recent posts...

Wednesday, May 30, 2007

Aug 2007 - பதிவர்களால் நன்மை நடக்கப் போவுது - விளக்கங்கள்

Aug 2007 தமிழ் பதிவர்களுக்கு ஒரு மிக மிக மிக முக்கியமான மாதம் - ஏன்? என்ற பதிவுக்கான தொடர்ச்சி இது.

ஆகஸ்ட் 2007ல என்னய்யா நடக்கப் போவுது? சுதந்திரம் கெடச்சு 60 வருஷமாகப் போவுது. அதுவா மேட்டரு? இல்ல, நான் பதிவு எழுதரத நிறுத்தித் தொலையப் போறேனா? இல்ல, 'இவர் தான் சர்வேசன்'னு சொல்லி படம் போட்டு 'ரிவீல்' ஆகப் போறேனா? சன் டி.வில பதிவர்கள் பத்தி தொடர் ஒண்ணு வரப் போதா?
இப்படி பல பல ஐடியாஸ் அள்ளி வீசினாங்க நம்ம சகலபாடிகள் :)
அதெல்லாம் இல்லீங்க. இது கொஞ்சம் வில்லங்கமான மேட்டரு.

சரி மேட்டருக்கு வருவோம்.

நான் எழுத ஆரம்பிச்சு சில மாதங்கள்தான் ஆச்சு. தினசரி வந்து குவியும், சில நூறு பதிவுகளில், பலப் பல 'உப்புமா' வகையைச் சேர்ந்தது, சில கவித்துவமானவை, சில சிரிக்க வைப்பவை, மிகச் சில சிந்திக்க வைப்பவை, மிக மிக மிக மிகச் சில செயல்பட வைப்பவை.
செயல் பட வைத்த பதிவுகளில், பெரும்பான்மை, அஞ்சு பத்து $களை நன்கொடையாக வசூல் செய்து சிலருக்கு உதவி செய்தவை.
நம்மளும் கொடைவள்ளல் ஆகிட்டோம்னு, ஒரே ஒருநாள் மட்டும், ஒரு சின்ன திமிருடன், நல்லா தூங்க உதவியது.

ஒரு பெரிய மாற்றம் கொண்டு வர யாரும் ஒண்ணும் செஞ்ச மாதிரி தெரியல.

ஈழத் தமிழர் ப்ரச்சனைக்கு சில உதவிகள் நேரிடையா பண்ணின மாதிரி ஞாபகம். மத்தபடி வேற என்ன நடந்திருக்கு நம்ம எழுத்துகளால்? இப்படி யோசிச்ச போது, கண்ணுல கோவி கண்ணனின், தேவாரம் திருவாசகத்தை கொளுத்த வேண்டும்! என்ற பதிவு.

தமிழை சிதம்பரம் கோவிலில் ஒதுக்குகிறார்கள் என்ற ஆதங்கத்தில் எழுதியிருப்பதைப் போல் தெரிகிறது.

எது எப்படியோ, வழக்கம் போல் பல கும்மிகளை கண்டது அந்த பதிவு.
சில வெளி நடப்புகள், சில சவால்கள், சில ஏளனங்கள், சில நையாண்டிகள்னு பின்னூட்டங்கள் சூப்பரா வந்துது.

ஆனால், எனக்குத் தெரிஞ்சு, சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடக் கூடாது என்று ஒரு தடை இருப்பதாகத் தெரியவில்லை. கடவுள் சிலையின் வெகு அருகில் நின்று ( sanctum sanctorum ) பாடக் கூடாது என்பதே தடை.
கோயிலுக்குள்ள, சாமி சிலைக் கிட்ட, எல்லாரையும் விட மாட்டாங்க (பல காரணங்கள் இருக்கும் இதுக்கு). குறிப்பிட்ட தூரம் வரைதான் பக்தர்களுக்கு அனுமதி உண்டு. இது எல்லா கோயில்லயும் கடை பிடிக்கப்படும் வழக்கம்.
ஓதுவார் ஆறுமுகச்சாமி, சிவனுக்கு காது கேக்காதுன்னு நெனச்சுட்டாரோ என்னமோ. சிலைக்குக் கிட்ட நின்னு பாடினாதான் சிவனுக்கு தன் பாட்டு கேக்கும்ணு அடம் பிடிக்கறாரு.

