recent posts...

Monday, July 27, 2009

பொன்னியின் செல்வன் in a nutshell - பாகம் 4

மூன்றாம் பாகம் முடிச்சு பத்தே நாள்ள நாலாம் பாகம் படிச்சு முடிச்சாச்சு. இதுக்கு இரண்டு காரணம் இருக்கு. ஒண்ணு, ஆதித்ய கரிகாலர் கடம்பூருக்கு 'வில்லன்ஸ்' இருக்குமிடத்துக்கு வருகை தரும் அத்யாயங்கள் இதிலிருக்கு. இன்னொண்ணு, இது குட்டி வால்யூம். 335 பக்கங்கள் தான். ஸ்கூல்ல எல்லா புத்தகங்களும் இத்துனூண்டு இருந்தா, சுலபமா கரச்சு குடிச்சு, நல்ல மார்க் வாங்கியிருந்திருப்பேன். ஹ்ம்! மிஸ் ஆயிடுச்சு ;)

வழக்கம் போல, காவிரி பற்றிய வர்ணனைகளும், தமிழகத்தின் பண்டைய கால செழிப்பும் படிக்க படிக்க பெரிய பெருமூச்சு வருது. இதெல்லாம் மெய்யா? இல்லை, கல்கி மிகைப் படுத்தி சொல்றாரான்னு தெரியல்ல. கண்டிப்பா த.நாடு இப்படியெல்லாம் இருந்திருக்கும். நாமதான் வாழையடி வாழையா, நதியில் மணல் சுரண்டியும், மரங்களை அழித்தும், நாட்டை டோட்டல் டாமேஜ் பண்ணிட்டோம். ஹ்ம்!

இனி பாகம்4 நட் ஷெல் பாப்போம்:

ஆதித்த கரிகாலனை கடம்பூருக்கு வரவழைத்து கொல்ல வேண்டும்னு, போன பாகத்தில் நந்தினி&கோ ப்ளான் போட்டதை பாத்தோம். ஆதித்த கரிகாலரும், நந்தினியின் ஓலை வந்ததும், மறு பேச்சு இல்லாம, ஒடனே பொறப்பட்டு வராரு. குந்தவையின் ஓலையை கொண்டு போய் வந்தியத் தேவன் ஆதித்யரை கடம்பூருக்கு போகவேணாம்னு சொல்லியும் கேக்காம அவரு கடம்பூருக்குப் போறாரு.
இதுவரை, பெரிய வீராதி வீரனாய், சித்தரிக்கப்பட்டு வந்த ஆதித்யர், இந்த எப்பிஸோடில், கொஞ்சம் மறை கழண்டவர் மாதிரி காட்டப்பட்டிருக்காரு. ஓவரா, கோபம் வருவதும், சில நேரம் விசித்திரமா நடந்துக்கர மாதிரியும் சில காட்சிகள்.
கடம்பூர் அரண்மனைக்கு வந்தியத்தேவன், பார்த்திபேந்திர பல்லவன், ஆகியோருடன், கோலாகலமா வந்து சேற்றாரு.

இதற்கிடையில் நந்தினி, பெரிய பழுவேட்டரையர், மற்ற 'வில்லன்ஸ்' எல்லோரும் கடம்பூருக்கு வந்துடறாங்க. நந்தினியின் அந்தப்புரத்துக்குள் நுழைய ஒரு சுரங்கப் பாதை இருப்பதை வந்தியத் தேவனுக்கு தெரிய வருது. அதில் 'பாண்டிய' வில்லன்ஸ் புகுந்து செல்வதையும் கண்டு பிடிக்கிறான். கடம்பூ சம்புவராயர் மகள் மணிமேகலையையும் பாக்கறான்.
மணிமேகலையை ஆதித்யருக்கு திருமணம் செய்து வைத்து, சோழ நாட்டை ரெண்டா பிரிச்சு, ஒண்ணு ஆதித்யனுக்கும், இன்னொண்ணு மதுராந்தகனுக்கும் கொடுக்கணும்னு 'வில்லன்ஸின்' ப்ளான்.

நந்தினிக்கு, ஆதித்யரை அங்கே வந்ததும், போட்டு தள்ளணும்னு ப்ளான்.

