recent posts...

Sunday, June 21, 2009

பொன்னியின் செல்வன் in a nutshell - பாகம் 2"பொன்னியின் செல்வன் in a nut shell" முதல் பாகம் எழுதி நாலு மாசம் ஆயிடுச்சு. இரண்டாம் வால்யூமை படிக்க இவ்ளோ நாளாயிடுச்சு. பெருசா ஒண்ணும் வேல இல்லன்னாலும், ஏதாச்சும் வந்து, புக்கு படிக்கர நேரமில்லாம பண்ணிடுச்சு. சமீபத்திய ரோம் ட்ரிப்பின் ரயில் பயணத்தில் தான், இரண்டாம் வால்யூம் படித்து முடித்தேன்.

கதை செம சுவாரஸ்யமாய் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல் வால்யூம் படிக்கையில், ஹீரோவாக நான் கருதிய வந்தியத் தேவன், இரண்டாம் வால்யூமையும் முழுதுமாக ஆக்ரமிக்கிறான். ஆனால், இரண்டாம் வால்யூமில், தசாவதார பல்ராம் நாயுடு கணக்காக, கொஞ்சம் காமெடியனாகவும் ஆக்கப்பட்டுள்ளான். ஆவலாய் எதிர்பார்த்த, இளவரசர் அருள்மொழிவர்மரும் இரண்டாம் வால்யூமில் சும்மா ஜம்முனு களமிறங்குகிறார். காமெடி, காதல், சஸ்பென்ஸ், ஃபைட், பாட்டுன்னு எல்லாக் கலவையும் இந்த வால்யூமில் கலந்து, பின்னியிருக்காரு கல்கி.

இனி, பொ.செ in a nut shell, இரண்டாம் பாகம் பாக்கலாம்.

முதல் பாகத்தில், இளவரசி குந்தவை தன் தம்பி அருள்மொழி வர்மருக்கு கொடுத்தனுப்பிய ஓலையை வாங்கிக்கிட்டு வந்தியத் தேவன் புறப்பட்டு கோடியக்கரையை வந்து அடைகிறான். ( கோடியக்கரையின் வர்ணனை அமக்களம். பாக்க வேண்டிய இடம் போலருக்கு. Flickrல் ஒரு படம் ஆப்டுது.பாருங்க. ). அங்க அழகான பூங்குழலியை சந்திக்கிறான். குந்தவையை பார்ததும் மயங்கிய வந்தியத் தேவன், இவளைப் பார்த்ததும் மீண்டும் மயங்குகிறான். நாலஞ்சு அத்யாங்கள், இவங்கள சுத்தியே போவுது. பூங்குழலி படகு ஓட்டுவதில் திறமைசாலி. அவளின் படகில் இருவரும் இலங்கைக்குப் போறாங்க. இலங்கையில் தான் இளவரசர் அருள்மொழிவர்மர் பெரும் படையுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறார்.

சுந்தர சோழர் பக்கவாதம் வந்து, தஞ்சைக் கோட்டையில், பழுவேட்டரையர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவருக்கும் ராஜ்யத்துக்கும் ஆபத்து நேரக்கூடும் என்ற பேச்சு பரவலாய் இருக்கிறது. இந்த நேரத்தில் தான் தன் தந்தையின் அருகில் இருக்க வேண்டும் என்று நினைத்து, குந்தவை, பழையாறில் இருந்து, தஞ்சாவூர் போகிறார். கூடவே பயணிக்கும் வானதியிடம், அருள்மொழி வர்மருக்கு, 'பொன்னியின் செல்வன்' என்ற பெயர்காரணம் என்னன்னு சொல்றாங்க.
அதாவது, சுந்தர சோழர் ஹெல்த்தியா இருக்கும் காலத்தில், மொத்த ஃபேமிலியோடு, பொன்னி நதியில் பெரிய படகில் இசைப் பரிவாரங்களுடன், உல்லாசமா போவாராம். அப்படி ஒரு தடவ போகும்போது, அருள்மொழிவர்மர் திடீர்னு பொன்னி நதியில் விழுந்துட்டாராம். எல்லாரும் அலறிப் போய் தேடிக்கிட்டு இருந்தாங்களாம். அப்போ, பொன்னி நதியிலிருந்து ஒரு பெண் , அருள்மொழியை கையில் ஏந்தியபடி வந்து, சுந்தர சோழர் கிட்ட கொடுத்துட்டுப் போனாங்களாம். அப்பரம், அந்தப் பெண் மாயமா மறஞ்சுட்டாங்களாம். அது கண்டிப்பா, பொன்னி நதியின் தெய்வம் தான்னு முடிவுகட்டி, அன்றிலிருந்து, அருள்மொழிவர்மரை, பொன்னியின் செல்வன்னு சொல்வாங்களாம். ( பட்டம் வெக்கரதுக்கு நம்மாளுங்களுக்கு சொல்லியா தரணும்? )

