recent posts...

Sunday, September 30, 2007

SPB, கங்கை அமரன் - மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்

You Tube மேஞ்சுகிட்டிருக்கும்போது கண்ணுல பட்டது விஜய் டி.வில வந்த "காஃபி வித் அனு" ப்ரோக்ராம்.

அனு ஹாஸன் அருமையா ஒருங்கிணைத்து நடத்தும் நிகழ்ச்சி.

மே 12ஆம் தேதி பாலுவும், கங்கை அமரனும் கலந்து கொண்ட நிகழ்ச்சி சூப்பர்ப்.
இவங்களுக்கு நடுவில் இருக்கும் நட்பின் இறுக்கம் சூப்பர்ப்.
இரண்டு பேரும் மாத்தி மாத்தி கலாய்ச்சிக்கிட்டு, இந்த வயசிலும் துள்ளிக் குதிக்கும் இவர்களைப் பாத்தா பொறாமையா இருக்கு.

இவ்ளோ 'திக்'கா நமக்கு யாரும் ஃப்ரெண்டு வாய்க்கிலியேன்னு (டேய், அடிக்க வராதீங்கடா, லுலுலுவாய்க்குச் சொன்னேன்) நெனச்சு ஒரே ஏக்கம்ஸ்.

நீங்களும் வீடியோ பாருங்களேன்.

இவங்கள மாதிரியே இவங்க பசங்களும் நட்பு பாராட்டி ஜாலியா கலந்து ஒண்ணா வேலை செய்வதும் அருமை.

பாருங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

வாழ்க வளர்க இவர்களின் நட்பு!hmmmm ;)

பி.கு: கண்ணுல படர சிறந்த வீடியோக்கள அப்பப்ப சேத்து வச்சு எல்லாரும் பகிர்ந்திக்கர மாதிரி ஒரு கூட்டுப் பதிவு தயார் பண்ணலாம்னு நெனைக்கறேன். எல்லாருக்கும் உபயோகமா இருக்கும். பேரு என்னா வைக்கலாம்? கூட்டுப் பதிவுல மெம்பரா சேர விருப்பமா? சொல்லிட்டுப் போங்க. இந்த‌ மாதிரி வீடியோ சேத்து வ‌ச்ச‌ம்னா, பின்னாடி பாக்க‌ ந‌ல்லா இருக்கும்.

Full~Meals பாக்கலாம் வாங்க‌ வாங்க‌

தமிழில் புகைப்படக்கலை ( Photography-In-Tamil PiT) நடத்தும் ஒக்டோபர் போட்டியின் தலைப்பு 'உணவுப் பொருட்கள்'.

இன்னிக்கு ஏதாவது சுட சுட எடுக்கலாம்னா, ஒண்ணும் சரியா வரல.
த‌.வெ.உ காலகட்டத்துல எடுத்த படம் மட்டும்தான் சாப்பாடு சம்பந்தப்பட்டதா இருக்கு.


ஜி.ரா டிப்ஸ் பாத்து செஞ்ச இறால் ஃப்ரை ஏற்கனவே அரங்கேத்தியாச்சு. அன்னிக்கு செஞ்ச மீன் குழம்பும் கூட ஏற்கனவே போட்டாச்சு.

சரி, என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது, Flickr.com ஞாபகம் வந்துது. என்னமா எடுத்துத் தள்ளியிருக்காங்க மக்கள்ஸ்.
மானிட்டர்ல கைய வுட்டு அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு நிறைய படங்கள். பாருங்க. ஃபுல் மீல்ஸ் புகைப்படங்கள் கீழே.

இம்முறை ஆசிரியக் குழு போட்டியில் கலந்துக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்.
(அப்பாடி, இனி தோல்வி அடையும் நெலம இல்ல) ;)

CVR கொடுக்கர‌ டிப்ஸ் எல்லாம் நல்லா படிச்சுட்டு, நச்சுனு எடுங்க.

நீங்க என்ன மாதிரி இல்லாம, சுட சுடச் சுட நல்லா படம் புடிச்சு போட்டிக்கு அனுப்புங்க. அப்படியே, ரெசிப்பியும் போட்டீங்கன்னா, சாப்பிடரதுக்கே வாழர என்ன மாதிரி ஆளுங்களுக்கு உபயோகமா இருக்கும் ;)

வாழ்க புகைப்படக் கலை! Enjoy the Pictures from Flickr.com.

Appetizers:
'Light' Food:
'Real' Food: ;)Food for the eyes:

Full Meals:Desert:

Thursday, September 27, 2007

நீ... உங்கப்பாவுக்கு....?

வாங்க வாங்க வாங்க.
இன்னிக்கு ஒரூ சுவாரஸ்யமான மேட்டர சொல்றேன்னு சொல்லியிருந்தேனே, அதான் இந்த பதிவு.

அதாகப் பட்டது, நம்ம தமிழ 'கம்ப்பேர்' பண்ணும்போது ஆங்கிலம் ஒரு துக்கடா பாஷை என்பதை யாரும் மறுக்க முடியாது.
சும்மா 26 எழுத்த வச்சுக்கிட்டு அவங்களும் எவ்ளோ தான் படம் காட்ட முடியும்?

நம்ம பாஷைல இருக்கர ஒரு 'ரிச்னஸ்' தொர பாஷேல மிஸ்ஸிங்.

இல்லங்கறீங்களா?

அப்ப, இத்த எப்படி இங்கிலீஷ்ல கேக்கரதுன்னு சொல்லிட்டுப் போங்க.

* நீ உங்கப்பாவுக்கு எத்தினியாவது கொழந்த?

என்னது? நாக்கு பெரளுதா?
யோசிங்க வரும்.
எனக்குத் தெரிஞ்ச விடைய அப்பாலிக்கா பின்னூட்டறேன்.

உங்களுக்கு தெரிஞ்ச வித்தைய காட்டுங்க.

பி.கு1: நெல்லை சிவா, MSVக்காக நான் போட்ட பெட்டிஷனுக்கு ஒரு சூப்பர் பதிவு போட்டு நச்சுனு விளம்பரம் கொடுத்திருக்காரு பாருங்க. நன்றி நெல்லையாரே!
நேத்து வர சின்னப் பயலெல்லாம் டாக்டர் பட்டம் அந்த பட்டம் இந்த பட்டம்னு வாங்கிட்டிருக்கானுவ. ஒரு பயலும் நம்ம MSVய கண்டுக்க மாட்றாங்க. கிர்ர்ர்ர்ர்ர்னு எரிச்சல் வருது, நெனைக்கும்போதே

பி.கு2: கானா பிரபா, கேளுங்கள் தரப்படும்னு, நாம கேக்கர பாட்டையெல்லாம் அள்ளி அள்ளி வீசராரு. இளையராஜா வீட்டுக்கு ஏதாவது சுரங்க பாதை கட்டி, ராவுல போயி சி.டி எல்லாம் கெளப்பிட்டு வராரான்னு தெரியல. எந்த பாட்ட கேட்டாலும் டகால்னு எடுத்து விடறாரு.. ரேடியோஸ்பதி, தொடர்ந்து கலக்குது.. அவரும் MSVக்காக ஒரு வெளம்பரம் போட்டிருக்காரு. அவருக்கும் நன்னி!

