recent posts...

Wednesday, September 02, 2009

சோனியா வாழ்க, காங்கிரஸ் வாழ்க வாழ்க!

ராய் பரேலி - அரசியல் விஷயங்கள் ஃபாலோ பண்ணாதவங்களுக்கும் இந்த பேரு தெரிஞ்சிருக்கும். உத்தர் பிரதேஷத்தில் இருக்கும் ஒரு நகரம்.

இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ், இந்தத் தொகுதில நின்னுதான் எம்பியானாரு.
1960ல் அவரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தி, இதே தொகுதியில் நின்னு எம்பியானாங்க.
இதே தொகுதியில் நின்னு கெலிச்சுதான், ப்ரதமராகவும் ஆனாங்க. பிற்காலத்தில் தகராறெல்லாம் ஆனபோது, எமெர்ஜென்ஸி போட்ட ஆட்டியதும், இந்தத் தொகுதி கைவசம் இருந்த காலத்தில்தான் அரங்கேறியது.
இம்மாம் விஷயம் ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கர மாதிரி எடுத்து வுடறேனே, எல்லாம் தெரிஞ்ச ஏகாமபரம் நான்னு நெனச்சுக்காதீங்க. எல்லாம் விக்கியாரின் துணைதான்..

ராய் பரேலியில் பலப் பல எலெக்ஷணில் ஜெயிச்ச இந்திரா அம்மையாருக்குப் பிறகு 2004ல் இந்த இடத்தில் போட்டியிடுவதை சோனியா அம்மையார் தொடர்ந்தார். இப்ப கடைசியாக கடந்த தேர்தலிலும், சோனியா ராய் பரேலியில் வெற்றி பெற்றுள்ளார்.

இப்படி, பல்லாண்டு பல்லாண்டு பலப்பல பல்லாண்டு, காங்கிரஸ் ஆட்சி புரிந்த ராய் பரேலி, அமோகமான ஊரா மாறியிருக்கணும். 1967லிருந்து ஒவ்வொரு தேர்தல் வெற்றியின் போதும், பத்து தெருவுக்கு ரோடும், ஏதாச்சும் ஒரு தொழிற்சாலையையும் தொடங்கியிருந்தாலே, ஊரு இந்நேரத்துக்கு சொர்கபுரியாயிருக்கும், மக்களும் சுபிட்சமாயிருந்திருப்பாங்க. பத்தா குறைக்கு, ப்ரதம மந்திரியின் தொகுதி வேற இது. குறைந்தது 20 ரோடு, ரெண்டு தொழிற்சாலையாவது வந்திருக்கணுமே.

இவ்ளோ காலமா, இப்படி மாத்தி மாத்தி ஆட்சி புரிஞ்சும், அந்த ஊருக்கு ஒன்னியும் நடந்த மாதிரி தெரியல.

கடந்த வாரத்தில், சோனியா அம்மையார், ராய் பரேலி தொகுதிக்கு டூர் போனாங்களாம் (இத்தையாவது பண்றாங்களே), அப்ப அங்க இருக்கும் குடிமக்களை பாத்து அவங்க நிறை குறைகளைக் கேட்டு ஸ்பாட்டுலையே ஒரு-நாள் முதல்வர் கணக்கா நிவர்த்தி பண்ணினாங்களாம்.
எங்க வீட்டுக்கு வந்து என் நெலைமைய பாருங்கன்னு ஒரு பொம்பள சோனியாவை கைய புடிச்சு இஸ்துக்கினு போய் காட்டினாங்களாம். அவங்க வீட்ல கூரையே இல்லியாம். ஒக்கார பாய் கூட இல்லியாம். ஒடஞ்சு போன அடுப்பும், சட்டை போடாத அஞ்சு பசங்களும் இருந்தாங்களாம். தனக்கு ஒதவி பண்ணுங்கன்னு அந்த பொண்ணு கேட்டதும், சோனியா ஒடனே, தன் அடிபொடிகள் கிட்ட, 'ஆவன செய்'னு உத்தரவு போட்டாங்களாம்.

அங்கேருந்து அப்படியே, அடுத்த தெருவுக்கு, போனாங்களாம். தார் பாக்காத பொடி பறக்கும் ரோடாம். அங்கருந்த பொம்பள, இங்க ரொம்ப ஊழலும், அரிசி கூட கெடைக்க மாட்ரதுன்னாங்களாம். அதுக்கும், 'ஆவன செய்'னு ஸ்பட்லையே உத்தரவு போட்டாங்களாம்.

அப்பாலிக்கா, அடுத்த தெருவுக்கு போனாங்களாம், அங்கே ஏதோ, கொளம் வெட்ரதுல ஊழல்னு மக்கள்ஸ் பொலம்புனாங்களாம். அங்கனையும், 'ஆவன செய்'ன்னாங்களாம்.

இப்படியே, பலப் பல, 'ஆவன செய்' சொன்னாங்களாம்.

நல்லாத்தான் இருக்கு கேக்க.

ஆனா,
இம்பூட்டு வருஷமா, மாத்தி மாத்தி ஆட்சி செஞ்சும், தார் போடாத சாலையும், அரிசி கிடைக்காத கிராமமும், கூரையில்லா வீடும், சட்டையில்லா பிள்ளைகளும், எழுதப் படிக்க தெரியா குடும்ப அரசிகளும், குளம் குட்டையிலும் ஊழல் செய்யும் நாதாரிகளும், மிகுந்து இருக்கும் ராய் பரேலியின் நிலைக்கு யார் காரணம்?

