recent posts...

Tuesday, December 30, 2008

முன்னேற ஒரு வழி - 2009க்கு success formula

ஒரே பள்ளிக் கூடம், ஒரே காலேஜ், ஒரே மாதிரி வசதி வாழ்க்கை, ஒரே உணவுப் பழக்க வழக்கம்னு எல்லாமே ஒண்ணா இருந்தாலும், எல்லா பயலும் ஒரே மாதிரி வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை.

ஒருத்தன் நல்லா படிச்சு மார்க் வாங்கி, டக்னு நல்ல வேலைக்குப் போயி, படிப்படியா முன்னேறி எங்கேயோ போயிடுவான்,
இன்னொருத்தன் மந்தமா முன்னேறி சுமாரான வேலையில், வாழ்வில் ஒவ்வொரு நாளையும் நகர்த்த போராடுவான்.
இன்னும் சிலதுகள், சுத்தமா தேறாம, சீரழிஞ்சு போயிடுவாங்க.

( இத்தோட, இந்த பதிவை 'கிழிச்சு' எறிஞ்சு, வழக்கமான மொக்கைக்கு போயிடலாமான்னு ஆழ்ந்து யோசிச்சேன். ஆனா, ஒரு வருஷத்துக்கு ஒரு பதிவாவது, கொஞ்சமாவது ப்ரயோஜனமா, ஒருத்தரையாவது யோசிக்க வைக்கணும்னு முடிவு பண்ணி, உங்க தலை மேல பாரத்தை போட்டு தொடர்கிறேன். அனுபவிங்க. ரொம்ப ஆராயாதீங்க. ;) )

என் அறிவுக்கும் அனுபவத்துக்கும் எட்டிய அளவில், ஒவ்வொரு மனுஷனின் முன்னேற்றத்தையோ/சீர்கேட்டையோ நாலு விஷயங்கள் சம அளவில் தீர்மானிக்கின்றன.
அவையாவன
1) நம் உடம்பில் உள்ள மூதாதையாரின் 'ஜீன்ஸ்' ( நம் கட்டுப்பாட்டில் இல்லாதது ) - 25%
2) பள்ளி டு காலேஜ் இள வயது வளர்ப்பு முறை ( நம் பெற்றோர்/வளர்ப்போர் கட்டுப்பாட்டில் உள்ளது) - 25%
3) சுற்றமும், நட்பும், வாத்தியார்களும், சக ஊழியர்களும், சமூகமும் ( மத்தவங்க கட்டுப்பாட்டில் உள்ளது ) - 25%
4) சுய முயற்சி ( நம் கட்டுப்பாட்டில் உள்ளது ) - 25%

நாலுல எல்லாமே சிறப்பாய் பெற்றவன் ஆட்டோமேட்டிக்கா, எங்கியோ போயிருவான். அதுல எந்த சந்தேகமும் இல்லை.
நாலுல ஏதாச்சும் ஒண்ணு சரியாகக் கிட்டாதவன், மற்ற மூன்றின் ஏதாவது ஒன்று அளவுக்கு அதிகமாய் கிட்டினாலும், மேலே போயிடுவான்.

இதுல முதல் ஆப்ஷனான 'ஜீன்ஸ்' லூஸ்ல விட்டுடுவோம். யார் கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு விஷயம் அது. அதைப் பத்தி பேசியும் ஒரு ப்ரயோஜனமும் இல்லை. உங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, முப்பாட்டன், முப்பாட்டி(?) இவங்கெல்லாம் வாழ்க்கைல எந்த அளவுக்கு வெற்றி பெற்றவர்கள்னு நீங்க நெனைக்கறீங்களோ, அந்தளவுக்கு 25ல ஒரு மார்க் உங்களுக்கு நீங்களே போட்டுக்கங்க.
உதாரணத்துக்கு நீங்க பில்கேட்ஸின் பொண்ணா இருந்தா, 25க்கு 30 கூட போட்டுக்கலாம். (அப்படியே, அப்பாவ கேட்டதா சொல்லுங்க :) )
என்னை எடுத்துக்கிட்டா, எனக்கு 25க்கு ஒரு 20 போட்டுப்பேன்.

ரெண்டாவது, பள்ளி டு காலேஜ் வளர்ப்பு முறை. களிமண்ணைக் கூட அழகான சிலையாய் மாத்தர டெக்னிக் ஒரு படைப்பாளிக்குத் தெரிஞ்சிருக்கும். அதே மாதிரி, குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதன் மூலம், பெற்றோர்கள் அவர்கள் எதிர்காலத்துக்கு ஒரு பலமான அடித்தளம் அமைக்கிறார்கள். நல்லா வளக்கரதுன்னா, நல்ல சாப்பாடும், நல்ல துணியும், தீபாவளிக்கு பட்டாசும் வாங்கிக் கொடுப்பது மட்டுமல்ல.
குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கணும்.
அவங்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொடுக்கணும்.
அவர்களிடம் இருக்கும் சின்ன சின்ன மைனஸ் பாயிண்டுகளை கண்டறிந்து களைய வேண்டும்.
எனக்குத் தெரிஞ்சு 'தலைவனின்' குணங்கள், இளவயதிலேயே தீர்மானிக்கப் படுது.
ஸோ, ஒரு குழந்தை இந்த சமுதாயத்தில், பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும், முக்கிய பங்கு பெற்றோரிடம்/கார்டியனிடம் தான் இருக்கிறது.
என்னை எடுத்துக்கிட்டா, குறை ஒன்றுமில்லா, இளம் பருவம் என்னுது. மிகப் பெரிய வசதி வாழ்க்கை இல்லன்னாலும், middle class குடும்பத்தில், தேவையானது தேவையான நேரத்தில் உடனுக்குடன் கிடைத்தது. ஆனால், நான் மேலே சொன்ன, 'மைனஸ் பாயிண்டுகளை' களைதல் போன்ற, செப்பனிடும் முறையில் நான் வளர்க்கப் படவில்லை என்பதுபோல் தோன்றுகிறது.
உதாரணத்துக்கு, எனக்குள் இன்று வரை, இருக்கும் துளியூண்டு stranger anxietyயும், தத்துனூண்டு இருக்கும் introvertismம், சின்ன வயதிலேயே செப்பனிடப் பட்டிருக்க வேண்டிய விஷயங்கள்.
வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்தா, உள்ள ஓடிப் போய் ஒளிஞ்சுக்கிட்டு எதையாவது படிச்சுக்கிட்டு இருப்பேன். அப்பவே, தலைல ரெண்டு போட்டு இங்க வாடா, இவங்களுக்கு ஒரு வணக்கம் போடு, அந்தப் பையனோட பேசுன்னு புது மனுஷங்க கிட்ட எப்படி கலந்துரையாடரதுன்னு அடிச்சோ அடிக்காமலோ சொல்லிக் கொடுத்திருந்தா, நான் இன்னும் மெருகேறியிருப்பேனோன்னு தோணுது.
ஸோ, குழந்தையை வளர்ப்பவர்கள், நோட் த பாயிண்ட். :)
ரெண்டாவதுக்கு, 25ல ஒரு 18 போட்டுப்பேன்.

