங்கி குடுத்தது என்னவாம்?//

தேச சுதந்திரத்துக்கு
'வெள்ளையனே வெளியேறு' போராட்டம்.

தேக சுதந்திரத்துக்கும்
"வெள்ளையனே' வெளியேறு " போராட்டம் தான்.

SurveySan said...

////கடல்புறா எழுதிய சாண்டில்யன் கிட்டேயும் இந்த கேள்வியை கேட்கலாம் இல்லையா?மஞ்சளழகியை அவர் வர்ணித்ததை அவர் மனைவி ரசிச்சாங்களான்னு கேட்க முடியுமா?:-)////

இங்கதான இடிக்குது.
சாண்டில்யன் ஆனபிறகு எவன் என்ன நெனச்சா எனகென்னன்னு எழுதிக்க வேண்டியதுதான்.
படைப்பாளி ஆன பிறகு, இதைப் பத்தியெல்லாம் கவலப்படாம, தன் சொந்த பதிவுல வேற எங்கயும் சேராம எழுதிக் கிழிக்கலாமே, எல்லோரும் :)

SurveySan said...

///பெண்கள் என்ன காம உணர்வு இல்லாத புனிதர்களா?பாக்கியராஜ் படத்துக்கு ஏன் அத்தனை பெண்கள் கூட்டமா கூடிச்சு?///

இல்லாதவங்கன்னு யாரைய்யா சொன்னாங்க?

இலை-மறை காயா இருக்கணுமைய்யா சில விஷயங்கள்.

எனக்குதான் வயசாவுதோ? எல்லாருமே, ரொம்ப வெஸ்டர்னைஸ் ஆயிட்டீகளோ :)

SurveySan said...

பாலா, எல்லாக் கேள்விக்கும், ரூம் போட்டு யோசிச்சு பதில்கள் கீழே:

1. தமிழ்மண உரலை அன்றாடம் எத்தனை பேருக்கு அனுப்பி படிக்க சொல்கிறீர்கள்?

ஐயா, இதுவரை ஒரு பத்து பேருக்காவது மடலில் அனுப்பியும், ஒரு ஐந்து பேருக்காவது அலுவலகத்தில், "சர்வேசன்னு ஒருத்தரு நல்லா எழுதராரு படிங்க. தமிழ்மணம் பாருங்க, நெறைய பேரு நல்லா எழுதராங்க. பா.பாலான்னு ஒருத்தரு, நல்லவரு, வல்லவரு எல்லார் எழுதரதையும் படிச்சு ஒரு எடத்துல கூட்டி வைக்கறாருன்னெல்லாம் சொல்லிருக்கேன். நம்புங்க" :)

2. இதுவரை மொத்தம் எத்தனை பேருக்கு அனுப்பி இருக்கிறீர்கள்?

ஐயா, மேலே உள்ளதே இதற்கும் பதில். ஒரு கேள்வியை வீணாக்கியதை கடுமையாக கண்டிக்கிறேன்.

3. இதில் எவ்வளவு பேர் தொடர்ச்சியான வாசகர்கள் ஆனார்கள்?

ஹ்ம். நல்ல கேள்வி, எல்லாரும், முதல் லுக்குலயே, "ஐயே, இத்த்தயெல்லாம் எவன் படிப்பான்னு முக்காவாசி பேரு ஒதுங்கிட்டாங்க. ஒரு ரெண்டு பேரு பதிவர்களாகியிருக்காங்க. ரொம்பவே கலங்கிப் போயிருப்பாதாக கேள்வி" :)

---பெரும்பான்மையான 'சாதா' ப்ரஜைக்கு, இதெல்லாம் அருவருப்பு.---

4. இதற்கான கருத்துக் கணிப்பு எங்கே நடத்தப்பட்டது?

இது என் சொந்த அனுபவத்திலேயே இருக்கு. ஆரம்பத்தில், சாதா ப்ரஜையான எனக்கு இதெல்லாம் கலீஜா தெரிந்தது. என்னை மாதிரி பல சாதா ப்ரஜைகள், முதல் லுக்குக்கு அப்பரம் திரும்பிப் பாக்கவேயில்லை. ஓரளவுக்கு, மனதிடமும், கும்மி மனப்பான்மையும் கொண்ட நானே தொடர்ந்து தாக்குப் பிடித்து வருகிறேன்.

5. சாதா, ஸ்பெசல் பிரஜைகளின் குணாதிசயம் என்ன? எவ்வாறு சாதா என்று தரம் பிரிக்கப்பட்டார்கள்?

ஐயா, சாதா ப்ரஜைகள், சற்றேருக்குறை 5 அடி முதல், 6 அடி வரை இருப்பார்கள். வெளுத்ததெல்லாம் பாலென்று நம்புவார்கள். காமம், ஜட்டி, யோனி யெல்லாம் கண்டால் முகம் வியர்த்து பயந்து போவார்கள் ;)

6. 51% பெரும்பான்மையா? அல்லது சிம்பிள் மெஜாரிட்டியா? 'கருத்தில்லை', 'பதிலளிக்க விருப்பமில்லை' என்று டிக் போட்டவர்கள் எவ்வளவு சதவிகிதம்?

ஜூடான இடுக்கைகள் பாத்தாலே தெரியும். இன்றை நாளின் வாசகர்களில் 70% கும்மி ஆளுங்கதான். எப்ப நல்ல விஷயமுள்ள பதிவுகள் ஜூடுல வருதோ, அன்னிக்கு நெலம மாறியிருக்குன்னு அர்த்தம் பண்ணிக்கலாம்.

SurveySan said...

///தமிழ்மணத்திற்கும் நுட்பத்தில் முதலீடு செய்ய இயலாத நிலை!?//

ரொம்ப நாள் இயலாமப் போனா, குப்பைமேடு ஆகும் நிலை, மேலும் அதிருப்தி ஆட்கள், கூட்டம் சேராமை இதெல்லாம் சமாளிக்க வேண்டி வரும். :(

யூ.ட்யூபில் ஒரு சாதா ஜிவாஜிப் பாட்டுக்கு, சில ஆயிரம் முதல் 2 லட்சம் வரை ஹிட் கிடைக்கப் பெறுகிறது. இணையத்தில் தமிழர்கள் அதிகம் புழங்குகின்றார்கள். ஆனா, வெறும் 750~1000 தான் தமிழ்மணத்தில் புழங்குகிறார்கள்.
இந்த நிலை மாறணும்னா, வெறும் மொக்கை/கும்மி/பலான நிலை மெதுவா தெளிந்து, நல்ல பதிவுகளுக்கு வெளிச்சம் அதிகமாகணும்.

Kasi Arumugam said...

//இங்கதான இடிக்குது.
சாண்டில்யன் ஆனபிறகு எவன் என்ன நெனச்சா எனகென்னன்னு எழுதிக்க வேண்டியதுதான்.
படைப்பாளி ஆன பிறகு, இதைப் பத்தியெல்லாம் கவலப்படாம, தன் சொந்த பதிவுல வேற எங்கயும் சேராம எழுதிக் கிழிக்கலாமே, எல்லோரும் :)
//

:))

Did you hear my clapping sound?

SS, I amaze at your tenacity in trying to awaken these intellectuals preptending to be asleep. Bravo!

SurveySan said...

