recent posts...

Thursday, August 13, 2009

உருக்கும் பாடல்

சில பாட்டெல்லாம் எப்ப கேட்டேன்னே நினைவில்லை. ஆனா, எங்கையாவது டிவிலையோ, ரேடியோலையோ, யூ.ட்யூபலையோ கேட்டா, பல வருஷம் பரிச்சயமான பாட்டு மாதிரி, சொக்க வச்சுடும்.

தமிழில், 'ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது', அந்த ரகம்.
எங்க வீட்ல அதன் கேசட்டோ, சிடியோ எதுவும் கிடையாது.
நெனவு தெரிஞ்ச நாளக்கப்பரம், அந்தப் பாட்டை அடிக்கடி, ரேடியோல கேட்டதும் ஞாபகம் இல்லை. ஆனாலும், ஆழமா உள்ளுக்குள்ள பதிஞ்ச பாட்டு அது.
ஒரு வேளை, நான் சின்ன வயசுல இருக்கும்போது, எங்க மம்மியும் டாடியும் அடிக்கடி கேட்டிருப்பாங்க போலருக்கு.

ஹிந்தியில் பல பாடல்கள் அந்த வகையைச் சேர்ந்தது.
சின்ன வயசுல, ஞாயிறுகளில், சிக்கன் பிரியாணியை வெட்டு வெட்டிட்டு, எங்க நைனா, ரேடியோல, பழைய ஹிந்திப் பாட்டை போட்டு விடுவாரு.

உண்ட களைப்புக்கு, கேக்கவே ப்ரமாதமான பாடல்களாப் போடுவாங்க.
லதாஜியும், ரஃபியும், கிஷோரும், முகேஷும், போட்டி போட்டுக்கிட்டு மனசை அள்ளுவாங்க.

அந்த காலத்தில் அப்படிக் கேட்டிருக்கணும், இந்த லதாஜி பாடலை.
நேத்து, யூ.ட்யூபில் எதையோ தேடிப் போய் இது ஆப்டுது.

ப்யூட்டி இன்னான்னா, இதுக்கு இப்ப ரீமிக்ஸ் வந்திருக்கு. அதுவும், ப்ரபலமாயிருக்கு போல.

ஏர்டெல் டாப் சிங்கர் மாதிரி, மலையாள உலகில், ஐடியா ஸ்டார் சிங்கர் ரொம்ப ப்ரபலம்.
ஒரு கேரளத்துப் பெண்குட்டி, ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா, அந்த லதாஜியின் பாடலை, பாடரது கீழே.
aap ki nazron ne samjhaன்னு வரும் பாடல் அது. உருக வைக்கும் ரகம்.

இது கேரளப் பெண்குட்டி பாடரது:


இவா பாடினதும், அவா (சித்ரா சேச்சி) மார்க் போடரது இங்கே:


இது லதாஜியின் ஒரிஜினல். இதைக் கேட்டாலே, சின்ன வயசு பிரியாணி வாசமும், அந்த வெயில் கால மதியான வேளைகளும் நினைவு வருது.


Mistress of spicesனு ஒரு படத்துல, இதே பாட்டின் ரீ-மிக்ஸ், ஐஸ்வர்யா ராயின் ஆடலுடன்:


எஞ்சாய் மாடி!

ஹாப்பி வெள்ளி!

8 comments:

ஆயில்யன் said...

//சில பாட்டெல்லாம் எப்ப கேட்டேன்னே நினைவில்லை. ஆனா, எங்கையாவது டிவிலையோ, ரேடியோலையோ, யூ.ட்யூபலையோ கேட்டா, பல வருஷம் பரிச்சயமான பாட்டு மாதிரி, சொக்க வச்சுடும்.//


:)) ஸேம் ஸேம்! சின்னவயதிலிருந்தே கேட்டு கேட்டு மனதில் நன்கு பதிந்து போன பாடல்கள் எங்காவது ஒரு வரி கேட்டாலோ அல்லது பார்த்தாலோ வெளிக்கொணரமுடியாத எண்ணங்கள் நிரம்பி நிற்கும் :)

அந்த வகையில் எனக்கு

1.கொடியிலே மல்லிகைப்பூ (கடலோரகவிதைகள்)
2.காதலின் தீபம் ஒன்று
3.உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்

அம்புட்டுதான் இப்ப ஞாபகம் வருதேய்ய்ய்ய் :))))

Truth said...

ரொம்ப நாள் கழிச்சு ஹேப்பி வெள்ளி வந்திருக்குன்னு நினைக்கிறேன். இல்ல, நான் மிஸ் பண்ணிட்டேனா?
யூட்யூப் லிங்க் தந்திருக்கீங்கனு நினைக்கிறேன். ஆபீஸ்ல அது தெரியாது. வீட்டுக்கு போய் பாக்கிறேன்,

SurveySan said...

ஆயில்யன்,

///2.காதலின் தீபம் ஒன்று
////

beautiful song. pakkathu veettu akkaa peru sumathi. indha paattula oru scenela andha peru varum. avanga namuttu sirippu sirippaanga adha paathadhum :)

SurveySan said...

truth,

///ரொம்ப நாள் கழிச்சு ஹேப்பி வெள்ளி வந்திருக்குன்னு நினைக்கிறேன். இல்ல, நான் மிஸ் பண்ணிட்டேனா?
//

romba naal kazhichudhaan varudhu.
miss panra alavukku, naan innum karuthu solla aarambikkala ;)

danks for the visit :)

Prabhu said...

நானும் இதே மாதிரி ஒன்ணும் போடலாம்னு இருந்தேன். பரவாயில்ல, இருந்தாலும் நானும் போடுறேன்.

SurveySan said...

pappu,

//பரவாயில்ல, இருந்தாலும் நானும் போடுறேன்.///

yes. pls do :)

ஆர்வா said...

அலைபாயுதே படத்துல வர்ற எவனோ ஒருவன் பாட்டு எனக்கு ஃபேவரைட். அப்படியே உயிரை உருக்குற மாதிரி இருக்கும் சுவர்ணலதாவோட குரல்

SurveySan said...

கவிதை காதலன்,
///அலைபாயுதே படத்துல வர்ற எவனோ ஒருவன் பாட்டு எனக்கு ஃபேவரைட்
//

ஹ்ம். என் கும்பலில் இரு விதமான கருத்து இருக்கு இந்த பாட்டு வந்த புதுசுல. ஒரு கும்பல், இது சர்ச்ல பாடர 'ஆண்டவரே' பாட்டூ மாதிரின்னும், இன்னொரு கும்பல், இது சூப்பர்னும், சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

நானு முதல் கும்பலில் கொஞ்ச நாள் இருந்துட்டு, ரெண்டாவது கும்பலுக்கு தாவிட்டேன் :)