recent posts...

Friday, March 30, 2007

கொஞ்சம் வில்லங்கமான % சர்வே %

ரொம்ப அறுக்காம நேரா மேட்டருக்கு வரேன்.

உயர் கல்வி மையங்களில் 27% இட ஒதுக்கீட்டை எதிர்த்து, உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடை வழங்கியிருப்பது அனைவருக்கும் தெரியும்.
வழக்கம் போல் தீர்ப்பை எதிர்த்து, அரசு இயந்திரங்களும் சக கட்சிகளும், பந்த்ல குதிச்சாச்சு.

குழலி தொடங்கி, சிவபாலன், நாகை சிவா, BNI, ப்ரின்ஸ், அவங்கவங்களுக்கு தெரிஞ்சத அழகா சொல்லியிருக்காங்க. There are also numerous other old posts about this topic - but no one seem to clearly depict, how any approach will solve the problem which has not been solved in the past decades. well, we are not the experts anyway.

இதில் என் நிலை என்னன்னா, அர‌சிய‌ல் புகுத்தாம‌ல், உண்மையில் நொடிந்த‌வ‌ர்க‌ளுக்குக் கிடைக்க‌ வேண்டிய‌தை கிடைக்க‌ச் செய்ய‌ணும்.
அதுக்கு என்ன‌ வேணுமோ, அதை அர‌சும், உச்ச‌ நீதிம‌ன்ற‌மும், ம‌க்க‌ளும், நீங்க‌ளும், நானும் செய்ய‌ணும்.

நீங்க‌ என்ன‌ சொல்றீங்க‌?
.

Thursday, March 29, 2007

Weirduக்கெல்லாம் Weirdu யாரு. அவங்களுக்கென்ன பேரு?

நம்ம Dr. LLதாஸு ரொம்ப பொறுமையா ஆராய்ச்சி பண்ணி அனைத்து வியர்டு பதிவுகளிலும் சிறந்த வியர்டு பாயின்ட வரிசை கட்டி போட்டிருக்காரு.

[ஆமா, இந்த வியர்டு மேட்டர் ஆரம்பிச்சு வச்சது யாருங்க? அத யாராவது ஆராஞ்சு சொல்லுங்களேன்? ஒரு ஓ.ஓ போடலாம்.]

சுடர் ஒரு பக்கம், மெதுவா மெழுகு வத்தி மாதிரி அழகா எரிஞ்சுக்கிட்டு கை மாறினா, இந்த வியர்டு தீப்பந்தம் மாதிரி கொழுந்து விட்டு எரியுது.
ஒருத்தர் கிட்டயிருந்து அஞ்சு பேர் கிட்ட போறதால, காட்டுத் தீ மாதிரி பற‌விடுச்சு.
ஆனா, யார் விய‌ர்டின‌வ‌ங்க‌, யார் விய‌ர்டாத‌வ‌ங்க‌ன்ற‌ க‌ண‌க்கெல்லாம் தெரிய‌ல. Its spreading like an uncontrollable mob.

இன்னும் வியர்டாதவங்க யாராவது இருந்தீங்கன்னா பின்னூடுங்க, வியர்டர மக்கள்ஸுக்கு, பாத்து அழைப்பு விடுக்க ஈஸியா இருக்கும். :)

புயலுக்கு முன் அமைதி மாதிரி, இந்த வாரம் ஸ்லோ வீக் எனக்கு.
சும்மா இருக்க முடியுமோ? அதான் வந்துட்டேன்.

LLதாஸு பதிவுல கொடுத்திருக்கர வியர்டு லிஸ்ட்லேருந்து, எது வியர்டுக்கெல்லாம் சிகரம்னு நீங்க நெனைக்கறீங்களோ, அதுல ஒரு அஞ்சோ பத்தோ எடுத்து பின்னூட்டுங்க.

எல்லா வியர்டையும் பாத்து, அதுல காமனா வந்த ஒரு 10 வியர்ட எடுத்து, டாப்௧ 10 வியர்டு கண்டுபிடிச்சு.
டாப்ல‌ வ‌ர #1 விய‌ர்டிஸ்டுக்கு, "வியர்டஸ்ட் ப்ளாகர் 2007" ப‌ட்ட‌ம் கொடுத்திட‌லாம். :)

யாரும் பின்னூடலன்னா, என் இஷ்டத்துக்கு ஒரு பத்த எடுத்து போட்ருவேன்.

