recent posts...

Sunday, June 17, 2007

BRAHMINICAL ARROGANCE - பதிவர்களின் தீர்ப்பு!!!

இந்துக் கோயில்கள் சிலவற்றுள், 'மாற்று' மனிதர்களை அனுமதிக்காத, பழமைவாதக் கோட்பாடை எடுத்துக் காட்டி ஒரு பதிவு போட்டிருந்தேன்.

கடவுள் எல்லோருக்கும் பொதுதானே? அவருக்கு இல்லாத பாரபட்சத்தை, மனிதன் ஏன் உருவாக்கினான்?
ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திர்க்காக ஏதோ சில மனிதர்கள் உருவாக்கிய இந்த கோட்பாடுகள், இன்றைய வாழ்க்கை முறைக்குத் தேவையா?

சில கோட்பாடுகளின் உண்மை குணம் தெரிந்தபின்னும், அதை தூக்கி வைத்து அணையா விளக்காய் காத்திடத் தான் வேண்டுமா?

பலர் பலவிதமான நல்ல கருத்துக்களை முன் வைத்தார்கள்.

இந்த மாதிரி கோட்பாடுகள் அவசியம் என்றும் சில பதிவர்கள் வாதிட்டார்கள்.
எல்லாருக்கும் எல்லா விஷயங்களும் ஒரே மாதிரி தெரியாதே.
ஒவ்வொரு ப்ரச்சனைக்கும், நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான கருத்து இருக்கலாம்.
நல்லது.
இருந்து விட்டுப் போகட்டும்.
அடுத்தவன் சுதந்திரம்/சந்தொஷத்தில் முட்டுப் போடாதவரை.

The world is getting smaller and smaller. இந்தியா மாதிரி நாடுகளில், மத நல்லிணக்கம், மனித நேயம், ஒற்றுமை, இதெல்லாம் மிக அவசியம்.
ஒரு 'சிகப்பு போர்டு' போட்டு, ஒரு சிலரை உள்ளே அனுமதிக்காமல் இருந்து நாம் என்ன சாதித்து விடப் போகிறோம்?

பல ஆயிரம் ஆண்டுகளாய் பலரையும் அரவணைத்து, நல்வாழ்க்கை முறையை சொல்லித்தந்த இந்துமதம், தன் நிழலை பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மனித குலத்துக்கும் கொடுக்க வேண்டும்.

anyway, இந்தப் பழமைவாதக் கோட்பாடு நடுவில் வந்த ஒன்று.
லார்டு கிச்சா சொல்லி உருவானதல்ல என்பதை யாரும் மறுக்கவில்லை.

மனிதர்களின் பிரதிநிதிகளும், பூசாரிகளும் (ஏதோ ஒரு காரணத்துக்காக) அன்று உருவாக்கிய கோட்பாட்டை, இன்றைய காலகட்டத்தில் தேவை இல்லை என்று தெரிந்த பின், நம் பிரதிநிதிகளின் துணை கொண்டு உடைத்தல் தான் சரி.

இந்துக்கள் அல்லாதோர், புனிதம் குறைந்தவர்கள் என்பது போல், எண்ண வைக்கும் குருவாயூரின் சில கோட்பாடுகள் கண்டிக்கத்தக்கத்து.

ஒரு மனிதன் உள்ளே நுழைந்ததர்க்காக, தீட்டைக் கழிக்கும் புண்ணியாஜனம்/cleansing செய்வது, என்னைப் பொறுத்தவரை காட்டுமிராண்டித்தனம், மொள்ளமாரித்தனம், அயோக்கியத்தனம், $$!@!#!~~@!#!#!#!@#@! த்தனம்.

மூன்று வாரங்களுக்கு முன்னால் CNN-IBNல் வந்த செய்தி:
The Head Priest of the Guruvayur Temple in Kerala has said that non-Hindus cannot enter the temple. Priests and religious heads had met in Thrissur on Thursday to discuss who can be allowed inside the temple after the recent controversy around the purification ceremony conducted in the Guruvayur Temple following the visit of Union Minister Vayalar Ravi’s son Ravi Krishna. The temple authorities had objected to Krishna’s visit because his mother, Mercy, is a Christian and claimed that his visit had defiled the temple, which is the abode of Lord Sree Guruvayurappan. Over 70 percent of the priests who attended the meeting were against the entry of non-Hindus.

இது தொடர்பாக போடப்பட்ட பழைய சர்வேயின் முடிவுகள்.


இந்த 'Brahminical' ப்ரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க என்னதான் வழி?.
இது தொடர்பான மூன்று ( 1, 2, 3 )பதிவுகளில் வந்த கருத்துக்கள் இவை.

1) மாற்று மதத்தவரை, சில கோயில்களில் அனுமதிக்காத கோட்பாட்டை, சட்ட ரீதியாக உடைப்பதை வரவேற்கிறேன். இந்துக் கோயில்கள் அனைவருக்கும் தன் கரம் நீட்டலாம்.
2) குருவாயூரின் இந்தக் கோட்பாடு, தீண்டாமையை ஒத்தது. சிகப்பு போர்டை உடனே உடைத்தெறிய வேண்டும்.
3) கோட்பாட்டை மாற்றக் கூடாது. சில கோயில்கள் இந்துக்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும். சில ஆகமங்களை கடைபிடிக்க வேண்டியது நம் கடமை.
4) மசூதியையும், சர்ச்சையும் கோட்பாட்ட மாத்த சொல்லு மொதல்ல.
5) இதை விட பெரிய ப்ரச்சனை ஊரில் இருக்கும்போது, இந்த குருவாயூர் ப்ரச்சனையை கிளறுவது வேண்டா வேலை.
6) யார் எப்படிப் போனா எனக்கென்ன.

என் தீர்ப்பு/விருப்பம் - #1.

இம்முறை சர்வே கிடையாது.

பின்னூடுங்கள், உங்கள் தீர்ப்பை. ( நோ கும்மீஸ் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்! டிஸ்கோ ஓ.கே :) ).

குருவாயூரப்பன் அருள் புரியட்டும்!

