recent posts...

Thursday, June 21, 2007

எட்டெல்லாம் பத்தாது சார்... அதிசயப் பிறவி நான்!

எட்டு விளையாட்டு ரொம்பவே நல்லா இருக்கு. வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்கள், சில சாதனைகள், சில அனுபவங்கள் என மக்கள்ஸ் பிரிச்சு மேஞ்சிருக்காங்க.
நம்மளயும் மதிச்சு சிறில் விளித்திருக்கிறார். அவருக்கு நன்றி.

என் வாழ்வில் நடந்த விஷயங்கள்/சாதனைகள்/சந்தோஷங்கள் எல்லாம் சொல்ல எட்டெல்லாம் பத்தாது.
ஆனாலும், குடுத்த எட்டு ருலுக்குள்ள, முக்கியமான நிகழ்வுகளை சொல்ல முயன்றிருக்கிறேன்.
பழைய நிகழ்வுகளை அசை போட உதவிய, இந்த 'எட்டு' ஆரம்பிச்சவருக்கு நன்றி.
ஹ்ம். மொத்தத்துல வயசாவுது என்பது, கொஞ்சமா ஒரைக்க ஆரம்பிச்சிருக்கு :)

மேலே படியுங்கள்.
1) சின்ன வயதில் படு சுட்டியான குழந்தையாய் இருந்தேன் என்று எங்க அம்மா எப்பவும் சொல்வாங்க. Grasping power பயங்கர ஜாஸ்தியாம். ஊர்களின் பெயர், சொந்தக்காரர்களின் பெயர்கள், யாருக்கு யார் wife, யாருக்கு யார் husband இந்த மாதிரி விஷயங்கள் சட்டு சட்டுனு சகட்டு மேனிக்கு ஒப்பிப்பேனாம். சில சமயங்களில், என் புத்திசாலித்தனத்தால் பயந்தே கூட போயிருக்காங்களாம். நாலு வயதில், என் மூளை அறிவை கண்ட என் kinder-garden miss, ஒரு நாள் என்னை அழைத்து, திருக்குறள் சொல்லிக் கொடுத்து, மனப் பாடம் செய்யச் சொன்னார். 6 மாதங்களில், 1330 குறளையும், மனப்பாடச் செய்து பட்டு பட்டு என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.. என் திறமையைக் கண்டு அதிசயித்த பள்ளி தலைமை ஆசிரியர், அவரின் influence உபயோகித்து, அந்த வருட சுதந்திர தின கொடியேற்ற விழாவுக்கு என்னை டில்லி, அழைத்துச் சென்றார். எனக்காக 15 நிமிடம் ஒதுக்கிக் கொடுத்தனர்.
இந்திரா காந்தி அன்றைய பிரதமர்.
மைக் முன்னால் நின்று கொண்டிருந்த என்னிடம், இந்திரா காந்தி, "Dear, tell me a Kural, which ends in EYE" என்றார்.
பேங்கப் பேங்கப் விழித்த என்னிடம் வந்த என் miss, "கண்'ல முடியுமே, அத சொல்லு" என்றார்கள்.
நானும், உடனே
"கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்
"
என்று சொல்ல, கைதட்டல் வானைப் பிளந்தது, இன்றும் என் காதுகளில் ஒலிக்கும்.
என் பெற்றோர் கண்கள் கலங்கியதும் நினைவில் இருக்கிறது.