LLதாஸு ஏதாவது weird மிஸ் பண்ணியிருந்தா அதையும் போடலாம்.
(அனானி வியர்ட்ஸ் not allowed. only bloggers weirds allowed. but anony's can add other bloggers weirdities)

ஸ்ஸ்ஸ்ஸ். அப்பாடா. சீக்கிரம் அனுப்புங்க. ஏப்ரல் 1st சர்வே போட்டுடலாம்.
சிவாஜி படம் வரதுக்கு முன்னாடி, நம்ம "வியர்டஸ்ட் ப்ளாகர்" பட்டம் கொடுத்திடலாம்.

மினி‍‍கதைப் போட்டிக்கு வச்சிருந்த $s, இந்த பட்டவிழா நடக்கும் அன்று, உதவும் கரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நோ $s டு வியர்டர்ஸ் though. but you will get a position in my hall-of-fame links.
( உங்க வியர்டு குணம் தெரிஞ்சப்பறமும் உங்கள தமிழ்மணத்துல வச்சிருக்கரதே பெரிய விஷயம். உங்களுக்கு $ எல்லாம் வேற தரணுமா? :))))))) )

:)

-------------- ---------- ----------------
a few sample weirdities that may be considered for the survey :).
Please add to the list.
-------------- ---------- ----------------
பாத்திரம் விளக்க வச்சிருந்த சாம்பல் எடுத்து சாப்பிட்டுருக்கேன (தம்பி)
திடீர்னு "வீல்"னு ஒரு கத்துக் கத்துவேன் . (கீதா சாம்பசிவம்)
பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன். (துளசி)
செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்!!! (ராதா ஸ்ரீராம்)
என் கணினியோடு பேசுவேன். ரொம்ப படுத்தினால் அடிப்பேன். கெஞ்சியபடியே தடவிக்கொடுப்பேன (ரஷ்யா இராமநாதன்)
தனியா பேசிக்குவேன். (கார்த்திக் பிரபு)
ஷாக்' என்பது எப்படி இருக்கும் என்று அதை விரலால் தொட்டுப் பார்த்த அனுபவம் உண்டு. (எ.அ.பாலா)
ரோட்ல போற ஆளுகளைத் திட்டுறது. (தருமி)
வகுப்பில் பெரியாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருப்பேன். (மிதக்கும் வெளி)
இறந்த பின்பு மனைவியோடு பேசிக்கொண்டிருப்பேன். நான் போறேன். நீ எல்லாத்தையும் பார்த்துகோ என்று சொல்லுவேன். (முத்துக்குமரன்)
இடி , மின்னல் என்ன கலர்னு பார்த்துக்கிட்டிருப்பேன்....(செந்தழல்)
மொட்டைமாடிக்கு வந்து ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ ன்னு கத்துவேன்.. (அய்யணார்)
சாப்பிட்ட பிறகு கையை அடிக்கடி முகர்ந்து பார்ப்பேன்(சூர்யா)
-------------- ---------- ----------------

-> Voted for "Made in Pakistan - O.K?" survey?

-> Voted for "Sivaji Film Songs - Ala$al" survey ?

.

Wednesday, March 28, 2007

'மேட் இன் பாக்கிஸ்தான்' - ஓ.கே?

ரொம்ப நாளாவே மனசுக்குள்ள இருக்கும் கேள்வி இது.

சின்ன வயசுலேர்ந்தே "பாக்கிஸ்தான்" நமது எதிரிகள் வாழும் நாடு என்பதை மூளையில் பதியம் போட்டு வளத்துட்டாங்க.
இதுக்கு பெரிய காரணம் நம்ம மீடியா ஆளுங்க தான்.

இதில் பெருவாரியா உண்மை இருந்தாலும், ஒட்டு மொத்த ஊரையும் சாடுவது அவ்ளோ சரியில்லன்னு தோணுது.

இப்ப கார்கில் சண்டைக்குப் பிறகு இந்த 'எனிமிடி' ஜாஸ்தி ஆயிடுச்சு.

என் அலுவலகத்தில் சில 'பாக்கி' நண்பர்கள் உண்டு. ரொம்ப நல்ல பசங்க. நல்லா பழகுவாங்க. அப்கானிஸ்தான் நண்பர்களும் இருந்தாங்க‌. அவங்களும் நல்ல ப்ரெண்ட்லி பசங்க.

