recent posts...

Sunday, December 11, 2011

எங்கள் மிலே சுர் - குறும்படம் உருவாக்கிய கதை

எண்பதுகளில் தூர்தர்ஷனில் பட்டையைக் கிளப்பிய தேசிய ஒருமைப்பாட்டுக்கான பாடல் 'மிலே சுர் மேரா துமாரா'. இந்தியாவின் பதினான்கு மொழிகளின் கலவையில் உருவான பாடல். இரண்டே வரிகள் இந்த பதினாலு மொழிகளில் திரும்ப திரும்ப வேறு வேறு மெட்டுக்களில் வரும். அந்தந்த மொழி பேசும் மக்களின் கலாச்சாரம், உடை, பாவனைகளை, நறுக்கென்று ஐந்து நிமிடத்தில் படம் பிடித்து காட்டியிருப்பார்கள். அருமையான கான்செப்ட், மின்னலாய் நம் மனங்களில் கலந்து விட்ட பாடல்.

அந்தப் பாடலை, என் அலுவலக நண்பர்களை வைத்து ரீ-மேக் செய்யலாம் என்று முடிவு செய்ததைப் பற்றியும், அந்த திட்டமிடல், அதற்கான ட்ரெயிலர் உருவாக்கியதையும் படித்திருப்பீர்கள். (இல்லன்னா, படிங்க ப்ளீஸ் ).

ட்ரெயிலரை ஒரு சுபயோக சுபதினத்தில், கொம்பேனியாருக்கு போட்டுக் காண்பித்தோம். எல்லோரையும், ட்ரெயிலிரில் இழைந்தோடிய ஹாஸ்யம் கவர்ந்திருந்தது. ட்ரெயிலருக்கு கிட்டிய வரவேற்பை பார்த்ததும், மிலே சுர் பாடலையும் கொஞ்சமாய் ஹாஸ்யம் கலந்து எடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.

கொம்பேனியில் இந்தியர் அல்லாத பலநாட்டவர் இருந்ததால், அவர்களையும் அரவணைக்கும் விதத்தில், சைனீஸ், ஸ்பானிஷ், ஆங்கிலத்திலும் வார்தைகளை பாடல் பதிவு செய்து இடையில் செறுக வேண்டும் என்றும் முடிவு செய்தேன்.

ட்ரெயிலரைப் பார்த்ததும், எஞ்சி இருந்த நடிகர் தேர்வு சுலபமாய் முடிந்தது. பலரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு நான் இந்தக் காட்சி பண்றேன், அந்தக் காட்சி பண்றேன்னு முன் வந்தாங்க.

எந்தெந்த காட்சி எந்த இடத்தில், எந்த நடிகர் நடிகையரை வைத்து என்று எடுப்பது என்பதை அட்டவணையாக்கி எல்லோருக்கும் அனுப்பி வைத்தேன்.

ட்ரெயிலர் தந்த தன்னம்பிக்கையால், ஆரம்பத்தில் 'சிம்பிளாய்' எடுக்கலாம் என்று நினைத்த காட்சிகளெல்லாம், கொஞ்சம் மெனக்கட்டு ஓரளவுக்கு பிரமாண்டமாய் எடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். உதாரணத்துக்கு, வங்காளி ரயில் காட்சிகள், பரதநாட்டியம், வெளிப்புரப் படப்பிடிப்புக் காட்சிகள் சில.

ஹாஸ்யம் தேவை என்றதும், முதலில் தோன்றியது, பீம்சேன் ஜோஷி ஆரம்பத்தில் பாடும், ராக ஆலாபனையுடன் ஆன துவக்கத்தை, 'ராப்பர்' மாதிரி உடையில் ஒருவரையும், மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி உடையில் ஒருவரையும், நம்மூர் தலேர் மெஹந்தி கெட்டப்பில் ஒருவரையும் வைத்து எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். "மைக்கேல் ஜாக்ஸன்" கடைசி நேரத்தில் அவசர வேலையால் வெளியூருக்கு சென்று விட்டார். அதோடில்லாமல், 'ராப்பர்' திட்டமிட்ட அன்று வர முடியாமல் போனது. அதனால், 'ராப்பரை' பாட வைத்து பாடல் துவங்கும்படியும், 'தலேர் மெஹன்ந்தி' , பீம்சேன் கெட்டப்பில் நம்மூர் நண்பர்களை தனி ட்ராக்கிலும் எடுத்து முதல் பத்தியை எடுத்து முடித்தோம்.

ஹாஸ்யம் வரும்படி மற்ற ட்ராக்கை எடுப்பது எப்படி என்பது மைண்டில் சரியாக லாக் ஆகாததால், மெத்தப் பரிச்சயமான தமிழ் ட்ராக்கை, சன்னி மோசா என்ற நண்பரை ரஜினியாக்கி படமாக்கினோம். விஷுக் விஷுக் என்ற அவரின் அசத்தல் ஆட்டம் பெரிதும் உதவியது. சன்னி மோசா, உள்ளூரில் ப்ரபலம். ஏற்கனவே பல குறும்படங்களை எடுத்திருப்பவர். 'மிலே சுர்'ருக்கு பல நாட்கள் படம் பிடிக்கும் இடத்துக்கு வந்து நடிப்பெல்லாம் சொல்லிக் கொடுத்து உத்வினார்.

மொத்தம் இருபது நாட்கள், மதியம் ஒரு மணி நேரமும், சில நாட்கள் மாலை ஐந்து மணிக்கு மேலும், நடிகர் நடிகையரின் நேரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு காட்சியாய் எடுத்தோம். மொத்தம் நாலு கேமரா மேன்கள் உதவிக்கு இருந்தனர். அநேகம் காட்சிகளும், இரு காமெரா வைத்து வெவ்வேறு கோணத்தில் படமாக்கினோம். அந்தந்த நாள் எடுக்கப்படும் காட்சிகளை ஒரு பொது இடத்தில் அப்லோடி, சரி பார்த்துக் கொள்வோம்.

தமிழ் காட்சியின் முன் வரும் ஒரு தகிடதாம் தாளம் வரும். ஒரிஜினலில், வெவ்வேறு புகைப்படத்தை கட்-ஷாட் மாதிரி எடுத்து இருப்பார்கள். எனக்கு அந்த இடத்தில் பரதநாட்டியம் போட்டால் நன்றாய் இருக்கும் என்று தோன்றியது. அலுவலகத்தில் நாட்டியம் தெரிந்தவர்களை பற்றி விசாரித்தேன். மூன்று அழகிய பெண்கள் முன் வந்தனர். அவர்களுக்கு பரதநாட்டியம் தெரியாது. அவர்களுக்கு நாட்டியம் சொல்லித் தர தர்ஷனா என்றவர் முன்வந்து, ஒரு வாரம் நன்றாய் ரிஹர்ஸல் எல்லாம் செய்து, ஷூட்டிங் அன்று ஜமாய்த்து விட்டனர்.

ஹாஸ்யம் வேண்டும் என்றதால், 'மைக்கேல் ஜாக்ஸனை' இதிலும் நுழைக்க நினத்தோம். மூன்று பெண்களும், நாட்டியம் ஆடும்போது, மைக்கேல் ஜாக்ஸனை, மூண் வாக் செய்யச் சொல்லி ரிஹர்ஸல் பார்த்தோம். ஏதோ சரியாய் வரவில்லை. மிகவும் குறைந்த நொடிகளில் இவ்வளவையும் செய்வது சவாலாய் இருந்தது. அதனால், மைக்கேல் ஜாக்ஸனை, பாகவதராக்கி, தாளம் போட வைத்து எடுத்து முடித்தோம். நாட்டிய உடையில் இருந்த இரு பெண்களை, மலையாள ட்ராக்கிலும், வெள்ளை வேட்டிச் சேட்டனின் இரு பக்கத்தில், பச்சை, சாஃப்ரான் கலர் உடையில், தேசியக் கொடியைக் காட்டும் விதத்தில் நடக்க விட்டு படமாக்கினோம், அன்றே.

பரதநாட்டியம் எடுக்க ரொம்ப நேரம் ஆகும் என்று தோன்றியதால், ஒரு சனிக்கிழமை அன்று அனைவரையும் அலுவலகத்துக்கு வரவைத்து, லைட்டிங் எல்லாம் வைத்து எடுத்தோம். உடை/ஒப்பனை செய்ய ரொம்ப நேரம் பிடித்ததால், காத்து நின்ற பாகவதரையும் (Neil), மற்ற அலுவலக நண்பர்களையும் வைத்து, 'Neil Maharaj - The Tech Guru' என்ற குட்டிப் படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து முடித்தோம். அதற்கான டயலாக் எல்லாம் Neil உட்கார்ந்த இடத்தில் spontaneousஆக சொன்னவை. அன்று இரவே அதை எடிட் செய்து, மீஜிக் எல்லாம் போட்டு, 'from the mile-sur shooting spot'னு எல்லோருக்கும் அனுப்பி ஒரு பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் எகிர வைத்தோம். இப்படி எல்லாம் செய்தால்தான், கிளைமாக்ஸ் காட்சிக்கு வேண்டிய 200 பேர் கிடைப்பார்கள் என்ற திட்டமிடல் இது: நீல் மஹராஜை பார்க்காதவர்கள், பாருங்கள்.


நான் எதிர்பார்த்தை விட எனக்கு திருப்திகரமாய் வந்த காட்சி, வங்காளி வரிகளுக்கான ரயில் காட்சி. அலுவலகத்துக்கு அருகே இருக்கும் ரயில் நிலையத்தில் நடிகர் நடிகையைரை வரவழைத்து, அங்கிருது அடுத்த ஸ்டேஷனுக்கு பயணித்தோம். பயணித்த நேரத்தில் ரிஹர்ஸல் செய்தோம். அடுத்த ரயிலை பிடித்து ரிட்டர்ன் வரும்போது, படம் பிடிக்க ப்ளான். இந்த ஸ்டேஷனில் ஒரு கேமராமேனை தயார் நிலையில் வைத்து, ரயிலுக்குள் ஒரு கேமராமேனும் இருந்தார்கள்.

செல்ஃபோனில் பாடலை ஓடவிட்டு, நடிகர்களை பாடவைத்து எடுத்தோம். இருவரும் அருமையாய் பாடி நடித்தார்கள். ஒரிஜினலில், ரயிலில் இருந்து ஒருத்தர் வழுக்கை மண்டையை ஸ்லோமோஷனில் தடவியபடி வருவார். சின்ன வயசுல பாத்தது, மனதில் பதிந்திருந்த காட்சி. அதை அப்படியே இதில் செருகினோம். வழுக்கை மண்டைதான் கிடைக்கலை. நண்பரை ஸ்டைல் செய்ய வைத்து படமாக்கினோம். :)

ஒரிஜினலில் எனக்கு ரொம்பப் பிடித்த காட்சி, குஜராத்தி வரிகளுக்கு, பெரிய பொட்டுக்கார அம்மா பாடும் காட்சி. ஒரு திமிருடன் கேமராவை முறைத்தபடி பாடியிருப்பார்கள். சீரான பார்வை. அதை கிட்டத்தட்ட அப்படியே எடுக்கணும்னு, வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவில் தண்ணீர் பின்னணியில் வைத்து அந்தக் காட்சியை படமாக்கினோம். விரும்பியபடி வந்தது.

தெலுங்கு வரிகளை அலுவலஅ காஃபிட்டேரியாவில் எடுத்தோம். டேபிளின் இருபுறத்தில் நடிகர்களை நிற்க வைத்து, அவர்களுக்கு நடுவில், காமெராவை ட்ரைப்பாடில் வைத்து தள்ளி விட்டு எடுத்தோம். பெங்களூர், சைனா கிளைகளில் சில காட்சிகளை எடுத்தால்தான் முழுமையாகும் என்பதால், அந்தந்த கிளைகளில், இணை-இயக்குனர்கள், காமெராமான்களை தெரிவு செய்து, அவர்களின் உதவியுடன் சில காட்சிகளை அங்கேயும் எடுத்தோம்.

கன்னட வரிகளை பெங்களூரில் அழகாய் எடுத்துக் கொடுத்தார்கள். சைனாவில், எல்லோரையும் கும்பலாய் நின்று அவர்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு பாடலை பாடி அனுப்பும் படி சொல்லியிருந்தேன். அவர்களும் அருமையாய் செய்திருந்தார்கள்.

ஸ்பானிஷ் பாஷையில், மிலே சுர்ருக்கான வரிகளை எழுதி வாங்கி, சரியான interludeல் பாடவைத்து நுழைத்தோம். ஸ்பானிஷ் ட்ராக்குக்கு, அவர்களின் கலாச்சாரத்தை ப்ரதிபலிக்கும் உடையிலேயே வந்து நடித்துக் கொடுத்தது சிறப்பு. ஆங்கிலத்திலும் வரிகளை எழுதி, சரியான் இடத்தில் அதை ரெக்கார்ட் செய்து பதிவு செய்தோம். சைனீஸில் இடைக்கேற்ப ட்யூன் செய்ய முடியாததால், எங்கள் கட்டத்தை காட்டும் (தாஜ்மஹால் சீன் மாதிரி) பகுதியில் அசரீரி ஸ்டைலில் வாய்ஸை பதிந்தோம்.

ட்ரெயிலர் எடுத்து முடிதத்தும் முதன் முதலில் பாடலுக்கான காட்சியை எடுத்தது மராட்டி வரிகளுக்கு. நன்கு பழக்கமான அலுவலக நண்பர்கள் அதில். தெரிந்தவர்களை வைத்து எடுத்தால், முதல் காட்சிக்கு சுலபமாய் இருக்கும் என்பதால் அதை முதலில் படமாக்கினோம். அன்றைய தினமே, லதா மங்கேஷ்கர் வரியில் வரும் தனித் தனி பெண்களின் முதல் காட்சியை படமாக்கினோம். பட்டையைக் கிளப்பினார்கள், இதில் நடித்தவர்களெல்லாம்.

படத்தில் ஆரம்பும் முதல் கடைசி வரை கோர்வையாய் ஏதாவது ஒரு தீம் சேக்கணும்னு முடிவு பண்ணி, நமது பரதநாட்டிய மூவரணியை, ஃப்ரெஷ்ஷர் மாதிரி காண்பித்து, அவர்கள் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்வதும், நட்பை வளர்ப்பதும், வேலை செய்வதும், கடைசியில் நண்பர்களாய் ஆவது போல் திரைக்கதையில் சொறுகினோம். அந்த மூவர், ரொம்பவே சிரத்தையுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை உதவினார்கள்.

நாட்கள் நகர நகர, அடுத்தடுத்த காட்சிக்கு வேண்டிய தரத்தை உயர்த்திக் கொண்டே செல்லத் தோன்றியது. ஒரியா காட்சிகளை டூயட் மாதிரி எடுத்தோம். கஷ்மீரி காட்சிகளை ட்ராலி வைத்து labல் எடுத்தோம். பஞ்சாபி காட்சிகளை கலர்ஃபுல்லாஅ உடை அணிய வைத்து எடுத்தோம். சிந்தி காட்சிகளை வாலிபால் மைதானத்தில் டாப் ஏங்கிளில் ஏணி வைத்து எடுத்தோம். அசாமிக் காட்சிகளை ஒரு சீன பெண் நண்பரை வைத்து எடுத்தோம் (அசாமீஸ் ஐடி துறையில் கம்மி?).

க்ளைமாக்ஸ் காட்சிக்கு வருவோம். கடைசியில் வரும் கோரஸ் எடுப்பதுதான் மிகவும் கஷ்டமான காரியம் என்று ஆரம்பத்தில் தோன்றியது. பிரமாண்டமாய் பாடலை முடித்தால்தான் பார்ப்பவரின் மனதில் தங்கும் என்பது என் எண்ணம். தினசரி எடுக்கும் ஷூட்டிங்கின் makingஐ எல்லோருடனும் பகிர்ந்து எல்லோரின் மனதிலும் இந்த நிகழ்வை ஞாபகமூட்டிக கொண்டே இருந்தேன்.