2) நாலு வயதில் தொடங்கிய பாப்புலேரிட்டி, ஒவ்வொரு வருடமும் தொடர்ந்தது. 10 வயதிருக்கும் என்று நினைக்கிறேன். செஸ் விளையாட்டில் அதி தீவிரமான ஆசை உருவானது. அதிலும், பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் ஜமாய்த்துக் கொண்டிருந்தேன். (வீட்டில் என் அண்ணா ஒரு கோப்பை வாங்கினால், அந்த வருடம் நான் 20 வாங்கி,அவனுக்கு செம கடுப்பு ஏற்றுவேன் ). அந்த வருடம், சென்னையில் ஒரு exhibition match விளையாட Klenstrov வந்திருந்தார். பள்ளி PT ஆசிரியர், என்னையும் இன்னும் சில மாணவர்களையும் போட்டியை நேரில் காண அழைத்துச் சென்றார்.
Klenstrov, அனாயசமாக மற்ற நாட்டு வீரர்களை ஜெயித்து, கோப்பையை வென்றிருந்தார். அன்றைய finals முடிந்து press-meet நடந்த போது, Klenstrov, "There is no one in the world to beat Russians" என்று சொல்லியிருந்தார்.
இதைக் கேட்டு கடுப்பான என் PT உரத்த குரலில், "Klenstrov, do you mind trying your hands with Karthik" என்றார். Klenstrov சற்றும் தாமதிக்காமல் "sure" என்று கூறினார்.
அனைவரின் கவனமும் என் பக்கம் திரும்ப. நானும் Klenstrovம், விளையாட ஆரம்பித்தோம்.
6 1/2 மணி நேரங்கள் தொடர்ந்த ஆட்டத்தில், நான் வெற்றி பெற்றேன்.
பார்வையாளர்கள், என்னை தோளில் சுமந்து மேடைக்கு அழைத்துச் சென்று தூள் பண்ணி விட்டார்கள்.
Klenstrovம் நாணிப் போனார். "I apologize, you Indians are brillaint. Hats of Karthik" என்று கூறி, அவரின் கோப்பையை என்னிடம் கொடுத்தார்.
வீட்டில் குவிந்திருந்த கோப்பை பத்தாதென்று, இன்னொரு கோப்பையுடன் வந்த என்னைக் கண்ட என் அண்ணன் பொறுமியது தனிக் கதை.

3) பள்ளிக் காலத்தில், பல வெற்றிகள் பரிச்சியமானதால், பத்தாவது வகுப்பில் (metric), மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தது ஒரு பெரிய வியப்பை தரவில்லை.
வீட்டிலும், ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணாமல், சிம்பிளாக கழிந்தது அந்த நிகழ்வு. MGR கையால் கிடைத்த, 10,000 ரூபாயை, நான் நன்கொடை கொடுத்தது அன்றைய தினத்தந்தியில் முதல் பக்கத்தில் வந்தது நினைவிருக்கிறது.
+2 வில், மட்டும், மாநிலத்தில் மூன்றாவது இடம் தான் கிடைத்தது. கணக்கு விடைத்தாளில், கடைசி இரண்டு தாள்களில், பேனா ink கொட்டி எழுதியது அனைத்தும், கடைசி நிமிடத்தில் அழிந்து விட்டதால் சுளையாக 20 மதிப்பெண்கள் குறைந்து, பெரிய சதி செய்து விட்டது.
முதலாவதாக வராத ஒரு பரீட்ச்சை நினைவுக்குத் தெரிந்து அதுதான் என்று நினைக்கிறேன்.
வாழ்க்கை மேடு பள்ளம் நிறந்ததென்று புரியத் துவங்கியது. (என் அண்ணன், எகத்தாளமாக சிரித்தது, இன்னும் ஞாபகம் இருக்கிறது. "டேய் கார்த்திக், தேவைடா உனக்கும். ரொம்ப ஆடின இல்ல. அதான் கடவுள் ink கொட்டிட்டாரு", என்பான் :) )

4) விரும்பிய படியே, IIT Delhiல் B.Tech Computers கிடைத்தது. IIT JEEல், 14ஆவது rank. +2வில் கிடைத்த மூன்றாவது இடம் தந்த கசப்பே மாறாத போது, 14 அந்த கசப்பை மேலும் அதிகமாக்கி இருந்தது.
இருந்தாலும், IIT காலங்கள் அற்புதமாய் முடிந்தது. கல்லூரியின் இறுதி ஆண்டு படிக்கும்போதே, நானும் எனது நண்பனும், sideல் துவங்கிய, ஒரு product அற்புதமாய் வளர்ந்தது. தனிக் கம்பெனி துவங்கலாம் என்று ஆரம்பிக்கும்போது, ஒரு அமெரிக்க நிறுவனம் அந்த product demo கண்டு, அதை தாங்களே வாங்கிக் கொள்வதாக சொல்லி, 18 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொண்டது. 20 வயதிலேயே, 9 கோடி சம்பாதித்தது பெரிய சந்தோஷத்தைக் கொடுத்து, computerல் இருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை ஊர்ஜீதப் படுத்தியது.

