சிக்கல்கள் இருக்கலாம், ஆனா, அவுத்தா அவுந்துடணும்.
விஷயத்துக்கு வரேன்.
சீன்1: மூணு பேர போட்டுத் தள்றாரு லால், அப்பரம் ஃபோன்ல 'ஜீவா உனக்கு ப்ரச்சன குடுத்த மூணு பேர போட்டுத் தள்ளிட்டேன்'னு கூவுறாரு.
சீன்2: சங்கிதா, நிமிஷத்துக்கு ஒரு தரம்,செல்போன்ல சில குண்டாஸ் கிட்ட, 'டேய் எனக்கு என் ஜீவா வேணும்'னு அலறராங்க.
சீன்3: ஒரு பொண்ணு போலீஸ் ஸ்டேஷன்ல 'சார், ஜீவா பேர்ல ஒரு கம்ப்ளெயிண்ட்'ன்றாங்க. இனிஸிபெக்டர் ஐயா, வயித்த வலி வந்த மாதிரி 'ஐயோ, ஜீவா பேர்ல எல்லாம் கம்ப்ளெயிண்ட் எடுக்க முடியாதும்மா' ன்னு அலறராங்க.
சீன்4: 'டேய், அந்த ஜீவாவ காத்தால கொளத்துல குளிக்கும்போது போட்டுத் தள்ளுங்கடா'ன்னு இன்னொருத்தர் கத்தறாரு.
சீன்5: சிம்பு, கொளத்துலேருந்து குளிச்சிட்டு எழுந்து வருவாரு. அப்பரம் என்ன? கயிறு கட்டி தொங்கிக்கிட்டே ஒரு பத்து நிமிஷத்துக்கு சண்டதான். (Crouching tiger and hidden dragon வந்தப்பரம் இந்த கயித்துல தொங்கர கொடுமை ரொம்பவே கொடுமை அதிகமாயிடுச்சு).
மேல இருக்கர அஞ்சு சீனும், ஒண்ணு மாத்தி ஒண்ணு கலந்து கலந்து வருது. எடிட்டிங் டெக்னிக்ல கலக்கராங்களாமா. (இல்ல, ரூம் போட்டு யோசிச்ச திரைக்கதை டெக்னிக்கா?)
அஞ்சு சீன்லயும், ஒருத்தர மாத்தி ஒருத்தர் சொல்ற அந்த ஜீவா, ஒரே ஜீவா இல்லியாம்.
இது அடுத்த சிக்கல்.
சிம்பு ஒரு ஜீவா, லால் போலீஸு ஒரு ஜீவா, இன்னொரு முடிவளத்த ரௌடி ஒருத்தனும் ஜீவா.
இந்த மூணு ஜீவாவ வச்சுக்கிட்டு முதல் 1 மணி நேரம், ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்பாபா.
அப்பரம், போலீஸ் லாலை, முடிவளத்த ரௌடி ப்ளாக் மெயில் பண்றான்னு புரிஞ்சுது. அதனால, லால் ரௌடிய போட்டுத் தள்ளி, கொஞ்சம் சிக்கல கொறைக்கறாரு.
மேட்டர் இன்னான்னா, சிம்புவோட பாட்டி (சீமா) தேனீ மாவட்ட நாட்டாமை மாதிரி. ஊர்ல சாராயம், கஞ்சா எல்லாம் இல்லாம நல்ல ஊரா மெயிண்டெயின் பண்ணி பாத்துக்கராங்க.
லால் அந்த ஊருக்கு போயி ப்ரச்சன பண்ணி, பாட்டிய சாவடிச்சிடறாரு.
அப்பரம், சிம்பு பழிவாங்கல்.
படத்துல ஒரே ஆறுதல், இந்த லவ்-கிவ் எல்லாம் ரொம்ப இல்லாம, ஓரளவுக்கு புதுசா கத சொல்றோம்னு கிளம்பி இவங்க முயற்சி பண்ணதுதான்.
ஒளிப்பதிவு நல்லா இருந்தது. சண்டைகள், பாடல்களும் ஓ.கே.
ஹீரோயின் வேதிகா? பரவால்ல. ரொம்பவே தாராளம். பென்ஸில் மாதிரி இருந்தாங்க சில பாட்டுல.
இடைவேளைக்கு முன் வரை, செம டார்ச்சர்.
இடைவேளைக்கு பின் ஓ.கே. ஆனா, சொறத்தே இல்லாத மாதிரி இருந்துது.
காதல், வெயில், கல்லூரி, சிவாஜி(?), 9 rs. நோட்டு, இந்த மாதிரியான வித்யாங்கள் தேவைதான்.
ஆனா, ரொம்ப ரூம் போட்டு யோசிச்சு, மூணு ஜீவா, ஆறு சண்டை, செல்ஃபோனில் காட்டுக் கத்தல், இந்த மாதிரி ரேஞ்சுக்கு வித்யாசங்கள் வேண்டாமய்யா வேண்டவே வேண்டாம்.
பி.கு: எனக்குத்தான் இப்படியெல்லாம் தெரீதா? படம் மெய்யாலுமே சில பேருக்கு புடிச்சிருக்குமோ? நீங்க பாத்திட்டீங்களா? உங்க திங்கிங் என்ன?