அதாகப்பட்டது

ஏதோ ஒரு கெரகம் புடிச்ச கம்பெனி, வேர ஏதோ எறக்குமதி பண்றோம்னு சொல்லிட்டு, அமெரிக்காலேருந்து அவங்க குப்பையை திருட்டுத்தனமா இறக்குமதி பண்ணிருக்காம்.
பணத்துக்காக என்ன வேணா செய்வானுங்க நம்மாளுங்கங்கரது தெரியும்.
திருட்டுத்தனம் செஞ்சாலும், கொஞ்சம் ரீஜண்டா ஏதாச்சும் செஞ்சா பரவால்ல.
நம்ம ஊர ஒரு குப்பைத் தொட்டியா மாத்தவா முயற்சிக்கணும்? என்ன கொடுமைங்க இது?
மேலே இன்னும் கொஞ்சம் மேஞ்சப்போ ITC மாதிரி பெரிய கம்பெனிகளும், இந்த மாதிரி 'குப்பை' இறக்குமதி செய்வது தெரிஞ்சது.
அப்ப, சிகரெட்டெல்லாம் குப்பைல கெடைக்கர பேப்பர ரீ-சைக்கிள் பண்ணிதான் சுருட்டராங்களா?
இல்ல, அமெரிக்கால குப்பையை கூட்ட எடமில்லாம, இப்ப குப்பைதொட்டியாக்க ஊர தேடறாங்களா?
நாம 'granted'ஆ எடுத்துக்கர பல விஷயங்கள்ள, இந்த குப்பைய சேக்கர மேட்டரும் ஒண்ணு. அமெரிக்காவ எடுத்துக்கிட்டா, சராசரியா, ஒவ்வொரு வீட்டில்லும், ஒரு வாரத்துக்கு, ஒரு பெரிய மூட்டை அளவுக்கு குப்பை சேரும்.
இந்த குப்பையை வெளீல போட்ருவோம்.
லாரீல வந்து அழகா குப்பைய அள்ளிட்டு ஜம்முனு போவானுங்க.
இந்தக் குப்பையெல்லாம் ஒரு எடத்துக்கு கொண்டு போய் கொட்டி, குப்பயை கிளரி, அதிலிருந்து, ப்ளாஸ்டிக் மாதிரி ஐட்டங்களையெல்லாம் பிரிச்செடுத்து, மிச்ச குப்பைகளை ஒரு பெரிய மைதானத்தில் கொட்டி, அதன் மேல் ரோட்-ரோலர் ஓட்டி, சமன் படுத்திக்கிட்டே வருவாங்க. (landfillனு சொல்லுவாங்க இந்த டெக்னிக்க).
ஒரு மைதானம், ஆரேழு வருடத்தில் ஒரு பெரிய மலையா வளந்துடும்.
அப்பாலிக்கா, அந்த 'மலையில்' புல்லு, மரமெல்லாம் நட்டு வச்சு, ஒரு பூங்காவா மாத்திடுவாங்க.
அப்பரம் என்ன? அடுத்த மைதானத்தைத் தேடி போவாங்க.
ஒவ்வொரு வீட்டுக்கும், குப்பையை அள்ளிச்செல்ல மட்டும், சராசரியா ஆயிரம் ரூபாய், மாசம் புடுங்கிடுவாங்க.
நம்ம சென்னையிலையும் கிட்டத்தட்ட இதே கதைதான். ஆனா, அங்க என்ன கொடுமைன்னா, குப்பையை எல்லாம் காலி இடத்தில் கொட்டி, அதை கொளுத்தி விட்டுடுவாங்க. குப்பையில் இருக்கும் ப்ளாஸ்டிக், மருந்துகள், கெமிக்கல் எல்லாம் சேந்து எரிஞ்சு, சுத்துவட்டாரத்துல இருக்கர வீடுகளில் வாழரவனுக்கு, பல வியாதிகளை இனாமா கொடுத்துக்கிட்டு வராங்க.
இப்படி இருக்கர நம்ம ஊருக்கு, அமெரிக்காவின் குப்பையும் சேந்து வந்தா என்னாகரது?
எனக்கு ஒன்னியும் புரியல. உங்களுக்கு?
5 comments:
நாளைக்கு சந்திப்போம்.
குட்.நைட்!
kayams.
நண்பர் கூறும் ஆயிரம் ரூபாய் எண்பது டாலரில் மிகக் குறைவாகத்தான் வரும். மேலும் மின்சார பில்லுடன் குப்பை அள்ளும் கட்டணமும் சேர்ந்து வருவதால் பெரிதாகத் தெரிவதில்லை.
என்னத்த சொல்ல? மனசுக்குள்ள புலம்பத்தான் வேண்டியிருக்கு
America's carbage bin is India. India never going to come up from this problem.
Post a Comment