recent posts...

Thursday, January 31, 2008

என் வன்மையான கண்டனத்தைப் பதிகிறேன்...

காந்தியை தேசத் துரோகி என்று ஏளனம் செய்து 'செய்தி விமர்சனம்' என்ற பதிவர் ஒரு பதிவு எழுதியுள்ளார்.

60ஆவது ஆண்டு நினைவு நாளில் காந்திக்குத் தரும் பரிசா இது?
அரசியல் ரீதியாக சில தவறுகள் அவர் செய்திருந்தாலுமே கூட, தேசத் துரோகி என்று சொல்வது, ஒரு மிகக் கீழ்தரமான, தவறான செயலாகும்.

அவர் செய்த தவறுகளைப் பட்டியலிடுங்கள், பதிவாக்குங்கள். அதில் தவறில்லை.

ஆனால், மறைந்த ஒரு மா-மனிதனை, இப்படிக் கேவலப் படுவது, மிகவும் கீழ்தரமானது, என்று மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் தேசத்துக்கு, கனவிலும் கூட அவர் ஒரு துரோகத்தையும் இழைத்ததில்லை.

இப்படி freeஆ நம்ம எல்லாரும் நினைத்ததை எழுத முடிவதற்கு, காந்தி ஒரு முக்கிய காரணம் என்பது அடியேன் கருத்து.

தவறை திருத்திக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்,

-சர்வேசன்.

FMI: 1/4 அடி உயர்ந்து கொண்டே இருக்கும் சென்னை - தடுப்பது எப்படிங்க?

ராத்திரி ஒரு பத்து மணிக்குமேல சென்னைய சுத்திப் பாக்க ஆரம்பிச்சீங்கன்னா, வாழ்க்கையின் கீழ் நிலை மக்கள் பலர் , வீடில்லா கொடுமையால், இரயில் நிலையங்களிலும், பஸ்-ஸ்டாப்பிலும் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
"ச பாவம" என்று தோன்றுவது ஒரு புறம் இருக்கும்.
'அட எப்படிதான் இப்படியெல்லாம் வாழறாங்களோன்னு' இன்னொரு புறம் தோணும்.

வீடு இருக்கரவங்க மட்டும் ஒழுங்கா வாழறாங்களா என்ன? பல இடங்களில் பாத்தீங்கன்னா, சரியான ரோடு இருக்காது, வீட்டுக்கு முன்னாடி சாக்கட தேங்கி நிக்கும். ஆனா, அத மாத்த எந்த நடவடிக்கையும் எடுக்காம, அதுக்கெல்லாம் நாங்க immuneஆயிட்டோங்கர மாதிரி வாழ்வாங்க.
அவிகளப் பாக்கும்போதும், 'அட, எப்படித்தான் இப்படியெல்லாம் இருக்காங்களோன்னு' தோணும்.

ஆனா, நாளாக நாளாக, எங்க வீட்டுக்கு முன்னாடியும் ரோடு சரியில்லாமப் போச்சு, எங்க வீட்டுக்கு முன்னாடியும் சாக்கடைய தோண்டிவிட்டு, தேங்க வச்சு கப்பாக்கிட்டானுவ. நானும் ஒண்ணும் பெருசா செஞ்சு கழட்டாம, பத்தோட ஒண்ணு பதினொண்ணா வாழப் பழகிட்டேன். இப்ப என்ன பாத்து எவனாவது, 'அட எப்படித்தான் இப்படியெல்லாம் இருக்கானோ''ன்னு ஆச்சரியப்பட்டா, 'கொஞ்ச நாள் பொருங்க சார், உங்களுக்கும் இதேதான் ஆவும்னு' வில்லத்தனமா நெனச்சுக்க வேண்டியதுதான் போல.

இப்படித்தான், சில வருஷங்களுக்கு முன், திருவொற்றியூரில் ஒரு நண்பனைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவன் இருந்த தெருவே கொஞ்சம் வித்யாசமா இருந்திச்சு.
அந்தத் தெருவில் எல்லா வீடும், கால்-வாசி தரை மட்டத்துக்கு கீழ இருந்தது.

அதாவது, வீட்டு ஜன்னலின் பாதி பூமிக்குள்ள இருந்ததுன்னா பாத்துக்கோங்களேன் (மிகைப் படுத்தல).

தெருவிலிருந்து, அவன் வீட்டுக்குள்ள போக, அஞ்சு படிக்கட்டு கீழ எறங்கி போகணும்.
அட, இது என்னடா மடத்தனமா இப்படி வீடு கட்டிருக்கீங்களே, மழ வந்தா என்னடா பண்ணுவீங்கன்னு கேட்டேன்.
அதுக்குதான் இத வச்சிருக்கோம்னு ஒரு தண்ணி-மோட்டர காமிச்சான். தண்ணி தேங்கினா, மோட்டர் வச்சு வெளீல தள்ளணுமாம்.

அட கெரகம் பிடிச்சவனே, கிண்டி சப்-வேல தண்ணி நிக்கும், மோட்டர் வச்சு அடிப்பான் பாத்திருக்கேன். அத எந்த மடப்பயன் கட்டினானோன்னு ஒவ்வொரு தடவையும் நெனச்சுப்பேன். அதாச்சும் பரவால்ல, ஊர் சொத்து, தண்ணி தேங்சிச்சுன்னா, சப்-வேல போகாம ரோட்ல எகிரி குதிச்சு ஓடிடலாம்.

வீட்ல தண்ணி தேங்கர மாதிரி ஏண்டா இப்படி தெரு அளவுக்கு கீழ கட்டினேன்னு கேட்டேன்.

வீடு கட்டினவங்க ஒழுங்கா ஒயரமாதான் கட்டினாங்க. அது என்னாச்சின்னா, தெருவுக்கு தார்-ரோடு போடுவாங்க, அஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம், எலக்ஷனுக்கு முன்னாடி. ஒவ்வொரு தடவ ரோடு போடும்போதும், கெரகம் புடிச்சவனுங்க, ஏற்கனவே இருக்கர ரோட ஒடச்சு அப்புறப் படுத்தாம, சும்மா கெளரிவிட்டு, அதுக்கு மேலயே புது ரோடு போடறானுங்கோ.
ஒவ்வொரு தடவையும் இப்படிப் பண்ணும்போது, தெருவின் உயரம் 1/4 அடி வரை அதிகமாகும்.

மூணு படிக்கட்டு மேல ஏறி வீட்டுக்குள்ள போகர மாதிரி ஒயரமா வீடு கட்டி வச்சிருந்தாங்க.
இப்படி 1/4 அடி ரோடு ஏற ஏற, ஒவ்வொரு படிக்கட்டா தியாகம் பண்ணானுங்க.

எவனாவது வாயத் தொறந்து கேட்டானா?
இன்னும் ரெண்டு படிக்கட்டு இருக்கே, இன்னும் ஒரு படிக்கட்டு ஒயரம் இருக்கேன்னு விட்டானுங்க.

சில வருஷத்துல, ரோடும், வீடும், ஒரே லெவலுக்கு வந்துடுச்சு. அப்பவாவது கேட்டானுங்களா?
வீட்ட சுத்தி சொவர கட்டி, கேட்டுல ஒரு பாத்தி கட்டி, மழைத் தண்ணி வீட்டுக்குள்ள வராத மாதிரி செஞ்சாங்க. (அடேங்கப்பா, ஐன்ஸ்டீன் தோத்தாண்டா உங்க கிட்ட)

இன்னும் ரெண்டு எலக்ஷன் முடிஞ்சது, சில இடைத்-தேர்தல், கவுன்ஸிலர் தேர்தல்னு முடிஞ்சது. இன்னும் ரெண்டு தடவ ரோட போட்டாங்க. இப்ப என்னாச்சு? ரோடு இன்னும் மேல போயிடுச்சு.
இப்பவாவது ஏண்டா இப்படி பண்றீங்கன்னு கேட்டானா? இல்லியே!

திரும்ப, ஐன்ஸ்டீன் மூள உபயோகிச்சு, ரோட்லேருந்து, அழகா ரெண்டு படிக்கட்டு வீட்டுக்குள்ள போக, ஸைட்ல, ஒரு சருக்கு மரம் மாதிரி ஒண்ண கட்டிட்டான். டூ-வீலர் கொண்டு போகவாம்.

இப்படி சில காலம் போச்சு. இந்த காலத்துலதான், தண்ணிய வெளீல தள்ள மோட்டர், பக்கெட்டு ஏற்பாடெல்லாம் பண்ணான்.

இப்படியே, பரிணாம வளர்ச்சி அடஞ்சு அடஞ்சு, ஜன்னல் எல்லாம் பூமிக்குள்ள போகர அளவுக்கு, தெரு வளர்ந்துடுச்சு.

ஜன்னல் எல்லாம், பர்மனெண்ட்டா ஸீல்ட் இப்ப.

அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி இந்தத் தெருவையும் அந்த வீட்டையும் பாத்து, 'அட, எப்படித்தாண்டா வாழறீங்க இந்த மாதிரியெல்லாம். ஒரு வார்த்த அந்த ரோடு போடற காண்ட்ராக்ட்டரையும், கவுன்ஸிலரையும், கேக்கமாட்டீங்க?"ன்னு சலிச்சிக்கிட்டு வந்தேன்.

இப்ப என்னடான்னா, எங்க தெருவிலயும் இதே கூத்து நடக்குது. 1/4 அடி இவ்ளோ வருஷமா வளந்தது கவனிக்காம வுட்டதுல, இப்போ, தெருவும், வீட்டு அளவுக்கு வளந்துடுச்சு.

சுத்தி, great-wall கட்டியாச்சு. பாத்தியெல்லாம் கூட கட்டியாச்சு.

ஆனா, ரோடு வழக்கம் போல மோசமாயிடுச்சு, அடுத்த ரோட போடப் போறாங்க.

இந்த தடவ ரோடு போட்டா என்னாகும்? தெரு உயரும். வீடு கீழப் போகும்!

அடுத்ததா ஒரு தண்ணி-மோட்டார் வாங்கி, நானும் மழைக்கால கோதாக்கு தயாராகவா, இல்ல ரோடு போடறவன, இருக்கர ரோட கொத்தி தூரப் போட்டு, அதே லெவல்ல புது ரோட போடுய்யான்னு அடாவடி பண்ணவா?

நான் சொல்லிக் கேப்பாங்களா? ராவோட ராவா, முதுகுல டின்னு கட்டிட்டாங்கன்னா?

உங்கத் தெருவில இந்த மாதிரி எல்லாம் ப்ரச்சனை இல்லியா?

எனக்குத் தெரிஞ்சு, ரோடு-காண்ட்ராக்ட் எடுக்கரவங்க, இருக்கும் ரோட்டை சுத்தமா அப்புறப் படுத்திட்டு, புது ரோடு போடணும்னுதான் காண்ட்ராக்ட் ரூல்ஸ் சொல்லுதுன்னு யாரோ சொல்லி எங்கேயோ கேட்ட ஞாபகம். உங்களுக்குத் தெரியுமா?

இத எங்க முறையிடுவது?

இந்த மாதிரி பொதுப் ப்ரச்சனைகளை வெளியில் கொண்டுவந்து, புகார் செய்ய வேண்டியவர்களிடம் செய்து, வேலை செய்யாதவங்கள செய்ய வச்சு, தப்பு செஞ்சவங்கள தண்டிச்சு, ஊர ஓரளவுக்கு சுபிக்ஷமா மாத்தத்தான் அரசாங்கம், ஒரு புகார்-பெட்டி தளம் பண்ணி வச்சிருக்கு (தற்சமயம் fixmyindia.org அங்கேதான் கொண்டு விடும்). இந்த சென்னை உயரமாகும் மேட்டர, ஆங்கில வடிவமாக்கி, ஒரு புகாரை அதில் போட உள்ளேன்.

FixmyIndia.blogspot.com என்னும் தளத்தை ஒரு கூட்டு முயற்சியாக இந்த மாதிரி ப்ரச்சனைகளையெல்லாம் வலையேத்தி, ஏதாவது ஒரு மாற்றம் வரச்செய்ய விருப்பம்.