கோரஸில் வரும் ஒரு காட்சிக்கு, பலப் பல விதமான முகங்களை கட்டம் கட்டி ஒரே சீனில் காட்டவேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்கான தொழில்நுட்ப விஷயங்கள் புலப்பட்டதும், ஒவ்வொரு ஷூட்டிங் அன்றும், அன்று பங்கு பெற்ற அனைவரையும், 'மிலே சுர்' கோரஸ் வரிகளை பாட வைத்டு வீடியோவில் பதிந்தோம். மொத்தம் 36 முகங்களை ஒருங்கிணைத்து 6:28ல் வரும் அந்த காட்சி உருவானது. எடிட்டிங்கில் மிக அதிக நேரம் எடுத்தது இந்த ஆறு விநாடிகளுக்கான வீடியோதான். கிட்டத்தட்ட ஒரு வாரம், தினசரி நாலைந்து மணி நேரம் எடுத்து உருவானது.

ஆகஸ்ட் 15 வீடியோ ரிலீஸ் செய்து விடுவோம்னு, ஜூன் மாதம் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யும் போதே அலப்பரை பண்ணியதால், நேர அவகாசம் பெரிதாய் இல்லை. அநேகம் காட்சிகள் எடுத்து முடித்த நிலையில், க்ளைமாக்ஸுக்கு வேண்டிய திட்டமிடல் ப்ரம்மப் பிரயத்தணமாய் இருந்தது. இருநூறு பேர் வேண்டும் என்று மனதில் இருந்தது. இருநூறு பேருக்கும் அலுவலஅ டிஷர்ட் வாங்க வேண்டும், அதற்கு தேவையான நேரம் அதிகம்.

அந்த சமயம் பார்த்து, கொம்பேனியின் பெரிய மீட்டிங் ஒன்று நடந்தது. CEOமுதல் அனைத்து ஜாம்பவான்களும், புதிதாய் கட்டியிருந்த ஆடிட்டோரியத்தில் நடத்திய மீட்டிங் அது. எதுவோ ஒக்காரப் போய் எதுவோ விழுந்த மாதிரி, இது சரியான வாய்ப்பாய் தோன்றியது. முந்தய பதிவில் சொன்னது போல், ""when you sincerely undertake something worthwhile, you will receive all the assistance you need"". கொம்பேனி மீட்டிங் முடிந்து வெளியே வரும் கும்பலை படமாக்க வேண்டும் என்றதும், பெரிய கேள்வியெல்லாம் கேக்காம ஓ.கே சொல்லிட்டாங்க.

ஆடிட்டோரியத்துக்கு வெளியே இரு கேமராமேன்களை ட்ரைபாடுடனும், ஒருவரை கையில் கேமராவுடனும் நிற்க வைத்தோம். கேமராவுக்கு அருகே, "smile & wave"னு எழுதி வைத்திருந்தோம். நினைத்ததைப் போலவே, கொம்பேனி மீட்டிங்க் முடிந்ததும் அனைவரும் வெளியில் வந்து கேமராவுக்கு கை அசைத்து ஆதரவு தந்தார்கள். க்ளைமாக்ஸும் அருமையாய் பதிந்தது. க்ளைமாக்ஸுக்கு மகுடம் வைத்தாற் போல், கொம்பேனியின் பெரிய தலை CEOவும் நடந்து வந்து டாடா காட்டினார்.

கேமராமேன், உதவி இயக்க்நர்கள், சவுண்டு, லைட்டிங் உதவி என பல நண்பர்கள் தங்களின் நேரத்தை எனக்காக செலவு செய்தது, பெரிய பலமாய் இருந்தது. ஸ்டில்ஸ் எடுத்தவர் தினசரி மேக்கிங் காட்சிகளை, ஏ-கிளாஸாக படம் பிடித்திருந்தார். அவரின் படங்களை ஒருங்கிணைத்து உருவாக்கிய வீடியோ இது:


பொறுமையாய் படித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றீஸ். தவறாமல், நிறை குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். வீடியோவுக்கு விமர்சனம் எழுதிய 'கிரி'க்கு நன்றி. வீடியோவை பிரபலப்படுத்த உதவிய ராமலக்‌ஷ்மிக்கும், Udanz & மற்ற நண்பர்களுக்கும் நன்றீஸ். வீடியோவில் இருக்கும் அனைத்து குறைகளுக்கும் நானே பொறுப்பாளி, நிறைகளுக்கு குழுவினர் அனைவரும் பொறுப்பாளிகள்.

வீடியோவை இன்னும் பார்க்காதவர்கள், பார்க்கவும். பார்த்து பிடித்திருந்தால் பரப்பவும். வீடியோவை பரப்ப வேறு வழிகள் இருந்தால் தெரியப்படுத்தவும்.




யாருக்காவது குறும்படம், குறும்பாட்டு எடுக்க அவா இருந்தால் தெரிவிக்கவும். இயன்றவரையில் விவரங்கள் தந்து உதவுகிறேன். இது ஒரு அருமையான பொழுது போக்கு மட்டுமல்லாது, டீம் ஒருமைப்பாட்டுக்கு பெரிதாய் உதவும்.

குழுவினர் சிலர், வீடியோ ரிலீஸ் செய்த அன்று. (ரிலீஸ் செய்த அன்று நடந்த விஷயங்களை தனிப் பதிவாய் எழுத நிறைய விஷயம் இருக்கு ;)

Artists - Mile Sur Mera Tumhara

மீண்டும் சந்திப்போம். :)

Tuesday, November 29, 2011

பனி விழும் இரவில்...

குளிரத் துவங்கி சில வாரங்களாகி விட்டது. சென்னையில் வாழ்ந்து பழகிய எனக்கு கலிபோர்னியா குளிறும் எரிச்சலான விஷயம்தான்.

இந்த மாதிரி ரம்யமான ராத்திரிகள் விதிவிலக்கு.

It was  foggy and lovely tonight.

Foggy Night ( Pani vizhum Iravu )

Sunday, November 27, 2011

மயக்கம் என்ன - திரைப் பார்வை


ஆயிரத்தில் ஒருவன் பாத்துட்டு செல்வராகவன் மேல் அதற்கு முன் இருந்த ஒரு எதிர்பார்ப்பு புஸ்வாணமாய் போயிருந்தது.
அதற்கு முந்தைய படங்கள் தரமானதாயும் வித்யாசமானதாயும் இருந்திருந்தாலும் ஒரு SelvaRagavan'ism கலந்து ஆங்காங்கே முகம் சுளிக்க வைக்கும் பி-க்ரேட் ரகமான காட்சியமைப்புகளுடன் இருந்திருக்கிறது.

"மயக்கம் என்ன", ட்ரெயிலர், போஸ்ட்டர் படங்கள், இசை எல்லாம் கேட்டதும், பாத்துடலாமேன்னு ஒரு சபலம் வந்து தியேட்டருக்கு போயி பாத்துட்டும் வந்தாச்சு.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாம ஒரு படத்துக்கு போறதும் ஒரு விதத்தில் நல்லதுதான். படம் போரடிக்காம ஒரு மாதிரி சீராத்தான் போச்சு.
இதிலும், சில பி-கிரேட் SelvaRagavani'sm நுழைத்திருந்தாலும் அவ்வளவு பச்சையாகத் தெரியாமல், லைட்டான காட்சியமைப்புடன் கொண்டு செல்வதால், வளைந்து நெளியாமல் பார்க்க முடிகிறது.

தனுஷ் ஒரு wild life photographer ஆகணும்னு ஆசைப்படும் இளைஞராம். அவரைச் சுற்றி திக் ஃப்ரெண்ட்ஸ் கொஞ்சம் பேர். தனுஷின் நெருங்கிய நண்பரின் கேர்ள் ஃப்ரெண்டாக 'ரிச்சா'ன்னு ஒரு நடிகை.  கதாநாயகி இவிகதான்.அழகா இருக்காங்க சில ஃப்ரேம்களில். ஆனால், படம் முழுக்க 'உம்'னு வரும் கதாபாத்திரம் என்பதால், 'உம்'முனு மொறச்சு மொறச்சு அழகு மறஞ்சுடுது.

இடைவேளை வரை தனுஷுக்கும், ரிச்சாவுக்கும் இடையேயான ஊடல் காட்சிகளுடன் சுவாரஸ்யமாக பயணித்தது. காதலர் தினத்தன்று தன் காதலி ரிச்சாவை, தனுஷுடன் ஆடவைத்துப் பார்ர்க்க ஆசைப்படும் சரக்கடித்த நண்பர் செய்வது, வழக்கமான ஒட்டாத அருவருப்பு என்றாலும், தியேட்டர் ஜனம், அதை காமெடியாய் ரசித்தது. 'செல்வராகவன் பாணி'ன்னு ஒரு முன்முடிவோட தியேட்டருக்கு வரவங்க, இதையெல்லாம் லைட்டா எடுத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒருவிதத்தில் செல்வராகவனுக்கு இது ப்ளஸ் பாயிண்ட்டு தான்.

அடடா, இன்னொரு காதல் கதையான்னு, சப்பு கொட்டர நேரத்துல, சடால்னு ட்ராக் மாறி, தன் புகைப்படக் காரர் ஆகணுங்கர லட்சியக் கனவை தனுஷ் அடையராரா இல்லையான்னு வேறு களத்துக்கு தாவி, படம் பார்கும்படி அமைகிறது.

ஒரு காட்சியில், தனுஷ் தெருவோரத்தில் இருக்கும் பாட்டியை படம் எடுக்க ஆசைப்பட்டு அவரிடம் அனுமதி பெறுவார். அந்தக் காட்சியில், தனுஷ் பார்க்கும் கோணத்தில் கேமராவைக் காட்டும்போது, பாட்டிக்கு அழகான ஃபோட்டோ ஷாப் லைட்டிங் செய்து புகைப்படக் காரனின் கண்ணோட்டத்தில் காண்பித்திருந்தது அழகு.
படம் முழுக்க, இயற்கை காட்சிகளும், மற்ற காட்சிகளும், நன்றாய் படம் பிடிக்கப்ப் பட்டிருந்தது. ஆனா,  காட்டிலும், மலையிலும், ஆர்ட்டிக்கிலும், இவரு படம் பிடிப்பது, திருமண கிராஃபிக் கணக்கா, சப்புனு இருந்தது.

தனுஷ் எடுத்த புகைப்படத்தை தன் படமென விற்கும், காப்பிரைட்டை மதிக்காத ஒரு சாதா வில்லன்.
படத்தில் வரும் சில wild-life காட்சிகளின் ஒரிஜினல் காப்பிரைட் யாருதுன்னு தெரியல்ல. வெட்டி ஒட்டரதுக்கு பர்மிஷன் ம.எ குழு   வாங்கியிருப்பாங்களோ?

தனுஷின் நடிப்பும், ரிச்சாவின் நடிப்பும் பிரமாதம். நண்பர் கூட்டமும் அசத்திட்டாங்க நடிப்பில்.
இசை, தீம் மீஜிக் நெறைய தடவ போட்டுக்கிட்டே இருந்ததால், மனப்பாடம் ஆயிடுச்சு. ஆனா, அலுப்பும் தட்டிடுச்சு. பல காட்சிகளில், அமைதியை இசையாக்கியது, காட்சிக்கு உதவியிருந்தது.
காதல் என் காதல், அமக்களமாய் இருந்தது. ஆனா, கிராமியப் பாடல்னு சொல்லி காட்சியமைப்பு ஒட்டலை. ஆனால், அதையும் தியேட்டர் மக்கள் சிரிச்சுக்கிட்டே ரசிக்க ஆரம்பிச்சிடறாங்க. (செல்வராகவனிஸம், ஒரு ட்ரெண்டாக உருவாகிடுச்சு).

சண்டையில்லாமல் ஒரு படத்தை எடுத்தாலே, படத்துக்கு  ஒரு subtlety (மென்மை) தானாய் வந்துடுது.  அப்படிப்பட்ட படம், நடு நடுவே கொஞ்சம் இழுவையாய் இழுத்தாலும், ஆர அமர்ந்து ஒக்காந்து ரசிக்கும் படியாகவே அமைகிறது.

மயக்கம் என்ன - 2 1/2 மணி நேரத்துக்கு, நல்ல பொழுது போக்கு. ரொம்ப  எதிர்பாக்காம போங்க. அங்கங்க அலுப்பு தட்டினாலும், டைம் பாஸாகும்.
செல்வராகவன் இன்னும் தத்துனூண்டு மெனக்கட்டு, எடிட்டிங்கிலும், சில இழுவைக் காட்சிகளுக்கு பதிலாய், நச்சுனு ரெண்டு மூணு சீனும் சேர்த்திருந்தா பிரமாதாய் வந்திருக்க வேண்டிய படம். கிராஃபிக்ஸ் காட்சிகள் சீப் பட்ஜெட்டில் எடுத்தது போலிருந்தது.

இந்த மாதிரி subtlety கொண்ட படம் எடுத்தால், பல குறைகளையும் மன்னிச்சு படத்தை மக்கள்ஸ் ஓட்டிடுவாங்க்ய.




Wednesday, November 23, 2011

மிலே சுர் வீடியோ - ஷூட்டிங் கதை

"மிலே சுர் மேரா துமாரா" படமாக்கலாம்னு, ஒரு ஈ-மடலை,  கொம்பேனியின் சக ஆணி பிடுங்கும் தொழிலாளிகளுக்கு அனுப்பியதும், பலரும் உள்ளேன் ஐயா சொன்னாங்க. வேறு பல கொம்பேனியினர் (yahoo, intel,..) இந்த வீடியோவை ஏற்கனவே எடுத்து இருந்ததால், அதை விட சிறப்பாய் எடுக்கணும்னு பலரும் கருத்ஸை அள்ளி வீசிட்டாங்க.

ஏதோ ஒரு உத்வேகத்தில் இப்படி கிண்டி விட்டது, பலரின் அதீக ஆர்வத்தை பார்த்ததும், வீடியோ நன்றாய் இயக்கி  வெளியிடணும் என்ற பயம் தொத்திக் கொண்டது.

அதை விட பெரிய பயம், இப்படி குறும்படமெல்லாம் இயக்கிய அனுபவம் துளி கூட இல்லாமல் இருந்தது. எவ்வளவோ பண்ணிட்டோம், இத்த பண்ண மாட்டோமா என்ற தார்மீக மந்திரம் மட்டுமே மனதளவில் உதவியது.

கோதால எறங்கலாம், யாரெல்லாம் என்னவெல்லாம் வேலை செய்ய ஆசப்படறீங்கன்னு அடுத்து காஸ்ட்டிங் வேலையை முடக்கினேன். குறிப்பாக, நல்ல கேமரா யார் கிட்ட இருக்கு, நடிக்க யாருக்கு ஆசை, அப்படி இப்படின்னு.

டீமில், ஒரு காமிராமேன், உதவி இயக்குனர்கள் சிலர் உருவானதும், திட்டமிடலை துவங்கினோம்.  மிலே சுர், சீரியஸான பாட்டு, அதை அப்படியே அட்சரம் பிசகாமல் சீரியஸாவே எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். சிலர், கொஞ்சம் வித்யாசமா காமெடி கலந்து எடுத்தா நல்லாருக்குமேன்னு சொன்னாங்க. சிலர், ரீமிக்ஸ் மாதிரி நம்மளே பாடி, அதை படமாக்கலாம்னு சொன்னாங்க.
தேச பக்தி பாடல் மாதிரி இருக்கு, அதை வச்சு காமெடி கீமெடி வேணாம்னு, சீரியஸ் சப்ஜெக்ட்டாவே இருக்கட்டும். ஒரிஜினலின் சாயலில், அப்படியே எடுத்து, அதுக்கு ஒரு மரியாதை செலுத்தும்படி இருக்கணும்னு சொல்லிட்டேன்.