ஜடாயு என்ற பதிவர், சிதம்பரம் கோயிலில் தமிழ்ல பாடியிருக்கேன்னு சொல்லியிருக்காரு.

ரொம்ப காலமா இந்த தேவாரம் மேட்டர் 'தமிழ் அவமதிப்பு' என்ற ரீதியில் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது.

உண்மையில் நடப்பதென்ன?

முத்துக்குமரன் என்ற பதிவர், ஆகஸ்டில் இந்தியா செல்வதாகவும், தன்னுடன் வந்து சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாட யார் தயார் என்ற ரேஞ்சில் பின்னூட்டியிருந்தார்.

அமெரிக்க அனானி ஒருவர் (கோவை செங்கப்பன்), தான் உடன் வருவதாக கூறி, முத்துக்குமரனின் சவாலை ஏற்றதாகத் தெரிகிறது.

மேலும் பலரும், இந்த முயற்ச்சிக்கு ஆதரவு தருவதாக பின்னூட்டியுள்ளார்கள்.

எனக்கும் வரணும்னு ஆசதான். ஆனா முடியாது. but, I can sponsor the effort like most of the other bloggers :)

யாரெல்லாம் சிதம்பரம் கோயிலுக்கு போய் தேவாரம் அழகா பாடப் போறீங்க?

எனக்கு திருவாசகம் தான் தெரியும். அதுவும் இளையராசாவின் சிம்பொனியால் தான் பரிச்சயம் ஆனது.
"புற்றில் வாழ் அரவும் அஞ்சேன், பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன், நா ந நா நா னா நா னா" -- இந்த பாட்ட, அதே ட்யூன்ல பாடரதா இருந்தா, நான் கூட வர முயற்சி செய்வேன் :)

கருத்த சொல்லுங்க. ஊர்ல இருந்தா கண்டிப்பா சிதம்பரம் போக ட்ரை பண்ணுங்க. ஸ்ருதி பிசகாம பாடுங்க. பாவம் சிவன்! :)

தென்னாடுடைய சிவனே போற்றி!! நாராயண நாராயண!

பி.கு: குட்டீஸுக்கான போட்டியில், மூன்று பேர் தான் இதுவரை கலந்துகொண்டுள்ளனர். உங்களுக்கு தெரிந்த குழந்தைகளை கலந்து கொள்ள சொல்லுங்களேன். ஜூன் 15 வரை பொறுத்திருந்து பாக்கலாம்னு இருக்கேன். :) வேற யாரும் வரலன்னா, நானே ஜானகி மாதிரி பாடி ஒரு பாட்ட போட்டுடுவேன்.

பாட்டுக்கு பாட்டுல smss ன் புதிய பாடல் அரங்கேறியுள்ளது.

Tuesday, May 22, 2007

Aug 2007 தமிழ் பதிவர்களுக்கு ஒரு மிக மிக மிக முக்கியமான மாதம் - ஏன்?

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம், தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் ஒரு மிக மிக மிக முக்கியமான மாதம்.

எல்லாரும் சும்மா, பொழுது போக எழுதி வருகிறோம். ஆனால், இந்த ஆகஸ்ட் மாதம், ஒரு ஆக்கபூர்வமான மேட்டர் நடக்கப் போகுது.

அதுல நம்ம பங்கும் இருக்கப் போகுது.

என்ன மேட்டரு?

எங்க, யாரு, எப்படி, எப்போ, என்ன, how, what, which, why, when, where, who, etc.. etc.. யாராவது guess பண்ணுங்களேன் பாக்கலாம். சரியா சொல்றவங்களுக்கு ஏதாவது ஒரு பட்டம் தரேன் :)

விவரங்கள், வரும் வெள்ளி அன்று பகிற்கிரேன் :)

-சர்வேசன்

பி.கு: வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கான போட்டியில் பங்கு பெற உங்களின் குழந்தைகளின் பெயரையோ, உங்கள் நண்பர்களின் பெயரையோ பதிய கேட்டுக் கொள்கிறேன். ஒரு ஜாலியான போட்டியா இதை மாத்தலாம். போட்டிக்கு வந்துள்ள ஒரு சேம்பிள் பாடலை நாளை பதிகிறேன். கலக்கிருக்காங்க கலக்கி!

Monday, May 14, 2007

மூன்று புதிய சர்வேஸ்... இணையத்தில் முதன் முதலாய்!

