எங்க ஊர்ல இந்த வாரம், Art & Wine festival நடக்குது.
ரெண்டு மூணு தெருவெல்லாம் வளச்சு கட்டி, சந்தை மாதிரி கடையெல்லாம் விரிச்சு நெறைய கலைப் பொருட்கள் எல்லாம் வித்தாங்க.
நடுரோட்ல மேடை கட்டி ஏதோ ஒரு band காரங்க popular music எல்லாம் பாடிக்கிட்டு இருந்தாங்க.
அம்சமா இருந்தது.
தொரை என்னமா வாழ்க்கைய வாழறான். ஹ்ம்.
அவன் ஆட்டமென்ன? பாட்டுமென்ன? கலக்கல்.
சொன்னா நம்ப மாட்டீங்க. 90 வயசிருக்கும் சில பெருசுங்களுக்கு, அவங்களும், வந்து ஆடினாங்க.
இன்னும் அசத்தல் விஷயம், ஒரு ஜோடி, புருஷன் வீல் சேர்ல ஒக்காந்திக்கிட்டு இருக்கான்.
பொண்டாட்டி அசத்தலா ஆடிக்கிட்டு இருக்கா, புருஷனும், வீல் சேர விர் விர்னு எல்லா பக்கமும் சுத்திக்கிட்டு, அவளுக்கு ஈடு கொடுத்துக்கிட்டு, வீல் சேர்லயே ஆடறான்.
அடேங்கப்பா. குறிப்பா, டக்கீலா பாட்டுக்கு ஆடினாங்க, கூட்டம் முழுக்க அவங்களேயேதான் பாத்துக்கிட்டு இருந்துச்சு.
நமக்கு ஆங்கிலப் பாட்டு ஞானம் கம்மின்னாலும், பல popular musicன், மேள தாளம் நல்லா புலப்படும். கேட்ட உடனே, ஆஹா, இந்தப் பாட்டு அந்தப் பாட்டுன்னு ஒடம்பு ஆட ஆரம்பிச்சிடும்.
அப்படிப்பட்ட பல பாடல்கள் பாடினாங்க, எல்லாரும் சேந்து ஆடினாங்க.
அங்க வாசிச்ச ட்ரம்மர பாத்தப்பரம் தான், அடடா கேமரா கைல கொண்டு போலியேங்கர கடுப்பு வந்துது. ரசிச்சு, பாடிக்கிட்டே, அடிச்சு வெளாசிட்டிருந்தாரு.
PITன், 'A day at work'க்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள், தெரு முழுதும் கொட்டிக் கிடந்தது.
கேமரா இல்லாத கொடுமையால், அத்தனையும் அம்போ.
சமீபத்தில், கையில் இருந்த கேமரா ஃபோனைவிட்டு, கேமரா இல்லா Blackberryக்கு மாறியதில், அந்த வசதியும் இல்லாமல், வெறுத்தே போனது.
ஆடி, ஆஞ்சு ஓஞ்சு, ஒரு விரக்தியுடன் வீடு வந்த சேந்தப்பரம், கைல இருக்கர படங்களில், 'a day at work'க்கு என்ன தேறும்னு பாத்ததுல, ஆப்டது இதுதேன்:
1)சென்ற ஆண்டு கேரள சுற்றுலாவின் போது க்ளிக்கியது. ( கொசுறு தகவல்: படத்தில் இருப்பவரின் பெயர் கிருஷ்ணன், வயது 60. அந்த வேஷத்தைக் (விஷ்ணு அவதாரம்) கட்டிக் கொண்டு, ஒரு நாள் முழுசா ஆடிக்கிட்டே இருந்தாரு. வயசாயிடுச்சே இந்த வருஷம் வேற யாராச்சும் செய்யட்டும்னு கோயில் காரங்க சொன்னாங்களாம். அவர் பொண்ணு கல்யாணத்துக்கு பணம் தேவைப் பட்டதால், அவரே இந்த வருஷமும் வேஷம் கட்டி ஆடினாராம். 7,000 ரூபாய் வரை ஒரு நாள் காணிக்கையாய் அவருக்குக் கிடைக்குமாம். தனிப் பதிவு மேட்டர கொசுறா போட்டு வேஸ்ட் பண்ணிட்டனோ? :) )
2) அதே கேரளா சுற்றுலாவின் போது க்ளிக்கிய தீ மிதிக்கும் நிகழ்ச்சியின் தொடக்க ஆட்டம்.
3) PITன் இந்த மாசப் போட்டிக்கு ஜட்ஜாயிருந்துக்கிட்டு, புச்சா நானே படம் புடிக்கலன்னா தெய்வ குத்தமாயிடுமேன்னு, புச்சா புடிச்சது. உள்ளது உள்ளபடி.
5 comments:
என்னமோ, ஒரு நாளைக்கு பதிவு எழுதலன்னா, ஒலகமே நின்னுடங்கர மாதிரி, நானும் தூங்கப் போரதுக்கு முன்னாடி, அவசரவசரமா பதிவு போடர அகங்காரம் என்னிக்கு அடங்கமோ தெரீல ;)
குட்.நைட்!
not good
படங்கள் நல்லா இருக்கு. என்ன சமைச்சிருக்கீங்க?
:)
கடாய் பண்ணீர்.
//கடாய் பண்ணீர்.//
என்ன பண்ணீர்? :-))
Post a Comment