recent posts...

Thursday, August 30, 2007

FLEX Alert in California

கடந்த சில தினங்களாக சூரியன் தன் வேலையை நன்றாகவே காட்டிக் கொண்டிருக்கிறான் எங்களூரில்.
மெட்ராஸ் வெயில் மாதிரி சுர்ருனு அடிக்குது.

மக்கள்ஸ், ஏ.ஸி அளவுக்கு அதிகமா உபயோகிக்கராங்க போல, கலிபோர்னியா மின்சார கம்பெனிக்கள், மின்சார உபயோகத்தைக் குறைக்கச் சொல்லி எல்லாருக்கும் வேண்டுகாள் வச்சிருக்காங்க.

என் அலுவலகத்திலும், இன்று விளக்கெல்லாம் டிம்மாகவும், ஏ.ஸி குறைவாகவும் போடப் போறாங்க.

Global Warming ப்ரச்சனைக்கும் இன்று ஒரு தனிக் கவனம் கொடுத்திருக்காங்க.

இன்று, இரயில், பஸ்ஸிலெல்லாம் இலவச 1-day பாஸ் தராங்க.
முடிந்த வரை, நடந்தோ, சைக்கிளிலோ அலுவலகத்துக்கு வாங்கன்னும் சொல்லியிருக்காங்க.

எங்க ஆபீஸ்ல ஒரு படி மேலே போய், சைக்கிள்ள வந்தா, ஒரு டீ.ஷர்ட் இனாம்னு வேற சொல்லிட்டாங்க.

வெள்ளக்காரன் புத்திசாலி பாருங்க - வருமுன் காப்போம்னு, என்ன அழகா திட்டங்கள் வகுத்து முன்னேற்பாட்டுடன் செயல்படுத்தறான். மக்களும், அதை அழகா முடிந்தவரை ஃபாலோ பண்றாங்க.
global warmingன் மூல காரணி இவன்தான்றது வேற ப்ரச்சனை. விஷயம் என்னன்னா, என்ன கஷ்டம் வந்தாலும், இவன் சுதாரிச்சு தப்பிச்சிடுவான்.

எந்த System ம் சரியா இல்லாத நம்மூர் வாசி கஷ்டப் படுவான்.
Systemஸ் இருந்தாலும் ஃபாலோ பண்ண மாட்டான்.


எனிவே, கலிபோர்னிய நண்பர்களே FLEX your Power, now!

மற்ற ஊர்வாசிகளே, நீங்களும் பண்ணலாம், மின்சாரச் சேமிப்பு அவசியமான ஒன்று.

Tuesday, August 28, 2007

அழவைத்த அந்த திரைப்படம் இதுதான்..

சின்ன வயசுல, பழைய சிவாஜி சாவித்ரி படம் எல்லாம் தூர்தர்ஷன்ல போடும்போது, அதப் பாத்து அழரவங்கள பாத்தா சிரிப்புதான் வரும்.
ரொம்ப இளகிய மனம் உள்ளவர்கள் தான் ஒரு சினிமாவில் வரும் துக்கத்துக்கு அழுவாங்கன்னு நெனைக்கறேன்.

என்னுது ரொம்ப ஸ்ட்ராங் ஹார்ட்டு.

சினிமாவ ரொம்ப ஈடுபாட்டோட பாப்பேன், ஆனா, அழரதெல்லாம் கெடையாது.

சமீப காலத்தில் வந்த படங்களில், லேசா மனதை பதறவைத்த படம் என்று மகாநதியைச் சொல்லலாம். மூன்றாம் பிறையிலும் சோகம் அதிகம், ஆனா என்னை பாதிக்கல. ஆங்கிலத்தில், Saving Private Ryanன் கடைசி 10 நிமிடங்கள் அழுகையின் விளிம்புக்குத் தள்ளியதென்று சொல்லலாம்.
சின்ன வயசுல பாத்ததுல சாரதா, ஏ.வி.எம். ராஜா படம் நினைவுக்கு வருது (துலாபாரம்). வறுமையின் கொடுமையால், தன் குழந்தைகளை தானே கொல்லும் ஒரு தாயின் கதை. ஆனா, ஏ.வி.எம் ராஜாவின் ஓவர் ஏக்டிங்கால், அந்த சோகத்தின் எஃபெக்டு கம்மியா இருந்தது.
"பூஞ்சிட்டு கன்னங்கள், பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே"
என்ற அருமையான பாடலை, ஏ.வி.எம் ராஜா, உதட்டைக் குவித்து குவித்து பாடுவது இப்ப நெனச்சாலும் காமெடியாதான் இருக்கு :)

சமீப காலமாய் இரானிய மொழிப்படங்களில் பெரிய ஈர்ப்பு எனக்கு. இங்குள்ள லைப்ரரியில் சிறந்த படங்கள் வரிசையா அடுக்கி வச்சிருக்கரதும் ஓரு காரணம்னு நெனைக்கறேன்.
இதுவரைக்கும் ஒரு பத்து இரானியப் படங்கள் பாத்துருப்பேன். எல்லாத்திலும் ஏதாவது ஒரு சோகம் இருந்தது. ஆனா, அழவைக்கல.

சரி, அப்ப எதுதான்யா அழவச்சது உன்னன்னு கேக்கறீங்களா? மேட்டருக்கு வரேன்.

கடந்த வாரம் காணக் கிடைத்த ஒரு மலையாளப் படம் அது. Sibi Malayilனு ஒரு டைரக்டரோட படம் அது. நம்ம விக்ரம் ஒரு பேட்டீல , சிபி மலையில் படத்துல நடிக்கரது தன்னோட ஆசைன்னு சொல்லியிருந்தாரு. இவர் படங்களில், இதயத்தில் ஊசி கொண்டு சொருகுவதைப் போல் ஒரு சோகத்தின் வலி இருக்கும்னு அந்த பேட்டீல படிச்ச ஞாபகம்.

அந்த பேட்டி படிச்சதும், Spencersல் சிபி மலையில் படம் ஒண்ணு (மம்மூட்டி நடித்த தனியாவர்தனம்) வாங்கிப் பாத்தேன். இதயத்தில் ஊசி குத்தத்தான் செய்தது. ஆனா, அழல. அந்த படத்த பத்தி தனிப்பதிவு அப்பறமா போடறேன்.

போன வாரம், ஷாப்பிங் பண்ணும் போது, $10க்கு வாங்கினா ஒரு DVD இனாம்னாங்க. DVD ஆல்பம் மேயும்போது, சிபி மலையில் கண்ணில் பட்டார்.
அட்டையில் நம்ம மாதவியும், டும்டும்டும்மில் நடித்த முரளியும்.
படத்தின் பெயர்: ஆகாசத் தூது

எண்பதுகளில் வந்த படம்.

அநாதைகளான முரளியும், மாதவியும் அநாதை இல்லத்தை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொள்வார்கள். நான்கு க்யூட் குழந்தைளும் பெறுவர்.
ஒரு கைக்குழந்தை, 6 வயசுப் பையன் (போலியாவால் பாதிக்கப்பட்டவன்), 8 வயசுல ஒரு பையன், 10 வயசுல ஒரு பொண்ணு.
முத்தான குழந்தைகளுடன் பாசம் பிணைந்த வாழ்க்கை.
மாதவி, ம்யூசிக் டீச்சர். முரளி காட்டுல ஏதோ எஸ்டேட்ல ட்ரைவர் வேலை.

முரளிக்கு குடிப் பழக்கம். தினமும் இரவு குடித்துவிட்டு வீட்டிர்க்கு வருவது, குடியில் சம்பாதித்தை இழந்து, சொந்த வீடு கட்ட முடியாமல் தவிப்பது என்று படத்தின் முதல் பாதி சாதாரணமாகவே சென்றது.

குழந்தைகளின் மீது அதிக பாசம் முரளிக்கும், மாதவிக்கும். குடிப்பழக்கத்தை விட்டு விட எவ்வளவோ முயற்சி செய்தும், முரளியால் விடமுடியவில்லை.

இடையில் முளைக்கும் ஒரு வில்லனால் சில ப்ரச்சனைகள்.
முரளி இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் வந்து மாதவியிடம் தவறாக நடக்க நினைக்கும் வில்லனை, பிள்ளைகள் கல்லால் அடித்து விரட்டுகிறார்கள்.

கோபம் அடைந்த வில்லன், இரண்டாம் மகனின் மீது வேனால் இடித்து விடுகிறான்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப் படும் மகனுக்கு இரத்தம் தேவைப் பட தன் இரத்தத்தைக் கொடுக்கிறாள் மாதவி.

இரத்தத்தை பரிசோதித்த டாக்டர், மாதவிக்கு புற்றுநோய் இருப்பதைக் கூறுகிறார்.

வெளியூரிலிருந்து திரும்பி வந்த முரளி, வில்லனை நையப் புடைக்கிறான்.
மாதவிக்கு புற்று நோய் இருப்பதை அறிந்ததும் துடித்துப் போகிறான்.

இனி குடிப்பதில்லை, மாதவி உயிருடன் இருக்கும் வரை சந்தோஷமாக வைத்திருப்பதாகக் கூறி அவ்வாறே நடந்து வருகிறான்.

இது எதுவும் அறியாத குழந்தைகளூம் தந்தை திருந்தியதில் குதூகலமடைந்து, எல்லாரும் ஹாப்பியா இருக்காங்க.

அடிபட்ட வில்லன் சும்மா இருப்பானா? திரும்ப வந்துட்டான் நிம்மதிய கெடுக்க.
முரளிக்கும் வில்லனுக்கும் நடந்த கைகலப்பில், வில்லன் முரளியைக் கொன்றுவிடுகிறான்.

