ரொம்ப நாளா மண்டைய கொடஞ்சு அலசி ஆராஞ்சு ஒரு வழியா, ஒரு HDTV ஆர்டர் பண்ணியாச்சு.
உலக கால்பாந்தாட்டம் போன வருஷம் வந்த போது ஆரம்பிச்ச ஆராய்ச்சி, இப்பத்தான் முடிஞ்சது.
Plasma TV, LCD TV, 1080i, 1080p, 720p, DLP, இப்படிப் பலப் பல வெரைட்டி/டெக்னாலஜி கொட்டிக் கெடக்கு மார்க்கெட்ல.
இதுல Plasma தான் உயர் ரகம். அதுக்கேத்த மாதிரி விலையும் அதிகம்.
DLP வெல கம்மி, அதுக்கேத்த மாதிரி, க்வாலிட்டி ரொம்பவே கம்மி.
நேத்துதான் கடைக்குப் போய், ஆராய்ச்சிய முடிச்சு, பொருள மேலும் கீழும் பாத்து, மனசுக்கு முழு திருப்தி வந்ததும், ஆன்லைன்ல போய் ஆர்டர் பண்ணேன்.
கடைக்கு போறது, பொருள பாக்க மட்டும்தான்.
கடையில வாங்கினா, செலவு அதிகம். ஆன்லைன்ல, $300 கம்மியா கிடைச்சுது.
எல்லா பொருளும் வாங்கரதுக்கு முன்னாடி, கடையில போய் ஒரு தரவ பாத்துட்டு, பொறுமையா ஆன்லைன்ல வாங்கரது, நம்ம ஆளுகளுக்கு பழக்கமான ஒண்ணு. நீங்க எப்படி?
இந்த Plasma, LCD, DLP ஆராய்ச்சி பண்ணினவங்க, நீங்க கடைசில எத்த வாங்கினீங்க/வாங்குவீங்கன்னு பின்னூடுங்களேன்.
நான் எத வாங்கினேன்னு தெரியணுமா?
இதத்தான் வாங்கினேன்:
கடைல பாக்கும்போது அட்டகாசமா இருந்தது. வீட்டுக்கு வந்தப்பரம் போட்டு பாத்துட்டு சொல்றேன் முழு விவரங்களை.
பி.கு: சுகராகமே, ஆயிரம் கண், வசீகரா நேயர் விருப்பம் பாத்தீங்களா. நான் சுகராகமே பாடிட்டேன். நீங்க?
குழந்தைகளுக்கான போட்டிக்கு பெயர் கொடுக்காதவங்க கொடுங்க. இதுவரை பாடல் அனுப்பியவர்களுக்கு நன்றி. குட்டீஸ் கலக்கோ கலக்குன்னு கலக்கியிருக்காங்க.
14 comments:
விஷயமுன்னு ஒண்ணும் ரொம்ப அலசலை.
ப்ளாஸ்மா 42 இஞ்சு (ஃபிலிப்ஸ்)வாங்கியாச்சு ரெண்டு வருஷம் முன்னாலே. வாங்குன மறுமாசமே விலை
கொஞ்சம் கீழே போயிருச்சு. நமக்கு எப்பவுமே இப்படித்தான் வாய்க்கும்(-:
இப்ப என்னன்னா 60 இஞ்சு வந்துருக்கு கடைகளில்(-:
Samsung LNT4042 (720p) வாங்கலாமுன்னு கிட்டத்தட்ட முடிவு பண்ணியாச்சு. நம்ம பசங்க தான் வாங்குறதோ வாங்குற 1080p வாங்கிப்போடுன்னு உசுப்பேத்துறாய்ங்க. ஆமாம், நம்ம பாக்குறது விஜய் டிவி, வுட்ட $2 டிவிடி. இதுக்கு 1080p எல்லாம் கொஞ்சம் ஓவர் இல்ல?
துளசி,
பிலிப்ஸ் (அக் எப்படி போடறீங்க? :) ) நல்ல டி.வி தான். ஆனா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சொத்து இல்ல எழுதி கேட்டிருப்பாங்க? :))
exsport,
1080p கண்டிப்பா 720pய விட ரொம்ப சிறந்ததா இருக்கும்.
ஆனா, ப்ராட்காஸ்ட் யாரும் 1080pல செய்யறது இல்ல.
ப்ளூ-ரே, HDDVD போன்ற ப்ளேயர்ஸ் வாங்கி, அந்த பார்மேட்ல பாத்தீங்கன்னா, நச்சுனு இருக்கும்.
1080p முழு வீச்சுல ப்ராட்காஸ்டிங் வர ரெண்டு மூணு வருஷம் ஆகலாம்.
டி.விக்கும் நீங்க ஒக்கார தூரத்துக்கும் இருக்கர தூரத்த வச்சு, உங்க டி.வி 42, 46, 50, 56 இஞ்சான்னு முடிவு பண்ணுங்க.
8 - 10 பத்தடி - 42" போதும்.
10 - 16 - 46"
16 - 20 - 50"
DLP வாங்காதீங்க. பட்ஜெட் ரொம்ப கம்மியா இருந்தா, 56" கண்டிப்பா வேணும்னு நெனச்சீங்கன்னா DLP வாங்கரத பத்தி யோசிங்க.