இந்த அப்கானிஸ்தான் பசங்களுக்கு இருக்கற தேசப் பற்று கொஞ்ச நஞ்சம் இல்ல. 10 வருஷத்துக்கு முன்னாடி போர் வெடித்த சமயத்தில், புலம் பெயர்ந்து அமெரிக்கா வந்தவர்கள், 'கொஞ்சம்' அமைதி திரும்பியவுடன், 'என் நாட்டுக்கு திரும்ப போறேன்னு' உடனே கிளம்பி குடும்பத்தோட திரும்பி போயிட்டாங்க.

'தேசி'க‌ளாகிய‌ நாம், ஒவ்வொரு வ‌ருஷ‌மும், அடுத்த‌ வ‌ருஷ‌ம் கெள‌ம்பிட‌லாம்னு சொல்றோமே ஒழிய‌, போற‌ மாதிரி தெரிய‌ல‌.
சில‌ருக்கு, ரோடு ச‌ரியில்ல‌, கொசுத்தொல்ல‌, வெத‌ர் ச‌ரியில்ல‌ன்னு நொண்டிச் சாக்கு வேற. 'Standard of living' கம்மின்னு அங்கலாய்பும் அதிகம்.

ச‌ரி, அத்த‌ வுடுங்க‌.

கடைக்கு துணிமணியோ வேற பொருட்களோ வாங்கப் போனா "Made in Pakistan" லேபிள் பாத்தா வாங்க மாட்டோம்.
அது எவ்ளோ அழகான நேர்த்தியான பொருளா இருந்தாலும் சரி.

அதே மாதிரி, சாப்பிடறதுக்கும் பாக்கி உணவகம் பக்கம் போக மாட்டோம்.

பாக்கிஸ்தானியர்கள் 'Made in India' பொருட்களை வாங்க இப்படித்தான் யோசிப்பாங்களோ? hmm!

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா?
இல்ல, நம்ம தேசப் பற்றக் காமிக்க தொடர்ந்து இந்த மாதிரி செய்யணுமா?
'Made in Pakistan' ஐட்டம் வாங்கினா, அவங்க பொருளாதார வளர்ச்சிக்கு நாம் காரணமாகி, அந்த லாபத்தில் வரும் பணத்தில், குண்டு செஞ்சு நம்ம மேலேயே திருப்பி போடுவாங்களா? (யப்பா, இன்னா திங்கிங் இல்ல? )

(இந்த சர்வே outcome பேஸ் பண்ணி என்னோட பழக்கத்த மாத்திக்கலாம்னு இருக்கேன்).(கமெண்ட்டும் போட்டு உங்க ஆப்ஷன சொன்னீங்கன்னா, ப்ரயோஜனமா இருக்கும்.)

-> சிவாஜி பாடல்களின் $ அலசல் பாத்தீங்களா?

-> வேலு போய் டால்பின் வந்த படம்ஸ் பாத்தாச்சா?

-> க்ரிக்கெட்டு 2007 சர்வேக்கு ஓட்டு போட்டாச்சா?

-> மினி-கதைகள படிச்சாச்சா? (ஷைலஜா, சர்வேசன், உஷா, நானானி, பெனாத்தல், ஷக்தி இவங்க மினி-கதையெல்லாம் இருக்கு))

-> என் மினி-கதை "சீனு" படிச்சீங்களா? (ஹிஹிஹி - படிச்சு அழூதுட்டேன்னு ரெண்டு ரசிகர்கள் சொல்லீயிருக்காங்க :) ))

-> அரட்டை அடிச்சீங்களா?

-> என் மறுபக்க அலசல் பாத்தீங்களா? (weirdity)


வாழ்க வளமுடன்!

Tuesday, March 27, 2007

சிவாஜி படப் பாடல்கள் - ஒரு $அலசல்

ஒவ்வொரு ரஜினி படம் வரும்போதும் ஒரு பெரிய திருவிழா வருவதை போன்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

நான் தீவிர ரஜினி ரசிகன் இல்லைன்னாலும், ரஜினி படம் எல்லாத்தையும் பாத்துருவேன். சில படங்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கவும் பிடிக்கும்.

ஆரம்ப காலங்களின் பைரவி, ஆறிலிருந்து அறுபது வரை அப்பறம் இந்தக் காலத்து பாட்சா வரை பல படங்கள் பிடிக்கும். ( பாட்சா படத்துல, 'டேய் அண்ணண்டா' என்று, கல்லூரி முதல்வர் கூறும் காட்சி மெய் சிலிர்க்க வைத்தது என்று கூறுதல் மிகையாகாது :) ).