பயலுவளா, MSVக்கு ரொம்ப வயசாவரதுக்கு முன்னாடி, எப்படியாச்சும் ஒரு பத்மவிபூஷனனையோ, பத்மபூஷனனயோ வாங்கிக் கொடுக்கணுங்க.

சாதாரண ஆளா அவரு?

லதா மங்கேஷ்கருக்கு, பாரத்ரத்னா கொடுத்த அரசு MSV ய கண்டுக்காம இருக்கரது, அயோக்கியத்தனம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சொல்லிப்புட்டேன்!!!

Wednesday, September 26, 2007

கை கட்டுவதிலும் சுவாரஸ்யம் - சர்வே

இன்னிக்கு ஒரு ட்ரெயினிங்குக்கு போயிருந்தேன். அதில ட்ரெயின் பண்ணவரு, ஒரு சுவாரஸ்யமான மேட்டர சொன்னாரு.

25 பேர் இருந்தோம். எல்லாரையும் எழுந்து நிக்க சொல்லி, கைய மேல தூக்கி ஆட்டச் சொன்னாரு.
அப்பரம், கைய கட்டச் சொன்னாரு.

எவ்ளோ பேரு, வலது கைய மேல வச்சு கை கட்டறீன்ங்கன்னாரு.
25 ல, 14 பேரு, வலது கைய மேல வச்சு கட்டராங்க.
மிச்ச பேரு இடது கைய மேல வச்சு கட்டராங்க.

அதாகப் பட்டது, கிட்டத்தட்ட 50% ஆளுங்க வலது கையும், 50% இடது கையும் மேல வெக்கராங்க.

இதோ இவரு இடது கைய மேல வச்சிருக்காரு பாருங்க:


ஒரு கூட்டத்துல, எல்லாரையும் கை கட்டச் சொன்னா, இந்த மாதிரிதான் 50:50 வருமாம்.
இதுக்கு என்ன காரணம்னு சரியாத் தெரியலயாம் - அநேகமா, மொத்த ஜனத்தொகையில, 50% ஆளுங்க வலது கை மேல வெக்கரவங்களாவும், 50% இடது கை மேல வெக்கரவங்களாவும் இருக்கலாம், அதனால ஒரு கூட்டத்துக்கு ரேண்டமா வர ஆளுங்கள்ளயும் இந்த விகிதாச்சாரம் வரலாங்கரது என் கணிப்பு ;)

சரி, நம்ம கூட்டத்துல இத்த டெஸ்ட் பண்ணலாம்னு ஒரு சர்வே கீழ போட்டிருக்கேன்.

எழுந்து நில்லுங்க
கைய மேல தூக்குங்க
கை கட்டுங்க
வலது கை மேல வச்சு கட்டறீங்களா, இடது கையா? உண்மையான பதில வாக்குங்க ;)
நன்றி!இந்த மேட்டர, உங்க கும்பல்லயும் நடத்திப் பாத்து, பின்னூட்டுங்க ரிஜல்ட்ட :)

பி.கு: நாளைக்கு இன்னொரு சுவாரஸ்ய மேட்டருடன் சந்திக்கிறேன்.

Tuesday, September 25, 2007

OFF-Shoreஐ வாழ விடுங்கள்!

அயல்நாட்டு நிறுவனங்கள் பல தங்கள் அலுவலக வேலைகளில் பலவற்றை out-source (தமிழ்?) செய்வது எல்லாருக்கும் தெரியும்.

இதில் கணிப்பொறி வேலைகள் தான் அதிகமா out-source செய்யப்படுது.

ஒரு மணி நேரத்துக்கு $50 லிருந்து $200 வரை செலவாக வேண்டிய வேலையை, $15 லிருந்து $40 க்குள் இந்த out-sourceங் மூலம் லாபகரமாக முடித்துக் கொள்ள முடிகிறது.

அதைத் தவிர, வேலையின் தேவைக்கேற்ப, ஆட்களை கூட்டிக் கொள்ளவும் குறைத்துக் கொள்ளவும் மிகச் சுலபமாக முடிகிறது.

குறைந்த விலையுடன் சில சமயம், தலைவலியும் சேர்ந்து கிடைக்கும். கல்லூரி முடித்து வரும் கத்துக்குட்டிகள் பலரை ஊரில் உள்ள நிறுவனங்கள் வேலையில் அமர்த்தி, வேலையின் தரத்தை குறைத்து விடுவார்கள். அசலூரில் இருக்கும் நம்மவர்களுக்கு இதனால் பெருந்தொல்லை வருவதுண்டு.

இந்த தலைவலி தரும் ஏற்பாட்டில் தான் பல ப்ரச்சனையும் வரும்.

அசலூரில் இருக்கும் நம்மவர், ஒரு 'கெத்தாகத்' தான் இருப்பார்.

உள்ளூர்வாசிக்கு 'அடிப்படை' மரியாதை கூட சிலசமயங்களில் தருவதில்லை.

"ஹேய் மேன், நீ நாளைக்கு ராத்திரி 1 மணிக்கு வந்து இந்த வேலைய முடிச்சுடு."
"ஹேய் மேன். நாளன்னைக்கு காத்தால 5 மணிக்கு வந்துடணும். நான் இங்க வீட்டுக்கு கெளம்பரதுக்கு முன்னாடி உன் கிட்ட பேசணும்"
"ஹேய் மேன், பேஜர் குடுத்து எவ்ளோ நேரமாச்சு. 10 நிமிஷத்துல கால் பண்ணாம என்னா பண்ணிட்டிருந்த"
"ஹேய் மேன், இந்த சின்ன மேட்டர் ஃபிக்ஸ் பண்ண இவ்ளோ நாளா? யூ guys are driving me nuts!"
"ஹேய் மேன், என்னா code அடிக்கர. ஒரு மண்ணாங்கட்டியும் புரியல. பொறுப்பே இல்லாம இருக்க. last warning. ஒழுங்கா அடி"
"ஹேய் மேன், என்ன english இது? எங்க படிச்ச நீ? தெரியலன்னா, உன் மேனேஜர் கேட்டு டைப் அடி. ப்ரூஃப் ரீட் பண்ண நான் என்ன உனக்கு வேலக்காரனா?"

இதில் call-centerல் வேலை பார்க்கும் உள்ளூர் வாசியின் நிலமை மேலும் கொடுமை.
கணிப்பொறி ஆளாவது பரவால்ல, முக்கால் வாசி அசலூர்காரன் நம்மாளாதான் இருப்பான். திட்டினாலும் பரவால்ல.

ஆனா, call-centerக்கு வர காளெல்லாம், முக்கால் வாசி துரை பேசரதுதான். பிடிச்சு கன்னா பின்னான்னு திட்டுவான். குறிப்பா, American express , Dell மாதிரி call-centerக்கு வரும் தொலை அழைப்புகள் தொல்லை ரகம்.

உள்ளூர்ல லோல் படும் நம்ம பசங்க, மன உளைச்சலுக்கு ஆளாவாங்கன்னு நெனைக்கறேன்.
சும்மாவா, டக்கு டக்குனு வேலைய வுட்டு வேலை தாவராங்க?

அசலூர் வாழ் மக்கள், யோசித்து, கொஞ்சம் பக்குவமாய் அணுக யோசிக்க வேண்டும்.
நம்ம off-shore மக்களை அனுசரணையுடன் வழி நடத்தி, முன்னேர உதவி பண்ணனும்.

Don't torture them!