ஆதித்யர் வந்ததும், இவர்களின் ப்ளான் எல்லாம் ஓரளவுக்கு தனக்கு வந்தியத் தேவன் மூலம் தெரியா வருவதால் எல்லாரையும் நையாண்டி பேச்சால் தெணற வைக்கறாரு. எல்லாரும் சேந்து சதித்திட்டம் போடராப்பல இருக்கேன்ற ரேஞ்சுல வாயப் புடுங்கறாரு.

சில நேரங்களில், பெரிய பழுவேட்டரையர், ஆதித்யரிடம், தான் இருக்கும் வரை, ஆதித்யருக்கு ஒன்றும் நேராதுன்னு சொல்றாரு. பெரிய பழுவேட்டரையர், 'வில்லன்' இல்லை என்ற ரீதியில் ஒரு எண்ணம் எழுகிறது.
ஆதித்யரும், திடீர்னு, தனக்கு அரசாளும் எண்ணம் இல்லை. சோழ நாட்டை பிரிக்கக் கூடாது, மொத்தமும் மதுராந்தகன் ஆளட்டும், தனக்கு கொஞ்சம் பணமும், படையும் கொடுத்தால் மட்டும் போதும். தான் வடக்கே போர் தொடுத்து சோழ நாட்டை விரிவடையச் செய்வதே லட்சியம்னு சொல்றாரு.

இந்த விஷயம் நல்லாருக்கேன்னு எல்லாரும் நெனச்சு, பெரிய பழுவேட்டரயரை, தஞ்சை சென்று, மதுராந்தகனை கூட்டிக்கிட்டு வரச் சொல்றாங்க. அவரும், நந்தினியை அரை மனசா விட்டுட்டு கெளம்பராரு.

இதற்கிடையில், முதல் மந்திரி அநிருத்தர், ஈழத்தில் இருந்த 'ஊமை' ராணியை (நந்தினியின் அம்மா?) தஞ்சைக்கு கடத்திக்கிட்டு வரச் சொல்றாரு. சக்கரவர்த்திகிட்ட இவங்கள காமிச்சு அவரின் கலக்கத்தை போக்கணும் நெனப்பு. ஆனா, வரும் வழியில், ஊமை ராணி எஸ்கேப் ஆகி, அந்த இடத்தில் பூங்குழலியை ஒக்கார வச்சுடறாங்க. எஸ்கேப் ஆனவங்க அங்க இங்க ஓடிப் போய், தஞ்சை அரண்மனையில் இருக்கும் சுரங்கப் பாதை வழியாக சக்ரவர்த்தி இருக்கர எடத்த பாக்கறாங்க. சுரங்கப் பாதையில், பாண்டி வில்லன்ஸ், சக்ரவர்த்தியை போட்டுத்தள்ள ப்ளான் போடரதும் பாக்கறாங்க.
இவங்களும், பூங்குழலியும், குந்தவையும், அநிருத்தரும் சேந்து சக்ரவர்த்தியை பாக்கறாங்க.
சக்ரவர்த்தி, ஊமை ராணியை பாத்ததும் சந்தோஷப் படுவாருன்னு பாத்தா, சலிப்புதான் அடையறாரு. அது என்ன வில்லங்கமோ புரியல்ல.
ஊமை ராணி இறந்து விட்டதாய் தான் இவ்வளவு காலம் எண்ணியிருந்ததும், அதற்கு தான் தான் காரணம் என்ற எண்ணமே சுந்தரரை வாட்டி எடுத்து நோய்வாய் படுத்தியது.

எந்த நேரம் வேணும்னாலும், எல்லா டீமுக்கும் இடையில் போர் வெடிக்கும் அபாயம் இருக்குன்னு தெரிய வருது. சதித் திட்டம், எல்லாத்துக்கும் முடிவு கட்டணும். மதுராந்தகனுக்கு ஞாயமாய் கிட்ட வேண்டிய அரசாளும் உரிமையை கொடுக்கணும். பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மரை பாக்கணும், ஆதித்யரையும் தஞ்சை வரவைக்கணும். எல்லாத்தையும் எல்லாருக்கும் எடுத்து சொல்லி, சுமுகமா தீக்கணும்னு, சுந்தரர், எல்லாரையும் தஞ்சைக்கு வரவழைக்க, எல்லா சைடுக்கும் தூது அனுப்பறாரு.

கடம்பூர் அரண்மனையில், ஆதித்யரும், வந்தியத்தேவனும் வேட்டைக்குச் சென்று திரும்பும் போது, எதேச்சையாக நந்தினியையும் மணிமேகலையையும் பாக்கறாங்க.
நந்தினியிடம் ஆதித்யர், பழைய கதையெல்லாம் சொல்லி, தான் பாண்டிய மன்னனின் (நந்தினியின் காதலர்/கணவர்) தலையை வெட்டியதுக்கு மன்னிப்புக் கேக்கறாரு.

அதைத் தவிர, நந்தினி தன் அக்காள் என்றும், தன் தந்தையின் ஃப்ளாஷ் பேக்கில், ஒரு ஊமைப் பெண் இருந்ததையும், அவர்களின் பெண்தான் நந்தினி என்றும் சொல்றாரு.

இன்னாடா, இவ்ளோ ஒப்பனா சொல்லிட்டாரே, கதை சுபமா முடிஞ்சிடுமோன்னு ஒரு கலக்கம் வந்துது. ஆனா, இதைக் கேட்டதும், நந்தினி ஒரு தடாலடி சொல்வாங்க பாரூங்க, அதை படிச்சதும், கதை ஆயிரம் மைல் வேகத்தில் திரும்ப பிக் அப் ஆயிடுச்சு.
குறிப்பா, இதுக்கு முன்னால் இடம்பெறும் பல சம்பவங்களும் நந்தினியின் இந்த திடீர் பல்ட்டியால் அவிழ்ந்த முடிச்சுகள் எல்லாம் சரக் சரக்னு மாட்டிக்குது.

அதாகப்பட்டது, ஆதித்யர் சொன்ன, 'அக்கா செண்டிமெண்ட்டை' கேட்டு நந்தினி இன்னா சொல்றாங்கன்னா, வந்தியத்தேவன் சொல்றதையெல்லாம் நம்பாத, அவன் பயங்கரமான ஏமாத்துக்காரன், புருடா விடறான். அவன் எனக்கே ரூட் விடப் பாத்தவன். நீ வேணும்னா, நடு ஜாமத்தில் அந்தப்புரம் வந்து பாரு, வந்தியத் தேவனின் உண்மை சொரூபம் தெரியும்னு அவுத்து விடறாங்க.
இதுக்கு முந்தைய சீன்லதான், வந்தியத் தேவனிடம், ஏதோ மேட்டர் பேசணும் நடு ஜாமத்தில் அந்தப்புரம் வான்னு தனியா சொல்லியிருந்தா நந்தினி.

இதுக்கெல்லாம் சிகரம் வச்ச மாதிரி கல்கியும், நந்தினி இப்படி ப்ளான் போடறாளேன்னு யாரும் அதிர்ச்சி அடையாதீங்க. சின்ன வயசுலேருந்து ஏமாற்றமே சந்திச்சு பல கஷ்டங்களுக்கு இடையில் வளந்த பொண்ணு. ஸோ, அவளுக்கு இப்படி பழிவாங்கணும்னு தோணறது ஞாயம்தானேன்னு எடுத்து வுடறாரு.

ஸோ, இதையும் அதையும் முடிச்சு போட்டு பாத்தா, கன்னா பின்னான்னு ஏதோ நடக்கப் போவதுன்னு தெரியுது.

சக்ரவர்த்தியை கொல்ல சுரங்கப் பாதையில் காத்திருக்கும் பாண்டிய வில்லன் ஒரு பக்கம்;
ஆதித்யரை கொல்ல நந்தினி ஒரு பக்கம்;
அருள்மொழியை கொல்ல வேறு ஏதோ ஒரு ப்ளான்;

இப்படி மொத்த சோழ சாம்பராஜ்யத்தையும் அப்புரப்படுத்துவதாக, பாண்டிய 'வில்லன்' ரவிதாஸன் வேர அப்பப்ப சொல்லிக்கிட்டே இருக்கான். அதுவும், வரும் வெள்ளியன்று இரவில், மூணுமே ஒரே நேரத்தில் நடக்குமாம்.

கடைசி பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கி,
-சர்வேசன்

கீழிருக்கும் படத்திலிருப்பது குந்தவைன்னு, வந்தியத் தேவனே சென்ற பதிவில் சொல்லிட்டாரு. சரியாய் தானிருக்கும். :)

சரி, பேக்ரவுண்டில் இருப்பவர் யார்? ஆதித்யரா? வந்தியா? வயசான பழுவேட்டரையரா??

24 comments:

SurveySan said...

ஒரு அற்புதமான கதைக்கு, நான் எழுதும் 'நட் ஷெல்' மூலம், ஞாயம் செய்வதில்லைன்னு நல்லாவே தெரியுது.
ஆனா, ஆரம்பிச்சதை முடிக்கணும்ல, அதான் விடாமுயற்சியுடன், உங்களுக்கு என்னாலான சித்திரவதை :)

அதைத் தவிர, படிச்சதை, இப்படி எழுதிப் பாத்துக்கரது நல்லாதான் இருக்கு ;)

SurveySan said...

..and, secondly, பொ.செ ஏற்கனவே படிச்சவங்க, ஒழுங்க்கா படிச்சீங்களான்னு ஒரு டெஸ்ட் இது.

தவறு இருந்தா, சரியா சுட்டிக் காட்டணும், சென்ற பதிவில், pappu சுட்டிக் காட்டியதைப் போல்.

pappu, இன்னொரு technical error சென்ற பதிவில் இருக்கு, அத்த்த வுட்டுட்டீங்க. அதை இப்பதான் நான் கவனிச்சேன். திருத்தாம வச்சிருக்கேன். கண்டு புடிங்க பாக்கலாம் ;)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//
அதைத் தவிர, நந்தினி தன் அக்காள் என்றும்//


நந்தினி ஒரு காமெடி பீஸ்...,

ஆனால் அவரை அதிபயங்கர வில்லன் ஆக பார்ப்பது கொடுமை

ஊமைப்பெண்(பாட்டி) முதலில் சுந்தர சோழன் காதலியாக, பின்னர் வீரபாண்டியனுக்கு இரண்டு குழந்தை பெற்றவராக பின்னர் கடைசியில் முதிய சுந்தர சோழனை காப்பாற்ற வரும் ஒரு மனைவியாக தோற்றமளிக்கிறார்

அவரது மகளாக வரும் நந்தினி பழிவாங்கும் பாவையாக சுற்றினாலும் அவரது திட்டங்கள் கொஞ்சம் நகைச்சுவையானவை, பாண்டியன் ஒற்றர்கள் இல்லாமல் அவர் செய்யும் அனைத்துமே காமெடிதான்........,

இன்னும் சொல்லப் போனால் பாண்டிய ஆபத்துதவிகள் செய்யும் பல போராட்டங்கள் (சூழ்ச்சிகள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது) தோல்வியை தழுவியதற்கு அம்மையாரே காரணம் என்று கூட வாதாடலாம்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நந்தினிக்கும் வீரபாண்டியனுக்கும் உள்ள உறவே கூட பலவாறு விவாதம் செய்யப் பட்டபிறகு அவரது பழிவாங்கும் எண்ணம் மட்டுமே அவரை புரட்சிப் பெண்ணாக காட்டுகிறது. ஆனால் அவரது காமடி தர்பார் அவரது இளம் பிராயத்திலேயே துவங்கியதை ஆசிரியர் காட்டுகிறார்

SurveySan said...

Sureஷ்,

இதுவரை நடந்த நிகழ்வுகளை வச்சு, நந்தினியை காமெடியனாக பார்க்கமுடியவில்லை. இனி எப்படின்னு தெரியல. :)

SurveySan said...

பொ.செ பாத்திரங்களின் படங்கள் இங்கே இருக்கு

http://groups.yahoo.com/group/ponniyinselvan/photos/album/871886257/pic/list

வந்தியத்தேவன் said...

பின்னால் இருப்பவர் பொன்னியின் செல்வனாகத்தான் இருக்கவேண்டும். பொன்னியின் செல்வனில் நடக்கவிருந்த ஒரு விடயம் நடந்திருந்தால் எவ்வளவு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும் அல்லது பிரச்சனையே ஏற்பட்டிருக்காது. இதுவென்று கண்டுபிடியுங்கள் நீங்கள் இதுவரை வாசித்தபகுதிகளில் அந்த வரலாற்றுத்தவறு நடைபெற்றிருக்கிறது. அது பற்றி விரைவில் பதிவுபோடுகின்றேன் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

SurveySan said...

///இதுவென்று கண்டுபிடியுங்கள் நீங்கள் இதுவரை வாசித்தபகுதிகளில் அந்த வரலாற்றுத்தவறு நடைபெற்றிருக்கிறது.///

ஹ்ம். யோசிக்கறேன். நெறைய விஷயம் இருக்கே வந்தி! :)

வந்தியத்தேவன் said...

//SurveySan said...

ஹ்ம். யோசிக்கறேன். நெறைய விஷயம் இருக்கே வந்தி! :)//

ஒரு சின்ன க்ளூ ஈழத்தமிழர்களுடன் சம்பந்தப்பட்டது இரண்டாம் பாகத்தில் வருகிறது,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

முதல்முறை கதையின் போக்கிலேயே படியுங்கள்..,

இரண்டாம் முறை உங்களுக்கு பிடித்தவர் நாயகர்களின் பார்வையில் படியுங்கள்

மூன்றாம் முறை பாண்டிய மக்களின் பழிவாங்கும் கதையாகப் படியுங்கள்

நான்காம் முறை பாண்டிய மன்னன் கொலைக்காக பழிவாங்கும் திட்டங்களை கூர்ந்து நோக்கிப் ப்டியுங்கள்

பிறகு அதில் நந்தினி ஏற்படுத்திய மாறுதல்களைப் பாருங்கள் (நந்தினிதான் அந்த திட்டத்தை முன் நின்று நடத்தியது போன்று ஒரு தோற்றம் வரலாம் வந்தால் அந்தப் போக்கிலேயே படித்து முடித்துவிட்டு பின்னர் மீண்டும் ஆரம்பியுங்கள்)

அதனால் பழிவாங்கும் திட்டங்களில் ஏற்பட்ட தொய்வினைப் பாருங்கள்

அதற்கடுத்து நந்தினியின் ஒவ்வொரு காட்சியிலும் நந்தினி ஓவர் சீன் போடுவதை ரசியுங்கள்...

ஓவர் சீன் போடுவதை காமடியாகப் பாருங்கள். இப்போது நந்தினி ஒரு நகைச்சுவை நட்சத்திரமாக மிளிர்வதை உணர்வீர்கள்

pappu said...

நந்தினிய காமெடி பீஸாக்கீட்டாரே சுரேஷ்!
எ.கொ.ச இது!

எனக்கு நந்தினி கேரக்டர் ஒரு enigma vவா சித்தரிக்கப் பட்ட மாதிரி தெரியுது!

pappu said...

நந்தினிய காமெடி பீஸாக்கீட்டாரே சுரேஷ்!
எ.கொ.ச இது!

எனக்கு நந்தினி கேரக்டர் ஒரு enigma vவா சித்தரிக்கப் பட்ட மாதிரி தெரியுது!

pappu said...

சில இடங்களில், குந்தவை 'பெண் வில்லி' மாதிரி தெரியராங்க. தன் தந்தைக்கு அடுத்து சோழ ராஜ்யத்தை விரிவாக்க அருள்மொழி உதவுவான் என்பதால் தான் அவன் மேல் பாசம் கொள்வதாகவும், தன் பேச்சைக் கேக்கலன்னா நாஸ்தி என்கிற ரீதியில் ஒரு சீன் வருது.

போன பதிவின் technical error இதுவா -///அதாவது, சுந்தரரின் அண்ணன் மகன் மதுராந்தகனை, பிறந்தவுடன் கொல்ல மந்திரி அநிருத்தர் சதி பண்ணினாராம். முதல் குழந்தை பிறந்ததும், அதை எடுத்துக் கொண்டு போய் கொல்லச் சொன்னாராம். ஆனா, பெண் குழந்தை என்றதும் பூசாரி கிட்ட கொடுத்து வளக்கச் சொல்லிடறாராம்.////

அதாவது அது அண்ணன் பையன் இல்லைங்கிறது ஊர்ஜிதப்படுத்தப் பட்ட உண்மை!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

குந்தவைதான் கொலையாளியா? ஆதாரங்களுடன் ஒரு அலசல்

படித்துவிட்டீர்களா..., பபு

SUREஷ் (பழனியிலிருந்து) said...

எ.கொ.ச. அப்படின்னா என்ன தல?


நந்தினி ஓவர் சீன் போடுற கேரக்டர் தல....,

தமிழ் பிரியன் said...

நல்லா சுருக்கிட்டீங்க..:)
என்னது காமெடி பீஸா? சுரேஷை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
(ஸ்மைலி போடல)

pappu said...

எனக்கு என்னவோ நந்தினிய வில்ல்லியா இல்லாம கடைசி வரைக்கும் ஒரு புரியாத புதிராவே வச்சிருக்க யூஸ் பண்ண கேரக்டரா தெரிஞ்சது, பாஸ்.

எ.கொ.ச. இது? அப்படின்னா, என்ன கொடும சரவணன் இது?

SurveySan said...

pappu, ////போன பதிவின் technical error இதுவா ////

அந்த அளவுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்கலை நானு. ஆதித்தர் வருவது தஞ்சைன்னு போட்டீருந்தேன், கடம்பூருக்கு பதிலா :)

SurveySan said...

வந்தியத்தேவன், ////ஒரு சின்ன க்ளூ ஈழத்தமிழர்களுடன் சம்பந்தப்பட்டது இரண்டாம் பாகத்தில் வருகிறது,/////

ஈழப் பட்டத்தை உதாசீனப்படுத்தியதை சொல்றீங்களா? ஹ்ம். உண்மைதான். பெரிய மாற்றம் செஞ்சிருக்கும், அவரு சரின்னு சொல்லியிருந்தா.

ஆனாலும், அவரு சரின்னு சொல்லியிருந்தா, அது அவங்கப்பாவுக்கு பிடிக்காம, உண்மையாவே கைது பண்ண சொல்லியிருந்திருந்தா?

விதியை வெல்ல முடியுமா?

எது நடக்கிறதோ.... எது நடந்ததோ... அது நடக்கப் போகிறதோ... ? :(

வந்தியத்தேவன் said...

//SurveySan said...
வந்தியத்தேவன், ////ஒரு சின்ன க்ளூ ஈழத்தமிழர்களுடன் சம்பந்தப்பட்டது இரண்டாம் பாகத்தில் வருகிறது,/////

ஈழப் பட்டத்தை உதாசீனப்படுத்தியதை சொல்றீங்களா? ஹ்ம். உண்மைதான். பெரிய மாற்றம் செஞ்சிருக்கு/ம், அவரு சரின்னு சொல்லியிருந்தா.//

மிகவும் சரி நண்பரே நீங்கள் மிகவும் ஆழமாகத்தான் வாசித்திருக்கிறீர்கள். அதேதான் ஈழப்பட்டத்தை ஏற்றிருந்தால் பல விளைவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். விரைவில் இதுபற்றி எழுதுகிறேன்

SurveySan said...

தமிழ் பிரியன், நன்னி.

sureஷ் சொல்லரத பாத்தா, அவரு பொ.செ வ நூறு தபா படிச்சிருப்பாரு போலருக்கு. ஸோ, அவரு சொல்றதுல (நந்தினி காமெடியன்) ஒரு ஞாயம் இருக்கும். :)

SurveySan said...

வந்தியத்தேவன், சீக்கிரம் எழுதுங்க. படிக்க வெகு ஆவலாய் இருக்கிறேன் :)

வந்தியத்தேவன் said...

//SurveySan said...
வந்தியத்தேவன், சீக்கிரம் எழுதுங்க. படிக்க வெகு ஆவலாய் இருக்கிறேன் :)//

எழுதியிருக்கிறேன் படியுங்கள் படித்தால் மட்டும் போதாது உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.

http://enularalkal.blogspot.com/2009/07/blog-post_30.html

SurveySan said...

வந்தியத்தேவன், தகவலுக்கு நன்னி. இதோ வாரேன். :)