தினகரன் போட்ட வாரிசு சர்வே, பெரும் சர்ச்சையை உண்டாக்கி, மூன்று உயிரையும் பறித்து, தமிழ் நாட்டுக்கு உபயோகமா இருந்த, அமைச்சரின் பதவியையும் பறித்து இன்னும் என்னென்ன விபரீதம் பண்ணலாம்னு அலஞ்சுகிட்டு இருக்கு.

சர்வேய அனுபவிக்கணும், ரொம்ப ஆராயக் கூடாது. சர்வே படிக்கும் போது, சட்டுனு அந்த நேரத்துல தோண்ற பதில, ஒரு குத்து குத்திட்டு, கொஞ்ச நாள் கழிச்சு, நீங்க நெனைக்கறதே அடுத்தவங்களும் நெனைக்கறாங்களான்னு தெரிஞ்சுகிட்டு அடுத்த வேல பாக்க போயிடணும்.
அத்த வுட்டுட்டு, பீர் வாங்கி, குடிச்சு புட்டு, அந்த பாட்டில்ல பெட்ரோல் ஊத்தி, அதுக்கு திரி வச்சு, திரிய கொளுத்தி, ஆபீஸுக்குள்ள வீசரதெல்லாம் நல்லாவா இருக்கு? கஷ்ட காலம்.
அந்த மூணு உயிரு போக காரணமாயிருந்தவன் எல்லாம் @#$@#$@!!$@#$#@$@$!$!@$!$!$!$!$!!!

என்னமோ போங்க. த.மாறன இன்னாத்துக்கு கட்சிய வுட்டு தூக்கனாங்க? தலைவரு சொல்லியும் சர்வே போட்ட தினகரன் மேல இருக்கர கோவத்த, க.மாறன் கிட்ட இல்ல காட்டணும்?

எது எப்படியோ, அங்க இங்க பிராஞ்சு, ஊருக்குள்ள பல தொழில்கள் துவங்க காரணமா இருந்தவரு மாறன் (குடும்பத் தொழிலா? அதில்லீங்க. நாட்டுக்காக செஞ்சத சொல்றேன். நோகியா, மோடோரோலா, இதெல்லாம் ஸ்ரீபெரும்புதூர்ல வரிசையா கட்டறாங்களே)

இந்தப் பதிவர், தயாநிதிமாறனை, ராஜினாமா செய்ய வைத்ததை, கண்டிக்கிறார். உண்மைக் குற்றவாளியை தண்டிக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்துகிறார். (இதுக்கு யாரும் பட்ட போடலியா?)

என்னென்னமோ நடக்குது. மர்மமா இருக்குது.
சம்திங் சம்திங் அரங்கேறுது. Everything seems like it is being orchestrated by a maestro! We will have to wait and see.

சரி, நமக்கென்ன. பசிச்சா சாப்பிட வீட்ல சாப்பாடு இருக்கு. வேர்த்துதுன்னா சில்லாக்க, ஏ.சி இருக்கு. போரடிச்சுதுன்னா போட்டு பாக்க 100 சேனல் இருக்கு. தூக்கம் வந்தா குப்புர படுக்க, மெத்து மெத்துனு மெத்த இருக்கு. எவன் பண்ண புண்ணியமோ, நம்ம வாழ்க்க ஸ்மூத்தா போவுது. அடிமட்ட ஏழ, எக்கேடு கெட்டா நமக்கென்ன? நம்ம பொழப்பு ஒழுங்கா இதே மாதிரி ஸ்மூத்தா போனா போதும். என்ன நான் சொல்றது?
வெறுப்பு தான் வருது, சில விஷயங்கள் பாக்கும்போது. கையாலாகத் தனத்தை நினைத்து, வெறுப்பு அதிகமாகுது.

சரி, அத்த எல்லாம் வுடுங்க. மூணு புதிய சர்வேஸப் பாப்போம். ஒவ்வொண்ணுத்துக்கும் தனித் தனியா வாக்கணும். வாக்குங்க :)

1) மாறன் - பதவி விலக்கல் சரியா?


2) வீட்டில் டென்ஷன் ஏற்படுத்துவது யார் (பாஸ்டன் பாலா விருப்ப சர்வே)


3) சர்வேசனின் சர்வே முடிவுகளின் Quality (அனானி விருப்பம்)


:)

குட்டீஸுக்கான போட்டிக்கு இரண்டு பேர்தான் பேர் குடுத்திருக்காங்க. குட்டீஸ் பாப்புலேஷன் கம்மியோ நம்ம வட்டத்துல? வேற யாரும் வரலன்னா, இதுவரை உள்ள இரண்டு பேரை பாடச்சொல்லி, பரிச கொடுக்க வேண்டியதுதான் :) சீக்கிரம் பெயர் கொடுக்கவும்.

