என் நண்பன் ஒருவன் இருக்கான். ஐ.டி வாழ்க்கையை முழுவதும் விட்டு விட்டு, ஃபுல் டைம் ஆன்மீக வாழ்க்கைக்கு சமீபத்தில் மாறிட்டான்.
அவன் என்கிட்ட அடிக்கடி சொல்ர விஷயம், "நீ ஏன் சாக்கடைல நெளியர புழுவா பொறக்காம, மனுஷனா பொறந்திருக்கன்னு யோசி."
இத ஏன் சொல்றான்னா, எல்லாரோட பொறப்புக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்காம். அத கண்டுபிடிச்சு, வாழ்க்கையை சரியா வாழணுமாம்.
"அப்படி ஏதாவது ஒரு காரணம் இருந்தா, அது தானா தெரிய வேண்டிய நேரத்துல தெரிஞ்சுட்டுப் போகட்டும். அதுவரை ஜாலியா இருக்கேன் வுடு. அதுக்கு ஏன் வீணா அலட்டிக்கணும்?"னு என் பதிலச் சொல்லுவேன் அவனுக்கு.
"குறிக்கோளின்றிக் கெட்டேன்"னு பட்டினத்தார்(?) சொல்லியிருக்காராம். அது எனக்குக் கொஞ்சம் பொறுந்தும். ஒரே வித்யாசம், நான் இன்னும் கெடலை. ஆனா, வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டத்துக்குப் போகணும்னா, கண்டிப்பா ஒரு இலக்கை நிர்ணயம் பண்ணி அதை அடையர லட்சியத்துடன் பயணிக்கணும். ஆத்துல போர இலை மாதிரி, ஆறு போகும் வேக அசைவுக்கேத்த மாதிரி இலக்கில்லாம, வாழ்க்கையை ஓட்டினா, இலை எங்க போய் எப்படிச் சேரும்னு கரை ஒதுங்கர வரைக்கும் தெரியாது.
ஒரு விதத்தில், இது எதிர்பார்ப்பில்லாத, பெரிய ஆசாபாசங்கள் இல்லாத தெளிவான வாழ்க்கையைத் தரும் என்ற மாயை இருந்தாலும், அறுபது, எழுபது வருடங்கள் வாழப் போகும் வாழ்க்கைக்கு கொஞ்சமாவது ஒரு பாதை வகுத்து, சில பல விஷயங்களை மனதில் கொண்டு கட்டம் கட்டி வாழணும்.
ஆத்துல போகும் இலை, ஆரம்பத்தில் ஆற்றின் வேகத்தில் சர்ர்ர்னு வேகமா போனாலும், நேரமாக நேரமாக, வாடிப் போய் தண்ணீரில் மக்கி மூழ்கிப் போகலாம். இல்லன்னா, ஆற்றின் வேகம் மட்டுப் படும்போது, இலக்கை அடையாமல், ஓரத்தில் முடங்கியும் போகலாம்.
திட்டம் வகுக்காமல் செல்வதன் ப்ரதிபலன் இது.
என்ன எடுத்துக்கிட்டா, எல்லாத்தையும் பண்ண ஆசையிருக்கு. ஆனா, எல்லாத்துலையும் அரை குரை. உயர் படிப்பு படிக்கணும்; வேலைக்கு தேவையான படிப்பு படிக்கணும்; பாட்டு கத்துக்கணும்; கிட்டார் கத்துக்கணும்; படம் புடிக்க கத்துக்கணும்; ஷமூக ஷேவா செய்யணும்; இத்தப் பண்ணணும்; அத்தப் பண்ணணும்னு ஆயிரம் ஆரம்பித்தாலும்; எல்லாமே தொங்கிக்கிட்டு நிக்குது.
இதுக்குக் காரணம் வெறும் சோம்பேரித்தனம் மட்டுமில்லை. வாழ்க்கையின் மேல் இருக்கும் ஒரு எகத்தாளமான கண்ணோட்டம்.
வாழ்க்கையை காட்டுத்தனமா, இலக்கில்லாது அமைக்காமல், நெறிப் படுத்தி, சின்ன சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட் செஞ்சுக்கிட்டா, தி-எண்ட் போடும்போது, சுபிட்சமா போக ஏதுவா இருக்கும்.
அது என்னா அட்ஜெஸ்ட்மெண்ட்டு?
என் அனுபவத்திலிருந்தே பல விஷயங்கள் புலப்படுது. ஆனா, இதையெல்லாம் நானும் கடைபிடிப்பதில்லை. சுத்தி நடக்கர விஷயங்களைப் பாக்கும்போது, அடாடா இப்படி இருந்தா, அப்படி ஆகுமேன்னு தோணும் விஷயங்கள் இவை.
