
ஆகாககாகா. உங்க வாழ்க்கைல நடந்த பெரீரீரீய திருப்புமுனையைப் பத்தி யோசிச்சு சுவாரஸ்யமா எழுதுங்கன்னு கேட்டிருந்தேன்.
பதிவர்கள் தங்கள் ஃப்ளாஷ் பாக்கை, தத்ரூபமா சொல்லி, பதிவுகள் போட ஆரம்பிச்சிட்டாங்க.
வெரி டச்சிங்!
வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர்களுக்கு, நன்றி சொல்லும் விதமாய் இந்தப் பதிவுகள் அமையட்டும்னு சொல்லியிருந்தேன்.
சிலருக்கு, இந்த திருப்புமுனைகள், நெகட்டிவ்வா அமஞ்சிருந்தாலும், அதையே பாஸிட்டிவ்வா எடுத்துக்கிட்டு, சாதிச்சு காட்டியிருப்பாங்க.
இதுவரை, 'பெரீரீரீய திருப்புமுனை' பதிந்தவர்கள்:
1) குமரன் - M.E சேர்ந்த கதையும், தான் தொடங்கிய காலேஜ் பஜனை கோஷ்டியும் அலசியிருக்காரு.
2) புதுகைத் தென்றல் - பூரியால் நிகழ்ந்த சோகத்தை சொல்லியிருக்காங்க.
3) நெல்லை சிவா - நல்ல வாத்தியாரால் அடைந்த நன்மைகளை டச்சிங்கா சொல்லியிருக்காரு. 'கற்றது தமிழினால்' நிகழ்ந்த ஆரம்பகால இடையூறும், அதைத் தாண்டி முன்னேறிய விதமும் நெகிழ்ச்சி.
4) சரவணகுமரன் - ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
5) ?
..
..
..
X) சர்வேசன் - வாழ்க்கையை மாற்றிய 'அந்த நாள்' பற்றி அலசப் போறாரு.
அப்ப நீங்க? எல்லாரும் எழுதுங்க. open invitation to all.
உங்கள் வாழ்வின் மிக மிக மிகப் பெரீரீரீய திருப்புமுனை எதுன்னு சொல்லுங்க. அதுக்கு காரணமானவங்க யாருன்னு சொல்லுங்க. திருப்புமுனைல, வேற பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க. சுவாரஸ்யமா சொல்லுங்க. உண்மையே சொல்லுங்க.
பி.கு1: உங்கள் அபிமான பதிவர்களை, "பெரீரீரீய திருப்புமுனை" எழுதச் சொல்லி கேட்டுக் கொ-ல்-ல-வும். :) ( இதோ, பின்னூட்டத் தொல்லைக்கு நான் கெளம்பிட்டேன் ).
பி.கு2: சிறிலின் அறிவியல் சிறுகதைப் போட்டி.