நம்ம பண்ற அலம்பல்ல, எனக்குத் தெரிஞ்சு, லா.கிச்சா, என்னிக்கோ குருவாயூர விட்டு escape ஆகியிருப்பாரு. :)

ஊர்ல எவ்ளவோ கண்றாவி மேட்டரெல்லாம் நடக்குது. இத புடிச்சு ஏன்யா தொங்கணும்னும் தோணுது.
Point is this: I am fascinated and drawn by the aura of Guruvayoor temple. I enjoyed my each and every visit to that temple and looking forward to my next visit. The early morning prayers, the smell of chandan, vilakku, happy people, the color, the surroundings, the elephants, Lord Kicha are matchless among the other places I have visited.
I want to share this experience with my non-Hindu friends without any hitches. Ofcourse, I can ignore that 'red board' and slide in with my friends.
But, the very sight of that 'red board' makes me sick and I want that removed, lawfully.
We all know the history behind the 'red boards' in our temples - lets not carry it forward. Its a symbol of disgrace and a showcase of our dark past.

நன்றி! Amen!

பி.கு2: தேமேனு, பெண்களிடம் ஆண்களுக்கு அதிகம் பிடித்தது என்ன என்பது போன்ற டைம்-பாஸ் சர்வேக்கள் போட்டு பொழுத கழிக்காம, இந்த BP எகிறும் பதிவுகள் தேவையா?

வாழ்க்கை வாழ்வதற்கே! சிவாஜி பாத்தாச்சா? பாட்ஷாவை விட பேஷா? சான்ஸே இல்லியா? (அடுத்த சர்வே அதுதான்:) )

34 comments:

கோவி.கண்ணன் said...

என்னது முடிவுக்கு வந்துட்டா ?

என்னங்க சொல்றிங்க ?

அவனை மாத்த சொல்லு நான் மாத்துறேன் !

அவனை கோவணம் கட்டச் சொல்லு அதன் பிறகு நான் அம்மணமாக நிற்பதைச் சொல்லு !

அவனை 'கழுவ' சொல்லு நான் அதன்பிறகு கழுவுகிறேன் !

இதுதானே மாற்றுக்கருத்து என்ற பெயரில் வந்தது ...வேறு உருப்படியாக ஒன்றும் வரவில்லை.

:))

பலர் பழமைவாதிகள் என்பது உங்கள் சர்வேயின் மூலம் தெரிந்தது !
நன்றி !

SurveySan said...

கோவி.கண்ணன்,
முடிவுக்கு வர மாதிரி இருந்தது. ஆனா, திரும்ப சொன்னதையே சொல்லிச் சொல்லி, ராட்டணம் மாதிரி சுத்த ஆரம்பிச்சிடுச்சு :)
அதான், ஒரு ஆறு பாயிண்ட summarize பண்ணி, ஒரு முடிவுக்கு கொண்டுவர சுலபவழி குடுத்தாச்சு :)

Anonymous said...

5) இதை விட பெரிய ப்ரச்சனை ஊரில் இருக்கும்போது, இந்த குருவாயூர் ப்ரச்சனையை கிளறுவது வேண்டா வேலை.

Anonymous said...

எதிர்கால சந்ததிக்கு நாம் என்ன கொடுக்கப் போகிறோம்?......நமது பாரம்பர்யத்தினை அடையாளம் காட்ட என்ன செய்யவேண்டும்?...இருப்பவை அப்படியே இருக்கட்டும்....புதியவை இக்காலத்திற்கு ஏற்றதாக வரட்டும்....
வரும் சந்ததி எது வேண்டுமோ அதனை எடுத்துக் கொள்ளட்டும்.....

மத விஷயத்தில் (எந்த மதமானாலும்) இருப்பதை மாற்ற நமக்கு எந்த அதிகாரமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை...

நோ கும்மீஸ் said...

ஒரே பதிவ மாத்தி மாத்தி போட்டு நீங்க கும்மியடிச்சது போதும். தாங்கமுடியல, ஜெயா நியுஸ் 'மைனாரிட்டி அரசு' மாதிறி இருக்கு.

Anonymous said...

மத விடயங்களில் காலத்திற்கேற்ப வீதிகளை மாற்ற வேண்டும் என்பவர்கள் தங்களது மத நம்பிக்கைகளில் அதிகம் பற்றில்லாதவர்களாகத்தான் இருக்க முடியும்....

மாற்றம் வேண்டுபவர்கள் குருவாயுருக்கு போக வேண்டாம் , இஸ்கான்/நாட்டார் கோவில்களுக்கு செல்லட்டும்....போதுப்பணத்தில் கட்டியது, அக்கால ராஜாக்கள் என்றெல்லாம் சொல்லவேண்டாம், அக்கால ராஜாகளும் மக்களும் கோவில்களுக்கு காண்டிரிபூட் பண்ணும் போது இதெல்லாம் தெரிந்தும்தான் செய்தார்கள்...அவர்கள் அர்த்த மண்டபத்திற்கு செல்ல முயலவும் இல்லை, சம்ஸ்கிருதத்தை எதிர்க்கவும் இல்லை.

வெவரமானவன் said...

//nonymous said...
5) இதை விட பெரிய ப்ரச்சனை ஊரில் இருக்கும்போது, இந்த குருவாயூர் ப்ரச்சனையை கிளறுவது வேண்டா வேலை.
//

இந்து மதத்தின் மீதே நம்பிக்கை இழந்து வருகிறார்கள். இதில் எவன் பூனூல் போட்டு வருகிறான். எவன் சிலுவை போட்டு வருகிறான், எவன் குல்லா போட்டுக்கிட்டு வருகிறான் என்று பார்ப்பது மட்டும் பார்புகளுக்கு வேண்டிய வேலையோ. இந்து மதம் அழியாமல் இருக்கனும் என்றால் பார்பனனின் பூனூல் அதன் கழுத்தை நெறிப்பதை நிறுத்தனும் !

//Anonymous said...
எதிர்கால சந்ததிக்கு நாம் என்ன கொடுக்கப் போகிறோம்?......நமது பாரம்பர்யத்தினை அடையாளம் காட்ட என்ன செய்யவேண்டும்?...இருப்பவை அப்படியே இருக்கட்டும்....புதியவை இக்காலத்திற்கு ஏற்றதாக வரட்டும்....
வரும் சந்ததி எது வேண்டுமோ அதனை எடுத்துக் கொள்ளட்டும்.....
//

கருத்து கேட்பவர்களும், கருத்து சொல்பவர்களும் இந்த கால சந்ததியினர் தான். 65 வயது இளைஞர் வெற்றிவேல் அவதாரம் எடுத்து சொன்னால் கண்டுபிடிச்சுடுவாங்கன்னு, இங்கே அனானியாக வந்து போட்டு இருக்கார். இளைஞர்கள் முடிவெடுக்கட்டுமே முடிகொட்டுகிற வயசுல ஆலோசனை என்கிற பெயரில் அடுத்ததலைமுறை குறித்து அக்கரைபடுவதன் சூட்சமம் எல்லோரும் அறிந்ததே !

