recent posts...

Thursday, June 14, 2007

அபி அப்பா எங்கிருந்தாலும் அபி பாப்பாவுடன் மேடைக்கு வரவும்...

அபி அப்பா சார், எங்க சார் போயிட்டீங்க?

ஊர்ல எல்லாம் சுகமா? வெயில் பின்னி எடுக்குதாமே?

பாட்டு எங்க சார்?

ஜூன் 15 ஆச்சு சார். போட்டி ஆரம்பிக்கணும்.
சந்தைக்கு போணும் ஆத்தா வையும். பாட்ட அனுப்பு :)

4 பேர்ல 2 பேர் பாடல் அனுப்பியிருக்காங்க. அபி பாப்பா பாட்டு வரல, சர்வோதயானின் பாட்டும் வரல. பத்துல, மீதி ஆறு இடங்களும் காலியா வேற இருக்கு.
நான் ரெண்டு மூணு எடத்த ஜானு மாதிரி பாடி ஃபில் பண்ணலாம். மீதி எடத்த எப்படி ரொப்பரது?

குட்டீஸுக்கு இப்படி பஞ்சமாயிடுத்தே இணையத்துல?

1) அபி பாப்பா ( வயது ? )
2) மாதினி (வயது 9)
3) அமுதசுரபி (வயது 8)
4) சர்வோதயான் (வயது ?)
5)
6)
7)
8)
9)
10)

அபி சார் டக்குனு அனுப்புங்க. சர்வோதயான் அப்பா சார், எங்க இருக்கீங்க? டக்குன்னு அனுப்புங்க.

இன்னும் ரெண்டு நாள் டயம் தரேன். திங்கள் கிழமை போட்டி ஆஆஆரம்பம்! :)

போட்டிக்கு வந்த பாடல்களில் ஒண்ணு சேம்பிளுக்கு இங்கே.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாடலைபின்னி பெடலெடுத்திருப்பதைக் கேளுங்கள்.

இதக் கேட்டாவது, தங்கமணிகளும், ரெங்கமணிகளும் வீரு கொண்டு எழுந்து, தன் வீட்டு குட்டீஸை அடித்தோ அரவணைத்தோ, பாடச் செய்து, பாடலை அனுப்புங்கோ :)

பி.கு: அதுக்கூன்னு அடிக்காதீங்க. சும்மா டமாசுக்கு சொன்னேன்.

பி.கு: முக்கிய பிரமுகர் சிவாஜியை புறக்கணித்த விஷயம் படிச்சீங்களா?

பி.கு: Brahminical - Final Take - சொல்லாதவங்க சொல்லுங்க. சூடான சுவையான திறமையான விவாதங்கள் போயிட்டிருக்கு.

10 comments:

நாமக்கல் சிபி said...
This comment has been removed by the author.
SurveySan said...

poorna இன் போட்டி?

குட்டீஸா அவங்க? ஒதைக்கப்போறாங்க. :)

நாமக்கல் சிபி said...

//குட்டீஸா அவங்க? ஒதைக்கப்போறாங்க//

குட்டீஸ்க்காக முதல் குரல் கொடுத்து சிறார் வலைப்பூ திரட்டி தொடங்கக் காரணமாக இருந்தவர்.

இப்ப அவர் குரலை சேர்த்துக்கக் கூடாது!

இது ஒண்ணும் கிரீமி லேயர் கிடையாதே!

காலியான சீட்டுக்குத்தானே நாமினேட் பண்ணுறேன்!

நாமக்கல் சிபி said...

சர்வேசன் சீரியஸா ஒரு காமெடி நடந்து போச்சு! மன்னிக்கவும்!

:)

எனது முதல் பின்னூட்டத்தை நீக்கிக் கொல்கிறேன்!

அபி அப்பா said...

சர்வேசன்! நான் நேற்று முதுலெஷ்மியின் உதவியோடு சர்வோதயன் பாட்டு பதிவுசெய்தாகிவிட்டது.ஆனால் அது அப்லோட் செய்வதில் மிகுந்தசிரமம்கொடுப்பததால் சென்ஷியினுதவியோடு சீக்கிரமனுப்ப ஏற்பாடுசெய்கிறேன். போட்டி முடிந்தாலும் சரி நானனுப்பிவைக்கிறேன்.சிரமத்துக்கு வருந்துகிறேன். அபிபோட்டியில்கலந்துக்கவில்லை ஏனனில் குரல் ஒத்துழைக்கவில்லை.ஆனாலும் அவளின் நெருங்கிய சினேகிதி மாதினி கலந்து கொள்வதே அவளுக்கு மிக்கமகிழ்வு என்று சொல்லசொன்னாள்!

MyFriend said...

சர்வேசா, இந்த பாப்பா கலந்துக்கலாமா? http://engineer2207.blogspot.com/2007/06/180.html

SurveySan said...

My Friend, Kalandhukkalaam.

thanks much.

SurveySan said...

Sibi,

////சர்வேசன் சீரியஸா ஒரு காமெடி நடந்து போச்சு! மன்னிக்கவும்!/////

no worries :))

SurveySan said...

My Friend, kalakkal!

SurveySan said...

பாடலை அனுப்பாதவங்க அனுப்புங்க.

செவ்வாய் காலை இந்திய நேரத்தில், சர்வே வழங்கப்படும் :)

அப்பரம் அழப்படாது.