தஞ்சையை அடைந்த குந்தவைக்கும், நந்தினிக்கும் இடையில் நடக்கும் வார்த்தை ஜாலம், ஃப்ரிக்ஷன் எல்லாம் படிக்க படு சுவாரஸ்யம். சுந்தர சோழருக்கு உடல் நிலை மோசமாயிக்கிட்டே இருக்கு.
ஒரு நாள் இரவு, 'என்னைக் காப்பாத்துங்கன்னு' அவரு படுக்கையிலுருந்து அலற்றாரு. அதைக் கேட்டு வந்த வானதி, சுந்தர சோழரின் எதிரில், நந்தினியும் பழுவேட்டரையரும் இருக்கரத பாக்கரா. புகை மூட்டத்தின் நடுவில், 'பேய்' கெட்டப்பில் இருந்த நந்தினியை இவரு பாத்து ஏன் பயப்படறாருங்கருங்கர ஒரு முடிச்சு போடறாங்க.

அடுத்த நாள், சுந்தர சோழர், தன் ஃப்ளாஷ்பாக்கை தன் மகள் குந்தவையிடம் சொல்றாரு. சின்ன வயசுல ஏதோ ஒரு ஊருக்குப் போனவரு, அங்க இருக்கர ஒரு ஊமைப் பெண்ணை காதலித்தாராம். கொஞ்ச நாளில், க்டமை அழைக்க, ஊமைப் பெண்ணை அம்பேல்னு விட்டுட்டு திரும்ப வந்துடறாரு. அந்த ஊமைப் பெண்ணை அம்பேல்னு விட்டுட்டோமேங்கர கவலையிலேயே இவருக்கு அப்பப்ப ஒடம்பு சரியில்லாம போயிடுது. ஊமைப் பெண் இறந்து விட்டாள்னு சுந்தரர் நெனச்சுக்கிட்டு இருக்கார்.
தன் பெரியப்பாவின் மகன் உயிருடன் இருக்கும்போதே, தான் அரசாளத் தொடங்கியது தவறான ஒன்று, அந்தச் சாபம்தான் இன்று தன்னை வாட்டுவதாகவும், தன் மகன்கள் அருள்மொழிவர்மனும், ஆதித்த கரிகாலனும், இந்தச் சாபத்தை தொடரவேண்டாம் என்றும், தன் அண்ணன் மகன் மதுராந்தகத் தேவனுக்கே, அரசாளும் உரிமையை கொடுக்க வேண்டும் என்றும் குந்தவையிடம் சொல்கிறார்.