உங்க அனுபவம் எப்படி? எல்லா எடத்துலயும் இப்படி தானா?

Thursday, September 20, 2007

Geity நினைவலைகள்

படிக்கர காலத்துல கைல தம்படி பணம் கூட இருக்காது. ஒரு ஓட்ட சைக்கிள் இருக்கும், அப்பப்ப காத்து போகும்போது அடிச்சுக்க ஒரு 25 நயா பைசா மட்டும் இருக்கும்.
காத்து போகாத நாட்களில் கையில் இருக்கும் 25 பைசாவ எடுத்து, மத்த பயலுவ கிட்டையும் ஒரு கலெக்ஷன் வேட்டை நடத்தி 1.25 ரூவாய்க்கு, சிங்கிள் டீ வாங்கி பகிர்ந்து குடிப்போம்.

அப்பரம் கம்ப்யூட்டர் எல்லாம் கத்துக்கும்போது, காலை முதல் இராத்திரி 'கடைய' சாத்தர வரைக்கும் அங்கயே மேஞ்சுகிட்டு இருப்போம்.
மதியானம் பசிக்கும்போது, வழக்கம் போல, கலெக்ஷன் வேட்டையில் இறங்கி, 2 ரூபா ஸெட்-தோச வாங்கி சாப்பிடுவோம்.
ஸெட்-தோசை, மாணவர்களின் வரப் பிரசாதம்.
முந்தாநாளு மாவுல, மஞ்சத் தூளப் போட்டு, மிச்சம் மீதி இருக்கர எல்லா ஐட்டத்தையும் கலக்கி, தடியா ஊத்திக் குடுப்பாங்க. கூடவே ஒரு சூப்பர் குர்மா. சாப்டா, ராத்திரி வரை பசிக்காது.

கூடவே இருக்கர பசங்கள்ள, கொஞ்சம் பணக்கார பயலுவ இருப்பானுங்க. அவங்க வரும் நாளெல்லாம் ஃபுல் டீயும், அன்-லிமிடெட் மீல்ஸும், சாயங்காலம் பாவ்-பாஜியும் கிடைக்கும்.
நல்ல பசங்க, மனசு கோணாம வாங்கித் தருவாங்க.

பயலுவள்ள முக்கியமானவன் கோபாலு. எப்பவும் துட்டு நெறைய வச்சிருப்பான். எல்லாருக்கும் தம்ஸ்-அப், கோல்ட்-ஸ்பாட், லஸ்ஸி அது இதுன்னு அவன் கூட இருக்கும் நாளெல்லாம் ஜமாய்ச்சிடுவான். வீட்டுக்கு ஒரே பையன். அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போறவங்க, அதனால கோபாலுவ கேள்வி கேக்க ஆளில்லாம ஃப்ரீ பேர்டா சுத்திக்கினு இருந்தான்.
அவன் எனக்காக செலவு பண்ணி வாங்கிக் கொடுத்த சாப்பாடு, கூட்டிட்டுப் போன சினிமா, வீட்ல பாத்த 007 வாடகை வீடியோ படங்கள், இதுக்கெல்லாம் கணக்கே இல்ல.

இப்படித்தான் ஒரு நாள், நானு, கோபாலு, க்ருஷ்ணன், பாபு, ரமேஷ் எல்லாரும் மொட்ட மாடீல பேசிக்கினு இருந்தோம். +2 விடுமுறை நேரம்.
மச்சி போரடிக்குதுல்ல, ஏதாவது படம் போலாமான்னு பேசிக்கிட்டு இருந்தோம்.
பஸ் செலவு, டிக்கட், பாப்கார்ன், தம்ஸ்-அப், எல்லாம் கோபாலுதான் செலவு பண்ணனும். அதனால, அவனையே எல்லா வாட்டியும் படம் சூஸ் பண்ண விட்டுவோம்.
ஒன்லி இங்கிலீஷ்தான் பாப்போம். சத்யம் விட்டா, பாரடைஸ், பாரடைஸ் விட்டா, பைலட், கெயிட்டி இதுல ஏதாவது ஒண்ணுலதான் அடிக்கடி பாப்போம்.

கோபாலு, கெயிட்டீல ஜாக்கிசான் போலீஸ் ஸ்டோரி படம் போட்டிருக்காண்டா அங்கயே போலாம்னான். சரிடா மச்சின்னு எல்லாரும் கும்பலா போணோம்.
3.30 மணி ஷோக்கு 2 மணிக்கெல்லாம் ஆஜராயிட்டோம்.
ரோட்ல இருக்கர கடைல எதையோ வாங்கி கொறிச்சிட்டு கவுண்ட்டர் தொறக்க வெயிட்டிக்கிட்டு இருந்தோம்.

தியேட்டருக்கு வெளியில சின்ன கூட்டம். கூட்டத்துக்கு நடுவுல ஒரு புடு புடு காரர் ஒருத்தர் தலைல முண்டாசெல்லாம் கட்டிக்கிட்டு டும் டும் டும் ஒரு டப்பால தட்டிக்கிட்டு இருந்தாரு.
ஒரு கீரிப்புள்ள கயித்துல கட்டி வச்சிருந்தான்.
என்னடா பண்றான்னு பாக்க அஞ்சு பேரும் போணோம்.
சுத்தி நின்ன கூட்டத்தோட நாங்களும் சேந்துக்கிட்டோம்.

மோடி மஸ்தான அப்பத்தான் மொத தபா நேர்ல பாக்கறேன்னு நெனைக்கறேன். ஆள், மாநிறத்துல, நெத்தியில விபூதி, பெரிய குங்குமம், அடர்த்தியா புருவம், கலர் கலர் லுங்கி, கைல ஒரு எக்கச்சக்க கருப்பு கயிறுன்னு பயங்கரமா இருந்தான்.

"இன்னும் பத்தே நிமிஷம் சார். கூடைல இருக்கர பாம்ப தொறந்து விடுவேன். கீரியா, பாம்பா யார் வீரன்னு காட்டப் போறேன். ஏதாவது ஒண்ணுதான் சார் உயிர் பொழைக்கும். இத நம்பிதான் என் சாப்பாடு இருக்கு. ஐயாமாரெல்லாம் ஏதாவது துட்டு போடு சார்" - இப்படி வள வள வளன்னு சொல்லிட்டே இருந்தான்.

வேடிக்கை பாத்த கூட்டத்துல, எல்லாரும் சில்லரைய தூக்கி போட்டாங்க. நம்ம கத தான் தெரியுமே, போடரதுக்கு ஒண்ணுமில்ல. கோபாலு வழக்கம் போல, ஒரு ரூவாய டாஸ் போடர மாதிரி தூக்கி வுட்டான்.

எல்லாரும் காசு போட்டதும், மஸ்தான் எழுந்து வந்தான் ஒரு குச்சிய எடுத்து, சர்ர்ர்ர்னு சுத்தி நிக்கர கும்பலு கால்ல இடிக்கர மாதிரி ஒரு வட்டம் போட்டான்.

ஒரு ரூபாய்க்கு மேல போட்ட ஐயாமாரெல்லாம் கைய நீட்டி கோட்டுக்குள்ள கால வைங்க சார். மத்தவங்கெல்லாம் கோட்டுக்கு வெளீல போங்க சார் தூ ன்னான்.

