recent posts...

Sunday, August 16, 2009

சர்வே கொம்பேனி மூடுவிழா

இதனால் அனைவருக்கும் அறியப்படுத்துவது என்னவென்றால், இதுவரை சமூக மேம்பாட்டுக்கு பெரிதும் உதவி வந்த எமது சர்வேக்கள் அனைத்தும் முடக்குப்பட்டுவிட்டன.

இது வெளிநாட்டு சதியா, உள்நாட்டு கொதியா என்பதை அறிந்து கோள்ள விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

சர்வே கொம்பேனி முடக்கப்பட்டுள்ள நிலையில், எமது முந்தைய சர்வேக்கள் அனைத்தும், காலாவதியாகிவிட்டன. அதன் முடிவுகளும் இனி பழைய பதிவுகளில் தெரியப் போவதில்லை. நடந்து முடிந்த பலப் பல சர்வேக்களில் யாருக்காவது, அதிதீவிர சந்தேகம்/கேள்விகள் இருந்தால், தெரியப்படுத்தவும்.
எமது ஞாபக சக்தியைப் பயன்படுத்தி அதற்கான விடையைத் தெரியப்படுத்துகிறோம்.

சர்வே கொம்பேனி காலாவதியாகிவிட்ட நிலையில், சர்வேசன் பதிவும் முடக்கப்படுமா என்ற தீவிர சந்தேகங்களும், தீக்குளித்தல்களும் நடந்தேறிவிடும் அபாயம் இருப்பதால், நேயர்கள் அனைவருக்கும் எமது முடிவை உடனே தெரியப்படுத்தும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

சர்வேக்கள் எடுப்பது, பதிவுலகுக்கு, நாம் ஆரம்பத்தில் அடியெடுத்து வைக்க ப்ரயோகப்படுத்திய ஆயுதம். கடந்த 2 1/2 வருட அனுபவத்தில், நாம் ஒரு தேர்ந்த எழுத்தாளர் ஆகிவிடவில்லையென்றாலும், எத்தையாவது எழுதி, எப்டியாவது பதிவப் போட்டு, ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளோம்.

ஸோ, இனி வருங்காலத்தில், ப்ளாகர் முடக்கப்படும் வரையில், சர்வேசன் பக்கத்தில், எத்தையாவது கிறுக்கிக் கொண்டே இருத்தல் தொடரும். படிக்கரது உங்க தலை எழுத்து என்று கொம்பேனியார் கருதுகின்றனர்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் ஆதரவுக்கு, இரு கரம் கூப்பி வந்தனம் செய்வது, கொம்பேனியின் நிரந்தர உறுப்பினர்,

-சர்வேசன்

பி.கு: கீழே இருக்கும் லோகோ, 2 1/2 வருடத்துக்கு முன், ஒரு பின்னிறவு நன்னாளில், ஒரு சிவப்பு வட்டம் வரைந்து, ஃபோட்டோ ஷாப்பில் அதுக்கு கண்ணும் மூக்கும் வைத்து, 'சர்வே'சன்னை உருவாக்கியது இன்னும் பசுமையாய் நினைவில் உள்ளது. ஐ வில் மிஸ் யூ 'சர்வே'ஸ் :)

12 comments:

SurveySan said...

இதற்கு, மாற்று வாசகங்கள், வரவேற்கப்படுகின்றன :)

//Surveysan -ஆக்கியவன் அல்ல அளப்பவன்.
எமது தொழில் சர்வே எடுத்துக் கிடப்பதே! Just Surveys! (Surveys about anything and everything in Tamil for the Tamil)
////

சென்ஷி said...

//'நல்ல பதிவு',
'சூப்பர்',
'தூள்',
'அருமை',
'அடேங்கப்பா',
'ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க',
'ஆஹா! என்னா சிந்தனை. பிறந்த பயனை அடைந்தேன்!',

இவற்றை வெல்லும் சொற்கள், வேறில்லை ;)//

இந்த பதிவுக்கு இதுல எந்த கமெண்டுமே பொருந்த மாட்டேங்குதே தலைவா!

SurveySan said...

சென்ஷி, ரொம்ப யோசிக்க வச்சுட்டீங்க. உங்களுக்காக, டெம்ப்ளேட்டையே மாத்தியாச்சு.

////இது எதுவும் வோணாமா?
அப்ப,
'பேங்க பேங்க முழிக்கறேன்',
'ஒன்னியும் தோணலப்பா',
'ஹ்ம்!'

இத்துல ஏதாவது ஒண்ணும் சொல்லலாம்.
////

ஆயில்யன் said...

'பேங்க பேங்க முழிக்கறேன்',

ஆயில்யன் said...

/சர்வேசன் பக்கத்தில், எத்தையாவது கிறுக்கிக் கொண்டே இருத்தல் தொடரும். படிக்கரது உங்க தலை எழுத்து என்று கொம்பேனியார் கருதுகின்றனர்///

இந்த அப்ரோச்சும் எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு பாஸ் :))

நிஜமா நல்லவன் said...

:)

தருமி said...

ஐ வில் மிஸ் சர்வேஸ்

☀நான் ஆதவன்☀ said...

'ஒன்னியும் தோணலப்பா'

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம்!....

ப்ளாக்கர் மூடும் வரையா ஏம்ப்பா நல்லது நினைங்கப்பா.. திகிலக் கிளப்பறீங்களே...

pappu said...

ஏன் இப்படி தலைவா?
நீங்க என்ன வேணும்னாலும் எழுதுங்க. எங்கள மாதிரி நாலு வெட்டிப் பசங்க இருக்குற வரைக்கு பிரச்சனையே இல்ல!

SurveySan said...

ஆயில்யன், நிஜமா நல்லவன், தருமி, நான் ஆதவன், முத்துலெட்சுமி, pappu,

நன்னி! :)

pappu,
////எங்கள மாதிரி நாலு வெட்டிப் பசங்க இருக்குற வரைக்கு பிரச்சனையே இல்ல!////

இந்த ஒரே மன தைரியத்தால்தான் என்ன மாதிரி வெட்டி ஆளுங்களும் பதிவாளர்கள் ஆயிடறோம். தொடரட்டும் ;)

ஆ! இதழ்கள் said...

இனி சர்வேய எப்படி அளப்பது... சாரி அழைப்பது...