வந்தியத்தேவன் இலங்கையை வந்து சேருகிறான். எதிர்பாத்த மாதிரியே, ஆழ்வார்க்கடியானும் அங்க வந்துடறான். இவங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. மாத்தி மாத்தி வாரிப்பாங்க.
ஆழ்வார்கடியானும், அநிருத்தப்ரம்மரிடமிருந்து (சுந்தரச் சோழனின் ஃப்ரெண்டும், அமைச்சரும்) ஒரு செய்தியை அருள்மொழிவர்மருக்கு தெரிவிக்க வரான்.
ரெண்டு பேருமா சேந்து, இளவரசரை பாத்துடறாங்க. இளவரசர்தான் இந்த நாவலின் ஹீரோ என்பது இரண்டாம் பாகத்தில் நிரூபணமாகிறது. இண்ட்ரொடக்ஷன் சீன் அமக்களம்.
(அதைத் தவிர, இந்த அருள்மொழிவர்மர் தான் பின்னாளில் இராஜ இராஜ சோழனாகிறான்னு அங்கங்க, வரலாற்றுக் குறிப்புகள், பல இடங்களில் கல்கி தெளித்திருக்கிறார்).

இளவரசரை, இலங்கையின் சிம்மாசனத்தில் உட்கார வைக்கவேண்டும் என்று ஒரு கோஷ்டியும், தஞ்சாவூருக்கு கூட்டிட்டுப் போகணும்னு வந்தியத் தேவனும்,
ஆதித்யகரிகாலன் கிட்ட கூட்டிட்டுப் போகணும்னு இன்னொரு கோஷ்டியும், இளவரசரை சாகடிக்க முயற்சி செய்யும் ஒரு கோஷ்டியும்னு பல கோஷ்டிகள் இருக்கு இந்த பாகத்தில்.
(குழப்பமான கதைக்களம் தான். முடிச்சு அவுர இன்னும் ரெண்டு பாகம் படிக்கணும் போலருக்கு).
திடீரென்று ஒரு ஊமைப் பெண்ணும், இலங்கை வீதியில் இளவரசருக்கு அப்பப்ப உதவி செய்யறாங்க. ( இந்த வயசான ஊமைப் பெண், சுந்தரரின் ஊமைப் பெண்ணாதான் இருக்குங்கரது, பல தமிழ் படங்கள் பாத்த நமக்கு ஊகிப்பது ஒரு பெரிய விஷயமில்லை). இளவயதில் பொன்னிநதியில் வீழ்ந்த அருள்மொழிவர்மரை காப்பாற்றியதும், இந்த ஊமைப் பெண்தான்னு தெரிய வருது அருள்மொழிக்கு.
இன்னும் சில குழப்பமான விஷயம் வருது. ஊமைப் பெண் வரைந்த சித்திரங்கள் சிலதை அருள்மொழிவர்மர் பாக்கறாரு. அதில், ஊமைப் பெண்ணுக்கு இரண்டு குழந்தை பிறப்பதாகவும், அவர்கள், சுந்தரசோழரின் மனைவி கூட்டிக் கொண்டு வளர்ப்பதாவும் சொல்றாங்க. நந்தினியும், ஆழ்வார்கடியானும், பூசாரியின் மக்கள். சின்ன வயசில் அரண்மனையில் ராணியிடம் கொண்டு விடப்பட்டு, அங்கேயே வளர்க்கப்பட்டவர்கள்னும், முதல் பாகத்தில் வரும். ஸோ, ஊமைப் பெண்ணின், பொண்ணுதான் நந்தினிங்கர ஒரு ப்ரமை வருது. ஆனா, நந்தினி பாண்டிய மன்னனை ஆதித்த கரிகாலன் கொன்ற காரணத்துக்காக சில 'பாண்டியர்'களுடன் சேர்ந்து சதி செய்வது போலவும் சொல்லப்படுது. (கொழப்பந்தான், அடுத்த பாகம் படிக்கர வரைக்கும்)
முதல் பாகத்தில், இந்த ஊமைப் பெண்ணைத் தவிர இன்னோரு ஊமைப் பெண்ணும் வந்திருந்தார்கள். அவங்க, பூங்குழலியின் அத்தை. சேந்தன் அமுதன் என்பவன், அந்த ஊமைப் பெண்ணின் மகன், பூங்குழலி மேல் காதல் கொண்டவன். முதல் அத்யாயத்தில், வந்தியத் தேவனுக்கு பெரிதும் உதவியவன்.
(இந்த ஊமைப் பெண்ணுக்கும், அந்த ஊமைப் பெண்ணுக்கும் இன்னா கனெஷ்க்ஷன்னு அடுத்த அத்யாயங்களில் தெரியலாம், ஏதாச்சும் இருந்தா)