இந்த சென்னை உயரமாகும் விஷயத்துக்கு, எழுதியுள்ள புகார்
இங்கே உள்ளது. பாத்து, உங்க கருத்தை சொல்லுங்க. அதில் ஏதாவது மாற்றம் செய்யணும்னாலும் சொல்லுங்க.

இதை, வரும் திங்களன்று, நமது அரசாங்க
புகார்-பெட்டியில், போடலாம் என்று எண்ணம்.


வேறு எப்படி இதுக்கு வெளிச்சம் காட்டுவதுன்னும், விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.

பி.கு1: FixmyIndia.blogspot.comல் சேர விருப்பமுள்ளவர்கள், பின்னூடுங்கள். உங்களை memberஆக்க, அழைப்பை அனுப்பி வைக்கிறேன். நீக்கள் blogger கணக்கு வைத்திருக்க வேண்டும். இங்க தருமி பண்ண மாதிரி, ஒரு சமூகப் ப்ரச்சனைய பத்தி, ஆராஞ்சு, புகார் தயாரித்து, புகார் பெட்டியில், ஆங்கிலத்தில் பதிவது, முதற்கட்டம். அடுத்த கட்டங்கள் என்னென்ன, கூட்டாக கலந்தாலோசிப்போம். சின்னதாயேனும் ஒரு மாற்றம் கொண்டு வர, சின்னதா ஒரு முயற்சி இது, அம்புடுதேன்.

பி.கு2: ஊரு விட்டு ஊரு வந்து, ஒவ்வொரு லீவுக்கும் திரும்பி வரும்போது, சென்னையில் பல விஷயங்கள் உயர்வது சந்தோஷத்தைத் தந்தாலும், இந்த தெரு 'உயர்வு' செம டார்ச்சர்!!!

பி.கு3: பதிவர்கள் அனைவரும், மாதத்துக்கு ஒரு 'பொதுப் ப்ரச்சனை' பத்தி பதிவு எழுத வேணும் என கேட்டுக் கொள்கிறேன். அப்படியே பொது விஷயங்களில் உங்கள் அக்கரை கூடிக் கூடி, ஒரு நாள், நீங்களே, Councillorஆகவோ, MLA MPயாகவோ, மாறும் அபாயம் நடக்கலாம். :)

பி.கு4: யாராவது, விஷயம் தெரிஞ்சவங்க, ஒருவன் அரசியல்வாதி ஆகணும்னா என்னென்ன basic விஷயங்கள் தெரிஞ்சிருக்கணும்னு பதிவ போடுங்களேன். அதாவது, நம்ம ஊர் civics, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, ஒன்றியம், வட்டாட்சி, இந்த அமைப்பு பற்றியெல்லாம் ஒரு பாடம் நடத்துங்களேன். தெரிஞ்சுக்க உபயோகமா இருக்கும். 'TamilNadu politics for Dummies©" மாதிரி ஒரு முயற்சிய எதிர்பாக்கறேன் ;)

பி.கு5: இந்த ரோடு உயரமா ஆயிட்டிருக்கே, இத தத்ரூபமா யாராவது எந்தத் தெருவிலயாவது படம் புடிச்சு அனுப்பினா உபயோகமா இருக்கும். நன்றி!

Monday, January 28, 2008

தெரிந்து கொண்டே ஆகவேண்டிய உயிர்காக்கும் முக்கிய குறிப்புகள் - by அனுராதா

பதிவர் அனுராதா ஈ.மடலில் சில விஷயங்களைத் தெரியத் தந்தார்.
நம்மில் பலருக்கு பெயரளவில் மட்டுமே தெரிந்த கேன்ஸர் என்ற கொடிய நோயைப் பற்றிய உபயோகமான குறிப்புகள் இவை. ஆங்கிலத்தில் அவர் அனுப்பியதை, சின்ன மாற்றங்களோடு JustSurveys.blogspot.comல் பதிந்துள்ளேன்.

அதை தமிழாக்கமாகத் தந்தால், நன்றாகயிருக்கும் என்று விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன் (ஈஸியா கேட்ருவோம்ல). அவரும், சிரமம் பாராமல், மொழிபெயர்த்துத் தந்தது கீழே.
கண்டிப்பா எல்லா விஷயத்தையும் படிங்க, குறிப்பா கடைசி சில பாயிண்ட்ஸ், தெரிந்து கொள்ள வேண்டியது, அதி முக்கியம்.
கேன்ஸர் யாருக்கு வேணும்னாலும் வரும். அது வந்தா வாழ்வே மாயம் கமல் மாதிரி, ஸ்டைலா சால்வைய போத்திக்கிட்டு பாட்டெல்லாம் பாட முடியாது. வாழ்க்கையை பொரட்டிப் போடும் அபாயம் உண்டு.
ஸோ, வருமுன் காப்போம்!

தேவையான விஷயங்களை சுவாரஸ்யமாக தயாரித்து அனுப்பிய அனுராதாவுக்கு ஒரு ஓ!

இனி தொடர்வது, அனுராதாவின் பகிர்வு!

புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த‌ளிக்கவேண்டாம்!!!

ஆம் நாம்தான் நமது உடலின் புற்றுநோய் கிருமிகளுக்கு அவற்றிற்கு பிடித்த விதவிதமான விருந்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

கேன்சர் என்று கேட்கும்போதே கூட வரும் வார்த்தைகள் கீமோதெரபி, ரேடியேஷன். இவற்றை மட்டுமே கேன்சருக்கு எதிராக முயற்சி (மட்டுமே) செய்துவரும் சூழலில் அமெரிக்காவில் இருக்கும் Johnhopkins மருத்துவமனை கடைசியாக வேறு சில வழிகளும் இருக்கிறது என்று சொல்லியுள்ளனர்.

1. ஒவ்வொரு மனித உடலில் இருக்கும் கேன்சர் கிருமிகள் லட்சக்கணக்காக பெருகும் வரையில் மருத்துவ பரிசோதனைகளில் தெரிவதில்லை. டாக்டர்கள் தங்களது பேஷன்ட்களிடம் கேன்சர் முற்றுலுமாக அழிக்கப்பட்டுவிட்டன என்றால் நமது விருந்தாளி கண்டுபிடிக்கப்படும் அளவு வளரவில்லை என்பது மட்டுமே நிஜம்.

2. நமது விருந்தாளிகள்(கேன்சர் கிருமிகள்) நமது வாழ்நாளில் நமது உடலுக்கு 6 முதல் 10 முறை வருகை தருகின்றன. என்னவோ நாம் கோக், பெப்சி குடுத்து கூப்பிட்டமாதிரி.

3. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்வரை அவை வாலாட்டாமல் திரும்பி போய்விடுகின்றன. நம் வீட்டில் நல்ல ராஜபாளையம் மற்றும் டாபர்மேன் வகை நாய்கள் இருக்கும்வரை திருடன் திருட முடியாமல் திரும்பப் போய்விடுவதைப் போல.

4. புற்றுநோய் வருவதற்கு காரணம் உண்டா என்ன? நிச்சயம் உண்டு. அதில் முக்கியமானதாக நியூட்ரிசியன்ஸ் (புரதம்) பற்றாக்குறையை கூறலாம். இதற்கு பரம்பரை, சுற்றுச்சூழல், உணவு, வாழ்க்கைமுறை என பல காரணம் உண்டு.

5. இந்த பற்றாக்குறையை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்திக் கொள்வதின் மூலம் சரி செய்யலாம். எப்படி என்ற கேள்வி எப்பவும் போல வந்திருக்குமே. வேறென்ன ‍‍‍அதேதான் ‍ உணவு.

6. கீமோதெரபி மூலம் நடத்தப்படும் என்கெளன்ட்டரில் கேன்சர் கிருமிகள் கொல்லப்படுவதோடு எலும்பு மஜ்ஜை, ஜீரண உறுப்புகள் போன்றவற்றில் வளரும் சில நல்ல அணுக்களும் போட்டுத்தள்ளப் படுகின்றன. இதனால் வேறென்ன, நமது குடல், கிட்னி (தலையில் இருப்பது இல்லை), இருதயம் போன்றவை மண்டையைப் போடும் வாய்ப்பு மிக அதிகம்.

7. ரேடியேஷன் கேன்சர் கிருமிகளை அழிக்கும் போது உடலின் வெளிப்பகுதியில் உள்ள பல நல்ல அணுக்கள், திசுக்கள் போன்றவற்றை ஸ்வாஹா செய்து விடுகிற்து. தனக்கு ஒரு கண் போனாலும் பக்கத்தில் இருப்பவருக்கு 2 கண் போகணும் என்பது குறிக்கோள்.

8. கேன்சரின் ஆரம்பக்கட்டத்தில் கீமோதெரபி, ரேடியேசன் போன்றவை கேன்சரின் அளவைக் குறைக்கும் என்பது நிஜம். இருந்தாலும் தொடர்ந்து உபயோகம் எந்த பயனும் இல்லை.

9. இந்த தொடரும் சிகிச்சையினால் உடலில் தங்கும் சில கெமிக்கல்ஸினால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஒன்று குறையலாம் இல்லை மொத்தமாக அழிக்கப்படலாம். இது வேறு சில வியாதிகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும்.

10.இந்த சிகிச்சை முறைகளினால் கேன்சர் கிருமிகள் உருமாற்றம் அடைகின்றன். நம்ம தலைவர் சிவாஜியில் இருந்து M.G.R ஆன மாதிரிதான். நான் நிரந்தரமானவன் எனக்கு ஒரு அழிவில்லை என்று பாடிக்கொண்டே அவை ஆடிக்கொண்டிருக்கும். ஆபரேஷன் என்று யோசிப்பது புரிகிறது. நம்ம தலைவர் எத்தனை ஆபரேஷன் வைத்தாலும் முளைத்து வந்துகொண்டிருப்பார்.

11. ஏதோ வழி என்று சொல்லிவிட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று யோசிப்பது புரிகிறது. கிளைமேக்ஸ் வந்தாகிவிட்டது. ஒரே வ‌ழி கேன்ச‌ர் கிருமிக‌ளுக்கு சாப்பாடு போடாம‌ல் இருப்ப‌துதான்.

கேன்சர் கிருமிகளுக்கு உணவளிப்பவை

a. சர்க்கரை ‍ கேன்சர் கிருமிகளின் கொடை வள்ளல்

சர்க்கரையை ‍ நிறுத்துவோம். கேன்சர் கிருமிகளை ‍ பட்டினி போடுவோம். (அவ்ளோதாங்க) அதற்கு பதிலாக தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை உபயோகப்படுத்துவது ரொம்பவும் நல்லது. முயற்சி செய்து பாருங்களேன்.

b. உப்பு

ஆமாங்க இதுவும்தான். டேபிள்சால்ட் எனப்படும் உப்பை வெள்ளையாக்க கலக்கப்படும் கெமிக்கல் வேறென்ன அதுவும் கெடுதல்தான். (ஏங்க உப்புன்னா வெள்ளையாத்தானங்க இருக்கும் அதுவுமா‍ ங்கற உங்க கேள்வி புரியுது. அதுவுந்தாங்க). உப்பில்லா பண்டம் குப்பையிலே னு நம்ம பெரியவங்க சும்மா இருக்காம சொல்லி வச்சுட்டு போய்ட்டாங்க. அப்புறம் எதைத்தான் சாப்பிடறதுன்னு தானே கேக்கறீங்க. நம்மகிட்டதான் கைவசம் கடல் உப்பு இருக்கே. அதாங்க கிலோ 2 ரூபாய்க்கு கிடைக்குமே அதேதான்.

c. அடுத்தது ‍ பால்

வெள்ளையா இருக்கற எதையுமே தொடமுடியாது போல இருக்கே. என்னங்க பண்றது. கேன்சர் கிருமிக்கு தேவையான Mucus எனப்படும் முக்கியமான விஷயம் பால்‍-ல கொட்டிக்கிடக்கு. அதனால பாலுக்கு பதிலாக இனிப்பில்லாத சோயாபால் எடுத்துக்கறது பெட்டர்.

d. அசைவம் ‍ வேண்டவே வேண்டாம்.

