recent posts...

Tuesday, February 26, 2008

யாரைத்தான் நம்புவுதோ... ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ....

'பறக்கும் பாவையில்' விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இன்னிசையில், கவிஞர் கண்ணதாசனின் எளிய வரிகளில், சுசீலாவின் இனிய குரலில் வந்த அருமையான பாடல் 'யாரைத்தான் நம்புவுதோ பேதை நெஞ்சம்'.
இதைப் பாட்டா கேட்டா, வரிகளை கவனிக்காம வுட்டுடுவோம்.
கவிதையா வாசிச்சா, கண்ணதாசனின் எளிமை வியக்க வைக்கும்.

என்ஸாய்!
~~~~ ~~~~ ~~~~
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா, பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும், உயிரெல்லாம் கல்லாகும்

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா, பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும், உயிரெல்லாம் கல்லாகும்

வேட்டை ஆடும் மானானேன்
வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் பெண்ணானேன்
ஆணை பெற்றாள் பெண் என்று
அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே
கருணை தந்தால் ஆகாதோ
ஓ..ஓ

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா, பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும், உயிரெல்லாம் கல்லாகும்

அழகாய்க் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்பொதே நன்மை தீமை
பார்த்து சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு?
ஆ...ஆ..

~~~~ ~~~~ ~~~~

;)

25 comments:

வடுவூர் குமார் said...

இப்ப இது ரொம்ப முக்கியம். :-)

SurveySan said...

///இப்ப இது ரொம்ப முக்கியம்.//


புரீலியே. நல்ல பாட்டுங்க இது :)

ILA (a) இளா said...
This comment has been removed by the author.
அரை பிளேடு said...

டைமிங்கோஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ....

:)

ramachandranusha(உஷா) said...

ஒண்ணூமே புரியலே உலகத்துலே
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது

சர்! இந்த பாடல் முழுவதும் இருந்தால் போடவும்

SurveySan said...

//சர்! இந்த பாடல் முழுவதும் இருந்தால் போடவும்//

நல்ல ஐடியா. நாளைக்கு அரங்கேற்றம் பண்ணிடறேன் ;)


இளா, அரைபிளேடு,
கூர்ந்த கருத்துக்கு மெத்த நன்னி ;)

Anonymous said...

இப்ப இது ரொம்ப முக்கியம். :-)

TBCD said...

உண்மை தான் சர்வேசன்...

இப்ப, உங்களைக் கூட நம்ப முடியவில்லை..

உங்க முகவிலாசமும் இல்லை, விவரமும் இல்லை..

என்ன நாஞ்ச் சொல்லுறது..

///
"யாரைத்தான் நம்புவுதோ... ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...."
///

வழிமொழிகிறேன்....

அட அப்பரசண்டிகளா, சர்வேசன் மாட்டியிருக்கார்...வாங்க வந்து கும்முங்கப் பார்ப்போம்....

இலவசக்கொத்தனார் said...

நான் ஒரு எம்ஜியார் ரசிகன். எனக்கு தேவையான பாட்டு

தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தப் பார்க்கணும்

போடுவீங்களா?

டிஸ்கி: சரியாத்தானே போட்டு இருக்கேன். இல்லை தப்பும் தவறுமா ஆயிருச்சோ? :))

SurveySan said...

tbcd,

//இப்ப, உங்களைக் கூட நம்ப முடியவில்லை..
உங்க முகவிலாசமும் இல்லை, விவரமும் இல்லை..
என்ன நாஞ்ச் சொல்லுறது..
//

இணையத்தில் யாரையும் நம்பாதீங்க. வூட்ல இருக்கரவங்க, சொந்தக்காரங்க, ஸ்கூல்/காலேஜ்/அலுவலக/தெரிந்த நண்பர்கள், இவங்கள மட்டும் நம்புங்க.


கைவிலாசமும், விவரமும் குடுத்து எழுதரவங்க நெலம தான் பாக்கறோமே டெய்லி.
ஒரே கப்புங்க நம்ம சூழல். ஜெனடிக்கலி இந்தியன்னா இப்படித்தான் போல :(

SurveySan said...

கொத்ஸ்,

//தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தப் பார்க்கணும்//


நாளான்னைக்கு போட்டுடறேன்.
நாளைக்கு, உஷா நேயர் விருப்பம்.
நீங்க க்யூல 2nd :)

இந்த வாரம், 'தத்துவ' வாரம்.

TBCD said...

சர்வேசன்,

வெப் அபூஸ் இந்தியாவில் மட்டுமெ என்று நீங்கள் நினைத்தால் உங்கள் அறியாமையயை நினைச்சு நான் சிரிக்கத் தான் முடியும்..

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்..

அம்புட்டுத் தான் இன்றைய கருத்து..

மீதி நாளைக்கு..