//Anonymous said...
மத விடயங்களில் காலத்திற்கேற்ப வீதிகளை மாற்ற வேண்டும் என்பவர்கள் தங்களது மத நம்பிக்கைகளில் அதிகம் பற்றில்லாதவர்களாகத்தான் இருக்க முடியும்....
//

பற்றோடு வருபவனை படியோடு நிறுத்துவிட்டு, இங்கு நம்பிக்கை குறித்து பேசுவது இரட்டை வேசம். மதநம்பிக்கைப்படி பாப்பான் பிச்சை எடுத்து உண்ண வேண்டுமாம் ? அதில் பற்று இருக்கிறதா ? இல்லையா ?

மாற்றம் வேண்டுபவர்கள் குருவாயுருக்கு போக வேண்டாம் , இஸ்கான்/நாட்டார் கோவில்களுக்கு செல்லட்டும்....போதுப்பணத்தில் கட்டியது, அக்கால ராஜாக்கள் என்றெல்லாம் சொல்லவேண்டாம், அக்கால ராஜாகளும் மக்களும் கோவில்களுக்கு காண்டிரிபூட் பண்ணும் போது இதெல்லாம் தெரிந்தும்தான் செய்தார்கள்...அவர்கள் அர்த்த மண்டபத்திற்கு செல்ல முயலவும் இல்லை, சம்ஸ்கிருதத்தை எதிர்க்கவும் இல்லை. //

அக்கால ராஜக்கள் எல்லோரு அறிவு கெட்டவனுங்க. பாப்பான் தோஷம் என்று பொய் சொல்லியே சொத்துக்களை தானம் செய்ய வைத்திருக்கிறான். சமஸ்கிரதம் தேவ பாசையாம் ?

தேவபாசை பேசுகிறவனெல்லாம் தேவர்களா ? பாப்பான் முகத்தில் இருந்து பிறந்தான் என்று மறைமுகமாக சொல்லவே தேவபாசை இன்னும் கோவில்களில் பசை போல ஒட்டி கொண்டு இருக்கிறது.

ஜல்லிஸ் தொடரலாம் அப்போதுதான் பார்பனீயத்தை தோலுறிக்க முடியும்.

SurveySan said...

anony,

//எதிர்கால சந்ததிக்கு நாம் என்ன கொடுக்கப் போகிறோம்?......நமது பாரம்பர்யத்தினை அடையாளம் காட்ட என்ன செய்யவேண்டும்?...இருப்பவை அப்படியே இருக்கட்டும்....புதியவை இக்காலத்திற்கு ஏற்றதாக வரட்டும்....
வரும் சந்ததி எது வேண்டுமோ அதனை எடுத்துக் கொள்ளட்டும்.....
///

DOESN'T MAKE ANY SENSE TO ME!

SurveySan said...

anony,

///மத விடயங்களில் காலத்திற்கேற்ப வீதிகளை மாற்ற வேண்டும் என்பவர்கள் தங்களது மத நம்பிக்கைகளில் அதிகம் பற்றில்லாதவர்களாகத்தான் இருக்க முடியும்....///

குருவாயூர் ரெட்-போர்ட், மத நம்பிக்கை இல்லைன்னு சொல்லிருக்கோமே அனானி.
இது நடுவில் வந்த சில மனிதர்களின் கொழுப்பை காட்டும் திணிப்பு.

Anonymous said...

இது இன்னும் முடிந்த மாதிரி தெரியலையே?

வெத்து ஜல்லி அடிக்காமல், யாராவது இரவோடு இரவா அந்த குருவாயூர் பலகையை கழட்டி கடாசுங்கள். இரயில் செலவு என்னுது.

SurveySan said...

//வெத்து ஜல்லி அடிக்காமல், யாராவது இரவோடு இரவா அந்த குருவாயூர் பலகையை கழட்டி கடாசுங்கள். இரயில் செலவு என்னுது. //

நன்னாருக்கே ஐடியா!

Anonymous said...

I agree. we should remove the red display

நங்கநல்லூர் மூத்த அறிவாளி said...

// SurveySan said...
//வெத்து ஜல்லி அடிக்காமல், யாராவது இரவோடு இரவா அந்த குருவாயூர் பலகையை கழட்டி கடாசுங்கள். இரயில் செலவு என்னுது. //

நன்னாருக்கே ஐடியா!
//

bad taste. இப்ப்பொது ரெட் போர்டை எடுக்கனும்பேள், அப்பறம் ஏன்டா நூலை போட்டுக் கொண்டு இருக்கிறாய் ? என்று கழட்ட சொல்லுவேள்.

பொழப்பத்த வேலை. வேறு எதாவது உருப்படியான வேலை பார்கவும்

வெங்காயம் said...

முதலில் நாம் நமது இறைவனை முன்மாதிரியாகக் கொண்டு மாற்று மதத்தினரை அனுமதித்தால் அதேபோல மற்ற மதத்தினரும் மாறுவார்கள்.

எனவே நங்கநல்லூர் மூத்த அறிவாளி போன்ற ஜந்துக்களின் பதில்களின் எனக்கு ஏற்பு இல்லை!

என்னைக் கேட்டால் நிரந்தர தீர்வு ஒன்றை சொல்லுவேன். அத்தனை மேல்ஜாதி இந்துக்களையும் போட்டுத் தள்ளிவிட்டால் இந்துக் கோயில்களில் இருக்கும் பிரச்னைகள் ஒழியும்!

We The People said...

நான் பார்க்கும் ஹிந்து மதம் வேற்று மதத்தை எதிர்க்கவில்லை! அனைவரையும் அரவனைக்கும் ஒரு மதமாகவே நான் பார்க்கிறேன், சிலர் தங்கள் பிழப்புக்காக இது போன்ற சிவப்பு போர்டு போட்டு ஹிந்து மதத்தை மற்ற மதங்களை மதியா குறுகிய பாதைக்கு அழைத்து செல்ல முயற்சிக்கிறார்கள். நாம் தான் அதை தடுத்தாக வேண்டும். இது நம் பொறுப்பு தான்! அதனால் நானும் #1 முடிவை ஆதரிக்கிறேன்!