அப்படிப்பட்ட விஷயங்களை அள்ளித் தெளிக்கறேன். புடிச்சவங்க புடிச்சுக்கோங்க. நல்லது நடந்தா சரி. ( ஒன்னியும் நடக்கலன்னா, கம்பேனியார் பொறுப்பு கிடையாது )
நான் ஏற்கனவே அளந்து வுட்ட மாதிரி, உங்களை சுத்தி உள்ள 'புலம்பல்களை' கண்டிப்பா குறைக்கணும். அதுவே வெற்றிக்கு பெரிய அடித்தளம் அமைக்கும். அதை அப்பரம் விலாவாரியா அலசலாம்.
வாழ்க்கையை வெற்றிகரமா அமைக்க ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு அம்சம் வாழ்க்கையை
முதலில் அனுபவிக்கக் கத்துக்கணும்.
நம்மில் எத்தன பேரு, திங்கள் கிழமை காத்தால எழுந்துக்கும்போது, "ஆஹா ஜாலி, திங்கள் வந்தாச்சு. வேலைக்குப் போய் வேலையப் பாக்கலாம்"னு குதூகலமா எழுந்து ஓடறோம்?
கண்டிப்பா நான் ஓடலை. எழுந்துக்கக் கூட பிடிக்காம, "ஐயே. ஆஃபீஸிக்குப் போய் ஆணி புடுங்கணுமே"ன்னு ஒரு அலுப்புல தான் ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்குது.
இது நமக்கு பிடிக்காத வேலை, அதனால போரடிக்குதுங்கரதெல்லாம் இதுக்கு மொக்கையான காரணம்.
இது புடிக்கலன்னா, வேர என்ன புடிக்கும்னு கூட நம்மில் பலருக்கு தெரியாது.
அப்படி இருக்கும்போது, இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை 'பிடிச்சு' செய்யப் பழகிக்கிட்டாலே, பாதி கடலை தாண்டிய மாதிரிதான்.
அது எப்படி 'பிடிச்சுக்க' வெக்கரது? கொஞ்சம் ஐடியாஸ் இருக்கு. அத இப்பவே சொல்லிட்டா, கன்னாபின்னா சிந்தனைகள், பார்ட் டூ, எப்படி எழுதரது? :)
இத படிக்கர, பழம் தின்னு கொட்டை போட்டவங்க, ஐடியாஸை அள்ளி வீசிட்டுப் போங்க.
ஆனா, அதுக்கும் முன்னாடி, நம்மில் எவ்வளவு பேர் எந்த மாதிரி ஆளுங்கண்ணு தெரிஞ்சுக்கலாம்.
யோசிச்சு, கீழ வாக்குங்க! (பொட்டி தெரியாதவங்க இங்க அமுக்கி வாக்குங்க)
-சர்வேசானந்தா!
(வாழ்க்கை வாழ்வதர்க்கே!)
26 comments:
மீ த பர்ஸ்ட்? ! :)
ரைட்டு ரகளையான கலக்கலான பதிவு :)
நான் எக்ஸ்ட்ராக்ட் பண்ணி எடுத்த அஞ்சு விசயங்கள் !
1.வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டத்துக்குப் போகணும்னா, கண்டிப்பா ஒரு இலக்கை நிர்ணயம் பண்ணி அதை அடையர லட்சியத்துடன் பயணிக்கணும்.
2.அறுபது, எழுபது வருடங்கள் வாழப் போகும் வாழ்க்கைக்கு கொஞ்சமாவது ஒரு பாதை வகுத்து, சில பல விஷயங்களை மனதில் கொண்டு கட்டம் கட்டி வாழணும்.
3.சின்ன சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட் செஞ்சுக்கிட்டா, தி-எண்ட் போடும்போது, சுபிட்சமா போக ஏதுவா இருக்கும்.
4.உங்களை சுத்தி உள்ள 'புலம்பல்களை' கண்டிப்பா குறைக்கணும். அதுவே வெற்றிக்கு பெரிய அடித்தளம் அமைக்கும்.
5.பல வருடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை 'பிடிச்சு' செய்யப் பழகிக்கிட்டாலே, பாதி கடலை தாண்டிய மாதிரிதான்.
முடிஞ்சவரைக்கும் இதை பேஸ் பண்ணி மேற்கொண்டு - ஃபைன் ட்யூன் - டிரைப்பண்றேன்!