///

SurveySan said...

இணையத்தில் யாரையும் நம்பாதீங்க. வூட்ல இருக்கரவங்க, சொந்தக்காரங்க, ஸ்கூல்/காலேஜ்/அலுவலக/தெரிந்த நண்பர்கள், இவங்கள மட்டும் நம்புங்க.

கைவிலாசமும், விவரமும் குடுத்து எழுதரவங்க நெலம தான் பாக்கறோமே டெய்லி.
ஒரே கப்புங்க நம்ம சூழல். ஜெனடிக்கலி இந்தியன்னா இப்படித்தான் போல :(

///

Anonymous said...

ந்தா....என்ன இங்கே சத்தம்...என்ன இங்கே சத்தம்...

SurveySan said...

tbcd,

//வெப் அபூஸ் இந்தியாவில் மட்டுமெ என்று நீங்கள் நினைத்தால் உங்கள் அறியாமையயை நினைச்சு நான் சிரிக்கத் தான் முடியும்..//

அப்யூஸ் இல்லாத ஊர்கிடையாதுங்கரது எனக்கும் தெரியுமுங்க. infact, இணையத் தில்லுமுல்லுகள் இன்னும் இந்தியாவில் ஆரம்பிக்கவே இல்ல. தில்லாலங்கடி வேலையெல்லாம் இங்கு ஆஞ்சு முடிச்சிட்டாங்க.
நான் சொல்றது,ஒரு 'கம்யூனிட்டி' ஃபீலிங் கொடுத்த இந்த திரட்டி சூழலில் இப்படி ஒரு குப்பைகள் கிளரப்படுவது மிகக் கேவலமா இருக்கு.
ஆட்டுமந்தைன்னு இருந்திட்டா, ஒரு ஆடாவது ப்ளாக்-ஷீப்பா இருக்கத்தானே செய்யும்.
ஹூ இஸ் த ப்ளாக்-ஷீப்? :)

///அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்..
அம்புட்டுத் தான் இன்றைய கருத்து..
மீதி நாளைக்கு..
//

நாளைக்கு நானும் வேற ஒரு தத்துவ பாடலுடன் வருகிறேன் :)

Anonymous said...

இன்னிக்கு நாந்தான் கெடைச்சனா உங்களுக்கு.....

முடியல....வலிக்குது

வல்லிசிம்ஹன் said...

மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா''

கேக்கலாமா சர்வேசன்:))

SurveySan said...

வல்லி மேடம்,

//மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா''

கேக்கலாமா சர்வேசன்:))//

இதுல தத்துவம் என்னங்க இருக்கு?
தத்துவப் பாடலா இருக்கணும் :)

Anonymous said...

Blogger கவிதா|Kavitha said...

//இன்றைக்கு இந்த கசட்டில் இருந்து எப்படி கையை கழுவுவது என்று தெரியாமல் முழிக்கும் அந்த கோஷ்டியில் பலபேர் எழுதுவதை நிறுத்திவிட்டது எல்லாருக்கும் தெரிந்தது...அனில் குட்டி அனிதா ஒரு உதாரணம்...//

Ravi could you stop this nonsense !! , u dont know the exact reason why I left from blog ok !! ... But 100% I dint left out from blog bcs of poli or karupu even if both r same.

1. Even now my stand is - I never get any worst mail from poli or karupu or if both are same. I add here I never get such mails from anyone. If you say again bcz I didnt get worst mail from Poli, I have link with poli..haha...... with your words you can play a comedy show on this,thats all.. k or if you are serious on this..come out.. let us meet legally.. I still have all your mails with me to take action againt you, that too I wanted you to go first to launch complaint, bcz still am kind enough to handle a human, and I dont really want to spoil anyone's career & life by taking any extreme level actions.

2. I went out bcz of you and chella - Since, all your languages are new to me, I hate to be here to read out all those kind.

3. Chella knows the reasons, after he wrote a post for me . I talked to him directly and conveyed and discussed on this issue. I really dont have any problem with chella now since he realised what he did it for me and removed my post content on my request. So dont try to keep play on this.

3. Even now I am ready to face u legally if you comeout with the proof that I have contact with the poli & karuppu or both are same, I conveyed the same to Chella also if he is also ready to go legally I ll face it. But for that I dont need to be here and write and fight with you guys day to day without doing my normal work, more than that, I cant comedown to your level of language and talk... ok.

4. You dont try to write about me like this.. first of all - you dont have any rights to write about me without knowing y I quit the blog. I dont consider you at all, bcz even after I helped you, you behaved very cheap with me and even now try to show out u r nice !! Ho god !! plz dont use my name here after or if you really want to use - come and let us meet legally...

To all I would like to convey onething very clearly - I didnt go out because Ravi and Chella said "they would take legal action" on me. It is good to me if they take legal action on me, I wanted to prove that I dont have contact with POLI or Karuppu or both r same.