செல்வன்,

//தேச சுதந்திரத்துக்கு
'வெள்ளையனே வெளியேறு' போராட்டம்.
//

தலீவா, உங்க காலக் காட்டுங்க.
உங்க தத்துவம் புல்லரிக்க வச்சுடுச்சு.
எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கறீங்க? ;)

SurveySan said...

காசி, வாங்க வாங்க.

//Did you hear my clapping sound?//

thank you! much appreciate it :)

////SS, I amaze at your tenacity in trying to awaken these intellectuals preptending to be asleep////

நன்றி. இந்தப் படைப்பாளிங்க தொல்லை தாங்க முடியல.

'தவளையாய் இருத்தல்' தமிழனின் டி.என்.ஏ'ல கலந்திருக்கும் போல ;)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சாண்டில்யன் தனியாக எழுதி அவர் வீட்டில் வைத்துக் கொண்டார்; வாசகர்கள் போய்ப் படித்து வந்தார்கள். அப்படித்தானே சொல்ல வருகிறீர்கள். ஆனால் பாருங்கள் அவர் வெகுஜனப் பத்திரிகைகளில் தான் எழுதினார். அவரது புத்தகங்கள் அரசு லைப்ரரிகளிலும் கிடைக்கின்றன.


இதற்கு யாரும் கைதட்ட வேண்டாம் :)

‘வேண்டுமானால் எழுதித் தனியாக வைத்துக் கொள்' என்னும் இலவச அறிவுரையெல்லாம் வேண்டாமே :)

Sampath Ranganathan said...
This comment has been removed by the author.
Unknown said...

//இங்கதான இடிக்குது.
சாண்டில்யன் ஆனபிறகு எவன் என்ன நெனச்சா எனகென்னன்னு எழுதிக்க வேண்டியதுதான்.
படைப்பாளி ஆன பிறகு, இதைப் பத்தியெல்லாம் கவலப்படாம, தன் சொந்த பதிவுல வேற எங்கயும் சேராம எழுதிக் கிழிக்கலாமே, எல்லோரும் :)//

அதாவது பெரிய பிஸ்தா எழுத்தாளர்ன்னா எதை வேணும்னாலும் எழுதிக்கலாம்..பிளாக்கில் கிறுக்கும் வேலை வெட்டியத்த பசங்க அடக்கி வாசிக்கணும்...அப்படித்தானே?:-)

சாண்டில்யன் சின்ன எழுத்தாளரா இருந்தப்ப இப்படி எல்லாம் தடை பண்ணிருந்தா அவரால் பெரிய எழுத்தாளர் ஆகியிருக்க முடியுமாங்கறதே சந்தேகம் தான்.

Kasi Arumugam said...

//இதற்கு யாரும் கைதட்ட வேண்டாம் :)//

My hands, my clapp! Those who do not want to hear have to wear ear muffs:)

Hail your fight for freedom!

Unknown said...

காமசூத்திரம் - இலக்கியம்
முலைகள் - இலக்கியம்
பீக்கதைகள் - இலக்கியம்

காமக்கதை - ஆபாசம்

Super:-)

Unknown said...

//Those who do not want to hear have to wear ear muffs:)//

No..they need not click the link and enter his blog...Simple.

Kasi Arumugam said...

//அதாவது பெரிய பிஸ்தா எழுத்தாளர்ன்னா எதை வேணும்னாலும் எழுதிக்கலாம்..பிளாக்கில் கிறுக்கும் வேலை வெட்டியத்த பசங்க அடக்கி வாசிக்கணும்...அப்படித்தானே?:-)
//

Passed over to respected Mr. Sannasi :)

SurveySan said...

சுந்தர்,

//ஆனால் பாருங்கள் அவர் வெகுஜனப் பத்திரிகைகளில் தான் எழுதினார். அவரது புத்தகங்கள் அரசு லைப்ரரிகளிலும் கிடைக்கின்றன.//

ஹ்ம். அவர் கருத்தை பதிந்தால் தன் முன்னேற்றத்துக்க்கு பாதகம் வரும் என்று எண்ணாத ஏதோ ஒரு பத்திரிகையில் பதிந்தார்னு வச்சுக்கலாம்.
"த.ம" சில எழுத்துக்கள் பாதகம்னு நெனச்சா, அதை ஒத்துக்கிட்டுப் போக வேண்டியதுதான சார்?
கேள்வி கேக்கவேணாம்னு சொல்லல.
கேக்க வேண்டியதுதான்; ஆனா, தையா தக்கான்னு எல்லாரும் குதிக்கரதுதான் அறுவருப்பு ;)

btw, நான் உங்களை கைநீட்டி குத்தம் சொல்லலை.
சமீபத்தில் நடந்து வரும் அனைத்து ஆட்டங்களையும் சொல்றேன்.

ஒரு தனியார் திரட்டி, ஒரு சிலரின் questionable ஆட்டத்துக்குக்காக எப்படி வேணும்னாலும் வளைந்து கொடுக்கணும்னு சொன்னா நியாயமா?

நான் ஒரு வாசகன்; நான் சொல்றேன், எனக்கு இந்த மாதிரி கெட்ட வார்த்தைகளுக்கு நடுவுல, நல்ல பதிவுகள் தேடிப் பிடிக்கரது, டார்ச்சரா இருக்கு. என்னை மாதிரி பலர் இருப்பாங்கல்லயா?

இல்ல, இதுதான் புடிச்சிருக்கு எல்லாருக்கும்னா, இந்தா ப்ரச்சனையே தொடங்கியிருக்காதே? ;)

SurveySan said...

////அதாவது பெரிய பிஸ்தா எழுத்தாளர்ன்னா எதை வேணும்னாலும் எழுதிக்கலாம்..பிளாக்கில் கிறுக்கும் வேலை வெட்டியத்த பசங்க அடக்கி வாசிக்கணும்...அப்படித்தானே?:-)
///

அப்படி கெடையாது,
யாரா இருந்தாலும், இடம், பொருள், ஏவல்னு ஏதோ சொல்லுவாங்களே, அத்த மைண்ட்ல வச்சுக்கணும் ;)


///சாண்டில்யன் சின்ன எழுத்தாளரா இருந்தப்ப இப்படி எல்லாம் தடை பண்ணிருந்தா அவரால் பெரிய எழுத்தாளர் ஆகியிருக்க முடியுமாங்கறதே சந்தேகம் தான்.////

உண்மை "படைப்பாளியை" யாராலையும் எதைக் கொண்டும் தடுக்க முடியாது, இந்த மாதிரி ஜிகினா எல்லாம் செஞ்சுதான், பெரிய ஆளா வரணும்னா, சம்திங் இஸ் மிஸ்ஸிங் ;)

SurveySan said...

சுந்தர்,

////‘வேண்டுமானால் எழுதித் தனியாக வைத்துக் கொள்' என்னும் இலவச அறிவுரையெல்லாம் வேண்டாமே :)////


;) I personally think, growing aggregator like TM, should consider allowing ALL types of writing, but find ways to classify the posts into separate tabs based on labelling. The author should be given a way to self-classify his post as 'questionable content' and allow thamizmanam to show it in the 2nd tab ;)

Unknown said...

