ஹ்ம். பர பர பரன்னு பரபரப்பு ஏத்தி விடறாங்க.
படம் பயங்கரமா இருக்குன்னு பாத்தவங்க எல்லாம் சொல்லிக்கிட்டு வராங்க.
முதல்வரும் சொல்லிட்டாரு, மத்தவங்களும் சொல்லிட்டாங்க.
(ஸ்பெஷல் ஷோ பாத்துட்டு வர எல்லா படத்துக்கும், இவங்க இப்படிதான் சொல்லுவாங்கங்கரது வேர விஷயம் :) ).
இந்த வாரம் இங்க ரிலீஸ் ஆவுது.
வழக்கமா இருக்கர $10க்கு பதிலா, இந்தப் படத்துக்கு $15 வேணுமாம்.
ஹ்ம். சிவாஜிக்கு $25 கேட்டாங்க. அப்ப கொதிச்சு எழுந்த நான், சிவாஜிய புறக்கணிச்சு, நீங்க என்னா பண்ணுவீங்கன்னு கேட்ட சர்வேல, 64 பேர் என் மூஞ்சீல கரிய பூசினது இன்னும் கறுப்பா அப்படியே ஞாபகம் இருக்கு.
இந்த வாரம்தான், நம்ம Sixth Sense புகழ் (Lady in the Water இகழ்) Night Shyamalan'ன் The Happeningம் வருது. அது வெறும் $8 தான்.
அதுக்கு போலாமா, இதுக்கு போணுமான்னு ஒரே கொழப்பம்.
இல்ல, வழக்கம் போல, வெயிட் & வாட்ச்சவான்னும் யோசனை வருது.
நீங்க என்னா பண்ணப் போறீங்க?
பி.கு1: படத்தின் ஆடியோவை துட்டு கொடுத்து வாங்கினவங்க யாராச்சும் இருந்தா, சொல்லிட்டுப் போங்க.
பி.கு2: Considering the seriousness of the post, an english version is posted here ஹி ஹி! :)
13 comments:
உலகத்தரத்துக்கு படம் வேணும்கிறீங்க. செலவு (உழைப்பு + பணம்+ நாள்)பண்ணி எடுத்தா 2 டாலர் அதிகம்கிறீங்க. சாதா படத்துக்கு 10 டாலர் தரும்போது இதுக்கென்ன?.
நல்ல கேள்வி.
தரமா இருந்தா, பணம் கொடுப்பதில் ஒண்ணும் கஷ்டமில்லீங்க.
$15 கொடுத்து, சொதப்பலா இருந்தா, என்ன பண்றதுன்னுதான் கவலை.
btw, ஆனானப்பட்ட Indiana Jonesக்கே, $8 தான் கொடுத்துப் பாத்தேன். அவங்க பண்ணாத செலவையா நம்மாளுங்க செஞ்சுருக்கப் போறாங்க? :)
Indy has a wide market. so 8$ in such huge market might give a better return than a 10$ in smaller market (relatively) for Dasavatharam.
யாத்ரீகன்.
true.
but, at the same time, Indianas budget would be more than 1000 கோடி.
இந்த ப்ரீமியம் தொகை யாருக்குப் போய் சேருதுன்னு தெரியல. தயாரிப்பாளருக்குன்னா, ஓ.கே தான். ஆனா, இது, இடைத் தரகர்களுக்குதான் போய் சேரும்னு நெனைக்கறேன்.
நல்ல படமோ அறுவையோ.. வேற வழி இல்லாம சிடில அதுவும் சரியா முகம் தெரியாம பாத்து பாத்து போராகிடுச்சுங்க.. சிவாஜி என்னதான் சுமாரான படம் ன்னாலும் பெரிய திரையில் பாக்கும் அனுபவத்துக்காக தில்லியில் திரையரங்குக்கேவந்ததால் போய் பார்த்தோம்.. சென்னையில் அதே நாள் 250 க்கு பாத்ததா சொன்னாங்க.. நாங்க பாத்தது வெறும் 75 ரூ.. கூட்டமும் ஒரு 40 பேர் தான் இருந்தோம் தியேட்டரில்..
கமல் படமும் வருதாம் தியேட்டரில்..
தசாவதாரமும் அப்படியே கிடைச்சா நல்லாருக்கும்..
ஆரம்பிச்சிட்டாருப்பா ;-))
//படத்தின் ஆடியோவை துட்டு கொடுத்து வாங்கினவங்க யாராச்சும் இருந்தா, சொல்லிட்டுப் போங்க.//
நான் வாங்கினேன் அய்யா !!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
ஆபிஸு கதவப் பூட்டப்போறானுங்க.அதனால அவசரமா முதல் நாள் முதல் ஷோவுக்கு ஆஜராவதா உத்தேசம்.உங்க கணக்குக்கு இங்கேயும் குவைத்தில் 10 டாலர் தேறும்.இருந்தாலும் டிக்கட் பூத்துல வரிசையில் நிக்கப் போறேன்.
பாஸ்கர்,
ungalukku oru periya O!
கலைஞர் டிவில போட்டா பாக்கலாம்..........
கலைஞர்ல மட்டும்தான்
நானெல்லாம் dvd வர்ற வரைக்கும் காத்திருந்துதான் ஆகனும்ங்க. ஏன்னா பாரிஸ்ல எங்க தமிழ் படம் போடராங்கன்னே தெரியல. இங்க வர்ற யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. ஏனுங்க இந்த்யானா ஜோன்சுக்கு எட்டு டாலரா, அந்த படத்த பாத்து நானும் என் வீட்டுக்காரரும் கண்ணுக்கெட்டு கிடக்கோம். இங்க பிரான்சுல செமையா ஊத்திகிச்சு. அதுக்கு எட்டு டாலர் கொடுத்ததுக்கு நீங்க குருவி, கானல்நீர், பாண்டி பட dvd எல்லாம் கண்ண மூடிக்கிட்டு வாங்கி இருக்கலாம். அதுக்கு $8 குடுக்கும்போது தசாவதாரத்துக்கு $25 கூட கொடுக்கலாம்.தப்பே இல்லை.
நான் முதல்நாள் முதல் ஷோ $20க்கு வாங்கிட்டேன்
cyril, for tonight?
nalla tharamaana nermayana review udane suda suda kodutheenganna, punniyamaa pogum.
unga reviewa nambi, $15 selavu panni, saturday paakkalaamaa vendaamaannu mudivu panren :)
Post a Comment