recent posts...

Wednesday, June 27, 2007

$3 VISTA, $513 PC - MICROSOFT, AMD, இந்தியர்கள், அல்வா?

IQ PC என்று AMD துணையுடன் Microsoft நிறுவனம் ஒரு Desktop PC உருவாக்கி அதை இந்தியாவில், சீப்பா வினியோகிக்கப் போறாங்களாம்.
$513 விலை இருக்குமாம், இந்த 'Cheap' கணிப்பொறி.

இதெப்படி 'Cheap' ஆகும்னு தெரியல. வெறும் $300 ரூபாய்க்கு, இங்க அமெரிக்காலயே நல்ல PC கெடைக்குது.
Dual Core, Quad Core எல்லாம் மலிவு விலை ஆகும்போது, இவங்க AMDயோட, பழைய ப்ராஸஸர் எல்லாம் நம்ம ஊர்ல கழிச்சு விடப் பாப்பாங்கன்னு தான் தோணுது.
We should not become their dumping ground.

அதுக்கு, $513 ரொம்ப ஜாஸ்தி.

Widows Vista + Office, வெறும் $3 விப்பாங்களாம். அதுவும், $513ல் பாதியை அரசாங்கம் மானியமாக தரும் பட்சத்தில்.

பில் கேட்ஸ், நல்லவர், வல்லவர், திறமையானவர், சாதனையாளர் - ஒத்துக்கலாம்.

ஆனா, இந்த திட்டம் என்னமோ, ஊருக்கு நல்லது செய்ய உருவாக்கர மாதிரி தெரியல.

1 பில்லியன் ஆட்கள் இருக்கும் இந்தியாவில், விஸ்டாவை புழங்க வைத்தால், மைக்ராஸாப்டின் எதிர்காலம், சுபிட்சமா இருக்க அடி போடறாங்கன்னு நெனைக்கறேன்.

உண்மையில் நல்லது செய்யணும்னா, $100 கணிப்பொறியும், Open Source உபகரணங்களும் உபயோகிக்கும்படி கொடுக்கலாம் :)

ரிலையன்ஸ், டாடா எல்லாம் என்னங்க பண்றீங்க?
Taiwan மாதிரி, கணிப்பொறி assembling plant ஊர்லயே உருவாக்கி, உற்பத்தி பெருக்கி, சீப்பா விக்கலாமே?

விவரங்கள் இங்கே. உங்க கருத்தும் சொல்லுங்க.

பி.கு1: என் 8 மேட்டர் படிச்சாச்சா?

பி.கு2: Brahminical - Arrogance தீர்ப்பச் சொல்லுங்க.

Monday, June 25, 2007

அதிரடி சிவாஜி + இள வயது பாடகர்

சிவாஜியில் வரும் 'அதிரடி' பாடலை பின்னி பெடலெடுத்திருக்கிறார் இரண்டு வயது நித்தின்.

இங்கே க்ளிக்கி கேட்டுப் பாருங்க. புல்லரிச்சிடும் :)
பாடலைக் கேட்டு, நித்தினுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவும்.

குட்டீஸ் போட்டிக்காக ப்ரசன்னா தன் மகன் நித்தினின் பாடலை அனுப்பியிருக்கிறார்.

குட்டீஸ் போட்டி ஆரம்பித்து வாக்கெடுப்பு சூடாக போய்க்கொண்டிருப்பதால் (70+ votes), இந்தப் பாடலை இப்பொழுது சேர்க்க முடியவில்லை. அடுத்த போட்டி வெகு விரைவில் வைத்து, அதுல போட்டுடலாம்.

இதுவரை வாக்கு போடாதவங்க, பாடல்களைக் கேட்டு, கண்டிப்பா வாக்குங்க.

எட்டு வெளையாட்டு போயிட்டிருக்கு. என்னோட எட்டு பதிவ படிச்சு, என் சாதனைகளை பாராட்டி வரும் மடல்களுக்கு நன்றி.
கற்றது கைமண்ணளவே. இன்னும் எவ்ளவோ இருக்கு சாதிக்க.
உங்கள் வாழ்த்துக்களுடன் என் சாதனைகள் தொடரும். நன்றி!

Sunday, June 24, 2007

அயிரைமீன் சமைப்பது எப்படி? - வைரமுத்து ச.குறிப்பு.

அயிரைமீன் சமைக்கரத பத்தி சூப்பரா விவரிச்சிருக்காரு பாருங்க நம்ம வைரமுத்து.

எனக்குதான் சாப்புடர ஆச போயிடுச்சு. (மீன உயிரோட சட்டீல போட்டு சித்தரவத பண்றதெல்லாம் தப்பில்லயோ? )

ஐயோ பாவம் அயிர மீனு.

கொன்றால் பாவம் தின்னா பூடுமோ?

சமச்சுட்டு சொல்லுங்க. ஆனா, அவரு சொல்றமாதிரி மீனெல்லாம் எங்க கிடைக்கும்?

(படத்த க்ளிக்கினா பெருசா தெரியும். குமுதத்துலயும் படிக்கலாம்)


பி.கு1: என் எட்டு பதிவு படிச்சீங்களா. படித்துவிட்டு, என் சாதனைகளை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

பி.கு2: குட்டீஸ் போட்டி நடக்குது. பாட்ட கேட்டுட்டு ஓட்டுப் போடுங்க. நன்றி!

பி.கு3: Brahminical - வெக்கப்படாம, கருத்த சொல்லுங்க மக்கா.

பி.கு4: ஐயப்பனும், ஓசை செல்லாவும் இணைந்து புகைப்படம் எடுப்பதைப் பற்றி ஒரு பதிவு உருவாக்கப் போறாங்க. என் பங்கும் ஓரளவுக்கு முடிந்தவரை இருக்கும். நீங்களும், உங்க வித்தைய அங்க காட்டுங்கோ. நன்றி!

Friday, June 22, 2007

இது என்னன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்...

நண்பனின் 1 1/2 வயது குழந்தை, நண்பனுக்கு விட்ட voice.mailல் இருந்த விஷயம் இது.

கேட்டுட்டு, குழந்தை என்ன சொல்லிச்சுன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்.

பின்னூடுங்க.

1 1/2 வயசுல, அது பண்ற லூட்டி, அடேங்கப்பா! :)

இங்க க்ளிக்கி கேளுங்க.

பி.கு1: என் எட்டு பதிவு படிச்சீங்களா. படித்துவிட்டு, வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

பி.கு2: குட்டீஸ் போட்டி நடக்குது. பாட்ட கேட்டுட்டு ஓட்டுப் போடுங்க. நன்றி!

பி.கு3: Brahminical - வெக்கப்படாம, கருத்த சொல்லுங்க மக்கா.

பி.கு4: ஐயப்பனும், ஓசை செல்லாவும் இணைந்து புகைப்படம் எடுப்பதைப் பற்றி ஒரு பதிவு உருவாக்கப் போறாங்க. என் பங்கும் ஓரளவுக்கு முடிந்தவரை இருக்கும். நீங்களும், உங்க வித்தைய அங்க காட்டுங்கோ. நன்றி!

ஜமாய்ங்க!

Thursday, June 21, 2007

எட்டெல்லாம் பத்தாது சார்... அதிசயப் பிறவி நான்!

எட்டு விளையாட்டு ரொம்பவே நல்லா இருக்கு. வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்கள், சில சாதனைகள், சில அனுபவங்கள் என மக்கள்ஸ் பிரிச்சு மேஞ்சிருக்காங்க.
நம்மளயும் மதிச்சு சிறில் விளித்திருக்கிறார். அவருக்கு நன்றி.