Statement 1

"அப்படி கெடையாது,
யாரா இருந்தாலும், இடம், பொருள், ஏவல்னு ஏதோ சொல்லுவாங்களே, அத்த மைண்ட்ல வச்சுக்கணும்"

Statement 2

"சாண்டில்யன் ஆனபிறகு எவன் என்ன நெனச்சா எனகென்னன்னு எழுதிக்க வேண்டியதுதான்."

Selvan says

இந்த இரண்டு ஸ்டேட்மெண்டுக்கும் இடையே ஏன் இத்தனை பெரிய முரண்பாடு?யாரா இருந்தாலும் இடம்,பொருள்,ஏவல்ன்னு இருக்கு,..ஆனா சாண்டில்யன் மாதிரி பெரிய எழுத்தாள்ருக்கு மட்டும் இடம்,பொருள்,ஏவல் எல்லாம் கிடையாது,..அவர் என்ன வேணாலும் எழுதிக்கலாம்:-)

//உண்மை "படைப்பாளியை" யாராலையும் எதைக் கொண்டும் தடுக்க முடியாது, இந்த மாதிரி ஜிகினா எல்லாம் செஞ்சுதான், பெரிய ஆளா வரணும்னா, சம்திங் இஸ் மிஸ்ஸிங் ;)//

Yes...the something that is missing is "Freedom of speech".

If a society frowns at the word "காமம்", then that society doesn't deserve quality literature period

புருனோ Bruno said...

//better yet, தமிழ்மணம், பதிவர்களுக்கு சில வசதிகள் செய்து கொடுக்கலாம்.
உ.ம். NotForThamizmanam னு லேபிள் வச்சு பதிவு போட்டா, இதை திரட்டாமல் இருக்கலாம்.//

ஜூன் 15, 2008 அன்று சென்னையில் நடந்த தமிழ்மண நிர்வாகிகள் பதிவர் சந்திப்பில் இந்த வசதி தேவை என்று நான் கூறினேன். அதன் பின்னர் சிந்தித்ததில் அப்படி பட்ட இடுகைகளை தனியாக ஒரு பதிவு துவங்கி எழுதலாம் என்று தோன்றியது.

உங்கள் கருத்தென்ன. இல்லை இதற்கும் ஒரு கருத்து கணிப்பு நடத்திவிடுங்களேன் !!!

ராஜ நடராஜன் said...

செல்வன் எங்கேயோ தூரத்தில விவாதத்தில் கேட்ட பெயர் மாதிரி இருக்கேன்னு பின்னூட்டங்களைப் பார்த்துக்கொண்டே வந்தேன்.நல்லவேளை சன்னாசி பெயரை ஞாபகப் படுத்தி வச்சார் காசி அண்ணன்.

SurveySan said...

செல்வன்,

//////இந்த இரண்டு ஸ்டேட்மெண்டுக்கும் இடையே ஏன் இத்தனை பெரிய முரண்பாடு?யாரா இருந்தாலும் இடம்,பொருள்,ஏவல்ன்னு இருக்கு,..ஆனா சாண்டில்யன் மாதிரி பெரிய எழுத்தாள்ருக்கு மட்டும் இடம்,பொருள்,ஏவல் எல்லாம் கிடையாது,..அவர் என்ன வேணாலும் எழுதிக்கலாம்:-)
///////

என்ன கொடுமைங்க இது? இடம், பொருள்,ஏவல் எல்லாம் தெரிஞ்சுதானங்க சாண்டில்யன் எழுதியிருக்காரு.
நம்மாளுங்க, 'இடம்' தெரியாமல் எழுதிடறாங்க.

//Yes...the something that is missing is "Freedom of speech".//

Not exactly. 'freedom of speech' doesn't really mean you can speak anything and everything, 'every'where ;)

SurveySan said...

புருனோ,

//ஜூன் 15, 2008 அன்று சென்னையில் நடந்த தமிழ்மண நிர்வாகிகள் பதிவர் சந்திப்பில் இந்த வசதி தேவை என்று நான் கூறினேன். அதன் பின்னர் சிந்தித்ததில் அப்படி பட்ட இடுகைகளை தனியாக ஒரு பதிவு துவங்கி எழுதலாம் என்று தோன்றியது.///

தகவலுக்கு நன்னி.
தனியாக பதிவி தொடங்கி எழுதலாங்கரது ஒரு வசதிதான்.
இன்னிக்கு எல்லாம் 'ஓ.சி'ல கெடைக்கும்போது, அது ஒரு சுலபவழியும் கூட.
ஆனா, எப்பவாச்சும் ஒரு தடவ ஒரு 'questionable' content எழுதணும்னு நெனைக்கறவங்க அப்படி செய்யரது extra வேலை.

javascript மூலம் ஆட்டோமேடிக்கா திரட்டும் வசதி கொடுத்த த.ம, இந்த வசதியை செய்து தரது அவங்களுக்கு நல்லது மத்தவங்களுக்கும் நல்லது.

Unknown said...

//என்ன கொடுமைங்க இது? இடம், பொருள், ஏவல் எல்லாம் தெரிஞ்சுதானங்க சாண்டில்யன் எழுதியிருக்காரு. நம்மாளுங்க, 'இடம்' தெரியாமல் எழுதிடறாங்க.//

சாண்டிய்ல்யன் எழுதின இடம் : பொதுமக்கள் படிக்கும் பத்திரிக்கைகள்.சுந்தர் எழுதின இடம் பொதுமக்கள் படிக்கும் இனையவெளி...இந்த இரண்டு இடத்துக்கும் மத்தியில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கு?

//Not exactly. 'freedom of speech' doesn't really mean you can speak anything and everything, 'every'where ;)//

Yes. But freedom of speech does include writing stories with sex as a theme.

Tamil society tries to curtail that freedom by denying him the right to market his stories.At the same time, the same society reads sandilyan's stories with more graphic descriptions than sundar ever wrote and watches movies with far more vulgar songs and dialogues.

இரா. வசந்த குமார். said...

அன்பு Surveyசன்...

தமிழ்மணத்தில் எனது பதிவுகள் காட்டப்படுவதில்லையாதலால், நான் இதைப் பற்றி கருத்து சொல்ல தார்மீக அடிப்படை இல்லை.

என் வலைப்பதிவில் விவகாரமான பதிவுகளுக்கு (A) முத்திரை குத்தி விடுவது வழக்கம். அவற்றுக்குத் தான் அதிகப்படியான வரவினர் வருகின்றனர், தேன்கூட்டின் வழியாக!

என் வலைப்பதிவை எந்த கேட்டகிரியில் சேர்ப்பீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்.

கயல்விழி said...

//சூடான இடுகைகள் -> இத தூக்கணும்னு சொல்ல ஆசைதான்//

இதில் தான் பெரும்பான்மையான பிரச்சினை வருகிறது என்று நினைக்கிறேன். சூடான இடுகைகளை நீக்கினால் பதிவுகளின் தரம் அதிகரிக்கலாம்.
பதிவர்கள் சூடான இடுகையில் வருவதற்காக ஏதும் முயற்சி எடுக்காமல் இருந்தாலே நன்றாக எழுதுவார்கள்.

பிரச்சினை ஜ்யோவராம் சுந்தர் எழுதிய படைப்புகளில் இல்லை, அவரைப்பார்த்து அதே போல எழுதிய "Copy cat" பதிவர்களால் என்பது என் கருத்து. சூடான இடுகைகளை நீக்கினால் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

கிரி said...