5) வேலைக்குச் உடனே செல்லும் அவசியம் இல்லாததால், IITல் தொடர்து M.TECH முடித்து, அமெரிக்க நிறுவனம் ஒன்றில், Senior Architectஆக சேர்ந்து, அவர்களின், சரியாக செயல்படாத, ஒரு divisionஐ 6 மாதங்களுக்குள் முன்னேற்றி, $450 million revenue ஈட்டிக் கொடுத்தது ஒரு சவாலான வருடம். நானும், என்னுடன் இருந்த மற்ற IIT'ians, திறமையைக் காட்டினதால் தான், நம் மக்களின் மூளைத் திறன், அமெரிக்க நிறுவனத்திர்க்கு புலப் பட்டது. out-sourcing ஆரம்ப காலத்தில், அந்த நிறுவனம் தான், முதல் முதலீட்டை இந்தியாவில் செய்தது. என்னுடன் அன்று இருந்த நித்யானந்தம், வேலாயுதம் ஆகியோரின் பெயரை இணைத்து "Kar-Ni-Vel" என்று பெங்களூரில் ஒரு பெரிய out-sourcing department உருவாக்கப் பட்டது.

6) கார்கில் போர் ஆரம்பித்திருந்த காலம். நித்யானந்தனும் நானும் நல்ல நண்பர்கள். "என்னடா நித்யா, நம்ம இங்க $ சம்பாதிக்கறோம், அங்க நம்ம soldiers தெனமும் செத்துக்கிட்டு இருக்கான். என்னடா வாழ்க்கை வாழரோம். இதெல்லாம் கண்டுக்காம அப்படியே இருந்திடணுமாடா" என்ற ரீதியில் பேசிக் கொண்டிருந்தோம். New Yorkல் World Trade Center இருந்த நேரம் அது. மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கும்போது, அன்றைய தினம் அமெரிக்க சுற்றுலாப் பயணம் வந்த, Indian Army General "Shekawat Singh"ஐ பார்த்தோம். மற்றொரு நண்பர் மூலமாக பரிச்சயம் அவர்.
எங்கள் மனவருத்தத்தை அவருடன் பகிரும்போது, "You guys belong in India. We need thoughtful brain like yours badly back home" என்றார்.
நாங்க என்ன சார் பண்ண முடியும் இந்தியாக்கு, என்றபோது, RAW என்ற இந்திய நாட்டின் CIA equivalent பற்றிச் சொன்னார்.
அடுத்த flight பிடித்து, நானும் நித்யாவும், அமெரிக்க வேலையைத் துறந்து, டில்லி பறந்தோம்.
RAWல், ISIன் சங்கேத messageகளை, decrypt செய்யும் வேலையில் பணிக்கப் பட்டோம்.
எட்டே நாட்களில், ஒரு decryptர் எழுதி, சகல ரகசியங்களும் எளிதில் புரியும்படி ப்ரொக்ராம் எழுதி, அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்றோம்.
ஒரு message உடனுக்குடன் decrypt செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்ற தகவலை Shekawat ஒரு பாராட்டு விழாவில், பிறகு சொன்ன போது நெகிழ்ச்சியாக இருந்தது. அப்துல் கலாமை முதலில் சந்தித்த தினம் அன்று தான்.

7) Defense Department தரப்பில் இருந்து வரும், பல அழைப்புகளை ஏற்று நானும் என் நண்பனும், பல உதவிகள் புரியத் துவங்கினோம். அணு ஆயுத சோதனை செய்த நாட்களில் கூட, super computerல் சில மாற்றங்கள் செய்து, மூன்று நாட்கள் செய்ய வேண்டிய testஐ, ஒரே நாளில் முடிக்க உதவினோம். அந்த சாதனை மறக்க முடியாதது.
இந்தியாவை ஒரு வல்லரசாகக் காணச் செய்ய செலவழித்த தூக்கம் இழந்த இரவுகள், இன்று நினைத்தாலும், கண்ணில் நீர் பெருக்கச் செய்கிறது.

8) எட்டாவது என்ன சொல்லலாம்னு யோசிச்ச போது. சமீபத்தில் ரஷ்ய விண்வெளிக் கூடத்திடம், விண்வெளிக்கு சுற்றுலா செல்ல பெயர் கொடுத்த சம்பவம் ஞாபகம் வந்தது.
கலாம், இந்தியாவும், சந்திரனுக்கு ஆள் அனுப்ப வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளார். இந்த ரஷ்ய விண்வெளி சுற்றுலா, பல புரிதல்களைத் தரும் என்று எதிர்பார்க்கிறேன். ( பணம் தான் கொஞ்சம் ஓவர் செலவு. $12 மில்லியன் டாலர், கட்ட்ணும். பாதி, அரசாங்கம் தருகிறது).