சிவாஜி படம், தங்க மலை ரகசியம் லெவல்ல படப்பிடிப்பு நடக்குது, பாடல்கள் எல்லாம் சீக்ரெட்டா வச்சிருக்காங்க. எவ்ளோ மூடி மறச்சாலும், நம்ம ஷெர்லாக் ஹோம்ஸ் ஆளுங்க மேட்டர மோப்பம் பிடிச்சு லீக் பண்ணிடறாங்க.
எனக்குத் தெரிஞ்சு, எதுவுமே ஒரு படத்த பத்தி தெரியாம, கண்ண கட்டி காட்ல விட்ட மாதிரி, தியேட்டர்ல கொண்டு போய் விட்டாதான், படத்தை நல்லா அனுபவிக்க முடியும்.

ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து படங்கள் லீக் ஆனதும் இல்லாம, 3 பாடல்களும் லீக் ஆயிடுச்சு.
பல கோடி போட்டு படம் எடுக்கரவங்களுக்கு இதெல்லாம் பெரிய பாதிப்புதான்.

அது சரி, இப்ப என்ன சொல்லவர நீன்னு, நீங்க புருவத்த தூக்கரது தெரியுது.

நம்ம மக்கள்ஸுகிட்ட இருக்கர "ஓ.சி" ஆசைய பத்தி ஏற்கனவே ஒரு சர்வே போட்டிருந்தேன். மக்கள்ஸும், எதிர்பார்த்த படியே, ஓ.சி ல கிடைக்கும், எம்.பி.3, திருட்டு சி.டிக்கு அதிக வாரியான வாக்குகளை போட்டு திக்கு முக்காட வச்சாங்க.

இப்ப இங்க என்ன கேள்வின்னா, சிவாஜி படப்பாடல்கள், காசு கொடுத்து வாங்குவீங்களா?
இல்ல, அதுவும் ஓ.சி தானா?
வாக்கு போட கீழ உள்ள அனுமானங்களை வைத்துக் கொள்வோம்.
1) பாடல்கள் எல்லாம் சூப்பரா இருக்குன்னு வச்சுக்குவோம்.
2) சி.டி குறைந்த விலையில் கிடைக்குதுன்னும் வச்சுக்குவோம்.

நானும் பெரிய யோக்கியன் எல்லாம் இல்ல. ஆனா, வருஷத்துக்கு அஞ்சு, ஆறு சி.டி க்கள் spencers music worldக்கு காசு கொடுத்து வாங்குவதும் உண்டு.

இப்ப, யோசிச்சு வாக்குங்க!(காசு கொடுத்து வாங்குவேன்னு சொன்னவங்க, பின்னூட்டி உங்க பேர சொன்னீங்கன்னா, இன்னும் ரெண்டு பேர inspire பண்ணும். சோ பின்னூடுங்க :) )

-> வேலு போய் டால்பின் வந்த படம்ஸ் பாத்தாச்சா?

-> க்ரிக்கெட்டு 2007 சர்வேக்கு ஓட்டு போட்டாச்சா?

-> மினி-கதைகள படிச்சாச்சா? (ஷைலஜா, சர்வேசன், உஷா, நானானி, பெனாத்தல், ஷக்தி இவங்க மினி-கதையெல்லாம் இருக்கு))

-> என் மினி-கதை "சீனு" படிச்சீங்களா? (ஹிஹிஹி - படிச்சு அழூதுட்டேன்னு ரெண்டு ரசிகர்கள் சொல்லீயிருக்காங்க :) ))

-> அரட்டை அடிச்சீங்களா?

-> என் மறுபக்க அலசல் பாத்தீங்களா? (weirdity)

வாழ்க வளமுடன்!

Monday, March 26, 2007

வேலு போயி டால்பினு வந்துது டும்டும்டும் - படம்ஸ்

இன்னாடா தலைப்பு இதுன்னு ரொம்ப மண்டைய கொடஞ்சு யோசிக்கிறீங்களா?

என்ன எழுதரதுன்னு தெரியாத போதும், யோசிச்சு எழுத நேரம் இல்லாத போதும், சர்வேக்கு ஐடியா இல்லாத போதும், அவசரத்துக்கு கை கொடுப்பது நம்ம புகைப் படங்கள் தான்.