சர்வேசன் அருமையாக கூறி இருக்கிறீர்கள்.

உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வாதத்திற்கு தான் நீங்க பதில் தர முடியும் விதண்டாவாதத்திற்கு .... :-))

இருந்தாலும் பதிவை போட்டு விட்டீர்கள் எனவே பதில் கூற வேண்டியது உங்கள் கடமை, அதையும் நீங்கள் சிறப்பாகவே செய்கிறீர்கள், பாராட்டுக்கள்.

Sundar Padmanaban said...

//தேச சுதந்திரத்துக்கு
'வெள்ளையனே வெளியேறு' போராட்டம்.

தேக சுதந்திரத்துக்கும்
"வெள்ளையனே' வெளியேறு " போராட்டம் தான்.//

செல்வன் - தெய்வமே.. எங்கியோ போயிட்டீங்க! :-)

Youtube-ல Channels-னு ஒரு Tab போட்டு தரம்பிரிச்சு விட்ருக்கற மாதிரி பிரிச்சு விட்றவேண்டியதுதான். அதுலயும் சில ஒளிக்கோப்புகளைத் திறந்தால் - அது 'அந்த மாதிரி' வகையாக இருந்தால் வயசு சோதனை பண்ணி 18 வயசாச்சான்னு கேள்வி கேட்டுட்டு திறப்பான். இதெல்லாமே ஒரு பேருக்குத்தான் - 7 வயசுப் பையன் 20 வயசுன்னு ஒரு User Account create பண்ணி வச்சிருந்தா யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. ஆனாலும் இப்படி கோடிக்கணக்கான மக்கள் பாக்கற Youtube-ல கூட நிர்வாண போர்னோ ஒளிக் கோப்புகளுக்கு அனுமதியில்லை என்று சட்டம் போட்டு செயல்படுத்திக்கொண்டுதானே இருக்கிறார்கள்? யாராச்சும் அதை எதுத்து கேஸ் போட்டீங்களா? அம்மாம் பெரிய Youtube கூட வரைமுறைன்னு சிலவற்றை நிர்ணயிச்சு வச்சிருக்கும்போது தமிழ்மணம் அது நடத்தும் திரட்டிக்கான வரைமுறைகளை வகுப்பதில் என்ன பிரச்சினை?

மொத்தத்தில் அம்மாதிரி பதிவுகளைத் தேடிப் படிப்பவர்கள் *** போட்டாலும் தனியாக பிரித்துப் போட்டாலும் படிக்கத்தான் போகிறார்கள்.

பிரச்சினை காமம் போன்ற வார்த்தைகளை அனுமதிப்பதா கூடாதா என்பதல்ல இங்கே!

அவரவர் பதிவுகளில் பதிவர்கள் என்னத்தையும் எழுதி அவர்களது எழுத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டட்டும். தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் அவற்றை இணைக்கும்போது அத்திரட்டிகள் வரையறை செய்திருக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதுதான் முறை. அச்சட்டதிட்டங்கள் எதேச்சதிகாரமா, அல்லது அநியாயமானவையா, அல்லது கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிப்பவையா என்பதெல்லாம் வீணான விவாதம். உன் வீட்டுக்குள் அம்மணமாய் இருந்துகொள். யாரும் கேட்கப் போவதில்லை. தெருவுக்குள் அம்மணமாய்த்தான் போவேன் என்று அடம்பிடித்தால் போலீஸ் பிடித்துக்கொண்டு போகும் - இந்தியாவில் மட்டுமல்ல - அமெரிக்காவிலும்தான். அல்லது Nudist Colony, Nudist Beach போன்று அவர்களுக்கென்று இருக்கும் இடங்களில் சென்று இருக்கட்டும். இதைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்மணம் மீது பாய்வது எனக்கென்னவோ சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

"நான் பாஸ்டன்ல வண்டியோட்டிக்கிட்டு Handsfree உபயோகிக்காமல் போன் பேசுவேன். அங்கெல்லாம் சுதந்திரம் அதிகம் - உங்கூர்ல மட்டும் ஏன் புடிக்கறீங்க?" என்று பக்கத்து கனெக்டிகட் போலீஸிடம் விவாதம் செய்ய முடியுமா? 'அப்ப பாஸ்டன்லயே இருக்கவேண்டியதுதானே - இங்கிட்டு ஏன் வந்தே?'ன்னுதான் கேப்பான்?

You have to go by the rules, when you're in someone else's territory. If you don't like them, QUIT! Stop complaining.. Period!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

வற்றாயிருப்பு சுந்தர்

எந்த திரட்டியும் "ஆன்மிக பதிவுகள் தான் இனிமேல் திரட்டப்படும்", "பதிவரின் பெயரில் ஆங்கில இனிஷியல் வந்தால் அது திரட்டப்படாது" என்பது போல என்ன ரூல் வேணும்னாலும் போடலாம்...ரூல் போட உரிமை இருக்கு, இல்லை என்பதா இங்கே விவாதம்?என்ன காரணத்துக்காக போட்டார்கள், அது தமிழ் இலக்கிய சூழலை வளர்க்கிறதா, தமிழக சூழலில் ஒரு எழுத்தாளனுக்கு செக்சை எழுத இருக்கும் தடைகள் என்பது பற்றித்தான் பேச்சு.

"ரூல் போட உரிமை இருக்கு, அப்படித்தான் போடுவேன்..இருந்தா இரு, ஓடுனா ஓடு" என்பதெல்லாம் குழந்தைத்தனமான வாதம் சுந்தர்...இலக்கியத்தை வளர்க்க ஊடகம் நடத்துகிறேன் என்று கூறிவிட்டு தினக்கூலியிடம் ரூல்ஸ் பேசுவது போல் எழுத்தாளர்களிடம் பேச கூடாது.(தமிழ்மணம் அப்படி ஒன்றும் பேசவில்லை..நீங்கள் அம்மாதிரி வாதத்தை வைப்பதால் கூறுகிறேன்)

பயனர், பயனாளி, வாசகன், பதிவர் என்பதை எல்லாம் தாண்டி நான் முதலில் ஒரு எழுத்தாளன். ஜ்யோவ்ராம் சுந்தர் சக எழுத்தாளர்....தமிழ் சமூகத்தில் செக்சை எழுதும் ஒரு சகஎழுத்தாளனுக்கு இப்படி கலாச்சார போலிசாக அந்த சமுதாயம் செயல்படுவது ஒரு படித்த தமிழன் என்ற முறையில் எனக்கு மிகவும் கேவலமாக இருக்கிறது..நான் இங்கே சமுதாயம் என்று கூறுவது திரட்டியை மட்டுமல்ல,..காமம் என்ற வார்த்தையை பார்த்ததால் அருவருப்படைந்ததாக கூறிய கனவான்களையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்.

சுந்தரின் பதிவின் தலைப்பை வெட்டி தலையில்லா முண்டமாக அந்த இடுகைகள் முகப்பில் உலா வருவதை காணப் பொறுக்கவில்லை. காமக்கதைகள் என்ற தலைப்பு சாமக்கதைகள் என்பது போன்று மாற்றப்படுவது தான் தமிழ் கலாசாரத்தை காப்பாற்றும் வழியா? இதைத்தானா இந்த தமிழ் சமுதாயம் விரும்புகிறது?..இதுதான் தமிழ் கலாசாரத்தை காப்பாற்றும் வழி, தமிழ் இலக்கியத்தை மேம்படுத்தும் வழி என்றால் அந்த இலக்கியத்தையும், கலாசாரத்தையும், நடுரோட்டில் போட்டு கொளுத்தினாலும் தப்பில்லை.