மூணாவது, என்னைப் பொறுத்தவரை ரொம்ப முக்கியமான பாயிண்ட்டு. முதல் ரெண்டில் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும், வாழ்க்கையில் ஃபர்ஸ்ட் கிளாஸில் இன்று வரை திடமாய் இருப்பதர்க்கு முக்கிய காரணம், சுற்றமும், நட்பும், சக ஊழியர்களும், சமூகமும். இவங்கெல்லாம் என்னா பண்ண முடியும்னு கேட்டீங்கன்னா, சட்னு தோணர ஒரே வார்த்தை 'ஊக்குவித்தல்'. அதாகப் பட்டது, motivation.
ஒண்ணும் இல்லாத சொத்தை மனுஷனை கூட, 'உன்னால் முடியும்னு' தெனமும் பத்து பேரு அவன் கிட்ட சொன்னா, அவனும் ஒரு நாள் சாதனையாளனாயிடுவான்.
நீங்க பெரியாள் ஆகறீங்களோ இல்லியோ, உங்க குழந்தைகளோ நண்பர்களோ சொந்தக்காரர்களோ பெரிய ஆள் ஆகணும்னா, கண்டிப்பா அவங்களை ஊக்குவிக்கணும், பாராட்டணும்.
என்னிடம், 'கலக்கர மச்சி'ன்னு ஒவ்வொரு தடவையும் என் நண்பர்கள் சொல்லும்போது, அட, இதை விட ஒரு படி மேல செய்யணும்னு உள்ளுக்குள்ள தோணும்.
பள்ளிக்காலங்களில் வெத்து வெட்டா இருந்த நானு, அதுக்கப்பரம், படிப்பில் ஓரளவுக்கு ஈர்ப்பு வந்ததுக்கும், கணிப்பொறி பயின்ற காலத்தில் அதன் மேல் பெருவாரியா ஈர்ப்பு வந்ததுக்கும், அதையே வாழ்வின் ஆதாரமாக பின்னாளில் மாற்றியதர்க்கும், இந்த 'கலக்கர மச்சி'தான் பெரிய அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
'கலக்கர மச்சி'ன்னு சொன்ன அனைவருக்கும் இந்நேரத்தில் ஒரு பெரிய சலாம் போட்டுக்கறேன். நன்றி மச்சீஸ். :)
ஸோ, மூணாவது ஆப்ஷனுக்கு, 25ல், 30 போட்டுப்பேன் எனக்கு.

நாலாவது ஆப்ஷனை பத்தி பெருசா சொல்ல ஒண்ணுமில்லை. சுய மூயற்சி எல்லாருக்கும் இருக்கணும், என்னதான் ஜீன்ஸ் இருந்தாலும், எப்படிதான் வளர்த்தாலும், எவ்ளவுதான் 'கலக்கரே மச்சி' சொன்னாலும், அடுத்த கட்டத்துக்கு நகரணும்னா, நீங்க உங்க சொந்த உழைப்பையும் கலந்தாதான் முடியும். அது, ராத்திரி முழிச்சிருந்த படிக்கரதா இருக்கலாம், இல்லைன்னா உங்க துறை சார்ந்த விஷயங்களை செய்யரதா இருக்கலாம்.
உழைப்பு மிக மிக அவசியம்.
என்ன, எடுத்துக்கிட்டா, நான் கொஞ்சம் சோம்பேரி. புது விஷயங்களைப் படிக்க நேரம் செலவிடுவது கிடையாது. unless the situation really really really warrants, நானா எந்த புதிய முயற்சியிலும் ஈடுபடுவது கிடையாது. இது ரொம்ப தப்பு.
நீங்க அப்படி இருக்காதீங்க.
இருப்பது ஒரு லைஃப், அடிச்சு ஆடுங்க.
Time is very precious, Killing time is a crimeனு எங்க நைனா அடிக்கடி சொல்வாரு. இன்னிக்கும் சொல்லிக்கிட்டு இருக்காரு. என் தலைக்குதான் ஏற மாட்டேங்குது ;)
ஸோ, 25க்கு எனக்கு ஒரு 18 மார்க் போட்டுப்பேன்.

கூட்டிக் கழிச்சுப் பாத்தா, 100க்கு 20+18+30+18 = 86% மார்க் வாங்கியிருக்கேன்.

நீங்க வாழ்க்கைல எந்த வயசுல எப்படி இருக்கீங்கரதப் பொறுத்த, உங்களுக்கு மார்க் போட்டுக்கிட்டு, எங்க கூட்ட முடியும்னு பாத்துக்கிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெற முயலுங்கள்.
என்னைப் பொறுத்தவரை, இனி வரும் நாட்களில், என் கையில் இருப்பது, நாலாவது ஆப்ஷன் மட்டுமே.

ஸோ, புதிய வருடத்தில், மீண்டும், புத்தகங்களை தூஸு தட்டி எடுப்பதும், சில நாட்களில் மூலையில் போட்ட கிட்டாரை திரும்ப எடுத்து பயில்வதும், மேடைப் பேச்சு பழகுவதும், நட்பு வட்டத்தை பெருக்குவது போன்ற சுயமுயற்சிகளில் ஈடுபட்டு, 86ஐ 90ஆக்க முயற்சி செய்யலாம்னு இருக்கேன்.

சுயமுயற்சிக்கு ஒரு டிப்ஸை சொல்லித்தந்துட்டு இந்த பதிவை நிறைவு செய்கிறேன். (ரொம்பவே இழுத்துட்டேன்).

நம்முள் இருக்கும் ஒரு பெரிய negative energy, நாம் மற்றவர்களிடம் எதையாவது குறை சொல்லி புலம்பும்போது (complaining and whining) ஏற்படுகிறதாம்.
ஸோ, முடிந்தவரை, புது வருடத்தில், புலம்பலை தவிருங்கள்.