ராய் பரேலியே இப்படீன்னா, மத்த தொகுதியெல்லாம், என்னிக்கு சரியாகரது?
கழுத்த அறுக்கறானுவளே இப்படி?
கஷ்டம்டா சாமி!

பொலம்ப மட்டுமே தெரிந்த,
-சர்வேசன்

source: hindu.com

5 comments:

சீமான்கனி said...

இனிமேல் எல்லாம் சரியாகிடும்னு நம்புவோம்.....இப்படித்தானே காலங்காலமாய் நம்பிகிட்டு இருக்கோம்........

Sanjai Gandhi said...

மட்டமான பதிவு.. விக்கிபீடியா பார்த்து பதிவெழுதினா இப்டி தான். கொஞ்சம் பொறுமையா ஒக்காந்து ஓசனையும் பண்னோனும் சர்வ்ஸ்..

ரேய்பரேலி தொகுதி இருப்பது உத்திர பிரதேசத்தில் தான். டில்லியில் இல்லை. அங்கே பல ஆண்டுகளாக மாறி மாறி காங்கிரஸ் எதிர்ப்பு நிலை கட்சிகளே ஆட்சியில் இருக்கின்றன. உபியில் ஆட்சி செய்பவர்களின் லட்சணம் தெரியாமல் உளறக் கூடாது.

ரேய்பரேலியை காங்கிரஸ் ஆட்சி புரியுதா? :)) ரேய்பரேலி தனி மாநிலமா? :)

//குறைந்தது 20 ரோடு, ரெண்டு தொழிற்சாலையாவது வந்திருக்கணுமே. //

சமீபத்தில் ரயில் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தப்போ அதுக்கு எப்படி எல்லாம் மாயாபேதி முட்டுக் கட்டை போட்டாங்கன்னு தெரியும்ல. இந்தியாவை ஆளும் கட்சிகளின் கூட்டணித் தலைவியையே அவர் தொகுதியில் நுழைய விடாமல் தடை போடும் அளவுக்கு அங்கு காட்டு தர்பார் நடக்குது. அதே மாதிரி ரோடு போடர விஷயம். அங்க மாநில அரசாங்கமே இல்லையா? அவங்க என்ன புடுங்கறாங்களாம்? எல்லாத்துக்கும் சோனியா தான் காரணமா?

//ஆனா,
இம்பூட்டு வருஷமா, மாத்தி மாத்தி ஆட்சி செஞ்சும், தார் போடாத சாலையும், அரிசி கிடைக்காத கிராமமும், கூரையில்லா வீடும், சட்டையில்லா பிள்ளைகளும், எழுதப் படிக்க தெரியா குடும்ப அரசிகளும், குளம் குட்டையிலும் ஊழல் செய்யும் நாதாரிகளும், மிகுந்து இருக்கும் ராய் பரேலியின் நிலைக்கு யார் காரணம்?//

மேலே கேட்ட அதே கேள்வி தான். சாலை, அரிசி, சட்டை, பள்ளிகூடம் எல்லாம் இல்லாம இருக்கிறதுக்கு ஒரு எம்பி தான் காரணமா? அந்த தொகுதிகுட்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் என்ன செய்றாங்க? அந்த மாநிலத்தை ஆளும் அரசு என்ன புடுங்குது? அதுக்கு எந்த நாதாரி காரணம்?

சும்மா எதுக்கெடுத்தாலும் சோனியாவைத் தான் குறை சொல்லனுமா? விக்கிபீடியாவை மொழிபெயர்ப்பதோடு இல்லாம கொஞ்சம் விவரமாவும் செய்தி படிங்க. வர்ட்டா சாரே..

SurveySan said...

சஞ்சய் அண்னாச்சி, வருக வருக!

விக்கியிலையே தப்பு இருந்தா, சீக்கிரம் திருத்துங்க.வருங்கால சந்ததிக்கு வரலாறு, புவியியல், அவியல் எல்லாம் விக்கி தான்.

ஒரு புண்ணாக்கும் ஒரு எம்பியால் ஆக்க முடியாதுன்னா, அப்பரம் என்னாத்துக்கு மாத்தி மாத்தி அங்கையே போட்டி போட்டு கெலிக்கணும்? ஒன்னியும் பண்ணாம, எல்லாத்துக்கும் மாயாவதிய காரணம் சொல்லி எஸ்கேப்பவா ?

மாநில அரசு, கெட்ட சபை எல்லாம் சரியில்லன்றதாலதான், அன்னை'ஸை வாழையடி வாழையா கெலிக்க வச்சுக்கினே இருக்காங்க ஒண்ணும் தேரியாத மக்கள்?

அன்னை சோனியாவால் கூட, தன் தொகுதிக்கு ஒன்னியும் செய்ய முடியாதுன்னு, மத்த ஜூஜூப்பி எம்பியெல்லாம் என்னாத்ததான் பண்ணுவாங்க? ஒரு எடுத்துக்காட்டா இருந்து காட்ட வேணாமா தலைவி?

நல்லா வளக்கறீங்க கட்சியை. வெளங்கிரும் ;)

Sanjai Gandhi said...

//நல்லா வளக்கறீங்க கட்சியை.
வளர்க்காமலா ஆட்சியில இருக்கோம்? ;))

//வெளங்கிரும் ;)//

பிஜெபி மாதிரியா? ஆர் எஸ் எஸ்காரனுங்க தான் இனி பிசேபியை நடத்தனுமாமே.. அந்த நிலை எங்களுக்கு வராது. நிச்சயம் வெளங்குவோம். :))

Unknown said...

<<<
பொலம்ப மட்டுமே தெரிந்த
>>>

நானும் நானும்... :)

இதுக்குதான் நாமல்லாம் லாயக்கு.. :D