recent posts...

Thursday, August 27, 2009

தத்துவம்பா...

ரெண்டு அருமையான தத்துவம் சொல்லலாம்னு இருக்கேன். படிச்சுட்டு, என்ன மாதிரி லூஸ்ல விட்டுடலாம், இல்லன்னா, தத்துவத்தின் உட்கருத்தை உள்வாங்கி, மேலோங்கலாம்.

ஆஃபீஸ்ல, உண்ட களைப்பில், "Point Return" பற்றி வெட்டிக் கதை பேசிக்கிட்டிருக்கும் போது , "என்னாத்துக்கு இப்படி இந்த வயசுல கஷ்டப்படணும்? யாருக்கென்ன லாபம்னு பேச்சு வந்த போது" என் பக்கத்து சீட்டு நண்பர் சொன்ன கருத்து ஒண்ணு.

இன்னொண்ணு, "இன்னாய்யா வாழ்க்கை இது. இந்த மண்ட கொடச்சல் வேலை தாங்க முடியல்ல.. இத்தையே செஞ்சுக்கினு இருந்தா, எப்ப அடுத்த லெவலுக்கு போரதுன்னு பொலம்பும்போது" இந்தப்பக்க சீட்ல இருக்கர நண்பர் சொன்னது.

மொத தத்துவம் பாப்போம்:
ஒரு ஆளு பெரிய பாலைவனத்துல நடந்து போயிக்கிட்டே இருக்காரு. வெயில்னா வெயிலு, அப்படிப்பட்ட வெயிலு. கைல வெச்சிருந்த தண்ணி காலி ஆயிடுச்சாம்.
பயங்கரமான தாகமாம் அவருக்கு. ஆனா, சுத்து வட்டாரத்துல எங்கையும் பொட்டு தண்ணியும் இருக்கரமாதிரி தெரியல. வேர ஆள் நடமாட்டமும் இல்லை.

நாக்கு வரண்டு, மயக்கமே வர ஆரம்பிச்சிடுச்சாம்.

தூரத்துல பாத்தா ஒரு தண்ணி கை பம்ப்பு தெரிஞ்சுதாம்.
அப்பாடின்னு, அரக்க பரக்க அதுக்கிட்ட போனாராம்.
கொழாக்கு மேல ஒரு குவளைல ஃபுல்லா தண்ணி இருந்துச்சாம். அத எடுத்து குடிக்கலாம்னு குவளைய கைல எடுத்தாராம். பாத்தா, பக்கத்துல ஒரு பலகைல என்னமோ எழுதி வச்சிருந்துதாம்.
குவளைல இருக்கர தண்ணிய, கை பம்ப்பு கொழாய்ல ஊத்திட்டு, பம்ப்பை அடிங்க. அப்பதான் தண்ணி வரும். அத குவளைல புடிச்சு, நீங்க குடிங்க. குடிச்சு முடிச்சதும், இன்னொரு குவளை நிறைய தண்ணியப் புடிச்சு வச்சுட்டுப் போங்க.

"அடடா, தண்ணிய உள்ள விட்டு, அடிச்சாதான், கொழாய்ல தண்ணி வருமாமே. நாம, அத செய்யாம, இந்தத் தண்ணிய குடிச்சு காலிப் பண்ணிட்டா, நமக்குப் பின்னாடி வரவனுக்கு, தண்ணியே கெடைக்காம செத்துடுவானே.
ஆனா, குவளைத் தண்ணிய கொழாய்ல ஊத்திட்டு, கை பம்ப்பு அடிக்கும்போது, தண்ணியே வரலன்னா என்னா பண்றது? இருந்த தண்ணியும் கொட்டிட்டு, நாம சாக வேண்டியதாயிடுமே?"
இப்படி, ரொம்ப யோசிச்சாரு நம்ம ஆளு.

ஆனா, இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தவரு, குவளை தண்ணிய, கொழாய்ல ஊத்திட்டு, கை பம்ப்பை அடிக்க ஆரம்பிச்சாரு.
பலகைல எழுதியிருந்த மாதிரியே, தண்ணி சர்ர்ர்ர்னு வந்துச்சு. ஆசை தீர குடிச்சுட்டு, இன்னொரு குவளை நிறைய தண்ணியும் புடிச்சு, கொழா பக்கத்துல வச்சுட்டு, இவரு தன் வழி பாத்து நடக்க ஆரம்பிச்சுட்டாராம்.

மாறல் ஆஃப் த ஸ்டோரி? : சொல்லித்தான் தெரியணுமா? Point Return பக்கத்தை போய் பாருங்க. ஸ்ரீதரன் அளவுக்கு, மெனக்கெடலன்னாலும், சிறுகச் சிறுக ஏதாச்சும் செய்யணும். அட்லீஸ்ட், அவருக்கு, ஒரு விசிட் அடிச்சு, உள்ளேன் ஐயா சொன்னா கூட, சாலச் சிறந்தது. (அவரு ட்விட்டவும் செய்யறாரு, அப்பப்ப)


பி.கு: ரெண்டாவது தத்துவம் அப்பாலிக்கா பாக்கலாம். இப்பெல்லாம் ரொம்ப பெருசாஆஆஆஆஆஆ எழுதறேன்னு ஒரே கம்ப்ளெயிண்ட்டு வருது. :)

ஹாப்பி வெள்ளி!பி.கு: எம் சமீபத்திய இசை வேள்வியை கேட்டு மயங்காதவர்கள், மயங்கவும்.