இல்லை எனக்கு அசைவம் இல்லாத சாப்பாடு யோசிக்கவே முடியாதுன்னு நினைக்கறவங்க மீன், கொஞ்சமே கொஞ்சம் கோழி சேத்துக்கோங்க. எதுக்கும் அசைவம் இல்லாம சாப்பிட்டு பழகுங்களேன். உங்களால் முடியாதா என்ன?

e. உங்க சாப்பாடுல 80% காய்கறிகள் (அது கறி இல்லைங்க காய்கள் மட்டும்தான்), காய் ஜூஸ், தானிய பருப்பு வகைகள், கொஞ்சமா பழ வகைகள் இருக்கற மாதிரி பாத்துக்கோங்க.

மீதி 20% வேகவைக்கப்பட்ட உணவு வகைகள் எடுத்துக்கோங்க. உடலில் ஆரோக்கியமான அணுக்கள் வளர காய்கறி ஜூஸ் ரொம்ப முக்கியம்.பச்சைக் காய்கறிகள் 2,3 தடவை எடுத்துக்கோங்க. தப்பில்லை. ஆனா அதையும் நல்லா கழுவிட்டு சாப்பிடுங்க.

f. காபி, டீ, சாக்லெட் ‍ பெரிய டாடா (பிர்லா, அம்பானி கூட) சேர்த்து சொல்லிடுங்க.

கிரீன் டீ பிடிக்கும்னா எடுத்துக்கோங்க. கேன்சர் வராம தடுக்க உதவும்.

g. தண்ணீர் ‍ இதுகூடவா? அதானே கேள்வி. ஆமாங்க. அதுவும்தான்.
நல்லா சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டும் குடிங்க.


12. அசைவ உணவு வகைகள் ஜீரணம் ஆகறது கொஞ்சம் லேட் ஆகும் அதோட இல்லாமல் ஜீரண உறுப்புகளுக்கு நிறைய வேலை குடுக்கறதால நம்மல மாதிரிதான் வேலையை பெண்டிங் வச்சிடும். அந்த மாதிரி மிச்சமாகிற உணவு வகைகள் கேன்சர்க்கு ரொம்ப வசதி.

13. கேன்சர் கிருமிகளோட மேற்புறத்தோல் ஒரு கடினமான புரோட்டின் கவர் இருக்கு. நம்ம அசைவம் கம்மியா சாப்பிடறது இல்லை சாப்பிடாம இருக்கறது மூலமா நோய் எதிர்ப்பு கிருமிகளை நேரா இந்த கேன்சர் கிருமிகளோட போராட டைம் குடுக்கறோம். இதுனால கேன்சர் கிருமிகளை அழிக்கறது ஈஸியா இருக்கும்.

14. மத்தபடி மினரல்ஸ் (மினரல் வாட்டர் இல்லைங்க), விட்டமின்ஸ் இதெல்லாம் டாக்டர் ஆலோசனையோட எடுத்துக்கறது நம்ம உடம்பில் இருக்கற போராட்ட குணமுள்ள கிருமிகள் வளர நல்லது. அப்புறம் இந்த போர் வீரர்கள் கேன்சர் கிருமிகளை கவனிச்சுப்பாங்க.

15. இதெல்லாம் விட கேன்சர்‍ன்றது உடம்பு, மனசு சம்பந்தப்பட்ட விஷயம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையும், நிறைய பாசிட்டிவாவும் இருக்கறது கேன்சர் எதிர்த்து போராட பெரிய பலம் குடுக்கும்.

நிறைய கோபம், பிடிவாதம், எல்லார் மேலயும் வெறுப்பு இருந்தா என்னங்க பண்ணப்போறோம்? இதுனால நம்ம உடம்புல ஒரு தீவிர தன்மை உருவாகறது கேன்சர்க்கு ரொம்ப செளகரியமா இருக்கும். அதனால வாழ்க்கையா ரொம்ப லைட்டா எடுத்துக்கோங்க. சாதாரணமா இருங்க. எதுக்கும் ஓவரா ரியாக்ட் பண்ணாதீங்க. சந்தோஷமா இருங்க.

16. நம்ம உடம்புல ஆக்ஸிஜன் சரியான அளவுல இருக்கும் போது கேன்சர் அண்டாது. அதுனால உடற்பயிற்சி செய்யறதும், மூச்சுப்பயிற்சி செய்யறதும் ஆக்ஸிஜன் அளவை சரியா வச்சுக்க உதவி செய்யும். ஆக்ஸிஜன் தெரபி‍னு வந்திருக்கற புது வழியும் நல்லதுதான்னாலும் நம்ம கைவசம் வெண்ணையை வச்சிக்கிட்டு எதுக்கு அலையணும்.

யோகா செய்ங்க, நிறைய நடங்க, புது நண்பர்கள், மனசு விட்டு பேசுங்க.


அவ்ளோதான். போயே போச்செல்லாம் இல்லை. வராமலே தடுத்திடலாம் கேன்சர் நோயை. என்ன சொல்றிங்க.


சில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ

1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்

2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்

3. பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ் ல எதுவும் வைக்கவேண்டாம்

பிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ்
பண்ணிக்கோங்க.

இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க...

வருமுன் காப்போம்!

Sunday, January 27, 2008

லல்லு அடிச்ச சிக்ஸர்!

இந்த வருட பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் எல்லாம் அறிவிச்சாச்சு.

தகுதியானவங்க பல பேருக்கு கெடச்சிருக்கு.

மிகத்-தகுதியானவங்க சில பேருக்கு கெடைக்கல.

எல்லா வருஷம் போலவும் இந்த வருஷமும், பாரத் ரத்னா விருதுக்கு ஏகப்பட்ட போட்டி.
ஜோதிபாசு, வாஜ்பாயி, கன்ஷிராம், லல்லு, கருணாநிதி, சரண் சிங், முலாயம், போன்ற அரசியல் பெருந்தலைகள் முதல், நம்ம இளையராஜா வரைக்கும் பரிந்துரைக்கப்பட்டாங்களாம்.

வழக்கம் போல் இம்முறையும், அரசியல் வில்லங்கங்கள் தலைவிரித்து ஆடியதால், யாருக்கும் கொடுக்காம ஒதுக்கி வச்சுட்டாங்க.

லல்லுகிட்ட இந்த மேட்டர பத்தி கேட்டதுக்கு, "பரிந்துரையில் உள்ள சில பேர்கள் இந்த விருதுக்கு தகுதியில்லாதவர்கள். இவங்களுக்குக் கொடுத்திருந்தா விருதின் பேர் கெட்டுப் போயிருக்கும். நல்லதுதான் யாருக்கும் கொடுக்காததுன்"னு சொன்னாராம். யார மனசுல வச்சிட்டு சொல்ல்யிருப்பாருன்னு எல்லாருக்கும்தான் தெரியுமே. :)

பில்லியன் ஆளுங்க இருக்கர ஊருல, வருஷத்துக்கு, ஒரு நல்ல மனுஷனுக்கு சண்ட சச்சரவில்லாம விருது கொடுக்க முடியாதது கொடுமைங்க!

அட, ஏழு வருஷமா இப்படி வீணடிச்சுட்டாங்களே? பேசாம, வருஷா வருஷம் Posthumousஆ யாருக்காவது கொடுத்திடலாம். வள்ளுவருக்கு ஒண்ணு, கப்பலோட்டிய தமிழனுக்கு ஒண்ணு, பாரதியார்க்கு ஒண்ணு, வால்மீகிக்கு ஒண்ணு (ஹிஹி), கட்டபொம்மனுக்கு ஒண்ணு, வீர ஷிவாஜிக்கு ஒண்ணு, ராணி ஜான்ஸிக்கு ஒண்ணு,,.. ஆளா இல்லை? எடுத்து கொடுங்கப்பு வருஷா வரும்.

இப்படி இறந்த பிறகு பாரத ரத்னா கிடைக்கும்னு தெரிஞ்சா, வாழும்போது நல்லா வாழ முயற்சி பண்ணுவாங்க ;)


அதே சமயம், 119 பேருக்கு, பத்மXYZ விருது கொடுக்கராங்க, நம்ம MSVய யாரும் கண்டுக்கமாட்றாங்களேய்யா? சுசீலாம்மாவுக்கு கெடைச்சது சந்தோஷம்தேன், ஆனா, MSVக்கு இன்னும் கிடைக்காதது, ஏதோ அரசியல் வில்லங்கத்தால்னு தோணுது. நீங்க என்ன நினைக்கறீங்க? எனி ஹிஸ்டரி பிஹைண்ட் திஸ்?
என்ன கொடுமைங்க இது?

நம்ம கடமைய நாம் செய்வோம்! வாக்காதவங்க வாக்குங்க!

Saturday, January 26, 2008

காளை - திரை விமர்சனம்

கதை, திரைக்கதை எழுதரவங்க ரூம் போட்டு, கன்னா பின்னான்னு யோசிச்சு, ஜிலேபி மாதிரி சிக்கிச் சிலாகித்து ஒரு சினிமாக் கதைய உருவாக்கினாலும், துட்டு போட்டு படத்த தயாரிக்கர தயாரிப்பாளராவது கொஞ்சம் யோசிச்சு ஜிலேபிய நூடுல்ஸாவாவது மாத்தணும்.
சிக்கல்கள் இருக்கலாம், ஆனா, அவுத்தா அவுந்துடணும்.

விஷயத்துக்கு வரேன்.

படம் ஆரம்பம்.

சீன்1: மூணு பேர போட்டுத் தள்றாரு லால், அப்பரம் ஃபோன்ல 'ஜீவா உனக்கு ப்ரச்சன குடுத்த மூணு பேர போட்டுத் தள்ளிட்டேன்'னு கூவுறாரு.
சீன்2: சங்கிதா, நிமிஷத்துக்கு ஒரு தரம்,செல்போன்ல சில குண்டாஸ் கிட்ட, 'டேய் எனக்கு என் ஜீவா வேணும்'னு அலறராங்க.
சீன்3: ஒரு பொண்ணு போலீஸ் ஸ்டேஷன்ல 'சார், ஜீவா பேர்ல ஒரு கம்ப்ளெயிண்ட்'ன்றாங்க. இனிஸிபெக்டர் ஐயா, வயித்த வலி வந்த மாதிரி 'ஐயோ, ஜீவா பேர்ல எல்லாம் கம்ப்ளெயிண்ட் எடுக்க முடியாதும்மா' ன்னு அலறராங்க.
சீன்4: 'டேய், அந்த ஜீவாவ காத்தால கொளத்துல குளிக்கும்போது போட்டுத் தள்ளுங்கடா'ன்னு இன்னொருத்தர் கத்தறாரு.
சீன்5: சிம்பு, கொளத்துலேருந்து குளிச்சிட்டு எழுந்து வருவாரு. அப்பரம் என்ன? கயிறு கட்டி தொங்கிக்கிட்டே ஒரு பத்து நிமிஷத்துக்கு சண்டதான். (Crouching tiger and hidden dragon வந்தப்பரம் இந்த கயித்துல தொங்கர கொடுமை ரொம்பவே கொடுமை அதிகமாயிடுச்சு).

மேல இருக்கர அஞ்சு சீனும், ஒண்ணு மாத்தி ஒண்ணு கலந்து கலந்து வருது. எடிட்டிங் டெக்னிக்ல கலக்கராங்களாமா. (இல்ல, ரூம் போட்டு யோசிச்ச திரைக்கதை டெக்னிக்கா?)

அஞ்சு சீன்லயும், ஒருத்தர மாத்தி ஒருத்தர் சொல்ற அந்த ஜீவா, ஒரே ஜீவா இல்லியாம்.
இது அடுத்த சிக்கல்.
சிம்பு ஒரு ஜீவா, லால் போலீஸு ஒரு ஜீவா, இன்னொரு முடிவளத்த ரௌடி ஒருத்தனும் ஜீவா.