ஏதொ ஒரு மெடிடேஷன் வகுப்பில் ஒரு வித்தை சொல்லித் தந்தாங்களாம்.
அதாகப்பட்டது, உங்க வலது, கையில் ஒரு மோதிரமோ, வளையலோ போட்டுக்கணும்.
இனி, புலம்ப் மாட்டேன், எல்லாத்தையும் பாஸிட்டிவ்வா அணுகுவேன்னு நமக்குள்ளேயே ஒரு சபதம் போட்டுக்கணும்.
எப்பெல்லாம், சபதத்தை மீறி புலம்பறீங்களோ, அப்பெல்லாம், வளையலையோ மோதிரத்தையோ வலது கையிலிருந்து இடது கைக்கு மாத்திக்கணும்.

தொடர்ந்து, 21 நாள் உங்க மோதிரம்/வளையல், ஒரே கையில் இருக்கும் வரை இந்த முறையை செய்யணும்.

21ஆம் நாள், நீங்க ஒரு புது மனுஷனா மாறியிருப்பீங்க.

( இந்த செய்முறைக்கு, '©சர்வேசன்ஸ் பாஸிட்டிவ் திங்கிங்னு' பேரு. :) )

கண்டிப்பா முயற்சி செய்யுங்கள்.

அனைவருக்கும், என் உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்க்கை மேன்மேலும் சிறக்க என் ப்ரார்த்தனைகள்.

நாமும், நம் சுற்றமும், நம் சமூகமூம், நம் நாடும், நம் அண்டை நாடுகளும், சுபிட்சம் பெறவும், ப்ரார்த்தனைகள்.

உங்களால் சகலமும் முடியும்!

Happy New Year!

Monday, December 29, 2008

கஜினி (இந்தி) - திரைப் பார்வை

கஜினி 2005ல், தமிழில் பெருவாரியாக வெற்றி பெற்ற படம். சூர்யாவின் அசத்தல் நடிப்பும், ஹாரிஸின் பாடல்களும் படத்துக்கு பயங்கரமான கெட்டப் கொடுத்திருந்தது.
என்னமோ தெரியல, என்ன மாயமோ புரியல்ல நான், தமிழில் இந்தப் படத்தை போன வாரம் வரைக்கும் பாக்கவே இல்லை.
கண்ட காளையெல்லாம் பாத்து புளகாங்கிதம் அடைந்த எனக்கு, கஜினி பார்க்கும் வாய்ப்பு அமையவே இல்லை.

அதுவும் ஒரு விதத்தில் நல்லதாவே போச்சு. அதே படத்தை, அச்சு அசலா, இந்தியில் அமீர்கானுடன் இணைந்து கொடுத்திருக்காரு, கஜினியின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.

அச்சு அசல்னு எனக்கு எப்படித் தெரியும்? நாந்தான் தமிழ்ல வந்த படத்தை பாக்கலையேன்னு கேக்கறீங்களா? பாத்துட்டனே, இந்தியில் படத்தை பாத்ததும், தமிழில் பாத்தே ஆகணும்னு தேடிப் பிடிச்சு பாத்துட்டேன்.

தமிழுக்கும் இந்திக்கும் இரண்டு வித்யாசங்கள் தான்.

1) தமிழில் சூர்யா. இந்தியில் அமீர்கான்.
2) தமிழில் க்ளைமாக்ஸ் சொதப்பல். இந்தியில் டாப்-டக்கர்.

ஒற்றுமைகள் ஏராளம்.

1) காட்சிக்கு காட்சி அப்படியே அச்சு அசலா திரும்ப எடுத்திருக்காரு. படத்தின் துணை நடிகர்கள் முதல், வில்லன், ஹீரோயின் வரை எல்லாரும் கிட்டத்தட்ட அப்படியே இருக்காங்க. அவங்க போட்டிருந்த உடையும் அதுவேதானான்னு நான் கவனிக்கலை. பேசாம, தமிழ் படத்தை எடுத்து, சூர்யா தலைக்கு பதிலா அமீர்கான் தலையை கிராஃபிக்ஸில் பொறுத்தி, க்ளைமாக்ஸ் மட்டும் ஒரு வாரத்தில் ரீ-ஷூட் பண்ணீ, இந்தியில் டப் பண்ணியிருக்கலாம். ரெண்டு வருஷம் எடுத்த படம், ரெண்டு வாரத்துல முடிஞ்சிருக்கும்.

2) தமிழில் ஹாரிஸின் துள்ளல் இசை அமக்களமா இருந்துச்சு. ஹிந்தியில் ஏ.ஆர்.ரஹ்மானும் பின்னி பெடலெடுத்திருக்காரு. குறிப்பா கேசே முஜே பாட்டும், பேக்கா பாட்டும், மேரீ அதூரி பாட்டும்.
எனக்கு இதுவரைக்கும் ரஹ்மான் பாட்டு முதல் முறை கேட்டதும் பிடிச்சதே இல்லை. ஜென்டில்மேனில் வந்த சிக்கு புக்கு ரயிலே ஃபர்ஸ்ட் டைம் கேட்டதும், என்னடா இது சிக்கு புக்குன்னு பொலம்பிக்கிட்டு இருந்தேன். கொஞ்சம் முறை கேட்டதும் தான், ரஹ்மான் பாட்டின் மேல் அடிக்ஷன் வரும்.
ஆனா, இந்தப் படத்தில், மூணு பாட்டு முதல் முறை கேட்கும்போதே துள்ளலா இருந்தது.

பின்னணி இசையும் ரெண்டு படத்துலேயும் அமக்களமா இருந்தது. தியேட்டரில் பாத்ததால் இருக்கலாம், இந்தியில் ரஹ்மான், மிரட்டியிருக்காரு. பல திக்-திக் சீன்களுக்கு, ஹாலிவுட்டை மிஞ்சும் அளவுக்கு, இசைக் கோர்வை இருக்கு. சீட்டின் நுனிக்கே கொண்டு வந்துடறாங்க. hats off Rahman!

3) சூர்யாவும் பின்னியிருக்காரு. அமீர்கானும் பின்னியிருக்காரு. ஃப்ளேஷ்பேக் காட்சிகளில், சூர்யாவின் வசீகரம், அமீர்கானிடம் இல்லை. அதே சமயம், மொட்டை அடித்து six packs கொண்டு மிரட்டும் அமீர்கானின் நடிப்பில் இருந்த மிரட்டல், சூர்யாவை விட தத்துனூண்டு ஜாஸ்தியா இருந்தது.