இதற்கிடையில், வந்தியத் தேவனை இலங்கையில் விட்டுச் சென்ற பூங்குழலி, திடீர்னு திரும்ப அருள்மொழி வர்மரை தேடிக்கிட்டு வரா. கடலில் பெரிய கப்பல்களைப் பார்த்ததாகவும், பழுவேட்டரையரின் ஆட்கள், அருள்மொழிவர்மரை கைது செய்து கூட்டிக் கொண்டு போக வந்துருக்கரதாவும் சொல்றா. இதைக் கேட்ட அருள்மொழிவர்மர், இது சுந்தரச் சோழரின் கட்டளையாயிருக்கும், தானே சென்று பழுவேட்டரையரிடம் சென்று தஞ்சை செல்வதாகச் சொல்றாரு. எல்லாருமா, பழுவேட்டரையர்களின் படகை நோக்கிப் பயணிக்கறாங்க.
போற வழியில், யாரோ, இளவரசரை போட்டுத்தாக்க முயற்சிக்கறாங்க.

தேடி வந்த கப்பலில் ஒண்ணு உடைந்து போய் கரை சேர்ந்திருந்தது. அருள்மொழியும், பூங்குழலியும் இன்னொரு கப்பலைத் தேடிச் செல்ல, லேட்டா வந்த வந்தியத் தேவன், தூரத்தில் ஒரு கப்பல் போவதைப் பாத்து, அதில்தான் அருள்மொழி போரார்னு எண்ணி, கடலில் குதித்து நீந்தி அந்தக் கப்பலுக்குப் போயிடறான்.
கப்பலுக்குள் ஏறினா, அது வில்லன்ஸ் இருக்கர கப்பல். 'பாண்டியன்' ரவிதாஸன் -aka-'மந்திரவாதியின்' ஆட்கள், அருள்மொழியை போட்டுத்தள்ள வந்தவர்கள், அது நிறைவேறாமல் திரும்பப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் அராபியர்கள் சிலரும் இருக்கிறார்கள். வந்தியத் தேவனை கட்டிப் போட்டுடறாங்க.

வந்தியத் தேவன், வில்லன் கப்பலில் ஏறிப் போனதை அறிந்த அருள்மொழிவர்மர், தன் அண்ணனின் நண்பன் பார்த்திபேந்திர பல்லவனின் கப்பலில் அதைத் தொடர்ந்து பிடித்து வந்தியத் தேவனை காப்பாத்தப் போறாரு. (பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் கெட்டுது போங்க. இவர் துரத்திச் சொல்வதும், இடையில் வரும் சூறாவளியும், மின்னல் அடித்து வந்தியத் தேவனின் கப்பல் எரிவதும், இளவரசர் வந்தியத் தேவனை காப்பாற்றிய பத்திகளும், அபாரமான வர்ணனை!). வந்தியத் தேவனை காப்பாற்றியதும், சூறாவளியால் இளவரசரின் கப்பலும் உடைந்து விடுகிறது.
ரெண்டு பேரும், ஒரு கட்டையை பிடிச்சுக்கிட்டு தத்தளிக்க, அந்த நேரம் பாத்து அங்கு படகில் வந்த பூங்குழலி ரெண்டு பேரையும் காப்பாத்திடறா.

*** தொடரும் ****

முதல் பாகத்தில் மெதுவா ஃபஸ்ட் கியரில் பயணித்த கதை, மாம்பலம் ரோட்டில் ஓடரது போல, சுத்தி சுத்தி ஓடி, குழப்பமா போய்க்கிட்டு இருந்துச்சு. பலப் பல பாத்திரங்கள், பலப் பல ஊர் பேர்கள்னு, ஒரு எக்ஸாமுக்கு படிக்கர மாதிரி இருந்தது.
இரண்டாம் பாகம், செகண்ட் கியருக்கு மாறி, பாதியிலேயே மூணாம் கியருக்கும் மாறி, விர்ர்ர்ர்ர்ர்ர்னு போயிக்கிட்டு இருக்கு.