சில நாட்களுக்கு முன் Los Angeles க்கும் San Diego க்கும், இடையில் உள்ள ஒரு குட்டி துறைமுகத்திலிருந்து, வேலு (Whale watch - திமிங்கலம்) பாக்கப் போனோம்.
Gray-திமிங்கலங்கள் இடப்பெயற்சி (migrate) செய்யும் கால கட்டமாம் இது.

ஒரு போட்ல 30 பேர் இருப்போம். சர்ர்ர்ர்னு கடலுக்குள்ள கூட்டிட்டு போனாங்க.
அருமையான நாள் அன்றைக்கு. இதமான வெயில், குளிர்ந்த காற்று அழகான கடல். சும்மா, டைட்டானிக் ரேஞ்சுல போட்டுக்கு முன்னாடி நின்னு ஜம்முனு போனோம்.

ஒரு ரெண்டு மணி நேரம் சுத்தியிருப்போம், வேலுவ காணவே காணோம்.

கேப்டன் (விஜயகாந்த் இல்ல) அப்பப்ப மைக்ல, திமிங்கலம் இங்க தான் இருந்தது, இப்ப காணோம். அதோ அதோ அங்க இருந்துது, இப்ப காணோம். 10 நிமிஷத்துக்கு முன்னாடி கண்டிப்பா இந்த ஏரியால இருந்த தடம் தெரியுது, இப்ப காணோம்.
இப்படி, 5 நிமிஷத்துக்கு ஒரு தரம் அப்டேட்டினே இருந்தாரு.

அப்பறம், இவ்ளோ தூரம் வந்தது வந்தாச்சு, உங்களுக்கு டால்பின்ஸ் (dolphin) காட்டறேன்னு ஒரு ரௌண்ட் அடிச்சு வேற எடம் போனாரு.
இந்த எடத்துல நூத்துக் கணக்குல டால்பின்ஸ் கண்ணுல பட்டுச்சு.. எங்க வருகைக்காகவே காத்திருந்த மாதிரி எங்க போட்டுக்கு முன்னாடி வந்து டேன்ஸ் எல்லாம் ஆடிச்சு.

எவ்ளோ நாள் வேணா பாத்துக்குட்டே இருக்கலாம் அதுங்களோட ஆட்டத்த.

ஒரு பத்து நிமிஷம் அத்த பாத்துட்டு, பை பை சொல்லிட்டு திரும்ப வூட்டுக்கு வந்துட்டோம்.

இதே மாதிரி 3 வருஷத்துக்கு முன்னாடி, வ.கலிபோர்னியால Monterey Bayக்கு (வேலு பாக்க இந்த இடம் ரொம்ப ப்ரசித்தி) வேலு பாக்க போனோம்.
நண்பர்கள் பட்டாளத்தோட போனது நல்லா இருந்தது. அன்னிக்கு வேலு பாத்தோம், ஆனா, வேலு, வெறும் வாலு மட்டும் தான் காட்னாரு. சோம்பேறி வேலர்.

நண்பர்களின் தங்கமணிகள் கடல் காற்று ஒத்துக் கொள்ளாமல், ஒருவர் மாற்றி ஒருவராக, வரிசையாக உவ்வே செய்து முற்றிலும் மறக்க முடியாத சம்பவமாக மாற்றியிருந்தார்கள்.
வேலு பாக்கலாமாடா என்று எப்பொழுதாவது கேள்வி எழுப்பினால், தங்கமணியின் கோப முகம் தான் ப்ளாஷ் அடிக்கும் நண்பர்களுக்கு.

கடந்த வார ட்ரிப்பில் க்ளிக்கின சில படம்ஸ்: (சிலது ஒரிஜினல், சிலது டிஜிட்டலி டச்ட். எதிர்பார்த்த அளவுக்கு ஒண்ணுமே தேறல)

An& ன் 'டச்'சுடன்:


-> க்ரிக்கெட்டு 2007 சர்வேக்கு ஓட்டு போட்டாச்சா?

-> மினி-கதைகள படிச்சாச்சா? (ஷைலஜா, சர்வேசன், உஷா, நானானி, பெனாத்தல், ஷக்தி இவங்க மினி-கதையெல்லாம் இருக்கு))

-> என் மினி-கதை "சீனு" படிச்சீங்களா? (ஹிஹிஹி - படிச்சு அழூதுட்டேன்னு ரெண்டு ரசிகர்கள் சொல்லீயிருக்காங்க :) ))

-> அரட்டை அடிச்சீங்களா?