வாழ்க்கை ஒரு பெரிய ஆர்ப்பரிக்கும் நீரோட்டம். பளுவான வேலைச் சூழல்களிலும், சந்தோஷம் தரும் நிகழ்வு இந்த தமிழில் பதிவெழுதும் வாய்ப்புதான். ஆனால், இங்கேயும், அரங்கேறும் சில சண்டையெலாம் பாத்தாதான், கஷ்டமா இருக்கு. நண்பர்களே, நம் இந்தியாவை அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டு உயர்த்துவோம்.

இவ்வளவு கால வாழ்க்கையில் நடந்த சம்பவம் மேலே சொன்ன எட்டு, அடுத்த எட்டில், ஏழ்மையை ஒழிக்க ஏதாவது செய்யணும்னு ஆசை. ஆப்ரிக்கா, இந்திய கிராமங்களில் இழையோடும் பசிக் கொடுமையை ஒழிக்கவும் ஏதாவது செய்யணும்.
ஆசை இருக்கு, ஆண்டவன் வாய்ப்பளிப்பானா என்று தெரியவில்லை.

பி.கு1: சரி, வந்தது வந்தீங்க, குழந்ததகளுக்கான பாட்டுப் போட்டி சர்வேயில், வாக்களித்து, குட்டீஸை ஊக்குவியுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்க்கே!

பி.கு2: எட்டு போடரவங்க எல்லாரும் இங்க வந்து அவங்க எட்டு URL பின்னூட்டுங்க. ஒரே எடத்துல இருந்தா, படிக்க ஈஸியா இருக்கும் :)

பி.கு3: Brahminical - பதிவர்களின் தீர்ப்பு பாத்தீங்களா? உங்க தீர்ப்பு சொல்லிடுங்க.

பி.கு4: நேக்கு அண்ணாவெல்லாம் கெடையாது. கார்த்திக் என் பேரும் கெடையாது. அப்ப, மத்த மேட்டரெல்லாம்? ஹி ஹி. ரொம்ப ஓவராயிடுத்தோ :)?

பி.கு5: சுகராகமே, வசீகரா, ஆயிரம் கண் - நேயர் விருப்பத்துல பாடுங்களேன். நான் சுகராகமே இழுத்திருக்கேன்.

Thanks for your time!

Enjoy the weekend!

நான் அழைக்கும் நண்பர்கள், என் hall-of-fame சேர்ந்தவர்கள்.
எட்டு பேர்தான் கூப்பிடணும். ஆனாலும், பல பேர் ஏற்கனவே எட்டு போட்டுட்டதால, பத்தா கூப்பிடறேன். போடாதவங்க போடுங்க. போட்டவங்க, உங்க URLல்ல இங்க பின்னூட்டுங்க.
1) நெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)
2) பெருசு (த.வெ.உ IInd)
3) Aparnaa (த.வெ.உ IIIrd)
4) வெட்டிப்பயல் (best blogger'06)
5) சந்தோஷ் (IInd - best '06)
6) செந்தழல் ரவி (IIIrd - best'06)
7) குமரன் (top6 2006)
8) பெனாத்தல் சுரேஷ் (top6 2006)
9) WeThePeopleIndia (top6 2006)
10) ராதா ஸ்ரீராம் (என்னை அழகு பதிவு போட அழைத்தவர். நான் இன்னும் அந்த பதிவ போடல. anyway, returning the favour(?) :) )

ரூல்ஸ் இதுதான்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
ஆப்ஷனல் ரூல்:
4. முக்கியமா கப்ஸா விடக்கூடாது!

ஜமாய்ங்க!

63 comments:

ramachandranusha(உஷா) said...

சர்வேசன் அவர்களே, மிக சிறந்த எழுத்தாளர் ஆகி, விரைவில் சங்கர் போன்ற பிரபல இயக்குனர் கண்ணில் பட்டு, சினிமாவிலும் கதைவிட
அனைத்து தகுதிகளும் தங்களுக்கு இருக்கிறது.

Anonymous said...

aaaaaaaaaaaaaaaaahhhhh :)

SurveySan said...

உஷா, வாங்க வாங்க :)
என்னங்க பண்றது, இன்னும் நெறையயயயயயய சொல்ல ஆசைதான்.
தன்னடக்கம் தடுக்குது :)

ilavanji said...

:))))))))))))))))

// இதில் பல விஷயங்கள், என் உடன் இருக்கும் நெருக்கமான நண்பர்களுக்கும் கூட சொன்னதில்லை // இங்கயே ஒரு ஹிண்ட்டு குடுத்துட்டீங்க! இதைத்தவிர்த்திருந்தால் இன்னேரம் என் புல்லரிப்பை எப்படி சமாளிச்சிருப்பேன்னு எனக்கே தெரியாது!