//1) மாற்று மதத்தவரை, சில கோயில்களில் அனுமதிக்காத கோட்பாட்டை, சட்ட ரீதியாக உடைப்பதை வரவேற்கிறேன். இந்துக் கோயில்கள் அனைவருக்கும் தன் கரம் நீட்டலாம்.//

நான் கிருத்துவ தேவாலயம் சென்று வழிபட்டிருக்கிறேன்! இஸ்லாமிய மசூதிக்குள் சென்றதில்லை (நண்பர்கள் மூலமாக முயற்சித்தேன் முடியவில்லை, சில தடைகள் இருப்பதாக நம்புகிறேன்! தவறெனில் திருத்தவும்), ஆனால் தர்காவில் வழிபட்டிருக்கிறேன்! என்னை பொருத்தவரை மதம் ஒரு மார்கமே! கடவுள் ஒன்றே! இதையே தான் எல்லா மதங்களும் சொல்லுகின்றன! இடையில் எல்லா மதத்திலும் அதை தவறாக திரிப்பவர்கள் இருக்கிறார்கள், அது போலவே ஹிந்து மதத்திலும்! திரிப்பவர்களை ஒழிப்போம், சட்ட ரீதியாவோ அல்லது நம் செயலாலோ!

நன்றி,

நா ஜெயசங்கர்

ஓகை said...

இந்து கோவில்களுக்குள் அவர்களுடைய மாற்றுமத நண்பர்கள் நுழைய முடியாமலிருப்பது சில இந்துக்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. சில இந்துக்களுக்கு இருக்கும் இந்த எண்ணத்தில் மறைபொருளாக இருக்கும் பெருந்தன்மை எனக்கு பெருமையாக இருக்கிறது.

ஆனால்,

தன் வீட்டுக்குள் தனக்கு வேண்டியவர்களை தங்கு தடையின்று அனுமதித்து உபசரிப்பதைப் போன்றே தன் கோயில்களும் மாறவேண்டும் என்று நினைப்பதில் எனக்கு நெருடல் இருக்கிறது. கோவில்களை வழிபாட்டு இடமாக மட்டுமே நான் பார்க்கிறேன். வழிபாடு தொடர்பான எந்த நல்ல மாற்றமும் வரவேற்கக் கூடியது. இது வழிபாடு தொடர்பானது அல்ல என உறுதியாகக் கூற முடியும்.

மாற்று மதத்தினரை நம் கோவில்களுக்கு வரவேற்பதின் நோக்கம்

1.நம் மதத்தின் அருமை பெருமைகளை அவர்களுக்குக் காட்டுவது. - இது அவர்களை சிறுமை படுத்துவது மற்றும் மறைமுகமான மதமாற்று முயற்சி. இது இந்து மத ஆர்வலர்கள் செய்வது. உடன்பட இயலாது.

2.இந்து நாத்திகர்கள் இதை வலியுருத்துவதின் நோக்கம் எனக்குப் புரியவில்லை. எப்போதும் இந்து மதத்தை சிறுமைப் படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள் மாற்றுமதத்தினர் அங்கு செல்லவேண்டும் என்று கூறுவதை இக்கருத்துக்கு ஆதரவானதாக எடுத்துக் கொள்ள முடியாது.

உங்கள் சர்வே இறை நம்பிக்கையுடைய இந்துக்களிடம் மட்டுமே நடத்தப்பட்டிருந்தால் மட்டுமே இதை ஒரு பொருட்டாக மதிக்க முடியும். ஆனால் அதற்கு சாத்தியக்கூறு இருக்கிறதா என்று தெரியவில்லை. உங்கள் கருத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானோர் இந்துமத நாத்திகர்களாக இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

பி.கு1: என் கருத்துக்கள் மாற்று மதத்தினரை இந்து கோவில்களில் அனுமதிப்பது தொடர்பானது மட்டுமே.

பி.கு2: இப்பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல விரும்புகிறவர்கள் இங்கு நான் சொன்ன எல்லா கருத்துகளுக்கும் பதில் சொல்ல வேண்டுகிறேன்.

நங்கநல்லூர் மூத்த அறிவாளி said...

வி.த.பீப்பிள் ஐயா,

நீங்கள் திருநீறு பூசுபவர் தானே ? எதற்கு இந்து மதம் சேர்ந்தவர் என்பதால் தானே ?

எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்று திருநீறுபூசாமல் இருக்கிறீர்களா ?

ஒரு கிறித்துவரோ, இஸ்லாமியரோ உங்கள் கையால் திருநீறு கொடுத்தால் வாங்கி பூசிக் கொள்வார்களா ?

பிறகு ஏன் சமத்துவ கோஷம் ?

யாரோ ஒரு கிறித்துவரோ, இஸ்லாமியரோ வர ஆசைப்படுகிறார் என்பதற்காக எல்லோருக்காகவும் திறந்துவிட முடியுமா ?

ஓகை ஐயா சொல்வது சரிதான்.
சூப்பர்

ஓகை said...

//2.இந்து நாத்திகர்கள் இதை வலியுருத்துவதின் நோக்கம் எனக்குப் புரியவில்லை. எப்போதும் இந்து மதத்தை சிறுமைப் படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள் மாற்றுமதத்தினர் அங்கு செல்லவேண்டும் என்று கூறுவதை இக்கருத்துக்கு ஆதரவானதாக எடுத்துக் கொள்ள முடியாது.//

இவ்வாக்கியங்களை தவறாகப் புரிந்து கொள்ளுவதற்கு இடமிருக்கிறது. இங்கு ஒரு கமா விட்டுப்போய்விட்டது. தறுக்கு மன்னிக்கவும். இப்படிப் படிக்கவும்.

2.இந்து நாத்திகர்கள் இதை வலியுருத்துவதின் நோக்கம் எனக்குப் புரியவில்லை. எப்போதும் இந்து மதத்தை சிறுமைப் படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள், மாற்றுமதத்தினர் அங்கு செல்லவேண்டும் என்று கூறுவதை இக்கருத்துக்கு ஆதரவானதாக எடுத்துக் கொள்ள முடியாது.

We The People said...