அடுத்த சர்வேக்கு டிப்ப அள்ளி வீசுங்க.

:)

Sunday, May 13, 2007

சில தீர்ப்புகள் - மாயக்கண்ணாடி, சற்றுமுன், திமுக, சன்.டிவி

சமீபத்திய சர்வேக்களும், தீர்ப்புகளும். வெரி இன்டரஸ்டிங் ரிஜல்ட்ஸ்!

சைட் நோட்: இந்த "ஜ" எழுதும் போதெல்லாம் பள்ளிக்கூட நினைப்பு வந்துடும். தமிழ் வகுப்பில், தமிழ் வாத்தியார், நண்பனை 'பாரத சமுதாயம் வாழ்கவே' பாடலை புத்தகத்தை பார்த்து வாசிக்கச் சொன்னார்.
அவனும், எழுத்துக் கூட்டி, முக்கி மொனகி, 'பாரத சமுதாயம் வாழ்கவே' என்று அடுத்த வரிக்கு பயணமானான்.
"ஐய ஐய ஐய" என்று அடுத்த வரியை ஆரம்பித்தான், எல்லாரும் அவனை திரும்பிப் பார்த்து கொல்லென சிரிக்க.
வாத்தி அவனை அழைத்து, முதுகில் போட்டு, ஜய ஜய ஜய வ , ஐய ஐய ஐயன்னா படிக்கர, எரும , பண்ணி, நாயே, பேயே என்று சாத்தினார்கள்.

பாவம், பயல், கொஞ்ச நேரமாச்சு அவனுக்கு, அவனோட தப்பு புரிஞ்சுக்க.

சரி, இனி தீர்ப்புக்கு வருவோம்.

1) சேரனின் மாயக்கண்ணாடி - இதிலும் சாதீயமா ( 146 votes )


2) சற்றுமுன் - ஒரு தீவிர அலசல் ( 29 votes )
3) 2040ல திமுக தலைவரு யாரு - நேயர் விருப்ப சர்வே ( 77 votes )


4) SUN TV & DMK - யாருக்கு யாரால் லாபம்? ( 162 votes )


குட்டி வாண்டுகளுக்கான போட்டி - உங்களுக்கு தெரிந்த வாண்டுகளை பங்கு பெறுச் செய்யுங்கள். விளம்பரம் செய்யுங்கள்! - date extended.
இதுவரை எடுத்துள்ள சர்வேசனின் தொகுப்பையும் பார்க்கவும்:


பின்னூட்டு மறவாதீர். அடுத்த சர்வேக்கு ஒரு ஐடியா சொல்லிட்டுப் போங்க.

:)

Saturday, May 12, 2007

பப்பர பப்பர பப்பர பாஆஆம்.. பாட்டுக்கு பாட்டு சில்வர் ஜூப்லி!

பாட்டுக்கு பாட்டு துவங்கியதும், உலகெங்கிலும் உள்ள கோடானு கோடி ரசிகர்களின் பேராதரவால் ஹிட்டோ ஹிட்டாகிவிட்டது :).

இதுவரை 25 பாடல்கள் அரங்கேறியுள்ளன.

25ஆவதாக, குறைகுடம் ப்ரசன்னா, மன்றம் வந்த தென்றலுக்கு என்ற SPB யின் பாடலை பாடி திக்கு முக்காட வைத்துள்ளார்.

அட, இப்பதான் கவனிச்சேன், சர்வேசன் பக்கங்கள் இதுவரை 10,000 விஸிட்ஸும் பெற்று விட்டன. இதே ரேஞ்சுல போனா, நீல்சன், சி.என்.என்னெல்லாம் பின்னுக்குத் தள்ளி, வெற்றி நடை போடும் நாள் வெகுதூரத்தில் இல்லை ( சரி சரி அடங்கு ).

அனைத்து பாடல்களை கேட்க்க இங்கே சொடுக்கலாம். கேட்டுட்டு எல்லாருக்கும் மார்க்க போடுங்க‌.