நன்றி சர்வேசன் பாஸ் :)
நன்றீஸ் ஆயில்யன்.
அடேங்கப்பா, அஞ்சு விஷயம் இருக்கா பதிவுல :)
இப்படித்தான், 'ஆனந்தா'ஸை வளத்து விடறாங்க போல ;)
வாழ்க வளமுடன்!
-சர்வேசானந்தா!
'முழுசா அனுபவிக்கறேன்'ன்னு வாக்கு போட்டு, வயத்துல எரிச்சலை கெளப்பர புண்ணியவான்கள், சூட்சுமத்தை அள்ளித் தெளிச்சுட்டு போங்க ப்ளீஸ் :)
//SurveySan said...
நன்றீஸ் ஆயில்யன்.
அடேங்கப்பா, அஞ்சு விஷயம் இருக்கா பதிவுல :)
இப்படித்தான், 'ஆனந்தா'ஸை வளத்து விடறாங்க போல ;)
வாழ்க வளமுடன்!
-சர்வேசானந்தா!//
இன்னும் கூட ரெண்டு மூணு பாயிண்ட் இருக்கு பட் அதை ஏத்துக்கல :)) பின்னே நாங்க கண்மூடிக்கிட்டு ஆனந்தாஸ் பின்னே போகலைன்னு சொல்லணும்ல! :))))
btw, "முழுசா அனுபவிக்கறேன்' ஆப்ஷன், 'சந்தோஷமா அனுபவிக்கறேன்'னு அர்த்தம்.
'பாவத்தை அனுபவிக்கறேன்'னு அர்த்தமில்லை.
அதனால, நிதானமா, யோசிச்சு வாக்குங்க.
அதுக்கு நிறைய வாக்குகள் விழுந்தா, அப்பரம் அளுதுடுவேன். பார்ட் டூ யாருக்கு எழுதரது அப்பரம்? ;(
//அதுக்கு நிறைய வாக்குகள் விழுந்தா, அப்பரம் அளுதுடுவேன். பார்ட் டூ யாருக்கு எழுதரது அப்பரம்? ;(//
வோட்டு ரிசல்ட் பார்த்தா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு ஆகுது !
:))
பார்ட் டூவுக்கு வேலையில்லாம செஞ்சுருவாங்களே மக்கள்ஸ் :))
//ஆமாம்! முழுசா அனுபவிக்கறேன்.//
ஒரு வேளை அதி தீவிர பிளாக்கர்ஸ்,ஃபேஸ்புக்கர்ஸ் & ஆர்கெட்ட் ஆளுங்களா இருக்குமோ....???? :)))
///ஒரு வேளை அதி தீவிர பிளாக்கர்ஸ்,ஃபேஸ்புக்கர்ஸ் & ஆர்கெட்ட் ஆளுங்களா இருக்குமோ....???? :)))
///
இல்ல இல்ல. இது என்னை பார்ட் டூ எழுத விடாம தடுக்க, அயல் நாட்டவர் செய்யும் சதி :)
இருந்தாலும், எழுதாம இருக்க மாட்டோம்ல.
குருவே எப்ப அடுத்த கூட்டம்...
உங்களை சுத்தி உள்ள 'புலம்பல்களை' கண்டிப்பா குறைக்கணும். அதுவே வெற்றிக்கு பெரிய அடித்தளம் அமைக்கும்\\
அருமைங்கோ!
வாழ்க்கையை வெற்றிகரமா அமைக்க//
இப்படின்னா என்ன? இதுலயே பல பேர் பல வித பதில் சொல்வாங்க.
ஒரு இலக்கை நிர்ணயம் பண்ணி அதை அடையர லட்சியத்துடன் பயணிக்கணும்//
ஆனா ஆசைப்படாதேன்றாங்களே?
* * *
என்னைப் பொறுத்தவரையில் இது பெரிய பெரிய்ய்ய்யய தலைப்பு. எடுத்து அடிச்சு ஆடுங்க...
* * *
இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை 'பிடிச்சு' செய்யப் பழகிக்கிட்டாலே,//
எப்படின்னு அத்தச்சொல்லுங்க மொதல்ல....இது தான் வாழ்க்கையின் ரகசியமே...
அப்புறம் இந்த ஃபோட்டோவைப்பற்றி சொல்ல மறந்துட்டேன்...
பெரிய பெரிய தலைகளின் சப்ஜெக்டா இருந்திருக்கு...
இந்தப்படமும் அருமை.
அருமை
ஒருமுறைதான் வாழ்ந்து பார்போமே
என்பது என் கருத்து
நன்றி
///தமிழன்-கறுப்பி... said...