Sunday, August 23, 2009

TheHinduவின் கொழுப்பா? நமது கையாலாகாத்தனமா?

hinduonnet.com, இந்து நாளிதழின் இணையதளம். அச்சில் வரும் நாளிதழ் எந்தளவுக்கு, குவாலிட்டியா இருக்குமோ, அதுக்கு தலைகீழாக அதன் இணைய தளம் இருந்து வந்தது.
மொக்கையான கலரும், கண்ட இடத்தில் விளம்பரமும், காண சகிக்காமல் இருக்கும்.

யாரோ நல்லா திட்டியிருப்பாங்க போல, இணையதளத்தை மெருகேத்திக்கிட்டு இருக்காங்க. புதிய பேட்டா தளம், கண்ணுக்கு இதமாய் இருக்கிறது.

புதிய தளத்தை விமர்சிப்பதற்கு அல்ல இந்த பதிவு.

புதிய தளம் பற்றிய விவரங்களை அலசும்போது, இது கண்ணில் பட்டது.
The design is by Mario Garcia Jr., of Garcia Media, Tampa. Florida, USA. The workflow solution is by CCI Europe A/S, Denmark.The web publishing system is from Escenic A/S, Norway.

என்ன கொடுமைங்க இது?

ஏழு கடல், எட்டு மலையெல்லாம் தாண்டி, ஊரு விட்டு ஊரு போயி, பரதேசிகளாகிய நாம், உலகில் இருக்கும் மொத்த இணையதளங்களையும், கட்டிக் காத்துக்கிட்டு இருக்கோம், ஆனா, உள்ளூர்ல இருக்கர இந்துக்கு கைகொடுக்க, ஒரு இந்தியக் குடிமகனுக்கும் வக்கில்லாமல் போனது ஞாயமா?

Denkarkலும், Norwayயிலும் உள்ள உபகரணிகளை உபயோகிச்சதை மன்னிச்சாலும், எங்கோ Floridaவில் இருக்கும் Mario Garcia Jrஐ டிசைன் செய்யச் சொன்னது பெருங்குற்றம்.

கேக்க ஆளில்லையா?

Tuesday, August 18, 2009

ஸ,ப,ஸ வை தேடி

நானும் ரொம்ப நாளைக்குப்பரம் என்னுள் பொங்கி எழுந்த இசை ப்ராவகத்தை, 'சின்னக் கண்ணனை' அழைத்து தீத்துக்கிட்டேன்.
எனது ஆஸ்தான இணைய குருநாதர்கள் வந்து, இசையை ஆராய்ந்து, பிரிச்சு மேஞ்சாங்க.

குறிப்பாக, நண்பர் VSK வந்து, என் ப்ரசித்தி பெற்ற 'நேசல்' வாய்ஸை திருத்துவது எப்படின்னு கருத்து சொல்லியிருந்தாரு.

ஏதோ, 'ஸ,ப,ஸ' பயிற்சி பண்ணணுமாம்.

அட, இவ்ளோ சிம்பிளா இருக்கே மேட்டருன்னு, கூகிளைத் தேடி, யூட்யூபில் ஏதாவது சங்கதி ஆப்டுமான்னு பாக்க ஆரம்பிச்சேன்.

ஒன்னியும் ஆப்டல. ஆனா, ஒரு அருமையான பதிவு மாட்டிச்சு.

யாரோ அகிலன்னு ஒருத்தரு, தன் அம்மா எப்படி ஹார்மோனியப் பெட்டியில், ஸ,ப,ஸ பாடி சுருதி பிடிப்பாங்கன்னு சொல்ல ஆரம்பிச்சு, அப்பரம், அப்படியே யதார்தத்தைப் பகிர்ந்து சோகமாக்கிட்டாரு. நீங்களும் படிச்சுப் பாருங்க - அம்மாவின் சுருதிப் பெட்டி.

ஈழத்து வாழ்க்கை ரொம்பக் கொடுமைங்கோ.
திகிலாவுது.
ஏதோ, உப்பு சக்கரை வாங்க மளிகைக் கடைக்கு கெளம்பர மாதிரி, குண்டு போடும்போது, வீட்டை விட்டு வெளீல போயிடுவோம்னு சொல்றாங்க. யம்மாடி!

அன்னையை விடச் சிறந்த சென்னையில், உண்டு கொழுத்து, மென்று களித்து, வளர்ந்த அறியாப் பிள்ளை நானு. படிச்சு மெரண்டு போயிட்டேன்.

என்னைப் போல், உண்டு கொழுத்து, மென்று களித்து, வெத்தா, கம்மியான கவலைகளுடன், வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் பெரூந்தகைகள், கஷ்டப் படறவங்களுக்கு ரொம்ப யோசிக்காம ஒதுவுங்க.

PiTன் இம்மாத போட்டி முடிவுகள் பதிவில், சிங்கை நாதன் என்ற அன்பர், மருத்துவ உதவிக்காக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது.

அதைப் படித்த Sathiyaவின் பின்னூட்டம் கீழே:
*சிங்கைநாதனின் இதய மாற்று அறுவைச் சிகிச்சை பற்றி படித்ததும் மிக வருத்தமாக இருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு தான் எனது பிறந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை(open-heart bypass) நடந்தது. பல நண்பர்கள் இது போல் உதவினார்கள். என் மகள் இப்போது நன்கு தேறி வருகிறாள். நண்பர் சிங்கை நாதன் உடல் நலம் தேற வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு என் பங்கிற்கும் ஆவன செய்கின்றேன். எனது பரிசு பணத்தையும் அவருக்கே கொடுத்து விடுங்கள்.*

மக்களே, வாழ்க்கை பல திருப்புமுனைகள் கொண்டது. நாம, எவ்ளோ பெரிய ஜாம்பவனா இருந்தாலும், சில சமயங்களில், தூக்கி விட ஆள் தேவைப் படலாம்.
இன்ஷா அல்லா, உங்க யாருக்கும், எந்த இக்கட்டும் வராமல் இருக்கட்டும்.
ஆனால், இக்கட்டில் இருப்பவர்களுக்கு, உங்களால் இயன்றதை உதவ, சிறிதும் யோசிக்காதீர்கள்.