இந்த மூணு ஜீவாவ வச்சுக்கிட்டு முதல் 1 மணி நேரம், ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்பாபா.

அப்பரம், போலீஸ் லாலை, முடிவளத்த ரௌடி ப்ளாக் மெயில் பண்றான்னு புரிஞ்சுது. அதனால, லால் ரௌடிய போட்டுத் தள்ளி, கொஞ்சம் சிக்கல கொறைக்கறாரு.

மேட்டர் இன்னான்னா, சிம்புவோட பாட்டி (சீமா) தேனீ மாவட்ட நாட்டாமை மாதிரி. ஊர்ல சாராயம், கஞ்சா எல்லாம் இல்லாம நல்ல ஊரா மெயிண்டெயின் பண்ணி பாத்துக்கராங்க.

லால் அந்த ஊருக்கு போயி ப்ரச்சன பண்ணி, பாட்டிய சாவடிச்சிடறாரு.

அப்பரம், சிம்பு பழிவாங்கல்.

படத்துல ஒரே ஆறுதல், இந்த லவ்-கிவ் எல்லாம் ரொம்ப இல்லாம, ஓரளவுக்கு புதுசா கத சொல்றோம்னு கிளம்பி இவங்க முயற்சி பண்ணதுதான்.

ஒளிப்பதிவு நல்லா இருந்தது. சண்டைகள், பாடல்களும் ஓ.கே.
ஹீரோயின் வேதிகா? பரவால்ல. ரொம்பவே தாராளம். பென்ஸில் மாதிரி இருந்தாங்க சில பாட்டுல.

இடைவேளைக்கு முன் வரை, செம டார்ச்சர்.
இடைவேளைக்கு பின் ஓ.கே. ஆனா, சொறத்தே இல்லாத மாதிரி இருந்துது.

காதல், வெயில், கல்லூரி, சிவாஜி(?), 9 rs. நோட்டு, இந்த மாதிரியான வித்யாங்கள் தேவைதான்.
ஆனா, ரொம்ப ரூம் போட்டு யோசிச்சு, மூணு ஜீவா, ஆறு சண்டை, செல்ஃபோனில் காட்டுக் கத்தல், இந்த மாதிரி ரேஞ்சுக்கு வித்யாசங்கள் வேண்டாமய்யா வேண்டவே வேண்டாம்.

பி.கு: எனக்குத்தான் இப்படியெல்லாம் தெரீதா? படம் மெய்யாலுமே சில பேருக்கு புடிச்சிருக்குமோ? நீங்க பாத்திட்டீங்களா? உங்க திங்கிங் என்ன?

Friday, January 25, 2008

Home they brought her warrior Dead - Alfred, Lord Tennyson

சேதுக்கரசி CVRன் பதிவுக்கு போட்ட பின்னூட்டத்தில், இந்த கவிதையை பார்த்தேன்.

பள்ளியில் படித்த நினைவு திரும்ப வந்தது.
இங்கிலீஷ் மிஸ் நடிச்சே காமிப்பாங்க இந்த கவிதையை (Lalitha மேடம், உங்க தெறம அப்போ அவ்ளவா புரியல. மக்காயிருந்தேன்னு நெனைக்கறேன். இப்ப தெளிஞ்சுருச்சு ;) ).

மிக எளிமையான, பளீர் வார்த்தை அமைப்புடன் கூடிய கவிதை இது.

மிகவும் பிடித்தது அன்று. இன்றும்.

போரில் மரணம் அடைந்த ஒரு வீரனின் வீட்டின் நிகழ்வுகளை சொல்லியிருப்பார் Tennyson.

HOME they brought her warrior dead:
She nor swooned, nor uttered cry:
All her maidens, watching, said,
‘She must weep or she will die.’

Then they praised him, soft and low,
Called him worthy to be loved,
Truest friend and noblest foe;
Yet she neither spoke nor moved.

Stole a maiden from her place,
Lightly to the warrior stepped,
Took the face-cloth from the face;
Yet she neither moved nor wept.

Rose a nurse of ninety years,
Set his child upon her knee—
Like summer tempest came her tears—
‘Sweet my child, I live for thee.’

Sunday, January 20, 2008

தாரே ஜமீன் பர் - திரை விமர்சனம்

இந்த படத்த பத்திய கருத்த எல்லாரும் ஏற்கனவே அலசி ஆராஞ்சு தொவச்சு காயப்போட்டுட்டாங்க. அதனால, இத விமர்சனமா இல்லாம, படத்தில் எனக்குப் பிடிச்ச காட்சிகளும், பிடிக்காத காட்சிகளும் சொல்லும் பதிவா எழுத முடிவு.

பீமா பாக்கலாமா, தாரே ஜமீன் பர் பாக்கலாமான்னு யோசிச்சதுல, தா.ஜ.ப வெற்றி பெற்றது.
பீமா போகாததுக்கு மூன்று காரணங்கள் -

1) அடிதடி படமாமே? $ குடுத்து தலவலி வாங்குவானேன்?
2) சிவாஜி வந்ததுக்கப்பரம், இப்ப தமிழ் படங்களெல்லாத்துக்கும், ப்ரீமியம் கேக்கறாங்க. சாதாரணமா $8ன்னா, பீமாக்கு $13 வேணுமாம். என்ன கொடுமைங்க இது?
3) தா.ஜ.பக்கு அமோகமான பாஸிட்டிவ் ரெவ்யூ

'தாரே ஜமீன் பர்'னா Stars On Earthனு அர்த்தமாம். அதாவது, பூமியில் நட்சத்திரங்கள்.

மூன்றாம் வகுப்பு பயிலும் இஷான் அவஸ்தி என்னும் சிறுவனைச் சுற்றி பயணிக்கிறது கதை.
சுட்டியான இஷான், வீட்டிலும் வகுப்பிலும் செய்யும் லூட்டியுடன் துவங்குகிறது.
துரு துரு என்று இருந்தாலும், படிப்பில் கவனம் செலுத்த முடியாத சிறுவனாம்.
பாசமான அம்மா, அண்ணன், கண்டிப்பான அப்பாவுடன் இஷானின் தினசரி வாழ்க்கை ஓடுகிறது.

இஷானால் சரியாக எழுத முடியாது, எதையும் சரியாக படிக்க முடியாது, கவனம் கன்னா பின்னான்னு அங்கயும் இங்கயுமா ஓடுது.
மூணாம் கிளாஸ்லயே ரெண்டு தடவ ஃபெயில் ஆயிடறான்.

மூத்த பையன் நல்லா படிச்சு மார்க் வாங்கறானே, ரெண்டாவது பையன் இஷான இப்படியே விட்டா, பையன் தேறாம போயிடுவான், இவனுக்கு boarding ஸ்கூல் தான் லாயக்குன்னு, வேற ஸ்கூலுக்கு மாத்திடறாங்க.

பெற்றோரையும் அண்ணனையும் பிரிந்து பெரும் துயரத்துக்கு தள்ளப்படும் இஷான், புதிய இடத்தில் தோன்றும் புதிய சவால்கள், புதிய ஆசிரியர்கள் இப்படி பயணிக்கிறது கதை.
Boarding ஸ்கூல் வாத்தியாக வரும் அமீர்கான் இஷானுக்கு இருப்பது Dyslexia என்ற குறைபாடு என்கிறார்.

அப்பரம் என்ன? அமீர்கான், இஷானை குணப்படுத்தராரா, இல்ல இஷானின் நிலமை மேலும் மோசம் ஆகுதான்னு பயணிக்குது படம்.

சென்ற வருடம் கேரளாக்கு சென்றிருந்தபோது பல இடங்களை சுற்றிப் பார்த்து, ஒரு நாள் அந்தி சாயும் நேரம் 'தோடு' பாக்கப் போலாம்னு ஒரு எடத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க. 'தோடு'ன்னா சின்ன ஆறு மாதிரி ஒரு எட்டடி ஆழம், பத்தடி அகலம் இருக்கர காவாய். இருபுறமும் தென்னை மரம். தண்ணி, கண்ணாடி மாதிரி இருக்கும். ஆற்றின் தரை தெரியும். இருபுறமும் புல்லும் பாசியும் படர்ந்து மிக அழகான காட்சி அது. ஓரத்துல ஒரு கல்லுல ஒக்காந்து, கால தோட்டுக்குள்ள விட்டு, அக்கடான்னு ஒக்காந்தோம்.

ரெண்டு மணி நேரம் பேச் மூச்சில்லாம ஒக்காந்தோம்.

ஓடர தண்ணியோட சத்தம், மரத்துல இருக்கர பறவைகளின் சத்தங்கள். இதைத் தவிர வேற ஒரு சத்தமும் கேக்காது.

சும்மா ஒக்காந்துட்டு, சுத்தி இருந்த இலைகள படகா விட்டு, மெதுவா பழைய பாடல்களை முணு முணுத்துக்கிட்டு ஒரு ரெண்டு மணி நேரம் இருந்திருப்போம்.
எழுந்து வீட்டுக்கு போகும்போது, மனசுக்குள் அவ்வளவு இதமான ஒரு சுகம் இருந்தது.

நம் உணர்வுகளோடு விளையாடி நமக்குள் ஒரு மென்மையைப் படரச் செய்யும் ஏதோ ஒரு சக்தி இந்த மாதிரி அழகான இடங்களுக்கு இருக்கிறது போலும்.


என்னக் கேட்டீங்கன்னா, ஒரு நல்ல திரைப் படத்துக்கும் இந்த மாதிரி ஒரு சக்தி இருக்கணும்.

படம் ஆரம்பிச்ச பத்து நிமிஷத்துல நம்மள சுத்தி இருக்கர எதுவும் நமக்கு தெரியக் கூடாது.
படத்தோட அப்படியே ஒன்றிப் போக வைக்கணும்.
படத்தில் இருக்கும் பாத்திரங்கள் சிரிச்சா, நாமும் சேந்து சிரிக்கணும்.
அவங்க கோவப் பட்டா, நாமும் கோபப் படணும்.
அவங்க அழுதா நாமும் சேந்து அழணும்.

'தாரே ஜமீன் பர்' அப்படிப்பட்ட சக்தி கொண்ட ஒரு படம்.

அமீர் கான் நம்ம கமல் மாதிரி போல. சொந்தப் படம் எடுத்தா, முடிஞ்ச வரைக்கும், சீப்பா எடுத்து முடிச்சுடுவாரு.
படத்துல ரிச்சா ஒண்ணும் விஷயமே இல்ல. ஆனா, அதுதான் படத்தோட பலம்.

Powered by: Chakpak.com Taare Zameen Par 


இஷானின் பள்ளி, அவன் தங்கும் அப்பார்ட்மெண்ட், boarding school, ஒரு பழைய ஸ்கூல் பஸ்.
outdoor ஷூட்டிங்னு, ஒரே ஒரு காட்சி மட்டும், மும்பாய் ரோட்ல ஒரு உலாத்தல்.
அவ்வளவே செலவு.
அமீர் கானைத் தவிர, நடிகர்கள் யாரும் ப்ரபலம் அல்லாதவர்கள்.

இப்படியெல்லாம் இருந்தும், படத்தின் ஈர்ப்பு சக்தி அதிகம்.

இசை? காதை செவிடாக்காத அருமையான இசை.
என் நினைவில், முக்கால் வாசி பாட்டு, ஒரு கிட்டார் பின்னணி இசையிலேயே முடிஞ்சுடுது.
ஹிந்தி தெரியாததன் கொடுமை, subtitle பாத்து பாத்து வார்த்தையை அர்த்தம் பண்ண வேண்டியதாயிடுச்சு.
பாடல் வரிகள் அழகோ அழகு. குறிப்பா ஒரு அம்மா பாட்டு வரும். நெஞ்சைப் பனிக்க வைக்கும் காட்சிகளும், பாடல் வரிகளும்.