Osai Chella said...

We are planning to start a photography blog in Tamil. Kindly visit my blog for more info. we wish you to join as an author Mr.S.


With love and regards
OSAI Chella

SurveySan said...

Ilavanji, Thanks for the hint. Fixed it :)

Chella, I did visit your post. Excellent idea. i will contribute as much as I can. as you know, i am not a professional and dont know the intricacies of photography at all.
i will do my 'amateurish' posts and share some pictures etc.. will be fun.

Unknown said...

அட்டாடா...என்ன சாதனை?என்ன சாதனை? உங்களை மாதிரி பத்து இந்தியர்...வேணாம்..நீங்க ஒருத்தரே போதும்...உங்களை மாதிரி ஒருத்தர் இந்த சாதனை எல்லாம் பண்ணினா இந்தியா வல்லரசாகிடுமே?:)))))

We The People said...

அடேங்கப்பா!

இவ்வளவு கொத்தா கதைவிட எனக்கு தெரியாதே! என்னை வேற மாட்டவிட்டுட்டீங்க... ஹூம் ஏதாவது நானும் நூலு விட பார்க்கிறேன்!!!

ரெம்ப ஓவராதான் அளக்கறீங்க சர்வே!

Anonymous said...

பின்னூட்டமெல்லாம் வர்ரதுக்கு முன்னாடி படிச்சு உண்மைனு நம்பிட்டேன். இப்போ தானே தெரியுது. ஆனாலும் புல்லரிப்பு அடங்க மாட்டேங்குது.

ஜி said...

என்னது இது.. பி.கு ல ஒரு பஞ்ச் வச்சிட்டீங்க.. மத்ததெல்லாம் உண்மையா இல்லையா??

SurveySan said...

செல்வன், வீதபீப்பிள், அனானி,
வந்தனமு!

ஜி,
இவ்ளோ அப்பாவியா இருக்கீயளே! :)

Anonymous said...

பின்னூட்டமெல்லாம் வர்ரதுக்கு முன்னாடி படிச்சு உண்மைனு நம்பிட்டேன்.

Anonymous said...

////பி.கு4: நேக்கு அண்ணாவெல்லாம் கெடையாது. கார்த்திக் என் பேரும் கெடையாது. அப்ப, மத்த மேட்டரெல்லாம்? ஹி ஹி. ரொம்ப ஓவராயிடுத்தோ :)?///

hihihi :)

பத்மா அர்விந்த் said...

:))

Anonymous said...

vandhutaanyaa vandhuttaanyaa

-L-L-D-a-s-u said...

மூன்று வரையில் உடல் புல்லரித்தது. நான்கில் கொஞ்சம் சந்தேகம் வந்தது. அப்பறமெல்லாம் நிலை கொள்ளாமல் பி.கு படிச்சாச்சு. ஷங்கரிடம் கதை சொல்லவும்
;)

SurveySan said...

lldasu, 6,7,8 தாங்க பன்சே :)
படிச்சீங்க இல்ல?

'டாப் எட்டர்' யாருன்னு ஒரு போட்டி வெக்கோணும் :)

VSK said...

:)))))))))))))))00

Ayyanar Viswanath said...

நல்லாத்தான் 'அள' க்கிறீங்கோ 20 வயசில 9 கோடி :)

SurveySan said...

VSK, அய்யனார், வாங்க வாங்க!

vsk, இதுக்கு அர்த்தம் என்னாங்க?

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்

?

SurveySan said...

எட்டு படிக்கும்போது, எந்த எடத்துல 'சந்தேகம்' வந்துதுன்னு சொல்லுங்க. அத கொஞ்சம் டைட் பண்ணிடலாம் :)

Anonymous said...

PADICHU PITHTHU PIDICHU ALAYAREN.

Anonymous said...

//ஜி said...
என்னது இது.. பி.கு ல ஒரு பஞ்ச் வச்சிட்டீங்க.. மத்ததெல்லாம் உண்மையா இல்லையா??
//
hehe..ரொம்ப அப்பாவிதான் நம்ப ஜி அண்ணா.

நல்ல வேளை அந்த 2 வது படிக்கும் பொழுதே நான் விழித்து கொண்டேன்.நீங்க ரொம்ப நல்ல கதை சொல்லுறீங்க

SurveySan said...

Anony, sorry for the trouble.

Durga, G romba appaavi :)

CVR said...