அடுத்த பாகம் படிச்சு, கதை என்னாங்கரத சொல்றேன்.

இத யாராச்சும் ப்ரமாண்டமான திரைப்படமா எடுத்து ரிலீஸ் பண்ணா, புண்ணியமா போகும். இதை தமிழ் திரையுலகம் சார்ந்தவர்கள் செய்யவேண்டியது, அவர்களின் தலையாய கடமையாகும்!

நன்றி!

8 comments:

SurveySan said...

அட்டைப் படம் நான் எடுத்தது. வரஞ்சது யாருன்னு யாருக்காச்சும் தெரியுமா? ம.செ'வா?

pappu said...

ஆதித்த கரிகாலன் கொன்ற காரணத்துக்காக சில பல்லவர்களுடன் சேந்து சதி செய்வது போலவும் சொல்லப்படுது. (////////

அண்ணே, அது பல்லவர்கள் இல்ல, பாண்டியர்கள்.

////இந்த ஊமைப் பெண்ணுக்கும், அந்த ஊமைப் பெண்ணுக்கும் இன்னா கனெஷ்க்ஷன்னு அடுத்த அத்யாயங்களில் தெரியலாம், ஏதாச்சும் இருந்தா)////


////ந்தினியும், ஆழ்வார்கடியானும், பூசாரியின் மக்கள். சின்ன வயசில் அரண்மனையில் ராணியிடம் கொண்டு விடப்பட்டு, அங்கேயே வளர்க்கப்பட்டவர்கள்னும், முதல் பாகத்தில் வரும். ஸோ, ஊமைப் பெண்ணின், பொண்ணுதான் நந்தினிங்கர ஒரு ப்ரமை வருது.///

இதெல்லாம் சொல்ல வாய் துடிக்கல, பட் கை துடிக்குது. ஆனா உங்க சஸ்பென்ஸ கெடுக்க வேணாம்.

பின்ன, எத்தன தடவ படிக்கிறது? 5-6டைம்ஸ்.

இத சூப்பரா ஸ்கிரீன் ப்ளே எழுதி கமல வச்சு எப்பவோ மணிரத்னம் எடுக்கறதா இருந்தது. அதுக்குள்ள் சன் டிவி எடுக்குறேன்னு, கடைசியில யாருமே எடுக்கலங்கறது வருத்தம்.

நிலாக்காலம் said...

சூப்பர்.. ’யாஹூ’ க்ரூப்-க்கு அனுப்புங்க. ’பொன்னியின் செல்வன்’-ஐ அனிமேஷன் படமாகத் தயாரிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்..
http://www.youtube.com/watch?v=ohg8W_n2_kk
இதைப் பாருங்கள்.
அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. :)

SurveySan said...

pappu, yes it is pandian. thanks for correcting. i will fix it in the post later tonight :)

thanks for not revealing the suspensuu :)

SurveySan said...

Nilakalam, nanri.

yahoo groupukku erkanave anuppiyaachu. velambaram pannaama vudamaattomla :)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

கொலையாளிகள் பற்றிய புதிய சந்தேகங்கள்

இதையும் படித்துவிடுங்கள் தல..,

நாவல் இன்னும் கூட விறுவிறுப்பாக இருக்கும்

SurveySan said...

suresh, நன்றி.

சஸ்பென்ஸ் போயிடாதே உங்க லிங்கை படிச்சா?

இளைய பல்லவன் said...

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்னு நான் ஒரு பதிவிட்டிருக்கிறேன்.

http://ilayapallavan.blogspot.com/2008/12/blog-post_3172.html

பொன்னியின் செல்வனை எத்தனை முறை படித்தாலும் அதன் சுவாரசியம் குறையாது. வேறெந்த புத்தகத்திலும் இத்தகைய சுவாரசியத்தைக் காண முடியாது!