ஓகை ஐயா,

//தன் வீட்டுக்குள் தனக்கு வேண்டியவர்களை தங்கு தடையின்று அனுமதித்து உபசரிப்பதைப் போன்றே தன் கோயில்களும் மாறவேண்டும் என்று நினைப்பதில் எனக்கு நெருடல் இருக்கிறது. கோவில்களை வழிபாட்டு இடமாக மட்டுமே நான் பார்க்கிறேன். வழிபாடு தொடர்பான எந்த நல்ல மாற்றமும் வரவேற்கக் கூடியது. இது வழிபாடு தொடர்பானது அல்ல என உறுதியாகக் கூற முடியும்.//

ஐயா, நன்பிக்கை உள்ளவன் வணங்கட்டும், இல்லாதாவன் உள்ளேயே வரப்போவதில்லை, அப்படி வந்தால் பாதிப்புள்ளதாக நான் நினைக்கவில்லை. அப்படி வந்ததால் நம் ஹிந்து மதம் குறைந்து போகாது என்று நிச்சயமாக நம்புகிறேன்.

//மாற்று மதத்தினரை நம் கோவில்களுக்கு வரவேற்பதின் நோக்கம்

1.நம் மதத்தின் அருமை பெருமைகளை அவர்களுக்குக் காட்டுவது. - இது அவர்களை சிறுமை படுத்துவது மற்றும் மறைமுகமான மதமாற்று முயற்சி. இது இந்து மத ஆர்வலர்கள் செய்வது. உடன்பட இயலாது.//

இந்த பதிவின் மூலம் மந்திரி வயலார் ரவி குருவாயூரப்பன் மேல் நம்பிக்கையுடன் தன் பேரப்பிள்ளைக்கு முதல் சோறு அளிக்கவே வந்தார், அந்த பிள்ளையின் தந்தையும் ஒரு ஹிந்து, தாத்தாவும் ஹிந்து, தாய் வேற்றுமதம் என்ற காரணத்திர்காக அந்த பிள்ளையை கேவலப்படுத்துவது சரியல்ல! அது போல ஹிந்து மதத்தின் மேல் நம்பிக்கையில்லை என்றால் அவர்கள் குருவாயூர் வந்து முதல் உணவு அளிக்கவேண்டிய காரணம் இல்லை, அவர்கள் தன் இல்லத்திலேயே கொடுத்திருக்ப்பர்களே!!! ஆகையால் இந்த பதிவின் நோக்கத்தின் அடிப்படை வைத்து ஆராயும் போது உங்கள் வாதம் சரியாக படவில்லை!!!

அது போல நம்பிக்கை இல்லாதவர்கள் வந்து அவதூறு செய்வார்கள், சிறுமைபடுத்துவார்கள் என்றால் அவர்கள் சுட்டிக்காட்டுவது உண்மையில் சிறுமையெனில் அதை திருத்திக்கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம் தானே!! நம் தவறுகளை களைந்து கொள்ள??

அது போல வேற்று மதக்காரரான கே.ஜே. ஏசுதாஸை வேற்று மதம் என்று ஒதுக்கியிருந்தால் இப்படிப்பட்ட ஹிந்து மத, பக்தனை நாம் இழந்திருப்போமே!! ஆகையால் வேற்று மதத்தார் கோவிலில் விடுவதால் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.

//2.இந்து நாத்திகர்கள் இதை வலியுருத்துவதின் நோக்கம் எனக்குப் புரியவில்லை. எப்போதும் இந்து மதத்தை சிறுமைப் படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள் மாற்றுமதத்தினர் அங்கு செல்லவேண்டும் என்று கூறுவதை இக்கருத்துக்கு ஆதரவானதாக எடுத்துக் கொள்ள முடியாது.//

நான் நாத்திகன் ஆல்ல, ஆதலால் இதற்கு பதில் என்னால் சொல்ல இயலாது! இதற்கு நாதிக்கன் பதில் சொல்னால் நன்றாக இருக்கும்.

//உங்கள் சர்வே இறை நம்பிக்கையுடைய இந்துக்களிடம் மட்டுமே நடத்தப்பட்டிருந்தால் மட்டுமே இதை ஒரு பொருட்டாக மதிக்க முடியும். ஆனால் அதற்கு சாத்தியக்கூறு இருக்கிறதா என்று தெரியவில்லை. உங்கள் கருத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானோர் இந்துமத நாத்திகர்களாக இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.//

நான் இறை நம்பிக்கை உள்ளவன்!

நன்றி,

நா ஜெயசங்கர்

Anonymous said...

//அது போல வேற்று மதக்காரரான கே.ஜே. ஏசுதாஸை வேற்று மதம் என்று ஒதுக்கியிருந்தால் இப்படிப்பட்ட ஹிந்து மத, பக்தனை நாம் இழந்திருப்போமே!! //

அஹா ஏசுதாசன் எப்பயா ஹிந்து பக்தனான்?
சங்கரு, நீ ஓவரா காமெடி பன்ற .

//நான் இறை நம்பிக்கை உள்ளவன்!//
நீ ஹிந்துவா?, கடைசியா நீ எப்ப கோவிலுக்கு போன?

We The People said...

//அஹா ஏசுதாசன் எப்பயா ஹிந்து பக்தனான்?
சங்கரு, நீ ஓவரா காமெடி பன்ற .//

ஆமாம் உனக்கு எல்லாம் காமெடியா தான் தெரியும், அதுக்கு நான் என்ன செய்ய...

//நீ ஹிந்துவா?, கடைசியா நீ எப்ப கோவிலுக்கு போன?//

வாங்க முகம் காட்ட பயப்படும் அனானி, நான் கடந்த 19ஆம் தேதி சபரி மலை போய்வந்தேன்... வேற மேட்டர் வேனுமா??

வெற்றிவேல் said...

அன்பு சர்வேசன்,

உங்களது முதல் பதிவில் சில கருத்துக்களை எழுதினேன்.

இது எப்படி பிராமினிகல் அர்ரகன்ஸ் அல்ல. இது ஆதிக்க சாதி அர்ரகன்ஸ் என்று எழுதினேன். நீங்கள் கண்டுகொள்ளாமல் மீண்டும், பிராமினிகல் அர்ரகன்ஸ் என்றே தலைப்பிட்டு கருத்து கேட்கிறீர்கள்.

ரீடிஃபில் குருவாயூர் நம்பூதிரியின் பேட்டியை படித்தீர்களா? அதனை விட வேறென்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு?

இது பிராமினிகல் அர்ரகன்ஸ் அல்ல.