இஷானை boarding ஸ்கூலில் விட்டுட்டு வந்துடுவாங்க. இஷான், தாயை பிரிந்த துயரத்தில் தேம்பி தேம்பி அழ, நாமும் அவன் கூடவே கலங்கி அழ, பின்னணியில் இந்த பாடல் ஆரம்பிக்கும். Very Touching, really!
சில வரிகளின் அர்த்தம் இங்கே (உபயம் CVR)
கூட்டத்துல என்னை தனியா விட்டு போய்டாதமா
என்னால விட்டுக்கு திரும்பி வர கூட முடியாது
இவ்ளோ தூரம் என்னை தள்ளி அனுப்பாத அம்மா
அப்புறம் உனக்கு என்னை மறந்தே போயிட போகுது
நான் என்ன அவ்வளவு கெட்டவனா அம்மா??
நான் என்ன அவ்வளவு கெட்டவனா,என் அம்மா


குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு காட்சி.
அமீர், இஷானின் dyslexia விஷயம் பற்றி சொல்ல, இஷானின் பெற்றொரை சந்திக்கச் செல்வார்.
அவர் பஸ்ல போகும்போது, பின்னணியில் ஒரு பாடல்.
செல்லும் வழியில் ஒரு டீக்கடைக்கு சென்று உண்பது போல் ஒரு காட்சி.

டீ விற்கும் ஒரு ஆறு வயது சிறுவன். வாழ்க்கையில் எதை இழக்கிறோம் என்பதே தெரியாமல் டீ கடையில் வேலை செய்யும் சிறுவன். உடம்புல சட்டை கூட இருக்காது. பாக்கவே ரொம்ப பரிதாபமா இருப்பான் பையன்.
அமீர் கான அவனைப் பார்த்து ரொம்ப சோகமாயி அவனுக்கு ஒரு டீயும் பிஸ்கட்டும் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைப்பாரு.
அவர் சோகம் ஆகும்போது, நமக்கும் நெஞ்சில் ஒரு வலி.
இந்த வயசுலயே இப்படி எல்லாம் கஷ்டப்படறவங்க எவ்ளோ பேர் இருக்காங்கன்னு, உள்ள சுள்னு வலிக்கும். கண்ணுல தார தாரயா தண்ணி கொட்டும்.

இப்படி நம் உணர்வோடு துல்லியமாய் விளையாடும் பல காட்சிகள்.

நல்ல படம் இப்படித் தானே இருக்கணும்? உணர்வோடு விளையாடி, படத்தை பாத்து முடிச்சுட்டு வந்தா, நம்ம லேசாயிருக்கணும். அட்லீஸ்ட், அடுத்த ஒரு ரெண்டு நாளாவது, அந்த படத்தைப் பத்தி யோசிக்க வைக்கணும்.

அதிலிருக்கும், ஜோக்கை, மத்தவங்ககிட்ட சொல்லி சிரிக்கர மாதிரி இருக்கணும். இல்லன்னா, அதிலிருந்த மெல்லிய நிகழ்வுகள் மனசுக்குள் அசைபோட்டு மனசுக்குள் சிரிக்கவோ, அழவோ செய்யர மாதிரி இருக்கணும்.

அதவிட்டுட்டு, தியேட்டர விட்டு வெளீல வந்த உடனே, "ச! $8 நஷ்டம் மச்சி!"ன்னு பொலம்பர மாதிரி இருக்கக் கூடாது. கூடவே, தலைவலியும் கொடுத்துதுன்னா ஏண்டா இந்த கர்மத்துக்கு போனோம்னு ஆயிடும்.

தா.ஜ.ப சூப்பரான்னு கேட்டீங்கன்னா, சூப்பர்னு தான் சொல்லுவேன்.
கண்டிப்பா, தியேட்டர்ல போய் ஒரு தடவ பாக்க வேண்டிய படம்.

இஷானா நடிச்ச அந்த பையன் கலக்கித் தள்ளியிருக்கான்.

படத்துல பிடிக்காத விஷயம்னு ஏதாச்சும் இருக்கா?

கண்டிப்பா இருக்கு.

எனக்குத் தோணிய சில விஷயங்கள்:

1) அமிதாப்பின் Black படத்துல இருந்த மாதிரி ஒரு நல்ல 'ஓளியமைப்பு' இல்லாமப் போயிடுச்சு. ரொம்ப ப்ளெயினா தெரிஞ்சது காட்சி அமைப்புகள். Ravi K Chandran போட்டிருந்தா, பின்னியிருப்பாரு. அமீர் சொந்த படங்கரதால சீப்பா முடிச்சுட்டாரான்னு தெரியல. (இப்படி ப்ளெயினா இருந்தது படத்துக்கு பலமான்னு தெரியல)

2) படத்தில் வரும் பள்ளி வாத்தியார்களெல்லாம் ஓவர்-ஏக்டிங். அத கொஞ்சம் கவனிச்சிருக்கலாம். (ஆனா, காமெடி வேணுங்கரதுக்காக இப்படி பண்ணிட்டாங்களோ?)

3) Dyslexia மாதிரி ப்ரச்சனை இருக்கும் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கு ஒரு பாடமாக அமைந்த படம். இப்படிப்பட்ட பசங்களை எப்படி அரவணச்சு வளக்கணும்னு நல்லா கொண்டு போனாங்க. ஆனா, படத்தின் முடிவு ஒரு cinematicஆ போனது பெரிய துரதிர்ஷ்டம். தக தக தகன்னு எரிஞ்ச திருவண்ணாமலை ஜோதீல, தண்ணி ஊத்தி அணச்சிட்ட மாதிரி இருந்தது. Dyslexia இருக்கர இஷானுக்கு, நல்ல ஓவியத் திறமை இருக்கரதா காட்டி, இந்த மாதிரி பசங்களுக்கு வேற ஏதாவது ஒரு திறமை உள்ள ஒளிஞ்சுக்கிட்டு இருக்கும், அத தட்டிக் கண்டுபிடிங்க என்பது மாதிரி ஒரு தவறான வழிகாட்டுதல் இருக்கு படத்துல. சினிமாக்கு இது தேவையான முடிவுன்னாலும், இந்த ஒரு காட்சியினால், படத்தின் real-value கம்மியாயிடுது. (அந்த மாதிரி முடிக்கலன்னா டாக்குமெண்டரி மாதிரி ஆயிருக்கலாம் படம். அந்த பயத்தினால் இருக்கலாம்).

மொத்தத்தில் தாரே ஜமீன் பர், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய, மனதை வருடும் படம்.

பி.கு: நல்ல படம் எடுக்க, சுவிட்சர்லாந்துல போயி ரூம் போட்டு யோசிச்சு, ஆஸ்த்ரியாவுல டூயட் பாடி, அமெரிக்கால கார் சேஸிங் பண்ணி, பொள்ளாச்சீல குத்தாட்டம் போட்டு, மயாமில கவர்ச்சி ஆட்டம் ஆடி, ஒரு பழைய பாட்ட ரீமிக்ஸ் பண்ணி, மிஷின் கண்ல 100 பேர சுட்டுக்கிட்டெல்லாம் இருக்கணும்னு அவசியமே இல்லீங்க. அமைதியா மனதை வருடும் விஷயம் இருந்தா போதும். ஜம்முனு ஓடும் படும் ஜம்முனு! புரிஞ்சுப்பாங்களா இனி?

Thursday, January 17, 2008

டோண்டுவைப் போல் ஒருவர்...

என்னவோ தெரீல என்ன மாயமோ புரீல, இவர பாக்கும்போதெல்லாம் டோண்டு சார் ஞாபகம் வந்து தொலைக்குது. :)

யாருமே என்ன மொக்கை போட கூப்பிடல, அதனால, நானே யோசிச்சு ஆராய்ச்சி பண்ணி ஒரு மொக்கைய தயார் பண்ண வேண்டியதா போச்சு.

லொள்ளு சபா பாப்பீங்களா? செம தூள் ப்ரோக்ரோம்னு சொல்லிக்கும்படியா டி.வில எனக்கு தெரிஞ்சு அது ஒண்ணு தான் இருக்கு.

ஸொட்டை மனோகரும் கோஷ்டியும் பண்ற ரகள தாங்க முடியாது.

டோண்டுவ மாதிரி யாருன்னா கேக்கறீங்க?
எனக்கென்னமோ, 'கௌரவம்' சுவாமிநாதன பாத்தா, டோண்டு சாரைப் பாக்கர மாதிரி இருக்குது.
உங்களுக்கு அப்படி இல்ல? இனி கவனிச்சு பாருங்க, அப்படி தெரியலாம் :)

டோண்டு சார், ஸீரியஸா எடுத்துக்க மாட்டேள்னு நம்பறேன். லுலுலுவாய்க்காக இது :)
இது, தனி மனித தாக்குதல்னு நெனச்சா சொல்லிடுங்கய்யா - தூக்கிடறேன் ;)

இது தனி மனித தூக்குதல்னு யாராவது எதிரணியினர் நெனச்சீங்கன்னாலும் சொல்லுங்க :)'டோண்டு' சுவாமிநாதன் கலக்கிய 'கௌரவம்' எப்பிஸோட் கீழே.உங்களுக்குப் பிடிச்ச லொள்ளு சபா எப்பிஸோட் எது? அதையும் பின்னூட்டுங்க, week-end எல்லாத்தையும் பாத்து ஜமாய்ச்சிடுவோம் ;)

பி.கு: எழுதியதில் பிடிச்சது லிஸ்ட் இங்க இருக்கு. அருமையான பதிவுகளை படிங்க. அழைப்பு வந்தவங்க பதிவு போட்டுட்டீங்கன்னா எங்கிட்ட சொல்லுங்க. லிஸ்ட் அப்டேட் பண்ணிடறேன்.

ஹாப்பி வெள்ளி!

நன்றி!

Sunday, January 13, 2008

2007ல் எழுதியதில் பிடித்தது - பதிவர்கள் விரும்பிய பதிவுகளின் பட்டியல்

'எழுதியதில் பிடித்தது' என்ற புதிய தொடர் விளையாட்டு ஸ்டார்ட் மீஜிக் பண்ணிவிட்டிருந்தேன்.

அதாவது, 2007ல் எழுதியதில் தங்களுக்குப் பிடித்த சிறந்த பதிவு எதுன்னு ஒரு பதிவு போடணும். ஏன் அந்த பதிவு பிடிச்சதுன்னும் சொல்லணும்.
அப்படியே, இன்னும் 5 பேர இப்படி அவங்க பதிவு பத்தி எழுத சொல்லணும்.
ரொம்ப சுலபமான விளையாட்டில்ல?
பதிவர்களின் சிறந்த பதிவு இதன்மூலம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் பெறும். இதுவரை அதப் படிக்காதவங்க படிப்பாங்க என்ற எண்ணத்தில் உதித்த விளையாட்டு இது.
நான் அஞ்சு பேருகிட்ட டார்ச்சர, ஐ மீன், டார்ச்ச கொடுத்துட்டேன். உங்ககிட்ட சீக்கிரமே வரும்.