4) இந்தியில் ரவி.கே.சந்திரனின் கேமராவில் எனக்கு 'புதிதாய்' ஒன்றும் பெருசா தெரியவில்லை. தமிழில் R.D.ராஜசேகரின் கேமரா கொடுத்திருந்த, அதே ஏங்கிள், அதே டெக்னிக் அப்படியே இந்தியிலும் இருந்தது. இப்படி எடுக்கரதுக்கு எதுக்கு ரவி.கே.சந்திரன்னு எனக்கு புரியல்ல.

5) அசீன் - சான்ஸே இல்லை. அறிமுகப் பாட்டு மட்டும் எரிச்சல். மத்த காட்சிகளிலெல்லாம் அமக்களமா அசத்தியிருக்காங்க. தமிழை விட, இந்தியில் நல்லா அசத்தியிருக்காங்க. அந்த பப்ளீ வேடத்துக்கு சரியா பொறுந்தியிருக்காங்க. ( தசாவதாரம் ட்ரெயினிங்கினால் கூடிய மெருகான்னு தெரியல்ல ;) )

நயன்தாரா நடித்திருந்த வேடத்தில், ஜியா கான் நடிச்சிருந்தாங்க. ஜியாவை பாத்துட்டு, நயன்தாராவை பார்த்தால், நயனின் நடிப்பு சகிக்கலை.

தமிழில் இருந்த சில அபத்தங்களை, அமீர் கூட்டணி சரி செஞ்சிருக்கு. கீழே நான் நோட்டீஸ் பண்ண சில.
* தமிழில் அசீனின் அறிமுகப் பாட்டு, முந்தைய பிந்தைய காட்சியோடு ஒட்டாமல், 'பிட்டு' பாட்டு மாதிரி திடீர்னு வந்து திடீர்னு போகும். இந்தியில் பாட்டின் முடிவில், அசீன் கனவு காண்ற மாதிரி ஒரு சீன் சேத்திருக்காங்க.
* தமிழில் கஜினின்னு ஏன் பேர் வச்சிருக்காங்கன்னு தெளிவா இல்லை. இந்தியில், வில்லனின் பெயரை கஜினியாக்கியது நல்லா இருந்தது.
* தமிழில் வில்லனை டபுள் ஆக்க்ஷனாக்கி மழையுடன் கூடிய சண்டைக் காட்சியில் அடிச்சு கொல்றது. இந்தியில், டபுள் ஆக்ஷன் இல்லாமல், நீட்டான க்ளைமாக்ஸ் காட்சிகள்.
* சூர்யாவுக்கும் அசினிக்கும் இடையே நடக்கும் ஒரு அருமையான பாசக் காட்சியில், தமிழில் ஒரு அழகான பாட்டு வைக்காதது பயங்கர மைனஸ். அதே இடத்தில், இந்தியில் ரஹ்மான் பட்டைய கிளப்பிட்டாரு. Very touching sequence இது.

இப்படியாக, ரொம்ப நாளைக்கப்பரம், மனசுக்கு நிறைவான ஒரு பட்ம் பார்த்தது திருப்திகரமா இருக்கு.

படத்தின் ஒரே குறை, படத்தின் முக்கால் வாசி கரு, Mementoவில் இருந்து உருவியும், அதற்கான ஒரு 'inspired by' கூட டைட்டிலில் போடாதது.

பாலிவுட் படங்கள் எல்லாம், இப்போ இங்கே அனைவராலும் விரும்பிப் பார்த்து அலசப் படும்போது, இனி வரும் காலங்களில், உஷாரா இருக்கணும் முருகதாஸ் சாரே ;)கஜினி - கண்டிப்பா பார்க்கக் கூடிய படம்.

Monday, December 22, 2008

இளையராஜா - ஐ ஆம் வெரி சாரி!கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி இளையராஜாவை காணவில்லைன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன்.

சமீப காலமாய் ராஜா சார் கிட்டேருந்து பழைய கெத்துடன் ஒரு பாடலும் வராத ஏக்கம்/எரிச்சலில் போடப்பட்ட பொலம்பல் பதிவு அது.

ஆனா, ஒவ்வொரு நாளும், ராஜாவின் பழைய பாட்டை கேக்கும்போதெல்லாம், ஒரு குற்ற உணர்வு உள்ளுக்குள்ள குருகுருத்துக்கொண்டே இருக்கும்.

ஆயிரம் இருந்தாலும், ராஜா நம்ம ராஜா இல்லியா? இப்ப கொஞ்ச காலமா, பெரிய ஹிட்ஸ் தராததால், அவ்ளோ பெரிய மேதையை நையாண்டி செய்வது தப்பு.

சாதாரணமான ஆளா அவரு? சாதாரண குடும்பத்தில் பிறந்து, வெறும் உழைப்பையும் திறமையை மட்டுமே, அடித்தளமாக கொண்டு வானளவுக்கு உயர்ந்தவர் நம் ராஜா.

இசையால் நம் வாழ்வின் பல தருணங்களில் ஒரு இனிமையை வழங்கியவர் நம் ராஜா.

ஒண்ணா? ரெண்டா? பட்டியிலட முடியுமா இவரின் சூப்பர் பாடல்களை?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், உன்னிகிருஷ்ணன், ராஜாவின் பாடல்களைப் பற்றி பேசும் போது புல்லரித்துப் போனது.
ஒரு பாட்டை பாடும்ப்போது, அந்த பாடலின் இடையில் வரும் வாத்தியங்களின் இசையையும் நம்மை பாட வைக்கும் அளவுக்கு, நமக்குள் ஒன்றரக் கலந்த பாடல்கள் நம்ம ராஜாவினுடையது என்றார்.
உதாரணத்துக்கு, மூன்றாம் பிறையில் வரும்,
பூங்காற்று - புதிதானது,
புதுவாழ்வு - சதிராடுது,
பாட்டுல, ஒவ்வொரு வரிக்கு அப்பரம் வரும், "டடட்டா டண்'னு வரும் கிட்டாரை பாடிக் காணிபித்தார்.

பாடகருக்கேத்த பாடலும், பாடலுக்கேத்த இசையும் கலந்து நம்மை பரவசப் படுத்திய பாடல்கள் எண்ணிலடங்கா.

எனக்கு, இன்னிக்கும், 'கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று' பாட்டு கேட்டா, கண்ணுல தண்ணி வந்துடும்.

'ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது' கேட்டா, உடம்புக்குள் குபீர்னு ஒரு இனம் புரியா இனிமை பரவும்.

இவரின் பின்னணி இசை பத்தி சொல்ல வேண்டியதில்லை. மௌன ராகம் bgm கேட்டிருக்கீங்கல்ல? சும்மா அதிரலை?