என் நண்பர்கள் சிலர் projector வாங்கியிருக்காங்க. நல்லாதான் இருக்கு. ஆனால், வாரத்துக்கொருதரம் படம் பாக்க மட்டும்தான் சரியாவரும் இதெல்லாம்.
நமக்கு வீட்ல இருக்கர நேரமெல்லாம் டி.வி பாத்துட்டே இருக்கணும்.
ஃ போடறதுக்கு கலப்பையில் q அடிச்சா வரும்.
ஆமாம், பாதி வீட்டை வித்துதான் டிவி வாங்குனோம்:-))))
கோபாலுக்கு ரெக்ளைனர்லே சாஞ்சுக்கிட்டு ரக்பி மேட்ச் பார்க்கணுமாம்.
அதான்...................
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அடடா, இவ்ளோ நாளா தெரியாம போச்சே.
ஃக்கித் தள்ளியிருப்பேனே :)
ரெக்ளைனர்ல சாஞ்சு, ஸ்போர்ட்ஸ் பாக்க பிடிக்காது எனக்கு. சினிமா வேணா கண்கொட்டாம பாப்பேன் :)
ஆஹா!!!
கலக்குங்க!! கடைகளுக்கு போகும் போது பாத்திருக்கேன் இந்த டிவிகள் எல்லாம்!!!
பார்த்தா பார்த்துக்கிட்டே இருக்கலாம்,கண்ணை விட்டு எடுக்கவே முடியாது!! அதுவும் இந்த டிவில எல்லாம் எதாவது அனிமேஷன் படம் போட்டு விட்டிருவாங்க!! என்னால நகரவே முடியாது!!!
வாழ்த்துக்கள்!! :-)
அட.. இந்த ரிசர்ச்செல்லாம் செஞ்சு மண்டைய உடைச்சுகிட்டு கடைசியா வாங்கினது...
Samsung Bordeaux LA 32R71B
இது என் ரெண்டாவது சாய்ஸ்தான்.. ஆனா இதே கான்பிக் சோனி ப்ராவியா விலை லட்சத்துக்கு சொச்சம் கம்மினோன்ன ஆட்டோமேடிக்கா சாம்ஸங் பேனாயிட்டேன்.. :(((((
32இன்ச் அல்லது அதற்கு கம்மினா எல்.சி.டி...
மேலேன்னா ப்ளாஸ்மா.. இதுதான் நான் பண்ண ஆராய்ச்சில புரிஞ்சுகிட்டது. ரூம் சைஸ் சின்னதா இருந்தா குட்டி சைஸ் பெட்டர். பெரிய டிவின்னா அவ்ளோ நல்லா இருக்காது..
ப்ளாஸ்மால காண்ட்ராஸ்ட் அதிகம். ஆனா வேகமா எல்.சி.டி கிட்டக்க வந்துகிட்டிருக்கு...
அப்புறம் என்ன இருந்தாலும், நம்ம ஊர் நார்மல் கேபிள் பாக்கணும்னா, குவாலிட்டில சாதா CRT டிவி தான் டாப்.
DLP நம்ம ஊர்ல அவ்வள்வு பாப்புலர் இல்ல. சோனில ரெண்டுகெட்டானா WXGA பானல்னு வேற தனியா விக்கிறாங்க.
ஆஹா!!!
இவ்வளவு நாளா இதைப்பத்தி தெரிஞ்சிக்கணும் இருந்தேன்...
ம்ம்ம்... மக்கள் என்ன சொல்றாங்கனு பார்க்கலாம்... அப்படியே சுட்டி குடுத்த நண்பர்களுக்கும் பரிந்துரைக்கலாம்..
animal planet மாதிரி சேனல்களை பார்த்துகிட்டே இருக்கலாமே!
cvr,
நானும் பாத்து பாத்து இப்பவா அப்பவான்னு தள்ளி போட்டு ஒருவழியா வாங்கிட்டேன்.
நீங்களும் கோதால கலந்துடுங்க :)
வாழ்க்கை வாழ்வதற்க்கே.
இராமநாதன்,
samsung கொடிகட்டி பறக்குது HDTV யுத்தத்துல.
32" போதுமா? :)
42 பெருசுதான். அதுவும் கூட, 56" பக்கத்துல வச்சு பாத்தா சின்னதா தெரியுது.
கையில ஒண்ணு கெடச்சா, இல்லாதத தேடி அலையர நம்ம வாழ்க்கைய என்னத்த சொல்ல :)
LCD is equally good these days. Toshibas new line up of REGZAs are brilliant.
தென்றல்,
//animal planet மாதிரி சேனல்களை பார்த்துகிட்டே இருக்கலாமே! //
கண்டிப்பா. வாங்கரதே அதுக்குத்தான்.
டிஸ்கவரில planet earthனு ஒண்ணு வருது. அடேங்க்ப்பா ரகம்!
TV வந்தாச்சு.
சூப்பரோ சூப்பர்.
ரெண்டு நாள்ள நாலு படம் பாத்தாச்சு.
கண்டிப்பா வாங்கலாம் Toshiba/Regza.
நான் கியாரண்டி!!!! :)))))))
Post a Comment