பதிவர்களின் சிறந்த பதிவுகளை, இங்கே கட்டம் கட்டி தொகுக்க உள்ளேன்.
('எழுதியதில் பிடித்தது' பதிவு போட்டதும், இங்க வந்து சொல்லிட்டீங்கன்னா, என் வேல சுலபமாயிடும் :) )

2007ன் சிறந்த பதிவுகளை படித்து இன்புறுங்கள்! :)

1) சர்வேசன் - எட்டெல்லாம் பத்தாது சார்.. அதிசயப் பிறவி நான்
2) CVR - தொலைந்து போன நட்பு (இணைய நட்பு பற்றிய சிறுகதை)
3) தருமி - பொங்கல் கொண்டாடலாம் வாங்க ... ARGUMENT CONTINUES...
4) வெட்டிப்பயல் - புது வெள்ளம்
5) பாஸ்டன் பாலா - Any Technology: Overcoming Language Barriers
6) ஆசீஃப் மீரான்
7) இளவஞ்சி - ரிசர்வேஷன்
8) யெஸ். பாலபாரதி - லிவிங் ஸ்மைல்:உண்மையில் நடந்தது என்ன..?
9) பொன்ஸ் - ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது
10) வரவனையான்
11) முத்து - தமிழினி - அலங்காநல்லூர் சமாச்சாரம் பற்றி
12) ட்ரீம்ஸ்
13) கப்பி பய - இராஜேந்திரன் கதை
14) குசும்பன்
15) கானா பிரபா
16) வற்றாயிருப்பு சுந்தர்
17) கண்மணி - ச்சுப்ரமணிக்க்கு என்ன இனிஷியல்
18) Baby Pavan - என்ன கொடுமை சரவணன் இது....
19) வல்லிசிம்ஹன் - ரசமும் நானும் பில்வாக்கரும்
20) பினாத்தல் சுரேஷ் - கனவிலும் வரக்கூடாத தமிழ்மணம்தான்.
21) வினையூக்கி - ஒன்றே ஒன்று
22) காட்டாறு - தாயுமானவள்
23) முத்துலெட்சுமி - நிகழ்தகவின் படி என்றேனும்
24) தேவ்(2)
25) ramachandranusha(உஷா) - துபாய் இஸ்லாமியர்கள் என் பார்வையில்
26) இராமநாதன்
27) லக்கி லுக் - சிஸ்டர் ஐ லவ் யூ
28) குமரன்
29) அரை பிளேடு - கோடம்பாக்கத்தில் மிஸ்டர் ஷெர்லாக் ஹோம்ஸ்...
30) இலவசகொத்தனார் - விடுகதையா இந்த வாழ்க்கை
31) ட்ரீம்ஸ்
32) delphine - அப்புகுட்டனும் நானும்
33) குசும்பன்
34) கானா பிரபா - எல்.வைத்யநாதன் - ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்
35) வற்றாயிருப்பு சுந்தர்
36) "மனசுக்குள் மத்தாப்பூ” திவ்யா - தாய்மை
37) வலையுலக அப்ரிடி TBCD
38) சிவபாலன்
39) ஜேகே
40) சென்ஷி
41) கைப்ஸ்
42) இராம்
43) ஜி
44) தம்பி
45) இளா
46) மங்கை - Growing Old
47) மலர்வனம் லக்ஷ்மி
48) டாக்டரம்மா....
49) சின்ன அம்மனி
50) Cheena (சீனா) - மலரும் தீபத் திருநாள் நினைவுகள்
51) இரா. வசந்த குமார் - இவனை இவளால்..!
52) லிவிங் ஸ்மைல் - ஏன் லிவிங் ஸ்மைல்?
53) அபி அப்பா - ஒரு கிராமத்து நினைவுகள்
54) ஜமாலன் - பெண் ஆண்களுக்கு கலவரம் ஊட்டக்கூடியவளாக இருக்கிறாள்
55) Kannabiran, RAVI SHANKAR (KRS) - அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்
56) சந்தனமுல்லை - மயிலிறகே... மயிலிறகே...
57) இரண்டாம் சொக்கன் - நானே கடவுள்
58) வடுவூர் குமார் - பத்து விரலிலும் புளி
59) சதங்கா (Sathanga) - கிராமத்துப் பேருந்துப் பயணம்
60) Raja - கடவுளே... இது சரிதானா?
61) தமிழ்நெஞ்சம் - ஆங்கில அறிவு பற்றிய விழிப்புணர்வு
62) அருணா - ஜெயிலுக்குப் போனோமில்லே, கவிதை

பி.கு: இதுவரை அழைப்பு வராதவர்கள் கூட, 'எழுதியதில் பிடித்தது' பதிவை போடலாம். தெய்வ குத்தம் ஆகாது என்று சபையில் முடிவு செய்யப்பட்டு விட்டது. ஜமாய்ங்க ;)

நன்றி! :)

Wednesday, January 09, 2008

எழுதியதில் பிடித்தது - விளம்பர விளையாட்டு

எல்லாரும் ஆளுக்கொரு வெளையாட்டு வெளையாடிட்டிருக்காங்க. மொக்க டாக், படம் புடிச்சதுல புடிச்சது, அது இதுன்னு ஜாலியாதான் இருக்கு.

நானும் நேத்துதான் ஒரு வெளையாட்ட வெளையாடிட்டு வந்தேன்.

எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஓடிப்போயிடுச்சு. ஆரம்பிச்ச மொத நாள்ள இருந்த எழுத்து பொலம தான், இன்னிக்கும் இருக்கு.
'வெற்றி' வேர வந்து திட்டிட்டுப் போயிட்டாரு - தங்கிலீஷ கலக்காம எழுதினாதான்யா நீ உருப்படுவன்னு. அதுவும் சரிதான். இந்த வருஷத்துல கொஞ்சமாவது மெனக்கெட்டு எழுதணும்னு முடிவு.

ஜிம்முக்கெல்லாம் போயி ஒடம்ப தேத்தலாம்னு முடிவு.
போன வருஷம் வாங்கின கிட்டார தூசு தட்டி, ரெண்டு மூணு பாட்டாவது வாசிக்கக் கத்துக்கலாம்னு முடிவு.
ரோம் பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. இந்த வருஷம் அது நிறைவேத்தணும்னும் ஒரு முடிவு.

இப்படி பல ஆசைகள் இருக்கு இந்த வருஷம், அதனால, எழுத்துப் பணியை (ஹிஹி), கொஞ்சம் ஸ்லோ டவுன் பண்ணிட்டு, மத்தத கவனிக்கலாம்னும் முடிவு. (நடக்குதான்னு பாப்போம்). பதிவுகள பாக்கலன்னா, கைகால் எல்லாம் ஒதருதே, எல்லாருக்கும் அப்படிதானா? :)

இப்டீ யோசிச்சுக்கினு இருக்கும்போது தோணிச்சு, 'ஒரு வருஷமா இன்னாத்த அப்படி எழுதிட்டோம்னு' -ஆர்க்கைவ்ல பாத்தா, ஒண்ணும் பெருசா இல்ல.

எல்லாரும், என்னமா எழுதராங்க, நமக்கு ஏம்பா பெருசா எழுத வரலன்னு ஒரே பீலிங்.
சிறில் ஒரு கவிதை எழுதி அனுப்புன்னாரு. ரைமிங்கா முடியர மாதிரி கவிதைய எழுதிட்டு படிச்சா, எனக்கே காறித்துப்பணும் போல இருக்கு. அப்படி இருக்கு நம்ம பொலம.

ஹ்ம். இந்த ஜென்மத்துல எழுத்தாளனாக முடியாதுன்னு புரிஞ்சுடுச்சு. நமக்கு இந்த ஜென்ம சாப்பாடு, ஆணி புடுங்கரதுலதான்னு தெளிவாயிடுச்சு.

சரி, ஏன் இந்த பொலம்பல்? இப்ப என்ன விளையாட்ட பத்தி சொல்ல வரன்னுதான கேக்கறீங்க?

ஒரு வருஷம் ஓடிப்போச்சே, இந்த ஒரு வருஷத்துல, எழுதிக் கிழிச்சதுல, எது ரொம்பப் பிடிச்சதுன்னு சொல்லணும். அது ஏன்னும் சொல்லோணும். இதுதான் வெளையாட்டு.

யாரும், இந்த விளையாட்ட இதுவரைக்கும் ஆரம்பிச்சிடலயே? காப்பிரைட் நம்மளுதுதானே?

மொதல்ல, நான் எழுதியதில் பிடிச்சது எதுன்னு சொல்லிட்டு, இன்னும் 5 எழுத்தாளர்களை, இதே இக்கட்டுல மாட்டி விடணும்.

2007ல் என் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது:

எட்டெல்லாம் பத்தாது சார்... அதியப் பிறவி நான்

என்ற எனது சுயசரிதைப் பதிவு தான்.

எனக்கு ஏன் இது ரொம்ப பிடிச்சதுன்னா, என் மற்ற பதிவுகளை போல் ஈ ஓட்டாமல், பதிவு போட்டதும், சட் சட்னு பின்னூட்டமா வாங்கித் தள்ளிச்சு.
என் சுயசரிதையில் இடம்பெற்ற சம்பவங்களில் சில, பல பதிவர்களை ஊக்கப் படுத்தியதாகவும் கேள்விப் பட்டேன்.
எனக்கே கூட இப்ப பதிவ படிக்கும்போது, மெய் சிலிர்க்குது. நானா இப்படின்னு.

என் பெருமைகள் போதும், இனி அவங்கவங்க எழுதினதுல, அவங்கவங்களுக்குப் பிடிச்சத சொல்லச் சொல்லி ஒரு 5 பேரை கூப்பிடறேன்.
ஐவர் என்றதுமே நினைவுக்கு வருவது, நமது 'நச்' நடுவர் குழுதான். ஆட்டையில் சேரும் படி கேட்டுக்கறேன் ஐயாக்களே.
பதிவுக்கு "எழுதியதில் பிடித்தது - தொடர்"னு label பண்ணிடுங்க.

உங்க 'எழுதியதில் பிடித்தது' பதிவ போட்டதும், இங்க வந்து ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க. நான் எல்லாத்தையும் கோத்து வைக்கப் போறேன், ஒரே பக்கத்துல. நன்றி!

1) CVR
2) தருமி
3) வெட்டிப்பயல்
4) பாஸ்டன் பாலா
5) ஆசீஃப் மீரான்


நல்லாருக்கா ஐடியா?
உங்க சிறந்த பதிவை விளம்பரப் படுத்த ஒரு சான்ஸா இத எடுத்துக்கிட்டு கலக்குங்க :)

Tuesday, January 08, 2008

பிடிச்சதில் பிடிச்சதாம் - விளையாட்டு புதுசு

அங்க தொட்டு, இங்க தொட்டு அப்பரம் இங்கயும் தொட்டு இப்ப நம்மளயும் தொட்டுட்டாங்க.

என்ன எழுதரதுன்னு தெரியாம கலக்கத்துல இருந்த நமக்கு இந்த மாதிரி கூப்பிட்டது சந்தோஷமா போயிடுச்சு.

ஆட்டையில நம்ம கிட்ட பந்த போட்ட சக போட்டோ வாத்தி CVRக்கு ஒரு டாங்க்ஸ்.

வெளையாட்டு என்னன்னா, 2007ல் நான் புடிச்ச படத்துல எனக்கு பிடிச்சது ஏதாவது ஒண்ண எடுத்து போட்டு, அத பத்தி ரெண்டு வரி சொல்லணுமாம்.
சொல்லிப்புட்டு, இன்னும் மூணு பேர இந்த மாதிரி சொல்லச் சொல்லி வம்புக்கு இழுக்கணுமாம்.

நல்லா இருக்கே. யாருங்க ரூம் போட்டு யோசிக்கரது இப்படியெல்லாம் வெளையாடலாம்னு?

சரி வெளையாடலாம்னு நானும் MyPics/2007/ல இருக்கர படங்கள மேய ஆரம்பிச்சேன்.
அடா அடா அடா எவ்ளோ படங்கள் எவ்ளோ படங்கள். எடுத்துத் தள்ளியிருந்திருக்கேன். வாழ்நாள்ள 20% க்ளிக்கரதுக்கே செலவு செய்றேன் போல.
ஆனா பாருங்க, க்ளிக்கின ஆயிரமாயிரம் படத்துல, 2% தான் சுமாரா வருது :)

ஓரளவுக்கு சுமாரா வர படமெல்லாம் ஏற்கனவே நம்ம ஆல்பத்துல போட்டுட்டதால, இப்படி டகால்னு கேட்டதும் எத போடரதுன்னு தெரியாம ஒரு மணி நேரம் கொழம்பிட்டேன்.

இவ்ளோ ஆயிரம் படங்கள் க்ளிக்கின எனக்கே இந்த நெலமையான்னு நெனச்சு எங்க வீட்டு ஸீலிங்க பாத்தேன்.
"சர்வேசா என்ன கொடுமைய்யா இது"ங்கர மாதிரி.