Sundar Padmanaban said...

அய்யோ செல்வன் ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு! என் பின்னூட்டத்துல

//செல்வன் - தெய்வமே.. எங்கியோ போயிட்டீங்க! :-)//ங்கற மொத வரி மட்டும்தான் உங்களுக்கு! மத்ததெல்லாம் பொது மக்களுக்கு! அவசரஅவசரமாத் தட்டிப் போட்டுட்டேன். இப்ப பாத்தா மொத்தமும் உங்களுக்கு எழுதுனமாதிரி 'தொனி' வருது! மன்னிக்க! அவை எப்பின்னூட்டத்திற்கும் எதிர்ப்பின்னூட்டமல்ல; எதிர்வாதமுமல்ல - என் கருத்துகள் மட்டுமே. ஆளாளுக்கு படிச்சுட்டு போறாங்க கருத்து சொல்லமாட்டேங்கறாங்கன்னு சர்வேஸன் குறிப்பிட்டதால சரி என் மரமண்டைக்கு தோணினதையும் எழுதி வைப்போம்னு எழுதினதுதான் மத்த வரிகள்ளாம்.

//இல்லை என்பதா இங்கே விவாதம்?//

அப்ப அது விவாதம் இல்லையா? சரியாப் போச்சு. நான்தான் ஒழுங்கா படிக்கலை.

//தமிழக சூழலில் ஒரு எழுத்தாளனுக்கு செக்சை எழுத இருக்கும் தடைகள் என்பது பற்றித்தான் பேச்சு.//

ம். தமிழ்நாட்டில் தமிழனுக்கு கலாசாரக் காப்பு போட்டு வைத்திருப்பதால் செக்ஸ் வறட்சி கடுமையாக ஏற்பட்டு, அதனால் மறைமுகமாகப் பாலியல் குற்றங்கள்் பெருகுகின்றன என்பது என் கருத்து. தமிழ்நாட்டில் என்று மட்டுமல்ல. இந்தியாவில் பெரும்பாலும் நிலவும் சூழல் இது.

//இலக்கியத்தை வளர்க்க ஊடகம் நடத்துகிறேன் என்று கூறிவிட்டு தினக்கூலியிடம் ரூல்ஸ் பேசுவது போல் எழுத்தாளர்களிடம் பேச கூடாது.//

இது சிக்கலான விஷயம் என்று நினைக்கிறேன் செல்வன். ரூல்ஸ் என்று ஒன்றைப் போட்டு அதைச் செயல்படுத்துவது தமிழ்மண நிர்வாகத்திற்கு மிகவும் மண்டை காயும் செயல். தினமும் வரும் நூற்றுக்கணக்கான பதிவுகளைப் படித்து அதில் ஆட்சேபகரமானவையாக எதுவும் இருக்கின்றனவா என்று கண்டுபிடித்து விலக்குவது நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. எங்கு கோடு போட்டுப் பிரிப்பது - உதாரணத்திற்கு (உதாரணத்திற்கு மட்டுமே) ஒரு துருவத்தில் ஜ்யோவ்ராம் சுந்தரின் எழுத்துகளையும் மற்றொரு துருவத்தில் வலைப்பதிவர்கள் சிலரின் பெயரில் போலி தளங்களை ஏற்படுத்தி ஆபாசமாக எழுதும் பதிவரின் எழுத்துகளையும் எப்படிப் பிரித்து இனம் காணமுடியும்? இதற்கு ஏதாவது தொழில்நுட்ப ரீதியான தீர்வு இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த இரண்டு 'சக எழுத்தாளர்களில்' யாரது எழுத்தை 'ஏற்றுக்கொள்ளத் தக்க செக்ஸ் எழுத்து' என்று இனம் பிரிப்பீர்கள்? அல்லது இருவருக்கும் அவரவர் பாணியில் செக்ஸை எழுதும் சுதந்திரம் இருக்கிறது, ஆதலால் இரண்டு வகை எழுத்துகளையும் தமிழ்மணம் ஏற்றுக்கொண்டு திரட்டவேண்டும் என்று சொல்ல வேண்டுமா?

சின்னக்குட்டி வீடியோ பதிவுகள் இடுகிறார். நாளை இன்னொரு பதிவர் போர்னோ வீடியோக்கள் கொண்ட தமிழ் வலைப்பதிவு ஏற்படுத்தினால் அதை தமிழ்மணம் ஏற்கவேண்டுமா கூடாதா?

அதாவது செக்ஸை மையமாக வைத்து வரும் படைப்புகளில் எப்படைப்புகள் ஏற்கப்படவேண்டும் எவை விலக்கப்படவேண்டும் என்பதை ஒரு திரட்டியை நடத்துபவரின் கண்ணோட்டத்தில் பார்த்தால் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள்? இக்கேள்விகள் எனது விடைகாணும் முயற்சியேயொழிய வாதப்பிரதிவாதக் கேள்விகளல்ல!
புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

//காமம் என்ற வார்த்தையை பார்த்ததால் அருவருப்படைந்ததாக கூறிய கனவான்களையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்.//

யாருங்க அந்த கனவான்கோழிகள்? காமம் என்ற வார்த்தையைக் கேட்டால் அருவருப்பாக இருக்கிறதாமா? சரிதான்! அப்ப காமராஜரைப் பற்றி யாராவது எழுதினால்?

//சுந்தரின் பதிவின் தலைப்பை வெட்டி தலையில்லா முண்டமாக அந்த இடுகைகள் முகப்பில் உலா வருவதை காணப் பொறுக்கவில்லை. காமக்கதைகள் என்ற தலைப்பு சாமக்கதைகள் என்பது போன்று மாற்றப்படுவது தான் தமிழ் கலாசாரத்தை காப்பாற்றும் வழியா?//

அடக் கடவுளே! I'm surely out of touch!!! :-( இதெல்லாம் நடக்கிறதா? காமத்திற்குப் பதிலாக சாமமா? கருமம்!

என் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டதைப் போல வகைப்படுத்தி பிரிப்பதைத் தவிர வேறு வகையான Censorship தேவையில்லை என்பது என் கருத்து. திரைப்படங்களுக்கு A/U என்று வகைப்படுத்தி விடுவதால் பார்ப்பவர்கள் பார்க்கவிரும்புவற்றைப் பார்த்து, தவிர்க்க நினைப்பதைத் தவிர்க்க இயலுகிறதல்லவா? அதைப்போல இதற்கும் ஒரு ரேட்டிங் கொடுத்துவிடவேண்டியதுதான். தசாவதாரத்திற்கு U சான்றிதழ் கொடுத்திருப்பதால் நாம் நம்பிவிடுகிறோமா? :-)

ஆனால் நடைமுறையில் இதுவும் சாத்தியமில்லை. எல்லவற்றையும் படித்து ரேட்டிங் கொடுப்பது நிர்வாகிகளுக்குச் சாத்தியமல்ல. அப்படி கொடுக்க நினைத்தாலும் ரேட்டிங் அளவுகோல்களை நிர்ணயிப்பதிலும் பிரச்சினை வரும். படைப்பாளிகளே சுயகட்டுப்பாடுடன் உண்மையான ரேட்டிங்குகளை அவரவர் படைப்புகளுக்கு நிர்ணயித்துவிடுங்கள் என்றும் சொல்லலாம். ஆனால் எந்த ரேட்டிங்கும் உண்மையான ரேட்டிங் என்று யாரும் சொல்ல முடியாது. நானெல்லாம் ஒரு பத்தி எழுதிவிட்டு மனசாட்சியே இல்லாமல் 'கவிதை' என்று வகைப்படுத்துகிறேனே அதுபோலத்தான் ஆகும்!