இதுவரை அரங்கேறிய பாடல்கள்:
1) சர்வேசன் (feb'07) - யாரந்த நிலவு
2) சிறில் அலெக்ஸ் (feb'07) - உறவுகள் தொடர்கதை
3) ஷைலஜா (feb'07) - முதல் முதலாக ஜன்னல் ஓரத்தில்
4) நெல்லை சிவா - யார் சொல்வதோ
5) Kittu - யமுனை ஆற்றிலே
6) அருள் குமார் - என்னுள்ளே என்னுள்ளே
7) Anamika - தூங்காத விழிகள் ரெண்டு(bonus) & அந்த நிலாவத்தான்
8) Appaavi - அறியாத மனசு
9) Radha Sriram - முத்தக்களோ கண்கள்
10) Shakthi - தூங்காத கண்ணென்று ஒன்று
11) ஷைலஜா - உன்னை ஒன்று கேட்ப்பேன்
12) வல்லிசிம்ஹன் - ஆலய மணியின் ஓசையை
13) SK - நான் ஒரு குழந்தை
14) ஷைலஜா - இஞ்சி இடுப்பளகா
15) கிருபா ஷங்கர் - எனக்கொரு girl friend வேணுமடா
16) தமிழ்ப் பிரியன் - அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்
17) Anamika - தமிழுக்கும் அமுதென்று பேர்
18) Appaavi - ராஜ ராஜ சோழன் நான்
19) சர்வேசன் - வனிதாமணி வனமோகினி
20) Sowmya - உன் பார்வையில் ஓராயிரம்
21) Musical Watts - என் வானிலே ஒரே வெண்ணிலா
22) Shakthi - அழகிய கண்ணே உறவுகள் நீயே
23) ஷைலஜா - எண்ணப் பறவை
24) Jeeves - ஆகாயம் ஆகாயம்
25) ப்ரசன்னா (குறைகுடம்) - மன்றம் வந்த தென்றலுக்கு
26) ?? எ,ஏ ல பாடணும்

கலந்து கொண்ட‌ அனைவருக்கும் நன்றி.

தொடர்ந்து இந்த சங்கிலியை வளர்த்து, நல்ல பாடல்களை பாடி, சுவாரஸ்யமாக இதை கொண்டு செல்ல அனைவரையும் வேண்டுகிறேன்.

குட்டி வாண்டுகளுக்கான போட்டிக்கு பெயர் பதிய இங்கே சொடுக்கவும்.

Voted in this Interesting Survey?

How about this?

:)

-SurveySan

SUN TV & DMK - யாருக்கு யாரால் லாபம்? சர்வே!

திமுக வாரிசுச் சர்ச்சையில், பதிவர்களில் பெரும்பான்மையவர்கள், ஸ்டாலின் குடும்பம் பக்கமே சாய்ந்திருக்கிறார்கள். ( பெட்ரோல் பாம்னு சாய்ஸ் சூஸ் பண்ணவங்கள கணக்குல சேத்துக்காதீங்க :) ). முதல்வரும், ஸ்டாலின் வாரிசாவதையே விரும்புவார் என்று ஊடகங்களில் பல வண்ணம் செய்திக‌ள் வருகின்றன.

அப்போ, மாறன் ப்ரதர்ஸ் என்ன ஆவாங்க? சன் டி.வி நெலம என்னாகும்?

ஆமா, திமுகவின் சொத்துதான் சன் டி.வின்னு நெனச்சிட்டிருந்தேன். ஆனா, 'வாரிசு சர்வே' போட வேணாம்னு கருணாநிதி சார் சொல்லியும், மாறன் ப்ரத்ர்ஸ் கேக்கலியாமே?
அப்ப, அவருக்கு சன் டி.வில 'வாய்ஸ்' இல்லியா?

ஒண்ணுமே புரிய‌லியே சாமிக‌ளா!

எது எப்படியோ, இனி மேட்ட‌ருக்கு வ‌ருவோம்.

அதாக‌ப்ப‌ட்ட‌து, அக‌ஸ்மாத், திமுக‌வும், ச‌ன் டிவியும் பிரிஞ்சிட்டா, யாருக்கு லாப‌ம், யாருக்கு ந‌ட்ட‌ம்னு பாக்க‌தான் இந்த‌ ச‌ர்வே.

