recent posts...

Wednesday, July 29, 2009

Meet your meat - திட மனசுக்காரர்களுக்கு மட்டும்

சில விஷயங்களை ரொம்ப யோசிக்கறதே இல்லை. கேள்வி கேக்காம ஃபாலோ பண்ணிடறோம். நம் வளர்ப்பால் நேச்சுரலா அமையர விஷயங்கள் இவை.

சின்ன வயசுல ஊருக்கு பாட்டி வீட்டுக்கு போனா, "டேய் அத்த புடிச்சுக்கிட்டு வா"ன்னுவாங்க, நானும் என் கஸினும், கலர் கலரா இருக்கும் சேவல் பின்னாடி ஓடிப் போய், பக் பக் பக்னு கத்திக்கிட்டே அத்த கபால்னு அமுக்கிக்கிட்டு வருவோம்.
பாட்டி சரக்னு சேவலின் கழுத்தை அறுத்து ஒரு அண்டாவுல போட்டா, அது துடியா துடிக்கும் கொஞ்ச நேரம். அதுக்கப்பரம் அதன் இறகுகளை பிச்சு எடுக்க சொல்வாங்க.
நாங்களும் நல்ல பசங்களா சொன்னதைச் செய்வோம், சில மணி நேரங்களுக்குப் பிறகு கிட்டப் போகும் பிரியாணியை எண்ணிக் கொண்டே.

"என்னடா கொடுமை இது? நம்மளா இப்படி இருக்கோம்? கொடூரமா இருக்கே இந்த ப்ராக்டிஸ்"னு அடிக்கடி தோணத்தான் செய்யுது. ஆனா, பழகிப் போன சமாச்சாரம் ஆயிட்டதால, பாதிப்பு கம்மியா இருக்கு. பிரியாணி சாப்பிடுவதும் குறைந்த பாடில்லை.

மீனாவது பரவால்லாம இருந்தது, ஒரு காலத்துல மார்க்கெட்டுக்குப் போனா, கூரு கட்டி வச்சிருப்பான். அத்த எப்படி பிடிச்சான் எப்படி சாகடிச்சான், அது எப்படி மூச்சு திணறி செத்துது என்ற கவலையெல்லாம் இல்லாமல், காசு கொடுத்தமா வாங்கிக்கிட்டு வந்தமான்னு இருந்தோம். ஆனா, அதுவும், இப்ப, ஃப்ரெஷ்ஷா கொடுக்கறேன் பேர்வழின்னு, கண்ணாடித் தொட்டியில் உயிருடன் வெச்சு, எந்த மீன காட்றாங்களோ, அத்த ஒரு வலை போட்டு தொட்டியிலிருந்து எடுத்து, அதன் தலையில் சுத்தியால் நங்குனு அடிச்சு கொண்ணு கொடுக்கறான்.

மாமிசம் உண்பவர்கள் அதிகமாகிக் கொண்டே வருவதால், நம் தேவையை பூர்த்தி செய்ய, மாமிசம் உற்பத்தி செய்பவர்கள் ரூம் போட்டு யோசிச்சு என்னென்னமோ கண்டு பிடிக்கறாங்க.

இப்பெல்லாம், ஒரு ப்ராய்லர் கோழி, முட்டையிலிருந்து, ஃபுல் வளர்ச்சி அடைய, 30 நாட்களே தேவைப் படுகிறதாம். முப்பது நாள்ள எப்படிடா அபார வளர்ச்சி அடையுதுன்னு பாத்தா, ரொம்ப சிம்பிள். குட்டி கூடாரங்களில், நகரவே முடியாத நெருக்கத்தில், கோழிகளுக்கு தீனி 24 மணி நேரமும் கொடுத்துக்கிட்டே இருப்பாங்களாம். சாப்பாட்டுலையும் கண்ட கண்றாவியையும் போட்டு வைப்பாங்களாம்.
முப்பத்தி ஓராவது நாள், கேக்கவே வேணாம், நரக வேதனைதான். தலை கீழாக கட்டி தொங்கவிட்டு ஒரு கன்வேயரில் எல்லா கோழிகளும் கொண்டு செல்லப்பட்டு, மோட்டார் கத்தியால் தலை வெட்டப்படுகிறது. உயிர் பிரியும் முன்னே, தலை வெட்டப்பட்ட உடல், சுடு தண்ணியில் முக்கப்பட்டு துகிலுரிக்கப்படும். மோட்டார் கத்தியில் தலை வெட்டப்படாமல் தப்பிப் பிழைக்கும் கோழியை, கையில் கட்டிங் ப்ளேயருடன் காத்திருக்கும் தொழிலாளி, போட்டுத் தள்ளுவார்.