எல்லாரையும் யாராலும் திருப்திபடுத்த முடியாது. 100% ஓட்டு வாங்கும் கட்சி மட்டும்தான் ஆட்சிக்கு வரமுடியும் என்பது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போல 100% பதிவர்களைத் திருப்திபடுத்தும் திரட்டிகளை நடத்துவதும் சாத்தியமல்ல.

ஆளில்லா லெவல் கிராஸிங் வகை திரட்டிகளிருக்கின்றன. அதில் யாரும் எந்தப் பதிவையும் இணைக்கலாம். கேள்வியே கிடையாது. யாரும் எந்தப் பதிவுகளையும் சென்ஸார் செய்வதில்லை. தமிழ்மணம் அந்த வகைத் திரட்டியில்லை என்கிற வகையில்தான் என் புரிதல் உள்ளது. தமிழ்மணம் ஒன்றுதான் திரட்டி என்ற நிலையில்லாத நிலையில், இங்கு மறைக்கப்படும் எழுத்துகள் இன்னொரு திரட்டியில் மறைக்கப்படாமல் வெளிவரமுடியும் என்ற சாத்தியம் நிலவுகிற சூழலில் இத்திரட்டியை மாறச் சொல்லாமல் சுதந்திரமிருக்கும் திரட்டியில் செயல்படுவது would be a win-win situation. தமிழ்மணம் யாரையும் கழுத்தில் துண்டைப்போட்டு இழுத்துச் சேர்க்கவில்லையே. இருப்பதும் செல்வதும் எழுத்தாளர்கள் கையில்தானே இருக்கிறது? இதற்கு ஏன் இவ்வளவு விவாதங்கள்?

தமிழ்மணத்தினால் எழுத்தாளர்களின் படைப்புச் சுதந்திரம் கெடுகிறது என்று சொல்வது சரியான வாதமாக எனக்குப் படவில்லை!

அம்புட்டுத்தேன்!

நன்றி! (யாராச்சும் ஒரு சோடா கொடுங்கப்பா!)

SurveySan said...

வசந்த குமார், நாலஞ்சு ப்ளாகுல இருக்கீங்க. எதுங்க 'ஏ' வகை?

சீக்கிரமா சொல்லுங்க ;)

SurveySan said...

கயல்விழி,

//பிரச்சினை ஜ்யோவராம் சுந்தர் எழுதிய படைப்புகளில் இல்லை, அவரைப்பார்த்து அதே போல எழுதிய "Copy cat" பதிவர்களால் என்பது என் கருத்து. சூடான இடுகைகளை நீக்கினால் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.//

மிகச் சரி. ஸைலண்டா இதை விட்டிருந்தா, சுந்தர் இலக்கியம் வளத்திருப்பாரு. ஆளாளுக்கு ட்ரெண்டை காப்பி அடித்து கும்மி ஆடியதால், த.ம க்கு பேர் கெட்டுப் போகும் நிலை வரலாம்னு பயம் வந்திருக்கும்.

SurveySan said...

வற்றாயிருப்பு சுந்தர்,

ஜோடாக்கு சொல்லிருக்கு.
ரெஸ்ட் எடுத்துட்டு அடிச்சு ஆடுங்க.

த.ம டச்ல இல்லன்னா, த.ம இன் எ நட்ஷெல், படிச்சுட்டு திரும்ப ஆட வாங்க :)

உங்க கருத்துடன் உடன் படுகிறேன்.

காமத்துக்கு சென்ஸார்ஷிப் தேவை இல்லைன்னாலும், யூ.ட்யூப் மாதிரி வகைப் படுத்தும் முறை வரும்வரை, இந்த மாதிரி **** போட்டுத்தான் ஆக வேண்டியிருக்கும்.

Unknown said...

வற்றாயிருப்பு சுந்தர்,

நான் தவறுதலாக புரிந்துகொண்டதற்கு மன்னிக்கவும்..அதே போல் என் பின்னூட்டத்திலும் ஒன்றை நான் சரியாக விளக்கவில்லை.அதாவது காமக்கதைகள் என்பது இப்போது சாமக்கதைகள் என்று வருவதாக என் பின்னூட்டத்தை படித்ததும் உங்களுக்கு தெரிந்திருக்கிறது...அது அப்படி இல்லை..காமக்கதை என்ற தலைப்பில் "காமம்" என்று இருப்பதால் தலைப்பு சென்சார் செய்யப்பட்டு அது வெளிவருகிறது.அதே சாமக்கதை என்று தலைப்பிட்டிருந்தால் அது சென்சார் செய்யாமல் வரும்..அதைத்தான் இந்த தமிழ் சமூகம் விரும்புகிறதா என கேட்டிருந்தேன்.

உங்கள் கேள்விக்கு பதில்.

//ஒரு துருவத்தில் ஜ்யோவ்ராம் சுந்தரின் எழுத்துகளையும் மற்றொரு துருவத்தில் வலைப்பதிவர்கள் சிலரின் பெயரில் போலி தளங்களை ஏற்படுத்தி ஆபாசமாக எழுதும் பதிவரின் எழுத்துகளையும் எப்படிப் பிரித்து இனம் காணமுடியும்? //

இது நியாயமான கேள்வி.செக்சை எழுத சுதந்திரம் வேண்டும் என்று கேட்கும்போது அந்த சுதந்திரத்தை போர்னோ கதை எழுதுபவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது..காமத்தை வைத்து இலக்கியம் எழுதுவதும் போர்னோகிராபி கதைகள் எழுதுவதும் கண்டிப்பாக ஒன்றல்ல. தமிழ்மணம் போர்னோ கதைகளை தடை செய்தால் நான் அதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்க மாட்டேன்.

தமிழ்மணத்தில் போர்னோ வலைபதிவுகள் சேர தடை இருக்கிறது என நினைக்கிறேன்.போர்னோ எது, நல்ல கதை எது என நிர்வாகிகள் தான் தீர்மானிக்கிறார்கள்.அது அப்படியே தொடரட்டும்..ஆனால் சுந்தரின் நல்ல கதை போர்னோ வகையறாவில் சேர்க்கப்பட்டதுதான் எனக்கு ஆட்சேபம்...மற்ற பதிவர்கள் எழுதிய கதைகளை எல்லாம் நான் படிக்கவில்லை.அதனால் அவை எப்படிப்பட்டவை என தெரியவில்லை.