நன்றி!

Sunday, August 16, 2009

சர்வே கொம்பேனி மூடுவிழா

இதனால் அனைவருக்கும் அறியப்படுத்துவது என்னவென்றால், இதுவரை சமூக மேம்பாட்டுக்கு பெரிதும் உதவி வந்த எமது சர்வேக்கள் அனைத்தும் முடக்குப்பட்டுவிட்டன.

இது வெளிநாட்டு சதியா, உள்நாட்டு கொதியா என்பதை அறிந்து கோள்ள விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

சர்வே கொம்பேனி முடக்கப்பட்டுள்ள நிலையில், எமது முந்தைய சர்வேக்கள் அனைத்தும், காலாவதியாகிவிட்டன. அதன் முடிவுகளும் இனி பழைய பதிவுகளில் தெரியப் போவதில்லை. நடந்து முடிந்த பலப் பல சர்வேக்களில் யாருக்காவது, அதிதீவிர சந்தேகம்/கேள்விகள் இருந்தால், தெரியப்படுத்தவும்.
எமது ஞாபக சக்தியைப் பயன்படுத்தி அதற்கான விடையைத் தெரியப்படுத்துகிறோம்.

சர்வே கொம்பேனி காலாவதியாகிவிட்ட நிலையில், சர்வேசன் பதிவும் முடக்கப்படுமா என்ற தீவிர சந்தேகங்களும், தீக்குளித்தல்களும் நடந்தேறிவிடும் அபாயம் இருப்பதால், நேயர்கள் அனைவருக்கும் எமது முடிவை உடனே தெரியப்படுத்தும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

சர்வேக்கள் எடுப்பது, பதிவுலகுக்கு, நாம் ஆரம்பத்தில் அடியெடுத்து வைக்க ப்ரயோகப்படுத்திய ஆயுதம். கடந்த 2 1/2 வருட அனுபவத்தில், நாம் ஒரு தேர்ந்த எழுத்தாளர் ஆகிவிடவில்லையென்றாலும், எத்தையாவது எழுதி, எப்டியாவது பதிவப் போட்டு, ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளோம்.

ஸோ, இனி வருங்காலத்தில், ப்ளாகர் முடக்கப்படும் வரையில், சர்வேசன் பக்கத்தில், எத்தையாவது கிறுக்கிக் கொண்டே இருத்தல் தொடரும். படிக்கரது உங்க தலை எழுத்து என்று கொம்பேனியார் கருதுகின்றனர்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் ஆதரவுக்கு, இரு கரம் கூப்பி வந்தனம் செய்வது, கொம்பேனியின் நிரந்தர உறுப்பினர்,

-சர்வேசன்

பி.கு: கீழே இருக்கும் லோகோ, 2 1/2 வருடத்துக்கு முன், ஒரு பின்னிறவு நன்னாளில், ஒரு சிவப்பு வட்டம் வரைந்து, ஃபோட்டோ ஷாப்பில் அதுக்கு கண்ணும் மூக்கும் வைத்து, 'சர்வே'சன்னை உருவாக்கியது இன்னும் பசுமையாய் நினைவில் உள்ளது. ஐ வில் மிஸ் யூ 'சர்வே'ஸ் :)

Thursday, August 13, 2009

உருக்கும் பாடல்

சில பாட்டெல்லாம் எப்ப கேட்டேன்னே நினைவில்லை. ஆனா, எங்கையாவது டிவிலையோ, ரேடியோலையோ, யூ.ட்யூபலையோ கேட்டா, பல வருஷம் பரிச்சயமான பாட்டு மாதிரி, சொக்க வச்சுடும்.

தமிழில், 'ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது', அந்த ரகம்.
எங்க வீட்ல அதன் கேசட்டோ, சிடியோ எதுவும் கிடையாது.
நெனவு தெரிஞ்ச நாளக்கப்பரம், அந்தப் பாட்டை அடிக்கடி, ரேடியோல கேட்டதும் ஞாபகம் இல்லை. ஆனாலும், ஆழமா உள்ளுக்குள்ள பதிஞ்ச பாட்டு அது.
ஒரு வேளை, நான் சின்ன வயசுல இருக்கும்போது, எங்க மம்மியும் டாடியும் அடிக்கடி கேட்டிருப்பாங்க போலருக்கு.

ஹிந்தியில் பல பாடல்கள் அந்த வகையைச் சேர்ந்தது.
சின்ன வயசுல, ஞாயிறுகளில், சிக்கன் பிரியாணியை வெட்டு வெட்டிட்டு, எங்க நைனா, ரேடியோல, பழைய ஹிந்திப் பாட்டை போட்டு விடுவாரு.

உண்ட களைப்புக்கு, கேக்கவே ப்ரமாதமான பாடல்களாப் போடுவாங்க.
லதாஜியும், ரஃபியும், கிஷோரும், முகேஷும், போட்டி போட்டுக்கிட்டு மனசை அள்ளுவாங்க.