இது இப்படின்னா, முட்டை போடும் கோழிகளின் நிலமை இதைவிட மோசம். இவையும், நகரவே முடியாத குட்டி கூடாரத்தில் அடைக்கப்படும். பக்கத்து கோழிகளை குத்திக் கீரக் கூடாதுன்னு, இதன் அலகை (வாய்) பாதி வெட்டி விட்டுடுவாங்களாம். இப்படி வளர்க்கப்படும் கோழிகள், வாரத்துக்கு ஒரு முட்டை போட்டா பத்தாதே, அடிக்கடி முட்டை போட, என்னென்னமோ யுக்திகள் கண்டு பிடிச்சு வச்சிருக்கானுங்க. சில சமயங்களில், முட்டை உற்பத்தி குறைந்து போனால், கோழிக்கு தொடர்ந்து 14 நாட்கள் சோறு தண்ணி கொடுக்க மாட்டாங்களாம். அப்ப, ஏதோ ஒரு ரியாக்ஷன்ல,கோழி கன்னா பின்னான்னு முட்டை போட ஆரம்பிச்சுடுமாம். இந்தக் கோழிகள் அனைத்தும், முட்டை போட்டு போட்டு உடம்பின் மொத்த கால்ஷியமும் அற்றிப் போய், எலும்பெல்லாம் முறிந்து, ரண வேதனைப்படுமாம்.

கோழிக்கே இந்த நெலமன்னா, ஆடு, மாடு, பண்ணியெல்லாம் என்னா பாடு படும்னு நெனச்சு பாருங்க. அத யோசிச்சாலே, கபாலம் கலங்கிடுது.
தலைகீழாக தொங்க விட்டு, தொண்டையை குத்தி கீறிக் கொல்றாங்க, இவைகளை. துடி துடிச்சுப் போயிடுது.
கடைசி நாள் தான் இப்படின்னா, வாழும் சில காலமும் மகா கொடூரமான முறையில் வளக்கராங்க. அடிக்கடி டெஸ்ட் எல்லாம் பண்ண, கூட்டிக்கிட்டுப் போகும் போது, அடி பின்னி எடுக்கறாங்க. கண்ணைக் குத்தறாங்க, அத்த அறுக்கறாங்க, இத்த வெட்டறாங்க. ஸ்ஸ்ஸ்ஸ்.

அட, நான், மாமிசம் தின்னாத வெஜிடேரியனாக்கும்னு காலரை தூக்கி விட்டுக்கறவங்க, நிற்க.
முட்டை போடக் கொடுமைப் படுத்தப்படும் கோழியைப் போலவே, பாலுக்கு வளர்க்கப்படும் மாடுகளின் வேதனை சொல்லி மாளாது. உரிஞ்சு உரிஞ்சு ஒரு வழி பண்ணிடறாங்க. பால் உற்பத்தி பண்ண கண்ட மருந்தையும் கொடுத்து தூண்டுவதால், இந்த மாடுகளின், எலும்பெல்லாம் கால்ஷியம் இழந்து, பலவீனமாய், நடக்கவே முடியாமல் இருக்கு. கயிறு கட்டி இழுத்துக்கிட்டுத்தான் போறாங்க.

பால் கூட மன்னிச்சு விட்டுடலாம். இன்றியமையாத விஷயம். மாமிசம், முட்டையெல்லாம், உட்கொள்ளுவதை குறைக்க வேண்டும். டிமாண்ட் குறைந்தாலே ஒழிய, இந்த உற்பத்தி முறை மாறவே மாறாது.
இவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்த அமெரிக்காவில் உள்ள ஃபாக்டிரிகளே இப்படி இருந்தால், தண்ணி தெளிச்சு விட்ட மற்ற ஊர்களின், ஃபாக்டரிகள் எப்படி இயங்கும்னு நெனைக்கவே கதி கலங்குது.

கீழே இருக்கும் வீடியோ, 'Meet your Meat'னு GoVeg.com ஆளுங்க பரப்பும் விவரணப் படம்.

என்னை மாதிரி, சின்ன வயசுலையே, சேவலை விரட்டிப் பிடித்து, வெட்டி வீழ்த்தி, சமைத்து சாப்பிட்டு வளர்ந்த வீரப் பரம்பரையில் வந்தவங்க மட்டும் பாருங்க.

திட மனசு இல்லாதவர்கள் பாக்காதீங்க. அப்பரம், உங்களால் பால் கூட குடிக்க முடியாமல் போகலாம். அதுக்கு கம்பேனியார் பொறுப்பு ஏற்க முடியாது.

Jokes apart, இந்தப் பதிவு எதுக்குன்னா, நம்மாலான அளவில் டிமாண்டை குறைப்பதற்கு. மாமிசம் உட்கொள்ளுங்கள், ஆனா, 10% ஆவது குறைச்சுடுங்க.

டிமாண்ட் ஏறிக்கிட்டே போனா, சப்ளை பண்றவங்க எந்த லெவலுக்கும் போவாங்க, நம்ம தட்டுல கறித் துண்டை கொண்டு வந்து சேர்ப்பதர்க்கு.