மாதவிக்கு இச்செய்தி இடியாக விழுகிறது.

புற்றுநோயினால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போது, கணவனையும் இழந்தது பெரும் சோகத்தைச் சேர்க்கிறது.

அநாதையான மாதவிக்கு, தனக்குப் பின்னர் தன் குழந்தைகள் அநாதையாகிவிடுமே என்று பெரிய கவலை.

ஏழ்மையில் இருக்கும் அவளுக்கு வேறு வழி தெரியாமல், தான் வளர்ந்த அநாதை விடுதிக்குச் சென்று, தன் குழந்தைகளுக்கு ஏதாவது சீக்கிரம் நல்ல வழி அமைக்க வேண்டும் என்று கூறுகிறாள்.

குழந்தைகளை அநாதை விடுதியில் சேர்க்க அவள் மனம் இடங்கொடுக்கவில்லை. அநாதை விடுதியில் தான் வாழ்ந்த கஷ்ட வாழ்வை தன் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது என்று எண்ணுகிறாள்.

பிள்ளைகளை பேசாமல், தத்துக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்து குழந்தை தத்தெடுக்க விருப்பம் உள்ளவர்களைத் தேடச் சொல்கிறாள்.

கைக்குழந்தையை ஒரு டாக்டர் தம்பதியனர் பெற்றுக் கொள்கின்றனர்.
குழந்தையை விட்டுப் பிரியும் அந்த காட்சிகள், மனதை அறுக்கும் ரகம்.

மூன்றாம் மகன், இளையவனிடம் பாசம் கொண்டவன். இவர்கள் இருவரையும் சேர்த்தே ஒரு குடும்பத்துக்குக் கொடுக்கவேண்டும் என்று மாதவி விரும்புவாள். ஆனால், போலியோவால் பாதிக்கப் பட்டவனை தத்து எடுத்துக் கொள்ள முன்வராததால், இரண்டாம் மகனை மட்டும் ஒரு குடும்பத்தாருக்கு கொடுத்துவிடுவாள்.
போலியோவால் பாதிக்கப் பட்ட சிறுவன், அண்ணனை பிரியும் காட்சியும் நெகிழச் செய்தது.

மூத்த மகளுக்கும் ஒரு வயோதிக தம்பதியர் ஆதரவு கொடுத்து கூட்டிச் செல்வார்கள்.

போலியோவால் பாதிக்கப் பட்டவனுக்கு மட்டும் யாரும் ஆதரவு தராத நிலையில், மாதவியின் நோய் முற்றிக் கொண்டே வரும்.

தனது வாழ்நாள் அதிகம் இல்லை என்றுணர்ந்த மாதவி, அந்த வருடக் க்ருஸ்மஸுக்கு தன் பிள்ளைகள் அனைவரையும் வீட்டுக்கு வரவழைத்து ஒன்றாக பார்க்க வேண்டும் என்று ஆசை.

எல்லாருக்கும் அழைப்புகள் விடுத்து, குழந்தைகளுக்காக காத்திருக்கிறாள்.

க்ருஸ்மஸுக்கு முந்தின இரவு, நோய் முற்றி, இறந்து விடுகிறாள்.

தனிமையில் மூன்றாம் மகன் தவித்து நிற்கிறான். க்ருஸ்மஸுக்கு தாயைக் காண ஓடோடி வரும் மற்ற குழந்தைகள், தாயின் சடலத்தைப் பார்த்து அழும் காட்சிகள், அப்பப்பா நெஞ்சை அறுக்கும் ரகம்.

சடங்குகள் எல்லாம் முடிந்ததும், தத்தெடுத்தவர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்வார்கள். இனி மறுபடியும் காண்போமா மாட்டோமா என்ற ஏக்கத்தில் அந்த குழந்தைகள் ஒருவருக்கொருவர் கையசைத்த படி விடைகொடுப்பார்கள்.

எல்லாரும் சென்றதும், மூன்றாம் மகன் தனந்தனியனாக கையசைத்த படி அழுது கொண்டே இருப்பான்.

அம்மாடியோவ், இந்த விஷுவல் மீடியாவுக்குத் தான் என்ன சக்தி, இனம் புரியா வேதனையை மனதில் படரச் செய்யும் அந்த காட்சி.

நெஞ்சு முழுவதும் கனம்.

படத்தை அப்படியே முடித்திருந்தால், ஒரு பத்து நாள் சாப்பாடு எறங்கியிருக்காது.

இவ்வளவு சோகத்திலும், டைரக்ட்டர் ஒரு சின்ன சந்தோஷம் தர விரும்பினாரோ என்னமோ, கடைசியில், இரண்டாம் மகனை தத்தெடுத்த தம்பதியர், திரும்ப வந்து, அழுது கொண்டிருக்கும் (போலியோ) மகனை, தங்களுடன் அழைத்துச் செல்வார்கள்.

ஆகாசத் தூது. பார்க்க வேண்டிய படம்.

அநாதைச் சிறுவர்கள் எல்லாம் மிக மிகப் பாவம் என்பதை நெஞ்சில் ஆணியடித்துக் கூறிய படம்.

Hats off to Sibi Malayil!

நீங்க பாத்த படங்களில் உங்களை அழவைத்த படத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்.

நான் தொடர் விளையாடக் கூப்பிட்டா ஒரு பயலும் வரமாட்டறீங்க ;)
கவுஜ எழுதுங்க மக்களே. தலைப்பு இதுதான். "சீ.. நீ எனக்கு வேண்டாமடா"

;)

பி.கு: இணையத்தில் உலவும் சைக்கோக்களை எதிர்க்க புரிந்துணர்வுடனான உங்கள் ஒத்துழைப்பை நல்க வலதுபுர சைக்கோவை க்ளிக்குங்கள் :)
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்" - எனக்கு மிகவும் பிடித்த குறள்.

நன்னயம் என்னா செய்யறதுன்னுதான் தெரியல.
பொது மன்னிப்புக் கேட்டு, சகலத்தையும் சலவை செய்தால், நன்னயம் செய்ய முயற்சிக்கலாம் ;)
surveysan2005 at yahoo.com.

Monday, August 27, 2007

அனானி சைகோக்கு வேலி போட வாங்க‌...

இந்த அனானி தொல்லையும் ஈ.மெயிலில் வரும் தாக்குதல்களும் பெரிய எரிச்சலை ஏற்படுத்துகிறது.

பட்டறை, புகைப்படப் போட்டி, ஓவியப் போட்டி என சந்தோஷமாய் பொழுதைக் கழிக்க உதவும் இடத்தில், இந்த அனானியின் தொல்லை தாங்கமுடியலை.

இதை எல்லாம் பெருசு பண்ணாதன்னு வரும் நண்பர்களின் மடல்கள் ஒருபுறம். அந்த மடல்களை எல்லாம் புதைத்து மூடும் 'கலீஜ்' மடல்கள் மறுபுறம்.

கூகிள் நண்பர்கள் சிலரிடம், இதைப் பற்றிக் கேட்டேன். அவர்களும், கொலை மிரட்டல், பொருள் சேதம் போன்ற தொல்லைகள் வந்தால் மட்டும், ஏதாவது சட்ட பூர்வமா செய்யமுடியும். சைக்கோதனமெல்லாம், கருத்து சுதந்திரம் என்று கை விரித்துவிட்டார்கள்.

ஒரே வழி, இந்த சைக்கோ பதிவனின் பதிவை 'ஒதுக்கி' வைத்தல் தான். இதைச் செய்வ‌த‌ன் மூல‌ம், இவ‌ன‌து ப‌திவுக‌ள் un-list ஆகி, யாரும் த‌வ‌றி உள்ளே செல்ல‌முடியாத‌வாறு வேலி போட‌ப் ப‌டும்.
ந‌ம்மில் ப‌ல‌ரும் இந்த‌ வேலி கட்ட க‌ல் எடுத்துக் கொடுத்தால், கூகிள், ஒரேடியாக‌ அந்த‌ ப‌திவை மூட‌வும் வாய்ப்புள்ள‌து.

நீங்க‌ ப‌ண்ண‌ வேண்டிய‌தெல்லாம் இதுதான்.
இந்த‌ லிங்குகளை க்ளிக் அடித்து, வ‌ரும் ப‌க்க‌த்தில் உள்ள‌ FLAG பொத்தானை க்ளிக்க‌ வேண்டியதுதான்.

ரொம்ப யோசிக்காம, இந்த உதவிய உடனே பண்ணுங்க.

சைகோ1:
http://www2.blogger.com/navbar.g?blogID=27960530

சைகோ2:
http://www2.blogger.com/navbar.g?blogID=34440359

இத ஒதுக்குனா இன்னொண்ணுல வருவான். அப்பவும் வேலி கட்டுவோம்.
ஒண்ணுமே பண்ணாம ஒதுங்கியிருப்பது எனக்கு சரியாப் படலை.

டோண்டு, நீங்க என்னமோ வரம்பு மீறியிருக்கீங்கன்னு சில‌ நல்ல பதிவர்களிடமிருந்தும் எனக்கு மடல்கள் வந்தன.

இதையெல்லாம் ஆராய எனக்கு நேரமில்லை. எனக்குத் தெரிஞ்சு உங்க பதிவுல 'கலீஜ்' பாக்கல. குழந்தைத் திருமணம், பெண்கள் சுதந்திரம், ப்ளா ப்ளா ப்ளா மேட்டரெல்லாம் கொஞ்சம் அல்பத்தனமாதான் எனக்குத் தோணுது. உங்க கருத்து உங்களுக்கு என் கருத்து எனக்கு.
60 வயதான பொறுப்புள்ள மனிதராக உங்கள் எழுத்துப் பணி தொடருங்கள்.
வீம்புக்கு எழுதுவது போன்ற வேண்டா வெறுப்புப் பதிவுகள் தவிர்த்தல் நலம்.

ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல் 70% இந்தியர்கள் அல்லல் படும்போது, நமக்குக் கிடைத்த சொகுசு வாழ்க்கையை துளியேனும், நல்ல விஷயங்களுக்கு செலவிடுவோம்.
நல்ல விஷயங்கள் பண்ணலயா? பரவால்ல, கெட்டது பண்ணாம இருங்க, கெட்டது பண்ண விடாம இருக்கவும் உதவுங்க.

anyway, வலையுலகில் திரும்ப குதூகலம் பெறுக, அனைவரையும் கவுஜ எழுத அழைக்கிறேன்.

நிலவு நண்பனின் ஒரு அழகான கவிதையை, லொள்ளு சபா ஸ்டைலில், நான் குதறியிருப்பது இங்கே.
இதை நீங்களும், உங்கள் கற்பனையில், லொள்ளி ஒரு பதிவை போடவும்.
இதை ஒரு தொடர் விளையாட்டாக எடுத்துச் சென்றால் அருமையா இருக்கும் :)

I think, once the fun postings are kick-started, I will take a long vacation and come back and join you guys in December to conduct the "Best Blogger 2007" contest :)
So, start the கவுஜ‌ atleast to get rid of me ;)

Happy Blogging everone, lets not lose the spirit, anyday for any reasons!

FLAG குத்துனீங்களான்னு பின்னூட்டிச் சொல்லிட்டுப் போங்க. 100 குத்தாவது குத்தணும். :)

:)

மலையாள ஓணப் பண்டிகைக்கு நம் பதிவர்கள் பாடிய பாடல்

இங்க குத்தி கேளுங்க.அனைவருக்கும், ஓண ஆசம்ஸகள் :)

மாவேலி நேரத்தே வந்நூ - துளசி கோபாலின் ஓணக் கொண்டாட்டங்கள்.

Sunday, August 26, 2007

டோண்டு ராகவன் - ஒரு அவசர அலசல் சர்வே!

இணையத்தில் டோண்டு ராகவன் என்ற பதிவருக்கு இருக்கும் எதிர்ப்புகளை இந்த வீக்-எண்டில், படித்துத் தெரிந்து கொண்டேன்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் அவரின் ஒரு பதிவுக்கு பின்னூட்டமிட்டதால் என் யாஹூ, 'கலீஜ்'
ஃபோல்டரில் 68 ஈ.மெயில்கள் உள்ளன. :) அதைப் பற்றிய என் முந்தைய புலம்பல் இங்கே.

ஃபில்டர் வேலை செய்வதாலும், தமிழில் கெட்ட வார்த்தை குறைவாக உள்ளதாலும், எளிதில், இந்த ஈ.மெயில்களை தனியாக பாத்தி கட்டி ஒதுக்க முடிந்தது.
பின்னூட்டமிடும் எனக்கே 68 'கலீஜ்' வருதுன்னா, பதிவு எழுதரவருக்கு என்னென்ன வரும்.

இவ்வளவையும் கடந்து, இந்த வயதிலும், அவர் தொடர்ந்து பதிவு எழுதி முன்னேறிச் செல்வது absolutely fantastic!! உங்களின் மனோ தைரியம் பாராட்டுக்குரியது.

Mr.டோண்டு ராகவன், நான் உங்களுக்கு ஒரு பதிவில் பின்னூட்டியது போல், ஒரு கேள்வி-பதில் பதிவாக, நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ற ரீதியில், ஒரு self-explanatory பதிவை போடுங்களேன்?

எனிவே, என், இந்தப் பதிவு, டோண்டுவின் பதிவுகளைப் பற்றி ஆராய்ச்சி நடத்த அல்ல.

அவர் என்ன பதிவு எழுதினாலும், அங்கு என்ன பின்னூட்டம் இட்டாலும், தேடித் தேடி இந்த ஈ.மடல்களை அனுப்பும் சில சைக்கோ-அனானீஸ்களைப் பற்றியும், அவரின் பதிவுகளைப் படிக்கும் உங்களைப் பற்றியும் கணக்கெடுக்கவே இந்த சர்வே. :)

கீழே உள்ள பெட்டியில் உள்ள சாய்ஸில், நல்லா யோசித்து வாக்களியுங்கள்.டோண்டுக்கு உங்கள் சொந்தப் பெயரில் பின்னூட்ட மிடுபவரானால், இங்கயும் பின்னூட்டமிட்டு அதச் சொல்லுங்க. அது மேல பெட்டீல கொடுக்க மறந்துட்டேன் ;)

டோண்டு யாரென்றே தெரியாதவர்களும், இந்த கெட்ட ஈ.மடல்கள் பற்றித் தெரியாதவர்களும், டோண்டுவின் லேட்டஸ்ட் பதிவை கற்றுணர்ந்து, பின்னூட்டவும் (18 வயதுக்கு உட்பட்டவர்கள், இந்த விபரீத பரீட்சைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டாம்). பிறகு உங்களுக்கே தெரிய வரலாம். அப்பாலிக்கா இங்க வந்து இந்த சர்வேக்கு பதில் சொல்லுங்க ;)

டோண்டு யாரென்று தெரிய, அவரின் பயோ-டேட்டா இங்கே, நம் லக்கி-லுக் கைவண்ணத்தில். :)

பி.கு1: என் ஃபஸ்டு கவுஜ படிச்சாச்சா?

பி.கு2: MSVக்காக சில நிமிஷங்கள் ஒதுக்கவும். உங்கள் பதிவுகளில் இதற்கு ஒரு விளம்பரம் தரவும்.

ஹாப்பி ஓணம்!

நன்றி!

சீ.. நீ எனக்கு வேண்டாமடா...... ... ...
சாந்து பொட்டு தீர்ந்ததென்று
ஸ்டிக்கர் பொட்டு கேட்ட எனக்கு
சாந்தில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
'ஏங்க, வெளில போய் சாப்பிடலாங்க' என்ற என்னை
சரவணா பவன் இட்டுச் சென்று,
சூப்பர் ஸ்பெஷல் மீல்ஸ் உனக்கும் காஞ்சு போன ரெண்டு இட்லி எனக்கும்
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
அடுப்படியில் ஆயிரம் வேலையில் நானிருக்க
'கொஞ்சம் வெங்காயம் வெட்டிக் கொடுங்க' என்றதர்க்கு
'பதிவெழுதறேன் டிஸ்டர்ப் பண்ணாத', என்று ஜெயகாந்தன் போல் பில்ட்-அப் கொடுத்தாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
நெய் ஊற்றி ருசியுடன் நான் செய்த தம்-பிரியாணி
மூக்குப் பிடிக்க தின்றுவிட்டு நீ சாய
'எப்படி இருக்குங்க' என்றதர்க்கு, 'ஓ.கே, ஆனா பக்கத்து வீட்டு பிரியாணி அளவுக்கு இல்லை'யென்றாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
வேலையெல்லாம் முன்னரே முடித்துவிட்டு
'சித்தி' கடைசி எப்பிஸோட் பார்க்க அமர்ந்தால்
'ஹேய், இதை எவன் பாப்பான்' என்று, கூலா சேனலை மாத்தி WWF பார்த்தாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
காலை முதல் மாலை வரை
தினகரனும், குமுதமும், விகடனும், ஹிண்டுவும் ஆன்லைனில் ஓஸியில் படித்துவிட்டு
வீட்டுக்கு வந்ததும்.. 'ஊ, ஒரே டயர்டுப்பா', என்று நீ பண்ணும் அலம்பிருக்கே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
என்னடா இது வாழ்க்கை, கேடு கெட்ட பயலை நம்பி
இன்னும் எத்தனை கால கஷ்டங்களோ என்று கலங்கிய நாளில்
பக்கத்து வீட்டு லக்ஷ்மியும், இதே புலம்பலை புலம்பியது கேட்டேன்
ஹ்ம். நீ கொஞ்சம் ஓ.கே தாண்டா
... ... ...

-சர்வேசன்

(Inspired by நிலவு நண்பன்'s அருமையான கவிதை - நீ எனக்கு வேண்டாமடி)

என் ஃபஸ்டு கவிதை (கவுஜ?) இது. எப்படிகீது?

பின்னூட்டத்தில் உங்க கவிதை திறமையும் காட்டுங்க, இதே ஸ்டைலில் வரணும். :)

;)

Friday, August 24, 2007

இதைப் பார்த்து அழாதார் எதைப் பார்த்தும் அழார்...

என்னடா இப்படி சொல்றேனேன்னு பாக்க வந்தீங்களா?

பொதுவாவே கொஞ்சம் 'ஸ்ட்ராங்' ஹார்ட் நம்மளது. அவ்ளோ சீக்கிரம் கரையாது.
ஆனாலும், இன்னிக்கு பாத்த ஒரு படம் அப்படியே கரச்சுடுச்சு மனுஷன.

ஆடிப்போயிட்டேன்.

எனக்கே இப்படின்னா, எங்க வீட்ல இருக்கரவங்கள பத்தி கேக்கணுமா.
வீட்ல கண்ணீர் ஆரு ஓடுது.

என்ன படமா? இப்ப சொல்லத் தெம்பில்ல. திங்கள் கெழம வெலாவாரியா பாக்கலாம்.

இந்த மாதிரி தாக்கமுள்ள படம் நீங்க பாத்திருக்கீங்களா ஏதாச்சும்? சொல்லிட்டுப் போங்க.

வந்தது வந்தீங்க, இதையெல்லாம் கொஞ்சம் கவனிச்சுட்டுப் போங்க.

1) கும்மியர் 007 வாக்குப் பதிவு விருவிருப்பா நடக்குது. நெக்-டு-நெக் போட்டி நடக்குது.

2) Good News பாத்தீங்களா?

3) MSV petitionல பெயர் பதியுங்கள். அவருக்கு எப்படியாவது ஒரு அவார்டு வாங்கித் தரணும்.

4) இதப் பாத்து சிரிச்சீங்களா இல்லையா?

5) ஜன கன மன கத்துக்கிட்டீங்களா இல்லியா?

;)

Thursday, August 23, 2007

நான் எங்கன்னு கண்டுபிடிங்க...

விவரங்கள் கீழே.. ஹாப்பி ஃப்ரைடே!


'கும்மியர் 007' எப்படி கீது?

115 வாக்குகளுடன் ரவி முன்னணியில் இருக்க, செல்லாவும் சிபியும், நெக்-டு-நெக் பின் தொடருகிறார்கள்.

சற்றுமுன் வந்த தகவல் படி, செல்லா தனது வேட்புமனுவை விலக்கிக் கொள்கிறாராம்? ஏனுங்க, என்னாச்சு?

செல்லா, இதுவரை 71 வாக்குகளுடன் ரெண்டாவது எடத்துல இருக்காரு.
( அவரது வாக்குகளை எனக்கு தாரை வார்த்துக் கொடுக்கறாறான்னு கேக்கணும் ;) ).

சிபிக்கு இதுவ்ரை 70 வாக்குகள்.

விவரங்கள் இங்கே க்ளிக்கி பாத்து, வாக்காதவங்க வாக்குங்க.

சும்மா டமாஸுக்குதான். போட்டு தாக்குங்க.

பி.கு: இதுவரை 250 வாக்குகள் கிட்ட வந்திருக்கு, வந்தவங்க எல்லாரும் MSVய கண்டுக்கினீருந்தீங்கன்னா நல்லாருக்கும். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல, இங்க க்ளிக்கி MSV பெட்டிஷன்ல கையெழுத்து போடுங்க.

Happy Friday!

Wednesday, August 22, 2007

நான் அவன் இல்லை

இதோ இது நான் எடுத்தது:


இது அவரு எடுத்தது:


நோ அதர் கமெண்ட்ஸ் :)

மொக்கைக்கு நம்மால ஆன பதிவு இது.
'கும்மியர் 007'க்கு கன்னா பின்னானு கேன்வாஸ் பண்ணி, கும்மியர்ஸ் எல்லாம் வாக்கு சேகரிக்காறாங்க்ய. எனக்கு வெறும் 4 வோட்டு தான் விழுந்திருக்கு.

கொஞ்சம் மனசு வையுங்க. தற்போதைய நெலவரம் பாத்து வாக்களிக்க இங்கே போங்க.

;)

Tuesday, August 21, 2007

சிபியும் செல்லாவும் பின்தொடர செந்தழல் ரவி ஓடிக்கொண்டே இருக்கிறார்...

ஓடர ஓட்டத்த பாத்தா, கோப்பை அவருக்குதான் போல இருக்கே.

டெம்ப்ளேட்ல புதுசா பதக்கம் வெக்க எடம் இருக்கா?

ஆரம்பத்தில் பின்னில் இருந்த செல்லா, இப்போதான் ஸ்பீடு பிக்-அப் பண்ணியிருக்காரு.
'நமக்கு நாமே' என்ற விதத்தில், தன்னைத் தானே நாமினேட் செய்து கொண்ட சிபியும் முந்திக் கொண்டிருக்கிறார்.

பொட்-டீ-கடைக்கு நான் நினைத்த அளவுக்கு கொலை-வெறிப் படை இல்ல போலருக்கு.
ஆஸ்ட்ரேலியாவில் படையெல்லாம் அமச்சுக்கணும்னா துட்டு ஜாஸ்தி ஆவுமா?

கோதாவில் உள்ள மத்தவங்க நெலம ரொம்பவே கஷ்டம். (எனக்கு ரெண்டு ஓட்டு வந்திருக்கு. ஹை :) ).

தற்போதைய நெலவரம் இங்கே. வாக்கெடுப்பில் வாக்காதவர்கள் இங்கே க்ளிக்கி வாக்குங்கள்.
வாக்கெடுப்பு கடைசி தேதி இம்மாசக் கடைசி!


பி.கு. MSVய கண்டுக்கோங்க. உங்க பதிவுலயும் வெளம்பரம் கொடுங்க petitionகு. இளா, முதல்வரின் கவனத்துக்கு இந்த மேட்டர கொண்டு போறாராம். ஒரு ஆயிரம் கையெழுத்தாவது வந்தாதான் கவுரிதியா இருக்கும்.

பி.கு: மருதம், மோகந்தாஸ், கவிதா, முத்தெலெட்சுமி, சிறிலின் ஜன கன மன கேளுங்க. 60 பேர் வந்தாதான் வாக்கெடுப்பு, பரிசு. டக்குனு பாடுங்க. பரிசை வெல்லுங்க.

பி.கு: பாட்டுக்கு பாட்ட மறந்திட்டீயளா? 27 பாட்டும், 151 பின்னூட்டமும் வந்தப்பறம் அப்படியே நிக்குது. எ, ஏ,ய, யால பாடி அனுப்புங்க

பி.கு: அதி புத்திசாலித்தனமான கேள்விக்கு இன்னும் பதிலு வரல.

;)

Monday, August 20, 2007

ஜி.ரா'ஸ் இறால் குடைமிளகாயும் எங்க வீட்டு மீன் குழம்பும்

ஜி.ராகவனின் அடுப்படியில் இறால், குடைமிளகாய் வறுவல் செய்முறை கொடுத்திருந்தார்.

அந்த ஃபோடோ பாத்தவுடன் அத அப்படியே குத்தி குத்தி திண்ணனும்னு பேரவா எழுந்தது.

அவரும் கணக்கா வீக்-எண்ட்ல பதிவப் போட்டு ஜூடான இடுகைகள்ல இடம்புடிச்சு, எப்பவும் கண்ணுல பட்டுக்கிட்டே இருந்தாரு.

ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்க முடியாம, உடனே போய், இறாலும் (shrimp), குடைமிளகாயும் தேடிப் புடிச்சு வாங்கி வந்தாச்சு. சிவப்பு குடைமிளகாய் அவசரத்துக்கு கெடைக்கல, பச்சைதான் கிட்டியது.

அவரு சொன்ன மாதிரியே, ரொம்ப ஸ்ரத்தையா ஸ்டெப்-பை-ஸ்டெப் ஃபாலோ பண்ணி, இறால் ரெடி பண்ணியாச்சு.
மற்ற மசாலாக்கள் சேர்க்காத வறுவல் என்பதால், இறாலின் சுவை கூடியிருப்பதாகவே தோன்றுகிறது. இல்லன்னா, ஜி.ராவின் எழுத்துத் திறமையால் எனக்கு அப்படி தோணுதான்னு தெரியல.
குத்தித் குத்தித் திண்ண தெவிட்டாத இன்பம்.
இதோ, எங்க வீட்டு இறால் ஃப்ரை!நீங்களும் ஃப்ரை பண்ணுங்க!

இறால் வாங்கப் போன எடத்துல ஃப்ரெஷ்ஷான அமெரிக்கன் மேக்கரல் (நம்மூரு அயிலை மீன்) கிடைத்தது.
விடுவோமா, அதயும் கொண்டாந்து, ஒரு சூப்பர் மீன் குழம்பு செஞ்சாச்சு.
மீன் குழம்பும், இறால் வறுவலும், ரொம்ப நல்ல காம்பினேஷன். அமோகமா இருந்ததுங்கோ!

மீன் குழம்பின் படங்கள் கீழே :)
(செய்முறை வேணுமா?)பி.கு1: யாராவது மட்டைன் லிவர் ஃப்ரைக்கு நல்ல ரெஸிபே சொல்லுங்களேன்.

பி.கு2: டோண்டு ராகவனும், பட்டறையும், சைக்கோவும், என் சுதந்திரம் பறிபோன கதையும்

பி.கு3: கும்மியர் 007 வாக்கியாச்சா?

Sunday, August 19, 2007

டோண்டு ராகவனும், பட்டறையும், சைக்கோவும், என் சுதந்திரம் பறிபோன கதையும்

என்னத்த சொல்றது. நான் பாட்டுக்கினு தேமேன்னு சர்வே போட்டுக்கினு, மொக்கைப் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டுகினு செவனேன்னு கெடந்தேன்.

வேல வெட்டி ஏதும் இல்லாம தமிழ்மணத்த மேஞ்சுக்கினு இருந்தப்போ, டோண்டு ராகவன்னு ஒருத்தரோட பதிவு ஒண்ணு படிச்சு பின்னூட்டனேன். வயசானவங்க ஓய்வூதியம் வாங்க எவ்ளோ கஷ்டப்படறாங்கன்னு எழுதியிருந்தாரு. அடேங்கப்பா, மனுஷன் பல நூறு பதிவுகள் போட்டு பின்னிக்கிட்டிருக்காரு.

அவருக்கு பின்னூட்டம் போட்ட பத்து நிமிஷத்துல, பிடிச்சது சனி!

பின்னூட்ட மாடரேஷன் எல்லாம் செய்யாம, சுதந்திரமா இருந்த என் பதிவுல, கன்னா பின்னான்னு ஏதோ ஒரு சைக்கோ குப்பைய கொட்டிக்கினான். டோண்டுக்கும் அவனுக்கும் ஏதோ ஜென்ம விரோதப் பகை போலருக்கு. வாட் இஸ் த ஹிஸ்டரி பிஹைண்ட்?

என்ன கரமாந்திரமோ. சைக்கோ தொல்ல தாங்க முடியல. லேப்-டாப்புலேருந்து பொக வருது.

கமெண்ட் மாடரேஷன் திரும்பப் போட்டு என் சுதந்திரத்துக்கு நானே முட்டு போடவேண்டியதாப் போச்சு. வாழ்க பாரதம். ஊர்லதான் தெகிரியமா வாயத் தொறக்க முடியாது. இனி, இங்கயும் இந்த மாதிரி ஆளுங்கலால தேவையில்லா முட்டுக்கட்டைகள் கொட்டப் போவுது.

என்ன பட்டறை நடத்தி என்ன ப்ரயோஜனம்? வூட்டக் கழுவிட்டு, அப்பாலிக்கா கெஸ்ட்ட கூட்டிட்டு வாங்க. வந்த ஒடன ஓடிடப் போறாங்க இதெல்லாம் பாத்து.

ஐயா சைக்கோ, இதோ இந்த அவார்டு உனக்குத்தான். எஞ்சாய்!


எல்லாருக்கும் இப்படி வருதா? இல்ல, எனக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்டா? எல்லாரும் டோண்டுக்கு ஒரு பின்னூட்டம் போடுங்க. அப்பாலிக்கா, இங்க வந்து சொல்லுங்க, உங்களுக்கும் கவனிப்புக் கிடைத்ததா என்று :) யாருக்கு என்ன நடந்தா என்னன்னு கண்டுக்காம போயிடாதீங்க ;)

பி.கு1: சரி சரி, லெஸ் டென்ஷன், கும்மியர் 007 வாக்குப் போட்டாச்சா?

பி.கு2: ஜூடான இடுகைகள்ல வந்துரும்ல? குத்துங்க!

கும்மியும் தமிழ்மணப் பிரச்சனையும்

கும்மியர் 007 சர்வே போட்டேன். இங்க க்ளிக் பண்ணி பார்த்து,படிச்சு, வாக்கு போடுங்க.

ஏனோ தெரியல, தமிழ்மணத்துல அந்தப் பதிவு தெரிய மாட்ரது.

கும்மின்னதும் ஃபில்டர் பண்றாங்களோ ;)

:)

கும்மியர் 007 - சர்வே ஆரம்பம் - வந்து கும்முங்க!

கும்மியர் 007 ஐ தேர்ந்தெடுக்கும் தலையாய பணியை ஏற்றுக் கொண்டோம். அதை செவ்வனே செய்து முடிக்க, உங்களிடமிருந்து விண்ணப்பங்களை கடந்த ஒரு வாரமாக பெற்று வந்தோம்.

வந்த விண்ணப்பங்களை வைத்து, வாக்குச் சீட்டு செய்து, கீழே வாக்குச் சாவடியில் ஏற்றி உள்ளோம்.

வந்து கும்முங்க! சிறந்த கும்மியர் வெல்லட்டும்.
வாழ்த்துக்கள்!

போட்டி முடிவடந்தது. முடிவுகள் இங்கே.

கும்மியர் 007 கோப்பை இதுதான்.பி.கு: MSV petition கையெழுத்து போட்டாச்சா?

பி.கு: சிறிலின் instrumental இசையும், ஷைலஜாயின் பாடலும், முத்துலெட்சுமியின் கோரஸும் புதுசு. கேளுங்க, கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

பி.கு: Good News படிச்சீங்களா?

உங்களின் சில பொன்னான நிமிடங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!! ;)

Friday, August 17, 2007

Really GOOD news

You may have seen this உயிரைக் காப்பாற்ற உதவுங்கள்!.

Vinay is successful in finding a bone marrow donor. Read further.-------- -------- -------- -------- -------- -------- -------- --------
Good news everyone. I found a match. It is not a perfect match but it is a 9/10 match. The donor is extremely committed. His commitment is so strong that he was willing to pre-pone his stem cell donation to fit my doctor's recommendations. I can't express how much this means to me. In the past I wrote about how one of the potential donors became "unavailable" due to a lack of family support. This is not the case here. You, as volunteers and activists, deserve the credit in the change in our community's mentality and their conviction to be a COMMITTED DONOR.

Tomorrow morning I will begin my journey into the transplant process. I will be admitted and have several procedures done, including placement of 2 Hickman catheters. The transplant will be a long and arduous process but your support and well wishes will get me through these difficult times. I love reading all the "show of support" comments and it really brightens my spirits.

Many of you stay connected to me through this wonderful website. Many of you I know and many of you I have heard of through my family and friends. I will do my very best to keep you up to date on my progress. And even if I am unable to write, I will have Rashmi relay my sentiments. I hope to have new updates at least a few times a week.

Team Vinay should be proud of all it has accomplished. In the short few months that you all have been active, we have registered over 23,000 South Asians. This is clearly over a 20% increase to the existing number of S. Asians on the registry. And as you may know a few of the marrow registrants through Team Vinay drives have already been contacted as being potential donors for others in our community. Through your tireless efforts we have also achieved a few more significant goals. Team Vinay, working along with NMDP , is responsible for implementing a protocol for culturally competent callbacks for potential S. Asian donors. Another wonderful outcome is the creation of a S. Asian specific website that will serve as a sustainable informational and educational tool for our community for the years to come. The content of the website is growing and will include input from key Team Vinay members - it should be up and running next month!

This past week has been amazing. I have enjoyed my short yet fulfilling week at home, spending time with Rashmi and other family and friends. We watched Rush Hour 3, had a BBQ and played dominoes. Thank you all again for your unwavering support and well wishes. Much love to you all; Vinay.
-------- -------- -------- -------- -------- -------- -------- --------

Thursday, August 16, 2007

காணவில்லையாம் (பெற்றோரை) - பாருங்க, பரப்புங்க, உடனே

A 2 years old girl was found abandoned at Kapaleswara temple, Chennai on 1st Aug. Police could not find any missing complaint in Chennai, related to her. Right now, she is kept in an orphan home - Anbu Illam.

She is very much depressed and looks very dull. She is not able to speak much as she is very young. Some times, she says her name as Ashwini and some times as Aiswarya.

Her news came in some newspapers(Hindu, Dinamalar and Eenadu) on 11th Aug. But, till now there is no response from any one. We are hoping that someone known to her parents/relatives will read this and try to reach her.

If any of you know this kid's details, pls. send a mail to siru_thuli@yahoogroups.com.

There may be a chance that someone can recognize her. Look at the picture below, carefully.

Wednesday, August 15, 2007

க்ளாஸுக்கு டைமாச்சு - அமுதசுரபி, செந்தழல் ரவி, சேதுக்கரசி, மோகன்தாஸ், அப்பாவி, சிங்கை சுமங்கல்

வாங்க வாங்க. வந்து நில்லுங்க.
என்னடா க்ளாஸுன்னு பாக்கறீங்களா?

வேற என்ன? தேஞ்சு போற ரெக்கார்டு மாதிரி சொன்னதையே தான் சொல்லப் போறேன்.
60 வர வரைக்கும் விடப் போறதில்ல.

17 பேர் வந்திருக்காங்க. 17ல ஆறு பேர் இன்னும் பாடி அனுப்பல.
அவங்கள ஊக்கப் படுத்தும் விதமா, கம்பெனியார் செலவுல ஒரு க்ளாஸ் ரெடி பண்ணி வெள்ளக் கார அம்மணிய ட்யூஷன் எடுக்கச் சொல்லியிருந்தோம்.
அந்த வீடியோ கீழ (நன்றி KRS).

அழகான விளக்கங்கள் இங்க KRS போட்டிருக்காரு பாருங்க. படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

இப்ப க்ளாஸுக்கு நேரமாச்சு. ஒழுங்கா கவனமா கேளுங்க.
கேட்டுட்டு பாடி அனுப்புங்க.
பெயர் பதியாதவங்க வெக்கப்படாம பதியுங்கள்.மேல் விவரங்கள் இங்கே

பி.கு: 60 வர வரைக்கும், தினம் ஒரு பதிவா இந்த மேட்டரே மாத்தி மாத்தி வரும் :)

;)

Tuesday, August 14, 2007

அதி புத்திசாலித்தனமான ஒரு கேள்வி...

ரொம்ப நாளா ஒரு கேள்வி மனச அரிச்சுக்கிட்டே இருக்கு.
இணையத்தில் விடை தேடினபோதும் திருப்தியான விடை ஒண்ணும் கெடைக்கல.

இயற்கை வலியதுன்னு எல்லாருக்கும் தெரியும்.
இயற்கையின் design அபாரமானது, ஆச்சரியமளிப்பது.

மனுஷன் பொறந்து வருஷக் கணக்கானா தான் நடக்க முடியும். ஆனா, ஆடு, மாடு, மானெல்லாம் பாத்தீங்கன்னா பொறந்த அடுத்த நொடியில எழுந்து நடக்க ரெடியாயிடும்.
அவற்றின் வாழும் சூழலுக்கேற்ப இந்த design.
ஆடு, மாடு, மானெல்லாம் எழுந்த நடக்க ஒரு வருஷம் எடுத்திக்கிட்டா, சுத்தி நிக்கர சிங்கம் புலியெல்லாம் உடனே அதை அப்பீட் செஞ்சுடுமாம், அதனாலதான் இயற்கையின் design ஆடு, மாட்டை உடனே நடக்கச் செய்கிறது.

உச்சு கொட்டாதீங்க, என்றோ பார்த்த நேஷனல் ஜியாக்ரபில சொன்ன மேட்டர் தான் இது. என் அறிவு ஜீவிக் கேள்வி மேட்டர் இதல்ல.