என் வாழ்வில் நடந்த விஷயங்கள்/சாதனைகள்/சந்தோஷங்கள் எல்லாம் சொல்ல எட்டெல்லாம் பத்தாது.
ஆனாலும், குடுத்த எட்டு ருலுக்குள்ள, முக்கியமான நிகழ்வுகளை சொல்ல முயன்றிருக்கிறேன்.
பழைய நிகழ்வுகளை அசை போட உதவிய, இந்த 'எட்டு' ஆரம்பிச்சவருக்கு நன்றி.
ஹ்ம். மொத்தத்துல வயசாவுது என்பது, கொஞ்சமா ஒரைக்க ஆரம்பிச்சிருக்கு :)

மேலே படியுங்கள்.
1) சின்ன வயதில் படு சுட்டியான குழந்தையாய் இருந்தேன் என்று எங்க அம்மா எப்பவும் சொல்வாங்க. Grasping power பயங்கர ஜாஸ்தியாம். ஊர்களின் பெயர், சொந்தக்காரர்களின் பெயர்கள், யாருக்கு யார் wife, யாருக்கு யார் husband இந்த மாதிரி விஷயங்கள் சட்டு சட்டுனு சகட்டு மேனிக்கு ஒப்பிப்பேனாம். சில சமயங்களில், என் புத்திசாலித்தனத்தால் பயந்தே கூட போயிருக்காங்களாம். நாலு வயதில், என் மூளை அறிவை கண்ட என் kinder-garden miss, ஒரு நாள் என்னை அழைத்து, திருக்குறள் சொல்லிக் கொடுத்து, மனப் பாடம் செய்யச் சொன்னார். 6 மாதங்களில், 1330 குறளையும், மனப்பாடச் செய்து பட்டு பட்டு என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.. என் திறமையைக் கண்டு அதிசயித்த பள்ளி தலைமை ஆசிரியர், அவரின் influence உபயோகித்து, அந்த வருட சுதந்திர தின கொடியேற்ற விழாவுக்கு என்னை டில்லி, அழைத்துச் சென்றார். எனக்காக 15 நிமிடம் ஒதுக்கிக் கொடுத்தனர்.
இந்திரா காந்தி அன்றைய பிரதமர்.
மைக் முன்னால் நின்று கொண்டிருந்த என்னிடம், இந்திரா காந்தி, "Dear, tell me a Kural, which ends in EYE" என்றார்.
பேங்கப் பேங்கப் விழித்த என்னிடம் வந்த என் miss, "கண்'ல முடியுமே, அத சொல்லு" என்றார்கள்.
நானும், உடனே
"கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்
"
என்று சொல்ல, கைதட்டல் வானைப் பிளந்தது, இன்றும் என் காதுகளில் ஒலிக்கும்.
என் பெற்றோர் கண்கள் கலங்கியதும் நினைவில் இருக்கிறது.

2) நாலு வயதில் தொடங்கிய பாப்புலேரிட்டி, ஒவ்வொரு வருடமும் தொடர்ந்தது. 10 வயதிருக்கும் என்று நினைக்கிறேன். செஸ் விளையாட்டில் அதி தீவிரமான ஆசை உருவானது. அதிலும், பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் ஜமாய்த்துக் கொண்டிருந்தேன். (வீட்டில் என் அண்ணா ஒரு கோப்பை வாங்கினால், அந்த வருடம் நான் 20 வாங்கி,அவனுக்கு செம கடுப்பு ஏற்றுவேன் ). அந்த வருடம், சென்னையில் ஒரு exhibition match விளையாட Klenstrov வந்திருந்தார். பள்ளி PT ஆசிரியர், என்னையும் இன்னும் சில மாணவர்களையும் போட்டியை நேரில் காண அழைத்துச் சென்றார்.
Klenstrov, அனாயசமாக மற்ற நாட்டு வீரர்களை ஜெயித்து, கோப்பையை வென்றிருந்தார். அன்றைய finals முடிந்து press-meet நடந்த போது, Klenstrov, "There is no one in the world to beat Russians" என்று சொல்லியிருந்தார்.
இதைக் கேட்டு கடுப்பான என் PT உரத்த குரலில், "Klenstrov, do you mind trying your hands with Karthik" என்றார். Klenstrov சற்றும் தாமதிக்காமல் "sure" என்று கூறினார்.
அனைவரின் கவனமும் என் பக்கம் திரும்ப. நானும் Klenstrovம், விளையாட ஆரம்பித்தோம்.
6 1/2 மணி நேரங்கள் தொடர்ந்த ஆட்டத்தில், நான் வெற்றி பெற்றேன்.
பார்வையாளர்கள், என்னை தோளில் சுமந்து மேடைக்கு அழைத்துச் சென்று தூள் பண்ணி விட்டார்கள்.
Klenstrovம் நாணிப் போனார். "I apologize, you Indians are brillaint. Hats of Karthik" என்று கூறி, அவரின் கோப்பையை என்னிடம் கொடுத்தார்.
வீட்டில் குவிந்திருந்த கோப்பை பத்தாதென்று, இன்னொரு கோப்பையுடன் வந்த என்னைக் கண்ட என் அண்ணன் பொறுமியது தனிக் கதை.

3) பள்ளிக் காலத்தில், பல வெற்றிகள் பரிச்சியமானதால், பத்தாவது வகுப்பில் (metric), மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தது ஒரு பெரிய வியப்பை தரவில்லை.
வீட்டிலும், ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணாமல், சிம்பிளாக கழிந்தது அந்த நிகழ்வு. MGR கையால் கிடைத்த, 10,000 ரூபாயை, நான் நன்கொடை கொடுத்தது அன்றைய தினத்தந்தியில் முதல் பக்கத்தில் வந்தது நினைவிருக்கிறது.
+2 வில், மட்டும், மாநிலத்தில் மூன்றாவது இடம் தான் கிடைத்தது. கணக்கு விடைத்தாளில், கடைசி இரண்டு தாள்களில், பேனா ink கொட்டி எழுதியது அனைத்தும், கடைசி நிமிடத்தில் அழிந்து விட்டதால் சுளையாக 20 மதிப்பெண்கள் குறைந்து, பெரிய சதி செய்து விட்டது.
முதலாவதாக வராத ஒரு பரீட்ச்சை நினைவுக்குத் தெரிந்து அதுதான் என்று நினைக்கிறேன்.
வாழ்க்கை மேடு பள்ளம் நிறந்ததென்று புரியத் துவங்கியது. (என் அண்ணன், எகத்தாளமாக சிரித்தது, இன்னும் ஞாபகம் இருக்கிறது. "டேய் கார்த்திக், தேவைடா உனக்கும். ரொம்ப ஆடின இல்ல. அதான் கடவுள் ink கொட்டிட்டாரு", என்பான் :) )

4) விரும்பிய படியே, IIT Delhiல் B.Tech Computers கிடைத்தது. IIT JEEல், 14ஆவது rank. +2வில் கிடைத்த மூன்றாவது இடம் தந்த கசப்பே மாறாத போது, 14 அந்த கசப்பை மேலும் அதிகமாக்கி இருந்தது.
இருந்தாலும், IIT காலங்கள் அற்புதமாய் முடிந்தது. கல்லூரியின் இறுதி ஆண்டு படிக்கும்போதே, நானும் எனது நண்பனும், sideல் துவங்கிய, ஒரு product அற்புதமாய் வளர்ந்தது. தனிக் கம்பெனி துவங்கலாம் என்று ஆரம்பிக்கும்போது, ஒரு அமெரிக்க நிறுவனம் அந்த product demo கண்டு, அதை தாங்களே வாங்கிக் கொள்வதாக சொல்லி, 18 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொண்டது. 20 வயதிலேயே, 9 கோடி சம்பாதித்தது பெரிய சந்தோஷத்தைக் கொடுத்து, computerல் இருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை ஊர்ஜீதப் படுத்தியது.

5) வேலைக்குச் உடனே செல்லும் அவசியம் இல்லாததால், IITல் தொடர்து M.TECH முடித்து, அமெரிக்க நிறுவனம் ஒன்றில், Senior Architectஆக சேர்ந்து, அவர்களின், சரியாக செயல்படாத, ஒரு divisionஐ 6 மாதங்களுக்குள் முன்னேற்றி, $450 million revenue ஈட்டிக் கொடுத்தது ஒரு சவாலான வருடம். நானும், என்னுடன் இருந்த மற்ற IIT'ians, திறமையைக் காட்டினதால் தான், நம் மக்களின் மூளைத் திறன், அமெரிக்க நிறுவனத்திர்க்கு புலப் பட்டது. out-sourcing ஆரம்ப காலத்தில், அந்த நிறுவனம் தான், முதல் முதலீட்டை இந்தியாவில் செய்தது. என்னுடன் அன்று இருந்த நித்யானந்தம், வேலாயுதம் ஆகியோரின் பெயரை இணைத்து "Kar-Ni-Vel" என்று பெங்களூரில் ஒரு பெரிய out-sourcing department உருவாக்கப் பட்டது.