கோபாலு நெக்குலா என்ன ஒரு பார்வ பாத்துட்டு, "மச்சி, நீ வெளீல நிக்கணும்டான்னு" என்ன தள்ளி விட்டுட்டு, அவன் கால எடுத்து உள்ள வச்சு, ஸ்டைலா கைய நீட்டி நின்னான்.

கை நீட்டி நின்னது மொத்தம் ஒரு ஆறு பேர் இருப்பாங்க. மஸ்தான் டக்குன்னு எழுந்து வந்தான், கைல மை எடுத்து, நீட்டிக்கிட்டு நின்ன எல்லார் கைலயும் ஒரு பொட்டு வச்சான்.
"அப்படியே நில்லு சார், நாகம்மாவ தொறந்து விடரேன்னான். என் குடும்பம் சாப்ட ரூபா கொடுத்த மகராசன் சார் நீ. உன் குடும்பம் நல்லாயிருக்க நாகம்மா கூடயிருப்பா சார். இதோ நாகம்மாவ தொறந்து விடப் போறேன் சார். சண்டைல நாகம்மா ஜெயிக்கணும் சார். கீரிக் கம்னாட்டி தோப்பான் பார். நாகம்மாக்கு உன் கைல இருக்கர ஏதாச்சு போடு சார்"னு திரும்ப நீட்டினான் ஒரு கூடைய. ஆறு பேர்ல நாலு பேர், வேற ஒண்ணும் இல்லன்னுட்டாங்க.

ஒண்ணுமில்லன்னு சொல்லாத சார், நாகம்மா காதுல விழுந்தா, நீ விக்கி விக்கி சாவ சார்னான். நாலுல ஒருத்தர் மீசக் காரரு. அவர் மஸ்தான எதுத்து கொரல் விட்டாரு.
எல்லாம் தூக்கிப் போட்டு ஒடச்சுடுவேன் போடான்னாரு. மஸ்தான் டென்ஷனாயி, விபூதியெல்லாம் காத்துல தூக்கி போட்டு, வாந்தி எடுத்து 10 நாள்ள படுத்த படுக்கையா ஆயிடுவன்னு சாபம் விட்டான். போடாங்கோன்னு , மீசக்காரரும், மத்த மூணு பேரும் கெளம்பி போயிட்டாங்க.

கோபாலு, மூஞ்சி வெளுத்துடுச்சு, பயத்துல நீட்டின கை, நடுங்கிட்டு இருந்தது.
மச்சி போயிடலாம்னு இழுத்தா, கோட்ட விட்டு கால எடுக்க மாட்றான். ஏதாவது ஆயிடப் போதுறா, முடிச்சுட்டு வரேன்னான்.
மஸ்தான், மிச்சம் இருந்த கோபாலுகிட்டயும் இன்னொருத்தர் கிட்டயும், கொஞ்சம் கோவமா, ஏதாச்சும் போடுங்க சார் இந்தக் கூடையில நாகம்மா காக்க மாட்டான்னான்.
இன்னொருத்தரு கொஞ்சம் சில்லரைய போட்டாரு. நம்மாளு, அஞ்சு ரூபாய தூக்கிப் போட்டான்.

ஒரு கறுப்புக் கையிர எடுத்து ரெண்டு பேர் கைலயும் கட்டினான் மஸ்தான்.
"உங்க குடும்பத்தையே நாகம்மா காபாத்துவா சார். இந்த கயிர, பௌர்ணமி அன்னிக்கு, உங்க ஊர் கோயில்ல கொண்டு போய், பார்வதி தேவி செலைக்கு முன்னால வச்சு கழட்டி மூணு சுத்து சுத்தி தலைக்கு பின்னாட தூக்கிப் போட்டுடணும் சார்னான். அதுக்கு முன்னாடி கழுட்டினா, ரத்தம் கக்கி சத்துடுவ சார். சக்தி வாய்ந்த கயிறு சார்னான்.

கோபாலுக்கு வேர்க்க ஆரம்பிச்சிடுச்சு. சரி, முடிஞ்சுடுச்சு எஸ்கேப்பிடலாம்னு, கோபாலு கைய புடிச்சு இழுத்தா, கயித்துக்கு 10 ருபா குடு சார்னான். கோபாலு வாய் தொறக்கல, எதையோ பாத்து பயந்த மாதிரி பேந்த பேந்த பாத்துக்கிட்டு நின்னான்.
"சார் 10 ரூபா கொடு"ன்னான் மஸ்தான். "கயிறு வேணாண்டா கழட்டிக் கொடுத்துடுடா"ன்னேன் நான்.
"வேணாம்டா ஏதாச்சும் ஆயிடப் போது"ன்னு சொல்லிட்டு 10 ரூபாய சொளையா கொடுத்து மெதுவா எஸ்கெப் ஆணோம்.

நாகம்மாவும் கூடைய விட்டு வெளியில வரல. உள்ள நாகம்மா இருக்கான்னு கூட தெரியல.
வுட்டுது சனின்னு கெயிட்டிக்குள்ள போயி டிக்கெட் வாங்கி ( நல்ல வேள, ஒரு 50 ரூவா வச்சிருந்தான் ), சமோசா வாங்கி உள்ள போணோம்.
கோபாலு, ஏ.சிலயும், வேத்துக் கொட்டினான். ஒரு ப்ரம்ம புடிச்ச மாதிரிதான் கடைசி வரைக்கும் இருந்தான்.

திரும்ப வீட்டுக்கு கெளம்பும்போது, "டேய் அறுத்துப் போடுடா கயிர"ன்னேன். "அதெல்லாம் வேண்டாம்டா, ஏதாவது ஆயிடப் போது"ன்னு, கயித்த அப்படியே வச்சிருந்தான்.

பஸ்ல ஏறி வீட்டுக்குக் கிட்ட வரும்போது, சகல நெலமைக்கு வந்திருந்தான்.
"டேய், கயிர அவுத்து குடுடா"ன்னான் என்ன பாத்து கோபாலு.

பகீர்னு ஆச்சு எனக்கு.

"மச்சி, வேணாம்டா, ஏதாவது ஆயிடப் போவுது. அவன் சொன்ன மாதிரி பௌர்ணமி அன்னிக்கே கழட்டிப் போடு"ன்னேன்.

அம்புட்டுப் பேரும் எஸ்கேப்.

பாவம் கோபாலு, தூக்கம் கெட்டது அவனுக்கு அன்னிக்கு.
மறு நாள், அவங்கப்பா அதப் பாத்து, முதுகுல ரெண்டு போட்டு, அறுத்து கெடாசினாராம்.

யாரும் இரத்தமெல்லாம் கக்கி சாவல ;)

நல்ல நாட்கள் அதெல்லாம். எந்தக் கவலையுமில்லாம ஊர் சுத்திக்கிட்டு சந்தோஷமா திரிஞ்சோம்.
கைல காசு இல்லன்னாலும், நிம்மதியான கால கட்டங்கள் அவை.
தேங்க்ஸ் டு கோபாலு லைக் பீப்பிள்! :)

மச்சி கோபாலு, இந்த பதிவு உனக்கு சமர்பணம் ;)

Wednesday, September 19, 2007

மூணு ஜூடு சர்வே ‍முடிவுகளும் ஒரு புதிய சர்வேயும்

ரொம்ப வள வளன்னு வளக்காம நேரா மேட்டருக்கு வரேன்.