அந்த காலத்தில் அப்படிக் கேட்டிருக்கணும், இந்த லதாஜி பாடலை.
நேத்து, யூ.ட்யூபில் எதையோ தேடிப் போய் இது ஆப்டுது.

ப்யூட்டி இன்னான்னா, இதுக்கு இப்ப ரீமிக்ஸ் வந்திருக்கு. அதுவும், ப்ரபலமாயிருக்கு போல.

ஏர்டெல் டாப் சிங்கர் மாதிரி, மலையாள உலகில், ஐடியா ஸ்டார் சிங்கர் ரொம்ப ப்ரபலம்.
ஒரு கேரளத்துப் பெண்குட்டி, ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா, அந்த லதாஜியின் பாடலை, பாடரது கீழே.
aap ki nazron ne samjhaன்னு வரும் பாடல் அது. உருக வைக்கும் ரகம்.

இது கேரளப் பெண்குட்டி பாடரது:


இவா பாடினதும், அவா (சித்ரா சேச்சி) மார்க் போடரது இங்கே:


இது லதாஜியின் ஒரிஜினல். இதைக் கேட்டாலே, சின்ன வயசு பிரியாணி வாசமும், அந்த வெயில் கால மதியான வேளைகளும் நினைவு வருது.


Mistress of spicesனு ஒரு படத்துல, இதே பாட்டின் ரீ-மிக்ஸ், ஐஸ்வர்யா ராயின் ஆடலுடன்:


எஞ்சாய் மாடி!

ஹாப்பி வெள்ளி!

Tuesday, August 11, 2009

பொன்னியின் செல்வன் in a nutshell - கடைசி பாகம்

பதிவுலகில் குப்பை கொட்டத் தொடங்கி 2 1/2 வருஷம் ஆச்சு. இந்த 2 1/2 வருஷத்துல, உபயோகமான, ரொம்ப நாள் மனசுல நிக்கப் போற விஷயம், பொன்னியின் செல்வன் பத்தி தெரிஞ்சுக்கிட்டதும், வந்த ஆர்வத்தால் புத்தகம் வாங்கிப் படிச்சதும் தான்.
சின்ன வயசுல, கல்கி எல்லாம் வீட்ல வாங்கிப் படிச்ச ஞாபகம் இல்லை. எதிர் வீட்ல வாங்கர குமுதமும் விகடனும் தான் நமக்கு எல்லாமாவும் இருந்தது.

ஐந்து வால்யூமில், கடைசி வால்யூமும் படிச்சு முடிச்சாச்சு. படிச்சு முடிச்சதும், ஆர்வக் கோளாறுல, சிவாஜியின் ராஜ ராஜ சோழன் படத்தை, தேடிப் பிடிச்சு இணையத்தில் பாத்தேன். பெரிய பல்புதான் கெடச்சுது. சொத்தலா எடுத்திருக்காங்க படத்தை.

ஒரு ப்ரமாண்ட படமா தயாரிக்க, சகல கருவும், பொன்னியின் செல்வனில் இருக்கு. யார் யார் எந்த வேடத்தில் நடிக்கணும், திரைக்கதை எப்படி இருக்கணும்ன்னெல்லாம், ஒவ்வொரு பதிவா,வருங்காலத்தில் எடுத்து வுடறேன். புடிச்சுக்கோங்க.

இப்போதைக்கு, ஐந்தாம் பாகத்தின், நட் ஷெல்லு பாப்போம்.

நான்காம் பாகத்தில், ஆதித்த கரிகாலர், கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்ததையும், நந்தினி பெரிய பழுவேட்டரையர், மற்ற 'சதி' கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கூட அங்கே குழுமியிருந்ததைப் பார்த்தோம்.. அதாகப்பட்டது, ஆதித்தருக்கு, கடம்பூர் சம்புவரையரின் மகள் மணிமேகலையை கண்ணாளம் கட்டி வச்சிடணும், அப்பாலிக்கா, சோழ ராஜ்யத்தை ரெண்டா பிரிச்சடணும், பாதி ஆதித்தருக்கும், பாதி மதுராந்தகனுக்கும் கொடுத்துடணும்னு ப்ளான்.
ஆதித்தர் திடீர்னு, எல்லார் கிட்டையும், தனக்கு அரசாளும் எண்ணம் இல்லைன்னும், மதுராந்தகனே ஃபுள் சோழ ராஜ்யத்தையும் ஆளட்டும்னும், தனக்கு வெறும் துட்டும், கொஞ்சம் வீரர்களும் கொடுத்தா வடக்கே போய் பல இடங்களை போர் செய்து கைப்பற்ற ஆசைன்னும் சொல்றாரு.
இதக் கேட்டு எல்லா கன்ஃப்யூஸ் ஆகிடறாங்க. ஆதித்தர், பெரிய பழுவேட்டரையர் கிட்ட, சீக்கிரம் தஞ்சாவூர் போய், மதுராந்தகனைக் கூட்டிட்டு வரச் சொல்றாரு. அவர் வந்ததும், எல்லாத்தையும் பேசி முடிவு பண்ணிட்டு, அப்பரம் எல்லாருமா போய் சுந்தர சோழச் சக்ரவர்த்திகிட்ட இதான் மேட்டருன்னு சொல்லி பர்மிஷன் வாங்கிடலாங்கறாரு.
பழுவேட்டரையர் நந்தினியை கடம்பூரிலேயே விட்டு கெளம்பி போயிடறாரு.