ஒரு பணக்காரனிடம் வேலை செய்பவனுக்கு இப்படி இப்படி செய் என்று பணக்காரன் உத்தரவு போடுகிறான். அந்த வேலையை செய்பவன் பணக்காரன் சொன்னதை செய்கிறான். அந்தவேலைகளால் ஊரில் உள்ள மற்றவர்களுக்கு கோபம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஊரில் உள்ளவர்களிடம் நல்லபெயர் வாங்கவேண்டும் என்று நினைக்கும் பணக்காரன் என்ன செய்வான்? வேலைக்காரனை போட்டு உதைப்பான். வேலைக்காரன் திருப்பி சொல்லுகிறான். "அய்யா நீதானே இப்படி என்னை செய்யச்சொன்னாய்?"

ஏழை சொல் அம்பலம் ஏறுமா? ஊருக்கு முன்னால் வேலைக்காரனை வில்லனாக்கி, பணக்காரன் நல்லவனாகிவிடுவான்.

எய்தவன் இருக்க அம்பை நோகாதீர்கள்.

அதுதான் இங்கே நடக்கிறது. பார்ப்பனன் பூசாரி. பார்ப்பனனிடம் ஆதிக்க சாதி சொன்னதை அவன் செய்கிறான். அதனை இங்கே பிராமினிகல் அர்ரகன்ஸ் என்று ஆதிக்க சாதியினர் எழுதுகின்றனர்.

திருப்பி திருப்பி சொல்வதன் மூலம் இங்கே ஒரு பொய் உண்மையாகிக் கிடக்கிறது.

Anonymous said...

//வாங்க முகம் காட்ட பயப்படும் அனானி//

முகம் காட்டவில்லை என்றால் என்ன. கேள்வி நியாயமானது தானே. உண்மையாகவே எசுதாஸ் ஹிந்து பக்தனா என்பதை நீங்கள் விளக்கவில்லை.

//நீ ஹிந்துவா?, கடைசியா நீ எப்ப கோவிலுக்கு போன? நான் கடந்த 19ஆம் தேதி சபரி மலை போய்வந்தேன்..//

சிறு தெளிவுக்காக அந்த கேள்வியை கேட்டேன். இறை பக்திக்கு கோவிலுக்கு போக வேண்டும் என்பது அவசியமற்றது. கோவிலுக்கு போகாத லிஸ்டில் நீங்கள் வருகிறீர்களோ என்றுதான் சந்தேகம்.

இருந்தாலும் உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.

அது இருக்கட்டும்,
வாவர் மசுதி போனிங்களா?, சபரி மலை சாஸ்தா தரிசனம் நன்றாக கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

SurveySan said...

Vetrivel,

Did you read this?
////The Head Priest of the Guruvayur Temple in Kerala has said that non-Hindus cannot enter the temple. Priests and religious heads had met in Thrissur on Thursday to discuss who can be allowed inside the temple after the recent controversy around the purification ceremony conducted in the Guruvayur Temple following the visit of Union Minister Vayalar Ravi’s son Ravi Krishna. The temple authorities had objected to Krishna’s visit because his mother, Mercy, is a Christian and claimed that his visit had defiled the temple, which is the abode of Lord Sree Guruvayurappan. Over 70 percent of the priests who attended the meeting were against the entry of non-Hindus.
///

வெற்றிவேல் said...

http://in.rediff.com/news/2007/jun/06inter1.htm

'Why don't they bring a law to allow everyone into a temple?'

Prem Panicker

June 06, 2007
As the controversy over the purification ritual at the Guruvayur temple seethes, Rediff.com's Prem Panicker spoke to the Chief tantri (priest) of the famed shrine, Chennas Raman Namboodiripad, to understand the reasons for the conflict between temple tradition and apparent modernity. The concluding segment of a two-part interview:
Part 1 of the Interview: 'I don't make the rules at Guruvayur'

Kerala Dewaswom Minister G Sudhakaran has gone beyond the question of humiliation, and raised the larger question of your entitlement to pronounce verdict on who is a Hindu and who is not, and to decide who can enter the temple and who should not; that your position as chief priest has made you arrogant; that you are enriching yourself at the expense of the temple and behaving in dictatorial fashion...

Mr Sudhakaran has been saying all sorts of things; he used abusive language recently while referring to me and asked if I could prove I was a Hindu. I cannot respond in similar language -- that is not my culture.

The simple answer to that is, I don't have to -- the Dewaswom Board did that, when it appointed me tantri to Sri Guruvayurappan.

There are some implications to being named a tantri. We are supposed to be in a paternal relationship -- pithrusthanam, the position of father -- to the deity; we are in the position of being the deity's local guardians here on earth and the interests of the deity are paramount. Even as per the Dewaswom Act, that governs the functioning of temples, that principle is enshrined.

What it then means is that we are supposed -- no, not just supposed, we are mandated -- to run the temple as per the prescribed rules, handed down through the generations. We are supposed to be the final arbiters on all matters of ritual.

I say that not in arrogance, but as a matter of fact -� that is what is written in the Dewaswom Act; when this position was legally challenged, the Supreme Court in fact supported that stand and confirmed that as far as the rules and rites and rituals governing a temple are concerned, the tantri's word has the force of law.

As to the question of who I am to decide who can enter the temple and who cannot, where have I ever said I am the deciding authority? There are laws governing these things; the Temple Entry Proclamation Act of 1936 permits entry to all those who are Hindus.

As per its provisions, and the provisions of the Guruvayur Dewaswom Board, if there is a question of your religious orientation, you can go to the Arya Samajam office in Kozhikode, and get a certificate from them, and that is enough.

It is not my business to enforce who enters the temple and who does not -- that is the business of the Dewaswom Board officials.

Since there was a problem over Ravikrishna's entry in 2000, the board officials should have, when Ravikrishna came to the temple for the ceremony, checked to see that all was in order. After all, he is the son of a minister; it is not as if he landed up here unannounced.

It is the Dewaswom Board that therefore decides or should decide to exclude or allow anyone; my responsibility, as I keep pointing out, is to take prescribed action if something has been done that, as per the existing laws or rules governing the temple, is wrong.

And that is all I have done, so I don't understand why I am being made the villain here.

And then, of course, there is the question of my enriching myself. How? People imagine that I get paid huge amounts -- but the fact is, I do not.

The position of chief priest, that I perform, is a duty, not a right.

When our family was given this duty, no remuneration was fixed, and we still do not get paid for what we do.

Does the Dewaswom Board pay us a salary? No. Do we get a share of the money the devotees donate? No.