கடந்த‌ மூன்று சர்வேக்களின் முடிவுகள் கீழே!

1) டோண்டு ராகவனின் பதிவுகள் எப்படிப் பட்டது? -> விடை இங்கே ( Dondu, whatever the results may show, you are the most popular blogger. Thanks to the IIIrd std - sorry 3rd std guy ;) )

2) அரை ப்ளேடு பதிவுலகை விட்டுப் போவது -> விடை இங்கே ( 1/2 Blade, please consider coming back, atleast in a diff. name ;) )

3) சுகுணா திவாகர் பதிவுலகை விட்டுப் போவது -> விடை இங்கே ( hee hee, welcome back Suguna ;) )

முதல் சர்வே போடும்போது சர்ச்சை ஒன்றும் வரவில்லை.

ரெண்டாவதும் மூணாவதும் போடும்போது some issues creeped up. மற்றவர்களைப் பற்றி சர்வே போடும்போது அவர்களிடம் பர்மிஷன் வாங்கமால போடுவது தவறு என்று சில நண்பர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை, பதிவு எழுதுபவர்கள், பொது வாழ்க்கைக்கு வந்த ஸெலிப்ரிட்டீஸ் மாதிரி. பொதுவில் சர்வே, விமர்சனம், எல்லாத்துக்கும் இவர்களை உட்படுத்தப் படுவதில் தவறு ஒன்றும் இல்லை.
நேர்மையான, கண்ணியமான முறையில் விமர்சனங்கள் உள்ளவரை யார் வேணா யாரப் பத்தி வேணா எழுதலாம் என்பது அடியேனின் கருத்து.

நீங்க என்ன சொல்றீங்க? தப்பா நான் ஜொல்ரது?

வோட்டுங்க! வாக்களிப்பின் படி, இனி வரும் சர்வேக்களை அமைத்துக் கொள்கிறேன் ;)

Tuesday, September 18, 2007

Pink Flowers

இந்த வாரம் எடுத்த படம். வேற ஒண்ணும் எழுதத் தோணலன்னா, இந்த மாதிரி படங்கள் போட்டு அசத்தலாம்னு ஐடியா :) ( கவித படிச்சீங்களா? வளரும் கவிஞர ஊக்குவிக்கலாமே? ;) )

(க்ளிக்கி பெருசா பாக்கலாம்)


பி.கு: என்ன பூவு இது? படத்துல சில பல குறைகள் இருக்கு. சொல்லுங்க பாப்போம்.

Monday, September 17, 2007

இழந்த கண்ணு, இழந்த மதிப்பெண்ணு (கவுஜை's)

---------------- -----------
கவுஜ1: இழந்த தென்னங்கண்ணு
---------------- -----------
ராவோடு ராவாக உள்ளே
வந்து போயிருக்கிறது ஏதோ ஒண்ணு

ஆசையாய் நட்ட செடியெல்லாம்
வானம் பாத்து மல்லாந்து கிடக்கு
பச்சைப் புல்வெளியெல்லாம்
திட்டு திட்டாய் பெயர்ந்து கிடக்கு

எட்டிச் சென்று தேடியபோது
'பச்சாக்' என்று காலில் ஒட்டிய சாணி

நினைவூட்டியது, இத்தனை நாளாய் டிமிக்கி கொடுக்கும்
பக்கத்துத் தெரு டில்லி எருமையை!
---------------- -----------

---------------- -----------
கவுஜ2: இழந்த மதிப்பெண் (உண்மைக் கதை, கிட்டத்தட்ட :) )
---------------- -----------
+2 கணக்கு பரீட்ச்சை
கடைசி மணி அடிக்க இன்னும் ஐந்து நிமிடம்

எழுதியது எல்லாம் சரியான்னு சரி பார்க்கணுமே
கடைசி நிமிடம் வரை பக்கத்து பெஞ்சு
ரமேஷிடம் என் பேப்பர்...
'மச்சி' குட்ரா என்று காப்பி அடிக்க
பிடுங்கியவன் இன்னும் திருப்பித் தரவில்லை

அதோ வாத்தி வந்துவிட்டார், 'டேய்ய்ய்ய்ய் குட்ரா' என்ற என் கதரல்
தூக்கி வீசினான் என் பேப்பரை ரமேஷ்.
அவசரக் கட்டு கட்டி, இந்தாங்க சார் என்றேன்

நூறு வந்துடும்டா என்றேன் ரமேஷிடம்
நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் ரமேஷ்

அந்த வருட பள்ளி ஆண்டு புத்தகத்தில்
100 வாங்கிய ரமேஷின் படம்

ஆண்டு புத்தகம் கண்ணில் படும்போதெல்லாம்
நான் 1 மார்க் ஸில்லி-மிஸ்ட்டேக்கில் விட்டதை
நினைவுட்டியபடி நமுட்டு சிரிப்பு சிரிக்கிறான் ரமேஷு!
---------------- -----------

இந்த வார நட்சத்திரம் காயத்ரியின் இழந்த மழையைப் பாத்த எஃபெக்ட்டு.

நீ எனக்கு வேண்டாமடி எஃபெக்ட்டுல நான் எழுதிய, நீ எனக்கு வேண்டாமடாவும் படிங்க. அதுக்கு மற்ற கவிஞர்களின் பின்னூட்டக் கவிதையையும் படிங்க.

இதுக்கும், உங்க பாணீல, பின்னூட்டக் கவுஜயோ, தனிப் பதிவோ போடுங்கோ!

;)

இந்த மாதிரி எல்லாரும் ஒரு inspiration தரா மாதிரி எழுதுங்க! கவித கவித!!

Thursday, September 13, 2007

போறாங்களாம் வழியனுப்ப வாங்க

இந்த வாரம் எஸ்கேப் வாரம் போல இருக்கு.

இப்பதான் பட்டறை வாரம், புகைப்பட போட்டி வாரம், சைக்கோ 'மூர்த்தி' வாரம், டோண்டு வாரம், செல்லா போகிறார் வாரம், அன்பின் சூழ்ச்சி வாரம் ;), தமிழச்சி ஃபோட்டோ வாரம்னு ஒவ்வொண்ணா முடிஞ்சது.

இப்ப என்னடான்னா, இவன் என்ன திட்றான், அவன் என்ன திட்றான், இனி நான் எழுத மாட்டேன்னு சில பேர் கெளம்பியிருக்காங்க.

அரை ப்ளேடை, முகம் தெரியாத ஒரு சோம்பேரி திட்டிட்டானாம். அதுக்கு, இவரு இனி எழுதப் போறதில்ல, நான் ஜகா வாங்கிக்கறேன்னு கெளம்பிட்டாரு.

மூணாங்கிளாஸ் ஃபெயிலான ஒரு சோம்பேரி, ஏதோ ஒரு ப்ரௌவ்ஸிங் ஸெண்டர்ல, வரவங்க போறவங்க செருப்பெல்லாம் பாத்துக்கர ஒரு ஸ்பெஷலிஸ்ட், செருப்பு இல்லாத நேரத்துல, தனக்கு தெரிஞ்ச தமில்ல திட்டிருக்கான், அதையெல்லாம் பெருசா எடுத்திக்கிட்டு, இப்படி எஸ்கேப் ஆவரது எனக்கு சரின்னு படல.