இதற்கிடையில், தஞ்சையில், சுந்தர சோழரைப் போட்டுத் தள்ள, பாண்டிய அடிபொடி ஒருத்தன் அரண்மணைக்குள் மறஞ்சுகிட்டு காத்திருக்கான்.

நாகப்பட்டினத்தில் அடித்த சூறாவளியால், அருள்மொழிவர்மர், நாகப்பட்டினம் சூடாமணி விஹாரத்திலிருந்து, வெளிவரும்படி ஆகிடுது. எல்லாரும் பாத்துடறாங்க. அவரு சாகலைன்னு தெரிஞ்சதும், ஊரே கூடி கொண்டாடுது. அருள்மொழி, அவசரமா தஞ்சாவூருக்கு போகணும்னு அங்கேருந்து கெளம்பறாரு. அங்க அவரை மர்டர் பண்ண, பாண்டிய அடிபொடி ரவிதாசன் செஞ்ச ப்ளான் வேலை செய்யலை.

தஞ்சை செல்ல கிளம்பி வந்த பழுவேட்டரையர், சூறாவளியில் சிக்கி, வழியில் ஒரு பாழடஞ்ச மண்டபத்துல, பாண்டிய அடிபொடிகளின், ப்ளான் டீட்டெயில் எல்லாம் கேட்டுடறாரு. சக்ரவர்த்தியை கொல்ல சதி செய்யப்பட்டுள்ளதும், கடம்பூரில் ஆதித்தரை நந்தினி கொல்ல இருப்பதும், அருள்மொழிவர்மரை நாகைப்பட்டினத்தில் போட்டு தள்ள இருப்பதும் தெரிய வருது. அவசர அவசரமா தஞ்சைக்கு கெளம்பறாரு.
வழியில் குந்தவை வானதி யைப் பாத்து மேட்டர சொல்லிட்டு, தான் நல்லவருன்னு ப்ரூவ் பண்ணிடறாரு. குந்தவை கிட்ட தஞ்சாவூர் போய் சக்ரவர்த்தியை காப்பாத்தச் சொல்லிட்டு, நாகைப் பட்டினத்துக்கு அருள்மொழிவர்மரை காப்பாத்த ஒருத்தர அனுப்பிட்டு, இவரு கெளம்பி கடம்பூர் போறாரு.

தஞ்சைக்கு சென்று கொண்டிருக்கும் அருள்மொழிவர்மன், வழியில் வானதி பூங்குழலியைப் பாத்து சக்ரவர்த்திக்கு இருக்கும் அபாயத்தை தெரிஞ்சுக்கறாரு. இவரும், வானதி, பூங்குழலியும் தஞ்சைக்கு போறாங்க. அரண்மணைக்குள்ள போய், சக்ரவர்த்தியை பாத்து பேசிக்கிட்டு இருக்காங்க. ஊமை ராணியும் (சக்ரவர்த்தியின் பழைய காதலி - நந்தினியின் தாய்), அங்க இருக்காங்க. அந்த நேரம் பாத்து, பாண்டிய வில்லன் ஒரு வேல எடுத்து சக்ரவர்த்தி மேல வுடறான். ஊமை ராணி நடுவுல பூந்து, தன் மேல் வேலை வாங்கிக்கறாங்க. அவங்க கதை முடிஞ்சுது அத்தோட.
இந்த குழப்பத்தில், சக்ரவர்த்தியும், பக்க வாதம் சரியாகி, டகால்னு எழுந்து ஓடி, ஊமை ராணியை மடியில் தூக்கிப் போட்டுக்கிட்டு சோகமாயிடறாரு.

ஸோ, இப்படியாக, சக்ரவர்த்தி தப்பிச்சுட்டாரு. அருள்மொழி வர்மரும், தப்பிச்சுட்டாரு.

வானத்துல, தூம கேது (வால் நட்சத்திரம்) கீழ விழுது. யாராவது ஒருத்தரு ராஜ குடும்பத்தில் மண்டையப் போடணுமாம். ஸோ, ஆதித்தர போட்டு தாங்கிடுவாங்கன்னு தெரிஞ்ச்சுடுது.

கடம்பூரில், வந்தியத் தேவன், நந்தினி கிட்ட போய் பேசிப் பாக்கறாரு. ஆதித்தரை நந்தினி கொல்ல இருப்பது வந்திக்கு புரிஞ்சுடுது. பழி வாங்கவெல்லாம் வேணாம், ஏக்சுவலா, ஆதித்தர் உங்க அண்ணன்னெல்லாம் சொல்லிப் பாக்கறாரு. அந்த நேரத்துல ஆதித்தர் அங்க எண்ட்ரி கொடுக்கறாரு. வந்தி பக்கத்து ரூமுக்குள்ள போய் ஒளிஞ்சுக்கறாரு.
நந்தினியும் ஆதித்தரும் எடக்கு மொடக்கா பேசிக்கறாங்க. நீ என் தங்கைன்னெல்லாம் சொல்லிக்கறாங்களே, உண்மையான்னு கேக்கறாரு. அவங்களும், இல்லை, என் அப்பா பேர் இதுதான்னு, ஆதித்தரு காதுல சொல்றாங்க. அதைக் கேட்டு ஆதித்தர் ஷாக்காகி சோகமாகிடறாரு. அப்பரம் கோபமாகறாரு, திரும்ப சோகமாகறாரு.
ஒரு கணம், நந்தினியை கொல்லப் போற அளவுக்கு கோபப் படறாரு, அடுத்த கணம், நந்தினி கிட்ட கத்தியை கொடுத்து, தன்னை கொன்றுவிடுமாறு சொல்றாரு. ஒன்னியும் பிரீல.
அந்த நேரம் பாத்து, வந்தியை ஒரு தாடிக்காரரு வந்து பின்னாலிருந்து மடக்கி, அடிச்சு போட்டுடறாரு. வந்தி கீழ மயங்கி விழுந்துடறாரு. முழிச்சு பாத்தா, ஆதித்தர் ரத்த வெள்ளத்தில் உயிரை விட்டுக் கெடக்கறாரு.
யாரு, மர்டர் பண்ணதுன்னு தெரியலை.