குருவே எப்ப அடுத்த கூட்டம்..///
:) அடுத்த கூட்டத்துக்கு அவசியம் இல்ல போலருக்கே. மெஜாரிட்டி, ரொம்பவே வாழ்க்கையை அனுபவிக்கறாங்க. அவங்ககிட்டதான் நான் கத்துக்கணும்.
ஜமால், டாங்க்ஸ்!
ஆ!
//எப்படின்னு அத்தச்சொல்லுங்க மொதல்ல....இது தான் வாழ்க்கையின் ரகசியமே..//
அத்த தெரிஞ்சா சொல்லிருப்போம்ல. ஆர அமர யோசிச்சு எழுதறேன் ;)
என் பக்கம்,
///ஒருமுறைதான் வாழ்ந்து பார்போமே
என்பது என் கருத்து
///
நல்ல கருத்து :)
உங்கள 32 தொடர் விளையாட்டுக்கு அழச்சிருக்கேன்.முடிஞ்ச போது எழுதவும்.
நல்ல ஆரம்பம். பார்ட் டூவுக்கு வெயிட்டிங். நான் ஓட்டுப் போட்ட மூணாவதுதான் ரிசல்டிலே முந்திக் கொண்டு நிற்கிறது. பரவாயில்லை நம்ம மக்களில் பலரும் வாழ்க்கையை முழுசாகத்தான் அனுபவிக்கிறாங்க:)!
நான் இதுக்கு முன்னயே பதிவுலகத்தில் இருந்தாலும் சிலகாலத்துக்கு, முன்பு என்னுடைய ப்ளாக் கூகுலால் விழுங்கப் பட்டதால் எனது பதிவுகள் புதிய முகவரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லா நண்பர்களுக்கும், அவர்கள் கூடும் இடங்களிலும் சொல்ல்னும்ல. அதான்
http://pappu-prabhu.blogspot.com/
இதுதான் என் ப்ளாக்கோட முகவரி.
திரு சர்வேசன் அவர்களே முதலில் நீங்கள் கடவுளை நும்புறீங்க இல்ல ? அப்புறம் எல்லாத்துக்கும் ஆதாரம் கடவுள் தான்னு நம்பனும் , நீங்க விரும்பியே ஐடி engineer எ இருக்கீங்க, வேலை போகாதுன்னு என்ன நிச்சயம் This is uncertainty, அனுபவிச்சி வேலை செய்ஞ்சாலும் நிச்சயமட்ட தன்மையை ஜெயுக்க முடியாது பக்தி தொண்டு செய்யணும் கடவுள்கிட்டே நமக்கு வேலை போக கூடாது , பணம் வேணும்னு சுயனலதொட வேண்டுரவங்கதான் நாம பார்த்திருக்கோம் அதனாலே இன்னைக்கு ஆத்திகம் fashion ஆயிருச்சு , உண்மையான பக்தி எதுன்னு பகவத் கீதை படிச்சா தான் புரியும் , கோயில் திருவிழா என்கிற பேர்லே நம்ம ஆளுங்க நடத்திற உயிர்பலி, மூட நம்பிக்கைகள், ஆபாச நடனம், கச்சேரி கூத்து தான் ஆத்திகவாதிகளுக்கு நாம போடுற எரிவாயு - Bottom line: focus your 5 senses towards GOD for at least 1 hr a day
நல்ல விசயம்தான்..யோசிக்கவே நினைக்க மாட்டாத மனிதர்களாய் இல்லாமல், சிந்தனையை தூவியது நல்லது. கொஞ்சம் என் பக்கமும் வந்துபாருங்க
ManakKudhirai,
read your blog nicely written.
http://alonealike.blogspot.com/2009/06/blog-post.html
nagu,
////திரு சர்வேசன் அவர்களே முதலில் நீங்கள் கடவுளை நும்புறீங்க இல்ல ? அப்புறம் எல்லாத்துக்கும் ஆதாரம் கடவுள் தான்னு நம்பனும்/////
thats where the problem starts. My belief system is fading day-by-day :)
school padikkumbodhu, 75:25 irundhudhu.
college la, 50:50 aachu.
padhivulagukku vandhadhum, 5:95 aayiducchu ;)
Ramalakshmi,
///நான் ஓட்டுப் போட்ட மூணாவதுதான் ரிசல்டிலே முந்திக் கொண்டு நிற்கிறது//
adhappaaththaa poraamayaa irukku. imbuttu peru sandhoshamaa irukkaangalaa? ;)
Post a Comment