(திமுக‌ த‌ர‌ப்பிலிருந்து, இந்த ச‌ர்வே போட‌ வேணாம்னு, ஈ.மெயில் வ‌ந்தா, ச‌ர்வே வில‌க்க‌ப்ப‌டும். மாற‌ன் ப்ர‌த‌ர்ஸ் மாதிரி நம்ம சர்வே கமிட்டி, போட்டே தீருவேன் என்று அட‌ம் பிடிக்காது :) ).

Thursday, May 10, 2007

2040ல திமுக தலைவரு யாரு? நேயர் விருப்ப சர்வே

டிஸ்கி: தமில் படிக்கத் தெரியாதுன்னு சில சோம்பேறி விசிறிகள் ரொம்ப விசனப்பட்டதால், இந்த பதிவில், ஆங்கில மொழிமாற்றம் சேர்த்துள்ளேன். விசிறிகளே, படிச்சு அறிவ வளத்துக்கோங்க‌. amen!
diski: for my dedicated wonderful fans who couldnt read tamiZ, i have included a small english snippet of translated content. amen!

ஊரே ரெண்டு பட்டு கெடக்கு தினகரன் சர்வேயால். என்னத்த சொல்ல.
Total chaos back home due to dinakarans surveys. hmm.

100 ரூபா சொத்துக்கே வாரிசு யாருன்னு சரியா சொல்லலன்னா, உன்ன புடி என்ன புடின்னு வெட்டிட்டு சாவர ஊரு நம்மளது.
for a megre 100rs, there will be killings and backstabbing, among our lovely people, if a proper heir is not announced.

இந்த லட்சணத்துல பல கோடிகளும், அதிகாரமும், புகழும் பெற்றுத் தரும் அரசியல் கட்சியின் வாரிசை சரியான நேரத்தில் அறிவிக்கலைன்னா, குழப்பங்கள் எப்படி வரும்னு ஒரு சர்வே போட்டு காமிச்சுருக்காங்க, நம்ம நீல்சன் அமைப்பை சேர்ந்த சர்வே குழுவினர்.
Thanks to neilsen and dinakaran. we now know, what will happen when a big political party is left for grabs without officially uni-vocally announcing the next leader.

மஹாத்மா காந்தி, தன் வாரிசை, ஒரு நல்ல தலைவனா உருவாக்கி நாட்டுக்கு கொடுக்காம போயிட்டாரு. அவர் பேர மட்டும் வச்சுக்கிட்டு சில பேர் 'வாரிசான' கதை நமக்குத் தெரியும்.
Gandhi has to be blamed for not leaving us with a proper leader with his noble skills. We all know how his family name is used and showcased.

இப்படி இன்னும் பல பேர் அவங்க அதிகாரத்துல இருக்கும்போது, தனக்குப் பின் இவருதான்னு கை காட்டாம போயிருக்காங்க‌. அதனால் வ‌ரும் பின்விளைவுக‌ள் ப‌த்தி அவ‌ங்க‌ளுக்கு தெரியாம‌லா இருக்கும்?
There are so many other great leaders, like Gandhi, who has left their kingdom up for grabs, without properly announcing a successor.

விஷயத்துக்கு வருவோம், மலேஷிய அன்பர் ஒருவரின் நேயர்விருப்ப சர்வே இது.
lets come to the point. a fan from Malaysia requested this survey. (ofcourse i twisted it a bit)

என்ன‌மோ போங்க‌. ந‌ம்ம‌ ச‌ர்வே தொலைதூர‌ப் பார்வை உடைய‌து. அடுத்த‌ வாரிசு தின‌க‌ர‌ன்/நீல்ச‌ன் சொல்லிட்டாங்க‌.
hmm. our survey in this post has a futurustic approach, unlike neilsen/dinakarans :)

அடுத்த‌துக்கு அடுத்த‌து யாருங்க? 2040ல திமுக தலைவரா யாரிருப்பா? அதான் ந‌ம்ம‌ ச‌ர்வே :)
Who will be the DMK leader in 2040? lets find out.

இது சும்மா ட‌மாசுக்கு போட்ட‌து. குண்டெல்லாம் போட்டுடாதீங்க‌ப்பு.
this is just for fun. no petrol bombs in my blog please :)

கலவரத்தில், (வழக்கம்போல்) இறந்த அப்பாவிகளின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
heart felt condolences for the family of the innocent victims.p.s1: சற்றுமுன் - ஒரு தீவிர அலசல் சர்வே

p.s2: வல்லிசிம்ஹனின் கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே பாடலைக் கேட்க்க இங்கே சொடுக்கவும்.

p.s3: next survey will be the same topic for ADMK. just for fun, no seriousness intended.