நந்தினி, பாண்டிய அடிப்பொடிகளுடன், எஸ்கேப் ஆயிடறா.

வந்தியை, அரெஸ்ட் பண்ணி பாதாள சிறையில் போட்டுடறாங்க. அவன் தான் ஆதித்தரை கொண்ணான்னு கதை கட்டி விட்டுடறாங்க.

பூங்குழலியும், ஆழ்வார்கடியானும், பாண்டிய அடிபொடிகளை விரட்டிக்கிட்டு போன எடத்துல, உண்மை தெரிய வருது. அதாகப் பட்டது, கடம்பூருக்கு திரும்பி வந்த பெரிய பழுவேட்டரையர்தான், வந்தியின் பின்னால் வந்து, அவனை மயங்க வெச்சது. நந்தினி ஆதித்தரை கொல்ல கத்தியுடன் நிக்கரத பாத்ததும், இவரு நந்தினியை கொல்ல கத்தி விடறாரு. அந்த நேரத்துல, இவரையும் யாரோ அடிச்சு மயங்க வெச்சுடறாங்க. இந்த கேப்ல யாரோதான் ஆதித்தரை போட்டுத் தாக்கியிருக்காங்க.
ஒண்ணு, பெரிய பழுவேட்டரையர், எறிந்த கத்தி, ஆதித்தர் மேல் விழுந்திருக்கணும்,
இல்ல, நந்தினி ஆதித்தரை போட்டுத் தாக்கியிருக்கணும்,
இல்ல, ஒளிந்திருந்த பாண்டிய அடிபொடிகள், உள்ள பூந்து மர்டர் பண்ணியிருக்கணும்.

பூங்குழலியும், ஆழ்வார்கடியானும், இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டாலும், பாண்டிய அடிபொடிகளும், நந்தினியும் எஸ்கேப் ஆகிடறாங்க.

இவ்வளவும் நடந்ததும், அடுத்த சக்ரவர்த்தி யாரு, மதுராந்தகனா, அருள்மொழிவர்மனான்னு பேச்சு எழும்புது.
மதுராந்தகரோட அம்மா, அருள்மொழிக்குத்தான் கொடுக்கணும், ஏன்னா மதுராந்தகன், தன் வயிற்றில் பிறந்தவனல்லன்னு ஒரு ஃப்ளாஷ் பாக் சொல்றாங்க.
(சாதிப் ப்ரச்சனை வருது. அரச குலத்தில் பிறந்தவன் தான் சக்ரவர்த்தி ஆகணுமாம். ஏய், அடங்குங்கடான்னு மனசுல தோணிச்சு)
அதாவது, செம்பியன் மாதேவி (மதுராந்தகனின் வளர்ப்புத் தாய், சக்ரவர்த்தியின் அண்ணன் பொண்டாட்டி), தனக்கு பிறந்த முதல் குழந்தை இறந்தே பிறந்ததுன்னு நெனச்சுக்கிட்டு, அதுக்கு பதிலா, தன் அரண்மணையில் இருந்த 'ஊமை ராணியின்' இரட்டை குழந்தையில் ஆண் குழந்தையை இவங்க எடுத்துக்கிட்டு வளக்கறாங்களாம்.
இறந்ததா நெனச்ச குழந்தையும், இறக்கலையாம். அந்தப் பிள்ளை, ஊமை ராணியின், தங்கை ஊமை ராணி II, வீட்டில் வளருதாம்.
ஊமை ராணியின், இரட்டைக் குழந்தையில், ரெண்டாவது பெண் குழந்தைதான் நந்தினியாம்.

ஊமைராணிக்கும், சுந்தரச் சோழச் சக்ரவர்த்திக்கும் பிறந்த குழந்தைகள்னு நெனச்சுக்கிட்டு இருந்தா, அதுவும் இல்லையாம். சுந்தர சோழருக்கு அப்பால, ஊமை ராணி, வீர பாண்டியனிடம் காதல் வயப்பட்டு, அவரு மூலமா பிறந்ததுதான் இந்த இரண்டு குழந்தைகளும். (நந்தினியின் அப்பா வீரபாண்டியன்னு தெரிஞ்சுதான் ஆதித்தர் ஷாக்காகிடறாரு).
(சந்தேகம்: ஊமை ராணிதான் நந்தினியின் தாயா? இல்லை ஊமை ராணியின் தங்கையா? அவளும் ஊமைதான். ஒரு வேளை, அவங்க தான் வீரபாண்டியரின் காதலியா இருந்திருப்பாங்களோ? ஊமை ராணியே, சுந்தர சோழருக்கும், வீர பாண்டியருக்கும் காதலியா இருந்தது இடிக்குது).

எது எப்படியோ, டூப்பு மதுராந்தகர், தனக்கு ராஜ்யம் கெடைக்காதுன்னு தெரிஞ்சுக்கறாரு. அப்பாலிக்கா, தான் பாண்டிய மன்னனின் வாரிசுன்னும் தெரிஞ்சுக்கறாரு. அவரு, அப்படியே குதிரைல போயி, பாண்டிய அடிபொடிகளிடம் சேந்துக்கறாரு.