இவ்ளோ நாளா எனக்குள் இருந்த குற்ற உணர்வின் குருகுரு, நேத்து பொங்கி எழுந்து வெடிச்சு சிதறிடுச்சு.

காஃபி வித் அனு நிகழ்ச்சியில் பி.வாசு வந்திருந்தார். இளையராஜாவைப் பற்றி பேசுகையில் அவர் சொன்ன விஷயம் இது.

சின்னத்தம்பி படத்துக்கு பின்னணி இசை போடும்போது, படத்தின் ஒரு முக்கியமான காட்சியில், குஷ்புவை விரட்டிப் பிடித்து அவரின் தாலியை கழற்றி எறிவாங்களாம் வில்லன்ஸ். துரத்தும் காட்சியில் எல்லாம், அதிரடி இசைக் கோர்வையாம்.
தூக்கி எறியப்பட்ட தாலியின் க்ளோஸப் காட்சியில், அதிரடி இசையெல்லாம், டக்னு முடிஞ்சு சைலண்ட்டாயிடுமாம். அந்த காட்சிக்கு எந்த இசையும் சேர்க்காமல், அமைதியா விட்டுட்டாராம் ராஜா.
வாசுவும், ராஜாகிட்ட, ஐயா இது ரொம்ப முக்கியமான சீன், இங்க ஏதாவது அழுத்தமா ஒரு இசையை சேருங்கன்னு கேட்டதுக்கு, அதெல்லாம் தேவையில்லை, இப்படியே ரிலீஸ் பண்ணுன்னு சொல்லிட்டுப் போயிட்டாராம்.

வாசுவும், வேர வழியில்லாம, அரை மனசுடன், படத்தை ரிலீஸ் பண்ணாராம்.

படத்தை தியேட்டரில் பார்க்கச் சென்றாராம் வாசு.
இந்தக் காட்சி வந்ததும், தியேட்டரே அமைதியாயிடுச்சாம்.
தாலியை பார்த்ததும், பொதுமக்கள், குஷ்புவின் மேல் பரிதாபப்பட்டு உச்சு கொட்டினார்களாம்.
அமைதியான அந்த சீனில், பொதுமக்களின், 'உச்சு' சப்தம்தான் பெரிய பலம். இதுதான், படத்தை தூக்கி நிறுத்தும்னு ராஜாவுக்கு முன்னமே தெரிந்திருந்ததாம்.

ஹ்ம். ராஜா ராஜாதான்.

ராஜா சார், பழைய நையாண்டி பதிவுக்கு, ஐ ஆம் வெரி வெரி வெரி வெரி வெரி சாரி!
மன்னிச்சுடுங்கோ!

ராஜாவை, அன்று போல் என்றுமே, ராஜாவாகப் பார்ப்போம்.

விரைவில் பொங்கி எழுவார், பழைய படி ஒரு மகத்தான ஹிட் தருவார், என்று தாகத்துடன் காத்திருக்கும்,

-சர்வேசன்

பி.கு: மகத்தான் ஹிட் தரலன்னாலும் கூட பரவால்ல. ராஜா எப்பவும் நீ ராஜா!!!

Sunday, December 21, 2008

Crusade succeeds? இராக்கியர்களுக்கு ஹாப்பி க்ருஸ்மஸ்!

முதலில் crusadeனா என்னான்னு தெரிஞ்சுக்கங்க.

Crusade: Any of the military expeditions undertaken by European Christians in the 11th, 12th, and 13th centuries to recover the Holy Land from the Muslims.

புஷ், இராக்கின் மீது போர் தொடுத்தபின், ஏதோ ஒரு பேட்டியில், இராக் போரை ஒரு crusade என்று வாய் தவறி உளறியதாக படித்த ஞாபகம். அதை அப்பாலிக்கா டபாய்ச்சு மழுப்பினதும் நடந்தது.

ஆனா, இன்று CNNல் கீழே உள்ள செய்தி பார்த்ததும், புஷ் ஒரு சாதனையாளர் என்பதுதான் மனதில் தோன்றி மறைந்த நிஜம். ;)

உள்ளூரிலும், வெளியூரிலும், தீவிரமா மதப்பிரச்சாரம் செய்து, ஆட்களை மதம் மாற்றி, எல்லாரையும் கிருத்துவன் ஆக்கும் க்ரூஸேடால் யாருக்கு என்ன பயன் என்பதுதான் எனக்கு இன்றுவரை புரியாத புதிரா இருக்கு.

யாரை திருப்தி படுத்த நடக்கும் கோமாளித்தனம் இது?

யாராவது தெளிவு படுத்தினா தன்யனாவேன்.

CNN: Baghdad celebrates first public Christmas amid hope, memories

pic source: http://www.cnn.com/2008/WORLD/meast/12/21/iraq.christmas/index.html

எல்லாருக்கும் ஹாப்பி க்ரிஸ்மஸ்!

யாராச்சும் ஒரு பிரியாணி பார்சல் அனுப்பினா நல்லாருக்கும் ;)

Thursday, December 18, 2008

திரட்டி அரசியல் - ரேஸ் ஆரம்பம்

அண்ணனுக்கு அண்ணன், பதிவுலகக் கண்ணன், கருத்து கந்தசாமி என்று பலராலும் 'அன்புடன்' அழைக்கப்படும் கோவி கண்ணனின், திரட்டிகள் ரேஸ்... யாருக்கு முதலிடம்! என்ற பதிவை படிச்சிருப்ப்பீங்க.

அவரு என்னா சொல்றாருன்னா,
"பதிவர்களால் பாராட்டி பேசப்படும் திரட்டியே முதலிடத்திற்கு வரும் - ©கோவி கண்ணன்.

மெய்தானே?

ஃபான்ஸ் இருந்தாதானே சூப்பர் ஸ்டாராக முடியும்?

நீங்க எந்த திரட்டிக்கு ஃபானு?

யோசிச்சுக் குத்துங்க.

சிறந்த பதிவு போட்டிகள் அவங்க நடத்தட்டும், சிறந்த திரட்டி போட்டியை நான் நடத்திட்டுப் போறேன் ;)


சர்வே கொம்பேனியாருக்கு உதவ நினைப்பவர்கள், சர்வே பொட்டியை உங்க பதிவில் போட்டு விளம்பரப் படுத்தலாம் ;)pic source: http://pcweenies.blogspot.com/2007/08/el-aggregator.html

வெற்றி பெறும் திரட்டியின் பெயரில், ரூ.101 எங்க ஊரு உண்டியலில் காணிக்கையாக போடப்படும் ;)

ஸ்டார்ட் மீஜிக்!