சற்றுமுன் - ஒரு தீவிர அலசல் சர்வே

குட்டீஸுக்கான போட்டின்னு அறிவிப்பு கொடுத்ததோட சரி, அதுக்கப்பரம் அதுக்கு வெளம்பரம் வெளம்பி, ஆள் சேக்க நேரம் கெடைக்கல. ரஜினி பற்றிய சூடான செய்தி போட்டும், ஆளுங்க வரல. அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க நேரப் பற்றாக்குறை வேற :).
சமீப காலமா, வாங்கர சம்பளத்துக்கு, ஒழுங்கா வேலை செய்யவேண்டிய நிர்பந்தம்.
ஆனந்த நாட்கள் எல்லாம் மலை ஏறிடுச்சோ? :)

தமிழ் பதிவுலகம், பட்டைகள் வாரத்துக்கப்பரம், இப்பெல்லாம் திரும்ப 'சீரான' வேகத்துக்கு வந்துடுச்சு. பழையபடி சுவாரஸ்ய பதிவுகளும் வரத் துவங்கியுள்ளன.

நெம்ப யோசிச்சு எழுதவெல்லாம் நேரமில்லாம (எலே, நீ எப்ப யோசிச்சு எழுதியிருக்க? ) தவிச்சப்ப, வழக்கம் போல ஏதாவது ஒரு சர்வேவாவது போட்டு, உள்ளேன் ஐயா சொல்லிடலாம்னு முடிவு பண்ணேன்.
பதிவுகள மேஞ்சா, நம்ம சற்றுமுன் குழு அதுக்குள்ள 1000 பதிவுகள் தாண்டி தமிழ் ப்ளாஷ் ந்யூஸ் உலகில், முடிசூடா மன்னன்ஸ்/மன்னீஸ் ஆயிட்டிருக்காங்கன்னு பாத்தேன்.

சற்றுமுன் ஆரம்பிச்ச போது, இன்னாடா, இன்னொரு குழுவா? ரொம்ப தேவையான்னு நெனச்சேன். ஆனா, அவங்க சுடச்சுட, உலக நிகழ்வுகளை டக் டக்குன்னு பதிவுல ஏத்தின போது, தினகரன், CNN, thatstamil னு அங்கங்க போய் படிக்க வேண்டிய விஷயங்கள உடனுக்குடன் தமிழ்மண/தேன்கூடு முகப்புலயே படிக்க முடிஞ்சது நல்ல ப்ரயோசனமான விஷயம் ஆயிடுச்சு.
இப்படியே தொடர்ந்து போனா, அவங்களுக்குன்னு ஒரு எடம் பதிவுலகில், ஸ்ட்ராங்காயிடும்னு நெனைக்கறேன்.

இப்ப மேட்டருக்கு வரேன்.

சற்றுமுன் பற்றிய உங்கள் கருத்துக்களை யோசிச்சு கீழ குத்துக்கங்க (more than one survey provided below. so, you will have to pick them separately ).
அப்படியே, அவங்களுக்கு ஏதாவது constructive criticism இருந்தா, பின்னூடுங்க. நன்றி!

சற்றுமுன் குழுவினரே, இந்த இலவச சர்வேயின் முடிவுகளில், உங்களுக்கு உபயோகமான தகவல் ஏதாவது வந்தா, நம்மள கொஞ்சம் தனியா கவனிங்க (wire-to surveysan@worldbank.chumma) :)))))

மூணு சர்வே இருக்கு, ஒவ்வொண்ணும் தனித்தனியா வாக்கணும். வாக்குங்க!சற்றுமுன் குழுவைச் சேர்ந்த கீழிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Vicky
சிவபாலன்
கவிதா|Kavitha
திரு
சிறில் அலெக்ஸ்
ரவிசங்கர்
யெஸ்.பாலபாரதி
சிந்தாநதி
பொன்ஸ்~~Poorna
கோவி.கண்ணன் [GK]
அதிரை புதியவன்
மணிகண்டன்
முத்துகுமரன்
சற்றுமுன்...
துளசி கோபால்
மணியன்
பெருசு
Radha Sriram
ஆசிப் மீரான்
Boston Bala


நன்றி!!!!!!!!

:)))))))))))))))))))))))))))))