6) கார்கில் போர் ஆரம்பித்திருந்த காலம். நித்யானந்தனும் நானும் நல்ல நண்பர்கள். "என்னடா நித்யா, நம்ம இங்க $ சம்பாதிக்கறோம், அங்க நம்ம soldiers தெனமும் செத்துக்கிட்டு இருக்கான். என்னடா வாழ்க்கை வாழரோம். இதெல்லாம் கண்டுக்காம அப்படியே இருந்திடணுமாடா" என்ற ரீதியில் பேசிக் கொண்டிருந்தோம். New Yorkல் World Trade Center இருந்த நேரம் அது. மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கும்போது, அன்றைய தினம் அமெரிக்க சுற்றுலாப் பயணம் வந்த, Indian Army General "Shekawat Singh"ஐ பார்த்தோம். மற்றொரு நண்பர் மூலமாக பரிச்சயம் அவர்.
எங்கள் மனவருத்தத்தை அவருடன் பகிரும்போது, "You guys belong in India. We need thoughtful brain like yours badly back home" என்றார்.
நாங்க என்ன சார் பண்ண முடியும் இந்தியாக்கு, என்றபோது, RAW என்ற இந்திய நாட்டின் CIA equivalent பற்றிச் சொன்னார்.
அடுத்த flight பிடித்து, நானும் நித்யாவும், அமெரிக்க வேலையைத் துறந்து, டில்லி பறந்தோம்.
RAWல், ISIன் சங்கேத messageகளை, decrypt செய்யும் வேலையில் பணிக்கப் பட்டோம்.
எட்டே நாட்களில், ஒரு decryptர் எழுதி, சகல ரகசியங்களும் எளிதில் புரியும்படி ப்ரொக்ராம் எழுதி, அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்றோம்.
ஒரு message உடனுக்குடன் decrypt செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்ற தகவலை Shekawat ஒரு பாராட்டு விழாவில், பிறகு சொன்ன போது நெகிழ்ச்சியாக இருந்தது. அப்துல் கலாமை முதலில் சந்தித்த தினம் அன்று தான்.

7) Defense Department தரப்பில் இருந்து வரும், பல அழைப்புகளை ஏற்று நானும் என் நண்பனும், பல உதவிகள் புரியத் துவங்கினோம். அணு ஆயுத சோதனை செய்த நாட்களில் கூட, super computerல் சில மாற்றங்கள் செய்து, மூன்று நாட்கள் செய்ய வேண்டிய testஐ, ஒரே நாளில் முடிக்க உதவினோம். அந்த சாதனை மறக்க முடியாதது.
இந்தியாவை ஒரு வல்லரசாகக் காணச் செய்ய செலவழித்த தூக்கம் இழந்த இரவுகள், இன்று நினைத்தாலும், கண்ணில் நீர் பெருக்கச் செய்கிறது.

8) எட்டாவது என்ன சொல்லலாம்னு யோசிச்ச போது. சமீபத்தில் ரஷ்ய விண்வெளிக் கூடத்திடம், விண்வெளிக்கு சுற்றுலா செல்ல பெயர் கொடுத்த சம்பவம் ஞாபகம் வந்தது.
கலாம், இந்தியாவும், சந்திரனுக்கு ஆள் அனுப்ப வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளார். இந்த ரஷ்ய விண்வெளி சுற்றுலா, பல புரிதல்களைத் தரும் என்று எதிர்பார்க்கிறேன். ( பணம் தான் கொஞ்சம் ஓவர் செலவு. $12 மில்லியன் டாலர், கட்ட்ணும். பாதி, அரசாங்கம் தருகிறது).

வாழ்க்கை ஒரு பெரிய ஆர்ப்பரிக்கும் நீரோட்டம். பளுவான வேலைச் சூழல்களிலும், சந்தோஷம் தரும் நிகழ்வு இந்த தமிழில் பதிவெழுதும் வாய்ப்புதான். ஆனால், இங்கேயும், அரங்கேறும் சில சண்டையெலாம் பாத்தாதான், கஷ்டமா இருக்கு. நண்பர்களே, நம் இந்தியாவை அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டு உயர்த்துவோம்.

இவ்வளவு கால வாழ்க்கையில் நடந்த சம்பவம் மேலே சொன்ன எட்டு, அடுத்த எட்டில், ஏழ்மையை ஒழிக்க ஏதாவது செய்யணும்னு ஆசை. ஆப்ரிக்கா, இந்திய கிராமங்களில் இழையோடும் பசிக் கொடுமையை ஒழிக்கவும் ஏதாவது செய்யணும்.
ஆசை இருக்கு, ஆண்டவன் வாய்ப்பளிப்பானா என்று தெரியவில்லை.

பி.கு1: சரி, வந்தது வந்தீங்க, குழந்ததகளுக்கான பாட்டுப் போட்டி சர்வேயில், வாக்களித்து, குட்டீஸை ஊக்குவியுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்க்கே!

பி.கு2: எட்டு போடரவங்க எல்லாரும் இங்க வந்து அவங்க எட்டு URL பின்னூட்டுங்க. ஒரே எடத்துல இருந்தா, படிக்க ஈஸியா இருக்கும் :)

பி.கு3: Brahminical - பதிவர்களின் தீர்ப்பு பாத்தீங்களா? உங்க தீர்ப்பு சொல்லிடுங்க.

பி.கு4: நேக்கு அண்ணாவெல்லாம் கெடையாது. கார்த்திக் என் பேரும் கெடையாது. அப்ப, மத்த மேட்டரெல்லாம்? ஹி ஹி. ரொம்ப ஓவராயிடுத்தோ :)?

பி.கு5: சுகராகமே, வசீகரா, ஆயிரம் கண் - நேயர் விருப்பத்துல பாடுங்களேன். நான் சுகராகமே இழுத்திருக்கேன்.

Thanks for your time!

Enjoy the weekend!

நான் அழைக்கும் நண்பர்கள், என் hall-of-fame சேர்ந்தவர்கள்.
எட்டு பேர்தான் கூப்பிடணும். ஆனாலும், பல பேர் ஏற்கனவே எட்டு போட்டுட்டதால, பத்தா கூப்பிடறேன். போடாதவங்க போடுங்க. போட்டவங்க, உங்க URLல்ல இங்க பின்னூட்டுங்க.
1) நெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)
2) பெருசு (த.வெ.உ IInd)
3) Aparnaa (த.வெ.உ IIIrd)
4) வெட்டிப்பயல் (best blogger'06)
5) சந்தோஷ் (IInd - best '06)
6) செந்தழல் ரவி (IIIrd - best'06)
7) குமரன் (top6 2006)
8) பெனாத்தல் சுரேஷ் (top6 2006)
9) WeThePeopleIndia (top6 2006)
10) ராதா ஸ்ரீராம் (என்னை அழகு பதிவு போட அழைத்தவர். நான் இன்னும் அந்த பதிவ போடல. anyway, returning the favour(?) :) )

ரூல்ஸ் இதுதான்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
ஆப்ஷனல் ரூல்:
4. முக்கியமா கப்ஸா விடக்கூடாது!

ஜமாய்ங்க!

Monday, June 18, 2007

குட்டீஸ் பாட்டுப் போட்டி - சர்வே

நண்பர்காள்,

உங்கள் வீட்டிலும், சுற்றத்திலும், நட்பு வட்டத்திலும் இருக்கும் பொடீசுகளைத் திரட்டி, ஆளுக்கொரு பாட்டு பாட வச்சு, பதிஞ்சு அனுப்புங்கன்னு சொல்லியிருந்தேன்.

6 பேர் கோதால இறங்கினாங்க. அதுல, மூவர் பாடல் அனுப்பாம வுட்டுட்டாங்க (bvp - bad voice problem, tech problems :)).

ஆர்வமுடன், பாடலை அனுப்பிய மூன்று பேருக்கும் நன்னி!

இனி, உங்க வேல, இந்த மூன்று பாடல்களையும் கேட்டுவிட்டு, உங்களுக்கு ரொம்ப புடிச்சதுக்கு ஒரு ஓட்டு போடுங்க. பாடல்களை முழுசா கேளுங்க. சுவாரஸ்யமா, சூப்பரா இருக்கு, மூணும் :)

பரிசுகள், ஜுலை 1 அன்று அறிவிக்கப்படும். (1st, 2nd, 3rd என மூன்று பேருக்கும் பரிசு உண்டு :) )

பாடலைப் பாடி, பின்னி பெடலெடுத்திருக்கும் வாண்டுகள்:
1) அமுதசுரபியின் ~ பொங்கலோ பொங்கல்
2) மாதினியின் ~ ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
3) மணிமலரின் ~ லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே

பாட்டை கேட்டுட்டு ஓட்டு போடுங்க! :)


பி.கு: அபி பாப்பாவும், சர்வோதயனும், விதுலா வும், பாடலை பதிந்து அனுப்பவும். லேட்டானாலும் பரவால்ல. நாங்க பாட்ட கேட்டே ஆகணும். :)

Sunday, June 17, 2007

Yahoo Photos மூடுவிழா

இங்கே க்ளிக்கி விவரங்களை அறியவும்.


வேற புதுசா ஏதாவது விஷயம் தெரிஞ்சா பகிரவும்.

நன்றி!

BRAHMINICAL ARROGANCE - பதிவர்களின் தீர்ப்பு!!!

இந்துக் கோயில்கள் சிலவற்றுள், 'மாற்று' மனிதர்களை அனுமதிக்காத, பழமைவாதக் கோட்பாடை எடுத்துக் காட்டி ஒரு பதிவு போட்டிருந்தேன்.

கடவுள் எல்லோருக்கும் பொதுதானே? அவருக்கு இல்லாத பாரபட்சத்தை, மனிதன் ஏன் உருவாக்கினான்?
ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திர்க்காக ஏதோ சில மனிதர்கள் உருவாக்கிய இந்த கோட்பாடுகள், இன்றைய வாழ்க்கை முறைக்குத் தேவையா?

சில கோட்பாடுகளின் உண்மை குணம் தெரிந்தபின்னும், அதை தூக்கி வைத்து அணையா விளக்காய் காத்திடத் தான் வேண்டுமா?

பலர் பலவிதமான நல்ல கருத்துக்களை முன் வைத்தார்கள்.

இந்த மாதிரி கோட்பாடுகள் அவசியம் என்றும் சில பதிவர்கள் வாதிட்டார்கள்.
எல்லாருக்கும் எல்லா விஷயங்களும் ஒரே மாதிரி தெரியாதே.
ஒவ்வொரு ப்ரச்சனைக்கும், நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான கருத்து இருக்கலாம்.
நல்லது.
இருந்து விட்டுப் போகட்டும்.
அடுத்தவன் சுதந்திரம்/சந்தொஷத்தில் முட்டுப் போடாதவரை.

The world is getting smaller and smaller. இந்தியா மாதிரி நாடுகளில், மத நல்லிணக்கம், மனித நேயம், ஒற்றுமை, இதெல்லாம் மிக அவசியம்.
ஒரு 'சிகப்பு போர்டு' போட்டு, ஒரு சிலரை உள்ளே அனுமதிக்காமல் இருந்து நாம் என்ன சாதித்து விடப் போகிறோம்?

பல ஆயிரம் ஆண்டுகளாய் பலரையும் அரவணைத்து, நல்வாழ்க்கை முறையை சொல்லித்தந்த இந்துமதம், தன் நிழலை பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மனித குலத்துக்கும் கொடுக்க வேண்டும்.

anyway, இந்தப் பழமைவாதக் கோட்பாடு நடுவில் வந்த ஒன்று.
லார்டு கிச்சா சொல்லி உருவானதல்ல என்பதை யாரும் மறுக்கவில்லை.

மனிதர்களின் பிரதிநிதிகளும், பூசாரிகளும் (ஏதோ ஒரு காரணத்துக்காக) அன்று உருவாக்கிய கோட்பாட்டை, இன்றைய காலகட்டத்தில் தேவை இல்லை என்று தெரிந்த பின், நம் பிரதிநிதிகளின் துணை கொண்டு உடைத்தல் தான் சரி.

இந்துக்கள் அல்லாதோர், புனிதம் குறைந்தவர்கள் என்பது போல், எண்ண வைக்கும் குருவாயூரின் சில கோட்பாடுகள் கண்டிக்கத்தக்கத்து.

ஒரு மனிதன் உள்ளே நுழைந்ததர்க்காக, தீட்டைக் கழிக்கும் புண்ணியாஜனம்/cleansing செய்வது, என்னைப் பொறுத்தவரை காட்டுமிராண்டித்தனம், மொள்ளமாரித்தனம், அயோக்கியத்தனம், $$!@!#!~~@!#!#!#!@#@! த்தனம்.

மூன்று வாரங்களுக்கு முன்னால் CNN-IBNல் வந்த செய்தி:
The Head Priest of the Guruvayur Temple in Kerala has said that non-Hindus cannot enter the temple. Priests and religious heads had met in Thrissur on Thursday to discuss who can be allowed inside the temple after the recent controversy around the purification ceremony conducted in the Guruvayur Temple following the visit of Union Minister Vayalar Ravi’s son Ravi Krishna. The temple authorities had objected to Krishna’s visit because his mother, Mercy, is a Christian and claimed that his visit had defiled the temple, which is the abode of Lord Sree Guruvayurappan. Over 70 percent of the priests who attended the meeting were against the entry of non-Hindus.

இது தொடர்பாக போடப்பட்ட பழைய சர்வேயின் முடிவுகள்.


இந்த 'Brahminical' ப்ரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க என்னதான் வழி?.
இது தொடர்பான மூன்று ( 1, 2, 3 )பதிவுகளில் வந்த கருத்துக்கள் இவை.

1) மாற்று மதத்தவரை, சில கோயில்களில் அனுமதிக்காத கோட்பாட்டை, சட்ட ரீதியாக உடைப்பதை வரவேற்கிறேன். இந்துக் கோயில்கள் அனைவருக்கும் தன் கரம் நீட்டலாம்.
2) குருவாயூரின் இந்தக் கோட்பாடு, தீண்டாமையை ஒத்தது. சிகப்பு போர்டை உடனே உடைத்தெறிய வேண்டும்.
3) கோட்பாட்டை மாற்றக் கூடாது. சில கோயில்கள் இந்துக்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும். சில ஆகமங்களை கடைபிடிக்க வேண்டியது நம் கடமை.
4) மசூதியையும், சர்ச்சையும் கோட்பாட்ட மாத்த சொல்லு மொதல்ல.
5) இதை விட பெரிய ப்ரச்சனை ஊரில் இருக்கும்போது, இந்த குருவாயூர் ப்ரச்சனையை கிளறுவது வேண்டா வேலை.
6) யார் எப்படிப் போனா எனக்கென்ன.

என் தீர்ப்பு/விருப்பம் - #1.

இம்முறை சர்வே கிடையாது.

பின்னூடுங்கள், உங்கள் தீர்ப்பை. ( நோ கும்மீஸ் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்! டிஸ்கோ ஓ.கே :) ).

குருவாயூரப்பன் அருள் புரியட்டும்!

நம்ம பண்ற அலம்பல்ல, எனக்குத் தெரிஞ்சு, லா.கிச்சா, என்னிக்கோ குருவாயூர விட்டு escape ஆகியிருப்பாரு. :)

ஊர்ல எவ்ளவோ கண்றாவி மேட்டரெல்லாம் நடக்குது. இத புடிச்சு ஏன்யா தொங்கணும்னும் தோணுது.
Point is this: I am fascinated and drawn by the aura of Guruvayoor temple. I enjoyed my each and every visit to that temple and looking forward to my next visit. The early morning prayers, the smell of chandan, vilakku, happy people, the color, the surroundings, the elephants, Lord Kicha are matchless among the other places I have visited.
I want to share this experience with my non-Hindu friends without any hitches. Ofcourse, I can ignore that 'red board' and slide in with my friends.
But, the very sight of that 'red board' makes me sick and I want that removed, lawfully.
We all know the history behind the 'red boards' in our temples - lets not carry it forward. Its a symbol of disgrace and a showcase of our dark past.

நன்றி! Amen!

பி.கு2: தேமேனு, பெண்களிடம் ஆண்களுக்கு அதிகம் பிடித்தது என்ன என்பது போன்ற டைம்-பாஸ் சர்வேக்கள் போட்டு பொழுத கழிக்காம, இந்த BP எகிறும் பதிவுகள் தேவையா?

வாழ்க்கை வாழ்வதற்கே! சிவாஜி பாத்தாச்சா? பாட்ஷாவை விட பேஷா? சான்ஸே இல்லியா? (அடுத்த சர்வே அதுதான்:) )

Thursday, June 14, 2007

அபி அப்பா எங்கிருந்தாலும் அபி பாப்பாவுடன் மேடைக்கு வரவும்...

அபி அப்பா சார், எங்க சார் போயிட்டீங்க?

ஊர்ல எல்லாம் சுகமா? வெயில் பின்னி எடுக்குதாமே?

பாட்டு எங்க சார்?

ஜூன் 15 ஆச்சு சார். போட்டி ஆரம்பிக்கணும்.
சந்தைக்கு போணும் ஆத்தா வையும். பாட்ட அனுப்பு :)

4 பேர்ல 2 பேர் பாடல் அனுப்பியிருக்காங்க. அபி பாப்பா பாட்டு வரல, சர்வோதயானின் பாட்டும் வரல. பத்துல, மீதி ஆறு இடங்களும் காலியா வேற இருக்கு.
நான் ரெண்டு மூணு எடத்த ஜானு மாதிரி பாடி ஃபில் பண்ணலாம். மீதி எடத்த எப்படி ரொப்பரது?

குட்டீஸுக்கு இப்படி பஞ்சமாயிடுத்தே இணையத்துல?

1) அபி பாப்பா ( வயது ? )
2) மாதினி (வயது 9)
3) அமுதசுரபி (வயது 8)
4) சர்வோதயான் (வயது ?)
5)
6)
7)
8)
9)
10)

அபி சார் டக்குனு அனுப்புங்க. சர்வோதயான் அப்பா சார், எங்க இருக்கீங்க? டக்குன்னு அனுப்புங்க.

இன்னும் ரெண்டு நாள் டயம் தரேன். திங்கள் கிழமை போட்டி ஆஆஆரம்பம்! :)

போட்டிக்கு வந்த பாடல்களில் ஒண்ணு சேம்பிளுக்கு இங்கே.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாடலைபின்னி பெடலெடுத்திருப்பதைக் கேளுங்கள்.

இதக் கேட்டாவது, தங்கமணிகளும், ரெங்கமணிகளும் வீரு கொண்டு எழுந்து, தன் வீட்டு குட்டீஸை அடித்தோ அரவணைத்தோ, பாடச் செய்து, பாடலை அனுப்புங்கோ :)

பி.கு: அதுக்கூன்னு அடிக்காதீங்க. சும்மா டமாசுக்கு சொன்னேன்.

பி.கு: முக்கிய பிரமுகர் சிவாஜியை புறக்கணித்த விஷயம் படிச்சீங்களா?

பி.கு: Brahminical - Final Take - சொல்லாதவங்க சொல்லுங்க. சூடான சுவையான திறமையான விவாதங்கள் போயிட்டிருக்கு.

Wednesday, June 13, 2007

சிவாஜி - புறக்கணிப்பு

எங்கு பார்த்தாலும் சிவாஜிமயம்.
ட்ரெயிலர் பார்த்தவரை படம் கண்டிப்பா தேறிடும்னே தோணுது.
குறிப்பா, ஷங்கர் பாணியில் ஒரு நல்ல மெஸேஜ் சொல்லும் படமா இருக்கும்னு தெரியுது (Rich get richer , poor get poorer, blah blah ..... ).

நான் தீவிர ரஜினி ரசிகன் இல்லன்னாலும், ரஜினி படம் புடிக்கும். குறிப்பா, பாட்சா போன்ற படங்கள்.
ரஜினி, என் கூட நடிச்ச சக நடிகர் என்ற ரீதியிலும், சிறு வயதிலிருந்தே ஒரு ஈர்ப்பு இருக்கு அவர் கிட்ட :).

சிவாஜி, பாட்சா அளவுக்கு டக்கரா இருக்குமான்னு தெரியல. ஆனா, பாட்சாவை விட quality கண்டிப்பா இருக்கும். பாட்சால சண்டைக் காட்ச்சியில் பொம்மை துப்பாக்கின்னு நல்லாவே தெரியும். ஒட்டு தாடி, இப்ப விழலாமா, அப்பறம் விழலாமான்னு காத்துக்கிட்டு இருக்கும்.

ஆனாலும், 'எனக்கு இன்னோரு பேரும் இருக்கு'னு ரஜினி சொல்ற காட்சியில்,
பாஷா பாஷா, டான் டட்டட்ட டான்னு ஒரு பேக்ரவுண்ட் சவுண்டோட வர சீனுக்கு நிகர்,
தமிழ் படங்கள்ள கிடையவே கிடையாது!! சும்மா, ஒரு நிமிஷம் ப்ரமை பிடிச்ச மாதிரி இருந்தது அந்த சீன் முதல் முறை பார்த்த போது. (வேற சீன் இருக்குன்றீங்களா? எந்த சீன்? எந்த படம்? யாரு சொல்றது?)

சிவாஜி படத்துக்கு விமர்சனம் எழுதரவங்க, பாட்சாவோட compare பண்ணி, படம் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

என் விமர்சனம் வர லேட்டாகும். ஏன்னா நான் சிவாஜி படத்தை முதல் வாரங்களில் புறக்கணிக்கப் போகிறேன்.

டிக்கெட் வாங்கலாம்னு தேடினா, $16 னு போட்டிருக்காங்க.

ஒரு வாரம் கழிச்சு, $8 கொடுத்து பாத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

($50 கொடுத்து, SPB, Yesudoss, Chitra நிகழ்ச்சி பாக்கப் போறேனாக்கும். ஒரு வாரம் பட்டினி கெடந்து செலவ பேலன்ஸ் பண்ணனும் :) ).

நீங்க எப்படி? முதல் நாள் பாக்கலன்னா தலை வெடிச்சுடுமாமே சிலருக்கு. அந்த கேஸா?

60 கோடி ரூபா செலவு பண்ணி எடுத்த படத்துக்கு வரிவிலக்கு கொடுத்திருக்காங்க. ஹ்ம், என்னத்த சொல்றது. நான் சர்வே போட்டு, மடல் அனுப்பியும் ஒண்ணும் நடக்கல :)

சரி நீங்க என்ன பண்ணப் போறீங்கன்னு சொல்லுங்க:


பி.கு: குட்டீஸ் போட்டியில் கலந்து கொண்டவர்கள் பாடல்களை அனுப்பவும். கலந்து கொள்ளாதவர்கள், பெயர் பதிந்து, பாடல்களை அனுப்பவு. விவரங்கள்ஸ் இங்கே. பரிசுகள் உண்டு.

பி.கு: யாரு யார வச்சுருக்கா?

பி.கு: Brahminical - Final Take

:)

Tuesday, June 12, 2007

யாரு யார வச்சுருக்காங்க - வைரமுத்து

குமுதத்தில் இடம்பெற்ற வைரமுத்துவின் கேள்வி பதில் பக்கத்திலிருந்து.
முதல் கேள்விக்கான பதில் சுவாரஸ்யம். இரண்டாம் கேள்விக்கான பதில் சோகம்.

1)


2)


வாங்கிட்டீங்களா வாங்கிட்டீங்களா?

பி.கு: இன்னும் மூன்று நாட்களே உள்ளன.

பி.கு: Brahminical - Final Take -- விறு விறு பின்னூட்டங்கள்! நீங்கள் உங்க கருத்த சொல்லியாச்சா?

பி.கு: வெரி லேட்டஸ்ட் நேயர் விருப்பம்

நன்றீஸ் வைரமுத்து, குமுதம்! :)

இன்னும் மூன்று நாட்களே உள்ளன...



இன்னும் மூன்று நாட்களே உள்ளன. சிவாஜி படம் ரிலீஸ் ஆக மட்டும் இல்லீங்க.

உங்கள் வீட்டின் பிள்ளைகள், பாட்டுப் போட்டியில் பங்கு கொள்ள, இன்னும் மூன்று நாட்களே உள்ளன.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டி இது.

ஏதாவது ஒரு பாடலை (சினிமா பாடலாயிருந்தால் நல்லா இருக்கும்) பதிந்து ஆடியோ பைலை surveysan2005 at yahoo.com என்ற ஐ.டிக்கு அனுப்பவும்.
ஜூலை 20லிருந்து 30 வரை, சர்வே போட்டு ஓட்டெடுப்பு இடம்பெறும்.
வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு உண்டு.

விவரங்கள் இங்கே

இதுவரை விளம்பரம் கொடுத்தவர்களுக்கும், கலந்து கொண்டு தன் குழந்தைகளின் பாடல்கள் அனுப்பியவர்களுக்கும் நன்றீஸ்!
இன்னும் பெயர் பதியாவதவர்கள் பதிந்து, பாடலை அனுப்பவும்.

பி.கு: Brahminical - Final take, விறு விறுன்னு போயிட்டிருக்கு. கருத்து சொல்லாதவங்க சொல்லிடுங்க. நன்றி.

பி.கு: லேட்டஸ்ட் நேயர் விருப்பம் பாத்தீங்களா?

Sunday, June 10, 2007

The BURNING Monk - இவன்தான்டா சாமியார்!

Unforgettable photos என்ற மோகந்தாஸின் பதிவில் Burning Monk என்று ஒரு புகைப்படம் இருந்தது.

கண்டதும் மனதை உரைய வைத்தது.

தெற்கு வியட்நாமின் அதிபர் புத்த மதத்துக்கு செய்த அநீதிக்கு எதிராக, தன் உயிரை மாய்த்துக் கொண்டாராம், Thích Quảng Ðức என்ற புத்த பிக்ஷு.

இதில் ஆச்சரியமான விஷயம், தன்னைத் தானே எரித்துக் கொண்டு தீக்குளிக்கும்போது, ஒரு இம்மை அளவு கூட சத்தம் எழுப்பாமல், தியான நிலையிலேயே அப்படியே எரிந்து சாம்பலானாராம்.



தியானத்தினால் பல பலனிருக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். இந்த புத்த பிக்ஷுவின் தைரியமும், சக்தியும் வியக்க வைக்கிறது. சுட்டெரிக்கும் தீயில் ஒரு சின்ன முனகல் கூட செய்யாமல் இருக்குமளவு மன திடம் கிட்டுமா தியானத்தினால்? அடேங்கப்பா!!!!

டிஸ்கி: தீக்குளிப்பதோ, தற்கொலை செய்வதோ மடத்தனம். இதை இந்தப் பதிவர் ஆதரிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.கு1: 'Brahminical - Final Take' - பல பதிவர்கள் தங்களது 'final take' சொல்லிட்டாங்க. உங்க கருத்தையும் ஒரு சில வரிகளில் சொல்லி, உங்கள் நிலை என்ன என்பதை தெரியப் படுத்துங்கள். நன்றி.

பி.கு2: குட்டீஸுக்கான போட்டியில் பங்கு பெற ஜூன்15 கடைசி நாள்!

நன்றீஸ்!

Saturday, June 09, 2007

நாமக்கல் சிபி கையும் களவுமாக பிடிபட்டார்...

நாமக்கல் சிபி தம்மடிப்பதை விட்டு விட்டதாக ஒரு அறிக்கை விட்டிருந்தார்.
அவர் தம் அடிப்பதை கையும் களவுமாக பிடிப்பவர்கள், தன் குமட்டிலேயே குத்தலாம் என்று வேறு வாய்ச்சவடால் விட்டிருந்தார்.

நான் புடிச்சுட்டேன். நேத்து தான், gymக்கு போயிட்டு வரும்போது, ஓரமா நின்னு தம் அடிச்சிட்டிருந்தது, படம் புடிச்சுட்டேன். விவரங்கள் கீகீகீகீகீகீகீழே......... பாருங்க. பாத்துட்டு குத்துங்க. திரும்ப அடிச்சா தாங்குவீங்களான்னும் யோசிச்சுக்கோங்க.

பி.கு1: குட்டீஸுக்கான போட்டிக்கு இதுவரை மூன்று பாடல்கள் மட்டுமே வந்துள்ளன, மற்றவர்களும் அனுப்புங்கள். ஜூன் 15 வரை பெயர் பதிந்து பாடல்கள் அனுப்பலாம். விவரங்கள் இங்கே.

பி.கு2: please dont ignore Brahminical - final take

பி.கு3: சிபி, உங்க படத்த வச்சு சில ஹிட்ஸ் வாங்கியாச்சு. நன்றீஸ் :)))))

சிபி தம்மடிக்கும் படம் கீழே!











































குமட்லயே குத்துங்க. திரும்பி குத்தினா தாங்குவீங்களா?

:))))

Brahminical - Final Take!

It is Brahminical arrogance உண்மையான ஆதங்கத்தில் போடப் பட்ட பதிவு.

நண்பனின் திருமணத்துக்கு கும்பலாக குருவாயூர் சென்றிருந்தோம். திருமணம் முடிந்ததும் நண்பன் புடைசூழ அம்பலத்துக்குள் புது மனைவியுடன் ஆசி பெறச் சென்றான்.
நண்பர்கள் குழுவில் இருந்த சில christian நண்பர்கள், கோயிலின் வாசலில் இருந்த "இந்துக்கள் மட்டும்" என்ற சிகப்பு போர்டை பார்த்து வாசலிலேயே நின்று விட்டார்கள். "போயிட்டு வாங்க மச்சி, நாங்க கடையெல்லாம் சுத்தி பாத்துட்டு வரோம்னு" போயிட்டாங்க.
நண்பர்கள் எல்லாருக்கும், ஒரு கசப்பான அனுபவம் அது.
என்னடா இது 21ஆம் நூற்றாண்டில் கூட இந்த பிறப்பை வைத்து செய்யப்படும் 'ஒதுக்குதலுக்கு' என்ன பெரிய புடலங்காய் காரணம் இருக்க முடியும் என்ற பெரிய கேள்வி எழுந்தது.

வயலார் ரவி இதை மீண்டும் இப்பொழுது கேட்டபோது பழைய ஞாபகங்கள் கிளரப்பட்டு, அதனால் வந்த பதிவுதான் அது. இதன் பின்னணியில் politics இருந்துவிட்டுப் போகட்டும்.
ஒரு மனிதனின், பிறப்பை வைத்துக் கொண்டு, செயல்படும் இந்த மாதிரி "கோட்ப்பாடுகள்" யாருக்கு என்ன பலனைத் தருகிறது?

பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இந்த குருவாயூர்/இராமேஸ்வரம் கோயில்கள். ( there is a myth that Guruvayoor main temple was built some 5000 years ago by a divine architect - Wiki).
பாபரும், East India companyஉம் வருவதர்க்கு முன்னாலேயே இந்த கோட்பாடுகள் போடப் பட்டிருக்கிறது. யாரை கோயிலுக்கு வரவிடாமல் தடுக்க இந்த கோட்பாடுகள்?

யாருக்கு என்ன நன்மை இதனால்? தவறான கோட்பாடுகள் என்று இன்று உணரும் பட்சத்தில் இவற்றை ஏன் தூக்கி எறியக் கூடாது?

இந்த 'Brahminical' கோட்பாட்டினைப் பற்றிய சரியான understanding கிடைக்க போடப்படும் கடைசி பதிவு இது. விவரம் தெரிஞ்சவங்க நச்சுன்னு சொல்லுங்க (யாரும் இதுவரை, இந்த கோட்பாட்டினால் என்ன நன்மைன்னு சொல்லல).

நோ ஜல்லீஸ்/கும்மீஸ். strictly no to கேடீஸ்வரன்ஸ் ப்ளீஸ். நல்ல வாதங்கள் வெல்க்கம்!

நமக்குத் தெரியாத சில நல்ல காரணங்களால், இந்த கோட்பாடு ஞாயமானதாகக் கூட இருக்கலாம். அந்த நியாயமான காரணங்கள் எவை? இந்த கோட்பாட்டை ஒரு இந்துவாகிய நான் இன்னும் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்?

Help please!

1) இது தொடர்பான விளக்கங்கள் சில இங்கே.
2) மேலும் சில கேள்விகள் இங்கே
3) ???

நன்றீஸ்!!!

Thursday, June 07, 2007

ரஹ்மான், SPB, யேசுதாஸ், சித்ரா,...

பாக்க முடிஞ்சவங்க பாருங்க. மிஸ் பண்ணாதீங்க. கண்டிப்பா நல்லா இருக்கும்.

AR Rahman tours USA & Canada - June 2007


SPB, Yesudas, Chitra tours California July 1st 2007


அட இது நம்ம 100ஆவது பதிவுங்கோய்! என்ஸாய்!

:)

Wednesday, June 06, 2007

Brahminical --- continued...

It is brahminical arrogance படிச்சிருப்பீங்க.
படிக்காதவங்க படிச்சிடுங்க.

பதிவின் சாராம்சம் இதுதான் - வழிபாட்டுத் தலங்களில் (எனக்குத் தெரிஞ்சு குருவாயூர், ராமேஸ்வரம், some middle eastern mosques, some catholic churches?, and may be more places ), தன் மதத்தாரைத் தவிர மற்றவரை அனுமதிக்காமல் இருத்தல் சரியா? தவரா?
வாக்கெடுப்பில் 75% தவறு என்றும் 20% சரி என்றும் இதுவரை வாக்குகள் வந்துருக்கு. 5%க்கு கருத்தில்லையாம்.

நல்ல விவாதங்கள் சில பின்னூட்டங்களாக வந்திருந்தன.

சரி என்பவர்களின் வாதம் --> ஒவ்வொரு மதத்துக்கு என்று ஒரு கோட்பாடு உள்ளது, அதை அவர்கள் பின்பற்றுவதும் வலியுறுத்துவதும், அவர்கள் விருப்பம்.

தவறு என்பவர்களின் வாதம் --> மதங்களின் பெயரால் இந்த பாகுபாடு செய்வது தீண்டாமை போலாகும் (என் கருத்து இது). மக்கள் பணத்தில் கட்டிய கோயில்களில், நம்பிக்கையுடன் வரும் எல்லா மனிதனையும் அனுமதிக்க வேண்டும்.

20% பேர் சரின்னு சொல்லியிருக்கீங்க. அவங்களுக்கான கேள்வி "இந்த மாதிரி ஒரு கோட்பாடு இன்னும் தேவையா? குருவாயூர் கோயிலில் இந்த கோட்பாட்டைச் சொல்லித்தான் 1930ல் இழவா என்ற வகுப்பைச் சேர்ந்த மக்களை அனுமதிக்காமல் வைத்திருந்தார்கள். யாரோ ஒருவர் போராடி, இழவாக்களை உள்ளே அனுமதிக்க வைத்தார். அப்போது, அந்த கோட்பாடு தளர்த்தப்பட்டது. Why not do the same now, and include all-human beings (not just in Guruvayoor, this question applies to Guruvayoor, Rameswaram, middle eastern mosques, catholic churches, etc.. etc... மாற்று மதத்தாரை அனுமதித்தால் கோயில் என்ன இடிந்தா போகும்? ஆண்டவன் கோவிச்சுப்பானா? நாளைய உலகம் இந்து மதத்தாரை ஏளனம் செய்யுமா? இந்து மதம்தான் அழிஞ்சு போகுமா? கோட்ப்பாட்ட மாத்தலாமே?"

75% பேர் தவறுன்னு சொல்லியிருக்கீங்க. உங்களுக்கான கேள்வி என்ன கேக்கரதுன்னு தெரியல. 20% ஆளுங்க கேக்கர கேள்விக்கு யோசிச்சு பதில சொல்லுங்க. தாக்குதல்கள் வேணாம், நல்ல வாதங்கள் வேணும். :)

பி.கு: Brahminical என்று வயலார் ரவி எதைச் சொன்னார்னு தெரியல. நான் Brahminical என்று சொல்வது, இந்த 'உயர்ந்த சாதி' என்ற மனோபாவம் கொண்ட அனைவரையும்தான். குருவாயூரைப் பொறுத்தவரை, மாற்று மதத்தாரை அனுமதிக்கக் கூடாது என்று கூறும் அனைவரும் Brahmins (not just ஐயர்ஸ், ஐயங்கார்ஸ், நம்பூதிரீஸ், ஸ்ஸ்ஸ் )

2006ன் சிறந்த பதிவர் வாக்கெடுப்பு அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்னு நெனைக்கறேன். அந்த வாக்கெடுப்பில் பரிந்துரைக்கப்பட்ட டாப் பதிவர்ஸ் பேர கீழ கொடுத்திருக்கேன். உங்க பேர் அந்த லிஸ்ட்ல இருந்ததுன்னா, கண்டிப்பா, இந்த 'brahminical' ப்ரச்சனைய பத்தி உங்க கருத்த ஒரு வரீல சொல்லிட்டுப் போங்க ப்ளீஸ் :) இந்த மாதிரி சர்ச்சைகள் வரும்போது, பலர் ஒதுங்கர மாதிரி எனக்கு ஒரு பீலிங்! :).
இதப் படிக்கரவங்க, இது வரை பின்னூட்டாத சிறந்த பதிவர்களுக்கு, இந்தப் பதிவைப் பத்தி தெரியப் படுத்துங்கோ :)

1 - தமிழ் ச்சி - http://thamizhsasi.blogspot.com
2 - Wethepeople - http://wethepeopleindia.blogspot.com/
3 - குழலி - http://kuzhali.blogspot.com
4 - லக்கிலுக் - http://madippakkam.blogspot.com/
5 - வெளிகண்டநாதர் - http://ukumar.blogspot.com
5 - வைசா - http://vaisasview.blogspot.com/
6 - கோ. இராகவன் - http://iniyathu.blogspot.com/
7 - செல்வராஜ் - http://selvaraj.weblogs.us
8 - கானா பிரபா - http://kanapraba.blogspot.com/
9 - குமரன் - http://abiramibhattar.blogspot.com/
10 - ப்ரியன் - http://priyan4u.blogspot.com/
11 - முத்துகுமரன் - http://muthukumaran1980.blogspot.com/
12 - இராம. கி - http://valavu.blogspot.com
13 - தேவ் - http://sethukal.blogspot.com/
14 - SK - http://aaththigam.blogspot.com/
15 - செந்தழல் ரவி - http://tedujobs.blogspot.com/
16 - ரவிசங்கர் - http://thamizhthendral.blogspot.com/
17 - செல்வநாயகி - http://selvanayaki.blogspot.com/
18 - இலவசக் கொத்தனார் - http://elavasam.blogspot.com/
19 - கோவிகண்ணன் - http://kaalangkal.blogspot.com
20 - கண்ணபிரான் ரவி - http://madhavipanthal.blogspot.com
21 - நாமக்கல் சிபி - http://pithatralgal.blogspot.com/
22 - கடல் கணேசன் - http://kadalganesan.blogspot.com/
23 - தமிழச்சி - http://thamizhachi.blogspot.com/
24 - துளசிகோபால் - http://thulasidhalam.blogspot.com/
25 - சுப்பையா - http://devakottai.blogspot.com/
26 - சுல்தான் - http://sultangulam.blogspot.com/
27 - பொன்ஸ் - http://poonspakkangkal.blogspot.com
28 - திரு - http://aalamaram.blogspot.com/
29 - வெட்டிப்பயல் - http://vettipaiyal.blogspot.com
30 - பாஸ்டன் பாலா - http://etamil.blogspot.com
31 - அசுரன் - http://poar-parai.blogspot.com/
32 - ராஜவனஜ் - http://vanajaraj.blogspot.com/
33 - தருமி - http://dharumi.blogspot.com/
34 - சந்தோஷ் - http://santhoshpakkangal.blogspot.com
35 - G Gowtham - http://gpost.blogspot.com/
36 - சிந்தாநதி - http://valai.blogspirit.com/
37 - சிறில் அலெக்ஸ் - http://muttom.blogspot.com/
38 - தமிழ்நதி - http://tamilnathy.blogspot.com/
39 - பாலபாரதி - http://balabharathi.blogspot.com/
40 - இட்லிவடை - http://idlyvadai.blogspot.com/
41 - முத்துதமிழினி - http://muthuvintamil.blogspot.com/
42 - ப்ரதீப் - http://espradeep.blogspot.com/
43 - ப்ரியா - http://aanmeegham.blogspot.com
44 - ம்ங்கை - http://manggai.blogspot.com/
45 - உஷா - http://nunippul.blogspot.com/
46 - ப்த்ரி - http://thoughtsintamil.blogspot.com/
47 - சுகுணா திவாகர் -
48 - வரவனையான் செந்தில் - http://kuttapusky.blogspot.com/
49 - பொட்டிக்கடை - http://potteakadai.blogspot.com/
50 - பெனாத்தல் சுரேஷ் - http://penathal.blogspot.com
51 - லிவிங் ஸ்மைல் - http://livingsmile.blogspot.com/
52 - ஜோ - http://cdjm.blogspot.com/
53 - டோண்டு - http://dondu.blogspot.com
54 - விடாது கறுப்பு - http://karuppupaiyan.blogspot.com/
55 - விட்ட்து சிகப்பு - http://vittudhusigappu.blogspot.com/
56 - முகமூடி - http://mugamoodi.blogspot.com/
57 - மருதநாயகம் - http://maruthanayagam.blogspot.com/
58 - சபாபதி சரவணன் - http://wewakeananda.blogspot.com/
59 - விக்கிபசங்க - http://wikipasanga.blogspot.com/
60 - கால்கரி சிவா - http://sivacalgary.blogspot.com/
61 - வஜ்ரா சஙகர் - http://sankarmanicka.blogspot.com/
62 - ம்யூஸ் - http://bliss192.blogspot.com/
63 - ஜெயராமன் - http://vaithikasri.blogspot.com/
64 - ஹ்ரிஹரன் - http://harimakesh.blogspot.com/
65 - முரளீதரன் - http://adhvaithi.blogspot.com/
66 - செல்வன் - http://holyox.blogspot.com
67 - சுவனப்பிரியன் - http://suvanappiriyan.blogspot.com/
68 - தங்கமணி - http://bhaarathi.net/ntmani/
69 - தமிழ்குழந்தை - http://tamilchild.blogspot.com/
70 - மகேந்திரன் பெ - http://kilumathur.blogspot.com/
71 - நெல்லை சிவா - http://vinmathi.blogspot.com
72 - badnewsindia - http://badnewsindia.blogspot.com
73 - மதுரா - http://tamizhachchikal.blogspot.com/
74 - திவ்யா -
75 - கைப்புள்ள - http://kaipullai.blogspot.com/
76 - பத்மா அர்விந்த் - http://sakhthi.blogspot.com
77 - ஈழநாதம் - http://akavithai.blogspot.com/
78 - கார்திக்வேலு - http://intamil.blogspot.com/
79 - சித்தார்த் - http://tamizh.rediffblogs.com/
80 - ஜெகத் - http://kaiman-alavu.blogspot.com/
81 - நிவேதா - http://rekupthi.blogspot.com
82 - voice on wings - http://valaipadhivan.blogspot.com/
83 - யளனகபக' கண்ணன் - http://knski.blogspot.com/
84 - பெயரிலி - ??
85 - பாம்பாட்டி சித்தன் - http://thaaragai.wordpress.com/
86 - சுந்தரவடிவேல் - http://bhaarathi.net/sundara/
87 - பொடிச்சி - http://peddai.net/
88 - நிர்மலா - http://nirmalaa.blogspot.com/
89 - அருள் கந்தசுவாமி - http://arulselvan.livejournal.com/
90 - சன்னாசி - ??
91 - நயனம் - http://nayanam.blogspot.com/
92 - மதிகந்தசாமி - http://mathy.kandasamy.net/musings/
93 - மா சிவகுமார் - http://masivakumar.blogspot.com/
94 - மு கார்த்திகேயன் - http://mkarthik.blogspot.com/
95 - DJ thamizan - http://djthamilan.blogspot.com/
96 - vaa manikandan - http://pesalaam.blogspot.com
97 - தமிழ்நதி - http://tamilnathy.blogspot.com/
98 - இளவஞ்சி - http://ilavanji.blogspot.com/
99 - கார்த்திக் ராம்ஸ் - http://karthikramas.blogspot.com/
100 - சீனு - http://jeeno.blogspot.com/
101 - தாரா -
102 - ரஜினி ராம்கி - http://rajniramki.blogspot.com/
103 - அரை ப்ளேடு - http://araiblade.blogspot.com/
104 - கப்பி பய - http://kappiguys.blogspot.com
105 - எழில் - http://ezhila.blogspot.com/
106 - ஜ்டாயு - http://jataayu.blogspot.com/
107 - சிவபாலன் - http://sivabalanblog.blogspot.com/
108 - சின்னக்குட்டி - http://sinnakuddy.blogspot.com/
109 - கெளசி -
110 - பங்காளி - http://pangaali.blogspot.com/
111 - அபுமுஹாய் - http://abumuhai.blogspot.com/
112 - சுமதி -
113 - மாசிலா - http://naalainamathae.blogspot.com/
114 - mayuran - http://www.mauran.blogspot.com/
115 - நற்கீரன் - http://www.worldinmind.blogspot.com/
116 - அஞ்சலி - http://anjalisplace.blogspot.com/
117 - தேக்கிட்டான் - http://thekkikattan.blogspot.com/
118 - உருப்படாத்து - http://urpudathathu.blogspot.com/
119 - ஐகாரஸ் - http://icarus1972us.blogspot.com/
120 - சீமாச்சு - http://seemachu.blogspot.com/
121 - சரவ் - http://sarav.net/
122 - ரவி ஸ்ரீநிவாஸ் - http://ravisrinivas.blogspot.com
123 - செந்தில்குமர - http://ariviyalaanmeekam.blogspot.com

Monday, June 04, 2007

It is Brahminical arrogance

.

It is Brahminical arrogance!!! (click to read the news item)

.... and I cannot agree more!

Do you?


It is very astonishing to see our great nation being portrayed as a brain churner on the one side, while the other (bigger) side is still filled with starving poors and illiterates craving for basic hygiene and one meal a day.

In midst of all this great imbalance, some imbeciles are still advocating untouchability in the 21st century? Burn in hell, seriously!!!

If you think its a fair practice to not let certain people based on their religion into a place of worship, please do share your thoughts. I am just not seeing the point.

hmm.

விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.. Plasma, LCD, DLP HDTV

ரொம்ப நாளா மண்டைய கொடஞ்சு அலசி ஆராஞ்சு ஒரு வழியா, ஒரு HDTV ஆர்டர் பண்ணியாச்சு.

உலக கால்பாந்தாட்டம் போன வருஷம் வந்த போது ஆரம்பிச்ச ஆராய்ச்சி, இப்பத்தான் முடிஞ்சது.

Plasma TV, LCD TV, 1080i, 1080p, 720p, DLP, இப்படிப் பலப் பல வெரைட்டி/டெக்னாலஜி கொட்டிக் கெடக்கு மார்க்கெட்ல.
இதுல Plasma தான் உயர் ரகம். அதுக்கேத்த மாதிரி விலையும் அதிகம்.
DLP வெல கம்மி, அதுக்கேத்த மாதிரி, க்வாலிட்டி ரொம்பவே கம்மி.

நேத்துதான் கடைக்குப் போய், ஆராய்ச்சிய முடிச்சு, பொருள மேலும் கீழும் பாத்து, மனசுக்கு முழு திருப்தி வந்ததும், ஆன்லைன்ல போய் ஆர்டர் பண்ணேன்.

கடைக்கு போறது, பொருள பாக்க மட்டும்தான்.
கடையில வாங்கினா, செலவு அதிகம். ஆன்லைன்ல, $300 கம்மியா கிடைச்சுது.

எல்லா பொருளும் வாங்கரதுக்கு முன்னாடி, கடையில போய் ஒரு தரவ பாத்துட்டு, பொறுமையா ஆன்லைன்ல வாங்கரது, நம்ம ஆளுகளுக்கு பழக்கமான ஒண்ணு. நீங்க எப்படி?

இந்த Plasma, LCD, DLP ஆராய்ச்சி பண்ணினவங்க, நீங்க கடைசில எத்த வாங்கினீங்க/வாங்குவீங்கன்னு பின்னூடுங்களேன்.

நான் எத வாங்கினேன்னு தெரியணுமா?


இதத்தான் வாங்கினேன்:


கடைல பாக்கும்போது அட்டகாசமா இருந்தது. வீட்டுக்கு வந்தப்பரம் போட்டு பாத்துட்டு சொல்றேன் முழு விவரங்களை.

பி.கு: சுகராகமே, ஆயிரம் கண், வசீகரா நேயர் விருப்பம் பாத்தீங்களா. நான் சுகராகமே பாடிட்டேன். நீங்க?

குழந்தைகளுக்கான போட்டிக்கு பெயர் கொடுக்காதவங்க கொடுங்க. இதுவரை பாடல் அனுப்பியவர்களுக்கு நன்றி. குட்டீஸ் கலக்கோ கலக்குன்னு கலக்கியிருக்காங்க.