
சனி இரவு 9.30 மணி ஆட்டம். வழக்கத்துக்குமாறான $15 டிக்கெட் விலை மன உளைச்சலை தந்திருந்தாலும், கஸின், தன் செலவில் டிக்கெட்டை முன்பதிவு செய்து, நான் பணம் திருப்பிக் கொடுக்கும்போது வாங்க மறுத்ததால், அந்த உபாதையில் இருந்து விடுபட்டிருந்தேன்.
நிரம்பி வழிந்த கொட்டகையில், மூன்றாம் வரிசையில் நட்ட நடூ சீட்.
ஏழாம் வரிசையில் வலது ஓர இடம் இருந்தாலும், எனக்கு நடூல ஒக்காந்து பாத்தாதான் பிடிக்கும் என்பதால், மூன்றாம் வரிசை தேர்வு செய்யப்பட்டது.
(வெறும் கேளிக்கைக்காக மட்டுமல்ல. படம் பாத்து, விமர்சனம் எல்லாம் எழுதி, நாட்டு மக்களுக்கு ஒரு நர்செய்தி சொல்லணும்ல? அதுக்கு சரியான எடத்துல ஒக்காந்து படம் பாக்கணும்ல? ஸ்ஸ்ஸ், இந்த 'பதிவர்' கடமை ரொம்பப் படுத்துதுங்க :) ).
படத்தின் 'கதையம்சம்' (அது என்னான்னு புரியாதவங்க பலர் இருப்பாங்க) நல்லாவே இருந்தது.
"நடப்பவை நன்மைக்கே / எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு"ங்கர மாதிரியான, என் நம்பிக்கையோடு ஒத்துப் போவதால், இது பிடிச்சுதான்னு தெரியல.
படம் ஆரம்பிச்சதும், எல்லா விமர்சனத்திலையும் பல தடவை சொல்லப்பட்ட அந்த சென்னை ஏரியல் ஷாட் நல்லாயிருந்தது. ஆனா, விர் விர்னு கேமரா சுத்தி சுத்தி சுழலும்போது, படம் பல நொடிகள் blurredஆ இருக்கர மாதிரி இருந்தது. மூன்றாம் வரிசை இருக்கையினால் அப்படியாங்கரது தெரியல. ஆனா, படம் முழுக்க இந்த ஏரியல் ஷாட் டெக்னிக், பல இடங்களில் இருந்தது. சில பல இடங்களில், இம்சையாவே இருந்தது எனக்கு.
குலோத்துங்கசோழன் கால நிகழ்வுகளின் வண்ணக் கலவையும், அந்தக் கமலின் கெட்டப்பும் வெகுவாகக் கவர்ந்தன.
படகு/நதி/கடல் சவாரிக் காட்சிகள், நல்ல கிராஃபிக்ஸ். சில இடங்களில் பல்லை இளித்திருந்தாலும், அமோக முயற்சி.
பின்னணி இசை, பின்னியிருந்தாரு தேவிஸ்ரீ பிரசாத்.
பாடல்கள், சுமார். முகுந்தா முகுந்தா முணுமுணுக்க வைத்தது.
சோழர் கால சிச்சுவேஷனுக்கு, கல்லை மட்டும் கண்டால், சரிபடலை. (கொடுத்திருந்தா, ராசா கலக்கியிருப்பாரு என்பது அடியேன் எண்ணம். பின்னணி இசையும், பாடலும், அந்தப் பீரியடுக்கு கூட்டிட்டுப் போல, கேமரா/கிராபிக்ஸ் கூட்டிட்டுப் போன மாதிரி).

புதுசா ஸ்கிரீன்ல யாரப் பாத்தாலும், இது கமலா? இது கமலான்னு, பக்கத்து சீட்டு அம்மணி தொல்லை தாங்க முடியலை.
மல்லிகா ஷெராவத், அஸின், நாகேஷ், ஜெயப்ரதா, கே.ஆரைத் தவிர, மத்தவங்க யாரைப் பாத்தாலும், இது கமலா, இது கமலான்னு செம டார்ச்சர்.
இந்த பத்து அவதாரங்களெல்லாம், சும்மா ஒரு ஹைப்புக்காக செஞ்ச மாதிரிதான் தெரியுது.
