recent posts...

Thursday, August 27, 2009

தத்துவம்பா...

ரெண்டு அருமையான தத்துவம் சொல்லலாம்னு இருக்கேன். படிச்சுட்டு, என்ன மாதிரி லூஸ்ல விட்டுடலாம், இல்லன்னா, தத்துவத்தின் உட்கருத்தை உள்வாங்கி, மேலோங்கலாம்.

ஆஃபீஸ்ல, உண்ட களைப்பில், "Point Return" பற்றி வெட்டிக் கதை பேசிக்கிட்டிருக்கும் போது , "என்னாத்துக்கு இப்படி இந்த வயசுல கஷ்டப்படணும்? யாருக்கென்ன லாபம்னு பேச்சு வந்த போது" என் பக்கத்து சீட்டு நண்பர் சொன்ன கருத்து ஒண்ணு.

இன்னொண்ணு, "இன்னாய்யா வாழ்க்கை இது. இந்த மண்ட கொடச்சல் வேலை தாங்க முடியல்ல.. இத்தையே செஞ்சுக்கினு இருந்தா, எப்ப அடுத்த லெவலுக்கு போரதுன்னு பொலம்பும்போது" இந்தப்பக்க சீட்ல இருக்கர நண்பர் சொன்னது.

மொத தத்துவம் பாப்போம்:
ஒரு ஆளு பெரிய பாலைவனத்துல நடந்து போயிக்கிட்டே இருக்காரு. வெயில்னா வெயிலு, அப்படிப்பட்ட வெயிலு. கைல வெச்சிருந்த தண்ணி காலி ஆயிடுச்சாம்.
பயங்கரமான தாகமாம் அவருக்கு. ஆனா, சுத்து வட்டாரத்துல எங்கையும் பொட்டு தண்ணியும் இருக்கரமாதிரி தெரியல. வேர ஆள் நடமாட்டமும் இல்லை.

நாக்கு வரண்டு, மயக்கமே வர ஆரம்பிச்சிடுச்சாம்.

தூரத்துல பாத்தா ஒரு தண்ணி கை பம்ப்பு தெரிஞ்சுதாம்.
அப்பாடின்னு, அரக்க பரக்க அதுக்கிட்ட போனாராம்.
கொழாக்கு மேல ஒரு குவளைல ஃபுல்லா தண்ணி இருந்துச்சாம். அத எடுத்து குடிக்கலாம்னு குவளைய கைல எடுத்தாராம். பாத்தா, பக்கத்துல ஒரு பலகைல என்னமோ எழுதி வச்சிருந்துதாம்.
குவளைல இருக்கர தண்ணிய, கை பம்ப்பு கொழாய்ல ஊத்திட்டு, பம்ப்பை அடிங்க. அப்பதான் தண்ணி வரும். அத குவளைல புடிச்சு, நீங்க குடிங்க. குடிச்சு முடிச்சதும், இன்னொரு குவளை நிறைய தண்ணியப் புடிச்சு வச்சுட்டுப் போங்க.

"அடடா, தண்ணிய உள்ள விட்டு, அடிச்சாதான், கொழாய்ல தண்ணி வருமாமே. நாம, அத செய்யாம, இந்தத் தண்ணிய குடிச்சு காலிப் பண்ணிட்டா, நமக்குப் பின்னாடி வரவனுக்கு, தண்ணியே கெடைக்காம செத்துடுவானே.
ஆனா, குவளைத் தண்ணிய கொழாய்ல ஊத்திட்டு, கை பம்ப்பு அடிக்கும்போது, தண்ணியே வரலன்னா என்னா பண்றது? இருந்த தண்ணியும் கொட்டிட்டு, நாம சாக வேண்டியதாயிடுமே?"
இப்படி, ரொம்ப யோசிச்சாரு நம்ம ஆளு.

ஆனா, இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தவரு, குவளை தண்ணிய, கொழாய்ல ஊத்திட்டு, கை பம்ப்பை அடிக்க ஆரம்பிச்சாரு.
பலகைல எழுதியிருந்த மாதிரியே, தண்ணி சர்ர்ர்ர்னு வந்துச்சு. ஆசை தீர குடிச்சுட்டு, இன்னொரு குவளை நிறைய தண்ணியும் புடிச்சு, கொழா பக்கத்துல வச்சுட்டு, இவரு தன் வழி பாத்து நடக்க ஆரம்பிச்சுட்டாராம்.

மாறல் ஆஃப் த ஸ்டோரி? : சொல்லித்தான் தெரியணுமா? Point Return பக்கத்தை போய் பாருங்க. ஸ்ரீதரன் அளவுக்கு, மெனக்கெடலன்னாலும், சிறுகச் சிறுக ஏதாச்சும் செய்யணும். அட்லீஸ்ட், அவருக்கு, ஒரு விசிட் அடிச்சு, உள்ளேன் ஐயா சொன்னா கூட, சாலச் சிறந்தது. (அவரு ட்விட்டவும் செய்யறாரு, அப்பப்ப)


பி.கு: ரெண்டாவது தத்துவம் அப்பாலிக்கா பாக்கலாம். இப்பெல்லாம் ரொம்ப பெருசாஆஆஆஆஆஆ எழுதறேன்னு ஒரே கம்ப்ளெயிண்ட்டு வருது. :)

ஹாப்பி வெள்ளி!பி.கு: எம் சமீபத்திய இசை வேள்வியை கேட்டு மயங்காதவர்கள், மயங்கவும்.

3 comments:

SurveySan said...

உங்களை, அந்த பாலைவயனத்து பயணியா நெனச்சுக்கங்க?

தைரியமா ரிஸ்க் எடுத்தூ, தண்ணிய கொழாய்ல ஊத்தி, பம்ப் அடிப்பீங்களா?

இல்ல, அடுத்து வரவன் எக்கேடோ கெடட்டும், என் உயிர் முக்கியம், ரிஸ்க் எடுக்க முடியாதுன்னு குடிச்சுட்டு எடத்த காலி பண்ணுவீங்களா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

'ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க' இது தான் பொருத்த்மா இருக்கு இந்த பதிவுக்கு ஸோ காப்பி பேஸ்டிட்டேன்.. :)

அப்பறம் யோசிச்சதில் முதல்ல சொன்ன ரிஸ்கை எடுப்பது தான் சரின்னு பட்டுச்சு.. அப்படி ரிஸ்க் எடுக்காம உயிரைக்காப்பாத்திக்கிட்டா பின்னாடி குற்ற உணர்ச்சியால் சங்கடப்படவேண்டி இருக்குமேன்னு ..

SurveySan said...

முத்துலெட்சுமி,


//அப்பறம் யோசிச்சதில் முதல்ல சொன்ன ரிஸ்கை எடுப்பது தான் சரின்னு பட்டுச்சு.. ///

நம்பிட்டேன் ;)