அட பாவமே!!!!!!
உங்க டிஸ்கியை நான் படிக்கவேயில்லை. அதற்கு முன்பாகவே தாழ்வு மனப்பான்மையால் வெறுத்து போய் பதிவை படிக்காமலேயே விட்டு விட்டேன்!!
இன்று துர்கா அக்கா பதிவு மூலமாக உங்க டிஸ்கியை பார்த்தேன்!!!
அண்ணாத்த!!
எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல!!! :-D

SurveySan said...

CVR, இந்த பதிவ வச்சு ஒரு சைக்கோ-அனாலிஸிஸ் சர்வே, கூடிய விரைவில் வரும் :)

Anonymous said...

alwa mazai pozigiradhu
ovvoru thuliyilum
surveysan nekkul therigiradhu =)

Santhosh said...

சர்வேசன் முதல் மேட்டரை படிச்சிட்டு புல்லரிச்சிப்போயிட்டேன். ஆகா இம்முட்டு பெரிய மேதையையா நமக்கு தெரியும் அப்படின்னு.. ஏன் ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி. இது நல்லா இல்ல சொல்லிட்டேன். அப்புறம் சர்வேசனுக்கு ஆட்டோவா ஆசிட்டா அப்படின்னு சர்வே போட வேண்டி வரும்.. நல்ல சொல்லுறீங்கய்யா கதையை..

Santhosh said...

//அய்யனார் said...
நல்லாத்தான் 'அள' க்கிறீங்கோ 20 வயசில 9 கோடி :)
//
யோவ் அய்ஸ் அவன் அவன் 240 கோடியை கைல வெச்சிகிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம சுத்திகிட்டு இருக்கான் நீங்க என்னாடான்ன 20 கோடிக்கே வாயை பொளக்கறீரு. நம்ம சர்வேயர் கூட americaவுல ஒரு software architect தான் சாமி.

G.Ragavan said...

ஆகா ஆகா ஆகா....இவ்வளவு பிரபலமா இருப்பீங்கன்னு நெனச்சுப் பாக்கலை. எனக்குக் கண்ணுல தண்ணி வந்துருச்சு. சிரிச்சி சிரிச்சுதான். :))))))))))))))))

Unknown said...

என்ன ஒரு சினன்புள்ளதணம்.........

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜூனியர் விகடனில் கப்சா ஆசாமிகள்
பற்றிப் படிக்கும் போது, எட இப்படியுமா?? என ஆச்சரியப்படுவேன்.
உங்களால் முடியுமப்பா??

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சர்வேசன்
சிவாஜி படத்தை இரண்டாம் முறையாகப் பார்க்கப் போனேன். அதற்காக நீங்க இப்படி எல்லாம் தண்டனை தரக்கூடாது! :-)

அதனால என்னங்க...
உங்க எட்டு பதிவைப் பார்த்து என்துவாகி...ஒரு நாலைஞ்சு கார்த்திக் உருவானா அதுவும் உங்களுக்குப் பெருமை தானே! அதுக்காகவே உங்களை எட்டு முறை வாழ்த்துகிறேன்! கலக்குங்க!

Anonymous said...

--இந்திரா காந்தி அன்றைய பிரதமர்.
மைக் முன்னால் நின்று கொண்டிருந்த என்னிடம், இந்திரா காந்தி, "Dear, tell me a Kural, which ends in EYE" என்றார்.
பேங்கப் பேங்கப் விழித்த என்னிடம் வந்த என் miss, "கண்'ல முடியுமே, அத சொல்லு" என்றார்கள்.
நானும், உடனே
"கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்"
என்று சொல்ல, கைதட்டல் வானைப் பிளந்தது, இன்றும் என் காதுகளில் ஒலிக்கும்.
என் பெற்றோர் கண்கள் கலங்கியதும் நினைவில் இருக்கிறது.
--

second time, diski paathaparam padichu, vilundhu vilundhu sirichen :)))))))))

Anonymous said...

உங்க புண்ணியத்தில் நானும் ஒரு 8 போட்டேன்.அதுல உங்க பதிவின் சுட்டியும் சேர்த்துவிட்டேன்....
உங்க டிஸ்கி சில பேர் கண்ணில் படவில்லையோ?எல்லாம் அப்பாவி பய புள்ளைங்களும் நம்பி ஏமாந்துட்டாங்க.பாவம்...

aparnaa said...

aha..
unnga blog padichu ..rommba pullarichu pooi..nann 8 podave kudathunnu mudive panniten..
eppadi ooruthar nammakku therinchurukkarenu oore perumaivera..!!
apparam, comments section parthaparam ..arrrr....ennatha sollarathu ...neenga mattum nerrla erunntha ..ooru kola nadanthirukkum!!thapicheenga!!