I am ready to face them there instead fight with them here. Let them come out with proof. Damn sure I could face them out but sure not here.

I hate to write in blog bcz the language they use is very worst, I am not brought up such a way to tolerate this kind of double meaning and triple meaning language which I dont need to tolerate also !! Hence, I am away from this blog.

நாமக்கல் சிபி said...

"யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க"

என்ற தத்துவப் பாடலை எனக்காக போடுவீங்களா சர்வேசன்?

Anonymous said...

எனக்கு

"தெய்வம் தந்த ஏடு
பிளாகு இருக்கு
இதில் நீ என்ன
அடியே நான் என்ன
ஞானப் பெண்ணே"

பாட்டு வேணும் சொல்லிட்டேன்!

வவ்வால் said...

சர்வே,

////மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா''

கேக்கலாமா சர்வேசன்:))//

இதுல தத்துவம் என்னங்க இருக்கு?
தத்துவப் பாடலா இருக்கணும் :)//

இதுல செம தத்துவம் இருக்குங்க, (நீங்க எதிர்ப்பார்க்கிற உ.கு தத்துவம் இல்லையோ)

பாட்டு ஆரம்பத்துல ... குட்டியாடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம் , குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம் தட்டுக்கெட்ட மனுசனுக்கு என்று கொஞ்சம் வரும் அப்புறமா தான் மாட்டுக்கார வேலா உன் மாட்டை கொஞ்சம் பார்த்துக்கடானு வரும் நல்ல பாடல்... பிரேம் நசீர் பாடி இருப்பார், இதில ஹீரோ யார் தெரியுமாங்க ... ஆர்.எஸ்.மனோகர் தான் , படம் வண்ணக்கிளி!

நான் சொன்னது சரியா, இந்த படம் தானா வேற படமா , பாட்டு இதானா? சரியா தெரியலை எதுக்கும் செக் செய்துக்கொள்ளுங்கள் !

இப்படிலாம் சொன்னா தான் நாளைக்கு நமக்கு சேஃப் :-))

(நான் சொன்னது உபயோகமான தகவலா இருப்பதாக கருதினால் மட்டும் போடவும், இது உபயோகமா என்று எனக்கு தெரியவில்லை)

Unknown said...

ஒரே கப்புங்க நம்ம சூழல். ஜெனடிக்கலி இந்தியன்னா இப்படித்தான் போல :(

தமிழன்னா கூட இப்படித்தானோ


நானும் அப்படித்தான் இருக்கும்ன்னு நினைக்கின்றேன்...

Hariharan # 03985177737685368452 said...

//ஆட்டுமந்தைன்னு இருந்திட்டா, ஒரு ஆடாவது ப்ளாக்-ஷீப்பா இருக்கத்தானே செய்யும்.
ஹூ இஸ் த ப்ளாக்-ஷீப்?//

ப்ளாக் ஷீப் = கறுப்பு ஆடு

ஆட்டுமந்தை, கறுப்பு, கற்பு-ன்னு தமிழர்களின் (அரசியல்)தமிழுணர்வோடு சர்வேசன் பின்னூட்டி விளையாடலாமான்னு தனியா சர்வே எடுக்கும் படி கொந்தளிப்பு ஏற்படுத்தறீங்களே!

புரட்(டு)சியாளர்கள் திரண்டு வந்தா பேசாம Blog ஷீப்-ன்றதை தமிழ்ப்பற்றோடு தமிழில் ப்ளாக் ஷீப்-னு எழுதினேன்னு டிஸ்கியாக்கி தப்பிச்சுகுங்க!

புளிச்சு..நுரைச்சு..புளிச்சு..நுரைச்சுன்னு பல தடவை ஆகிவிட்ட சப்ஜக்ட் மேட்டர் பத்தி.... மூச் + மூக்கப் பொத்திக்கிறேன்

Anonymous said...

//உண்மை தான் சர்வேசன்...

இப்ப, உங்களைக் கூட நம்ப முடியவில்லை..

உங்க முகவிலாசமும் இல்லை, விவரமும் இல்லை..

என்ன நாஞ்ச் சொல்லுறது..//

முகவிலாசமும் விவரமும் அ(க)ண்ணனுக்கு எதுக்குண்ணேன்?

போலிக்கு அனுப்பி வைத்து ஸ்பை வேலை பாக்கவான்னேன்.

என்ன நாஞ்சொல்றது?

SurveySan said...

//முகவிலாசமும் விவரமும் அ(க)ண்ணனுக்கு எதுக்குண்ணேன்?

போலிக்கு அனுப்பி வைத்து ஸ்பை வேலை பாக்கவான்னேன்.

என்ன நாஞ்சொல்றது?
//

not funny.