அரை ப்ளேடின் ரசிகன் நானு. அவர் பதிவின் ஹாஸ்யம், அபாரம். அதெல்லாம் தானா வரதுன்னு நெனைக்கறேன். அவர் லைஸென்ஸ் வாங்காத கதை ஒரு உ.ம்.

தடாலடியா சீரியஸா ஒரு பதிவு போட்டுட்டாரு (அன்புள்ள தமிழ்விரோதி தந்தை பெரியாருக்கு). அவர் மனதில் பட்ட கேள்விகள பதிவா எறக்கியிருக்காரு. நியாயம் தான். அவரின் பதிவில் இருந்த கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும். நியாயமான முறையில் எழுப்பிய கேள்விகளுக்கு, பலர் அழகான பதில்கள் சொல்லியிருந்தாங்க. குறிப்பா, சிலப்பதிகாரம், தமிழ் மொழியெல்லாம் ஒரு காலத்துல பெரியார் பழிச்சாராம்.
அதுக்கு தமிழன் என்ற பதிவர் காரணங்களும் சொல்லி பல விஷயங்கள் வெளி வந்துட்டிருந்தது.

மூணாங்கிளாஸுக்கு வேர்த்துடுச்சு. நடூல பூந்து குட்டைய குழப்பி, அப்பறம் நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியும்.

அப்பறம் சுகுணா திவாகர் என்ற பதிவர். இவருக்கும் இதே நெலம. இவரின் பதிவுகள் அவ்வளவா நான் படிச்சதில்லை. சில மாதங்களுக்கு முன் இவரின் ஏதோ ஒரு பதிவை (கவிதை) படிச்சுட்டு சுளிஞ்ச என் மூஞ்சி, திரும்ப நார்மல் ஆக, ஒரு ரெண்டு நாள் ஆச்சு. பயங்கரமான கற்பனைவாதி மாதிரி தெரியுது :)
சூடு பறக்கர பல பதிவுகளுக்கு சொந்தக்காரர்.
இவருக்கும் இன்னொரு சக பதிவரான வளர்மதி என்பவருக்கும் ஏதோ லடாய். வளர்மதி ஏதோ சொல்லப் போக, இவரும் கோச்சிக்கினு போறாராம்.

எழுதரதும் எழுதாததும் அவங்கவங்க இஷ்டம். எப்டியோ போங்க.
நீங்க போறதால எவ்ளோ பேருக்கு சந்தோஷம், எவ்ளோ பேருக்கு கஷ்டம், எவ்ளோ பேருக்கு நஷ்டம், இதெல்லாம் தெரிஞ்சுக்க வேணாமா?

இதெல்லாம் கண்டு புடிச்சு சொல்லத்தான நான் இருக்கேன்.
( ராமர் பாலத்தப் பத்தி ஒரு சர்வே போட்டு இந்தெ வாரத்த ஓட்டலாம்னு பாத்தா, சற்றுமுன் முந்திட்டாங்க ;) வேற ஒண்ணும் பெருசா தோணாததால இப்படி எறங்கிட்டேன் ).

அதான் இன்றைய சர்வே. கீழே உள்ள ரெண்டு சர்வேக்களுக்கு வாக்குங்க :)

அதிகப் படியான பேர், நீங்க போறதால துக்கப் படராங்கன்னா, உங்க எழுத்தை மீண்டும் தொடர ஒரு விண்ணப்பமா நெனச்சுக்கோங்க.
எது எப்படின்னாலும், போனது போனதுதான்னா, ஓ.கே. சந்தோஷமா இருங்க. எனக்கு அடிக்கடி வந்து பின்னூட்டம் போடுங்க ;)

ஆமா, வேற யாராவது சமீபத்துல எஸ்கேப் ஆகியிருக்காங்களா? சொல்லுங்க சர்வே போட்ருவோம். :)

;)

Wednesday, September 12, 2007

இப்படிதான்யா கலரு காட்டணும்

PiTன் செப்டம்பர் மாதப் புகைப்படப் போட்டிக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு "வண்ணங்கள்".

போட்டிக்கு வந்த படங்களெல்லாம் பாத்திருப்பீங்க.
கும்முனு எடுத்திருக்காங்க நம்மாளுங்க.

Flickrல வூடு கட்டி அடிக்கர பல புகைப்படங்களை பாக்கும்போது பெருமூச்சு வருது. அந்த மாதிரி எடுக்க முடியலியேன்னு பெருசு பெருசா ஏக்கம் வருது.

நெறைய துட்டு போட்டு பெரிய பெரிய காமிரா மட்டும் வச்சிருந்தா போதாது.
ஒரு கலை தாகம் இருக்கணும். ஒரு தவமா நெனச்சு, படங்கள க்ளிக்கினே இருக்கணும்.

பல க்ளிக்குகள் க்ளிக்கி, தெறமைய கூர் படுத்தணும்.
மத்தவங்க படங்கள பாத்து நுணுக்கங்கள புரிஞ்சுக்கணும்.
அத பழகியும் பாக்கணும்.

படங்களப் பாருங்க, பழகுங்க, பதியுங்க பதிஞ்சுகிட்டே இருங்க.

நம்ம தெறம மெருகேர வாழ்த்துக்கள்!

தொடர்ந்து கலர் காட்டுவோமாக ;)

CVR அனுப்பிய ஈ மடலில் வந்த ஒரு ஃபிளிக்கர் படத்த பாத்துதான் இந்த ஃபீலிங்ஸ் எல்லாம்.

ஒரு cheap canon s31s வச்சுக்கிட்டு யாரோ ஒரு மகராசன் ரகள பண்ணியிருக்காரு பாருங்க.சும்மா, அதுரல?

இப்போ, இங்க க்ளிக்கி இந்த Heron படம் பாருங்க?
See these exquisite collections.

யம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்னு தோணல?

எல்லாம் பாத்தாச்சா? இப்ப இங்க க்ளிக்கி, செப்டம்பர் மாதப் போட்டிப் படங்களப் பாத்து, உங்க constructive criticisms சொல்லுங்க.

;)

நன்னி!

Tuesday, September 11, 2007

அன்புமணியின் தடாலடி ஐடியா

MBBSன்னா என்னான்னு ஒருத்தர் கேட்டிருந்தாரு. ஒரு மூணு நிமிஷம் யோசிச்சு முக்கி மொனகுனாதான் அதன் விரிவாக்கமே ஓரளவுக்கு ஞாபகம் வந்துது.
அந்த அளவுக்கு தான் மருத்துவப் படிப்பைப் பற்றிய என் அறிவு.

நோவாம ஒரு எடத்துல குந்திக்கினு ஆணி புடுங்கரதுதான் நம்ம பலம். அதுவும், இப்பெல்லாம் ஆணி அதிகமா புடுங்காம பொழுத ஓட்டரதுல, அந்த பலமும் கொறஞ்சுக்கிட்டே வருது. வெறும் வாய் உதார் விட்டே, வாரத்துல பாதி ஓடிடுது.

சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

MBBS படிக்கர பசங்க, அஞ்சு வருஷ கால படிப்புக்குப் பிறகு, ஒரு வருடம், கிராமப் புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் சேவை செய்யவேண்டும் என்று நமது தடாலடி அமைச்சர் அன்புமணி ஐயாவின் ஐடியாவைப் பற்றிப் படித்தேன்.
மருத்துவம் படிக்கரதுக்கு நம்ம பசங்க படர கஷ்டம் கொஞ்ச நஞ்சம் இல்ல. +2 வரைக்கும் கன்னா பின்னான்னு படிக்கணும், நுழைவுத் தேர்வு, அதிகப்படியான செலவு, கடினமான பாட திட்டம் என்று வாட்டி எடுத்து விடும்.

படிப்ப முடிச்சுட்டு அடுத்த கட்டத்துக்கு போகலாம்னு படிக்கரவனும், படிக்க வெக்கரவங்களும் ஒவ்வொரு நிமிஷத்தையும் எண்ணிக்கிட்டே இருப்பாங்க.

வெறும் MBBSலயே முடியரதும் இல்ல, இவங்களின் படிப்பு. அதுக்கப்பறம் MD, MSனு வேட்டைக்கு கெளம்பி, வாழ்க்கைல ஒரு எட்டு, பத்து வருஷம் படிக்கவே ஓடிப்புடும்.
எல்லாம் முடிச்சுட்டு, ட்ரெயினிங் எல்லாம் கடந்து, கல்லாப் பெட்டி தொறக்கரதுக்குள்ள கிட்டத்தட்ட முப்பது வயசாயிடும்.

இப்படி இருக்கும்போது, அன்புமணி சார், இப்படி ஒரு கல்லத் தூக்கிப் போட்டிருக்காருன்னு பலர் வெம்பி வெதும்புவதைக் கண்டேன்.

மேலோட்டமா பாத்தா, என்னய்யா லூசுத்தனமா இருக்கேன்னுதான் தோணுது.

ஆனா, பல துறைகளிலும் பின் தங்கி உள்ள நம்ம ஊரப் பத்தி நெனச்சு பாருங்க.
80% மருத்துவர்கள்/மருத்துவமனைகள் தனியார் நிறுவனங்களின் வசம் உள்ளனவாம்.
கிராமப் புறங்களில் தேவையான மருத்துவ வசதி இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ( 25% தான் மருத்துவ வசதி இருக்காம்).

ஆள் பற்றாக்குறை கொண்ட சிங்கப்பூர் மாதிரி நாடுகளில், அனைவருக்கும், கட்டாய இராணுவப் பயிற்ச்சி உண்டு. அட, சூப்பர் ஐடியாவா இருக்கேன்னு, அதக் கேட்டா சொல்லத் தோணும்.

கிட்டத்தட்ட, அதே மாதிரி ஒரு ஐடியாவ நம்மூர்ல, இப்படி போட்டா, ஏன் சின்னபுள்ளத்தனமா இருக்கேன்னு தோணுது?
சொல்றவரு பா.ம.க அன்புமணி என்பதால் இருக்கலாமோ?

ஆர அமர யோசிச்சு பாருங்க. கிராமப் புற 'கட்டாய' சேவை, சும்மா இலவசமா செய்யவும் சொல்லல.
8000 முதல் 12000 வரை சம்பளம் தருவாங்களாம்.
தங்கும் வசதி இல்லாத, குக்கிராமத்திர்க்கு போக வேண்டாமாம். ஒவ்வொரு தாலூக்கிலும் இருக்கும் மருத்துவமனைகளில் உதவி புரிந்தால் போதுமாம்.

நல்ல விஷயம் தானே? ஒரு வருஷம் அனுபவம் கிட்டியது போலவும் இருக்குமே?
கிராமப் புறங்களில் மக்கள் படும் கஷ்டத்த பாத்தா மனித நேயமும் வரலாம், பிறகாலத்துல 'நல்ல' மருத்துவராக இருக்கவும் இதனால் ஒரு உந்துதல் கிட்டலாம்.

இந்த திட்டம் வேண்டாங்கறவங்க, எதுக்காக வேண்டாங்கறீங்க?
லம்ப்பா சம்பாதிக்க ஒரு வருஷ தாமதம் ஆகுமேன்னா?
வசதிகள் இல்லாத, தாலூக் மருத்துவமனைகளில் ஒரு வருஷம் இருந்தா, படிச்ச படிப்பு சரியா உபயோகப் படுத்தாம, விரையம் ஆயிடுமேன்னா?

வேறென்ன?

என்னக்கேட்டா, இந்த மாதிரி திட்டம் எல்லா professional படிப்புக்கும் கொண்டு வந்தா நல்லாருக்கும். ஒரு வருஷம் இல்லன்னாலும், படிப்பின் கடைசி 6 மாதங்கள், பசங்கள் கிராமப்புற வளர்ச்சிக்கு உபயோகப் படுத்தலாம். ஒரு practical training மாதிரி இருக்கும்.

நம்ம பள்ளிக்கூடம், கல்லூரிகளில், மனதில் பதியும் படி பெருசா ஒண்ணும் சொல்லித் தரது இல்ல. வாத்தியும் செவனேன்னு சொல்லித் தந்தாங்க, நாங்களும் செவனேன்னு படிச்சு கரையேறினோம்.

மா.சிவகுமார் பாரதியார் கவிதை ஒண்ண பதிஞ்சிருந்தாரு. அவ்ளவு அழகான அந்த கவிதையை மனதில் பதியும் படி அன்னிக்கே சொல்லிக் கொடுத்திருந்தா, பலரின் வாழ்க்கை நல்ல படியா திசை திரும்பி, பலருக்கு ப்ரயோஜனமா இருந்திருக்கலாம்.

sorry, i divurge.

இந்த மாதிரி ஏதாவது தடாலடியா, creativeஆ மூளையக் கசக்கிப் பிழிஞ்சு புதுத் திட்டங்கள் கொண்டுவந்தாதான், நம்ம ஊர நல்ல படியா முன்னேத்த முடியும்.

இதுக்கு முட்டுக் கட்டை போட நினைப்பவர்கள் யோசிக்கணும். சும்மா, அரசியல் பண்ணனுமேங்கறதுக்காக, எல்லா நல்ல விஷயங்களையும் தூக்கிக் கடாசாதீங்க.

சிலருக்கு இதனால், கஷ்டங்கள் வரலாம். ஆனா, நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா......

அன்புமணி சார், நீங்களும், இன்னும் கொஞ்சம் யோசிச்சு, திட்டத்த மெருகேத்துங்க.

My 2 cents (or paise) on this:

 • மிக நல்ல திட்டம்
 • எல்லாரும் இத செஞ்சே ஆவணும்னு தடாலடி பண்ணாம, சிலருக்கு விதிவிலக்கு கொடுக்கலாம். உ.ம் உடல் ஊனமுற்றவர்கள், சில பெண்கள், மேல் படிப்பு படிக்க விரும்புபவர்கள்?, etc...
 • ஒரு வருஷம் ஜாஸ்தி. 6 மாதம் ஆக்கலாம்.
 • மற்ற துறைகளுக்கும் இதை எப்படி செயல் படுத்துவது என்று பாருங்கள்
 • மாணவர்களோடு நில்லாமல், இந்த 'கட்டாய' பொது சேவையய, எல்லா குடிமகனும் அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ, ஒரு ரெண்டு மாசம் செஞ்சே ஆகணும்னு ஏதாவது பண்ணலாம்.

  நீங்களும் உங்க கருத்த சொல்லுங்க.