SurveySan said...

Durga, where is your ettu?

SurveySan said...

aparnaa, :))))))))))

pi.ku padikkaliyaa?

இராம்/Raam said...

ம்ம்ம் நல்லா இருங்க.... :)))

நளாயினி said...

கண்ணிலை தண்ணி வந்திச்சு. மனசெல்லாம் எனக்கும் வெம்பிச்சு. கண் ணிலை முடியிற திருக்குறள் சொல்லி. சத்தியமா ஒரு குழந்தை மேடையில் நின்றதை என் மனக்கண்ணால் தரிசிக்க முடிஞ்சுது. பின்னூட்டங்களைப்பாற்த போது ஐயே எல்லாம் பொய்யா. ஆனாலும் அந்த குழந்தை மனக்கண்ணை விட்டு நீங்கவேயில்லை. ஒரு போதுமே நீங்கவும் மாட்டுது.

SurveySan said...

இராம், வாங்க வாங்க. ;)

நளாயினி,

///கண்ணிலை தண்ணி வந்திச்சு. மனசெல்லாம் எனக்கும் வெம்பிச்சு. கண் ணிலை முடியிற திருக்குறள் சொல்லி. சத்தியமா ஒரு குழந்தை மேடையில் நின்றதை என் மனக்கண்ணால் தரிசிக்க முடிஞ்சுது. பின்னூட்டங்களைப்பாற்த போது ஐயே எல்லாம் பொய்யா. ஆனாலும் அந்த குழந்தை மனக்கண்ணை விட்டு நீங்கவேயில்லை. ஒரு போதுமே நீங்கவும் மாட்டுது/////

அடடா, அப்ப எழுத்தாளன் ஆயிட்டேங்கறீங்க :)

aparnaa said...

//விரும்பிய படியே, IIT Delhiல் B.Tech Computers கிடைத்தது. IIT JEEல், 14ஆவது rank. +2வில் கிடைத்த மூன்றாவது இடம் தந்த கசப்பே மாறாத போது, 14 அந்த கசப்பை மேலும் அதிகமாக்கி இருந்தது.//

aanalum ethu roooommbave over-a theriyalayya??

SurveySan said...

aparnaa,

why over? 14th rank dhaana solliyirukken. IIT'layum 1st ranknu solli irundha, adhu over :)

சுந்தர் / Sundar said...

எட்டு போட சொன்னா ... நீ ... பதினோன்னு போடுற ...

அருமை ... வாழ்த்துக்கள் .

Jazeela said...

முதல் பாயிண்ட் படிக்கும் போது வியந்தேன்.
இரண்டாவது செஸ் பற்றி சொல்லும் போது பொய்யென்று புரிந்து விட்டது. அப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் மறக்க முடியாத சரித்திர பெயராகி நீங்கள் ஒரு celebrity ஆக இருந்திருப்பீங்கள். அதனால் கதைகளை மொத்தமாக படித்து வீண்ணடிக்காமல் கடைசியாக
//நேக்கு அண்ணாவெல்லாம் கெடையாது. கார்த்திக் என் பேரும் கெடையாது. அப்ப, மத்த மேட்டரெல்லாம்? ஹி ஹி. ரொம்ப ஓவராயிடுத்தோ :)// இந்த வரிக்கு தேடி வந்து உறுதிப்படுத்திக் கொண்டேன் ;-). எனினும் பொய் சொல்ல, தத்ரூபமா எழுதவும் ஒரு திறமை வேண்டும். உங்களிடம் அது அதிகமாகவே இருக்கிறது ;-). புருடாவில் உங்கள் ஆதங்கம் வெளிப்பட்டது ;-) பொய்களில் சிலவையாவது உண்மையாக வாழ்த்துகிறேன்.

SurveySan said...

சுந்தர்,

11 தானா? 111 இல்ல போட்டிருக்கேன் :)

SurveySan said...

ஜெஸிஸா,

//புருடாவில் உங்கள் ஆதங்கம் வெளிப்பட்டது //

உண்மைதாங்க! :)

ஜீவி said...

அன்பிலா சர்வேசு,
அடக்கமுடியாத ஆர்வத்தோடு படிக்கையிலேயே, இதை
அசுரன், தமிழச்சி போன்றவுர்கள படிக்கவேண்டுமென
மனம் நினைக்கையில், அந்த பி.கு. 4 வந்து 'பொசுக்'கென்று
காற்று போன பலூனாய் மனசுக்கு ரொம்ப சங்கடத்தைக்
கொடுத்தது.
அட்லீஸ்ட், வள்ளுவர் சொன்னபடி, "எண்ணுகையில்
உயர்வாக" எண்ணியது குறித்து சந்தோஷம்..
ஜீவி

SurveySan said...