உண்மையான மதுராந்தகர், ( முதல் பாகத்தில் வந்த சேந்தன் அமுதன் இவருதான் ), பூங்குழலியை கண்ணாளம் கட்டிக்கிட்டு, உண்மையும் தெரிஞ்சுக்கறாரு. தான் தான், பட்டத்து உரியவர்னு தெரிஞ்சுக்கறாரு. ஆனா, தனக்கு, சிவ பக்தி தான் முக்கியம், ராஜ்ஜியம் எல்லாம் ஆள வேணாங்கறாரு.

அருள்மொழிவர்மரும், கெடச்சுது சான்சு, தானே ராஜா ஆயிடறேங்கறாரு.

பட்டாபிஷேகம் அன்னிக்கு, டகாலடியா, கிரீடத்தை, மதுராந்தகர் தலைல வச்சு, நீங்க தான் ராஜா, நான் உங்க கீழ வேலை செய்யறேன்னு சொல்லிடறாரு.

அரசாளும் உரிமை மதுராந்தகருக்குத்தான் ஞாயப்படியா கெடைக்கணும்னு அருள்மொழிவர்மர், தனக்குக் கெடச்ச ராஜாங்கத்தை, தியாகம் செய்யறாரு.

எல்லாரும், நல்லா இருக்காங்க.

ட்ரிரிரிரிரிரிரிங்ங்ங்ங்....

சுபம்!

அப்பாடி. ஒரே மூச்சுல எழுதி முடிச்சாச்சு. இனி உங்க பாடு ;)
இதுவரை வந்த நட்ஷெல்லை படித்து, திருத்தி, ஊக்குவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்னி.
தமிழ் படிக்கத் தெரிஞ்சவங்க, பொ.செ படிக்கலன்னா, தவறாம படிங்க. வரலாற்றறிவு அவசியம். :)

பி.கு1: பின்னாளில், மதுராந்தகர், உத்தம சோழன் என்ற பெயரில், பதினைந்து வருஷம் ஆண்ட பிறகு, அருள்மொழி வர்மர், ராஜ ராஜ சோழனாய், கலக்கறாரு. அதுக்கப்பால, அவருக்கும் வானதிக்கும் பிறந்த, ராஜெந்திர சோழன், கலக்கோ கலக்குன்னு கலக்கறாரு. கலக்கரதெல்லாம் கதைல இல்லை. வேர யாராச்சும் இதையெல்லாம் கதையா எழுதியிருக்காங்களா?

அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி, தஞ்சாவூருக்கு நண்பனின் திருமணத்துக்கு போயிருந்தேன். கோபுர உச்சியின் நிழல் விழா பெரிய கோயிலை பார்த்தேன். ஆனா, வரலாற்றறிவு இல்லாததால், பெரிய ஈடுபாட்டோட பாக்கலை. கல்வெட்டெல்லாம் பாக்கல. சமீபத்தில் இன்னொரு ராஜ ராஜ சோழனின் விசிறியாகிய நண்பன் கிட்ட பேசிக்கிட்டு இருந்தப்போ,
"மச்சி இன்னொரு தபா போய் பாரு. நந்தி கிட்ட நின்னுக்கோ. கோயில் பெரிய வாசல் வழியா, ராஜ ராஜனும், அவன் ராணிமார்களும், குந்தவையும், மந்திரிகளும், வந்தியத் தேவனும் யானை மேலும், குதிரை மேலும், வர சீனை கற்பனை பண்ணிப் பாரு. அப்பத் தெரியும், அந்த எடத்தோட அருமை"ன்னு சொன்னான்.

இப்ப யோசிச்சுப் பாக்கறேன். சொக்கித் தான் போவுது.
இன்னொரு தபா பாக்க வேண்டிய கோயில்.
அடுத்த முறை, ஆர அமர ஒக்காந்து நிமிந்து படுத்து நின்னு பாக்கணும். ஹ்ம்!!!

pic source: hindudevotionalblog.com


பி.கு2: பாகம்1 ~ பாகம்2 ~ பாகம்3 ~ பாகம்4 ~ பாகம்5(இது) ~ wikisourceல் மொத்த நாவலையும் படிக்கif you are in Chennai,

Sunday, August 09, 2009

நம்மை பின்தொடரும் நல்லவர்கள்...

இந்த ட்விட்டர்ல அப்படி என்னதான் மாய மந்திரம் இருக்கோன்னு தெரியல, மொத்த உலகமும், டிவிட்டர் ஜொரம் பிடிச்சுக்கிட்டு அலையுது.
ரெண்டு நாளைக்கு முன்னாடி, டிவிட்டர் வேலை செய்யலையாம், அதை breaking newsன்னு சொல்லி அலப்பரை பண்ணிக்கிட்டு இருந்தாங்க, டிவி காரங்க.

கொடுமை என்னென்னா, எல்லா பெரிய பெருந்தகைகளும், டிவிட்டரில் ஒரு அக்கவுண்டு வச்சுக்கிட்டு ட்விட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், ஏதோ ஒரு நேர்முகத்தில், மல்லிகா ஷெராவத்தும், டிவிட்டுவதைக் கேட்டு பேருவகை அடைந்தேன். பதினோராயிரம் ஃபாலோயர்ஸாம்.

