பயணத்துக்கான ஏற்பாட்டை செய்யும்போது, ரோமிலிருந்து, Florenceம் அதனருகில் உள்ள Pisa டவரும் பாக்கலாம்னுதான் ஐடியா. Florenceல் இருக்கும் Ufitzi ம்யூசியம், ரொம்பப் ப்ரபலம். ஆனா, லண்டன், பாரிஸ், ரோமில் வரிசையாக ம்யூசங்களாகப் பார்த்துவிட்டதால், ஓவியங்கள் மேலும், கற்சிலைகள் மேலும் ஒரு அலர்ஜி நிலைக்கு ஆளாகிவிட்டபடியால், கொஞ்சம் வித்யாசமா எதையாச்சும் பாக்கணும்னு தோணிச்சு.
லண்டனில் சந்தித்த என் பால்ய சிநேகிதன் அதை ஊர்ஜீதம் செய்யும் வகையில், 'மச்சி, கண்டிப்பா வென்னிஸ் பாக்காம திரும்பிப் போகாத'ன்னு ஒரே பில்டப் கொடுத்துட்டான்.
சரின்னு, மனசை கல்லாக்கிக்கிட்டு, Florenceல் முன்பதிவு செய்திருந்த ஹோட்டல் ரூம்களை ரத்து செய்துவிட்டு, வென்னிஸில் ரூம் புக்கினேன். ( யப்பா! வென்னிஸ் ரொம்ப காஸ்ட்லீ ஊருங்கோவ். டப்பு காலி பண்ணிட்டாங்க ! )
ரோமிலிருந்து 4 1/2 மணி நேர, EuroStar பயணத்தில், வென்னிஸ் வந்து சேர்ந்தது. ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது ராத்திரி 11:30. ரொம்ப களைப்பா இருந்தது. ஆனா, ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், பார்த்த காட்சி, களைப்பையெல்லாம் எட்டி உதைத்தது. பெரிய நீர் கால்வாயில், எக்கச்சக்கமான குட்டிக் கப்பல்கள், இங்கும் அங்கும் சர் சர்னு போய்க் கொண்டு இருந்தது.
வென்னிஸ், 118 குட்டித் தீவுகள் (lagoon) கொண்ட ஒரு அழகிய நகரம். சாலைகள் கிடையாது. ஒரு எடத்துலேருந்து இன்னோர் எடத்துக்கு போகணும்னா போட்லதான் போகணும். வித்யாசமான ஊரு.
இனி, படங்கள் சில.
pseudo-hdrன்னு ஒரு மேட்டர் இருக்கு. ஒரே படத்தை கொண்டு, இந்த மாதிரி, 'பளிச்'னு உருவாக்கலாம். dynamic photo hdr போன்ற சாஃப்ட்வேர் இதுக்கு உதவுது.
மற்ற ஐரோப்ப நகரங்களில் எப்படி ரயில் மெட்ரோ பட்டைய கெளப்புதோ, வென்னிஸில், கப்பல் மெட்ரோ ப்ரசித்தி. 24 மணி நேர பாஸ் வாங்கிட்டா, சுத்திக்கிட்டே இருக்கலாம். குறிப்பா, ராத்திரி நேர ப்ரயாணம் அருமை.
கலைக் கண்ணோட பாத்தா, பாழடஞ்ச பழைய மண்டபமும் அழகா தெரியுது :)
st marcos square.
இந்தப் பறவையை படம் புடிச்ச விதம் பத்தி தனிப் பதிவு எழுதலாம்னு இருக்கேன். கொடுமை என்னன்னா, அங்க இருக்கர பறவை எல்லாம், மனுஷன பாத்தா பயப்படவே மாட்டுறுது. கிட்டப் போய் உஷ் உஷ்னாக்கூட பறக்கல. எட்டி ஒதச்சாதான், கொஞ்சமாவது நகருது. அப்படி, எட்டி எட்டி ஒதச்சு, துரத்தி துரத்தி படம் புடிச்ச பறவை இது. இன்னும் ஒரு 100 படம் இதோடது இருக்கு :)
வென்னிஸ் புறாக்கள். மனுஷனப் பாத்து துளிகூட பயப்படல. இம்சை அரசனை அனுப்பி வைக்கணும்.
யாரு பெத்த புள்ளையோ? ஏதோ ஒரு கேட்ல அநாமத்தா சோகமா இருக்கு.
ஐரொப்ப பயணம் இனிதே நிறைவுற்றது. :)
பி.கு: (ராமலக்ஷ்மி, குடிதண்ணீர், அநாமத்தா கொட்டிக்கிட்டே இருக்கரது, வென்னிஸிலும் தொடர்ந்தது. இந்த மாதிரி :) )
8 comments:
ஏங்க முதல் படத்தையும் ப்லாக்ஸ்பாட்லயே ஏத்தியிருக்கக் கூடாதா?
ஃப்லிக்கர் ban...
3,4,5,6 படங்கள் processing பட்டையக்கிளப்புது...
the best batch of all so far from your trip...
:)
ஆ! நன்றீஸ் :)
Flickrக்கு கொஞ்சம் ஹிட்ட தேத்தலாம்னு செஞ்சேன் :)
6 - கொஞ்சம் ஓவரா ப்ராஸஸ் பண்ணிட்டேன். ஒரிஜினல், வெளிறிப் போயிருக்கு. :)
ஆகா எனக்காகவே அந்தக் கடைசிப் படம். நன்றி:)!
//சாலைகள் கிடையாது. ஒரு எடத்துலேருந்து இன்னோர் எடத்துக்கு போகணும்னா போட்லதான் போகணும்.//
தெரிந்த விஷயம்தான். நேரில் அருமையா இருந்திருக்குமே. முதல் படம் வெகு அழகு, மற்றவையும்தான்!
//அப்படி, எட்டி எட்டி ஒதச்சு, துரத்தி துரத்தி படம் புடிச்ச பறவை இது.//
மெனேகா காந்தியிடம் போட்டுக் கொடுக்க வேண்டியதுதான்:)!
super subangan
solid surveysan
ராமலக்ஷ்மி,
//மெனேகா காந்தியிடம் போட்டுக் கொடுக்க வேண்டியதுதான்:)!//
வென்னிஸ் புறாவெல்லாம் அவங்க கவரேஜ்ல இல்லை.
சோனியா ஊரு என்பதால், கொஞ்சம் ஒதுங்கியே இருப்பாங்க மெ.கா :)
கலையரசன், நன்றீஸ்,
சுபாங்கன் யாரு? :)
//சோனியா ஊரு என்பதால், கொஞ்சம் ஒதுங்கியே இருப்பாங்க மெ.கா :)//
நச் பதில்:)))!
முதல் படம் பார்க்க அழகா இருக்கு:)
//எட்டி எட்டி ஒதச்சு, துரத்தி துரத்தி படம் புடிச்ச பறவை இது. இன்னும் ஒரு 100 படம் இதோடது இருக்கு :)
//
ஏங்ண்ணா படம் புடிச்சா ஆயுசு குறைஞ்சிரும்னு சொல்லறாங்களே அது நெசமா??
Post a Comment