recent posts...

Tuesday, July 21, 2009

சிங்காரச் சென்னையில் ஒரு கேவலம்...

நம்மூரு அரசாங்க இயந்திரம் பல இடத்தில் பழுதடைந்து இருப்பது அனைவரும் அறிந்ததே.

துருபிடித்த அதிகாரிகள் பல இடத்திலும் இருந்து கொண்டு, இயந்திரத்தை ஓட விடாமல் முடம் செய்வதையே தங்கள் தினசரி தொழிலாய் செய்து வருகிறார்கள்.

என்ன காரியம் நடக்கணும்னாலும் அவங்களுக்கு ஆயில் போட்டாதான் நடக்கும் என்ற கேவலம்.

இதில் பெருத்த கொடுமை, ஓரளவுக்கு வசதியாய் இருக்கும் பொதுஜனம் எல்லோரும், ரொம்ப மெனக்கெட விரும்பாம, ஆயில் போட்டு போட்டு இயந்திரத்தை பழக்கப் படுத்திட்டாங்க.

சாதாரண ஒரு மேரேஜ் சர்ட்டிஃபிகேட் வாங்கணும்னாலும் கூட, பிச்சை எடுப்பதை போல், கூனிக் குறுகி, ஒவ்வொரு கவுண்டரா அலஞ்சு அலஞ்சு, ஆயில் போட்டு போட்டு, வேலையை முடித்துக் கொள்ள வேண்டிய அவல நிலை.

ட்ரைவிங் லைசென்ஸ் வாங்கணும்னா, சொல்லவே வேணாம், கூஜா தூக்காத குறையா, அதிகாரிகள் பின்னாடி அலையணும்.

வீடு/நிலம் ரெஜிஸ்ட்டர் பண்ணனும்னா, லஞ்சம் இல்லாம ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தின் உள்ளே கூட அனுமதிப்பதில்லை.

இந்த அரசாங்க இயந்திரத்தின் கெட்ட சவகாசமோ என்னமோ தெரியல, இப்பெல்லாம், சில பொதுத்துறை நிறுவனங்களிலும் (public ltd.,) கூட இதே 'துரு' நிலை இருப்பதாய் தெரிகிறது. (BSNL? Airtel?)

சரி, நமக்கு முன்னாடி ஜெனரேஷன் தான், இப்படி துரு பிடிச்சிருக்கு. கழிசடைகள், ஒழிஞ்சு போனா, தானா ஊரு சுபிட்சமாயிடும்னு நெனச்சிட்டு இருந்தா, அவங்களைத் தொடர்ந்து வந்த இளசுகள் கூட, ஆயில் கேட்கும் போதையில் சிக்குண்டு இருக்கிறார்கள்.

ஸோ, கூட்டி கழிச்சு பாத்தா, இப்போதைக்கு நம்ம ஊருக்கு விமோச்சனமே இல்லையோன்னு தோணுது.

நம்ம எல்லாரும், சரியாகர வரைக்கும், இது முற்றுப் புள்ளியில்லாமல் தொடரும். நம்ம வேலைய ஈஸியா முடிச்சுக்க நினச்சு, ஆயில் போட்டுக்கிட்டே இருந்தா, இயந்திரம் அந்தப் பழக்கத்தை மாத்தவே மாத்தாது.

தவறுக்கு துணை நிக்காமல், கொஞ்சமாவது தைரியமா கேள்வி கேட்கப் பழகணும்.

தனியாளா நின்னுகிட்டு, இதெல்லாம் செய்வது கஷ்டம்தான்.

இணையம் இருக்கு, பதிவர் வட்டம் இருக்கு, உங்க அக்கம் பக்கத்தில், like-minded தனி நபர்கள்/குழுக்கள் இருக்கும். இவற்றின் உதவியோடு, அப்பப்ப, ஆயில் போடாமல் வேலையை முடிச்சுக்க முயற்சி பண்ணுங்க.

துரு பிடிச்சிருக்கு, ஆயில் போட்டாதான் வேலை நடக்கும்னு, இயந்திரம் அலம்பு பண்ணா, உப்புக் காகிதம் எடுத்த், துருவை சுரண்டி எடுங்கள். ஆயில் போடவே போடாதீங்க!

Ramesh Sadasivam என்ற பதிவரின், "கிணறு வெட்ட பூதம்" படித்துப் பாருங்கள்.
ரமேஷ், ஆயில் போடாம, உப்புக் காகிதம் போட்டு சுரண்ட ஆரம்பித்திருக்கிறார். சிரமமான வேலையானாலும், இறுதியில் ஜெயம் உண்டாகும்.
முழுவதாக ஜெயம் கிடைக்கலைன்னாலும், கொஞ்சம் துருவாவது சுரண்டி எடுத்த சந்தோஷமாவது கிட்டும்.

சென்னையில் இருப்பவர்கள், 'பெரிய' பதிவியில் இருப்பவர்கள்/இருப்பவர்களைத் தெரிந்தவர்கள், வேறு யோசனை தெரிந்தவர்கள், ரமேஷுக்கு உறுதுணையாய் இருங்கள்.

இனி வரும் காலத்தில், எந்த இயந்திரத்துக்காவது, எங்காவது, ஆயில் போட்டு உங்கள் வேலையை முடித்துக் கொள்ள நேரிட்டு, ஒரு எதிர்ப்பும் காட்டாமல், நீங்கள் அந்த வேலையை போதிய ஆயில் போட்டு முடித்துக் கொண்டால், மொத்த பதிவுலக அன்பர்களும், உங்கள் முகத்தில் காரி உமிழ்ந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்!
Sorry to say that. but you are one of the biggest reason, why we still have corruption in our society!

23 comments:

நட்புடன் ஜமால் said...

சில தனியார் நிறுவனங்களிலும் கூட இதே 'துரு' நிலை இருப்பதாய் தெரிகிறது. (BSNL]]


BSNL --- இது தனியார் நிறுவனமா ...

நிஜமாத்தெரியாதுங்க ...

SurveySan said...

ஜமால், தனியார் இல்லை. public limited company அது.

அதுக்கு டமில்ல என்ன? :)

பிரபல பதிவர் நாமக்கல் சிபி said...

ஒருத்தர் ஒரு தப்பைக் கண்டுபிடிச்சி சுட்டிக்காட்டினா அதைக் களைவதற்காக முதலில் சேர்ந்து போராடணும்!

"அதை விடுத்து தனியார் நிறுவனங்களில் இருக்கு, பார்ட்னர்ஷிப் ஃபிர்ம்ஸ்லே இருக்கு!..."

என்ன இதெல்லாம்?
யார் செஞ்சாலும் தப்பு தப்புதானே!

நட்புடன் ஜமால் said...

ஓஹ்! இப்ப விளங்குது.

அம்பூட்டு தமிழ் தெரியாதுங்கோ.

நட்புடன் ஜமால் said...

public limited company]]

பொதுத்துறை நிறுவனம்

-- நன்றி! ஜோதி பாரதி

SurveySan said...

சிபி,


////"அதை விடுத்து தனியார் நிறுவனங்களில் இருக்கு, பார்ட்னர்ஷிப் ஃபிர்ம்ஸ்லே இருக்கு!..."

என்ன இதெல்லாம்?
யார் செஞ்சாலும் தப்பு தப்புதானே!///

தப்பு தப்பேதான். யாரும் சரின்னு சொல்லலையே. mis interpretation of post or comment? :)

SurveySan said...

ஜமால்/ஜோதிபாரதி,
//பொதுத்துறை நிறுவனம்
//

நன்றி. சரி செஞ்சுடறேன்.

கலையரசன் said...

எங்க நடக்கலை இந்த கொடுமை?
நாமெல்லாம் எழுத்தில்தான் எழுச்சியடைவோம்..

pappu said...

அந்த சம்பவம் உண்மையிலயே ரொம்ப கோபத்த உண்டு பண்ணுது. அவர பாக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு.

SurveySan said...

கலையரசன்,

////நாமெல்லாம் எழுத்தில்தான் எழுச்சியடைவோம்..///

very true!
same boat.

SurveySan said...

pappu,

//அந்த சம்பவம் உண்மையிலயே ரொம்ப கோபத்த உண்டு பண்ணுது. அவர பாக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு.
//

yes. problem is, kobam konjam naalla aaridum, thirumba murungai maram kadhaidhaan. :)

shri ramesh sadasivam said...

அன்புள்ள சூர்வேசன், தாங்கள் செய்திருக்கும் உதவி அளப்பரியது. மிக்க நன்றி. அன்புடன் ரமேஷ்.

புருனோ Bruno said...

//இனி வரும் காலத்தில், எந்த இயந்திரத்துக்காவது, எங்காவது, ஆயில் போட்டு உங்கள் வேலையை முடித்துக் கொள்ள நேரிட்டு, ஒரு எதிர்ப்பும் காட்டாமல், நீங்கள் அந்த வேலையை போதிய ஆயில் போட்டு முடித்துக் கொண்டால், மொத்த பதிவுலக அன்பர்களும், உங்கள் முகத்தில் காரி உமிழ்ந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்!
Sorry to say that. but you are one of the biggest reason, why we still have corruption in our society!//

வழி மொழிகிறேன்

பிரேம்ஜி said...

சமீபத்தில் படித்த பதிவுகளில் மிக அருமையானது ரமேஷின் பதிவு. கோபம்,ஆற்றாமை என பல்வேறு உணர்ச்சிகளை கொடுத்தது.ரமேஷ் க்கு வெற்றி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

NATPUTAN RAMESH said...

நல்ல பதிவு. நீங்கள் படம்பிடித்த இதே சென்னையை நான் வேறு ஒரு கோணத்தில் படம் பிடித்துள்ளேன் படிக்கவும்

http://natputanramesh.blogspot.com/2009_06_04_archive.html

பயணக்குறிப்புகள் -

ஊர்சுற்றி said...

நன்று, மிக நன்று.

CVR said...

இங்கே வந்துட்டு ரெண்டு வருஷம் இருந்துட்டு பேசுங்க சர்வேசன்!

SurveySan said...

CVR,

என்ன சொல்ல வரீங்க? அங்கையே இருந்தா, ஆயில் போடரத தவர, வேலையை முடிச்சுக்க வேற வழியில்லைன்னா?
ஆயில் கொடுக்கரது பழகிப் போயிடும்னா?

நான் அங்கேயே இரண்டு வருஷம் இருந்து, ஆயில் கொடுக்கக் கூடாது என்ற என் கொள்கை வீக் ஆகிப்போகலாம்தான். அது என் கையாலாகாத்தனத்தை காட்டியும் விடலாம்.

ஆனா, நான் சொல்ல வரது என்னன்னா, short-cut எடுக்கரது ஈஸி. ஆனா, நேர்வழி, நெடுவழியானாலும், எல்லாரும் அதை எடுக்க முயற்சிக்கணும்.

இப்படியே, நேர்வழி எடுப்பது இயலாத காரியம்னு, சப்பைக் கட்டு கட்டிக்கிட்டு ஆளாளுக்கு short-cut எடுப்பதர்க்கு ஒரு சாக்கு வைத்துக் கொண்டால் எப்படி வெளங்கும்?

anyway, உங்க கேள்விக்கான விடை ஓரளவுக்கு என் முந்தைய பதிவில் கிடைக்கலாம்.
லஞ்சப் பெருச்சாளிகள்

நான் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, இதுவரை லஞ்சம் கொடுத்ததில்லைன்னு என்னால அடிச்சு சொல்ல முடியும்.
இனி வரும் காலங்களில், லஞ்சம் கொடுத்துத்தான் ஆகணும்னு நிலை வந்தாலும், இயன்றவரை என்னாலான frictionஐ காட்டி விட்டுத்தான் மறு வேலை செய்வேன்.
though it is a frustrating experience, in a way, it gives me a thrill to do it the right way :)

Use, vigilince, நுகர்வோர் அமைப்பு, மற்ற குழுக்கள், as much as possible. They do work, if we approach them.

மனதிருந்தால், மார்கமுண்டு :)

SurveySan said...

CVR, நீங்க கேட்ட கேள்வியை கொஞ்சம் தீவிரமா யோசிச்சுப் பாத்தேன்.

நான் ரமேஷ் இடத்தில் இருந்திருந்தால் என்ன பண்ணியிருப்பேன்னு.

கண்டிப்பா ரமேஷ் அளவுக்கு திடம் எனக்கு இருந்திருக்காது. கம்ப்ளெயிண்ட் பண்ணியிருப்பேன், சண்டை போட்டிருப்பேன், மேன்ஷன் ஓனருக்கு ஓரளவுக்கு எரிச்சல் கொடுத்திருப்பேன்.
ஆனா, ரமேஷ் மாதிரி, இவ்ளோ தூரம் தாக்கு பிடிச்சிருக்க மாட்டேன்.

ஆனா, இனி, கோதாவில் இறங்க வேண்டும் என்ற திடம் வந்திருக்கிறது.
afterall, we are not alone. we have enough like-minded people among us :)
and afterall, we live one life.

SurveySan said...

CVR, one more episode from my life.
சுய தம்பட்டம் இல்லை. உங்களுக்கான, மோட்டிவேஷனுக்காக. :)

அமெரிக்க நீதிமன்றத்தில் நானு

as i said, short-cut is easy, but it takes a little more time and perseverance to take the correct route.
it will be painful, but that is what has to be done by all of us, if we want to see a better frustration-less place to live in.

SK said...

நடைமுறையில் நிறைய விடயங்கள் சாத்திய படமால் போகிறது.. :(

தருமி said...

சென்னைப்பதிவர்கள் ஒன்றிணைந்து இதற்காகப் போராடவேண்டுமென்பது என் வேண்டுகோள்.

SurveySan said...

ரமேஷ் சதாசிவத்தின் தண்ணீர் ப்ரச்சனைக்கு தீர்வு கிட்டி விட்டது.
அவரின் விடாமுயற்சி பயனளித்துள்ளது.

http://thirumbiparkiraen.blogspot.com/2009/08/blog-post_27.html