ஹாப்பி வெள்ளி!

Sunday, December 14, 2008

புஷ் - ஸீரோ டு ஹீரோ?

அமெரிக்கா ரொம்ப நல்ல ஊருண்ணேன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். இங்க நடந்து முடிஞ்ச தேர்தலைப் பத்தியும் மத்த நல்ல விஷயங்களைப் பத்தியும் குட்டியா ஒரு பதிவு அது.

அதுல, நம்ம டாக்டர் VSK, புஷ் ரொம்ப நல்லவரு, அவரோட அதிரடி நடவடிக்கைகளால் தான், 9/11க்கு பிறகு, அமெரிக்காவில் மற்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கப்பட்டதுங்கர ரீதியில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாரு.

புஷ் இங்கிருக்கும் ஊடகங்களால் ஒரு கோமாளியாக சித்தரிக்கப்படுபவர். எனக்கு அவரு மேல பெரிய அபிப்ராயம் எல்லாம் இருந்ததில்லை.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக, ஒரூ நாட்டின் மேல் தேவை இல்லாமல் போரிட்டு, பல லட்சம் சாமான்யர்களை கொன்று குவித்த கொழுப்பெடுத்தவர் என்பது போல்தான் என் அபிப்ராயம்.

உங்களில் பலருக்கும் அப்படிதான் இருந்திருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

ஆனா, டாக்டர் சார் மாதிரி, புஷ்ஷுக்கு ஆதரவு தரவங்களும் இருப்பீங்கங்கரதுல சந்தேகமில்லை.

ஆனா பாரூங்க, புஷ், மிக மிக மிக தைரியமா, பாக்தாத்துக்கு போயிட்டு வந்திருக்காரு, பை பை சொல்ல.
அங்கே ஒரு எகிப்து நிருபர், ஷூவை கழற்றி அடித்ததும், டகால்னு குநிஞ்சு சூப்பர் எஸ்கேப் ஆகியிருக்காரு.
இந்த வயசிலும், இந்த அலார்ட்டா இருப்பது, ஆச்சரியம்.
இந்த சம்பவம் முடிந்ததும், அவரின் வழக்கமான, ஹாஸ்யம் கலந்த, பேட்டியும் சூப்பர்.

என்ன எரிச்சல் இருந்தாலும், இந்தச் சம்பவத்தைப் பார்த்த பின், அவரு ஒரு 'ஹீரோ' மாதிரி மாறிட்டாரோ?

உங்களுக்கு புஷ் பிடிக்குமா? வாக்குங்க!
( புஷ்ஷின் farewell partyக்கு முன் வாக்கின் முடிவுகள் கிடைக்கவேண்டும். அமெரிக்காவே இதை ரொம்ப எதிர்பாக்குது. யோசிச்சு உடனே வாக்குங்க ;) )
Thursday, December 11, 2008

Confession statement of a terrorist

ஹ்ம்.

ப்ளான் பண்ணி, சாமான்யர்களை சாகடிப்பதையே தொழிலாய் செய்யும் ஒரு கும்பல், இன்னும் விட்டு வைக்கப்பட்டுள்ளது, மிகவும் வேதனையான உண்மை.

ஏழ்மையின் ஆழத்தில் வாடும் இளைஞர்கள் உள்ளவரை, இதையெல்லாம் முழுசா தடுக்கமுடியாது என்பதும், வேதனையான உண்மை.

Pls read, terrorist Kasabs (mumbai terror) confession.

http://www.rediff.com/news/2008/dec/11mumterror-confession-of-caught-terrorist-mumbai.htm

ஒட்டுமொத்தமாய் தூக்கில் ஏத்தணும் இந்த LeTஐ.

God Job Mumbai Crime branch, Intelligence Bureau, RAW, Mumbai ATS, FBI and the state police!!!

இனி, உடனுக்குடன் ஆப்படிப்போம்!

Sunday, December 07, 2008

குதிரை ரேஸ் படங்கள்...

மைதானத்தில் காத்திருக்கும் ஜூதாட்ட ரசிகைகள். ஜூதாடி ஜூதாடி குடும்பம் தொலைத்த மகான்கள் எல்லாம் நினைவுக்கு வந்ததால், ஜூதாடப் போகலை நானு. வெறும், படம் புடிக்க. Berkeley பக்கத்துல இருந்தீங்கன்னா, Golden Gate Fieldsல் ஞாயிறு அன்று $1க்கு ரேஸ் காட்டராங்க. போய் கட்டுங்க.
பந்தய மைதானம்:
இவா ஊதினாதான் அவா வருவா:
இத்த வச்சுதான் மைதானத்த சமன் பண்றாங்க. அப்படியே நாத்த நட்டாங்கன்னா, அரிசி வெலையாவது கொறையும். :)
குதிரைகள் வரிசையில் நிக்க வைக்க உதவும், "கேட்". ரேஸ் ஆரம்பிச்சதும், டக்குனு இத்த, ட்ரக்கு வச்சு இச்துக்கினு வெளீல போயிடறாங்க.
இவங்கதான் விஜயசாந்தி கணக்கா, ரேஸை 'மேற்பார்வை' பாத்தவங்க. இவங்க குதிரை ஒரு தடவ ரொம்ப்ப டென்ஷனாயிடுச்சு, ஆனாலும், அத்த, அசால்ட்டா அடக்குனாங்க.


பந்தயம் ஆரம்பம். டுமீல்னு சுடுவாங்கன்னு காத்திருந்தா, சத்தமே இல்லாம, குதிரை எல்லாம் ஓட ஆரம்பிச்சிடுச்சு.


ஏழுதான் கெலிச்சுது. க்ளிக்கி பெருச்சா பாருங்க.

ஆனா, பாவம், கடைசி சில விநாடிகள், குதிரைக்கு சொடீர் சொடீர்னு செம அடி. மேனகா காந்திக்கு, வீடியோ அனுப்பணும் :(பந்தயம் பாத்துட்டு, Berkeleyல் உள்ள Tilden Parkக்கு போயி அங்க இருக்கர நீராவி குட்டி ரயிலில் போன போது திரும்பிப் பார்த்த பாப்பா. (வந்துட்டானுங்கய்யா, எங்க போனாலும், காமராவ கழுத்துல மாட்டிக்கிட்டு)பி.கு: Flickrலும் பாக்கலாம்.