இப்படிப் பட்ட 'பக்கா' design கொண்ட இயற்கை ஆண்டவனால் வடிவமைக்கப் பட்டது என்பதுதான் என் நம்பிக்கை. (இயற்கை தான் ஆண்டவன் என்றும் வைத்துக் கொள்ளலாம்).

Prey, Predator, survival of the fittest இதெல்லாம் இயற்கையின் நியதிகள் என்பதும் புத்திக்குப் புரிகிறது.
ஒரு குழந்தை உருவாகி, உருப்பெற்று, வடிவாகி, பிறக்கும் வரை இதே நேஷனல் ஜியோவில் காண்பித்தார்கள். அப்பப்பா, எப்படிப்பா இப்படியெல்லாம் design பண்ண என்று கடவுளைப் பார்த்தால் கேட்க வேண்டிய கேள்விகள் பல உள்ளன.

இன்னிக்கு உங்க கிட்ட கேக்கர கேள்வி இதுதான்.
என்னென்னமோ இயற்கைல தில்லாலங்கடி மேட்டரெல்லாம் இருக்கு. ஆனா, இந்த கடல் தண்ணி மட்டும் ஏன் இப்படி உப்பா இருக்கு?
அறிவியல் காரணங்கள் கேக்கல -- ஆண்டவன் இப்படி ஏன் படச்சான்?

மெலிந்த கொடியில் பெரிய பூசனிக்காயையும், பெரிய மரத்தில் குட்டி புளியங்காயையும் வைத்த இறைவனின் படைப்பின் புத்திசாலித்தனம், சிறு வயதில் படித்த நியாபகம் உண்டு.

ஆனா, இந்த கடல் தண்ணி உப்பாக்கினது எந்த வகையில நியாயம்/புத்திசாலித்தனம்?

இதன் அவசியம் என்னவா இருந்திருக்கும்?

இவ்ளோ அழகா பல விஷயங்கள் செஞ்சவருக்கு, இந்த உப்பு மிக்ஸிங்குக்கு ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும். அது என்னங்க?

ஆத்தீகர்களும், நாத்தீகர்களும், காரணங்களை யோசித்து பதிவாகவோ பின்னூட்டமாகவோ இடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். :)

பி.கு1: ஜன கன மன 15 பேர் தேறியாச்சு, இன்னும் 45 வேணும். அடுத்த வருஷத்துக்குள்ளவாவது வந்துருவீங்களா? பாடத் தெரியாதவங்க இங்க கேட்டு கத்துக்கலாம். சூப்பர் லெஸன்.

பி.கு2: MSVயை மறக்காதீங்க. 20 கையெழுத்துக்கள் கெடச்சிருக்கு இதுவரை. இளா, முதல்வர் கிட்ட மேட்டர் கொண்டு போரேன்னு சொல்லியிருக்காரு. உடனே பெயர் பதியுங்கள்.

About Independence, India, Indians ~ GANDHI

There are quotable quotes from Gandhi here.

Happy 60th Independence Day, everyone!

JaiHindh!

now, enjoy, Vande Matharam!& Jana Gana Mana!

Monday, August 13, 2007

இவ்ளோஓஓஓஓ மொக்க போட்டும் பத்தலியே...

என்னங்க அநியாயமா இருக்கு? ஒரு மேட்டர வெளிச்சத்துக்கு கொண்டுவர, ஒரு மொக்க போடலாம், ரெண்டு மொக்க போடலாம்.
வரிசையா இவ்ளோ மொக்க போட்டு, படிச்சீங்களா, செஞ்சீங்களா, பாத்தீங்களா, செய்வீங்களா, ளா ளா ன்னு கேட்டும் நெனச்சது நடக்கலியே?அப்படி என்னத்த பெருசா கேட்டுட்டேன்? 60ஆம் வருஷ சொதந்திர தெனம் கொண்டாடறோமே, இந்த வருஷமாவது ஜன கன மன முழுசா பாடக் கத்துக்கிட்டு, அத அட்சரம் பெசகாம பாடி அனுப்புங்கன்னு கேட்டேன்.
அதுவும், 60 பேர்ல ஒருத்தர சர்வே போட்டு செலக்ட் பண்ணி, 1001 ரூவா தரென்னு வேற சொன்னேன்.

இதுக்கு மேல என்னத்த செய்ய முடியும்?

பேர் கொடுத்த எல்லாரும், சட்டுனு பாடி உங்க பாட்ட, ஒரு பதிவா போடுங்க, எனக்கும் மடல் அனுப்புங்க.

பேர் கொடுக்காதவங்க, ஒரு கணம் யோசிச்சுப் பாருங்க. இப்ப கத்துக்கலன்னா எப்ப கத்துக்கரது ஜன கன மன?

இதுவரை பாட்ட அனுப்புனவங்களுக்கு நன்னி! கீழ சொடுக்கி இதுவரை வந்த பாட்ட கேளுங்க.

மத்தவங்க உடனே மைக்க புடிச்சு பாட்ட பதிஞ்சு அனுப்புங்க மக்களே!

இந்த மேட்டர் ஆரம்பிச்சதுல ஒரே நல்ல விஷயம் இந்த ஜன கன மன கேட்டதுதான் :)

1) 'Appavi' family Kid
2) Surveysan - Click to listen
3) Sumanga, Singapore
4) அமுதசுரபி
5) செந்தழல் ரவி
6) சேதுக்கரசி
7) மோகன்தாஸ்
8) அப்பாவி
9) TBCD
10) CVR
11) கண்ணபிரான் ரவிசங்கர்(KRS)
12) Kavitha
13) மாதினி
14) k4karthik
15) Marutham
16) மாதிரி, முத்துலெட்சுமி & நண்பர்கள்
17) ஷைலஜா
18) சிறில் அலெக்ஸ் (instrumental)
..
60) ????


என்னமோ போங்க :(

இதைப் பார்த்து சிரிக்காதார் எதைப் பார்த்தும் சிரிக்கார்.

seriously, முதல் குறும்படம் பார்த்து சிரித்து வயிறு வலித்தது உண்மை.
இரண்டாவது குறும்படத்தின் முதல் பாகம் அருமை.
மூன்றாவது, சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காமலும் போகலாம்.

எஞ்சாய்!

பி.கு1: கும்மியார் 007 நடக்குது தெரியுமில்ல?
பி.கு2: MSV petition படிக்க மறக்காதீங்க.
பி.கு3: ஜன கன மன.. ஹ்ம்ம் :(

Sunday, August 12, 2007

சிறந்த கும்மிப் பதிவர் 2007

இது கும்மி சீசன் மாதிரி, வரிசையா பல கும்மிகள் கடந்த சில வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றன.

அதிகமாய் மொக்கைப் பதிவுகளைப் போடும் கும்மிப் பதிவரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு.

இங்கே அதற்கான பரிந்துரையை கண்டவுடன், உடனே களத்தில் இறங்கி, சர்வே கமிட்டியை கூட்டி "கும்மி 2007"ஐ கட்டம் கட்டி தேர்வு செய்ய ஆயத்தமானேன்.

டிசம்பர் மாதத்தில் வர இருக்கும் "சிறந்த பதிவர் 007©"க்கு இது ஒரு ஒத்திகையாக இருக்கும் :).

"கும்மிப் பதிவர் என்பவர் யாரெனில்
மொக்கையே ப்ரபலமாகும் வழி என்றுணர்ந்தவர்" :)

சிறந்த கும்மிப் பதிவர் யார்?
விண்ணப்பங்களும், பரிந்துரைகளும், வரவேற்க்கப்படுகின்றன.

ஆகஸ்ட் 20ம் தேதி, வாக்கெடுப்பு ஆரம்பிக்கும்.

விண்ணப்பங்களையும், பரிந்துரைகளையும் அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 17.
விண்ணப்பங்களையும், பரிந்துரைகளையும் வாபஸ் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 19.

கும்மியர் '007© யாருங்க?பட்டைய கெளப்புங்க!

:)

பி.கு1: டமாஸுக்குதான், பரிந்துரையில் உங்கள் பெயர் வந்தால், வருத்தப் படாதீங்க - கொண்டாடப்பட வேண்டிய விடயம் அது :)

பி.கு2(சமீபத்தில் சேர்த்தது): பரிந்துரைக்கப் படும் பதிவர்களின் பதிவுகளை மேலோட்டமாக அலசிவிட்டு, சர்வேயில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு அவர் திறமையான கும்மியரா என்று முடிவெடுக்கும் உரிமை சர்வேசனுடையது ( விட்டா, திருவள்ளுவர் பேர கூட சேத்துடுவாங்க போல இருக்கே, வர லிஸ்ட் பாத்தா :). அதுக்காக இந்த டிஸ்கி )

லயிக்க வைக்கும் பக்கத்து ஊர் Anne Amie

குருவாயூர் கோயில் போயிருந்தீங்கன்னா ஏசுதாஸ் பாட்டு பல கேட்டிருப்பீங்க. காலங்காத்தால 5 மணிக்கெல்லாம் எழுந்து சில் தண்ணில குளிச்சு சந்தனம் பூசிக்கிட்டு கோயில் நடையில் நடந்து போகும்போது, சைட்ல இருக்கர கேசட் கடையில ஏசுதாஸ், சித்ரா பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கும்.

ச‌ன்த‌ன‌ வாச‌னையும், உட‌ன் ந‌ட‌ந்து செல்லும் கேர‌ள‌ வாசிக‌ளும், வாச‌லில் அல‌ங்கார‌த்துட‌ன் நிற்கும் பெரிய‌ யானைக‌ளும், அந்த கோயிலின் மென்மையும், அமக்களமான ரகம்.

அந்த ரம்ய சூழல் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவி‌சிச்சாதான் புரியும்.

சில‌ வ‌ருஷ‌ங்க‌ளுக்கு முன் குருவாயூர் சென்ற‌ போது, ஏசுதாஸின் ஒரு பாட்டு, க‌ட்டிப்போட்டு இழுத்துது. ஒண்ணும் புரிய‌ல‌ன்னாலும், அவ‌ரின் குர‌லும், அந்த பாட்டின் இனிமையும் ஆள‌க் க‌ர‌ச்சுடும். குடஜாத்ரியில் (Kudajadriyil) என்று தொடங்கும் பாடல்.

இன்னிக்கு அந்த‌ பாட்ட‌ தேடிட்டு இருக்கும்போது, ஒரு பெண் அந்த பாட‌லை பாடிய‌ வீடியோ கிடைத்த‌து (some Asianet program). ரொம்ப‌ அழ‌கா பாடியிருக்காங்க‌ Anne Amie.

கேட்டுப் பாருங்க‌.
ஏசுதாஸ் பாடிய‌து, யாரிட‌மாவ‌து இருந்தால், வ‌லையேற்ற‌வும் :) எங்க‌ கெடைக்குதுன்னு சொன்னீங்க‌ன்னாலும் ந‌ல்லா இருக்கும்.Anne Amie பாடிய இன்னொரு மலையாளப் பாடல். இதுவும் நல்லா இருந்தது. இந்த பாடலை கேட்டு ஜட்ஜஸ் கொடுத்த விளக்கங்களும் அருமை. :)MSV petition படித்து உங்கள் சப்போர்ட் கொடுங்கள்!

Jana Gana Mana பெயர் பதியாவதங்க, பெயர் பதிந்து பாடல் அனுப்பாதவங்க, எல்லாருக்கும் டூ!

Friday, August 10, 2007

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - Very touching Video!

தண்ணீரில் தத்தளிக்கும் எருமையை, கடித்து இழுக்க முயலும் நாலைந்து சிங்கங்கள்.
சிங்கத்திடம் இருந்து பிடுங்கித் தின்னத் துடிக்கும் முதலை.

கடைசியில் என்னாகிறது? அட்டகாசமான திருப்பங்களுடன் ஒரு குறும்படம். கீழே!ஜன கன மன மறக்காதீங்க..
MSVக்கான petitionல் பெயர் பதியுங்களுங்கள்

:)

Wednesday, August 08, 2007

Michael Jackson - in Guinness + some video clips

மைக்கேல் ஜாக்ஸன் - பேரக் கேட்டாலே அதிரும், இவர் ஏறும் மேடைகள் எல்லாம்.
King of Pop னு சும்மாவா சொல்றாங்க.
அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது. அதை அலச அல்ல இந்த பதிவு.

ஒரு ரசிகன் என்ற முறையில் அவரின் ப்ரம்மாண்டமான திறமைக்கு வந்தனம் செய்யவே இந்தப் பதிவு.

அப்பெல்லாம், நம்மூர்ல world-this-weekனு ப்ரணாய் ராய் ஒரு ப்ரோக்ராம் பண்ணுவாரு.
அதுலப் பாத்துதான், மைக்கேல், மடோனாவெல்லாம் பரிச்சயம்.

அப்பறம் ஸ்கூல்ல, சில பயலுவ, Bad, Thriller, Dangerousனு வகை வகையா இவரு பாட்ட போட்டுக் காமிப்பாங்க. ஒவ்வொரு பாட்டும் ஜிவ்வுன்னு இருக்கும்.

இப்ப கேட்டாலும், அருமையான பாடல்கள் இவை.

2006 உலக இசை விருது நீகழ்ச்சியில், மைக்கேலுக்கு Diamond award கொடுத்து கவுரவிச்சாங்க.
அவர் பேர சொல்லும்போதும் சரி, அவர் மேடைக்கு வரும்போதும் சரி, ரசிகர்கள் செய்த ஆர்பாட்டம், அடேங்கப்பா.

25 வருஷம் ஆச்சு Thriller வந்து.
இதுவரை 104 மில்லியன் ஆல்பம் வித்துட்டாங்களாம்.
யாரும் கிட்ட வரமுடியாது.

உலக சாதனை இதுன்னு, கின்னஸ்ல போட்டுட்டாங்க.

$300 மில்லியன் இதுவரை பொதுநல காரியங்களுக்கு கொடுத்திருக்காராம்.

இவர் பாடல்கள் பற்றி பிறகு எழுதுகிறேன், இப்போதைக்கு இதக் பாருங்க.

Heal the world, கேட்டுப்பாருங்க. சொக்கிடுவீங்க.


thrillerல கடைசி நிமிட டேன்ஸ் பாருங்க, அசந்துடுவீங்க. :)


மைக்கேல் தலைவா, கலக்கிட்டீங்க..
தொடர்ந்து கலக்குங்க!

என்றென்றும் ரசிகன்,
-சர்வேசன்

பி.கு1: MSV petitionனை கவனிக்கவும்
பி.கு2: ஜன கன மன.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அனுப்புங்கய்யா...

Tuesday, August 07, 2007

150. ஜெ...ஃபிகர் ஓவியங்கள் சில‌!

ஜெ போட்டு, பக்கத்துல மூணு புள்ளி வச்சு, தன் ஓவியங்களுக்கு கையெழுத்து போடுவார் ஜெயராஜ்.
இதோ இப்படி ‍'ஜெ...'

ஞாபகம் இருக்கா அவர? நம்மூரு ராணி, குமுதம், குங்குமங்களில் வரும் சிறுகதை, பெறுகதைக்கெல்லாம் சித்திரம் வரைந்து கதைக்கு உயிரூட்டியவர்.

இவருக்கென்றே ஒரு தனி பாணி உருவாக்கி, பாத்தவுடன், 'ஜெ' படம்தான்னு சொல்ல வைக்கும் ரகங்கள் இவர் படங்கள்.

இவர் படத்தில் மிக மிக நளினமாய் வரும் பெண்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ( ஹி ஹி ).

வல்லிசிம்ஹனின் இந்தப் பதிவில் ஜெயராஜ் பற்றி குறிப்பிட்டிருந்தார். பழைய ஞாபகம் எல்லாம் வந்துடுச்சு, அதான், அங்க இங்க தேடி, ஜெ... படங்கள் சில கீழ போட்டிருக்கேன்.
ஜெயராஜின் பேட்டி ஒன்று, இங்கே காணக் கிடைக்கிறது.

எஞ்சாய்!

ஜெ... படங்கள் வேற எங்காவது இருந்தா, பின்னூடுங்கள். ;)

பி.கு1: MSVக்கு உயர் விருது கொடுக்கவேண்டும் என்று உருவாக்கிய பெட்டிஷன் here. படித்து, பெயர் பதியுங்கள்.

பி.கு2: ஜன கன மன மறக்காதீங்க சாரே.

பி.கு3: பட்டறை மேட்டர் இங்கே

ச...

Sunday, August 05, 2007

பட்டறை ‍ BESTஆ? BETTER ஆவ‌ணுமா?

அசத்தலா முடிஞ்சிருக்கு பட்டறை.

நேரடி ரிப்போர்ட் ஒவ்வொண்ணும் பாக்க பாக்க, அடடா மிஸ் பண்ணிட்டோமேன்னு தோணிச்சு.
ரொம்ப அழகா ஆர்கனைஸ் பண்ணி, நடத்தியிருக்காங்க.

இதன் மூலம் புதிய பதிவர்களின் வருகை அதிகரிக்கும்னே தோணுது.

ந‌ல்ல‌து.

கொஞ்ச‌ நாளைக்கு மொக்கை ப‌திவுக‌ள் போட‌ர‌து க‌ம்மி ப‌ண்ணிக்க‌ணும். புதுசா வ‌ர‌வ‌ங்க‌ அத‌ பாத்து, "இதுக்கா இந்த‌‌ பில்ட‌ப்புன்னு" திரும்ப‌ ஓடிட‌க் கூடாது :) ( நீ மொத‌ல்ல‌ நிறுத்துன்னு சொல்ற‌து, நல்லாவே கேக்குது :) ).

பாஸ்டன் பாலா பட்டறை பற்றி வரும் எல்லா பதிவையும் தொகுக்கறாரு இங்கே.
நான் புதுசா சொல்ல ஒண்ணும் இல்ல, அங்க போய் எல்லாம் பாத்து தெரிஞ்சுக்கோங்க.

அருமையா நடத்தி முடிச்ச நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றீஸும்.
லேசுபட்ட காரியம் இல்ல நீங்க எல்லாரும் செஞ்சது. Hats off!

நீங்கள் பட்டறை பத்தி என்ன நெனைக்கறீங்க? அடுத்த பட்டறை எங்கே வெக்கலாம்?

என் ப‌ங்குக்கு ஒரு ச‌ர்வே, கீழே :)
உங்க கருத்துக்களையும் சொல்லுங்க‌.

Friday, August 03, 2007

பத்மபூஷனும் விபூஷனனும் ஈயம் பித்தளைக்கு வாங்கரோமுங்கோ...

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இதுவரை பெரிய அங்கீகாரங்கள் எதுவும் வழங்கப்பட்டதில்லை என்று வவ்வால் இங்கு பதிந்ததைக் கண்டேன்.

உண்மையிலேயே இது பெரிய ஆச்சரியத்தைத் தந்தது.

இப்படி கூட விட்டுருவாங்களா என்ன?

சாதாரண ஆளா அவரு? என்னென்ன பாட்டெல்லாம் போட்டிருக்காரு? எவ்வளவு விதமான ராகங்கள்? அடேங்கப்பா!
கொஞ்ச நஞ்ச சுகத்தையா தந்திருக்கு அவரின் பாடல்கள்? சொக்க வைக்கும் ரகமாச்சே ஒவ்வொண்ணும்.
கண்ணதாசனுடன் சேர்ந்து இசைத்த பாடல் ஒவ்வொண்ணும், ம்யூஸியத்துல வச்சு பாதுகாக்க வேண்டியதாச்சே.

யோவ் விருது கொடுக்கரவங்களே, என்னய்யா இப்படி சொதப்பிட்டீங்க?

பீம்சென் ஜோஷியெல்லாம் 80கள்ளயே வாங்கிட்டாரேய்யா!
லதாஜி கூட, பாரத் ரத்னா எல்லாம் வாங்கிட்டாங்க.
ஏ.ஆர்.ரஹ்மான 2000த்தலயே பத்மஸ்ரீ வாங்கிட்டாரேய்யா!

எம்.எஸ்.விக்கு கொடுக்கப் படவேண்டிய விருதெல்லாம், நேரத்தோட கொடுங்கய்யா.
கொடுக்கலன்னா, அந்த விருதுக்கே அவமானம்.
இதுவரை அந்த விருதை வாங்கினவங்கள்ளாம், ஈயம், பித்தளைக்கு வித்து, பேரீச்சம் பழம் தான் வாங்கித் துண்ணோணும்.

சீக்கிரம், ஏதாச்சும் செய்யுங்க!

முதல்வருக்கு வேண்டியவங்க யாராச்சும் எடுத்து சொல்லுங்கய்யா.

வெட்க்கக்கேடு! அவரு பாட்ட இனி காது கொடுத்த கேக்கவே லாயக்கில்லாம போயிடப் போறோம்.

----- ----- ----- ----- ----- -----
லேட்டஸ்ட் அடிஷன்!
நம்மால முடிஞ்சது.
MSVக்காக ஒரு பெட்டிஷன்.
படிச்சுட்டு sign பண்ணுங்க! உடனே!
தகவலை பரப்பவும்!

http://www.petitiononline.com/msv2008/petition.html
----- ----- ----- ----- ----- -----

பி.கு: விக்கீபீடியால அவர பத்தி ரொம்ப சிருசாதான் இருக்கு. தெரிஞ்சவங்க, அதுல கொஞ்சம் மேட்டரப் போடுங்க சாரே. :(

அடி ஆட்கள் தேவை!

நானும் எவ்வளவோ பொறுமையா இருந்துட்டேன்.
சரி போனா போகுதேன்னு பாத்தா, யாரும் மதிக்க மாட்றாங்க.

வேற ஏதாவது மேட்டர்னா கூட மன்னிச்சு வுட்டுடலாம்.

ஆனா, தேச பக்தீல வெளையாடலாமா?

60 ஆம் வருஷ சுதந்திர தெனத்த கொண்டாட 60 பேர் ஜன கன மன பாடி அனுப்புங்கன்னு கேட்டேன்.
ரூ 1001 பரிசும் தரேன்னு சொன்னா, இதுவரைக்கும் 12 பேர்தான் தேறிருக்காங்க.

என்னாங்கய்யா ஜன கன மன பாட கசக்குதா?

இப்படியே வுட்டா சரிபடாது.

நல்ல ஆஜானுபாகுவான அடி ஆட்கள் தேவை.
நல்ல டப்பும், தினசரி முட்டை பரோட்டாவும் போடப் படும்.

வேலை:
இதுவரை பெயர் கொடுத்து பாடல் அனுப்பாதவர்களை வழிமறித்து, பாடல் பதிந்து எனக்கு அனுப்பணும்.
பெயர் கொடுக்காத பதிவர்களை, கும்ஸா தூக்கிக் கொண்டு போய், பெயர் கொடுக்கும்படி செய்யணும்.

விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன!

Entrants so far:
1) 'Appavi' family Kid
2) Surveysan - Click to listen
3) Sumanga, Singapore
4) அமுதசுரபி
5) செந்தழல் ரவி
6) சேதுக்கரசி
7) மோகன்தாஸ்
8) அப்பாவி
9) TBCD
10) CVR
11) கண்ணபிரான் ரவிசங்கர்(KRS)
12) Kavitha
13) மாதினி
..
60) ????

இதுவரை பாடலை அனுப்பிய உள்ளங்களுக்கு நன்றி!

Thursday, August 02, 2007

இந்த மாதிரி ஒரு புகைப்படம் இதுவரைக் கண்டதில்லை!

மனுஷங்க உலகம் முழுக்க படுகிர கஷ்டத்தை பல புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன்.

குறிப்பாக, சொமாலியாவில் நடக்கும் civil war + வரட்சியினால் பாதிக்கப்படும் குழந்தைகளும், அந்தக் குழந்தைகளைப் பார்த்து கண்ணீர் விடும் தாயின் சோகமும் பலர் பதிந்திருக்கிறார்கள்.

மனதை பிசையும் சோகங்கள் அவை.

இன்று ஓகையின் 'காலம் சரி செய்யட்டும்' பதிவில் இருந்த பறவையின் சோகம், hits straight on the heart.
அந்த படத்திர்க்கு கீழ் அவரின் நால்வரிக் கவிதையும் அருமை.
படத்தை க்ளிக்கி ஓகையின் கவிதையை படிக்கவும்.


ஹ்ம்! இந்த வாரம் இப்படிச் சோகமாய் முடிந்திருக்க வேண்டாம்!

துணைவியை இழந்து வாடும் நண்பர் ஆசீப் மீரானுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
சில நேரங்களில் கடவுளின் கணக்குகள் புலப் படுவதில்லை.
Everything has a reason and everything happens for good என்று தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

எனிவே, பதிவர் பட்டறைக்குச் செல்லும் பதிவுக் கண்மணிகளுக்கும் அதை எடுத்து நடத்தும் சிங்கங்களுக்கும் என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
Enjoy the day!

இந்த மாதிரி புகைப்படங்களின் உரல் பின்னூட்டவும்.

Wednesday, August 01, 2007

குப்பி, சிவராசன், LTTE, ராஜீவ் காந்தி ~ சர்வே

குப்பி திரைப்படம் பார்த்தேன். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபின், சிவராசனும் அவன் கூட்டாளிகளும் தப்பி ஓடுவதும், அவர்களை போலீசார் வலைவீசித் தேடிப் 'பிடிப்பதும்' படத்தின் கரு.

சிபிஐ அதிகாரியாக வரும் நாசர் ஒரு பிடிப்பே இல்லாமல் நடித்து, படத்தின் சில பாகங்களை தொய்வாக்கி விட்டார். வசனம் பேச முழுசா காசு கொடுக்காதது போல் இருந்தது அவரது டயலாக் டெலிவரி.

படத்தில் நடித்த மற்றவர்கள் எல்லாமே நன்றாக நடித்திருந்தனர்.
குறிப்பாக, சிவராசன் &coவிர்க்கு வீடு தேடித்தரும் ப்ரோக்கரும் அவரின் மனைவியாக நடித்த தாராவும், யதார்தமாக நடித்து கலக்கியிருந்தனர்.

படத்தை முழுவதும் black&whiteல் எடுத்தது, என்னைப் பொறுத்தவரை, அவ்வளவு பிடிப்பைத் தரவில்லை. ஒரு வரட்ச்சி படம் முழுவதும்.

போலீசார் சுற்றி வளைத்ததும், சிவராசன் கூட்டாளிகள், குப்பியில் உள்ள சைனைட் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வார்கள்.
சிவராசன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைந்து விடுவார்.

படம் பார்த்து முடித்ததும், சிவராசன் & coவின் மேல் ஒரு பரிதாபம் எழுந்ததே தவிர ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு தக்க தண்டனை கிடைத்ததே என்ற மனநிலை எழவில்லை.
படம் எடுத்தவர்கள் அதைத் தான் எதிர்பார்த்தார்களா என்று தெரியவில்லை.

LTTE இயக்கத்திர்க்கு ராஜீவின் கொலை ஒரு பெரிய பின்னடைவை தந்தது என்பது மிகையல்ல.
படத்தில் சிவராசனுடன் இருக்கும் தாணு என்ற பெண் சொல்வது "உங்கட நாட்டில் நாங்கள் செய்த தவறுக்கு தண்டனையாக உங்கள் மண்ணிலேயே எங்கள் உயிரை இழக்கிறோம்" என்பது.

ராஜீவைக் கொன்று LTTE சாதிச்சது என்ன? இழந்தது என்ன?
உங்களின் கருத்து இந்த விஷயத்தில் என்ன?

சர்வே போடலாம்னு நெனச்சேன். ஆனா, என்ன ஆப்ஷன் கொடுக்கரதுன்னு தெரியல.
ஆப்ஷன் சரியா போடலன்னா, கேள்வி கேட்டே டார்ச்சர் பண்ண ஒரு கும்பல் காத்துக்கிட்டிருக்கு :) அதனால, இம்முறை சர்வே லேது.

பார் எ சேஞ்ச், கருத்தச் சொல்லுங்க.

பி.கு1: புஷ் செய்த நல்ல காரியம் பாத்தீங்களா?

பி.கு2: TBCD, CVR, கண்ணபிரான் ரவிசங்கர், நானு, அப்பாவி கிட் ஆகியோரின் குரல் வண்ணத்தில் ஜன கன மன கேட்டீங்களா? கேளுங்க. உங்க பெயரையும் பதியுங்கள். இதுவரை பதிந்தவர்கள் பாடலை அனுப்புங்கள்.

பி.கு3: தமிழ்நாட்டில் பார்த்தே ஆக வேண்டிய இடங்கள் இங்கே

பி.கு4: FixMyIndia.Org

நன்றி!