recent posts...

Thursday, July 09, 2009

ராதா கேட்ட கேள்வி...

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
எல்லாம் நானா வச்சுக்கிட்டதுதான். எதையாவது எழுதலாம்னு இங்க வந்த புதுசுல, எல்லாரும் பிரிச்சு மேயரத பாத்தேன். எனக்கும் டமிலும் அவ்ளவா வராது. சரி, எழுதரதுக்கு பதிலா, மக்கள்ஸ் கிட்ட 'சர்வே' மட்டும் எடுத்து கல்லா கட்டுவோம்னு ஆரம்பிச்ச அவதாரம் இது.

2) கடைசியா அழுதது எப்போது?

போன வாரம் இத்த எழுதியிருந்தா, 'ஞாபகம் இல்லை'ன்னு பதிலிருப்பேன் :)

தாணைத் தலைவன் மைக்கேல் ஜாக்சன் மறைவுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த மெம்மோரியல் நிகழ்ச்சியில், அவரின் மகள் அழுததும், நானும் கொஞ்சம் பேஜாராயிட்டேன். ஒரு நல்ல கலைஞனை தேவையில்லாம வாட்டி எடுத்துட்டானுங்கன்னு தோணிச்சு. அவரு ரொம்ப வெகுளியா பதிலளிச்சதை, கயிறு திரிச்சு, அவரை வில்லனாக ப்ரதிபலிச்ச மீடியா, போன வாரம் முழுக்க, அவர் பேரை சொல்லி சில்லரை தேத்தியது பெரிய முரண்.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ஹ்ம். அவ்ளோ டீப்பா திங்க் பண்ணனுது இல்லை. ஆனா, இப்பெல்லாம், பேனாவே பிடிக்க வரது இல்லை. நேரா எழுத வராது. அன்றிலிருந்து இன்றுவரை, என் கோழிக் கிறுக்கலை அடித்துக் கொள்ள சுத்து வட்ட பதினெட்டுப் பட்டியில் ஆளே இல்லை.
ஸோ, ஷார்ட்டா சொல்லணும்னா, என் கையெழுத்து உவ்வே. பிடிக்காது.

4) பிடித்த மதிய உணவு?

சனி ஞாயிறுகளில், சிக்கனைப் போட்டு ஏதாவது ஒரு குழம்பு, மீன் வறுவல்.
சாதா நாட்களில், சாம்பார் + தயிர் சாதம் ஊறுகாய்.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

Absolutely. நான் உள்ளே மிருகம், வெளியே கடவுள். ஸோ, வெளீல இருக்கரவங்களுக்கு ஒரு ப்ரச்சனையும் இருக்காது. :)

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

அருவி. கடல் நல்லாத்தான் இருக்கும். ஆனா, கடப்பாறை நீச்சல் தான் தெரியும்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேன். சமீபத்தில் எல்லாரின் மூக்கு மேலும் கவனம் செல்கிறது. ஏன்னு தெரியல. ஏதாவது மனோரீதியான வியாதியான்னு விசாரிக்கணும் :)

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
புடிச்சது - இயன்றவரை பங்க்சுவல் பரமசிவமாய் இருத்தல்.
புடிக்காதது - மூக்குப் பிடிக்க சாப்பிடரது. 'லைட்டா' சாப்பிடும் பழக்கம் வரவே மாட்ரது.

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
புடிச்சது - Low maintenance :)
புடிக்காதது - பதிவெழுதும்போது நொய் நொய் என்று, கருத்துக் குதிரையை பறக்க விடாமல் தடுப்பது. :)

10)இப்போ யார் பக்கத்துல இல்லாமல் போனதுக்கு வருந்துகிறீர்கள்?

சட்டுனு யாரும் ஞாபகத்துக்கு வரலை. ஆனா, நண்பர்கள் பலர், ஆளுக்கு ஒரு மூலையில் இருப்பது, வாரா வாரம் வரும் அலுப்பு.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
கலிஃபோர்னியா வாழ் தேசிகள் பலரும் விரும்பி அணியும், 'ஐ லவ் மை பி.சி' போட்ட, வெள்ளை டி.ஷர்ட்.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
சதா சர்வ காலமும் எங்கள் வீட்டில், டிவி ஓடிக்கொண்டே இருக்கும். இப்ப, "So you think you can dance"னு ஒரு ரியாலிட்டி டான்ஸ் ப்ரோக்ராம் ஓடிக்கிட்டு இருக்கு. என்னாமா ஆடறாங்க? யப்பா!

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
எனக்கு ink பேனா பிடிக்கவே பிடிக்காது. அதை பிடிக்கவும் தெரியாது. நெனவு தெரிஞ்ச நாள்ளேருந்து, அதை அடுத்தவங்க சட்டையிலும், துப்பட்டாவிலும், ink அடிக்கத்தா உபயோகிச்சிருக்கேன்.
என் ஃபேவரைட், Reynolds pen. மாறணும்னா, வெள்ளை/ப்ளூ Reynolds தான்.