ரியல்-கமல் விஞ்ஞானி, மற்றும் ஒரு மூணைத் தவிர (அம்பி, கறுப்பர், நாயுடு காரு) மத்ததெல்லாம் முதல் அறிமுகத்தில், சிரிப்பை வரவழைக்கும் கண்றாவி மேக்கப்படுன் வராங்க.
அவ்வை ஷண்முகி, இந்தியன் தாத்தா மேக்கப்பெல்லாம் எவ்வளவோ பரவால்ல.
இந்தியனில் சுகன்யாவுக்கு போட்டிருந்த கொடூர மேக்கப் மாதிரி தான், மத்த எல்லா கமல்களுக்கும்.
பாட்டி-கமல், ஆரம்பத்தில் எரிச்சலூட்டினாலும், பாக்க பாக்க பழகிட்டாங்க.
மைதாவுக்குப் பின்னால் இருக்கும் முகத்தில் என்ன நடிப்பை எதிர்பார்ப்பது?
ஆனா, கமலும், முடிஞ்சவரை, பாடி லாங்குவேஜில் மாற்றங்கள் காண்பித்து, ரொம்ப கொடூரமாக்காம காப்பாத்த முயற்சி பண்ணியிருக்காரு.
புஷ்ஷின் மேனரசிங்கள் சில, ரசிக்கும்படி இருந்தன.
ஆனா, இந்த, மைதா முக மேக்கப்புக்கு எப்படி எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க?
டைரக்டர் ரவிக்குமார், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவியெல்லாம் ஒண்ணும் சொல்லலியா?
ப்ரிவ்யூ ஷோ பாத்த, பெருந்தகைகள் எல்லாம் கண்டுக்கலியான்னு ஆச்சரியமா இருக்கு?
யோசிச்சுப் பாத்தா, நம்ம மத்தியில் இருக்கும் பெரும்புள்ளி யாராவது, குண்டக்க மண்டக்க ஏதாச்சும் சொன்னாலும், சுத்தி நிக்கரவங்களெல்லாம், மண்டைய ஆட்டிட்டு, பல்லக் கடிச்சிக்கிட்டு, வாரே-வா சொல்லுவோம்ல. அதுமாதிரி, எல்லாரும், கமலுக்காக மண்டைய ஆட்டியிருக்கணும்னு தோணுது.
மைதா முகங்கள் was a big turn off for me.
நேபாளி பரத், was much much better than ஜப்பானி கமல்.
ஆனா, படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்ல.
சரி, அப்ப ஒலகத் தரங்கறாங்களே, என் கண்ணுக்குத் தெரியலியான்னு கேக்கறீங்களா?
முதல் 15 நிமிடம், ஒலகத் தரம்.
கடைசி 15 நிமிடம், ஒலகத் தரம்.
தெலுகு நாயுடு, ஒலகத் தர ஆக்டிங் (குறிப்பா, நரசிம்மராவ்னு பெயரைக் கேட்டதும் அந்த முகபாவம், குப்பென்று சிரிப்பை வரவழைத்தது).
பாட்டியின் சில மேனரிஸம், ஒலகத் தரம் (க்ளைமாக்ஸ் ஒப்பாரியெல்லாம் நல்லாயிருந்தது)
கறுப்பர் பூவராகவனின், டயலாக் டெலிவரி ஒலகத் தரம். இவர் பேசும் வீரவசனங்களும் ரொம்ப டச்சிங்.
வாஷிங்டனில் நிகழும், சேஸிங், ஒலகத் தரம்.
'நடப்பவை நன்மைக்கே/எல்லா நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கு'ங்கரத சொல்ல எடுத்துக்கிட்ட கருத்து, நல்ல தரம்.
பூவராகவன்: அவர் அறிமுகக் காட்சி, பளீர் வெளிச்சத்தில் திடீர்னு வந்து, சற்றும் எதிர்பாராத நேரத்தில், அடுக்கு வசனம் அள்ளி வீசுவாரு பாருங்க.
அடா அடா அடா அடா. He gave me a Jolt! புல்லரிச்சுது. Amazing delivery/performance/dialogues.
குடுத்த காசு, அங்கதான் மொதலாச்சு (என் கஸினுக்கு :) ).
அப்பறம், படம் முழுக்க வியாபித்திருக்கும், நாயுடுவின் அட்டகாசங்கள், நெஜமாவே அட்டகாசம். நல்லா அசத்தியிருக்காரு.
