சில பேர பாத்திருக்கேன். செம ஜாலியான சுகவாசிகளா இருப்பானுங்க. எப்பப் பாத்தாலும் எந்தக் கவலையும் இல்லாம சுத்தித் திரிவானுங்க. பணக் கஷ்டம் இருக்காது, படிப்பும் ஏறும், மனசும் நல்ல மனசா இருக்கும்.
கொஞ்சம் பொறாமையாவே இருக்கும், அவனுங்கள பாத்தா.
கம்ப்யூட்டர் கிளாஸ் படித்த காலத்தில் அப்படி ஒரு நண்பனின் பரிச்சயம் இருந்தது.
'சேட்டுப்' பையன். ரொம்ப ரொம்ப ஜாலியான பயல்.
புதுசா மார்க்கெட்ல இருக்கர பைக்குதான் கொண்டு வருவான். எல்லாருக்கும் டீ வாங்கித் தருவான், பசிச்சா 'செட்' தோசை வாங்கித் தருவான். சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போவான்.
நல்லாவும் படிப்பான்.
அவங்க வீடுதான் எங்க ஊர்லையே பெரிய வீடு. மூணு காரு இருக்கும். எல்லா ரூம்லையும் டிவி/விசிஆர் இருக்கும். 90களிலேயே டிஷ் ஆண்டனா வச்சிருந்தாங்க.
ஆனா, இந்தப் பய ஒவரா பந்தா எல்லாம் பண்ண மாட்டான். ஹாப்பியா இருப்பான்.
ஆனா, வகுப்புகளில் பலப் பல சில்மிஷங்கள் பண்ணுவான்.
சொன்னா நம்ப மாட்டீங்க, வீட்டுக்குத் தெரியாம ஒரு நாள், டாட்டா சியெர்ரா போய் வாங்கிட்டானாம். இப்படியெல்லாம் ரொம்ப ஸ்டைலா வாழ்ந்த பையன்.
இந்த மாதிரி ஸ்டைலா ஜாலியாவே வாழர பசங்களுக்கு, வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளையெல்லாம் அனுபவிச்சு, கொஞ்சம் அடிபட்டு கிடிபட்டு, வயசாகி பொக்கையாகி, சாதாரணமா எல்லாரையும் போல் வாழ்க்கையை கழிக்கணும்னு தலையெழுத்து இருக்காது போலருக்கு.
கம்ப்யூட்டர் கிளாஸ், காலேஜ் வாழ்க்கை எல்லாம் முடியரதுக்குளையே, இந்தப் பயல், ஒரு பைக் ஆக்ஸிடெண்ட்டில் இறந்து விட்டான்.
இவன் வயசாகி நொந்து நூலாகி இறந்திருந்தால், ஒரு சாதாரண நிகழ்வா இருந்திருக்கும் - அவனோட 'ஸ்டைலுக்கு' அது பொருந்தாமல் போயிருந்திருக்கும். வாழ்ந்த கொஞ்ச காலங்களில் எல்லாரையும் கிரங்கடித்தவன், சட்டுனு இள வயதில் நிகழ்ந்த மரணத்தினாலும், எல்லாரையும் ஒரு ஆட்டு ஆட்டிட்டான்.
இன்று மைக்கேல் ஜாக்சனுக்கு லாஸ் ஏஞ்சல்சில் நடந்த மெமோரியல் கூட்டத்தையும், அதில் ஒவ்வொருவரின் நெகிழ்வான பேச்சையும், மைக்கேல் சென்ற ஒரு வாரத்தில் ஏற்படுத்திய அதிர்வையும் பாத்தபோது, என் 'சேட்டு' நண்பனின் நினைவுதான் வந்தது.
இதே மைக்கேல் ஜாக்சன், தொண்ணூறு வயதில், தொங்கிப் போன பின், சாதாரணமாய் மரணத்திருந்தால், இந்த அளவுக்கு ஒரு தாக்கம் இருந்திருக்காது.
ப்ரைம் டைமில், ஸ்டைலா, திடீர்னு நம்மை விட்டுப் போனதால் தான், இந்த கிரக்கம் நமக்கு.
யோசிச்சு பாத்தா, மைக்கேல் ஜாக்சன் எல்லாம், வயசாகக் கூடாத ஒரு ஸ்பெஷல் ஆளாதான் மனசுக்குள் தெரியராரு.
இந்த மாதிரி, வித்யாசமான 'ஸ்டைலான' ஆட்கள், இப்படித்தான் திடுதிப்புனு போயிடுவாங்கன்னு 'விதி'ச்சிருக்கோ என்னமோ?
ஆங்கிலப் பாடல்கள் எல்லாம் சரிவரப் புரியாது என்ற போதிலும், மைக்கேல் ஜாக்சனின் அனைத்துப் பாடல்களுக்கும் செம விசிறி நான். ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு அவரின் பாடல்களுக்கு. இசைக் கோர்வையும் ப்ரமாதமா இருக்கும். காலும் தலையும் தானா ஆடும்.
எப்பேர்பட்ட சாதனைகள் புரிந்த மனுஷன்.
அவருக்கும், கடைசியில் ஆறடி நீளப் பெட்டிதான்.
It was an humbling experience watching the grand memorial service, the speeches, the songs, the music, the praises, the world wide tv coverage - all, while Michael Jackson was lying still in the six footer gold casket.
RiP Michael!
Memorial highlights:
12 comments:
இந்த ஆளு இருந்தாலும் ஆயிரம் பொன் டிவிகாரங்களுக்கு, இறந்தாலும் ஆயிரம் பொன்.
ஆனா அந்த ஆள பார்க்கிறதுக்கு நமக்கெல்லாம் இருக்குற ஒரு ஆர்வம் தான் அவரோட தலை மறைவு வாழ்க்கைக்கும், வெளியே தெரியாத அவருடைய பழக்கங்களுக்கும் காரணமாயிடுச்சு...
IMHO, அவருடைய கடைசிகட்ட வாழ்க்கை ஸ்டைலிஷாக இருந்தது என்று சொல்ல முடியவில்லை.
இதை படித்திருக்கிறீர்களா?
ஆதங்கத்தை அழகாச் சொல்லி தத்துவத்தோடு முடித்திருக்கிறீர்கள் அஞ்சலியை! டயானா நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.
ஆழ்ந்த அனுதாபங்கள் உங்க நண்பர் சேட்டுக்கும், ஜாக்சனுக்கும்!!
ம்.. குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் அனுபவிப்வர்கள்.. சீக்கிரம் போயிடுவாங்கலோ?
ஹரே பாபி ... இதர் தேக்கோ ... !!
நம்மல்கி அண்ணாச்சி ஏதோ சொல்து....!!
அந்த போட்டோ ல என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலயே!
ஆ!,
////இந்த ஆளு இருந்தாலும் ஆயிரம் பொன் டிவிகாரங்களுக்கு, இறந்தாலும் ஆயிரம் பொன்./////
ட்ரூ! இறந்ததால், பல லட்சம் பொன், பலருக்கு.
////ஆனா அந்த ஆள பார்க்கிறதுக்கு நமக்கெல்லாம் இருக்குற ஒரு ஆர்வம் தான் அவரோட தலை மறைவு வாழ்க்கைக்கும், வெளியே தெரியாத அவருடைய பழக்கங்களுக்கும் காரணமாயிடுச்சு...////
ஏதாவது ஒரு விலை கொடுத்தாகணுமே :)
////அவருடைய கடைசிகட்ட வாழ்க்கை ஸ்டைலிஷாக இருந்தது என்று சொல்ல முடியவில்லை./////
2005ல அவரப் போட்டு வாட்டி எடுத்துட்டாங்க. எல்லாம் false allegationsனு அவரு ஜெயிச்சு வெளீல வந்ததும் புரிஞ்சிருக்கும். ரொம்ப ஆட்டிட்டானுவ போட்டு.
ராமலக்ஷ்மி,
////ஆதங்கத்தை அழகாச் சொல்லி தத்துவத்தோடு முடித்திருக்கிறீர்கள் அஞ்சலியை!///
நன்றி. கோர்வையில்லாமல் எதையோ எழுதப் போய், ஓரளவுக்கு படிக்கும்படியா இருக்கரது சந்தோஷம் :)
////டயானா நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.
/////
உண்மை.
ஆனா, ஒரு பக்கம், டயானா மீடியாக்களால் கொண்டாடப் பட்டதும், ஜாக்சன் மீடியாக்களால் வாட்டி எடுக்கப்பட்டதும் ஏன்னு புரீல.
இத்தனைக்கும், டயானா பல காலமா, கணவனை விட்டு, இன்னொருவருடன், பப்ளிக்கா சுத்த ஆரம்பிச்சதா பரவலா பேச்சு வந்தும்... :(
கலையரசன்,
/////குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் அனுபவிப்வர்கள்.. சீக்கிரம் போயிடுவாங்கலோ?///
இருக்கலாம். சேட்டு நண்பனாவது விபத்தில் போனான்.
சில பேரு, இந்த மாதிரி சின்ன வயசுல ரொம்ப பாப்புலரானவங்க, வயசாவரத தாங்கிக்க முடியாம போயிடறாங்களோ? எல்விஸ் மாதிரி?
மேடி, தன்யவாத் :)
///pappu said...
அந்த போட்டோ ல என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலயே!
9:46 AM, July 08, 2009//
;) அவ்ளோ லேசுல புரிஞ்சுட்டா நாங்க எப்படி பெரியாள் ஆவரது?
ஏதோ ஆரம்பிச்சேன், எப்படியோ முடிஞ்சு போச்சு.
சூரியனை ஜாக்சன் மாதிரி நெனச்சுக்கோங்க. குட்டிப் பசங்க ரெண்டு பேர் அலைல வெளையாடிக்கிட்டு ஜாக்சனுக்கு டாட்டா காட்டறாங்க :)
//
ஆனா, ஒரு பக்கம், டயானா மீடியாக்களால் கொண்டாடப் பட்டதும், //
உண்மைதான். ஆனாப் பாருங்க அதிலும் ஒரு கொடுமையை, கொண்டாடிய அந்த மீடியாவாலேயேதான் மேலே போய் சேர்ந்தாங்க!
"YOU JUST LEAVE ME ALONE" என்கிற அவருடைய பாடல் தான் முன்பெல்லாம் அடிக்கடி என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இப்போது நிரந்தரமாக அவர் ஒலிப்பது போல் . . .
நிறைவான அஞ்சலி
Post a Comment