-> என் மறுபக்க அலசல் பாத்தீங்களா? (weirdity)

வாழ்க வளமுடன்!

Sunday, March 25, 2007

கிரிக்கெட்டு - உலகக் கோப்பை 20007 -- சர்வே

எனக்கு கிரிக்கெட்டு மேல அவ்ளோ ஈடுபாடு இருந்ததில்லை.

தலையே போனாலும், ஒரு நிமிடம் கூட அந்த பக்கம் இந்த பக்கம் நகராமல், எந்த டீம் ஆடினாலும் கண் கொட்டாமல் பார்க்கும் நண்பர்களுக்கு மத்தியில் எனக்கு இந்த 'நோய்' வராதது ஆச்சரியம் தான்.

நண்பர்களில் சில தீவிரவாதிகளூம் உண்டு.. 1998ல, ஏதோ ஒரு மேச்ல சச்சின் 130 அடிச்சாராம். அத்த பாக்கும்போது நம் ப்ரெண்டு, மஞ்ச டீ-ஷர்ட் போட்டிருந்தாராம். அன்னிலேருந்து, அதே கண்ராவி மஞ்ச டீ-ஷர்ட் போட்டுக்கிட்டுதான் எல்லா மேட்ச்சையும் பாப்பாரூ இவரு.

இன்னும் சிலதுகள், தீவிரத்தின் உச்சத்துக்கே போயிடுவாங்க. சேம்பிளுக்கு சில வகையராக்கள்:
-> தரைல உக்காந்து பாத்தாதான் இந்தியா ஜெயிக்கும்
-> அம்மா கிச்சன்லயே இருக்கணும்
-> கோவிந்து லேட்டா வரக் கூடாது. லேட்டா வந்தாலும், வரும்போதே 'மச்சி, சச்சின் அவுட்டாடா' னு இளிச்சுக்கிட்டே வரக் கூடாது.
-> எதுத்த அணி ஆளு பவுளிங்க் போட ஓடி வரும்போது யாரும் கொட்டாவி, தும்மல் இதேல்லாம் கூடாது.
-> சச்சின் 50 கிட்டயோ, 100 கிட்டயோ இருக்கும்போது, அவசரமா முச்சா வந்தாலும் யாரூம் எழுந்துக்கக் கூடாதூ
-> மேட்ச் ந்டூல கரெண்ட் கட் ஆயிட்டு உடனே வந்தா நல்ல சகுனம்.

இன்னும் சொல்லிட்டே போகலாம், உங்களுக்கு தெரிஞ்சதும் சொல்லுங்க...

சரி, அத்த வுடுங்க...
இன்னைய மேட்டருக்கு வருவோம்.
2007 உலகக் கோப்பைல இந்தியாவுக்கு நடந்த சோகம் உங்களுக்கே தெரியும். வெந்த புண்ணுல வேல பாச்சாம மேட்டர பாப்போம்..

இந்தியா, படு தோல்வியால் வேளியேறியதில், என் 'தீவிரவாத' நண்பர்களுக்கு செம கடுப்பு.
-> ப்ளேயர்ஸ் எல்லாரையும் நாடு கடுத்தணும்
-> அவங்களுக்கு குடுத்த சம்பள பணம் திரும்பப் பெறணும்
-> விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்கணும்
இப்படி இலவச ஐடியாஸ் அள்ளி வீசராங்க.

எலே, வெளையாட்டுல வெற்றி தோல்வியெல்லாம் சகஜமடா. எல்லாரும் ஜெயிக்க முடியாதுடா.
நீ கூட தான் சம்பளத்துக்கு ஆணி புடுங்கர. சில சமயம், சரியா புடுங்காததால, பின் விளைவுகள் நெறைய வருது. அதுக்காக 'தார்மீக' பொறுப்பேத்துக்கிட்டு 'என் சம்பளத்த கொறச்சிடுங்கன்னு' சொல்லிருக்கியா என்ன? :)
இப்படியெல்லாம் கேட்டா அடிக்க வராங்க்ய.