14) பிடித்த மணம்?
பிரியாணி வாசம்;

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
யார மாட்டி விடலாம்னு தேடிக்கிட்டு இருந்தேன். கன்ணுல மாட்டுனது An& அண்ணாச்சி. சமீப காலத்தில், வெறும் படமும் பாடமும் மட்டுமே எடுக்கரவரை எழுத வச்சு வேடிக்கை பாக்கலாம்னு ஒரு அவா!

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
ராதா நிறைய எழுத மாட்டாங்க. எதையாவது எழுதினாலும், அதை தவறாமல் படிப்பேன். என்னைவிட பதிவுலகில், அதிக எழுத்திப்பிழையோடு எழுதும் ஒரு பதிவர். மரம் செடி கொடி கிட்டையெல்லாம் பேசுவேன் ஒரு காலத்துல வியர்டினாங்க. interesting :)

17) பிடித்த விளையாட்டு?
ஓரளவுக்கு, வாலி பால்.
வேடிக்கை பார்க்க - டென்னிஸ்.

18) கண்ணாடி அணிபவரா?
சென்ற வருடம் டெஸ்ட் செய்து, ஒரு கண்ணாடி வாங்கிக்கிட்டேன். ஆனா, அணிவிதில்லை. கிளாமர் கம்மி ஆயிடுது ;)

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

சகலமும்.

20) கடைசியாகப் பார்த்த படம்?

Transformers2

21) பிடித்த பருவ காலம் எது?

இலையுதிர் காலம்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

பொன்னியின் செல்வன். மாஞ்சு மாஞ்சு படிக்கறேன்.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

தினசரி.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது - ஜன்னலோர மரத்தில் இருக்கும் குருவிகளின் சத்தம்.
பிடிக்காதது - தொலைபேசி அலரும் சத்தம்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
கடல் கடந்து சில பல வருடங்களுக்கு முன் அமெரிக்கா வந்தது.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

நானும் அதை சில காலமா தேடிக்கிட்டே இருக்கேன். ஒண்ணும் தேறலை இதுவரைக்கும்.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

Imbalance in society. சில பேர் தேவைக்கு அதிகமா, உணவும், உடையும் வச்சிருக்கும்போது, பல பேர், ஒரு சோற்றுப் பருக்கைக்குக் கூட வழியில்லாமல் இருத்தல்.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

என் சோம்பேரித்தனம்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

சமீபத்தில் பார்த்த ரோம் நகரம்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே.

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

ஒரு காரியமும் செய்யாமல், சாப்டமா தூங்கினோமான்னு நிம்மதியா பொழுதை கழித்தல் ( தங்கமணி says ஹோய்ய்ய்! :) )

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

why? why? why? தேடுதல் தொடர்கிறது...

9 comments:

Anand V said...
This comment has been removed by the author.
Anand V said...

ர்வே
என்ன கொலைவெறி ..

ஏன்யா என்னை மாட்டிவிடறீரு.
கரீட்டா நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் க்கு பதில் சொல்லல..
சரி எழுதறேன் , கொஞ்சம் கேள்விகளை குறைச்சு கேட்கக் கூடாதா

Radha Sriram said...

ஏன் இப்படி டைட்டில்ல என் பேர போட்டு பதற அடிக்கரீங்க?? ஒரு நிமிஷம் ஆடிபோயிட்டேன்.

//என்னைவிட பதிவுலகில், அதிக எழுத்திப்பிழையோடு எழுதும் ஒரு பதிவர். //
:):)

பரவால்ல மறந்து போயிட்டீங்களோன்னு நினைச்சேன்..

பொறுமையா பதிலளிச்சிட்டிங்க.நன்றி:):)

கோபிநாத் said...

குட் குட் ;))

ராமலக்ஷ்மி said...

வழக்கம் போலவே கல(கல)க்கல்:)!

//நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் க்கு பதில் சொல்லல..//

அதானே:))!

Prabhu said...

:)

SurveySan said...

////கரீட்டா நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் க்கு பதில் சொல்லல/////

undoubtedly, your excellent photography skills + your patience to write the PostProduction techniques with miniscule details. :)

பிரேம்ஜி said...

Vanakkan surveysan,

naanum ungal vaasagan. Ungalodu tholaipesa virumbugiren. Thangal thodarbu ennai koduthaal mikka magilchiyadaiven. Thangal minmadal mugavariyai premkug@gmail.com kku anupi vaithalum magilchi. (tamingilathil eluthiyatharku mannikavum)

Anonymous said...

அண்ணா வணக்கங்கண்ணா. கும்புட்டுக்றேன், போதுன்னா இது ஒன்னே?


ஜோதிஜி,


@ Imbalance in society. சில பேர் தேவைக்கு அதிகமா, உணவும், உடையும் வச்சிருக்கும்போது, பல பேர், ஒரு சோற்றுப் பருக்கைக்குக் கூட வழியில்லாமல் இருத்தல். @

http://texlords.wordpress.com