எல்லோரையும் சமாளித்து திரட்டி நடத்துவது இயலாத காரியம் தான்.இத்தனை புகார் சொல்லும் நாம் யாரும் நிர்வாகத்தில் உதவி செய்யவில்லை என்பதும் வாஸ்தவம் தான்..நிர்வாகிகளும் நம்மைப்போல் வேலை, வெட்டிக்கு போகும் மனிதர்கள் தான்..அதெல்லாம் எனக்கு தெரிந்து தான் இருக்கிறது.
நான் மறுக்கவில்லை..அதே சமயம், ஜ்யோவ்ராம் சுந்தரை குறிவைத்துதான் புகார் போய் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதனால் அதை மறுபரிசீலனை செய்வதில் என்ன தவறிருக்க போகிறது?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/My hands, my clapp! Those who do not want to hear have to wear ear muffs:)/

அதே. நான் காதை மூடிக் கொள்ள மாட்டேன், நீ கைதட்டாமல் இரு என்றோ அல்லது உன் வீட்டினுள் அமர்ந்து கொண்டு கைதட்டிக் கொள் என்றோ சொல்வது சரியாயிருக்குமா என்ன? :)

அதையேதான் நானும் சொல்கிறேன். என் கதைகளைப் பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம்.. simple.

Sundar Padmanaban said...

செல்வன்

//எல்லோரையும் சமாளித்து திரட்டி நடத்துவது இயலாத காரியம் தான்.இத்தனை புகார் சொல்லும் நாம் யாரும் நிர்வாகத்தில் உதவி செய்யவில்லை என்பதும் வாஸ்தவம் தான்..நிர்வாகிகளும் நம்மைப்போல் வேலை, வெட்டிக்கு போகும் மனிதர்கள் தான்..அதெல்லாம் எனக்கு தெரிந்து தான் இருக்கிறது.
நான் மறுக்கவில்லை..அதே சமயம், ஜ்யோவ்ராம் சுந்தரை குறிவைத்துதான் புகார் போய் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதனால் அதை மறுபரிசீலனை செய்வதில் என்ன தவறிருக்க போகிறது?//

உங்களின் புரிந்துகொள்ளலுக்கு நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தரின் பல பதிவுகளை வாசித்திருக்கிறேன். அட்டகாசமாக எழுதுகிறார். எழுத்தில் சில மைல்கற்களை அடைய முயற்சிக்கும் அவரது உழைப்புக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.

அவரது படைப்பின் தலைப்புகளை மறைத்து வெளியிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. முதலில் கூறியபடி +18 போன்று ஏதாவது வகைப்படுத்தித் திரட்டுவது முறையாகவிருக்கும். அதற்கான முயற்சிகளில் தமிழ்மணம் resources availability யைப் பொருத்தும் சாத்தியங்களை ஆராய்ந்தும் என்றேனும் ஈடுபடும் என்று நினைக்கிறேன். மற்றபடி ***** போட்டு பதிவின் தலைப்புகளை மறைத்துக்காட்டுவது போன்ற செயல்கள் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு இன்பத்தைத் தரும் விஷயங்களல்ல - தலைவலிதரும் நடவடிக்கையே!

ஒரு இலவச நூலகத்தின் பயனை அனுபவிக்கும் வாசிப்பாளர்கள் அதன் இயக்கத்தில் இடையூறுகள் ஏற்படுகையில் முன்வந்து உதவி, இயக்கம் சீரடைய தன்னாலியன்றதைச் செய்வதுதான் நேர்மையான காரியம். ஜ்யோவ்ராம் சுந்தரின் காமத் தலைப்புகள் மறைக்கப்படுகின்றன என்றவகையான செயல்பாடுகளை தமிழ்மண யானையின் சிறிய அடிசறுக்கலாகவே நான் கொள்கிறேன். அடிசறுக்கியவருக்குக் கைகொடுத்துத் தூக்கிவிடுவதுதான் முறையாகவிருக்கும் - எள்ளல் செய்வது நியாயமாகாது. கை கொடுத்துத் தூக்கிவிடுவோம். இம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான் தமிழ்மணத்திற்குப் பதிவர்களின் ஆதரவும் உதவியும் தேவை. தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கும் பதிவர்கள் முன்வந்து இப்பிரச்சினையைக் கையாள்வதற்கான ஆலோசனையையும் தீர்வையும் தமிழ்மணத்திற்கு வழங்கி உதவினால் அது எதிர்காலத்தில் தமிழ்மணமும் அதில் இயங்கும் பதிவர்களும் பயனடைய ஏதுவாகவிருக்கும்.

நன்றி.

இரா. வசந்த குமார். said...

சர்வேசன்... சாரி. லிங்க் குடுக்க மறந்திட்டேன்...

ஹி..ஹி...

http://kaalapayani.blogspot.com

இதில களிப்பேருவகை(A)னு ஒரு லேபிள் இருக்கும் பாருங்க...!

Kasi Arumugam said...

\\/My hands, my clapp! Those who do not want to hear have to wear ear muffs:)/

அதே. நான் காதை மூடிக் கொள்ள மாட்டேன், நீ கைதட்டாமல் இரு என்றோ அல்லது உன் வீட்டினுள் அமர்ந்து கொண்டு கைதட்டிக் கொள் என்றோ சொல்வது சரியாயிருக்குமா என்ன? :)\\

Tell me, then why did you say 'கைதட்ட வேண்டாம்'?


\\அதையேதான் நானும் சொல்கிறேன். என் கதைகளைப் பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம்.. simple.\\

ada yAruppA athu, padissE thIruvEnnu adam pudikkuRathu? :P
(athu nAnillIngka)

J. Sundar, how old are you?

V. Sundar, vAzka um theLivu.

Sundar Padmanaban said...

செல்வன்

கடைசியாக ஒரே ஒரு குறிப்பு.

//அதே சமயம், ஜ்யோவ்ராம் சுந்தரை குறிவைத்துதான் புகார் போய் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்//

இதிலேயே இப்பிரச்சினைக்கு மூலகாரணம் புலப்படுகிறதல்லவா? சக எழுத்தாளரின் எழுத்துகள் மறைக்கப்பட்டதற்குப் கோபம் கொண்டு சாட்டையை வீசும் உங்களைப் போன்று இருக்கும் அதே வலையுலகில் அதே சக சழுத்தாளரின் எழுத்துகளின் மீது தமிழ்மணத்திடம் புகார் அளித்த இன்னொரு சகஎழுத்தாளக் குழுவினால்தானே தமிழ்மணம் அந்நடவடிக்கையை எடுக்க நேர்ந்தது? எய்தவன் இருக்க தமிழ்மண அம்பை நோவதேன்? எழுத்தாளர்களிடையேயே எழுத்துச் சுதந்திரத்தைக் காப்பதில் ஒற்றுமையில்லை - இதில் தமிழ்மணத்தைச் சாடுவதில் பயனில்லை. புகார் போய்த்தான் வேறு வழியில்லாமல் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றுதான் நானும் நம்புகிறேன். ஆக இது தமிழ்மணத்தின் எதேச்சதிகாரமான முடிவு அல்ல என்பது தெளிவாகிறது.

இங்கே நாம் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு ஆதரவளித்து பிரச்சினையைத் தீர்க்க வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். இன்னொரு 'எழுத்தாளர் குழு' ஜ்யோவ்ராம் சுந்தரின் பதிவுத் தலைப்புகளை மறைத்துத் திரட்டியதை ஆதரித்து "ஆஹா எங்கள் கோரிக்கைக்குச் செவிசாய்த்த தமிழ்மணம் வாழ்க" என்று ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும்.