நீங்க என்ன சொல்றீங்க?
நல்லா யோசிச்சு தீர்ப்பு சொல்லுங்க (ஹ்ம், இந்தியா 2007 கப் ஜெயிக்குமான்னு சர்வே போட்டிருக்க வேண்டியது. இன்னைக்கு நெலம இப்படீ ஆயிடுச்சூ:) )


-> மினி-கதைகள படிச்சாச்சா? (ஷைலஜா, சர்வேசன், உஷா, நானானி, பெனாத்தல், ஷக்தி இவங்க மினி-கதையெல்லாம் இருக்கு))

-> என் மினி-கதை "சீனு" படிச்சீங்களா? (ஹிஹிஹி - படிச்சு அழூதுட்டேன்னு ரெண்டு ரசிகர்கள் சொல்லீயிருக்காங்க :) ))

-> அரட்டை அடிச்சீங்களா?

-> என் மறுபக்க அலசல் பாத்தீங்களா? (weirdity)

வாழ்க வளமுடன்!

Friday, March 23, 2007

சர்வேசனின் மறுபக்கம் - வியர்டு பட்டியல் + அழைப்பிதழ்

உங்க கிட்ட இருக்கர weird பழக்கவழக்கங்களை பட்டியலிடுங்கன்னு சிறில் கிட்டயிருந்து அழைப்பு வந்தது. (அதென்னய்யா weird? weird spellingஏ weirdஆ இருக்கே. wierd?).

(Weird = Of a mysteriously strange and usually frightening nature)
அதாகப்பட்டது, வியர்ட் - ஒரு வித்யாசமான, மற்றவர்களை திடுக்கிட வைக்கும் பயக்கம்.
உ.ம், சில பேர் தனக்குத் தானே பேசிப்பாங்க - தூர நின்னு வேடிக்க பாக்க தமாஷா இருக்கும். ஆனா, பாவம் அவங்களுக்கு என்ன ப்ரச்சனையோன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கும்.
இப்ப blue-tooth உதவியால, நானும், 'தனக்குத் தானே' பேசிக் கொள்ளும் ஆட்களைப் போல், பல இடங்களில், பல பேருக்கு, வியர்டா காட்சி தருகிறேன். :)

வியர்ட் என்ற வார்த்தையை கேட்டவுடன் நினைவுக்கு வருபவர் நம்ம Jim Carrey தான். உங்களுக்கு Jim Carrey பிடிக்குமா? எனக்கு பயங்கரமா பிடிக்கும்.
அவர் ஒவ்வொரு படமும் பாத்து விழுந்து விழுந்து சிரிப்பேன். அதுவும், Ace Ventura, Dumb & Dumber - அடேங்கப்பா, செம தூள்!

வியர்டுக்கு அகராதில, Jim Carrey னு மாத்தி கூட எழுதிடலாம்.
சேம்பிளுக்கு ஒண்ணு இங்க பாருங்க: Jim Carrey the great.

சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்.

செய்யரது weirdனு தெரிஞ்சா, தொடர்ந்து செய்வோமா என்ன? தெரியாம சில பயக்கவயக்கம் அப்டியே maintain ஆயிருக்கும்.
ஹ்ம். யோசிச்சு யோசிச்சு பாத்ததுல வந்த மேட்டர, கீழ கொடுத்திருக்கேன்.
எல்லாமே வியர்ட்னு சொல்ல முடியாது. சில கெட்ட பயக்கமும் கொடுத்திருக்கேன்.

மொதல் மேட்டரு, நான் அதிகம் பேசரவன் கிடையாது. ஒரு வார்த்தை வாய விட்டு உதிரணும்னா, என்னமோ ஒரு லட்சம் செலவாயிடுங்கர ரேஞ்சுல தான் பேசுவேன்.
'Man of few words'னு எங்க ஆபீஸ் வட்டாரத்துல ப்ரபலம்.
தல போற விஷயம் விவாதிச்சாலும், telegraph கொடுக்கர மாதிரி, தேவையானத மட்டும் தான் பேசுவேன்.
நட்பு வட்டாரத்துல இந்த வியர்ட்னெஸ் அவ்வளவா தெரியாது.
சில நேரத்துல இது வியர்ட், பல நேரத்துல அறிவு ஜீவித்தனம் மாதிரி தெரியரதால, நானும் ரொம்ப கண்டுக்கரதுல்ல :)

