Unforgettable photos என்ற மோகந்தாஸின் பதிவில் Burning Monk என்று ஒரு புகைப்படம் இருந்தது.
கண்டதும் மனதை உரைய வைத்தது.
தெற்கு வியட்நாமின் அதிபர் புத்த மதத்துக்கு செய்த அநீதிக்கு எதிராக, தன் உயிரை மாய்த்துக் கொண்டாராம், Thích Quảng Ðức என்ற புத்த பிக்ஷு.
இதில் ஆச்சரியமான விஷயம், தன்னைத் தானே எரித்துக் கொண்டு தீக்குளிக்கும்போது, ஒரு இம்மை அளவு கூட சத்தம் எழுப்பாமல், தியான நிலையிலேயே அப்படியே எரிந்து சாம்பலானாராம்.
தியானத்தினால் பல பலனிருக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். இந்த புத்த பிக்ஷுவின் தைரியமும், சக்தியும் வியக்க வைக்கிறது. சுட்டெரிக்கும் தீயில் ஒரு சின்ன முனகல் கூட செய்யாமல் இருக்குமளவு மன திடம் கிட்டுமா தியானத்தினால்? அடேங்கப்பா!!!!
டிஸ்கி: தீக்குளிப்பதோ, தற்கொலை செய்வதோ மடத்தனம். இதை இந்தப் பதிவர் ஆதரிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பி.கு1: 'Brahminical - Final Take' - பல பதிவர்கள் தங்களது 'final take' சொல்லிட்டாங்க. உங்க கருத்தையும் ஒரு சில வரிகளில் சொல்லி, உங்கள் நிலை என்ன என்பதை தெரியப் படுத்துங்கள். நன்றி.
பி.கு2: குட்டீஸுக்கான போட்டியில் பங்கு பெற ஜூன்15 கடைசி நாள்!
நன்றீஸ்!
9 comments:
//தியானத்தினால் பல பலனிருக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். இந்த புத்த பிக்ஷுவின் தைரியமும், சக்தியும் வியக்க வைக்கிறது. சுட்டெரிக்கும் தீயில் ஒரு சின்ன முனகல் கூட செய்யாமல் இருக்குமளவு மன திடம் கிட்டுமா தியானத்தினால்? அடேங்கப்பா!!!!//
தியானம் முறையாக ( அதை வைத்து சம்பாதிக்கலாம் என்ற நோக்கம் எதுவுமின்றி) செய்தால் மனம் ஒருநிலைப்பட வாய்ப்பு இருக்கிறது. மனதிடப்பட தியானமும் ஒரு வழி. இது எதுவுமின்றி தி.க தோழர்கள் கூட பூக்குழி இறங்கி (தீ மிதித்து) இருக்கிறார்கள். எல்லாவற்றிற்க்கும் அடிப்படை மன உறுதி. இதற்கு பக்தி, நாத்திகம் என்ற தொடர்பெல்லாம் தேவை இல்லை.
கோவி.கண்ணன்,
மனம் ஒரு நிலைப்பட்டால், உடல் எரியும் வேதனை கூடவா தெரியாது?
மிகவும் வியப்பான செய்தியாக இருக்கிறது.
fire departmentல, எல்லாருக்கும், இந்த வித்தய கத்துக் கொடுத்திட்டா (seriously) , பல உயிர் காப்பாற்றப்படலாமே?
ரொம்ப நாளா தள்ளிப் போடர விஷயம், இந்த மெடிடேஷன் செய்வது. இனி, ஆரம்பிக்கணும் :)
கொசுறு செய்தி: இந்த monk எரியும் படத்தைப் பார்த்த அமெரிக்க அதிபர் கென்னடி, அடுத்த கணமே, வியட்நாம் அதிபருக்கு தான் கொடுத்த வந்த வாரிசை வாப்பஸ் வாங்கிவிட்டாராம்.
//ரொம்ப நாளா தள்ளிப் போடர விஷயம், இந்த மெடிடேஷன் செய்வது. இனி, ஆரம்பிக்கணும் :)
//
இன்றே செய்க
கால்கரி சிவா,
இந்த வாரக் கடைசியில் ஆரம்பிக்கலாம் என்று ஐடியா.
(இதைப் போல் பல முடிவுகள் எடுப்பதுண்டு, சோம்பேறித்தனம் ஒழித்து செயல்படுத்ததான் முடியல :) )
ப்ராமிணிக்கலுக்கு, நீங்க கருத்து சொல்லலியே?
Is this for real?
Ofcourse!
//கொசுறு செய்தி: இந்த monk எரியும் படத்தைப் பார்த்த அமெரிக்க அதிபர் கென்னடி, அடுத்த கணமே, வியட்நாம் அதிபருக்கு தான் கொடுத்த வந்த வாரிசை வாப்பஸ் வாங்கிவிட்டாராம்.//
கென்னடி வியட்நாம் அதிபருக்கு வாரிசு குடுத்தாரா? அதை வாபஸ் வேற வாங்கிக்கிட்டாரா?
என்னய்யா அக்குறும்பா இருக்கு? :)))
கொத்ஸ்,
////கென்னடி வியட்நாம் அதிபருக்கு வாரிசு குடுத்தாரா? அதை வாபஸ் வேற வாங்கிக்கிட்டாரா?
///
ஆதரவு எப்படிய்யா வாரிசு ஆச்சு? ஒன்னுமே பிரீல போங்க :)))
மப்புல அடிச்சிருப்பேனோ?
Post a Comment