டகால்னு சொவத்துலேருந்து அசரீரி கத்திச்சு

"
சர்வேசா. என்ன தயக்கம் உனக்கு?
பார் போற்றும்
PITன் உறுப்பினன் நீ.

Yashica, Nikon, Canon என்று தயங்காமல் புதிய புதிய கேமராக்கள் வாங்கிய கலைஞன் நீ.
எடுப்பதில் 98% நேர தண்டம் என்று தெரிந்தும், க்ளிக்கிக் கழித்த காலங்களை நினை.

ஒன்றுமே தெரியாவிட்டாலும், நானும் படம் எடுக்க சொல்லித் தருவேன் என்று தயங்காமல் களம் இறங்கிய உன் வீரத்தை எண்ணிப் பார்.

சொத்தையான உன் படங்களை Gimp கொண்டு மெருகேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றும் ஜெகத்ஜாலக் கில்லாடி நீ.

மறந்துவிட்டாயா கடந்த பெப்ரவரி மாதத்தை?

16 குடும்பங்களில் பெரும் குழப்பம் விளைவித்தாயே நினைவில்லையா?

தேமே என்று மொக்கை போட்டுக் கொண்டிருந்த 16 பதிவர்களை வம்புக்கிழுத்து ஒரு புகைப்படப் போட்டி வைத்தாயே மறந்துவிட்டதா?

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு என்று ஐன்ஸ்டீன் போல் யோசித்து ஒரு தலைப்பு வைத்தாயே.

விவசாயிகளின் நன்மையை கருத்தில் கொண்டு, இந்தக் காய்கறிகளின் விலை உயர நீ செய்த கபட நாடகம் அது என்று எவ்வளவு பேருக்குப் புரிந்திருக்கும்?
பேதைகள்.

ஆட்டையில் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு விழுந்தார்களே.
கிலோக் கணக்கில் காய்கறி வாங்கி, ரிச்சாக க்ளிக்கிய அந்த பதிவர்கள் வாழ்க. அதை ஏற்பாடு செய்த நீயும் வாழ்க.

ஃப்ரிட்ஜில் இருந்த பழைய வெங்காயத்தையும், காய்ந்து போன கால்வாசி உருளையையும், குப்பையில் போட்ட தக்காளியை மட்டும் வைத்துக் கொண்டு படம் அனுப்பினார்களே சிலர்.
அதையெல்லாம் மறந்துவிட்டாயா?

சின்ன வெங்காயம் சீப்பாய் கிடைக்கிறதென்று அதை தரையில் கொட்டி படம் எடுத்து சிலர் அனுப்ப்பினார்களே. எப்படியப்பா மறந்தாய் அந்த ஆணவத்தை?
புகைப்படப் போட்டிக்கு, உருளைக்கு மேக்கப் போட்டு ஒரு படம் வந்ததே. அந்த கர்வத்தை எப்படி புறம் தள்ளினாய் நீ?

தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த போட்டி அல்லவா அது.

2007ல்
த.வெ.உ வை விட சிறந்த படம் ஏது சர்வேசா?

போட்டி முடிந்ததும், அடுத்த பத்து நாட்களுக்கு வெறும் வெங்காய தோசையும், வெங்காய பஜ்ஜியும், வெங்காய ஊத்தமும், வெங்காய ரைஸும், வெங்காய பக்கோடாவுமாய் சாப்பிட்டு வாய் கப்பெடுத்து அலைந்தாயே? மறந்ததெப்படி அதை?

அந்த பந்தயத்தை விளம்பரப் படுத்த, நீயும் சில படங்கள் வெட்கம் இல்லாமல் எடுத்து அங்கங்கு போட்டாயே, நினைவில் இல்லையா?

அறிவியலில் (சீ இல்ல இல்ல வரலாறில்) இடம் பிடித்த படங்கள் அல்லவா அவை.

அதில் ஒன்றை உருவி விடப்பா.
"

இப்படி கன்னா பின்னான்னு சொல்லிட்டு, அசரீரி லைட் ஆப் பண்ணிட்டு போயிடுச்சு.

அடடா, த.வெ.உ எப்படி மறக்க முடியும். நான் மட்டுமே ஒரு 50 படம் விதவிதமா க்ளிக்கி பாத்தேனே, தக்காளி , வெங்காயம் உருளை வச்சு :)

கறுப்பு லெதர் ஸோஃபாவுல, காய்கறியெல்லாம் போட்டு, ஒரு கறுப்பு பின்னணியில படம் எடுத்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு.
காயெல்லாம் கொட்டி எடுத்துப் பாத்தா, ஏதோ கொறஞ்ச மாதிரி பீலிங்.
வீட்ல இருக்கரவங்களெல்லாம், ஏதோ மற கழண்டுடுச்சுன்னு முடிவே பண்ணியிருந்த சமயம் அது.
சட்னு போய், கப்ல தண்ணி பிடிச்சுட்டு வந்து, காய்கறிமேலயும், லெதர் ஸோபா மேலயும் தெளிச்சு (effect சேக்கராராமா:) ), டேபிள் லேம்ப்ப ஒருத்தர் கிட்ட கொடுத்து, எல்லார் கிட்டையும் திட்டு வாங்கி, எடுத்த ஒரு படம் இது.நல்லாயிருக்கா?

இனி மூணு பேர நான் ஆட்டைக்கு சேக்கணுமாமே?

ம்ம்ம்ம்மாட்டிவிட்டுட்டேன், இவங்கள:
நீங்க செய்யவேண்டியது: 2007ல் நீங்க எடுத்த படத்தில் பிடிச்சத பதிவாக்கி, ரெண்டு நல்ல வார்த்தை சொல்லிட்டுப் போங்க.

1) நம்ம த.வெ.உ வெற்றியாளர் நெல்லை சிவா (condition: நீங்க த.வெ.உ படம் போடப்படாது :) )

2) நச் வெற்றியாளர் அருட்பெருங்கோ (நச்னு இருக்கணும் படம்)

3) இதுவரை எந்த படமும் (எனக்குத் தெரிஞ்சு) வலையில் ஏற்றாத லக்கி லுக் (கலைஞர் படம் போடப் படாது. நீங்க எடுத்த படமா போடணும். மகரநெடுங்குழைநாதன் படம் ஓ.கே. ஆனா, கிராபிக்ஸ் பண்ணியிருக்கக் கூடாது :) )

;)

Sunday, January 06, 2008

சிறந்த 'நச்' கதை - முடிவுகள்

வணக்கம்! வணக்கம்! வணக்கம்!

சிறந்த 'நச்' கதையின் இறுதிகட்ட வாக்கெடுப்பு இனிதே முடிவடைந்தது.
8 கதைகள் பங்கு பெற்ற இறுதி கட்ட வாக்கெடுப்பின் வெற்றிக் கதையை தேர்ந்தெடுக்க, புதிய முறையில், ஈ.மெயில் மூலமாக, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் 239 வாக்குகள் பதிவாகியிருந்தன. (இதில் 40 வாக்குகள் செல்லாதவை, அதாவது, ஈ.மெயில் படித்து அப்ரூவ் செய்யப்படாதவை).

மொத்தம் போட்டிக்கு வந்த 57 கதைகளும் அருமையான ரகம். ஒவ்வொன்றிலும், 'நச்'சின் வீரியம் ஒவ்வொருமாதிரி அமைந்திருந்தது சிறப்பு. பங்களித்த ஒவ்வொருவரும் வெற்றியாளர்களே :)
டாப்-8ல் இருந்த ஒவ்வொரு நச்சும் நெத்தியடி ரகம்.

டாப்-8ல், மிகச் சிறந்த 'நச்' வெற்றி பெறட்டும் என்ற எண்ணத்தில், ஒரு 'ஐவர்' குழு அமைக்கப் பட்டு ஒவ்வொரு கதைக்கும் அவர்களின் மதிப்பீடை அளிக்கச் சொல்லியிருந்தேன்.
ஐவர் குழுவின் மதிப்பீடும், மக்களின் வாக்கெடுப்பும், 50:50 அடிப்படையில் கலந்து, அதிக மதிப்பெண் பெற்ற கதையை சிறந்த 'நச்' கதையாக தேர்ந்தெடுத்துள்ளோம்.

ஐவர் குழு யார்னு தான கேக்கறீங்க? இதோ இவிகதான் அவிக:
1) CVR
2) தருமி
3) வெட்டிப்பயல்
4) பாஸ்டன் பாலா
5) ஆசீஃப் மீரான்

மதிப்பெண்களை பார்க்கும் முன், டாப்-8 கதைக்கான ஆசீஃபின் விமர்சனம் கீழே (லேஸான மாற்றங்களுடன் -வேற ஒண்ணுமில்ல அவர் போட்ட மார்க்க விமர்சனத்துல இருந்து எடுத்துட்டேன்):

1. கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்.. (மோகன் தாஸ்)
கதாபாத்திரத்தின் தன்மையை எங்கும் கலைத்து விடாத நம்பகத் தன்மை 'நச்' கதைக்கேற்ற விறுவிறுப்பு குறையாத உரையாடல்கள் மற்றும் சம்பவங்கள் சொதப்பலான நச் இல்லாமல் நடக்கக் கூடிய அதீத தன்னம்பிக்கை கொண்டவன் அசடு வழிவதை யதார்த்தமான திருப்பமாகக் கொண்டு வந்தது....

2. அரசியல்வாதி (வீ.எம்)
தமிழ் திரைப்படம் மாதிரியே இருக்கு. பெரிய திருப்பமென்று சொல்லி விடும் அளவுக்கு 'நச்'சாக இல்லை. கதையில் கருத்துச் சொல்லும் ஆதிகாலப் பழக்கம் கொஞ்சம் அயர்ச்சி தருகிறது.

3. தப்பா நெனைக்க மாட்டியே! (ஜெகதீசன்)
பூச்சுற்றும் கதை :-) எதிர்பார்த்தபடியேதான் இருக்கிறது முடிவு - யூகிக்க முடிவதாக. (படமெடுக்க அனுமதி கேட்பது போல உப்புச்சப்பில்லாத விசயத்தைத்தான் கேட்கப் போகிறான் நாயகன் என்று நான் யூகித்தபடியேதான் இருந்ததால் 'நச்'சென்று இல்லாமல் 'சப்'பென்று இருந்தது கதை. நல்லவேளையாக 'சட்'டென்று முடித்திருப்பதால்...

4. ஜன்னல் வச்ச ஜாக்கெட்காரி (அரை பிளேடு)
சுவாரஸ்யமான எழுத்து நடை. எதிர்பார்த்திருக்கக் கூடிய முடிவுதானென்று யாரும் சொல்லி விடக்கூடாதென்பதற்காக 'நச்' 'நச்'சென்று நிறைய முடிவுகளைச் சொல்லியிருப்பது சுவையாக இருக்கிறது. கலாசாரக் காவலர்கள் இவர் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பினாலும் அலுக்காத அந்த எழுத்திற்காக நான் வழங்குவது...

5. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் (நாடோடி இலக்கியன்)
எதிர்பார்த்த முடிவு. வழக்கம்போல கதையில் செய்தி.ஆனால் யதார்த்தம். எழுத்து நடையில் இன்னமும் கவனம் செலுத்தினால் நன்றாக இருந்திருக்கும்.

6. என்னால் அவள் இரண்டு மாசம் (குசும்பன்)
நிறையத் தணிக்கை செய்திருந்தால் 'நச்'சென்று சொல்ல முடிந்திருக்கக் கூடிய கதை. ஆனால் கதைக்கான எந்த ஆயத்தமும் இல்லாமல் நண்பனோடு அரட்டையில் பேசுவது போல எழுதப்பட்டிருக்கிறது கதை. சொல்வதை அழகாகச் சொல்ல முடியாத காரணத்தினாலேயே இந்தக் கதை அதன் சிறப்பை இழந்து விட்டதாகத்தான் தோன்றுகிறது..