There is only one thing we are entitled to. There is a puja we perform -- the Udayasthamana Puja. To conduct it, a devotee has to pay Rs 50,000 minimum, I think. As per tradition, when we perform that puja, we get a share of the ingredients that are used: a little salt, a coconut, a portion of the vegetables, rice, and so on.

Earlier, we actually got all that in kind. More recently, the Dewaswom gives us that in cash, as per current value. So, each month, we get some money for that -- and the maximum we get is about Rs 2,000.

That is all we get -- two thousand rupees, for performing our duties as chief priest and local guardian to Lord Guruvayurappan; this, in one of the richest temples in India. We do not get anything more than that - a fact the minister, and everyone else claiming we are enriching ourselves, could have easily verified.

In the case of the renowned singer K J Yesudoss also...

What is the case of K J Yesudoss? I have read in the papers that he has repeatedly said he is a devotee of Lord Guruvayurappan. In that case, where is the problem?

All he has to do is go to the Arya Samaj, tell them he is a devotee, that he believes in idol worship, get a certificate, which takes five minutes, and then he can enter the temple any time he wishes, as many times as he wishes.

So where is the problem? If there is a problem it is certainly not from my side -- if he does enter the temple on those grounds, I am not going to perform a punyaham.

These two instances appear to have triggered a larger debate. People I have spoken to these last couple of days repeatedly made the point that times have changed and that religious observations, like everything else, should change with these times. They say that the priests are tradition-bound; that they are resistant to change...

I don't know what they want me to do. When they say I am tradition-bound, what does that mean? For instance, there is a tradition that a certain type of music has to be played for certain pujas.

Since times have changed, am I supposed to change that music; am I supposed to say that the chenda and maddalam and nadaswaram should be replaced with the guitar?

What exactly do they want me to do?

Changing times have brought changed rules. For instance, lower caste Hindus were not allowed into the temple, not so long ago -- this year, we are in fact celebrating the platinum jubilee of the Temple Entry Proclamation of 1936, that allowed all Hindus irrespective of caste to enter the temple.

That was a change that came about thanks to changing times. How did it come about? Because it was mandated by law.

In the case of this Act, the then Raja of Travancore decreed that all Hindus could enter temple. At that time, he was the authority; his decree had the force of law, and from that point on, every Hindu has in fact been allowed into the temple.

I am not resistant to reform or to change; my point is, I am not empowered to bring about that change. That has to be done by law. Sudhakaran, Vayalar Ravi, they are all powerful ministers, they are the ones who make the law.

So instead of abusing me, why don't they bring a law that says anyone can enter the temple, anyone at all?

The moment such a law is passed, I will gladly obey it. Have they tried to bring such a law and been opposed by me? No. So why do they keep saying we are tradition-bound and resistant to change?

I repeat, I have no authority to make laws, or to change the rules that govern this temple. If there is dissatisfaction with how things are, the politicians can easily correct that by changing the laws -- like every other citizen of the country, I will gladly obey.

Until then, I can only do as my tradition, my religion, the code of this temple, tells me to do -- and that is all I have in fact done.

சுருக்கமாக செய்தி எழுதினால் அப்படித்தான் இருக்கும்..

SurveySan said...

Vetrivel, either rediff is lying or CNN-IBN is lying

CNN-IBN reported,

//The Head Priest of the Guruvayur Temple in Kerala has said that non-Hindus cannot enter the temple.//

hmm. I am glad to see that, head priest has no objection in allowing non-Hindus.
so, lets enact the damn law and give equal rights to all humans.

வெற்றிவேல் said...

ரீடிஃப் - குருவாயூர் நம்பூதிரியின் பேட்டி.
சிஎன் என் - அவர்களே எழுதிய செய்தி.
எது உண்மை என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

SurveySan said...

//ரீடிஃப் - குருவாயூர் நம்பூதிரியின் பேட்டி.
சிஎன் என் - அவர்களே எழுதிய செய்தி.
எது உண்மை என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். //

என்னமோ போங்க. ஒண்ணும் பிரீல.

இந்தப் பதிவில் அழகா விளக்கியிருக்காரு பாருங்க, என்ன பண்ணனும்னு.

நந்தா said...

இதற்கு ஓரளவு தொடர்புடையதாய் நான் எழுதிய பதிவு இது. சர்வே நடந்ததிலிருந்து இப்போது வரை இது குறித்து ஏற்பட்ட விவாதங்களையும், சர்சைகளையும் தள்ளி நின்று கவனித்துதான் வருகிறேன். அவற்றில் ஒரு சிலவற்றுக்கு ஒரு வேளை இதில் பதில் கிடைக்கலாம்.

http://nandhakumaran.blogspot.com/2007/06/blog-post_27.html

We The People said...

//உண்மையாகவே எசுதாஸ் ஹிந்து பக்தனா என்பதை நீங்கள் விளக்கவில்லை.//

ஹிந்து கடவுளை வணங்குபன் ஹிந்து என்று நான் கருதுகிறேன்! அவர் ஒரு சிறந்த ஐயப்ப பக்தர், எனக்கு தெரிந்தவரை அவரு குருவாயூரப்பனையும் அதே அளவுக்கு பக்தியுடன் இருக்கிறார், இதுக்கு மேல என்ன வேணும் அவர் ஒரு ஹிந்து கடவுள் பக்தர் என்று சொல்லு!

//அது இருக்கட்டும்,
வாவர் மசுதி போனிங்களா?, சபரி மலை சாஸ்தா தரிசனம் நன்றாக கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.//

அட என்ன அனானி வாவர் மசூதி போகாம சபரிமலை போனா தப்பு! முதலில் வாவரை தரிசித்த பின் தான் என் ஐயன் ஐயப்பனை தரிசித்தேன்! 48 நாட்கள் விரதமிருந்து தான் ஐயப்பன் கோவிலுக்கு போனேன் என்பது பின்குறிப்பு.

ஓகை said...

இந்தப் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:

****மிகச்சிறந்த பதிவுகளில் ஒன்று.

மனிதம் தழைப்பதைக் கண்டு
மடை திறந்தன கண்கள்.

ஆனால் மாற்று மதத்தினரை நம் ஆலயங்களில் அனுமதிப்பது தொடர்பான ஒரு கருத்துப் பிழையை இங்கு உலவவிட்டிருக்கிறீர்கள்.

விதிகளை மாற்ற முடியாததால்தான் விதிவிலக்குகள் உருவாகின்றன. யேசுதாசையும் கலாமையும் துலுக்க நாச்சியாரையும் போல அனைத்து மாற்று மதத்தினரையும் கருத முடியுமா?