இரண்டுக்குமிடையே மாட்டிக்கொண்டு விழிப்பது தமிழ்மணம்தான்!

எனக்குத் தோன்றும் ஒரே யோசனை இதுதான். விவாத மேடை போன்று,
பதிவர்களுக்கிடையேயே ஒரு விவாத, புகார் மேடையொன்றை அமைத்துக்கொண்டு இம்மாதிரிப் பிரச்சினைகளைப் பதிவர்களே பேசித் தீர்த்து இறுதியாக (ஜனநாயக ரீதியாகப் பெரும்பான்மை ஆதரவுடன்) எடுக்கப்பட்ட முடிவை மட்டும் தமிழ்மண நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டால் அவர்கள் அதைச் செயல்படுத்திவிட்டுப் போகிறார்கள்! அம்மாதிரி எடுக்கப்பட்ட முடிவுகளை ஏகமனதாக (agree to agree or agree to disagree) எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் யாரும் யாரையும் குறை சொல்லவேண்டாம் பாருங்கள்.

நன்றி.

Unknown said...

வற்றாயிருப்பு சுந்தர்,

தமிழ்மணம் எதேச்சதிகாரமாக செயல்பட்டதாக நான் கருதவில்லை.அவர்கள் முடிவை மாற்றும்படி தான் கூறுகிறேன்.பதிவர்களூக்குள் விவாத மேடை அமைத்து ஜனநாயக முறையில் முடிவெடுப்பதெல்லாம் சாத்தியம் என்று நான் நம்பவில்லை.பதிவர்களுக்குளாயிரம் குழுக்கள், குடுமிபிடி சண்டைகள், வெட்டு குத்துக்கள்.ஐநூறு எம்பிக்கள் இருக்கும் பார்லிமெண்டிலேயே இத்தனை அடிதடி.ஆயிரத்தைநூறு பதிவர்கள் இருக்கும் தமிழ்மணத்தில் அடிதடி வராமலா இருக்கும்?:-)

யார் வேண்டுமானாலும் எந்த பதிவை வேண்டுமானாலும் தடை செய்ய சொல்லலாம்.அதே போல் யார் வேண்டுமனாலும் அதை மறுபரிச்சிலனை செய்ய சொல்லலாம்.இரு தரப்பு வாதங்களையும் கேட்டு அல்லவா முடிவெடுக்கப்படவேண்டும்? தடை செய்ய சொன்ன தரப்பு தனது வாதத்தை சொல்லிவிட்டது. தடை செய்யவேண்டாம் என்ற தரப்பும் தனது வாதத்தை எடுத்து வைக்கிறது.இரண்டையும் கேட்டு, ஆராய்ந்து நல்ல முடிவெடுத்தால் எனக்கு மகிழ்ச்சியே!

இப்போதிருக்கும் தடை தொடர்ந்தால் அதனால் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை.தடை விலகினாலும் லாபம் இல்லை.என் கோரிக்கை ஏற்கப்பட்டால் ஜனநாயகம் வென்றது என கும்மி அடிப்பதும், ஏற்கப்படாவிட்டால் சர்வாதிகாரம் வென்றது என போர்முழக்கமிடுவதும் என் விருப்பமல்ல.நிர்வாகத்தின் பணி எத்தனை சிரமம் என்பது எனக்கும் தெரியும்:-).எனக்கு மனதில் சரி என்று பட்டதை எடுத்து கூறினேன். கொள்வதும், விடுவதும் அவரவர் விருப்பம் தான்.

வாதத்தில் பங்கேற்ற அனைவருக்கும், பதிவிட்ட சர்வேசனுக்கும், பதில் கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் என்ற திருப்தியுடன் இந்த இழையிலிருந்து நான் விடை பெறுகிறேன்.

Sundar Padmanaban said...

//இரண்டையும் கேட்டு, ஆராய்ந்து நல்ல முடிவெடுத்தால் எனக்கு மகிழ்ச்சியே!//

எனக்கும்தான் செல்வன்.

நன்றி.

கயல்விழி said...

//எனக்குத் தோன்றும் ஒரே யோசனை இதுதான். விவாத மேடை போன்று,
பதிவர்களுக்கிடையேயே ஒரு விவாத, புகார் மேடையொன்றை அமைத்துக்கொண்டு இம்மாதிரிப் பிரச்சினைகளைப் பதிவர்களே பேசித் தீர்த்து இறுதியாக (ஜனநாயக ரீதியாகப் பெரும்பான்மை ஆதரவுடன்) எடுக்கப்பட்ட முடிவை மட்டும் தமிழ்மண நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டால் அவர்கள் அதைச் செயல்படுத்திவிட்டுப் போகிறார்கள்! அம்மாதிரி எடுக்கப்பட்ட முடிவுகளை ஏகமனதாக (agree to agree or agree to disagree) எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் யாரும் யாரையும் குறை சொல்லவேண்டாம் பாருங்கள்./

இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே? ஒரு விவாத மேடை அமைத்து, அடையாளத்துடன் வாக்களிக்கும் பதிவர்களின் கருத்தை பரிசீலித்த பிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்.

It's not too late even now. ஏன் அடுத்த இஷ்யூ வரும் வரை காத்திருக்க வேண்டும்?

SurveySan said...

அடக் கொடுமையே. மாங்கு மாங்குன்னு அடிச்சு வச்சா, ப்ளாகர் முழுங்கிடுச்சே. (blogger censors? :) )

மீண்டும் தட்டச்சுகிறேன்.

//////இரண்டையும் கேட்டு, ஆராய்ந்து நல்ல முடிவெடுத்தால் எனக்கு மகிழ்ச்சியே!/////

ஹீ.ஹீ. எனக்கும் மகிழ்ச்சியே. ஆனா, கொம்பேனியாருக்கு இதெல்லாம் சாத்தியமா என்று யோசிக்க வேண்டும்.

ஒரு ப்ரச்சனை பதிவு வரும்போது, 5 பேருக்கு பிடிச்சு, 5 பேருக்கு பிடிக்கலன்னா என்ன பண்றது?

அதே சமயம், ஒரு ரொம்பவே 'கலீஜ்' பதிவு வந்து, 10 பேரும் ஜொள்ளு விட்டு அதை ஆமோதிச்சா என்னா பண்றது?

சட்டப் ப்ரச்சனை இத்யாதி இத்யாதிக்கெல்லாம், கொம்பேனியார்தான பொறுப்பு?

ஸோ, one-site-fits-all மாதிரி ஒண்ணும் பண்ணமுடியாது, கொம்பேனியார் சொல்வதை அனுசரித்துச் (இஷ்டமுள்ளவர்கள்) செல்வதுதான் முறை.

கருத்தளித்த அனைவருக்கும் நன்னி!

Boston Bala said...

---கொம்பேனியார் சொல்வதை அனுசரித்து செல்வதுதான் முறை.----

என்ன கொடுமைங்க இது (:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

காசி ஆறுமுகம்,

கைதட்ட வேண்டாமென்றுதான் சொன்னேன், கூடாது எனச் சொல்லவில்லை. அதுக்கே இவ்வளவு கோபமா??? :)) இப்போது புரியுமென நினைக்கிறேன்.

நிச்சயம் நான் உங்களைவிடச் சிறியவனாகத்தான் இருப்பேன் :)