வீடியோ பாத்தாச்சா? ஃபோட்டோ பாக்கணும்னா இங்க போய் பாருங்க: http://www.goveg.com/photos.asp

Go Vegan!, atleast 10% :(

இதைப் படிச்சதால் உங்களுக்கு தத்துனூண்டாவது மனமாற்றம் வந்ததான்னு சொல்லிட்டுப் போங்க. எம்புட்டு % பயக்க வயக்கத்த கொறைக்கப் போறீங்கன்னும் சொல்லிட்டுப் போங்க.

நெஞ்சத் தொட்டுச் சொன்னா, நானு 3% கொறைப்பேன்னு சொல்லலாம் :)

8 comments:

SurveySan said...

இன்ன பிறச் செய்திகள்:

cornish henன்னு அமெரிக்கால கெடைக்குது. henன்னா கோழி, கோழின்னா நாட்டுக் கோழின்னு எவனோ எங்கையோ பொரளியக் கெளப்பி விட்டிருக்கான். அத்த நம்பி நானும், பல காலமா இத்த வாங்கி பிரியாணி போட்டிருக்கேன்.

ஆனா, கொடுமை இப்பத்தான் தெரிஞ்சுது. ப்ராய்லர் கோழியை,30 நாளுக்கு மேல் முழுசா வளக்க விட்டா, ப்ராய்லர்.
இளைமையிலேயே, 20~30 நாள்ள போட்டுத்தாக்கிட்டா, அதான் cornish henன்னாம்.

உவ்வே. இனி, அத்த வாங்க மாட்டேன்! :(

கோவி.கண்ணன் said...

சர்வேசன் அண்ணே,

ரொம்ப கொடுமையாக இருக்கு.

கொன்னால் பாவம் தின்னால் போச்சுங்கிறாங்க. கொள்றதைப் பாக்குறதே பாவமாக இருக்கு.

SurveySan said...

கோவியாரே,

//கொன்னால் பாவம் தின்னால் போச்சுங்கிறாங்க.//

யார் சொன்னாங்கன்னு தான் தெரீல. கொல்றவங்களா, தின்றவங்களா?

நம்ம வூட்ல எப்படி? கடா வெட்டி கொழம்பா இல்ல பச்சைக் கறிதானா? :)

கோவி.கண்ணன் said...

//SurveySan said...
கோவியாரே,

//கொன்னால் பாவம் தின்னால் போச்சுங்கிறாங்க.//

யார் சொன்னாங்கன்னு தான் தெரீல. கொல்றவங்களா, தின்றவங்களா?

நம்ம வூட்ல எப்படி? கடா வெட்டி கொழம்பா இல்ல பச்சைக் கறிதானா? :)
//

ஹலோ நான் வெஜ்ஜிடேரியன், நானை எடுத்துட்டு படிங்க.

ஆ! இதழ்கள் said...

ஏற்கனவே பெரும் தடுமாற்றத்துல இருக்கேன்.. இது வேறயா? நான் வீடியோவை பார்க்கலை, அதே போல சாப்பிடுறதை நிறுத்தவும் முடியல. இப்போ என் நிலைமை... குழம்பு மட்டும் ஊத்தி சாப்பிடுறேன் கறி மிக மிக மிக மிக குறைவு (0% க்கு மிக அருகில்....) ஆனா பரோட்டாவும் குழம்பும் மதுரைப் பக்கம் கிடைக்கும் அத நினைச்சா சாப்பிடாம இருக்க முடியல. அவ்வ்வ்

ஒரே குழப்பமா இருக்கா... அப்படித்தான் இருக்கேன்.

TBCD said...

இதெல்லாம் பன்னாட்டு கோழிப்பன்னைகளில் நடப்பவை.

இங்கேயும் கொஞ்சம் பெரியளவில் நிறுவனங்கள் இதில் வந்துள்ளன.

அவைகளின் நிலையும் இவைதானா தெரியவில்லை.

நான் கறிவாங்கும் கடையில் கோழி உயிரோடத் தான் இருக்கும். ஒரு சில கோழிகளை மட்டும் மயிர் நீக்கி தொங்கவிட்டு இருப்பாங்க.

எல்லா பரிதாபமும், கோழிக் காலைக் கண்டால் காணமல் போகும் மாயம், மர்மம் தான் தெரியவில்லை. :P

SurveySan said...

ஆ!
//ஒரே குழப்பமா இருக்கா... அப்படித்தான் இருக்கேன்.//

:) குழம்ப்பம் தேவையில்லை. வாரத்துக்கு ஒரு கோழிக்காலை தியாகாம் செய்யுங்கள். சரியாயிடும். :)

SurveySan said...

TBCD,

////எல்லா பரிதாபமும், கோழிக் காலைக் கண்டால் காணமல் போகும் மாயம், மர்மம் தான் தெரியவில்லை. :P////

same blood :)