7. சென்னைக் காதலும் திருச்சி காதலும் (அருட்பெருங்கோ)
அசத்தலான காதல் கதை. நீளமான கதையென்றாலும் அவன் அவள் என்பது சற்றே குழப்பினாலும் கதையின்முடிவு உண்மையிலேயே 'நச்' சென்றுதான் இருக்கிறது. நீளமான கதையைப் படிக்க வைத்திருப்பதொன்றே இந்தக் கதாசிரியரின் எழுத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றியென்று கூடச் சொல்லலாம்தான் .

8. எதுனா வேலை இருந்தா குடு சார் (நிலா)
விறுவிறுப்பான கதை. சம்பவங்களை நகர்த்திக்கொண்டே செல்லும் அழகும் சுறுசுறுப்பும் நேர்த்தியாக இருக்கிறது போட்டிக்கு தேவையான 'நச்' திருப்பமும் யூகிக்க முடியாததாகவே இருக்கிறது. முதல் கதை என்பது இன்னமும் உற்சாகம் தருவதாக இருக்கிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

விமர்சனமெல்லாம் சூப்பர் இல்ல? எது வெற்றிக் கதைன்னு யூகிச்சிட்டீங்களா?

சரி, இனி, இறுதி கட்ட வாக்கெடுப்பில் மக்கள்ஸின் வாக்கெடுப்பு முடிவுகளை பாப்பமா? (snapshot taken on Jan 6th 6PM PST )

விவரங்கள் இங்கே


199 வாக்குகளில் 66 வாக்குகள் (33.17%) பெற்று முன்னணியில் இருக்கும் 'நச்' கதை அருட்பெருங்கோவின் 'சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்'.

இப்ப, 'ஐவர்' குழுவின் மதிப்பீடுகளைப் பாப்பமா? (in no particular order)

கதைநச்%
1. கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில் (மோகன்தாஸ்)785875757572.2
2. அரசியல்வாதி (வீ.எம்) 556550806963.8
3. தப்பா நினைக்க மாட்டயே? (ஜெகதீசன்) 557350605658.8
4. ஜன்னல் வெச்ச ஜாக்கெட்காரி (அரை பிளேடு) 755570803963.8
5. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!! (நாடோடி இலக்கியன்) 605350705056.6
6. என்னால் அவள் இரண்டு மாதம் (குசும்பன்) 658365655065.6
7. சென்னைக் காதலும், திருச்சிக் காதலும் (அருட்பெருங்கோ) 709575909985.8
8. எதுனா வேல இருந்தா குடு சார் (நந்து f/o நிலா)807875855073.6மார்க் எல்லாம் சும்மா 'நச்'னு போட்டிருக்காங்க இல்ல?
ஆச்சரியம் என்னன்னா, மக்களின் தீர்ப்பும், ஐவர் குழுவின் தீர்ப்பும் ஒரு விஷயத்துல ஒரே மாதிரி அமைஞ்சிருக்கு. எனக்கும், கூட்டிக் கழிச்சு ரொம்ப மண்ட கொடச்சல் இல்லாமப் போச்சு அதனால. :)

மக்களாலும், ஐவர் குழுவாலும், சிறந்த 'நச்' கதை என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கதை:

அருட்பெருங்கோ'வின்


சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ! அருமையான கதை. இரண்டு நிகழ்வுகளை மாற்றி மாற்றி அமைத்து, இறுதியில் இரண்டையும் கோர்த்தது, 'நச்!'. அமக்களப்படுத்திட்டீங்க.

உங்களுக்கான பரிசு $25!

surveysan2005 at yahoo.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் பெயரில் $75 உதவும் கரங்களுக்கு அனுப்பப்படும். அதன் விவரங்களும் உங்களுக்கு அனுப்புகிறேன்.

அருட்பெருங்கோ, உங்களுக்கான பதக்கம் இதோ:)


இறுதிச் சுற்றில் இடம் பிடித்த அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்!
உங்களுக்கான பதக்கம் இதோ :)

(பதக்கம், அப்லோட் செய்தால் கொஞ்சம் அழுக்கா இருக்கா. அழகான பதக்கம், ஈ.மெயிலில் தொடர்பு கொண்டால் attachmentஆக அனுப்பி வைக்கிறேன் ;) )

ஒட்டுமொத்த வாக்கில் 2nd and 3rdஆக வந்த ஜெகதீசன், நந்து
மற்றும், மக்கள் வாக்கில் 2nd and 3rdஆக வந்த ஜெகதீசன், நாடோடி இலக்கியன்,
மற்றும், நடுவர் வாக்கில் 2nd and 3rdஆக வந்த நந்து, மோகந்தாஸ்
உங்களுக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்!

சிறந்த 'நச்' போட்டியை ஒரு ஆரோக்யமான, சுவாரஸ்யமான போட்டியாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றி!

பங்கு பெற்றவர்கள், விளம்பரம் அளித்தவர்கள், விமர்சனம் எழுதியவர்கள், வாசித்து வாக்களித்தவர்கள்,வாசிக்காமல் வாக்களித்தவர்கள், அப்ரூவ் செய்தவர்கள், அப்ரூவ் செய்யாதவர்கள் (grrrr), கொலை வெறிப் படை ரசிகர்கள், ஐவர் குழுவைச் சேர்ந்தவர்கள், நச்சோ நச் என்று தினம் ஒரு நச் எழுதியவர்கள், தேர்தல் அதிகார்கள், பூத் ஏஜண்டுகள், etc.. etc... அனைவருக்கும் நன்றி!

போதும்யா 'நச்'சு!
இனி, வேற ஏதாவது யோசிப்போம் ;)

சிறந்த 'ஜிவ்'©வு கதை எப்படி இருக்கு? (© ஆசீஃப்) :)

Tuesday, January 01, 2008

சிறந்த 'நச்'© கதை - இறுதிக்கட்ட வாக்கெடுப்பு ஆரம்பம்

'நச்'©னு ஒரு கதை'ப் போட்டியின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் 8 கதைகள் இடம்பெறுகின்றன.

முதற்கட்ட வாக்கெடுப்பில் முன்னணியில் வந்த டாப்-7 கதைகள் பாத்திருப்பீங்க.

இறுதிக் கட்ட போட்டியில், மக்கள் வாக்கெடுப்பை மட்டும் கணக்கில் வைக்காமல், ஒரு "ஐவர் குழு"வின் மதிப்பீடுகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐவர் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்பது, முடிவுகள் அறிவிக்கும்பொழுது தெரிவிக்கப்படும். அதுவரை, சஸ்பென்ஸ் :)

மக்கள் வாக்கெடுப்பும், ஐந்து நடுவர்களின் மதிப்பெண்களும் 50:50 விகிதாசாரத்தில் கலந்து போட்டியில் வெற்றி பெற்றவர் யாரென்று அறிவிக்கப்படுவார்.

57 கதைகளில், டாப்-7ல் வராமல் இருந்த கதையை நடுவர் குழுவிடம் படிக்கச் சொல்லி, அதில் எந்த ஒரு கதை "அடடா, இந்த கதை நல்ல நச் கதையாச்சே, இறுதிக் கட்டத்துக்கு போகாம போயிடுச்சே"ன்னு தோண வைக்குதோ, அதை அவர்களின் wild-card செலக்ஷனா அனுப்பச் சொன்னேன்.
அப்படி வரும் கதைகளில், ஒரே கதையை ஒன்றுக்கு மேலான நடுவர்கள் சொல்லியிருந்தா, அந்தக் கதையையும் இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளும் எண்ணம் இருந்தது.

ஐவர் குழுவிடமிருந்து, ஒன்றுக்கு மேற்பட்ட சிபாரிசு பெற்ற ஒரே கதை
மோகன்தாஸின் - "கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதில்" என்ற நச் கதை.
ஆகையால், இந்தக் கதையும், இறுதிக் கட்ட வாக்கெடுப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

wild-card சிபாரிசுகள் பெற்ற மற்ற கதைகள் இ.கா.வள்ளியின் "யாரோ அவள் என்னவள்?" மற்றும் பெனாத்தல் சுரேஷின் "கடன் அட்டை". ஒரு நடுவர் மட்டுமே இதனை சிபாரிசு செய்ததால், இதனை இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் சேர்க்க முடியவில்லை.

ஸோ, இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் கீழுள்ள டாப்-8 கதைகள் உள்ளன.
1) கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில் (மோகன்தாஸ்)
2. அரசியல்வாதி (வீ.எம்)
3. தப்பா நினைக்க மாட்டயே? (ஜெகதீசன்)
4. ஜன்னல் வெச்ச ஜாக்கெட்காரி (அரை பிளேடு)
5. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!! (நாடோடி இலக்கியன்)
6. என்னால் அவள் இரண்டு மாதம் (குசும்பன்)
7. சென்னைக் காதலும், திருச்சிக் காதலும் (அருட்பெருங்கோ)
8. எதுனா வேல இருந்தா குடு சார் (நந்து f/o நிலா)

அடுத்தது என்ன? வாக்கெடுப்புதேன்!

தயவு கூர்ந்து, மேலே உள்ள கதைகளில், உங்களை மிகவும் கவர்ந்த 'நச்' கதைக்கு, உங்கள் வாக்கை அளியுங்கள்.
நல்ல 'நச்' கதை வெல்லட்டும்.

வாக்குப் பெட்டியில், ஈ.மெயில் முகவரியை தரவேண்டும்.
வாக்களித்ததும், உங்கள் ஈ.மெயில் முகவரிக்கு வரும் மடலை வாசித்து, உங்கள் வாக்கை approve செய்ய வேண்டும். தவறாமல் Junk/Spam folderகளை செக் செய்யவும். Approve செய்யும் வரை உங்கள் வாக்கு செல்லாது.

உங்களின் சில நிமிடங்களை ஒதுக்கி, வாக்கெடுப்பில் பங்கு பெற்று, நம் 'நச்' கதாசிரியர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பங்கு பெற்ற அனைவருக்கும், வாக்களித்தும், பின்னூட்டியும் ஊக்குவித்த அனைவருக்கும், இதுவரை வெற்றி பெற்ற டாப்-8 நச்-ஆசிரியர்களுக்கும், விமர்சனம் எழுதிய பாஸ்டன்.பாலா, Srikanth மற்றும் நடுவர்களுக்கும் நன்றிகள் பல.

Happy Voting & Happy New Year to you all!
வாங்க, சேந்து கலக்குவோம். ;)

fyi, கள்ள ஓட்டு வீட்டுக்கும், நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும், 'நச்'சுக்கும் கேடு! :)

****வாக்கெடுப்பு முடிவடைந்தது. ****

ஜனவரி 7 2008 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்!

இந்த பக்கத்திர்க்கு விளம்பரம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்குப் பிடித்த 'நச்' கதைக்கும் விளம்பரம் தரலாம்.

டாப்-8 கதாசிரியர்களும், தங்கள் கதைக்கு, விருப்பப்பட்டால் போஸ்டர் அடித்து விளம்பரம் கொடுக்கலாம்.
உங்கள் கதை ஏன் வெற்றி பெற தகுதிவாய்ந்தது என்று ஒரு 'அலசல்' பதிவையும் போட்டால் சுவாரஸ்யம் கூடும்.

வெற்றி பெறும் கதைக்கு பரிசு: $25
அதைத் தவிர, $75 உதவும் கரங்களுக்கு கதாசிரியரின் பெயரில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள், அனைவருக்கும்!

ஸ்டார்ட் த மீஜிக்!

பி.கு: புத்தாண்டு ரெஸல்யூஷன் -- நச் கதை முடிந்த பிறகு, எழுதப் போகும் புதிய பதிவுகளில், தங்கிலீஷ் இல்லாமல் எழுத முயற்சி செய்வது - "டார்கெட் 100% தமிழ்!" என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி பதிவுகள் இட முயற்சித்தல் ;)

பி.கு: இந்த codeஐ உங்கள் பக்கங்களில் போட்டும் வாக்கெடுப்புக்கு விளம்பரம் தரலாம்:


பி.கு: 57 கதாசிரியர்களும் தவறாது வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் ;)