மைக்கேல் ஜாக்ஸன். பள்ளி பயின்ற காலத்தில், இவரின் Bad பாட்டை முணு முணுக்காத வாயே இருந்திருக்காது. வார்த்தை புரிஞ்சுதோ இல்லியோ, 'I am bad! I am bad!'னு பாத்ரூம்ல, சோப்பை மைக்கா நெனச்சுக்கிட்டு எல்லாரும் அலப்பர பண்ணியிருப்போம்.
அடேங்கப்பா! எவ்ளோ பாடல்கள்? எவ்வளவு எவ்வளவு வித்யாசமான பாடல் காட்சி அமைப்பு? அசத்தல் ரகம்.
Remember the timeனு ஒரு பாட்டுல, சர்ர்ர்னு சுத்தி தூசியா மாறுவது போன்ற கிராஃபிக்ஸ், பட்டையை கிளப்பிய ரகம்.
"they dont really care about all us"னு ஒரு பாட்டு. ப்ரேசில் தெருக்களில், பெரிய பெரிய ட்ரம் அடிச்சுக்கிட்டு, அம்சமா படமாக்கப்பட்ட பாட்டு.
heal the world, man in the mirror, black or white, i just cant stop loving uனு அடுக்கிக்கிட்டே போகலாம்.
என் personal favourite, Liberian Girl என்ற பாடல். எங்க கும்பலில் இருக்கும் 'பீட்டரு' ஒருத்தன், சூப்பரா பாடுவான் அதை. சிங்கிள் டீ நாயர் கடைல குடிச்சுக்கிட்டு, ரிப்பீட்டு கேட்டுக்கிட்டே இருப்போம்.
நேத்து கூட எங்க ஊர்ல, ஸம்மர் மூஜிக் ஃபெஸ்டிவல்னு, தெரு மூலையில மேடை போட்டுக்கிட்டு, குத்தாட்டம் போட்டுக்கிட்டு இருந்தானுங்க. Billi jean பாட்டை பாடியதும், மத்த பாட்டுக்கெல்லாம் இருந்ததை விட பத்து மடங்கு ஆரவாரமும், ஆட்டமும் இருந்தது.
ஒடுக்குப்பட்ட ஒரு இனத்திலிருந்து, இவ்ளோ பெரிய வளர்ச்சி அடைந்திருப்பதிலேயே, அவரின் திறமை எம்மாம் பெருசுன்னு விளங்கும்.
த்ரில்லர் ஆல்பம் மட்டும் 104மில்லியன் சிடிக்கள் விற்கப்பட்டு, உலக சாதனை புரிஞ்சுருக்கு.
ஜாக்ஸன் இன்று மதியம் மாரடைப்பால் காலமானார் என்ற சேதி பேரிடி!
அடுத்த வருடம், ஒரு farewell tour லண்டனில் பாடி அசத்தப் போவதாக சென்ற மாதம் கூட ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அறிவிப்பு வந்த அடுத்த நாளிலேயே எல்லா டிக்கெட்டும் விற்றுத் தீருந்துவிட்டதாம். தலைவருக்கு இன்னும் மக்கள் மத்தியில் இருக்கும், மதிப்பு இதிலிருந்து தெரிகிறது.
ஒரு முறை கூட இவரின் ஆட்டத்தை நேரில் பார்க்க முடியாமல் போனது, பெரிய துரதிர்ஷ்டம் :(
ஜாக்ஸன் தலைவா, வீ ஆர் கோயிங் டு மிஸ் யூ சார்!
Thanks for all the great songs!
Salute!
pic source: Wikipedia
9 comments:
:(
அவருடைய அடுத்த ஆல்பத்துக்கு கூட " This is a Last " என்று பெயரிட்டிருந்த்ததாக கேள்விப்பட்டேன்.
:(
""For Michael to be taken away from us so suddenly at such a young age, I just don't have the words," ... "I've lost my little brother today, and part of my soul has gone with him""
-quincy jones.
"no one can out sell thriller"
இன்று பலரும் கூறிய கருத்து.
My condolences for "the KING of pop".
பொப் இசையுலகின் மன்னன் : மைக்கல் ஜக்சன்
http://www.honeytamilonline.co.cc/2009/06/blog-post_26.html
மைக்கேல் ஜாக்சனுக்கு என் அஞ்சலி ....!!!
அடுத்த வருடம், ஒரு farewell tour லண்டனில் பாடி அசத்தப் போவதாக//
இன்னும் ரெண்டு வாரத்தில்னு கேள்விப்பட்டேனே? அப்புறம் அதுனால கூட அவருக்கு மன அழுத்தம் இருந்து அவர் இறப்பிற்கு காரணமாக இருந்திருக்கலாம்னாங்கலே? புருடா உட்டுட்டாங்கியலா?
article claims no one else can attain the greats like Jackson did, which is very very true!
http://www.nytimes.com/2009/06/28/weekinreview/28segal.html?hp
Post a Comment