ஸ்க்ரீன் ப்ளே எழுத ஆரம்பிச்சேன். ஒவ்வொரு சீனிலும், எம்புட்டு பேரு வேணும், எந்த சீனை எந்த லொகேஷனில் எடுக்கலாம்னு எழுத ஆரம்பிச்சேன்.  பாடலின் கடைசி நிமிடம் கோரஸை ப்ரமாண்டமா எடுத்தா நல்லா இருக்கும்னு ஒரு தோணல். அதுக்கு நூறு இருநூறு பேராவது வேணும். ஆரம்பத்தில், உள்ளேன் ஐயா சொன்னவங்க பலரும், நடிக்க கூப்பிட்டதும், ஒரு தயக்கத்திலையே இருந்தாங்க. இவன நமபி வந்தா நம்ம பேரக் கெடுத்துடுவானோ என்ற தயக்கமாய் இருக்கலாம். இந்த நிலையில் இருநூறு பேரெல்லாம் தேத்தறது கஷ்டமாச்சேன்னு தோணிச்சு.

ஜூன் மாத மத்தியில் இந்த நிகழ்வு. ஆகஸ்ட் 15 ரிலீஸ் பண்ணனும் என்பது திட்டமாய் இருந்தது.
ஜூன் மாதம் ஷூட்டிங் முடிச்சா, ஜுலையில் எடிட்டிங் எல்லாம் முடிச்சு, ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய சரியா இருக்கும்னு நம்பிக்கை.

கிட்டத்தட்ட எல்லா சீனுக்கும் யார் யார் நடிப்பாங்கன்னு முடிவு பண்ணியாச்சு, அந்த கோரஸ் நூறு பேரைத் தவிர. கொம்பேனியின் பெரிய தலைகளும், இதில் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து, ஸ்பான்ஸர் பண்றோம், எம்புட்டு ஆகும்னு கேட்டாங்க. எனக்கு இதன் முடிவு எப்படி வரும்னு தெரியாத பட்சத்தில் காசை வாங்க தயக்கமாய் இருந்தது. அப்பாலிக்கா சொல்றேன்னு தட்டிக் கழிச்சுட்டேன்.

ரெண்டு மூணு நாளாய் தூக்கமே இல்லை. ஒரு திகில். எப்படிடா இதை எடுத்து முடிக்கரதுன்னு. ஜோக்கராயிடுவோம்னு ஒரு திகில்.

ஒரு சுபயோக சுபதினத்தில், திடீர்னு ஒரு ப்ளான் உதிச்சுது. குட்டியா ஒரு ட்ரெயிலரை முதலில் ஏற்பாடு பண்ணி அதை உடனே ரிலீஸ் பண்ணிட்டா, நமக்கும் தொழில் கத்துக்கிட்ட மாதிரி இருக்கும், மத்தவங்களுக்கும் ஒரு நம்மேல் ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும்னு தோணிச்சு. அதைத் தவிர, அதைக் காமிச்சு, அந்த கடைசிக் காட்சிக்கு நூறு இருநூறு பேரை தேற்றவும் உதவும். மிக முக்கியமாய், அகஸ்மாத் நல்லா வந்துச்சுன்னா, இதைக் காட்டி கொஞ்சம் $களை கொம்பேனியிடம் இருந்து பிடுங்கி ஜூப்பர் காமெரா, க்ரேன், லைட்டிங், செட்டப் எல்லாம் வாடகைக்கு வாங்கி ஜமாய்க்க்லாம்னும் தோணிச்சு.

ட்ரெயிலர் எடுக்கணும்னு தோன்றியதும், அடுத்த நொடி மண்டையில் உதித்த விஷயம், காமெடி கலந்து எடுக்கணும்னு. அதுவும், மிலிட்டரி ஸ்டைலில், Full Metal Jacket என்ற படத்தில் வரும் ஒரு காட்சியின் தாக்கத்தில் எடுக்கணும்னும் ஐடியா உதிச்சது. நம்புனா நம்புங்க, ட்ரெயிலர் இப்படித்தான் எடுக்கணும்னு, கிட்டத்தட்ட அஞ்சு நிமிஷத்துல ஸ்க்ரீன்ப்ளே மண்டையில் ரெடியாயிடுச்சு. அடுத்து, யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிக்கும்போது, உடன் வேலை செய்யும் நெருங்கிய சகாக்களை வச்சுப் பண்ணலாம், அப்பத்தான் வேலை வாங்குவது சுலபமாய் இருக்கும்னு முடிவு பண்ணி, எடுக்கரது எடுக்கறோம், நம்மூராளுகள மட்டும் சேக்காம, ஊருக்கு ஒருத்தரா இருக்கட்டும், ஒரு ஜப்பானியர், ஒரு கொரியர், ஒரு ஆப்ரிக்கர், ஒரு அமெரிக்கர், ஒரு மெக்ஸிக்கனு, ஒரு இந்தியர், ஒரு பாக்கிஸ்தானியர் என ஒரு கலவையாக நடிகர்களை தேர்வு செய்தேன்.

நம்ம GoodNewsIndia.com DVSridhar அடிக்கடி எழுதர விஷயம், 
"when you sincerely undertake something worthwhile, you will receive all the assistance you need"

இது மிக மிக மிக உண்மையான ஒரு வாக்கியம். மிலே சுர் விஷ்யத்தில், எனக்கு ஒவ்வொரு கட்டத்திலும், பலப் பல முறை பலப் பல ரீதியில் உணர்த்திய விஷயம். 

ட்ரெயிலரலில் நடிக்க கேட்டதும் நம்ம international சகாக்கள் உடனே சரின்னு சொல்லிட்டாங்க. அன்னிக்கு ராத்திரியே ஸ்க்ரீன் ப்ளே கட கடன்னு எழுதி, அதுக்கு அடுத்த நாள் lunch-breakல் ஒரு மணி நேரத்தில் ட்ரெயிலரை எடுத்து முடிக்க ஆயத்தமானோம். அன்று இரவே சூட்டோடு சூடாக எழுதிய ஸ்க்ரீன் ப்ளே இதுதான்..



Scene#
Script
Scene1
Door sign reads 'Mile Sur -  Audition'. (shoot for 10 seconds)
Scene2
Camera positioned 10 ft away from lake mead door, mounted on the trolley.
Scene3
Actors open the door and come out and walk like mafia dudes. Param S is in the middle of the gang. Trolly pulled back. Actors walk until the foozball table.
Scene4
Actors stand in front of the 'juniper theme' wall in a military posture. (BK on the far left, Neil in the far right, Han & Scott next to each other) Param S stands facing
the troup.
Scene5
Camera in front of param. Param says "are you ready boys?"
Scene6
Camera  positioned in front of the troup. Everyone says "Sir, Yes Sir"
Scene7
camera focuses on Param. Says, "Rob, what are we here for?"
Scene8
close up on Rob. "To make a music video Sir"
Scene9
camera on Param. "What type of music?"
Scene10
close up on Qasim. "it’s a bollywood song Mile Sur" Sir.
Scene11...

அடுத்த நாள் மதிய இடைவேளையில், வீடியோ காமெராவுடன் இருவரும், உதவி இயக்குனர், மற்ற உதவியாளர்கள் என கிட்டத்தட்ட பத்து பேர் குழுவில் இருக்க, நடிகர்கள் எட்டு பேருடன் களத்தில் இறங்கினோம்.
முதல் காட்சியாக, ஒரு கதவை படார்னு தொறந்து நடிகர்கள் எட்டு பேரும் 'பாட்ஷா' கணக்கா நடந்து வரும் காட்சி படமாக்கினோம்.
ட்ராலி எல்லாம் வாங்க நேரம் இல்லாததால், கான்ஃபரன்ஸ் ரூம் சக்கர மேசையின் மேல் ட்ரைபாடை வைத்து, என் 'start camera action''க்கு, மூணு பேர் அதைத் தள்ள நடிக கோஷ்டி கதவை உடைத்து வெளியே வர, அமக்களமாய் பதிவாகியது அந்தக் காட்சி.

மற்ற காட்சியமைப்பில், ஒரு பக்க நடிகர்களின் டயலாக்கை முதலிலும், எதிர் பக்கத்தில் நின்ற மேஜரின் டயலாக்கை அன்று மாலையும் படமாக்கி, கடைசியில் வெட்டி ஒட்டி ட்ரெயிலரை ஒருவழியாக முடித்தோம். மொத்தமாய் இரண்டு மணி நேர ஷூட்டிங்கும், கிட்டத்தட்ட இருபது மணிநேரம் எடிட்டிங் நேரமும் செலவானது.

 ட்ரெயிலர் செய்து முடித்ததும்,  இந்த முயற்சியின் மேல் எனக்கு இருந்த நம்பிக்கை தாறுமாறாய் உயர்ந்தது. மற்றவர்களுக்கும் பேர் டாமேஜ் ஆகாம ஃபைனல் வீடியோவை எடுத்து முடிக்க முடியும்னு நம்பிக்கை வந்தது. மிக முக்கியமாய் நடிக்கலாமா வேணாமான்னு யோசிச்சவங்களெல்லாம், எனக்கு ஒரு சீன் வேணும்னு போட்டா போட்டி போட ஆரம்பிச்சுட்டாங்க.

கொம்பேனி பெரியதலைகளும், ரொம்பவே ஆச்சரியப்பட்டுப் போயிட்டாங்க. ஸ்பான்ஸர் பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஃபைனல் வீடியோவில், இப்படி கருத்ஸை சொல்லலாமே அப்படிச்  சொல்லலாமேன்னு பலப் பல ஐடியாஸும் விட்டு வீசினாங்க எல்லாரும்.

ட்ரெயிலர் எடுத்தப்பரம், அந்த காமெடி தந்த ஈர்ப்பில், ஃபைனலிலும் ஒரு காமெடி இழைய விடணும்னு முடிவு செய்தோம்.
அதைத் தவிர, இந்தியத் தன்மை மட்டுமில்லாது, international கலவை வேண்டும் என்றும் முடிவு செய்து, Chinese, English, Spanishலும், மிலே சுர் மேரா துமாரா வரிகளுக்கு பாடல் பாடி இடையில் செறுக வேண்டும் என்றும் ஐடியா இருந்தது.

ஓவரா இழுத்துட்டேன், முடிவுரையை அடுத்த பதிவில் காண்போம்.

ட்ரெயிலர் இதுதான். கடைசி சில நொடிகளில், ட்ரெயிலர், 'making' இருக்கு பாருங்க. ஆரம்ப கட்ட ஷூட்டிங்கின் சில படங்களும் இதில் செறுகி, க்ளைமாக்ஸுக்கு வேண்டிய நூறு பேரை இஸ்க்க ட்ரெயிலரை பறப்பினோம்.



இதுவரை பொறுமையுடன் படித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றீஸ்.

இதை கவனத்தில் வையுங்கள்.
"when you sincerely undertake something worthwhile, you will receive all the assistance you need"

Happy Thanks Giving weekend!

Thanks for all the support over the past years.
I discovered some of my extra-curricular 'talent' through blog writing. so, thanks to you, you and you :)

final video:



Wednesday, November 02, 2011

மிலே சுர் - என் இயக்கத்தில் உருவான கதை

வளந்து பெரியவனானதும் உனக்கு இன்னாவா ஆகணும்னு, பள்ளிக் கல்லூரிக் காலங்களில் கேட்கும்போது, 'ஙே'ன்னு முழிக்கத்தான் தெரியும். எதிர்காலத்தை பற்றிய பெரிய தீர்க தரிசனமோ, திட்டமிடலோ சுத்தமா இருந்ததில்லை எனக்கு, இன்று வரை.
ஆத்துத் தண்ணீல அடிச்சுக்கிட்டு போற காஞ்ச மட்டை கணக்கா, வாழ்க்கை ஓடுது.

என்னதான் நல்ல வேலை, கிம்பளம் இல்லா நல்ல சம்பளம்னு திருப்திகரமா வாழ்க்கை ஓடினாலும், ஒரு ஓரத்தில் லேசா ஒரு அசரீரீ சௌண்டு விட்டுக்கிட்டே இருக்கும். "இன்னாடா வேலை இது? நீ புடுங்க்கர ஆணி உன்னை விட நேக்கா புடுங்க ஆயிரம் பய இருக்கான். நீ என்னாத்த சாதிக்கப் போர புச்சா?"ன்னு.

ஆசை ஒண்ணும் பெருசா இருந்ததில்லை இதுவரைக்கும். ஒரே ஒரு சபலம், பாப்புலர் (நல்ல விதத்தில்) ஆகணுங்கரது.
ஆணி பிடுங்கவதைத் தவிர வேற எந்த  வேலையும் செய்யத் தெரியாது.
மத்த விஷயங்களில் எல்லாம் கால் வேக்காடு. ஃபோட்டோகிராஃப்பி,  பதிவு எழுதுவது, கிட்டார் மீட்டுதல் என எல்லாத்துலையும் கால் வச்சாலும் எதுவும் ஒழுங்கா வரலை.

ஒரு நாள், "என்னதான் சாதிக்கப் போறோம் வாழ்க்கைல'ன்னு ரொம்பவே டீப்பா திங்க் பண்ணிக்கிட்டு இருந்தப்போ, இங்கே அருகாமையில் உள்ள ஒரு கல்லூரியில், ஒரு வகுப்பு நடக்கப் போவது தெரிய வந்தது. "what were you born to do?". இது தான் தலைப்பு. வெறும் $50 தான் ஃபீஸு.
எவ்ளவோ பண்ணிட்டோம், இதையும் போய் பாத்துட்டு வரலாமேன்னு, சுபயோக சுபதினத்தில் அந்த வகுப்புக்குப் போனேன்.

போனா, என்னைய மாதிரியே இன்னும் இருபது பேர் அங்க வந்திருந்தாங்க. எனக்கு இந்த வகுப்பில் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. $50க்கு வேற என்னா எதிர்பாக்கரது?

வந்திருந்த எல்லாரும் நல்ல வேலையில் பெரிய பதவியில் இருக்கரவங்க. எல்லாருக்கும் காமனான விஷயம், நல்ல வேலையில் இருக்கோம், ஆனா, மனசுக்கு முழுத் திருப்தி இருக்கரமாதிரி தெரியலையேங்கரதுதான்.

ரொம்ப நீட்டி முழக்காம விஷயத்துக்கு வரேன்.

எல்லார் கிட்டையும் கொஞ்ச நேரம் பேசிட்டு ஆசிரியர் என்ன சொன்னாருன்னா, நம்ம எல்லாருமே இந்த பூமியில் வந்திருக்கரது, ஏதோ ஒரு முக்கிய வேலையை செய்யரதுக்குத்தான். அந்த வேலையை செய்யாம வேற என்ன செஞ்சாலும், முழுத் திருப்தி வராது.

கொஞ்சம் கவனம் செலுத்தி, நமக்கான வேலை எதுன்னு கண்டுக்கிட்டு அதை செஞ்சா, முழுச் சந்தோஷம் மட்டும் கிட்டாமல், மகத்தான் வெற்றியும் சுலபமாய் கிட்டும்னு சொன்னாரு.  ஞாயமாத்தான் பட்டுது.

அப்பரம் கொஞ்ச நேரம் முப்பது நாப்பது கேள்விகளுக்கு ப்தில் எல்லாம் எழுதிட்டு, எல்லார் கிட்டையும் பேசிட்டு, ஆளாளுக்கு அவங்க அவங்களுக்கு 'விதிக்கப்ப்பட்ட' வேலை எதுன்னு ஆராஞ்சு சொன்னாரு.

ஒருத்தரை நாவல் எழுதச் சொன்னாரு, இன்னொருத்தர்ரை டீச்சர் ஆகச் சொன்னாரு, இன்னொருத்தரை உணவகம் ஆரம்பிக்கச் சொன்னாரு, இன்னொருத்தர்ரை இப்ப செய்யர வேலையே கண்டின்யூ பண்ணுங்கன்னு சொன்னாரு.

வகுப்பு முடிஞ்சு வெளீல வரும்போது, எல்லாரும், திருப்தி கரமாவே இருந்தாங்க. பெரிய ராணுவ ரகசியம் இல்லை, எல்லார்கிட்டையும், அவங்க இப்ப செய்யர வேலையைத் தவிர, மத்த என்னென்ன வேலை செய்யும்போது அவர்களின் திருப்தியும் சந்தோஷமும் கிடைக்குதுன்னு பாத்துட்டு, கூட்டிக் கழிச்சு இவரு, 'this is what you were born to do'ன்னு அடிச்சு சொல்லிட்டாரு.

எல்லாருக்கும் சொன்னது சரி, எனக்கு என்னா சொன்னாருன்னுதான கேக்கறீங்க? சொல்றேன்.

ஆணி புடுங்கரதில் பெரிய நாட்டமில்லைன்னு சொல்லிட்டேன்.
வேற என்ன புடிக்குதுன்னாரு.
படம் புடிக்கரதெல்லாம் புடிக்கும்னேன்.
வேற என்ன புடிக்குதுன்னாரு. எதைப் பண்ணா, ஒரு 'பெருமிதம்' உள்ளுக்குள்ள வருதுன்னாரு. டீப்பா கண்ணை மூடிக்கிட்டு திங்க் பண்ணிச் சொல்லுன்னாரு.
ரொம்ப ஆர அமர யோசிசசா, சமீப காலத்தில்,  'பெட்டிஷன் பெரியநாயகி' கணக்கா, நம்மால முடிஞ்ச 'லஞ்ச லாவண்யக்' கேடுகளை நம்மால் முடிந்த அளவில் எதிர்த்து நின்று "ஏன்"னு கேள்வி கேட்டு, அதற்காக நாயாய் அலைந்து திரிந்து சின்ன சின்ன வெற்றிகள் கிடைப்பது, ரொம்பவே பிடித்திருந்ததுன்னு சொன்னேன்.

ரொம்பவே பிரகாசமாயிட்டாரு அவரு. there you go. நீ உன்னோட புகைப்படம் புடிக்கர ஆர்வத்தையும், சமூக முன்னேற்றத்துக்கான உழைப்பயும் இணைத்து ஏதாவது செய்யணும். You should become a documentary film makerனு அடிச்சு வுட்டாரு.

பத்த வச்சுட்டியே பரட்டைன்னு, உள்ளூர தோன்றினாலும், எனக்கும் அப்படி ஒரு வேலை செஞ்சா திருப்திகரமாவே இருக்கும் தோணிச்சு. ஆனா, அதெல்லாம் ப்ராக்டிக்கலாம் வேலைக்கு ஆகுமான்னு,  யோசிச்சு அப்படியே ஆறப் போட்டுட்டேன்.

DSLR இருக்கு, எதையாவது க்ளிக்கி, Gimpப்ல் தூக்கிப் போட்டா அதுவே படத்தை தேத்திக் கொடுத்துடுது. டாக்குமெண்ட்டரி எல்லாம் எடுப்பதை பத்தி ஐடியாவே இல்லை. அது அவ்ளோ சுலபமான்னு தெரியாம, ஒரு சில வாரங்களில் routine வேலைகளில் மூழகி, 'what was I born to do''வை சுத்தமா மறந்துட்டேன். ரெண்டு மூணு வருஷத்துக்கு அப்பாலிக்கா, ஒரு சுபயோக சுபதினத்தில்,  ஆணிகள் இல்லாத அந்த நன்னாளில், எங்க அலுவலகத்தின் சகபாடிகளுக்கு ஒரு மடல் அனுப்பினேன். (கிட்டத்தட்ட ஒரு  ரெண்டாயிரம், மூணாயிரம் பேராவது இருப்பாங்க).

"guys, lets make a lip-sync video song of the Mile Sur Mera Tumhara""ன்னு.

மிலே சுர் மேரா துமாரா, தூர்தர்ஷனில் போட்டு போட்டு நம் மண்டியில் ஏற்றிய பாடல். தேச ஒருமைப் பாட்டுக்கு, இதை விட சிறந்த பாட்டு இவ்ளோ சிம்பிளான வடிவில் இன்று வரை வந்ததில்லை.
இந்தப் பாடலை எடுப்பதால், 'கொம்பேனி ஒருமைப்பாட்டுக்கும்' நல்லது, நமக்கும் தொழில் கத்துக்கிட்ட மாதிரி இருக்கும்னு ஐடியா பண்ணி இந்த மடல்.

மடல் அனுப்பும்போது பெரிய எதிர்பார்ப்பு இல்லை. எந்தப் பயலும் பதில் அனுப்ப மாட்டான்னு நெனச்சேன். ஆனா, அடுத்த ஐந்து நிமிடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மடல்கள் வந்து குவிந்தன. 'yes, great idea. lets do it'', அது இதுன்னு எல்லாரும் ஜோதியில் ஐக்கியமாக ரெடியா இருந்தாங்க.

சிலர், நான் காமிரா வேலைய பாத்துக்கறேன், நான் எடிட்டிங்க் பாத்துக்கறேன், அது இதுன்னு ஆர்வமா களம் இறங்கிட்டாங்க. இன்னும் சிலர், "என்ன வேலை இருந்தாலும் சொல்லு, நான் ஹெல்ப் பண்றேன்'னு கோதால குதிச்சுட்டாங்க.

அன்னைக்கு முழுசா, கொஞ்சம் திகிலாவே இருந்துச்சு. இந்த மாதிரி விஷயம் நமக்கு துளி கூட தெரியாதே, பயலுவ நாம ஏதோ பெரிய தில்லாலங்கடின்னு நெனச்சுட்டாங்களோன்னு பயம்.  புலிவாலை புடிச்ச கதை மாதிரி.

ஆனா, 'பிறந்ததே இதுக்குத்தான்'னு தெரிஞ்சப்ப்பரம், ஏன் காலை பின்வைக்கணும்? எவ்வளவோ பண்ணிட்டோம், இதை பண்ணிட மாட்டோமான்னு, "great! lets do it. i will initiate next steps"னு தெகிரியமா அடிச்சு விட்டு, திட்டமிடலைத் தொடங்கினேன்.

கிட்டத்தட்ட 300 பேர் , california, bangalore,beijing என எங்கள் அலுவலகத்தின் எல்ல்லா கிளைகளிலும், நடிகர்கள்/டெக்னீஷியன்களை ஒருஙகிணைத்து வேலையை முடுக்கி விட்டேன்.

-தொடரும் (ரொம்பவே இழுத்துட்டேனோ?)  :)

வீடியோ பாக்காதவங்க, பாத்து, நேர்மையான கருத்ஸை யூ-ட்யூபில் பதியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு வீடியோ லிங்கை அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக்கறேன். யாராவது, வீடியோவுக்கு விமர்சனம் எழுதினாலும் மெத்த மகிழ்ச்சி உண்டாகும் எமக்கு :)
நன்றீஸ். please spread the word.

http://www.youtube.com/watch?v=_cRtySd65u8




Thursday, October 13, 2011

Blue Angels விமானப் படை படங்கள்

சென்ற ஞாயிறன்று சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் நடந்த சாகசக் காட்சிகளின் போது க்ளிக்கியது.
துரதிர்ஷ்டவசமாய், அன்று பனிமூட்டம் அதிகமாகி மெயின் ஐட்டம் மிஸ் ஆயிடுச்சு.


Oracleன் சாகசம்.



கனட நாட்டின் விமானம்.



இவரு ஸ்பான்ஸரர்.


தன்யவாத்!

Tuesday, August 16, 2011

mile sur mera tumhara - எனது கைவண்ணத்தில்

இத்தன வருஷம் ஐ.டி.யில் குப்பை கொட்டினதில் எத்தனையோ ப்ராஜெக்ட்டில் ஆணி புடுங்கியிருக்கோம். ஆனா, இந்த 'மிலே சுர்' பாடலை படமாக்கியதில் வந்த திருப்தி வேறு எதிலும் வரவில்லை.

படத்தை பாத்துட்டு கருத்ஸ் சொல்லுங்க. நன்னி! :)



The Making stills:


Wednesday, May 25, 2011

ராமர் தொடாத தெனாவட்டு அணில்...

அமெரிக்க அணில்களுக்கு முதுகில் கோடில்லை, என்பதை கணம் கோர்ட்டார் அவர்களிடம் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன் :)

சமீபத்திய ஊர்சுற்றலின் போது, கலிஃபோர்னியா கடற்கரையோரம் க்ளிக்கிய அணில்.


நம்ம ராமரு தொட்டிருந்தா கோடு வந்திருக்கும்ல? அது மட்டுமில்ல யுவர் ஹானர்.
இந்த ஊரு அணிலுங்க, மனுஷனப் பாத்தா பயப்படாம கிட்ட வந்து எழுந்து நின்னு, 'இன்னா?'ன்னு கேக்குது.
முதுகுல மூணு கோட்டப் போட்டு, கல்லு எடுக்க விட்டிருந்தா இந்த தெனாவட்டு இருந்திருக்குமா? நம்மள பாத்ததும் பயந்து ஓடியிருக்காது? ராமர், எங்கிருந்தாலும் வந்து அமெரிக்க அணிலை கவனிக்கவும்.


டாங்க்ஸு :)

Tuesday, May 17, 2011

உனக்காக மட்டுமே வாழ்!!

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அருள்வாக்கு தலைப்பை பாத்து டென்ஷன் ஆயிடாதீங்க. அருள்வாக்கெல்லாம் சொல்லரதுக்கு இல்லை இந்தப் பதிவு.
ஆனா, வாழ்க்கைக்கு ரொம்பத் தேவையான ஒரு விஷயத்தை பகிரவே. ஆயிரமாயிரம் ஆணிகள் பிடுங்க வேண்டிய இந்தத் தருணத்திலும்... பலப் பல தியாகங்களை நிகழ்த்திவிட்டு, உங்களின் நீண்ட நாள் நலனை மட்டுமே கருதி....ஸ்ஸ்ஸ்ஸ்..

எங்க வீட்லேருந்து ஆரம்பிக்கலாம். நானும் என் சக குடும்பமும், சுற்றமும் நட்பும் எப்படி சாப்பாட்டை ஆராதிப்பவர்கள் என்பதை ஏற்கனவே நல்லா அளந்திருக்கேன்.

ஊர்வன, பறப்பன தவிர்த்து நடப்பவற்றில் ஆடு, கோழியை தவிர்க்காமல், மற்றதை எல்லாமல் தவிர்த்து, நீந்துவதில் ஆக்டபஸை மட்டும் தவிர்த்து, எஞ்சி இருக்கும் ஜீவராசிகளை, வேக வைத்தோ, வறுத்தோ, பொரித்தோ உண்பதில், ஜென்ம சாபல்யம் உள்ளது என்பதில் திடமான நம்பிக்கை உள்ளவர்கள் நாங்கள்.

பள்ளிக் கல்லூரிக் காலங்களில், சனி ஞாயிற்றுக் கிழமைகளில், வீடு திருவிழா கோலம் பூணும். சிக்கன் குழம்பு, வறுத்த மீன், ஆம்லெட் என, அதகளம் நடக்கும்.
ஒருத்தர்ர் சிக்கனை வெட்ட, மற்றொருவர் மீனை சுத்தம் செய்ய, இன்னும் ஒருவர் வெங்காயத்தை வெட்ட, சமயல் அமக்களமாய் நடைபெறும்.

சிக்கன் வாங்குவது சுலபம். வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி ஒரே ஒரு கடை இருக்கும். யாராவது ஒருத்தர் சைக்கிளில் ஒரு மிதி மிதித்து வாங்கிட்டு வந்துருவோம். மிக்காறும், நைனா அதுக்கு காலங்காத்தால போயிடுவாரு. அப்படியே மீனையும், அடுத்துள்ள மார்க்கெட்டில் ரெண்டு மூணு 'கூறு' வாங்கிட்டு வந்திடுவாரு.

நாங்கள் வசிக்கும் நகர், 'பாரத விலாஸ்' கணக்கா, சகலரும் குழுமியிருந்த தெரு. ஆனா, எங்க எதிர்வீட்டில் மட்டும் சுத்த சைவவாசிகள்.
ரோட்டில் கூவிக் கூவி விற்கப்படும், மீனை "ஏய் மீன்காரம்மா"ன்னு கூப்பிட்டு பேரம் பேசி வாங்க வீட்டினருக்கு நைனா தடை போட்டிருந்தாரு. ஏன்னா, சுத்த சைவர்கள், நம்மள பத்தி மட்டமா நெனப்பாங்கன்னு அவருக்கு நெனப்பு.

அதுமட்டுமல்ல, மார்க்கெட்டில் வாங்கிய மீனை வறுக்கணும்னா, ஒரு பெரிய திட்டமிடல் இருக்கும். எத்தனை மணிக்கு வறுக்கணும், திடீர்னு எதிர்வீட்டு ஆசாமிகள் வந்துட்டா எப்படி அவங்களை மீன் வாசம் தெரியாம இருக்க ஹாண்டில் பண்ணனும், இப்படி ப்ளான் பண்ணிதான் மீனை வறுக்க விடுவாரு நைனா.
தப்பித் தவறி வாசல் மணி அடிச்சுட்டா, உடனே ஒரு ஊதுபத்தி ஏற்றப் படும். வாசனை திறவியங்கள் தெளிக்கப்படும், பாண்ட்ஸ் பவுடர் காற்றில் வீசப்படும், இப்படி. மீன் வாசனையை மறைக்கவாம்.

மறைக்கக் கூடிய விஷயமா அது? மீன் வறுவல் வாசம் பெற்றவர்கள், புண்ணியம் செய்தவர்களல்லோ? அதை விட, ஜென்ம சாபல்யம் பெற வேற என்ன பெரிய வழி இருந்திட முடியும்?

என்னமோ போங்க. ஒரு மீன் வறுக்கறுதுக்கே இப்படி, அடுத்தவங்க என்ன நெனப்பாங்கன்னு, பயந்து பயந்து வாழ்ந்து பழகிய நான், மத்த விஷயங்களுக்கும், இதே திகிலுடன்தான் வாழ்ந்து வளர்ந்தேன்.

வூட்ல இருக்கரவங்க அப்படிப் பழக்கிட்டாங்க..
பச்ச கலர் டிஷர்ட் போட்டா, "டேய் மவனே, இது என்னடா ராமராஜன் கணக்கா? மாத்திடு. பாக்கரவன் இன்னா நெனப்பான்?"
தலை வாராம, தலீவர் கணக்கா சிலிப்பிக்கினு போனா, "டேய் மவனே, இன்னாடா இது பரக்காவட்டி மாதிரி? வாரிடு. பாக்கரவன் இன்னா நெனப்பான்?"
இப்படி கதிகலங்க வச்சி நெம்ப ஜீன்லையே இது ரெஜிஸ்ட்டர் ஆகர அளவுக்கு மாத்திட்டாங்க.

வூடு வுட்டு, ஊரு வுட்டு, நாடு வுட்டு, நகரம் வுட்டு, ஏழு கடல் ஏழு மலை எல்லாம் தாண்டி வந்தாலும், அந்தப் பயக்கம் ஒட்டிக்கிட்டே வந்துருச்சு.

"இந்தப் பேண்ட்டுக்கு இந்த சட்டை போட்டா எடுப்பா இருக்குமா? பாக்கரவன் இன்னா நெனப்பான்?"
"ஒரே பேண்ட்டை நாலு நாளா போட்டுக்கினு போறமே, பாக்கரவன் இன்னா நெனப்பான்?"
"இந்த சட்டைல கடுகு அளவுல ஒரு கறை பட்டிருக்கே, பாக்கரவன் இன்னா நெனப்பான்?"
"பழைய காரை மாத்தாம் இம்புட்டு வருஷமா ஓட்ரமே, பாக்கர்ரவன் இன்னா நெனப்பான்?"

இப்படியே ஓடிக்கிட்டிந்தது வாழ்க்கை.

சமீபத்தில் கடையில் ஒரு அழகிய பச்சை டி-ஷர்ட்டை பார்த்ததும், வாங்கிட ஆசை வந்து எடுக்கப் போனேன். நைனாவின் வாய்ஸ் அசரீரீ மாதிரி "டேய் மவனே ஊரு வுட்டு ஊரு போயி இந்தக் கலர் டிஷர்ட்டை போடப் போக்கறியே. அந்த ஊர்காரன் உன்னை பத்தி இன்னா நெனப்பான்?"னு கேட்டுது.
திடுக்கிட்டுப் போயி, அங்கையே வச்சுட்டு வீட்டுக்கு போயிட்டென்.

அந்நிக்கு தூக்கமே இல்லை. யோசிச்சேன், யோசிச்சேன் தீவிரமா யோசிச்சேன்.

"எருமை மாட்டு வயசாவுது, இன்னும், நைனாக்கு பயந்து, அவன் இன்னா நெனப்பான், இவன் என்னா நெனப்பான், பக்கத்து வூட்டுக்காரன் இன்னா நெனப்பான், ஒசாமா இன்னா நெனப்பான், ஒபாமா இன்னா நெனப்பான்"னு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருந்தா, நமக்கு புடிச்ச மாதிரி எப்பத்தான் வாழரது?
நீங்க மீன் வறுத்து சாப்பிடறீங்களா? ஒரே பேண்ட்டை தினமும் போட்டுக்கிட்டு வறீங்களா, எந்தக் கலரு டிஷர்ட்டு போடறீங்க, உங்க சட்டைல எங்க கறை இருக்கு, எந்தக் கார் ஓட்டறீங்கன்னு கவனிச்சுக்கிட்டு இருக்கரதுதான், உலக மக்களின் கவலையா? அவனவனுக்கு ஆயிரம் ஆணிகள் இருக்கு, இதுல பேண்ட்டு போட்டா என்னா, போடாட்டி என்னா? அதப் பத்தி எல்ல்லாம் எவனும் கவலப் படமாட்டான்.
அதனால, உனக்காக மட்டுமே வாழ். போலி கௌரவத்துக்காக வாழ்வின் நல்லதை வாழாமல் விடாதே!" ன்னு லார்டு கிருஷ்ணா கணக்கா இன்னொரு அசரீரீ கேட்டது.

திடுக்கிட்டு எழுந்தா, மணி எட்டாயிருச்சு. ஆஃபீஸ் போர நேரமாயிடுச்சுன்னு எழுந்து பல்லு தேச்சுட்டு, ஆர அமர கண்ணாடியை பாத்தேன்.
"எருமை மாட்டு வயசாயிடுச்சு"ன்னு அசரீரீ சொன்னது சரிதாங்கர மாதிரி, மீசையில் ஒரு குட்டி வெள்ளை முடி எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது சில பல நாட்களுக்கு முன்.

பேசாம மீசையை எடுத்து ராஜேஷ் கண்ணா கணக்கா, "சின்னப் பையன்" ஆயிடலாமான்னு அப்ப்பப்ப யோசனை வரும்போதெல்லாம், "அவன் இன்னா நெனப்பான், இவன் என்னா நெனப்பான்"னு பயந்து, வெள்ளை முடியை மட்டும் "கச்சாக்"னு வெட்டி ஒதுக்கி வந்தேன்.

ஆனா, இந்த தபா, "நான் எனக்காக மட்டுமே வாழறேன். வாழ்க்கையை வாழணும். மீண்டும் சின்னப் பையனா மாறணும்"னு கத்திக்கிட்டே, ஜில்லட்டை மீசைமீது ஓடவிட்டு, விஷுக்னு மழிச்சுட்டேன்.

"நைனா, நான் ராஜேஷ் கண்ணா ஆயிட்டேன்"னு ஃபோன் போட்டு சொல்லணும்.

Saturday, May 14, 2011

ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டிய நேரமிது

மேட்டரு கீழே சொடுக்கி தினமலரில் படித்துக் கொள்ளவும்.

ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டிய நேரமிது

என் சொந்தக் கருத்ஸ்:
கவனமா இருங்க மாடம். ஆர்பாட்டமில்லாத, சாமான்யனின் வாழ்க்கை தரத்தை நிரந்தரமாய் உயர்த்தும், கண்ணியமான, கண்டிப்பான, முதலமைச்சரைத்தான் மக்கள் எதிர்பாக்கராங்க. உஷாரு.
அஞ்சு வருஷத்துக்கு அப்பரம், history repeatsனு சொல்ல வச்சுராதீங்க..

பழிவாங்கல் படலம், பஸ் நெம்பரை மாத்தரது, அவரு கட்டின சட்டசபைய உபயோகிக்க மாட்டேங்க்கரது போன்ற சில்லரைத் தனமான விஷயங்களை புறம் தள்ளுங்கள்.

குறிப்பா, சசிகலா குடும்பத்துக்கும், கப்பித்தான் குடும்பத்துக்கும், கடிவாளம் மிக அவசியம்.

நாட்டக் காப்பாத்துரா நாராயணா...

Monday, April 18, 2011

சீனு - சிறுகதை

தூங்கிக் கொண்டிருந்த சீனுவை முகத்தில் தட்டி எழுப்பினாள் ஜானகி. சீனுவுக்கு ஏழு வயது.

மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன். தூக்கம் முழுதும் கலையாது, அரை மயக்கத்தில் நடப்பது போல் நடந்து சென்றான்.

"சீக்கிரம், நேத்து மாதிரி லேட் பண்ணாம, மட மடன்னு கெளம்பு. ஸ்கூல் பஸ் போயிடுச்சுன்னா, நான் கொண்டு போய் விட முடியாது. எனக்கும் ஆபீஸுக்கு நேரமாவுது" - அலறினாள் ஜானகி அத்தை.

நேற்று ஜானகி, கோபத்தில் காதைத் திருகியது இன்னும் வலித்தது சீனுவுக்கு.

"அம்மாகிட்ட ஜானகி அத்தைய மாட்டி விடணும்" என்று மனதில் நினைத்துக் கொண்டே பள்ளிக்குக் கிளம்பினான் சீனு.

கசங்கிய சட்டை, பெரிய புத்தகப் பை, மதிய உணவுக்கு ஜானகி கட்டித் தந்த ப்ரெட், இவற்றுடன் ஸ்கூல் பஸ்ஸில் ஏறி அமர்ந்தான் சீனு.

பஸ்ஸில் சீனுவை அனைவரும் திரும்பிப் பார்த்து முணு முணுத்தார்கள். எப்பொழுதும் சிடுசிடுவென இருக்கும் பஸ் ட்ரைவர், இன்று, "பை குடுப்பா. இங்க வந்து ஒக்காரு" என்று வாஞ்சயாக சீனுவின் கைபிடித்து அமர்த்திவிட்டார்.

பக்கத்து இருக்கையில் இருந்த ஐந்தாம் வகுப்பு கோமதி, "இந்தா சாப்பிடு" என்று தன்னிடமிரூந்த சாக்லேட் ஒன்றை நீட்டினாள். சீனு, மனதுக்குள் சிரித்தப்படி சந்தோஷமாய் சாக்லெட்டை வாங்கித் தின்றான்.

போன வாரம்தான், சீனுவின் வெள்ளை சட்டையில் ink அடித்து அவனை அழ வைத்தாள் இந்த கோமதி. அம்மாவிடம் கோமதியை மாட்டி விட்டது ஞாபகம் வந்தது சீனுவுக்கு.

கோமதி நீட்டிய சாக்லெட் வாங்கும்போது "கோமதி, good girl. அம்மாகிட்ட சொல்லணும்" என்று மனதுக்குள் சிரித்தான் சீனு.

லலிதா மிஸ், ரொம்ப strict. எல்லோரையும் ஓரு மிருகத்தை படமாக வரைந்து, அந்த மிருகத்தைப் பற்றி ஒரு வாக்கியம் சொல்ல வேண்டும் என்றும் home-work கொடுத்திருந்தார்.

நாய் என்று தலைப்பிட்டு ஏதோ கிறுக்கிக் கொடுத்தான் சீனு. லலிதா மிஸ் சீனுவை பார்த்து, "குட். சீனு. நாய் பத்தி ஏதாவது சொல்லு" என்று சீனுவிடம் கேட்க்க, சீனுவும், "நாய் லொள்னு குரைக்கும். நாய் பூனையை துரத்தும்" என்று சொன்னான்.

லலிதா மிஸ்ஸும் "வெரி குட் சீனு. Children clap your hands for சீனு" என்று சொல்ல எல்லா குழந்தைகளும், கை தட்டியது. சீனுவுக்கு பெருமை தாங்கவில்லை.

லலிதா மிஸ் good சொன்னார்கள் என்ற விஷயம் டாடி கிட்ட இன்னிக்கு சொன்னா, ரொம்ப நாளா கேட்க்கும் சைக்கிள் கட்டாயம் வாங்கிக் கொடுத்திடுவாங்க என்று மனதுக்குள் நினைத்து சிரித்தான்.

மதியம், காஞ்ச ப்ரெட்டை, சாப்பிடாமல் தூக்கிப் போட்டான்.

பள்ளி முடிந்து, மீண்டும் ஸ்கூல் பஸ். கைபிடித்து ஏற்றி விட்ட ட்ரைவர், இன்னொரு சாக்லெட்டுடன் கோமதி, கல கலவென சிரித்தபடி மற்ற பிள்ளைகளுடன் சீனுவும், இன்று நடந்த பள்ளி நிகழ்ச்சிகளை அம்மாவிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று அசை போட்டபடி வந்தான்.

அவன் இறங்கும் இடம் வந்ததும் குதித்திறங்கி கோமதிக்கு டாடா காட்டினான் சீனு.

தன் இல்லம் நோக்கி ஓடினான். டுர்ர்ர்ர்ர்ர் என்று கார் ஓட்டியபடி வீட்டை அடைந்தான்.

வழக்கமாக கேட்டின் அருகில் நின்று வரவேற்க்கும் அம்மாவை அங்கு காணவில்லை. முகம் சுருங்கியது சீனுவுக்கு. பள்ளீயில் இருந்து வந்ததும் அம்மாவை ஓடிச்சென்று கட்டி அணைத்து அன்று ந்டந்ததெல்லாம் ஒப்பிக்க வேண்டும் சீனுவுக்கு. அம்மாவும் ஆசையாக எல்லா கதையும் கேட்டுக் கொண்டே அவனுக்கு உடை மாற்றி, உணவு ஊட்டுவாள்.

"எங்க போனாங்க இந்த அம்மா" என்று யோசித்தபடி "அம்மா அம்மா" என்று கேட்டுக்கு வெளியில் இருந்து கத்தினான்.

வழக்கத்துக்கு மாறாக கேட் பூட்டியிருந்தது. முற்றம் குப்பையாக இரூந்தது.

இவன் அலறுவதைக் கேட்டு பக்கத்து வீட்டில் வேலை செய்யும் ஜமுனா பாட்டி வந்தாள்.

"டேய் சீனு, இங்க என்னடா பண்ற. போ உங்க அத்த தேடப் போறாங்க. லேட்டா போய் அடிவாங்காத. இனிமே நீ அங்க தான் போகணும். உங்க அம்மாவும், அப்பாவும் சாமி கிட்ட போயிட்டாங்க. சீக்கிரம் அத்த வீட்டுக்கு போ" என்றாள் ஜமுனா பாட்டி.

சீனுவுக்கு அழூகை வந்தது. போன வாரம், அம்மாவும், அப்பாவும் கடைக்கு போய் விட்டு வரும்போது லாரி மோதிவிட்டதால், மாலை போட்டு இருவரையும் முற்றத்தில் படுக்க வைத்திரூந்தது சீனுவுக்கு நினைவுக்கு வந்தது. அம்மாவையும் அப்பாவையும், வெளியே எடுத்துப் போனதும், சீனுவை இவன் மாமாவும் ஜானகி அத்தையும் அவர்கள் வீட்டுக்குக் கூட்டீச் சென்றார்கள். அம்மா எங்க என்போதெல்லாம் நாளைக்கு வருவாங்க என்று சொல்லியிருந்தார் மாமா.

ஜமுனா பாட்டி இனி அம்மா வரமாட்டாங்க என்றதும், அழூகையாய் வந்தது சீனுவுக்கு.

அழூதுகொண்டே பக்கத்துத் தெருவில் இருக்கும் ஜானகி அத்தை வீட்டுக்கு ஓடினான்.

"அத்த அம்மா எப்ப வருவாங்க" என்று அழுது கொண்டே கேட்டான்.

"பெரிய ரோதனடா உன்கிட்ட. இனி வரமாட்டாங்க போ. சாமி கிட்ட போயிட்டாங்க. நீ போய் home work எழூதி முடிச்சுட்டு தொட்டியில இருக்கர செடிக்கு தண்ணி ஊத்து போடா" என்றாள் ஜானகி.

அழுது கொண்டே homework முடித்து, செடிக்கு தண்ணி ஊற்றி, உறங்கப் போனான் சீனு.

அழுத களைப்பில் உடனே உறங்கிப் போனான்.

விழியில் இருந்து மட்டும் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

ps: totally inspired & lifted from Kewlian Sio's "Lets go home". ஒரிஜினல், ரொம்பவே அருமையான கதை. ஆறாம் வகுப்பில் படித்தது.
மீள்பதிவு: http://neyarviruppam.blogspot.com/2007/03/blog-post_12.html

Saturday, April 09, 2011

சென்னையில் ஒரு கேடுகாலம்...

கடந்த வாரம், அன்னா ஹசாரே, நாட்டின் எதிர்காலத்துக்கு வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயத்துக்காக, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, இதுவரை நாம் காணாத ஒரு எழுச்சியை அறிமுகப் படுத்தியிருந்தார்.

இதற்கு முன் நாம் கண்ட பெருந்திரளான கூட்டங்கள், ஒன்று அரசியல் கூட்டத்தில், பிரியாணிக்கும், இருபது ரூவாய்க்கும் ஆசைப்பட்டு வரும் சாமான்யனின் கூட்டம். அல்லது, திருவிழாவுக்கு கூடும் பக்த கோடிகளின் கூட்டமாய் இருந்திருக்கும்.

முதல் முறையாக, மொத்த இளைய சமுதாயத்துக்குள்ளும், ஒரு தீப்பொறியை சிதறவிட்டு, தன் பால் இழுத்த பெருமை 72 வயதான இந்த ஹசாரேக்குத் தான் உண்டு.

RTI என்ற தகவல் அறியும் சட்டத்துக்கு வடிவம் தந்ததிலும், இவரின் பங்கு பெரிய பங்கு. அதை மாற்றி அமைத்து பிசுபிசுக்க வைக்கும் அநேகம் அரசு முயற்சிகளுக்கும் எதிராக நின்று அதை தாங்கிப் பிடிப்பதிலும் இவரின் பங்கு பெரியதாம்.

அன்னா ஹசாரே, இந்த 2G ஸ்பெக்ட்ராம் ஊழல் காலக்கட்டத்தில், எடுத்திருக்கும் விஷயம் 'ஜன் லோக்பால்' என்ற சில சட்டத் திறுத்தங்களாம். இதன் விவரங்கள் எல்லாம் இணையத்தில் பரவிக் கிடக்கு. தெரியாதவங்க படிச்சு தெரிஞ்சுக்கோங்க. மிக முக்கியமான விஷயம், நம் புலனாய்வு (CBI) நிறுவனங்க்ளுக்கு சுதந்திரமாய் (autonomy) செயல் பட வழிவகை செய்து கொடுப்பது. அப்பத்தான், கூச்சமே இல்லாமல் தவறு செய்யும் அரசியல் வியாதிகளும் மற்ற பல அரசு அதிகாரிகளையும், தயவு தாட்சண்யம் இல்லாமல், விசாரித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை உடனுக்குட்ன் வழங்க முடியும்.

போஃபோர்ஸில் துவங்கி, இன்றை 2G Spectrum வரை, இந்த சுதந்திரம் இல்லாத் தன்மையால் தான், யாரும் கம்பி எண்ணாமல் தப்பிக்க முடியும் வாய்ப்பு பிரகாசமாய் இருக்கிறது.

உண்ணாவிரதம் இருந்து, இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்ப்தை வலியுறுத்தி, ஓரளவுக்கு வெறறியும் கண்டுள்ளார் அன்னா ஹசாரே.
தேர்தல் நேரத்தில், ஹசாரேக்காஅ எழுந்துள்ள இளைஞர் எழுச்சி நல்லதல்ல என்று நினைத்தோ என்னமோ சிங்கார், உடனே நிபந்தனைகளுக்கு படிந்துள்ளார். வரும் மாதங்களில் ஜன் லோக் பல், சட்டமாய் இயற்றப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

போகப் போகத்தான் தெரியும், எந்தளவுக்கு அதில் உண்மை உள்ளதென்று.
ஆனால், ஒரு விஷயம், நிச்சயமாய் தெரியும். இனி, எளிதில், இளிச்சவாயர்கள் ஆகி விடமாட்டோம். அன்னா ஹசாரேவும், அவரின் கூட்டமும், அவர்களை, ட்விட்டரிலும், ஃபேஸ் புக்கிலும் தொடரும் இளைஞர் படையும், விழித்துக் கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கும், என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த குட்டி வெற்றியை, உலகத்தில் உள்ள பல மூலைகளில் வாழும் இந்தியர்களும் பெருவாரியாக திரண்டு, கொண்டாடிக் குதூகலித்தனர். வெறும் கொண்டாட்டமாய் மட்டும் இல்லாமல், இவர்கள், இதன் அடுத்த கட்டத்தை, நாங்கள் கவனிக்கிறோம் என்ற திடமான செய்தியையும் இதன் மூலம் உலகத்துக்கும் நம் நாட்டாளும் அதிகாரிகளுக்கும் தெரியப் படுத்தினர்.

சிலிக்கான் வாலியில் கூட, ஒரு IndiaAgainstCorruption.Org என்ற குழுமமும், ஏனைய மற்ற இயக்கங்களும், ஒன்று கூடி இன்று குட்டி வெற்றிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்கள்.

நான், இதுநாள் வரை எந்த ஒரு பொது நல விஷயத்துக்கும் சென்று என் நேரத்தை செலுத்தியதில்லை. அதிகபட்சம், சில $களை டொனேஷன் கொடுப்பதும், ரெண்டு மூன்று மரக்கன்றுகளை நட்டதோடு மட்டுமே என் பொது நல வாழ்க்கை நிற்கிறது.
இணையத்தில் கண்ட இந்த எழுச்சி என்னைப் போன்ற சாமான்யர்கள், கிட்டத்தட்ட 500 பேரை இன்று ஒரே நேரத்தில், கலிஃபோர்னியாவில் உள்ள சிலிக்கான் வாலியில பெருந்திரளாய் கூட வைத்தது.
500 பேரும், குட்டி ஊர்வலம், அதைத் தொடர்ந்த ஆரவாரம், பாடல், வருங்காலத் திட்டம் என உபயோகமான மூன்று மணி நேரத்தை செலவிட்டோம்.

இவ்வளவு தூரத்தில் இருக்கும், எங்கூரில் 500 பேரும், டில்லியில் லட்சக் கணக்கிலும், மற்ற நகரஙக்ளில் ஆயிரக் கணக்கிலும் மக்கள் ஒன்று கூடி அவர்களுக்குள் இருக்கும் தீவிரத்தை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், 2G Spectrum என்ற வரலாறு காணாத ஊழலின, பிரப்பிடமான சென்னையில், விரல் விட்டும் எண்ணும் அளவுக்கு மட்டுமே சிலர் மெரீனா பீச்சில் காணப்பட்டார்கள்.
NDTVல் செய்தியாளர் சென்னை வாசிகளைக் காட்டும்போது, தாம்பரம் பஸ்ஸ்டாண்டில் நிற்கும் கூட்டம் அளவுக்குக் கூட ஆட்கள் வந்திருக்கவில்லை.
நம் சென்னை வாசிகள், சினிமா மயக்கத்திலும், IPL மயக்கத்திலும், கட்டுண்டு கிடக்கிறார்கள் போலும்.

எந்த அரசியல்வியாதியும், தானாய்த் திருந்தப் போவதில்லை. இந்த மாதிரி நாம் ஒன்று பட்டு, உள்ளேன் ஐயா சொன்னால்தான், கொஞ்சமாவது யோசிப்பாங்க்ய.

இன்னா சென்னை இப்படிப் பண்ணிட்ட? வெளங்குமா?

எங்கூரிலிருந்து, சில எழுச்சிப் படங்கள்:








Sunday, March 13, 2011

வீடியோ சுப்ரமணியன் - ராயல் சல்யூட்

யாருங்க இந்த ஹீரோ வீடியோ சுப்ரமணியன்?

யாருக்காவது இந்த வீடியோவின் மேல் விவரங்கள் தெரியுமா? லஞ்சம் வாங்கும் போலீசை கையும் களவுமா புடிச்சவரை குற்றவாளி ஆக்கிட்ட மாதிரி தெரியுது. அதுக்கப்பரம் என்னாச்சு?



பரப்பவும்.

வீடியோ சுப்ரமணியத்துக்கு ஒரு ராயல் சல்யூட்!

Thursday, February 03, 2011

டில்லிக்குப் போன கதை - Flash Back

தேறாம போயிருவானோன்னு உற்றாரும் பெற்றோரும் நினைத்து பயந்து போய்க்கொண்டிருந்த சுபயோக சுபதினத்தில், சென்னையில் உள்ள ஒரு பெத்த ஐ.டி கொம்பேனியில் சேர்ந்து துலைத்த காலம்.
அப்பவெல்லாம் மந்தை மந்தையா கடா வெட்ட ஆள் தேத்தர மாதிரி இந்த கொபேனிக்களில் ஆள் சேப்பாங்க. 'எங்க கிட்ட வாங்க அமேரிக்காவுக்கு அனுப்பறோம்' வகை தேர்தல் வாக்குறுதிகள் கொடுப்பாங்க.

பல கடாக்களில் ஒரு குட்டிக் கடாவாக நானும் மே சொல்லிக்கிட்டே சில பல நாட்கள், ஒம்போது மணிக்கு வந்தோமா, அஞ்சு மணிக்கு கெளம்பினோமா, மத்திய சாப்பாட்டை கேண்ட்டீனில் வகை தொகையா சாப்பிட்டு, சத்யத்தில் ஒரு படத்தை பாத்தோமான்னு ஓட்டிக்கிட்டு இருந்தேன்.

அமெரிக்க போக வேண்டிய கடா என்ற கெத்து இருந்ததால், எங்க மந்தைக்கு ஒரு மருவாதை அதிகமா இருக்கும். ஏற்கனவே அமேரிக்கா பாத்துட்டு விடுமுறையில் வந்த கொழுப்பாடுகள், ரே-பன்னை தலையில் மாட்டிக்கிட்டு. "வாவ் இட்ஸ் ஹாட் மேன். லைஃப் ஈஸ் ஃபேபுலஸ் இன் நியூ யார்க் மேன். இட்ஸ் ஜஸ்ட் அ ஃப்யூ டாலழ்ஸ் மேன்.. தஸ்ஸு புஸ்ஸு ழ்ழ்ழ்ழ்"ன்னு கொழைவானுவ.

விஸாக்காக வெயிட்டிக்கிட்டு இருந்த காலங்களில், வெத்தா பத்தாயிரம் சம்பளம் கொடுக்கரமேனு, எங்களை யூஸ் பண்ணிக்க என்னென்னமோ செஞ்சு பாப்பாங்க. மற்ற கல்லூரிகளில் நடக்கும் ஆள்பிடிக்கும் வேலைக்கு, நேர்முனை செய்ய அனுப்புவாங்க. நாங்களே ஒரு வருஷம் கூட அனுபவம் இல்லாக் கத்துக் குட்டிகள், நாங்க போயி, இன்னும் கொஞ்சம் கத்துக் குட்டிகளை புடிச்சுக்கிட்டு வர பெரிய அலப்பரை பண்ணுவோம்.

விசாவுக்கு காத்துக்கிட்டு, இப்படியே சில பல மாதங்கள் ஓடியது. மீண்டும் ஒரு சுபயோக சுபதினத்தில், எங்க கொம்பேனி பெரிய தலை ஒருத்தரு, "யப்பா, டில்லி'ல ஒரு பன்னாட்டு நிறுவனம் இருக்கு, அவங்க பண்ணிய மென்பொருள் ஒண்ணுல பெரிய ப்ரச்சனையாம், நீ போயி ஒரு மாசம் இருந்துட்டு, எல்லாம் சரிப் பண்ணிக் கொடுத்துட்டு வாப்பா. உனக்கு ஃப்ளைட் டிக்கீட்டும் நல்ல ஸ்டார் அக்காமடேஷனும் ஏற்பாடு பண்ணித் தருவாங்க"ன்னு சொன்னாரு.

பெரிய தலைக்கு என்னை ஓரளவுக்கு பிடிக்கும். மத்த கடாக்களில் என் மேல் அதிகமா கவனம் செலுத்துவாரு. சரி, மனுஷன் நல்லதுக்குத்தான் சொல்வாருன்னு சரி சொல்லி ரெடியாயிட்டேன்.

ஃப்ளைட்ல டில்லிக்கு ஒரு மாசம், அஃபீஷியல் ட்ரிப்னு, ஒரு வருஷ அனுபவம் கூட இல்லாத நான் அலப்ப்ரை பண்ணியதும், எங்க வூட்ல எல்லாருக்கும் ஆனந்தக் கண்ணீர். உருப்படவே மாட்டான்னு நெனச்ச புள்ள அரவிந்த்சாமி கணக்கா பெரிய பிசினஸு மேக்னட்டு ஆயிடுவான்னு நம்ப ஆரம்பிச்சுட்டாங்க உள்ளூர.

பின்னாளில் தெரிய வந்த மேட்டரு, எங்க பெரிய தலையும், அந்த டில்லி பெரிய தலையும் நல்ல நண்பர்களாம். "மச்சி, எனக்கு ஒரு பிசினஸ் குடு"ன்னு அடிக்கடி இந்த மாதிரி குடுக்கல் வாங்கல் செஞ்சுப்பாங்களாம். சந்துல சிந்து பாட என்னை அனுப்பி வச்சுட்டாங்க. அவங்க கணக்குப் படி, நான் செஞ்சாலும், கிழிச்சாலும், இவங்களுக்கு ஒண்ணுமில்லை. அதனாலதான் பெருசா கவலைப் படாம, கத்துக் குட்டியை பன்னாட்டு மென்பொருளை 'ஃபிக்ஸ்' பண்ண அனுப்ப முடிவு செஞ்சாங்க.

இந்த மேட்டரெல்லாம் தெரியாத நானு, நல்ல புள்ளையா, ஒரு 'படிச்ச பசங்க' கண்னாடிய காசு கொடுத்து வாங்கி போட்டுக்கிட்டு, ஒரு எச்சகூட்டிவ் பையும் வாங்கி, 18A பஸ்ஸு புடிச்சு திருசூலத்தில் இறங்கி, 'பந்தாவா' ஏர் இந்தியா ஃப்ளைட்டில் ஏறி டில்லிக்கு போனேன்.

அங்க போனா, அந்த டில்லி பெரிய தல, நல்லா உபசரிச்சு, எனக்கு ஒரு தனி ரூமை கொடுத்து, "நீ இங்கியே ஒக்காந்துக்கப்பா, இந்த மேகசீன் எல்லாம் படி, அந்த கம்ப்யூட்டர்ல ஈ.மெயில் பாத்துக்க, எங்காளுங்க ஒவ்வொருத்தரா வந்து, ப்ரச்சனைய சொல்லி தீர்வு கேட்க வருவாங்க"ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

நானும் காலு மேல கால போட்டுக்கிட்டு, அரும்பு மீசையை தடவிக்கிட்டு, "யா, கம்மின்"னு ஒவ்வொருத்தரையும் உள்ள கூப்டு ஆசி கூறி அனுப்பினேன். ஆரம்பத்தில் ஒரு திகிலாத்தான் இருந்துச்சு, ஆனா, உள்ள வர ஒவ்வொரு ஆளும் வயசான பெருசுங்க. கோபாலில் இருக்கும் மென்பொருளை, ஆரக்களுக்கு மாத்தும் பணியை ஆரம்பிச்சிருந்தாங்க. நாம அப்பத்தான் கோபாலை மனப்பாடம் பண்ணி, ஆரக்களில் ஆரஞ்சு பிழிய ஆரம்பிச்சிருந்த காலம் ஆதலால், ஓரளவுக்கு சில பல ப்ரச்சனைகளை எப்படி தீர்க்கணும் பெருசுகளுக்கு சொல்லிக் கொடுத்து, கொஞ்சமா ஃபேமஸ் ஆகியிருந்தேன். ஒரே ப்ரச்சனை "ஹிந்தி நஹீ மாலூம் ஹேய்", ஒரு நாளைக்கு முப்பது தபாவாவது சொல்லித் தொலைக்க வேண்டியிருந்த சூழல்.

அப்பெல்லாம் க்ரெடிட் கார்டு பெருசா புழக்கத்தில் இல்லை (தொண்ணூறுகளின் இறுதி), தினசரி அலுவலகம் விட்டுக் கெளம்பும்போதும், ரெண்டாயிரமோ மூணாயிரமோ கைல கொடுத்து, ஹோட்டலில் செட்டில் செய்யவும், தினப்படி கூலி சாப்பாட்டையும் கவனிக்கச் சொல்லுவாங்க.
அமேரிக்காவாவது வெங்காயமாவது, இதுதான் சொர்கம், இப்படியே வாழ்க்கையை ஓட்டிடலாமேன்னு ஒரு பெரிய சபலமே வந்துடுச்சு.

ஆனா, டில்லிப் பெருசும், எங்க கொம்பேனிப் பெருசும், பேசி வைத்த 'பிசினஸு' தொகை முடிஞ்சிருக்கும் போல, ஒரு மாசம் ஆனதும், "யப்பா, சூப்பரா கலக்கிட்ட. நீ வரலன்னா என்ன ஆயிருக்குமோன்னு தெரீல. நீ தெய்வம். நீ நல்லாருக்கணும், உன் குடும்பமே நல்லாருக்கணும்"ங்கர ரீதியா டில்லிப் பெருசு புகழாரம் சூட்டினாரு. ( இந்த அளவுக்கு இல்லனாலும், இந்த ரீதியில் ). அப்படியே, "நீ ஒரு பேப்பர்ல இங்க செஞ்ச வேலையைப் பத்தி சுருக்கமா எழுதிக் கொடு, எங்க லெட்டர் ஹெட்ல போட்டு உனக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் மாதிரி தரேன்"னு அவரே சொன்னாரு.
எனக்கும், அது நல்ல விஷ்யமா பட்டுச்சு. கண்ணாடிய ஏத்தி எறக்கி அவரப் பாத்துட்டு, ஆர்னால்டு கணக்கா, "ஐ வில் பி பாக்"னு சொல்லிட்டு, என் ரூமுக்கு சில பல வெள்ளைப் பேப்பரை எடுத்துட்டுக்கிட்டு போயி கதவை சாத்திக்கிட்டேன்.

கெடைச்ச வாய்ப்பை விட வேணாம்னு, ஒரு ரெண்டு பக்கத்து நீட்டி முழக்கி, என்னமோ அந்த மொத்த மென்பொருளையும் நான் வடிவமைச்சு, மொத்த விஷயத்தையும் இரவு பகல் பாக்காம நானே முன்னின்று எல்லாப் பெருகளையும் வேலை வாங்கி, பக்காவாக முடிச்சு, என்னமோ எடிசன் கண்டு பிடிச்ச லைட் பல்பை நான் கண்டு பிடிச்ச மாதிரி அலப்பரை பண்ணி ரெண்டு பக்கத்துக்கு ஒரு 'எக்ஸ்பீரியன்ஸ்' லெட்ட்ரை தயார் பண்ணி, டில்லிப் பெருசுகிட்ட நீட்டி, "சாரே, இத்துல ஒரு கையெழுத்து போடுங்க, ஐ ஷால் டேக் லீவ்"னு குரலை கெட்டியாக்கி ப்ரொஃபெஷனல் கணக்காச் சொன்னேன்.
லெட்டரை மேலையும் கீழையும் படிச்சவரு, "வாட் த *?"னு சொல்லாம சொல்லி புருவத்தை உயர்த்தி, "ஹ்ம். யப்பா இத்த வச்சுட்டுக் கெளம்பு, நான் கையெழுத்து போட்டு, ஃபாக்ஸ் அனுப்பறேன்"ன்னு சொன்னாரு.

