recent posts...

Wednesday, June 27, 2007

$3 VISTA, $513 PC - MICROSOFT, AMD, இந்தியர்கள், அல்வா?

IQ PC என்று AMD துணையுடன் Microsoft நிறுவனம் ஒரு Desktop PC உருவாக்கி அதை இந்தியாவில், சீப்பா வினியோகிக்கப் போறாங்களாம்.
$513 விலை இருக்குமாம், இந்த 'Cheap' கணிப்பொறி.

இதெப்படி 'Cheap' ஆகும்னு தெரியல. வெறும் $300 ரூபாய்க்கு, இங்க அமெரிக்காலயே நல்ல PC கெடைக்குது.
Dual Core, Quad Core எல்லாம் மலிவு விலை ஆகும்போது, இவங்க AMDயோட, பழைய ப்ராஸஸர் எல்லாம் நம்ம ஊர்ல கழிச்சு விடப் பாப்பாங்கன்னு தான் தோணுது.
We should not become their dumping ground.

அதுக்கு, $513 ரொம்ப ஜாஸ்தி.

Widows Vista + Office, வெறும் $3 விப்பாங்களாம். அதுவும், $513ல் பாதியை அரசாங்கம் மானியமாக தரும் பட்சத்தில்.

பில் கேட்ஸ், நல்லவர், வல்லவர், திறமையானவர், சாதனையாளர் - ஒத்துக்கலாம்.

ஆனா, இந்த திட்டம் என்னமோ, ஊருக்கு நல்லது செய்ய உருவாக்கர மாதிரி தெரியல.

1 பில்லியன் ஆட்கள் இருக்கும் இந்தியாவில், விஸ்டாவை புழங்க வைத்தால், மைக்ராஸாப்டின் எதிர்காலம், சுபிட்சமா இருக்க அடி போடறாங்கன்னு நெனைக்கறேன்.

உண்மையில் நல்லது செய்யணும்னா, $100 கணிப்பொறியும், Open Source உபகரணங்களும் உபயோகிக்கும்படி கொடுக்கலாம் :)

ரிலையன்ஸ், டாடா எல்லாம் என்னங்க பண்றீங்க?
Taiwan மாதிரி, கணிப்பொறி assembling plant ஊர்லயே உருவாக்கி, உற்பத்தி பெருக்கி, சீப்பா விக்கலாமே?

விவரங்கள் இங்கே. உங்க கருத்தும் சொல்லுங்க.

பி.கு1: என் 8 மேட்டர் படிச்சாச்சா?

பி.கு2: Brahminical - Arrogance தீர்ப்பச் சொல்லுங்க.

8 comments:

Anonymous said...

//பில் கேட்ஸ், நல்லவர், வல்லவர், திறமையானவர், சாதனையாளர் - ஒத்துக்கலாம்.
//

அடப்போய் வேலையப் பாருய்யா. அவரு நல்லவராம், இவரு சொல்ல வந்துட்டாரு.

SurveySan said...

anony, Bill. G is a good guy, believe me.
he is a good biz. man, but above that, he is a good human being.

Anonymous said...

very true statement.

Iyappan Krishnan said...

பில்கேட்ஸ் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். சில சமயம் அதற்காகவே மைக்ரோசாப்ட் பொருள்கள் வாங்கவேண்டும் என்று நினைத்தாலும் :D நம்ம BSD மற்றும் லினக்ஸ் மாதிரி வருமா ?

கோவி.கண்ணன் said...

நட்சத்திர வணக்கம் !

நட்சத்திர பதிவுகள் கவனிக்கப்படுகிறதா ?

என்ற சர்வேயுடன் பதிவை தொடங்கவும்.

:)

சேதுக்கரசி said...

சர்வேஸ்டாருக்கு வாழ்த்துக்கள்!

SurveySan said...

கோவி கண்ணன்,

நன்றி. நல்ல ஐடியா. அமுல் படுத்திடுவோம் :)

சேதுக்கரசி, நன்றீஸ்.

Anonymous said...

தாத்தா ப்ரீயா டீ.வி கொடுத்தது சன் டீவி பாக்கத்தானே. அதுபோலத் தான் இதுவும்.