Thursday, December 04, 2008

Good News: How RTI helped Pallavaram

இத்த படிங்க:

http://timesofindia.indiatimes.com/Cities/Chennai/RTI_brings_water_to_14_houses_in_Pallavaram_after_a_year-long_wait/articleshow/3790159.cms

நேத்து சொன்னதுதான் இதுக்கும் பொருந்துது::
நாம் அனைவரும், நம் மனதில், ஆணி அடித்து, ஃப்ரேம் போட்டு மாட்டிக் கொள்ள வேண்டிய வாக்கியங்கள் இவைதான்:

..will show the rest of the country what committed citizens can do if they only step out of their comfort zone...

Well done, RTI activist, K Pitchandi, convenor of Fifth Pillar India, a voluntary organisation fighting against corruption.

Wednesday, December 03, 2008

Quit India 2008 - Go MUMBAI Go!

இந்தியாவில், மும்பையில் மட்டுமே இது சாத்தியப்படும்.
அடிமேல் அடிமேல் வாங்கினாலும், ஃபினிக்ஸ் பறவை மாதிரி, தூசு தட்டி, இன்னும் பல மடங்கு சக்தியுடன், அதிர்ந்தெழுகிறது மும்பை.

God forbid, சென்னையிலோ, மற்ற நகரங்களிலோ, இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடந்தால், இந்த ஒரு ஒற்றுமையும், மக்களின் பங்களிப்பையும் கண்டிப்பா பார்க்கமுடியாது.
சமீபத்தில் நடந்த, இலங்கைப் ப்ரச்சனைக்கான, மனிதச் சங்கிலியின் போது கூட, 'மழைடா மச்சி, அதான் போவல' வகையராக்கள் தான், நம்மூரில் மிகுதி.
மேக்ஸிமம், பேப்பரிலும், டிவியிலும் விஷயத்தைத் தெரிந்து கொண்டு, உச்சு கொட்டி, யாரையாவது திட்டிட்டு, ஜாலியாயிடுவோம்.

ஆனால், மும்பையில், ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகும், மக்கள்,மனிதச் சங்கிலிகளையும், மௌன ஊர்வலங்களையும், உருவாக்கி, தங்களை தாக்கும் தீவிரவாதத்தை, தாங்கள் கொசுவைப் போல் கருதுவதை வெளிப்படையாக நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள்.

இம்முறையும், தங்கள் ஒருமைப்பாட்டையும், தீவிரவாதத்தின் மேல் உள்ள வெறுப்பையும், அரசாங்கத்தின் கையாலாகத்தனத்தையும், மும்பை வாசிகள் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.
வேலை நேரம் முடிந்ததும், மாலை 6 மணி அளவில், மும்பை gateway of Indiaவுக்கு அருகே, சுமார் 5000 பேர் ஒன்று கூடி, மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

rediffல் saisuresh sivaswamy எழுதியுள்ள கட்டுரையில், இந்த நிகழ்வை,Quit India, Mumbai says againனு, நச்னு எழுதியிருக்காரு.

அவர் எழுதியுள்ள செய்தியிலிருந்து ஒரு அழகான பகுதி:
* Today was the beginning; a humble beginning if you want to call it that, but one that will rock the foundations of many hard-held beliefs, one that will show the rest of the country what committed citizens can do if they only step out of their comfort zone.

Hinduவில் இது தொடர்பாக வந்த செய்தியிலியிருந்து சில பத்திகள்:

* Instead of taking the train home we all came here. We have to show our support and we have to protest. We must not sit back and take this drivel by politicians,” said Mukesh Mehta, an accountant with a firm in the Fort area.

* I got into the crowd and as we began to walk I felt a great sense of nationalism. We are a democracy. Our so called leaders have to listen to us. We have to protest this terrible act on humankind,” said Usha Sathe, a housewife from Dadar.

* I have come on work from Delhi, but I thought I had to do my bit for my country when such a terrible tragedy hits us. Participating in this is my contribution. It is a way of us showing our anger but in a peaceful way,” said Ajay Ahuja, a lawyer.

* Terrorism has no religion. People should unite in the fight against terror,” said Sandeep Mishra, an engineer, at Jantar Mantar in Delhi.

Hinduல் வந்த இந்த செய்தியைப் பாருங்கள். போலீஸ் காரர்கள் வெறும் லட்டியைக் கொண்டு, ஒரு தீவிரவாதியை உயிருடன் பிடித்த கதை.

* “This is the first time in world history that a terrorist has been captured alive,” claimed Sawant.“இதில் உயிர்நீத்த assistant police inspector Tukaram Gopal Ombale, போன்றவர்களை நினைத்தால், என்னுள் எழும் உணர்சிகளை, விவரிக்க வார்த்தை கிட்டவில்லை.
இந்த மாதிரி போலீஸ்காரங்க இருக்கரவைக்கும், மும்பைவாசிகளெல்லாம், எந்த சொறிநாய்க்கும் பயப்பட வேண்டியதில்லை.

இதில் நாம் அனைவரும், நம் மனதில், ஆணி அடித்து, ஃப்ரேம் போட்டு மாட்டிக் கொள்ள வேண்டிய வாக்கியங்கள் இவைதான்:
..will show the rest of the country what committed citizens can do if they only step out of their comfort zone...

நண்பர்களே, உள்ளுக்குள்ள, கொஞ்சமாவது 'தீ'யை எரிய விட்டுக்கிட்டே இருங்க.

I am not exaggerating.. if we continue like this, in a few more years, we will be left with a chaotic community!

வீதியில் இறங்கினால்தான், விடிவு பிறக்கும்!!!

Tuesday, December 02, 2008

சோனியா 'காந்தி'யை புறக்கணிங்கோ மக்கா!

மொதல்ல இத்த படிங்க (Sonia’s presence in Delhi is costing India dearly ) . interesting read.

ஏன், சோனியா, நம்ம நாட்டுக்கு கேடுன்னு சொல்லிருக்காங்க.
ஆனா, ரொம்ப அழுத்தமான சாட்சிகளும், காரணங்களும் சொல்லப்படவில்லை.

ஒண்ணு மட்டும் ( என் பார்வையில் ) நிச்சயம்.

காங்கிரஸ் கட்சி, நம் நாட்டுக்கு பெருத்த சாபக்கேடு. ஆரம்ப காலங்களில் இருந்த ஒரு சில, தேச நலன் கருதிய, தலைகள் போன பிறகு, பல கிழடுகளும் சேர்ந்து கொண்டு, நாட்டை ஆட்டிப்படைப்பதும், நம்மை ஆண்டி ஆக்குவதும் 61 வருடங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

வேலை செய்யத் தெரிந்தவனையும் செய்ய விடாமல் மறிப்பதும், அடுத்தவன் காலை வாரி விடுவதும், அரசியலை கழுதை வியாபாரம் ஆக்கியதும், நம் நாட்டுக்கு சொல்லித் தந்த சிறப்பு, காங்கிரஸையே சேரும்.