"தட்ஸ் ஆழ்ரைட். ஸீ யூ லேட்டர்"னு கை குலுக்கிட்டு அடுத்த ஏர் இந்தியா ஃப்ளைட்டை புடிச்சு சென்னைக்கு வந்து, நான் உள்ளூர் கடாக்களிடம் அலப்பரை பண்ணியதை அளக்க தனிப் பதிவு தேவை.

ஆனா, டில்லிப் பெருசு ஃபாக்ஸ் பண்றேன்னு சொன்ன என் ரெண்டு பக்க எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர் இன்னி வரைக்கும் வரலை ;)

மேலே சொன்னது உண்மைக் கதை, புருடா அல்ல.

Tuesday, February 01, 2011

விழித்திடு தமிழா உறக்கம் ஏன்?



வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
வேட்டையாடி சங்கறுத்து
சுட்டுக்கொல்கிறது
தமிழா! விழித்திடு

வலை வீசி மீன்பிடிக்க
அலை கடல் மீது சென்றவனின்
தலை மீது குண்டுவீசும்
கோழை செயலும் நடக்கிறது
தமிழா! விழித்திடு

நாவாய் படைநடத்தி
காற்றாற்றுதலை அறிந்து
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது
தமிழா! விழித்திடு

ஆடையை இவ்வுலகிற்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்லும்
கொடும் பாவச்செயலும் நடந்தது
தமிழா! விழித்திடு

குட்டித்தீவினில் ராக்ஷசன் ராஜபக்ஷே
அரக்க இராஜ்ஜியம் செய்து
கைத்தட்டி சிரிக்க
சிங்களத்து வெறிநாய்
அலைகடல் மீதினிலே தோட்டாக்களால்
தமிழனின் உயிர் குடிக்க
மத்திய அரசு அலட்ச்சியமாய் உறங்க
மாநில அரசு கூட்டணி வலைப்பின்னி
தொகுதி மீன் திமிங்கலதையும்,
வாக்காளர்களின் தேர்தல்
வோட்டான வெற்றிமீன் பிடித்து
அரசியல் செய்கிறது
தமிழா! விழித்திடு உறக்கம் ஏன்?

-பிரபாகர் (நண்பேன்)

இவ்ளோ அட்டூழியங்கள் செய்தவர்களை ஒண்ணுமே பண்ணாம விட்டது அட்டூழியம். பேடித்தனம்.

தமிழக மீனவரை காக்கக் கோரி ஆன்லைன் பெட்டிஷன் ஒன்று இயற்றப் பெற்றிருக்கிறது. கையெழுத்து இடாதவர்கள் இடவும்.

Monday, January 24, 2011

நல்ல ஆ படங்கள் சில...

2010 தமிழ் திரைப்படத்துக்கு நல்ல வருடம். அருமையான பல படங்கள் காணக் கிட்டியது. அவங்க லாபம் சம்பாதிச்சாங்களா என்ற கணக்கெல்லாம் நமக்கு வேணாம். நமக்கு பொழுது போச்சா? அதான் முக்கியம்.
சென்ற வருடப் படங்களில் நல்லாவே பொழுது போச்சு.

அருமையான தமிழ் படங்களைத் தொடர்ந்து சில பல ஆங்கிலப் பழைய புதிய படங்களையும் கண்டு மகிழ்ந்தேன். அதில் சிலதின் பெயரை உங்களுக்குச் சொல்லி, யாம் பெற்ற இன்பம் பெறுக நீங்களும் என்ற கோட்பாட்டின் படி இயங்க இந்தப் பதிவு.

Kill Bill2 தான் Quinton Tarantino என்ற இயக்குனரின் பெயரை எனக்கு அறிமுகப் படுத்தியது. கட்டாயம் பாருங்க. அப்படியே முதல் பாகமும்.
அப்படியே பின்னோக்கி நகர்ந்தா, பலராலும் போற்றிப் புகழப்படும் Pulp Fictionம் இந்தாளு எடுத்த படம்தான். இப்படியெல்லாம் கூட ஒரு படத்தை எடுக்க முடியுமான்னு கேட்க வைக்கும் க்ளாசிக் காட்சிகள். முக்கியமா படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், சேமுவேல் ஜாக்ஸனும், ட்ரவால்ட்டோவாவும், இன்னும் இரு ஜேப்டி திருடர்களும், ஆளுக்கொரு துப்பாக்கிய வச்சுக்கிட்டு பேசர ராவடி, அற்புதம்.

இதே ஆளுது, Reservoir Dogsச்னு ஒரு படம். இதுவும் அமக்களம். "If you shoot me in your dreams, you better wake up and apologize"னு டாராண்ட்டினோவின் முத்திரை பதித்த வசனங்கள்.

இதே ஆளுது, Jackie Brownன்னு இன்னொரு படம். இதிலும் சேமுவேல் ஜாக்ஸன் கலக்கல் நடிப்பு. அலட்டாமல் நடித்த ராபர்ட் டினிரோவும் உண்டு.

Graduateனு ஒரு படம். Dustin Hoffman சின்ன வயதில் நடித்து 1970களில் வெளிவந்த படம். அந்த காலத்துக்கு, இது ரொம்பவே முற்போக்கு எண்ணங்கள் நிறைந்த படம். குடும்ப நண்பரின் மனைவியை காதலிக்கும் பயலான டஸ்ட்டின். பள்ளிக் காலங்களில் ரொம்வே பிடித்த "God Bless you please Mrs.Robinson" , Sound of Silence போன்ற பிரபலப் பாடல்கள் இந்த படத்தில் அருமையாய காட்டியிருக்காங்க.

Inception பத்தி ஏற்கனவே அளந்தாச்சு.

Papillon. இது, இந்த ஊரு எம்.ஜி.ஆரு, Steve McQueen ஹீரோவாக நடித்த படம். சின்ன தப்பு செஞ்சவர ஒரு தீவில் இருக்கும் ஜெயிலில போட்டுருவாங்க. அங்க இருந்து தப்பிக்க பல விஷயங்கள் செய்வாரு. ஒவ்வொரு தடவையும் திரும்ப புடிச்சு உள்ள போட்ருவாங்க. வயசாகி கிழம் தட்டரவரைக்கும் இப்படியே செய்வாரு. Never Give Upனு அடிச்சு சொல்லும் படம். அந்த காலத்துல என்னமா படமாக்கியிருக்காங்க. பிரமிப்பு.

Temple Grandin. இது சென்ற வருடம் வந்தது. autismம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பெண்மணி பற்றிய உண்மைக் கதை. அவங்க குறையை எப்படி நிறையா மாத்தி, வாழ்க்கையில் ஜெயிச்சுக் காட்டினாங்க என்பதை, ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமா படம் பிடிச்சுக் காட்டியிருக்காங்க. குறிப்பா, ஹீரோயினா நடிச்ச பெண்மணி அபாரம். Golden Globesம் அந்த பெண்மணிக்குக் கிட்டியதாய் நினைவு.

IP Manன்னு ஒரு சீன மொழிப்படம். இதுவும் உண்மைக் கதையாம். விறு விறு விறுன்னு நகரும் காட்சி அமைப்பு. குங்ஃக்ப்பூ, பாசம், தேசம்,நட்பு, வெறுப்பு, அது இதுன்னு நல்ல கலவை.

Babel, இந்த ஊரு சூர்யா, Brad Pitt நடிச்ச படம். தொடர்பில்லா பல காட்சிகள், கடைசியில் எப்படி தொடர்புடையதா ஆகுதுன்னு, அழகா ஓடும் படம். போரடிக்காம ரெண்டு மணி நேரம் நகர கியாரண்ட்டி.

..இன்னும் வரலாம்..

Sunday, January 23, 2011

Steve Jobsன் நல்ல பேச்சு

2005ல் Stanford Convocation நிகழ்ச்சியில் Steve Jobs பேசியது. சுவாரஸ்யமான பேச்சு.

Thursday, January 06, 2011

பாக்கியலக்ஷ்மி - சிறுகதை



அம்மா கொஞ்சம் தள்ளி உக்காருங்க என்ற சத்தத்தால் தன் சிந்தனை கலைந்து எழுந்து நின்றார் பாக்கியலக்ஷ்மி.
எதிரே, ரூமை சுத்தம் செய்ய வந்த ஆஸ்பத்திரி வார்ட் பாய் நின்று கொண்டிருந்தான்.
அவள் சற்று தள்ளி அமர்ந்ததும் தரையை துடைத்து விட்டு சென்று விட்டான்.

கட்டிலில் பாக்கியலக்ஷ்மியின் கணவர் சச்சிதானந்தம் ஆழ்ந்த் உறக்கத்தில் இருந்தார். மூக்கில் ஸ்வாசிக்க உதவும் கருவிகளும், வயிற்றில் சிறுநீர் வெளியேர சில குழாய்களும் பொறுத்தப்பட்டு இருந்தது.
74 வயதாகிறது சச்சிதானந்தத்திற்கு. இதுவரை ஒரு நாள் கூட நோய் நொடி என்று படுத்ததில்லை. தலை வலி வந்தால் கூட, ஒரு கைக்குட்டையை இருக்கமாக தலையில் கட்டி கண்ணை மூடிக் கொண்டு பொறுத்துக் கொள்பவர்.

நான்கு தினங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு "பாக்கி வயத்த பயங்கரமா வலிக்குதும்மா" என்றவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். என்ன செய்வதென்று தெரியாத பாக்கியலக்ஷ்மி மிகவும் பதறிப் போனார்.
பாக்கியலக்ஷ்மியின் சப்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிப்பவர்கள் விவரம் அறிந்து, ஒரு ஆட்டோவில் சச்சிதானந்தத்தை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

மூத்த பிள்ளை பாஸ்கரன் ஆக்ராவில் பணிபுரிகிறான். இரண்டாவது பெண் பார்வதி திருமணமாகி பூனாவில் வசிக்கிறாள்.
இருபது வருடங்களுக்கும் மேலாக சச்சிதானந்தமும் பாக்கியலக்ஷ்மியும் தனியாகத்தான் வசிக்கிறார்கள்.

வருடத்துக்கு ஒரு முறை பாஸ்கரனும் பார்வதியும் வந்து போவதுண்டு.
தங்களுடன் ஆக்ராவில் வந்து வசிக்குமாறு சில முறை பாஸ்கரன் கேட்டாலும், சச்சிதானந்தத்திற்க்கு அதில் உடன்பாபடில்லை.
"பாக்கி, நம்பளால முடிஞ்ச வரைக்கும் அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதும்மா" என்பார்.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அப்பறம் பாப்போம் பாஸ்கரா" என்று ஒவ்வொருமுறையும் தட்டிக் கழிப்பார்.

பாஸ்கரனுக்கு, இரண்டு பிள்ளைகள், வேலைக்குச் செல்லும் மனைவி, நல்ல உத்யோகம் என்று நன்றாகவே இருந்தான். ஒவ்வொருமுறை பெற்றோரை தன்னுடன் வந்து இருக்குமாறு அழைக்கும் போதும் அவனது மனைவி அருகில் வந்து "ஏங்க அவங்க தான் வரலன்னு சொல்றாங்களே அப்பறம் ஏன் கேட்டுக் கிட்டே இருக்கீங்க. நம்ப வீட்டுல நம்ப சாமான் வெக்கவே எடம் இல்ல, இவங்களும் வந்துட்டா என்ன பண்றது. நான் ஆபீஸ் போவேனா, இவங்கள கவனிப்பேனா" என்று சுடு சொற்களை எரிவாள். இவளுக்கு பயந்தோ என்னவோ பாஸ்கரன் பெற்றோரை கூப்பிடுவதை குறைத்துக் கொண்டான்.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

பாக்கியலக்ஷ்மி சச்சிதானந்தத்தின் உறவினர் மகள் தான். பள்ளிப் பருவத்திலிருந்தே இருவரும் இணக்கமாக இருந்தவர்கள். சிறு வயதிலேயே இரு வீட்டார் பெற்றோரும் "சச்சிதானந்தத்துக்குத்தான் பாக்கியலக்ஷ்மி" என்று ஊர்ஜீதம் செய்து விட்டதால், எல்லா இடத்திலும் ஜோடிப் புறாக்கள் போல் வலம் வந்தவர்கள்.
பாக்கியலக்ஷ்மியை பாக்கி என்றும், சச்சிதானந்த்தத்தை ஆனந்தா என்றும் சுருக்கி விளித்து பரவசமாக சுற்றிய காலங்கள் பல.

இரும்பு உருக்காலையில் சூப்பர்வைஸராக வேலை. பணி இடத்தின் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்திருந்தார்கள். பணி முடிந்தததும் வீட்டிற்கு வந்து பாக்கிலக்ஷ்மியுடன் ஊர் கதை பேசி, அடுத்துள்ள கோவிலுக்கு பொடி நடை செல்வார்கள்.
மிடுக்காக சவரம் செய்த சிரித்த முகமும் கருகரு சுருட்டை முடியும் சச்சிதானந்தனிடம் பாக்கியலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தது.
மூத்த மகன் பாஸ்கரன் பிறந்தான். பிரசவத்தின் போது வலியில் துடித்த மனனவியை பார்த்து கலங்கிய சச்சிதானந்தன் "பாக்கி இந்த ஒரு குழந்தை போதும்டி. இவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சிருந்தா குழந்த்தயே வேணாம்னு இருந்திருக்கலாம்" என்று சொல்லிப் பதறினான்.

பாஸ்கரனின் பள்ளி வெகுதூரம் தள்ளி இருந்ததால், பள்ளிக்கு அருகாமையில் வீடு பார்த்து குடியேறினார்கள். சச்சிதானந்தன் தினமும் சைக்கிளில் உருக்காலைக்கு சென்று வந்தார். பிள்ளைக்காக செய்த முதல் அட்ஜஸ்ட்மண்ட் அது.
மூன்று வருடத்திர்க்கு பிறகு பார்வதியும் பிறந்தாள். இந்த முறை பாக்கியின் வலி கண்ட சச்சிதானந்தம் இனி குழந்தை வேண்டாம் என்று தீர்க்கமாக சொல்லி விட்டார்.

அக்கம் பக்கத்தில் சச்சிதானந்தத்திற்க்கு நல்ல மதிப்பு இருந்த்தது. யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்காமல், மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்வார்.
வயது ஆனாலும், அவர் மிடுக்கு குறையவில்லை. வெள்ளை வேட்டி சட்டையில் வலம் வரும் கணவரை காணும் போது பாக்கியலக்ஷ்மிக்கு அவளை அறியாமல் ஒரு புன் முறுவல் வரும்.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

ஆஸ்பத்திரிக்கு தந்தையை காண பாஸ்கரனும் பார்வதியும் வந்து விட்டார்கள். மூன்று வருடம் ஆகிவிட்டது, பாக்கி இவர்களை பார்த்து. பாஸ்கரன் வேளை பளு காரணமாக ரொம்பவே மாறிப் போயிருந்தான்.
"இப்ப எப்படி டாக்டர் இருக்கு. எப்ப டிச்சார்ஜ் பண்ணலாம்" என்ற பாஸ்கரனின் கேள்விக்கு நீண்ட பதில் அளித்துக் கொண்டிருந்தார் டாக்டர்.
பாக்கியலக்ஷ்மிக்கு கேட்டதெல்லாம் "organ failure, urinary track failure" போன்ற வார்த்தைகள்தான். நடுங்கிப் போனாள் இதைக் கேட்டு விட்டு.