அன்புடைய ஜீவி,

//இதை
அசுரன், தமிழச்சி போன்றவுர்கள படிக்கவேண்டுமென
மனம் நினைக்கையில், அந்த பி.கு. 4 வந்து 'பொசுக்'கென்று
காற்று போன பலூனாய் மனசுக்கு ரொம்ப சங்கடத்தைக்
கொடுத்தது.
//

பொசுக்கென்று போனதுக்கு சாரி!
ஆனாலும், மத்தவங்கள படிக்க சொல்லுங்க.
இந்த மாதிரியெல்லாம் ஆகலாம்னு யாருக்காவது இன்ஸ்பிரேஷன் கெடச்சா நல்லதே :)

Chandravathanaa said...

இத்தனை திறமைகளா!
பாராட்டுக்கள்.

jeevagv said...

இனிமே இந்த சாதனைகளை எட்ட முடியாதா என்ன?!
அளப்பவன் வளப்பமானவன்!
வாழ்த்துக்கள்!

SurveySan said...

Chandravathana,

//இத்தனை திறமைகளா!
பாராட்டுக்கள். //


டிஸ்கி எல்லாம் படிச்சீங்கல்ல? :)

SurveySan said...

ஜீவா,

//இனிமே இந்த சாதனைகளை எட்ட முடியாதா என்ன?!
அளப்பவன் வளப்பமானவன்!
வாழ்த்துக்கள்! //

மத்தவங்க எட்டலாம். என்னால முடியாது :)

Anonymous said...

உம்மளை எல்லாம் என்னயா பண்ணுவது...

ஆனா ‘klenstrov'னு கூகில போட்டு ஒன்னும் கிடைக்காத போதே நினைச்சேன்...

விஜி

Anonymous said...

உம்மளை எல்லாம் என்னயா பண்ணுவது...

ஆனா ‘klenstrov'னு கூகில போட்டு ஒன்னும் கிடைக்காத போதே நினைச்சேன்...

SurveySan said...

அனானி,

Klenstrov தேடினீங்களா? ஐயோ பாவம் ;)

தோழி said...

நிஜம்மாவே பயந்து போய்ட்டேங்க... எப்டிங்க இப்டியெல்லாம்.. ஒரு ஓரத்துல சந்தேகம் மனசுல இருந்தாலும் இதெல்லாம் நிஜம்னு நம்பவே தொடங்கிட்டேன்...பின்னூட்டம் வரவரைக்கும் அது உண்மைனு நம்பினேங்க...

Excellent flow... nadathunga... che anu paavam.. ipdi yellam nambi yemarrathe vaazhkkaiya pochu... dont cry anu... pothu vaazhkkainu vanthathukku piragu ithellam saatharanam...

Naarayana intha kosu thollai thaanga mudiyalada

SurveySan said...

anuradha, thanks for the comments.

//che anu paavam.. ipdi yellam nambi yemarrathe vaazhkkaiya pochu... dont cry anu... pothu vaazhkkainu vanthathukku piragu ithellam saatharanam...
///
very sorry :)

Rajeswari said...

சர்வேசன் எல்லாருக்கும் குழந்தை பருவம் உண்டு தானே ....இது உடான்ஸ் இல்ல ..மேலும் உங்க பதிவு அருமையா இருக்கு ...வாழ்த்துக்கள்

Anonymous said...

//டிஸ்கி எல்லாம் படிச்சீங்கல்ல? :)//

டிஸ்கி அப்படின்னா என்ன? நெசமா தெரியாது.

SurveySan said...

saidasan,

Diski =
////பி.கு4: நேக்கு அண்ணாவெல்லாம் கெடையாது. கார்த்திக் என் பேரும் கெடையாது. அப்ப, மத்த மேட்டரெல்லாம்? ஹி ஹி. ரொம்ப ஓவராயிடுத்தோ :)?////

SurveySan said...

diski - pinkurippu ;)

ஜானு... said...

தெய்வம் சார் நீங்க ... நீங்க எழுதின இந்த பதிவ படிச்சிட்டு ... அப்டியே உண்மைனே நம்பிட்டேன் ... மொக்கை போட உங்க கிட்ட தான் கத்துக்கணும் சார் .... இம்மாதிரியான உங்களின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் ... :-)