வரும் தேர்தலில் காங்கிரஸை புறக்கணிப்போம்! அந்த கட்சி உடைந்து, உருத்தெரியாமல் போனால்தான், இந்தியா உறுப்படும்.
உடனே உறுப்படுதோ இல்லியோ, அட்லீஸ்ட், அதுதான் முதல்படி.
'காந்தி' பேரை களவாண்டு வச்சுக்கிட்டு, இவங்க பண்ற அலம்பு தாங்க முடியல்ல.

திடீர்-தாக்குதல்களை எல்லாம், எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாதுதான். ஆனால், ஏதோ ஒரு அசம்பாவிதம், நடக்கப் போவுதுன்னு, பல தகவல்கள் பல தரப்பிலிருந்து சொல்லப்பட்டும், அதை தடுத்து நிறுத்தமுடியாத அளவுக்கு, ஒரு சிஸ்டத்தை கட்டிக் காத்து வரும், சோனியாவும், சிங்கும், இனி நம்மை ஒரு நாளும் ஆளக் கூடாது.

சும்மா, எப்பவும் அரைக்கும் மாவையே திரும்ப அரச்சு, இனி என்ன செஞ்சு, பாதுகாப்பை வலுப்படுத்தப் போறோம்னு, ஒரு எழவையூம் செய்யக் காணோம். ஆட்சிக்கு வந்ததும், ஒரு சில நல்ல (pota) சட்டத்தையும் தூக்கிட்டாங்க.
இப்ப, பாக்கிஸ்தான் காரன், evidence காட்டு காட்டுன்னு, காட்டு கத்து கத்தறான்.
இந்த லட்சணத்துல, சிதம்பரம் கிட்டேயிருந்து, நிதித்துறையும், சிங்கே வாங்கிக்கிட்டாரு.
எங்கேருந்து இவங்க ஊரத் திருத்த போறாங்க?

சோனியா வாசிக்கர மகுடிக்கு ஆடரதுக்கே நேரம் சரியாயிருக்கும்.

வரும் தேர்தலில், ராகுல் ப்ரியங்காவெல்லாம், மந்திரியா கூட வராமப் பாத்துக்கணுமய்யா.
'காந்தி' பேருக்கு ஒரு தடா போடணும், அரசியலில் உபயோகித்துக் கொள்ள.

என்ன நெனைக்கறீங்க?

காங்கிரசுக்கு வாக்குவீங்களா? (வேண்டாங்க, ப்ளீஸ், நாட்டை காப்பாத்துங்க!)


பி.கு: வேர யாருக்கு வாக்கரதாம்னு கேட்டீங்கன்னா, அதுக்கான விடை எனக்குத் தெரியலை. தாய்லாந்து மாதிரி, ஆக்ருமான், பண்ணாதான், ஊரு உருப்படுமோ? :)

ஹ்ம்! :(

Monday, December 01, 2008

Las Vegas செல்லும் பயணிகள் கவனத்திர்க்கு...நீல ஆண் குழு சகிக்கலை...

லாஸ் வேகஸ் நகரத்திர்க்கு, ஜூதாடப் போற ஐடியா இருந்து, இவ்ளோ தூரம் வந்துட்டமே, அப்படியே ஒரு ஷோவும் பாத்துட்டுப் போயிடலாம்னு ஐடியா உங்களுக்கு வரும்னா, Blue Man Group என்ற ஷோ பக்கம் தலை வச்சும் படுத்துடாதீங்க.
டிக்கெட் ஒருத்தருக்கு, கிட்டத்தட்ட $100.
ஆனா, நிகழ்ச்சி மகா மகா மகா தண்டம். ஏகன் கூட பல்லக் கடிச்சிக்கிட்டு பாத்திடலாம். இத்த மூணு நிமிஷத்துக்கு மேல பாக்க முடியல்ல.

என் விரிவான, ஆங்கில புலம்பல் இங்கே.

'நீல ஆண் குழுவை' தவிர்த்துப் பார்த்தால், லாஸ் வேகஸ் ஒரு அழகிய நகரம். பலமுறை சுற்றிப் பார்த்து விட்டாலும், ஒவ்வொரு தடவையும், புச்ச்சா இருக்கும் பாக்க.
'சீப்பா' பொழுது போக்க சிறந்த இடம்.
அமெரிக்க பொருளாதாரம், சுருங்கி விட்ட இத்தருணங்களில், லாஸ் வேகஸை சுற்றி உள்ள, பதினெட்டு பட்டி மக்களும், தங்கள் விடுமுறையை, வேறு எங்கும் பறந்து செல்லாமல், இங்க தான் கழிப்பாங்களாம்.
நானும் என் விடுமுறையை அங்குதான் கழித்தேன்.

சென்ற வீக்-எண்ட், அங்க செம கூட்டம்.

நான் சுட்ட சில லாஸ் வேகஸ் படங்கள். நிறை குறைகளை கூறுங்கள்.
(Flickrலும் பார்க்கலாம்)

பாரிஸ் பாரிஸ் ஜூதாட்ட விடுதி


ஏதோ ஒரு பூ


பாரிஸ் பாரிஸ் வாசலில் உள்ள கலைஅம்சம் (18+?)


வெனீஷியன் ஜூதாட்ட விடுதியினுள்

வெனீஷியன் அரங்கினுள்


இன்னொரு பூபி.கு: மும்பையில் இவ்வளவு நடந்தும், ஒரு நாள் பரபரப்பு அடங்கியதும், நாமும் நம் மத்த வேலைகளைப் பாக்கப் போயிடறோம். அரசாங்கமும், மத்த வேலையை பாக்க போயிடராங்க. இதுதான் கேவலமான யதார்த்தம் :(

btw, மாறன் ப்ரதர்ஸ், மீண்டும் ஜோதீல ஐக்கியமாயிட்டாங்களாமே.
தினகரன் ஆஃபீஸ்ல, இவங்க முட்டிக்கிட்ட போது, செத்தவனெல்லாம் ஐயோ பாவம். :(

எல்லோரும் இன்புற்றிருப்பதே அல்லாது வேறொன்றறியேன் பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராபாஆஆஆஆஆரமே!