recent posts...

Showing posts with label கும்மி. Show all posts
Showing posts with label கும்மி. Show all posts

Monday, September 03, 2007

கும்மியர் 007 - முடிசூட்டு விழா

கும்மியர் 007 போட்டியில் வெற்றி பெற்றவர்,
'தமக்கு தாமே' என்று அஞ்சாமல் தன் பெயரை போட்டிக்கு முன்மொழிந்து,
ஆரம்ப சறுக்கலை கண்டு மனம் குலையாமல்,
தேனீ போல் சிறுக சிறுக வாக்குகளை கையகப் படுத்தி,
சில பல வாக்குச்சாவடிகளையும் ஸைலண்டா கொலைவெறிப் படைகள் ஏவி கபளீகரம் செய்து,
இணையத்தின் இளவல்,
தனக்கு இணை தானே என்னும்,
மொக்கைக்கெல்லாம் மொக்கையான,
கும்மியருக்கெல்லாம் பெருங்கும்மி,
வருத்தமில்லா வாலிபர் நமது

நாமக்கல் சிபி


வாழ்த்துக்கள் சிபி. உங்களுக்கான வெற்றிக் கேடயம் இது:


மொத்த வாக்குகள்: 574
சிபி பெற்றவை: 185 (32.23%)

என்ஜாய்!

வாக்கு விவரங்கள் இங்கே.


வாக்களித்த அனைவருக்கும் நன்னி!

-சர்வேசன்

PS: Dondu, Psycho, Moorthi, Other findings - what next & opinion and suggestions and requests:
1) Everyone involved, Please act responsibly.
2) Past is past, take a resolve to make the future bright
3) If you have sinned, you will be punished - if not now, in the near future, for sure.
4) I filed some complaints today and mailed out some print outs of problem blogs and emails, etc.. I will be continuing to do so, in the best interests of everyone.
5) Life is too short to spent worrying about this lame pervertisms

Thursday, August 23, 2007

நான் எங்கன்னு கண்டுபிடிங்க...

விவரங்கள் கீழே.. ஹாப்பி ஃப்ரைடே!


'கும்மியர் 007' எப்படி கீது?

115 வாக்குகளுடன் ரவி முன்னணியில் இருக்க, செல்லாவும் சிபியும், நெக்-டு-நெக் பின் தொடருகிறார்கள்.

சற்றுமுன் வந்த தகவல் படி, செல்லா தனது வேட்புமனுவை விலக்கிக் கொள்கிறாராம்? ஏனுங்க, என்னாச்சு?

செல்லா, இதுவரை 71 வாக்குகளுடன் ரெண்டாவது எடத்துல இருக்காரு.
( அவரது வாக்குகளை எனக்கு தாரை வார்த்துக் கொடுக்கறாறான்னு கேக்கணும் ;) ).

சிபிக்கு இதுவ்ரை 70 வாக்குகள்.

விவரங்கள் இங்கே க்ளிக்கி பாத்து, வாக்காதவங்க வாக்குங்க.

சும்மா டமாஸுக்குதான். போட்டு தாக்குங்க.

பி.கு: இதுவரை 250 வாக்குகள் கிட்ட வந்திருக்கு, வந்தவங்க எல்லாரும் MSVய கண்டுக்கினீருந்தீங்கன்னா நல்லாருக்கும். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல, இங்க க்ளிக்கி MSV பெட்டிஷன்ல கையெழுத்து போடுங்க.

Happy Friday!

Sunday, August 12, 2007

சிறந்த கும்மிப் பதிவர் 2007

இது கும்மி சீசன் மாதிரி, வரிசையா பல கும்மிகள் கடந்த சில வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றன.

அதிகமாய் மொக்கைப் பதிவுகளைப் போடும் கும்மிப் பதிவரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு.

இங்கே அதற்கான பரிந்துரையை கண்டவுடன், உடனே களத்தில் இறங்கி, சர்வே கமிட்டியை கூட்டி "கும்மி 2007"ஐ கட்டம் கட்டி தேர்வு செய்ய ஆயத்தமானேன்.

டிசம்பர் மாதத்தில் வர இருக்கும் "சிறந்த பதிவர் 007©"க்கு இது ஒரு ஒத்திகையாக இருக்கும் :).

"கும்மிப் பதிவர் என்பவர் யாரெனில்
மொக்கையே ப்ரபலமாகும் வழி என்றுணர்ந்தவர்" :)

சிறந்த கும்மிப் பதிவர் யார்?
விண்ணப்பங்களும், பரிந்துரைகளும், வரவேற்க்கப்படுகின்றன.

ஆகஸ்ட் 20ம் தேதி, வாக்கெடுப்பு ஆரம்பிக்கும்.

விண்ணப்பங்களையும், பரிந்துரைகளையும் அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 17.
விண்ணப்பங்களையும், பரிந்துரைகளையும் வாபஸ் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 19.

கும்மியர் '007© யாருங்க?



பட்டைய கெளப்புங்க!

:)

பி.கு1: டமாஸுக்குதான், பரிந்துரையில் உங்கள் பெயர் வந்தால், வருத்தப் படாதீங்க - கொண்டாடப்பட வேண்டிய விடயம் அது :)

பி.கு2(சமீபத்தில் சேர்த்தது): பரிந்துரைக்கப் படும் பதிவர்களின் பதிவுகளை மேலோட்டமாக அலசிவிட்டு, சர்வேயில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு அவர் திறமையான கும்மியரா என்று முடிவெடுக்கும் உரிமை சர்வேசனுடையது ( விட்டா, திருவள்ளுவர் பேர கூட சேத்துடுவாங்க போல இருக்கே, வர லிஸ்ட் பாத்தா :). அதுக்காக இந்த டிஸ்கி )