இந்த நான்கு நாட்களில் ஒரு நாள் கூட சச்சிதானந்தன் கண் திறந்து இவளை பார்க்கவில்லை.
திருமணமான ஐம்பது வருடத்தில் பேசாமல் ஒரு நாளும் இருந்ததில்லை.

டாக்டரிடம் பேசி விட்டு வந்த பாஸ்கர், பாக்கியலக்ஷ்மியிடமும் பார்வதியிடமும் பேச ஆரம்பித்தான் "அப்பாக்கு major infection ஆகி இருக்காம். multiple organ failure ஆனதால lungs கும் urinary bladder கும் ட்யூப் வச்சிருக்காங்க. 8 மணீ நேரத்துக்கு ஒரு தடவை ஒரு பெரிய ஊசி போடணுமாம். அது போட்டாதான் ஒவ்வொரு பார்ட்டும் வேலை செய்ய ஆரம்பிக்க வாய்ப்பிருக்காம்" என்று கண்ணீருடன் கூறினான்.
பாக்கியலக்ஷ்மிக்கு அவளை சுற்றி பூமி அதிர்வது போன்றிருந்தது. செவி அடைத்து மயங்கி விழுந்தாள்.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

"ஒவ்வொரு ஊசியும் 4000 ரூபாயாம்டி. அப்பாக்கு ரொம்ப வயசானதால ஊசி வேலை செய்றதும் நிச்சயம் இல்லையாம். ஏற்கணவே 6 போட்டாச்சு. எனக்கு வேற எக்கச்சக்க வேல இருக்கு ஊர்ல. என்ன பண்றதுண்ணே தெரில" என்று பார்வதியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் பாஸ்கரன்.

"எனக்கும் போணும் பாஸ்கர். நான் இல்லாம பசங்கள மேய்க்க அவரு ரொம்ப கஷ்டப்படறாரு. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணேன். நான் நாளைக்கு கெளம்பி போறேன். ஏதாவது சீரியஸ்னா phone பண்ணு அவரையும் கூட்டிட்டு வரேன்" என்று அவள் பங்கிற்கு பார்வதி சொன்னாள்.

'ஆஸ்பத்திரி செலவு மட்டும் இது வரைக்கும் 65000 ரூபாய் ஆயிருக்கு. நான் தான் அதப் பாத்துக்கறனே, நீ இங்க கொஞ்ச நாள் இருந்து பாத்துக்கவாவது கூடாதா" என்று குரலை உயர்த்தினான் பாஸ்கரன்.

பாக்கியலக்ஷ்மி இவர்களின் பேச்சை கேட்டு கண் விழித்தாள்.
"நீங்க ரெண்டு பேரும் போய் உங்க வேலையை பாருங்கப்பா. அப்பாக்கு ஒண்ணும் ஆகாது. நான் பாத்துக்கறேன். குணம் ஆனதும் phone பண்றேன். பசங்களோட பொறப்பட்டு வாங்க போதும். இங்கதான் ந்ர்ஸ் நல்லா பாத்துக்க்றாங்களேப்பா கவலப்படாம பொறப்படுங்க" என்றாள் பாக்கி.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

பாஸ்கரனும் பார்வதியும் அரை மனதோடு புறப்பட்டு சென்றார்கள். பாக்கியலக்ஷ்மிக்கு அவர்கள் மேல் கோபம் வரவில்லை. கணவனின் இப்பொதைய நிலை தான் அவளுக்கு நெஞ்சடைக்கும் துக்கத்தை கொடுத்தது.

"கொஞ்சம் தள்ளி நில்லுங்கம்மா" என்று சொல்லிக்கொண்டு வந்தாள் நர்ஸ். பாக்கி நகர்ந்ததும், சச்சிதானந்த்தத்தின் உடம்பில் ஒரு வெள்ளை துண்டில் வெண்ணீரால் துடைத்து விட்டாள். மூக்கில் இருக்கும் ட்யூபை எடுத்து, சிலிண்டரை மாற்றினாள். வயிற்றில் சொருகி இருந்த ட்யூபிலிருந்து வ்ழியும் சிறு நீரை அகற்றி புதிய கருவி பொறுத்தினாள். மற்ற பல கருவிகளையும் மாற்றிப் பொறுத்தினாள்.
சலனம் அற்றுக் கிடக்கும் சச்சிதானந்தமும் இழுத்த இழுப்பிற்க்கெல்லாம் வந்தார்.
இதைக் கண்ட பாக்கியலக்ஷ்மிக்கு நெஞ்சு கனத்த்து.

என்றோ ஒரு பௌர்ணமி நாளன்று, மொட்டை மாடியில் "உங்ளுக்கு முன்னாடி நான் போய் சேர்ந்திடணும்க, சுமங்கலியா" என்றவளிடம், "அடிப்பாவி, நீ போயிட்டா என்ன யாரு பாத்துப்பா" என்று புன்முறுவலுடன் கணவன் கூறியது நினைவுக்கு வர, கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. ஆறுதல் கூற யாரும் இல்லாமல் வெகு நேரம் அழுது விட்டாள் பாக்கியலக்ஷ்மி.

கணவர் அருகில் சென்று அவரின் அமைதியான முகத்தை கண்டாள். கணவரின் நெற்றியை வருடியபடி "இப்படி பண்ணிட்டியே ஆனந்தா. என் கூட இனி எப்ப பேசுவ. பாஸ்கரும், பார்வதியும் உனக்கு சரி ஆன உடனே வருவாங்க. சீக்கிரம் சரியாகணும்.." என்று முனகினாள்.

சற்று நேரம் வெறித்து கணவரை பார்த்த பாக்கியலக்ஷ்மி சச்சிதானந்தத்தின் மூக்கில் இருந்த ட்யூபை மெல்ல வெளியே எடுத்துப் போட்டாள்.

சச்சிதானந்தம் உடம்பு சலனம் இல்லாமல் முழுதும் அமைதியானது.

கணவனின் நெற்றிக்கு முத்தமிட்ட பாக்கியலக்ஷ்மியின் கண்களில் தாரை தாரயாக நீர் சுரந்தது.

ஆனால், அவள் முகத்தில் இப்பொழுது ஒரு தெளிவு தெரிந்தது.

------- முற்றும் ------- ------- ------- ------- ------

(மீள்பதிவு - குறும்படமாக்க முயற்சி நடக்கிரது. இதற்கு திரைக்கதை எழுதுவது எப்படி?)

Wednesday, January 05, 2011

உயிருக்கு ஊசலாடும் கப்பீஸ்

புது வருஷத்துல புதுசா எதையாவது செய்யலாம்னு வந்த விபரீதத் தோன்றலில், அருகில் இருந்த கடையில் ஒரு குட்டி கண்ணாடிக் குடுவையை வாங்கினேன். குடுவையில் கலர் கலர் மீன்கள் வச்சு வளத்துக்ப் பாக்கலாம்னு ஐடியா.
நாய் ரொம்பப் பிடிக்கும் எனக்கு. ஆனா, அதெல்லாம் வளக்கணும்னா பெரும்பாடு இங்கே. அதனால சுலப வழி யோசிச்சு மீனுக்கு மாறினேன்.

பக்கத்தில் இருக்கும் Pet-Coவில் குட்டி வகை மீன்களை வாங்க அடுத்த நடை. கோல்டு ஃபிஷ் வாங்கலாம்னா, அது ரொம்பப் பெருசா வளரும், நம்ம குடுவை தாங்காதுன்னு கடைக்காரர் சொன்னார். கப்பி (guppy) என்ற குட்டியூண்டு மீன்கள் இருக்கும் டாங்க்கை காட்டினார். அழகழகான கப்பீஸ், சிகப்பு, மஞ்சள், கறுப்பு, சாம்பல்னு பல களரில் அழகாய் சுண்டுவிரல் அளவில் துறு துறு என இருன்தன.

என் குடுவையில், மூணு மீன் வளக்கலாம்னு கடைக்காரர் சொன்னதால், சிகப்புக் களரில் ஒரு ஆணையும், இரண்டு பெண் மீன்களையும் புடிச்சு அதுக்கு வேண்டிய சாப்பாடு, தண்ணி சுத்திகரிக்கும் கெமிக்கல், குடுவையில் போட சில கலர் கற்கள், குட்டிச் செடி ஒண்ணு, எல்லாத்தையும் வாங்கி பில்லப் போட்டு வீட்டுக்கு வந்தாச்சு.

கலர் கற்களை கழுவி, குடுவையில் போட்டு, குழாயில் தண்ணியப் புடிச்சு, சுத்தீகரிக்கும் சொட்டு மருந்தை விட்டு, செடியை நட்டு ஒரு மணி நேரம் கழிச்சு, மீனிருக்கும் ப்ளாஸ்ட்டிக் பையை அப்படியே தொட்டியில் எடுத்து வைத்தேன். கொஞ்ச நேரம் இப்படி வச்சப்பரம், தொட்டித்தண்ணி ரூம் டெம்ப்ரேச்சருக்கு வந்தப்பரம்தான் மீனை ப்ளாஸ்ட்டிக் பையில் இருந்து எடுத்து விடணும்னு கடைக்காரர் சொன்னதை இம்மியளவும் பிசகாமல் செஞ்சு முடிச்சேன்.

புதுத்தொட்டியில் அறிவுரைப்படி தினசரி இருமுறை தத்துனூண்டு சாப்பாடும் போட்டேன்.
ஒரு நாள் நல்லாத்தான் போச்சு. ரெண்டாவது நாள், பெண் கப்பியில் ஒரு கப்பி நீந்தாம செடியின் இலை மேல் ஒக்காந்துக்கிட்டு பெருமூச்சு விட்டுக்கிட்டு இருந்தது. ஒரு வேளை காதல் தோல்வியோன்னு தோணிச்சு? மத்த ரெண்டும் ஜோடியா சுவய்ங்க்னு சுவய்ங்க்னு நீன்திக் கொண்டிருந்தபோது இது ரொம்வே சோகமா இருந்தது.

அடக்கொடுமையே, சந்தோஷமா ஃப்ரெண்ட்ஸோட petcoவில் நீந்திக்கிட்டு இருந்தத பாடா படுத்தி எடுத்தட்டமோன்னு ஒரு கலக்கம் வந்துடுச்சு.

மீன் வளக்கரதுக்கு, எல்லா வித விவரங்களும் இணையத்தில் பெருகிக் கெடக்கு. மனுஷன வளக்கரதுக்குக் கூட அம்புட்டு விஷயம் இருக்கான்னு தெரியலை. சரின்னு, கூகிளாண்டவர் கிட்ட, 'guppy dying'னு தேடினா, பல ஆயிரம் ஹிட்டு தேறிச்சு.

புது வீட்டுக்கு வந்த டென்ஷன் சில மீனால் தாங்க முடியாதாம். நம்ம கப்பி, அநேகமா மரணத்தின் விளிம்பில் இருக்குங்கரது, பல இணையப் பக்கங்களிலிருந்து புரிந்தது. ஒரு சிலரின் ஆலோசனைப் படி, உயிருக்குப் போராடிய கப்பியை, தனியே எடுத்து இன்னொரு குட்டிப் பாத்திரத்தில் விட்டேன். அதிலும், அதே நிலையில் பெருமூச் விட்டப்படி அடியில் தங்கி விட்டது.

இன்னும் சிலர் இந்த மாதிரித் தருணங்களில், மரண வலியில் இருக்கும் மீனை எப்படி கருணைக் கொலை செய்வதுன்னு பக்கம் பக்கமா அறிவுரை தந்திருன்தாங்க. ரெண்டு இன்ச் கூட இல்லாத மீனுக்கு கருணைக் கொலையா? அதுவும் ஆயிரமாயிரம் பக்கங்களில் பலப் பேர் எழுதியிருந்தாங்க..

clove (கிராம்பு) எண்ணை கொஞ்சமா தொட்டியில் விடணுமாம், அப்பாலிக்கா மீன் மயங்கிய பின், vodka சரக்கு கொஞ்சமா ஊத்தணுமாம். வலியில்லாமல் உயிர் பிரிஞ்சிருமாம்.
டாய்லெட்டில் எடுத்துப் போட்டு ஃப்ளஷ் பண்ணவே கூடாதாம். மீனுக்கு ரொம்அ வலிக்குமாம்.
ப்ளாஸ்ட்டிக் பையில் போட்டு ஃப்ரீஸரில் வச்சுடலாம்னு சிலரும், அது கூடவே கூடாதுன்னு இன்னும் சிலரும் வாதாடியிருந்தார்கள்.
இன்னும் சிலர், அருகாமையில் இருக்கும் வெட்டினரி டாக்டர் கிட்ட எடுத்துக்கிட்டுப் போனா, அவரு, மீனின் ஸ்பைனல் கார்டில் ஒரு ஊசியால் குத்தி, உடனடி மரணம் கிட்ட வழி செய்வார்னு சொல்லியிருந்தாங்க.
ப்ராக்டிக்கல்லான ஒரு சிலர், மீனை எடுத்து கல்லால் நசக்னு ஒரு அடி தலைல அடிங்க, சுலபத்தில் முடியும்னு சொல்லியிருந்தாங்க.
ஒரு சில ரொம்ப நல்லவங்க, ஒன்னியும் பண்ணாதீங்க, அப்படியே விடுங்க, மீனுக்கு ப்ராப்தி இருந்தா, அதுக்கு ஒடம்பு சரியாகி துள்ளிக் குதிச்சு நீந்த ஆரம்பிச்சுடும். ப்ராப்தி இல்லீன்னா, அதன் நேரம் வந்ததும் அது தானாய் உயிர் துறந்து சொர்கத்துக்குச் செல்லும்னும் சொல்லியிருந்தாங்க.

இது அத்தனையும், சுண்டு விரல் அளவிலான கப்பி மீனுக்கு என்பதை நினைக்கும்போது மலைப்பா இருந்தது.
நானே கூட, மீன் குழம்பு ஃப்ரை எல்லாம் ரொம்ப விரும்பிச் சாப்பிடுவேன்.
ஒரு தயக்கமும் இல்லாமல், மார்க்கெட்டில் இருந்து கொண்டு வரும் மீனை, கசாப்பு போட்டு மஞ்சள் உப்பெல்லாம் போட்டு கழுவிக் கொடுக்கும் வீரப் ப்ரம்பரையை சேர்தவன். ஆனா, உயிரோட என்னை நம்பி வந்த மீன் இப்படி உயிருக்கு ஊசலாடுவது கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கு.

இன்னா பண்ணலாம்?

முதல் நாள் ஜாலியாக இருந்த மூன்று கப்பீஸ் இங்கே: :(

Tuesday, January 04, 2011

Bad News India

from the archives of BadNewsIndia.BlogSpot.com.

நாடும் நாட்டு மக்களும் அதன் தலைவர்களும்

துச்சாதனர்களால் தான் நல்வழி பிறக்கும்

ஜெய் ஸ்ரீராம்! உடைத்தெறிவோம் பாலத்தையும், சூட்சிகளையும்!

ஆதிமூலம், சென்னை - by, மரக்காணம் பாலா

REAL HEROES are BORN, not MADE

ஏமாற்றாதே, ஏமாற்றினாலும் ஏமாறாதே!

மரணத்துக்கு பயந்திடு, தயாராகு, திட்டமிடு, உடனே!

சாகரன் - அஞ்சலி

விளம்பரம்: தமிழ்மணம் - நம்மால் ஏன் முடியவில்லை!

அழகான விநாயகப் பெருமானும், வீண் விதண்டாவாதங்களும்...

லாட்டரி கோவிந்தன் ( தேன்கூடு போட்டிக்கு )

மனிதர்களா நாமெல்லாம்? தூ !!!

சுவரொட்டி அல(சி)ங்காரம் - தடுப்பது எப்படி? (part 2)

பெறுதர்க்கரியன் பெருமானே - இளையராஜாவின் தேனமுது!

கனம் - (தேன்கூடு-போட்டிக்கு)

ஊரைத் திருத்தலாம் வாங்க நண்பரே. ஒரு simple ஐடியா!

...மேல் விவரங்கள் அப்பாலிக்கா.