பூவராகவனும், நாயுடுவும் மட்டும் சேந்து, தசாவதாரம்-பார்ட்2 வந்தா, கண்டிப்பா, மொத நாள் மொத இருக்கையில் ஒக்காந்து, சொந்த செலவுல டிக்கெட் வாங்கி பாப்பேன். :)
காமெடி, பரவலா ஓ.கே. நிறைய இடத்தில் கிரேஸி டச் தெரியுது.
பாஸ்கரின், டங்கிலீஷ் டயலாக், சிரிப்பை வரவழைத்தது, பல இடத்தில்.
அசின், நல்ல பொறுத்தம்.
வேறென்ன? ஹாங், நுண்ணரசியல் விட்டுட்டனே.
அது எதுவும் என் கண்ணுக்குத் தெரியலீங்க. இதுக்கு முன்னாடி படிச்சிருந்த நுண்ணரசியல்கள், கோர்ட் கேஸ் செய்தியெல்லாம் நெனச்சப்போ, சிரிப்புதான் வருது.
வேலையத்தப் பயலுவ :)
(ஆனா, அன்பேசிவம் மாதிரி, இங்கயும், கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் நல்லவங்க, இந்துக்கள் கெட்டவர்கள்னு, மேலோட்டமா காட்டறாங்களோ? - நாராயண நாராயண :) )
மொத்தத்தில், மைக்கேல் மதன காமராஜன் ஏற்படுத்திய நாலு-கமல் வியப்பு, இந்த பத்து கமல்கள் சேர்ந்தும் தர முடியவில்லை என்பது அடியேன் கருத்து.
யோசிச்சுப் பாத்தீங்கன்னா, நல்ல ஒலகத் தரப் படங்கள் எல்லாம், இவ்வளவு ஆர்பாட்டம் எல்லாம் இல்லாதவையாதான் இருக்கும்.
கமல் மாதிரி ஆளுங்க, கைல இவ்ளோ தெறமைய வச்சுக்கிட்டு, மைதா மாவு மேக்கப்பை நம்பி படம் எடுப்பதெல்லாம் ரொம்பவே அபத்தமாய் தெரிகிரது.
அந்த சோழ நாட்டு கெட்டப்பெல்லாம் வச்சு, பிசிரில்லாம, அழகா படம் எடுக்க முடியுதே, அந்த மாதிரி ஏதாவது வித்யாசமா முயற்சி பண்ணி முழுநீளப் படம் எடுக்கலாம் (ராஜராஜ சோழன்? ப்ளீஸ் ஸம்படி டேக்-இட் :)).
எனிவே, Wait for DVDன்னு சொல்லியிருப்பேன், முதல் 15 நிமிடமும், கடைசி 15 நிமிடங்களும் படத்தில் இல்லாதிருந்தால்.
அதனால, கண்டிப்பா தியேட்டர்ல பாருங்க, சில வாரங்கள் கழிச்சு.
எவ்வளவோ, பாத்துட்டோம், இத பாத்து தாங்கிக்க மாட்டமா? :)
பி.கு0: தம்பி உமாகதிர், என் மனசுல இருக்கரதை, எழுத்துப் பிழையில்லாம அழகா சொல்லியிருக்காரு
பாருங்க :).
பி.கு1: படம் பாத்தவங்க, வலது பக்க
வாக்குப்பெட்டியில், வாக்கு போட மறக்காதீங்க.
பி.கு2: பூவராகவன் கிட்ட, அவரோட சகபாடிகள் எல்லாம் தண்ணியடிச்சுக்கிட்டு ஜாலியா இருக்காங்கன்னு, பி.வாசு, வீடியோல காட்டிட்டு, இப்ப இதப் பாருன்னு இன்னொரு பக்கம் பாக்க சொல்லுவாரு. கமலும் திரும்புவாரு. அப்ப, அடுத்த சீன் வேற எங்கயோ போயிடும். திரும்ப பூவராகவன் சீனுக்கு வந்தா, அவர என்னத்த பாக்க சொல்றாருன்னு காட்டாமலே விட்டுட்டாங்களே. இல்ல, என் தியேட்டர்ல கத்திரி போட்டுட்டாங்களா? யாராச்சும் பாத்தவங்க சொல்லுங்கப்பா. ரொம்ப டென்ஷனா இருக்கு :)
பி.கு3 chaos theory படி, எல்லாம் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கு. எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கு, blah blah blahன்னா, எதுவுமே தப்பில்லையோ? மணல் கொள்ளை, bio-war, உட்பட? :)