  வாழ்க பாரதம்!
 • Tuesday, September 04, 2007

  கலர் காட்டறேன் வாங்க... September PiT போட்டிக்கு

  PiTன் ஜூலை மாத போட்டியில் நடுவரா நின்னதால நம்ம திறமைய காட்ட முடியாம போயிடுச்சு.
  தெறமைய காட்ட வாய்ப்பு கெடைக்காததும் நல்லதாப் போச்சு. வந்திருந்த அட்டகாசமான 100+ புகைப்படங்களுக்கு மத்தியில் சோப்ளாங்கி மாதிரி இருந்திருக்கும் என்னுது.

  ஜூலைல வந்த புகைப்படங்களின் வெயிட் தெரிந்ததால், ஆகஸ்ட்டில் ஸைலண்டா, வேடிக்கை பாத்தேன். கோதாவுல எறங்கியிருந்தா, 100% மண்ணு கவ்வியிருப்பேன்.
  புகைப்பட 'expert' என்ற பிம்பம் நொறுங்கியிருக்கும் :) அதுவும் தவிர, போர்ட்ரெயிட்டுக்கு மாடலும் கெடைக்கல (அது சரி, அடங்கு அடங்கு).

  ஸெப்டம்பர் மாசத்துக்கு, கொஞ்சம் ஈஸியா, கலர் காட்டுங்கன்னு சொல்லிட்டாங்க. இப்பவும் கோதால எறங்கலன்னா, அப்பறம் அடுத்த வாய்ப்பு எப்ப வரும்னு தெரியாது.
  (அது தவிர, An&m, Jeevesம் நடுவர் குழுவுல வேற இருக்காங்க. கொஞ்சம் பாத்து மார்க்கு போடுவாங்க என்ற நம்பிக்கை தான் ;) )

  அதான் குதிச்சுட்டேன்.

  சென்ற வாரம் இங்கு 4 நாள் தொடர் விடுமுறை, உழைப்பவர் தினமாம். உழைச்சு களைச்சிட்டோம்ல. 4 நாளு சூப்பரா, தெற்கு.கலிபோர்னியாவின் கடற்கரையோரம் ரவுண்டு கட்டி அடிச்சாச்சு.

  குறிப்பா, பசிஃபிக் சமுத்திரத்தின் ஓரத்தில் அமைந்துள்ள 1-South freewayல் காரை ஓட்டிக் கொண்டு இரண்டு மணி நேரப் பயணம் அருமையிலும் அருமை. பலமுறை சென்றிருந்தாலும், ஒவ்வொருமுறையும், இனம் புரியா இன்பத்தை அளிக்கும் அந்தப் பயணம்.

  வெள்ளக்காரன், ரோடு போட்டிருக்கான் பாருங்க, அடேங்கப்பா.
  அதுவும், வழி முழுவதும் இருக்கும் பல ப்ரிட்ஜுகளும் அட்டகாசம்.
  வாழ்க்கை வாழ்வதற்கேன்னு இவன் கிட்டதான் கத்துக்கணும்.

  சரி, இனி கலர் காட்டுதலுக்கு வருவோம்.

  கடற்கரை ஓரத்தில் பல கேளிக்கை சமாச்சாரங்கள் நிறைந்திருந்த இடத்தில், ஒருவர் பல கிளி வகைகளை வைத்து வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தார்.

  கிளி அழகா எல்லார்கிட்டயும் ஹலோ சொல்லிட்டிருந்தது. அதன் கலர பாத்தவுடன், நம்ம PiTன் ஸெப்டம்பர் மாதப் போட்டித் தலைப்பான 'வண்ணங்கள்' ஞாபகத்துக்கு வந்துது.

  க்ளிக்கிட்டேன். இன்னும் நல்ல கேமரா வாங்கல. தள்ளிகிட்டே போகுது. இப்போதைக்கு கையில் உள்ள Canon SD550 point&shoot வைத்து க்ளிக்கினது கீழே.

  ஆசை ஆசையா வாங்கின, Nikon 35mm SLR கேமரா துரு புடிச்சு வீட்ல எந்த மூலைலயோ கெடக்கு. டிஜிடல் வந்தப்பரம் அத சீண்டரதே இல்ல.

  கீழே உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு, மற்றவை பார்வைக்கு.
  ஏற்கனவே போட்டிக்கு வந்த படங்களைப் பார்க்கும்போது, கொஞ்சம் கலக்கமாதான் இருக்குது.
  Participation is key, so here I am :)

  நீங்களும் கோதால தயங்காம எறங்குங்க.
  கையில் இருப்பதை, டக்குனு அனுப்பாமல், முடிந்தவரை, புதிதாக, இதுவரை கற்ற உத்திகளை பயன் படுத்தி, சுட்டுத் தள்ளுங்க.

  விவரங்கள் இங்கே!

  நன்றி!

  ஃப்ரெண்ட்ஸ்


  ஸ்வெட்டர் கிளி


  கொசுரூஸ் (படத்து மேல க்ளிக்கி பெருசா பாக்கலாம்)

  கோலங்கள்


  கோவக்கார கிளியார்


  கோவக்கார கிளியார்


  வெட்டியா நிக்கும் போட்ஸ்


  வெள்ளக்காரரு


  பறந்தாலும் விடமாட்டேன்


  ப்ரிட்ஜு


  பசிஃபிக்


  எங்க ஊரு கோவிலு


  சூரிய காந்தி க்ளோஸ்-அப்


  ஏதோ சில செடீஸ்


  பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  as I said earlier, Participation is Key, so Jump in, everyone!

  ;)

  பி.கு: Mrs & Mr. VSK பாடிய ஜன கன மன கேட்டீங்களா?

  Monday, September 03, 2007

  கும்மியர் 007 - முடிசூட்டு விழா

  கும்மியர் 007 போட்டியில் வெற்றி பெற்றவர்,
  'தமக்கு தாமே' என்று அஞ்சாமல் தன் பெயரை போட்டிக்கு முன்மொழிந்து,
  ஆரம்ப சறுக்கலை கண்டு மனம் குலையாமல்,
  தேனீ போல் சிறுக சிறுக வாக்குகளை கையகப் படுத்தி,
  சில பல வாக்குச்சாவடிகளையும் ஸைலண்டா கொலைவெறிப் படைகள் ஏவி கபளீகரம் செய்து,
  இணையத்தின் இளவல்,
  தனக்கு இணை தானே என்னும்,
  மொக்கைக்கெல்லாம் மொக்கையான,
  கும்மியருக்கெல்லாம் பெருங்கும்மி,
  வருத்தமில்லா வாலிபர் நமது

  நாமக்கல் சிபி


  வாழ்த்துக்கள் சிபி. உங்களுக்கான வெற்றிக் கேடயம் இது:


  மொத்த வாக்குகள்: 574
  சிபி பெற்றவை: 185 (32.23%)

  என்ஜாய்!

  வாக்கு விவரங்கள் இங்கே.


  வாக்களித்த அனைவருக்கும் நன்னி!

  -சர்வேசன்

  PS: Dondu, Psycho, Moorthi, Other findings - what next & opinion and suggestions and requests:
  1) Everyone involved, Please act responsibly.
  2) Past is past, take a resolve to make the future bright
  3) If you have sinned, you will be punished - if not now, in the near future, for sure.
  4) I filed some complaints today and mailed out some print outs of problem blogs and emails, etc.. I will be continuing to do so, in the best interests of everyone.
  5) Life is too short to spent worrying about this lame pervertisms