நம் மதத்து மக்களில் சிலரே ஆலயப் பிரவேசத்துக்கு ஏங்கி நிற்க
பரலோகமும் சுவனமும் வீடுபேறளிக்கக் காத்திருப்பவர்களுக்கு ஏன் கைலாயமும் வைகுண்டமும் காட்ட விரும்புகிறீர்கள்?

நாம் நம்மைக் கவனிப்போம்.

//"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.
மாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்!
இப்படி ஒரு வழக்கம் தேவையா?
இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே! இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே!//

நம் கோவில்களில் ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வழக்கம் என்பதை அறியாதவரா நீங்கள்? இவையெல்லாம் ஆகமங்களில் இருக்கிறதா? காசியில் கையால் தொட்டு வணங்குவதைப் போல் காஞ்சியில் செய்ய முடியுமா?

யேசுதாசுக்கும் கலாமுக்கும் இருந்த புரிதல் உங்களுக்கு இல்லை. அர்ச்சகரைத் திருத்திய கலாம் உங்களைப் போன்றவர்களை திருத்த வேண்டும்.

என்ன செய்திருக்கிறார் கலாம்? தான் முகமதியர் என்பதை வெளிப்படுத்தி, இது உங்கள் கோவில், இது உங்கள் சட்டம், நீங்கள் இதை மதிக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம் உங்களையும் திருத்தவேண்டும்.*****

கன்னன் said...

பஉபொகூகொ என்பது ஒரு செயலின் சுருக்கமே அதன் விரிவாகமானது
"பதவி உயர்வுக்கு பொன்டாட்டியை கூட்டிக்கொடுத்தல்" என்பதாகும் இது ஒரு (எல்லோரும் அறிந்த) இனத்தில் இன்றளவும் கடிப்பிடிக்கப்படுகிறது. மேலதிகாரியை வீட்டுக்கோ அல்லது ஓட்டலுக்கோ விருந்துக்கு அழைத்து பொன்டாட்டியை சினிமாக்காரி ரேஞ்சுக்கு மேக்கப் செய்து அழைத்துப்போவான் புருஷன். அதுவே அந்த மேலதிகாரிக்கு சிக்னல் ஆகும். அதாவது நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா என்று. பிறகு நல்ல ஒரு நாளில், கூட்டிக்கொடுத்தல் நடைபெறும், நடந்த பிறகு பொன்டாட்டி வீட்டுக்குள் நுழையும் முன் தலை முழுகிவிட்டு வருவாள், இதன் பெயர் தீக்குளித்தல் ஆகும். அந்தகாலத்திலிருந்து இந்த காலம் வரை, இதன்மூலமே அதிகம்பேர் பதவி உயர்வு பெற்றனர், பெற்றுக்கொன்டு இருக்கின்றனர். அவாள் அப்படித்தான்.

SurveySan said...

Kannan,

Sambandhame ennennamo solliyirukkeenga?

Anonymous said...

豆豆聊天室 aio交友愛情館 2008真情寫真 2009真情寫真 aa片免費看 捷克論壇 微風論壇 大眾論壇 plus論壇 080視訊聊天室 情色視訊交友90739 美女交友-成人聊天室 色情小說 做愛成人圖片區 豆豆色情聊天室 080豆豆聊天室 小辣妹影音交友網 台中情人聊天室 桃園星願聊天室 高雄網友聊天室 新中台灣聊天室 中部網友聊天室 嘉義之光聊天室 基隆海岸聊天室 中壢網友聊天室 南台灣聊天室 南部聊坊聊天室 台南不夜城聊天室 南部網友聊天室 屏東網友聊天室 台南網友聊天室 屏東聊坊聊天室 雲林網友聊天室 大學生BBS聊天室 網路學院聊天室 屏東夜語聊天室 孤男寡女聊天室 一網情深聊天室 心靈饗宴聊天室 流星花園聊天室 食色男女色情聊天室 真愛宣言交友聊天室 情人皇朝聊天室 上班族成人聊天室 上班族f1影音視訊聊天室 哈雷視訊聊天室 080影音視訊聊天室 38不夜城聊天室 援交聊天室080 080哈啦聊天室 台北已婚聊天室 已婚廣場聊天室 夢幻家族聊天室 摸摸扣扣同學會聊天室 520情色聊天室 QQ成人交友聊天室 免費視訊網愛聊天室 愛情公寓免費聊天室 拉子性愛聊天室 柔情網友聊天室 哈啦影音交友網 哈啦影音視訊聊天室 櫻井莉亞三點全露寫真集 123上班族聊天室 尋夢園上班族聊天室 成人聊天室上班族 080上班族聊天室 6k聊天室 粉紅豆豆聊天室 080豆豆聊天網 新豆豆聊天室 080聊天室 免費音樂試聽 流行音樂試聽 免費aa片試看A片 免費a長片線上看 色情貼影片 免費a長片 本土成人貼圖站 大台灣情色網 台灣男人幫論壇 A圖網 嘟嘟成人電影網 火辣春夢貼圖網 情色貼圖俱樂部 台灣成人電影 絲襪美腿樂園 18美女貼圖區 柔情聊天網 707網愛聊天室聯盟 台北69色情貼圖區 38女孩情色網 台灣映像館 波波成人情色網站 美女成人貼圖區 無碼貼圖力量 色妹妹性愛貼圖區 日本女優貼圖網 日本美少女貼圖區 亞洲風暴情色貼圖網 哈啦聊天室 美少女自拍貼圖 辣妹成人情色網 台北女孩情色網 辣手貼圖情色網 AV無碼女優影片 男女情色寫真貼圖 a片天使俱樂部 萍水相逢遊戲區 平水相逢遊戲區 免費視訊交友90739 免費視訊聊天 辣妹視訊 - 影音聊天網 080視訊聊天室 日本美女肛交 美女工廠貼圖區 百分百貼圖區 亞洲成人電影情色網 台灣本土自拍貼圖網 麻辣貼圖情色網 好色客成人圖片貼圖區 711成人AV貼圖區 台灣美女貼圖區 筱萱成人論壇 咪咪情色貼圖區 momokoko同學會視訊 kk272視訊 情色文學小站 成人情色貼圖區 嘟嘟成人網 嘟嘟情人色網 - 貼圖區 免費色情a片下載 台灣情色論壇 成人影片分享 免費視訊聊天區 微風 成人 論壇 kiss文學區 taiwankiss文學區