Kevin Spaceyம் தனக்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ் இருப்பதைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
இதைத் தவிர, செய்தி வாசிப்பாளர்கள் பலரும், ட்விட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
Larry king, ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ்,
Oprah Winfrey, ரெண்டு மில்லியன்.
Ellen Degeneres (finding nemo புகழ்), ரெண்டே முக்கால்,
Britney Spears, ரெண்டே முக்கால்,
Ashton Kutcher(டெமி மூர் புருஷன்), மூணு மில்லியன்,
லிஸ்ட்டு வளந்துக்கிட்டே போகுது.

நம் தமிழ் பதிவுலகிலும், இந்த ஃபாலோயர்ஸ் ட்ரெண்டு ஜாஸ்தி ஆகிட்டே வருது.
எழுதுபவர்கள் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவதால், தமிழ்மணம், டமிலிஷ், போன்ற திரட்டிகளில், முகப்புப் பக்க ரியல் எஸ்டேட் விலை கூடிக் கொண்டே போகிறது. கொஞ்ச நேரம்தான் இடம் கிடைக்குது.
இந்த மாதிரி, ஃபாலோயர்ஸ் தேத்திக் கொண்டால் தான், ஹிட்/கமெண்ட்டு மகசூல் கிட்டும்.

நம் பதிவுலகில், இந்த ஃபாலோயர்ஸ் கணக்கில், நல்ல மகசூல் பெற்றிருப்பவர்கள் சிலர்:

Twitterல் சிக்ஸர் அடிக்கும் பாஸ்டன் பாலா, 900+
சுப்பையா வாத்தியார், 600+ ஃபாலோயர்ஸ்,
இட்லி வடை, 600+
பரிசல், 400+
குசும்பன், 300+
லக்கி, 300+
நர்ஸிம், 300
ஆதிஷா, 200+
கோவி கண்ணன், 100+
வெட்டிப்பயல், 100+

இனி வரும் காலங்களில், ஃபாலோயர்ஸும்/கூகிள் ரீடர் வழி சந்தா பெற்றவர்களின் பிழைப்பு மட்டுமே ஒடும்.

ஸோ, தப்பித்தவறி பதிவு பக்கம் படிக்க வரவங்களை, ஃபாலோயர் ஆகணும்னு தோண வைக்கர அளவுக்கு, சரக்குடன் எழுதவும் ;)

இந்த இனிய வேளையில், என் கிறுக்கலையும் தொடர்ந்து வரும், கீழே உள்ள அன்பர்கள்/நண்பர்களுக்கும், ஃபாலோயாராகாமலே தொடரும் பெருமக்களுக்கும், நன்றி கூறிக் கொண்டு, விடை பெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!

உலவு.காம்
bondavadai
இராகவன் நைஜிரியா
தேவன் மாயம்
ganeshprabhu
பிரேம்ஜி
Pudugaithendral
சுரேஷ் குமார்
herve anita
Ranjit
Senthil - T G Valasu
Subankan
Mohan Kumar Karunakaran
மந்திரன்
ஷோபிகண்ணு
கலை - இராகலை
செல்வா
ஊர்சுற்றி
ஹாலிவுட் பாலா
Suresh
சரவணகுமரன்
dillibabu
சந்தோஷ் = Santhosh
ANNAI- ILLAM2
ஹோஷியா
S.sampath kumar
Mathu Krishna
Truth
வெட்டிப்பயல்
SUBBU
ஆயில்யன்
Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன்
Oviyaツ Poornima
Saravana kumar
மணியன்
MSATHIA
லவ்டேல் மேடி
உண்மைத் தமிழன்(15270788164745573644)
நட்புடன் ஜமால்
தேனீ
Ravee (இரவீ )
ஸ்வாதி
கோவி.கண்ணன்
kogul
ilangan
LOSHAN
தென்றல்
நாதஸ்
Shan Nalliah / GANDHIYIST
shahulpage
ஆ! இதழ்கள்
திரட்டி.காம்
தர்ஷன்
அதிஷா
Maduraikkaran
pappu
A Blog for Edutainment
mayavi
Satheesh
Jayabalan
ப்ரசன்னா
KANINILA
அஆ

Sunday, August 02, 2009

CVRன் புகைப்படக் கண்காட்சி, சென்னையில்

சக பதிவர், புகைப்பட வித்தகர், நண்பர் CVRன் புகைப்படக் கண்காட்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள அலையன் ஃப்ரான்கைஸ்'ல் நடை பெற உள்ளது. மேல் விவரங்கள் கீழே, மற்றும் இங்கே.

சென்னையில் உள்ளவர்கள், தவறாமல், துவக்க விழா நிகழ்வின் போதும், மற்றைய தினங்களிலும் பங்கு கொள்ளுமாறு, கேட்டுக் கொள்கிறேன்.

சிவிஆர், வாழ்த்துக்கள்! :)Greetings to all of you!
As we prepare ourselves to celebrate MADRAS DAY on the 22nd of August, the Alliance Française of Madras, is proud to be part of this city that is rich in culture and tradition, yet contemporary and modern. We have a series of events to celebrate Madras, starting with an exhibition by a young and talented individual who interprets Chennai with his captivating pictures.
The Alliance Française of Madras invites you to an exhibition of photography by C V Ramanujan.
IMAGES OF CHENNAI
3rd to 19th August 2009
(closed on August 15th)

Timing is from 9 to 7 on all days of the week except sunday
AFM GALLERY
Inauguration on August 3rd at 5 PM

For further information please contact C V Ramanujan at 97910 36722.

Flickrல் CVRன் சென்னைப் படங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்