பள்ளி நாட்கள்ள, ஆனா வூனான்னா, மொட்ட மாடீல போய் ஒக்காந்துருவேன்.
வானத்த பாத்துக்கிட்டு, ஒரே திங்கிங் தான். இது அதுன்னெல்லாம் கிடையாது, சகலமும் 'திங்க்'குவேன்.
வீட்ல இல்லன்னா மாடீல இருப்பேன்னு 'default'ஆ புரிஞ்சுப்பாங்கன்ற அளவுக்கு மொட்ட மாடியே கதின்னு இருப்பேன். (என்னது? பக்கத்து வீட்டு பிகரா? அதெல்லாம் இல்லீங்க :) ). இப்ப இந்த மொட்ட மாடி மேட்டர் விட்டாச்சு - இப்பெல்லாம் வானம் எங்க தெரியுது? ஹ்ம்!

ஏற்கனவே சொன்ன மாதிரி, பேச்சு கம்மி - அதனால, keeping-in-touch என்ற பழக்கமே கிடையாது. ஊர் மாறும்போதும், வேலை மாறும்போதும், பழைய ஆட்கள அப்படியே மறந்துடுவேன். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. but, still, very bad weirdity இதுதான். அது என்னமோ தெரியல, ஒரு மேட்டர் இல்லாம, ஒருத்தர phoneல கூப்பிடணும்னா, சுத்தமா புடிக்கரதுல்ல. :)

சாப்பாட்டு விஷயத்துல வியர்டா ஒண்ணும் பெருசா தோணல - தயிர் சாதம் சாப்பிடலன்னா சாப்பிட்ட மாதிரி இருக்காது; சின்ன வயசுல, சிக்கன், fish-fry, முட்டை இதெல்லாம் சாப்டாம தட்டு ஓரத்துல அப்படியே மெயின்டெய்ன் பண்ணி, தயிர் சாதம் சாப்பிட்ட அப்பறம் ஒரு வெட்டு வெட்டுவேன் :)
தயிர் சாதத்துல ரசம் ஊத்தி சாப்பிடுவேன் (ட்ரை பண்ணி பாருங்க, ஒரு விதமான சூப்பர் காம்பினேஷன் அது).
spriteல உப்பு போட்டு குடிச்சா நன்னாருக்கும். ( cokeல பெப்பர் போட்டு குடிக்கரவங்க தள்ளி ஒக்காருங்க :) )
half-boil விரும்பிச் சாப்பிடுவேன்.

தானா எதுவும் படிக்க பிடிக்காது. ரொம்ப ரொம்ப தேவைன்னா மட்டும் ad-hoc reading செய்வேன்.

கடவுள் நம்பிக்கை இருந்தாலும், கோயிலுக்கு கெளம்பணும்னா ரொம்ப யோசிப்பேன். மூணு மாசத்துக்கு ஒரு தடவ, உண்மையாவே ஒரு பீலிங் வந்தாதான் போவேன்.

சிரிச்ச முகமாவே இருக்கியேடா, ஓவரா சிரிக்கரடா, சொல்லிட்டுச் சிரி, இல்ல சிரிச்சிட்டு சொல்லு - இப்படி பலவிதமா சொல்லியிருக்காங்க நம்மள பாத்து. மொத்தத்துல அவ்வளவா கவலைப்படாத 'டேக் இட் ஈஸி' ஆளுங்க நானு. ஹோப் இட் ஸ்டேஸ் தட் வே.

சரி, இப்போதைக்கு இது போதும். அடுத்ததா நம்ம வியர்டிட்டி continue பண்ண, நம்ம hall-of-fame ஆளுங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். (ஏற்கனவே வியிர்டிட்டீங்கன்னா உங்க லிங் சொல்லுங்க போட்டுடலாம்).

1) வெட்டிப்பயல் - வியர்டிட்டாரு பாருங்க
2) நெல்லை சிவா
3) பெருசு
4) Aparnaa - வியர்டிட்டாnga பாருங்க
5) சந்தோஷ்பக்கம் - - வியர்டிட்டாரு பாருங்க

வந்தது வந்தீங்க, நான் எழுதின கதை படிச்சீங்களா?

சீனு - mini கதை

மினி கதைப் போட்டி நடக்குதே தெரியுமா? ஷைலஜா, நானு, உஷா, ஷக்தி, பெனாத்தல் சுரேஷ், நானானி எல்லாரும் கோதால இருக்கோம். க்ளிக்கி படிங்க.

பாட்டுக்கு பாட்டயும் கண்டுக்கோங்க

அரட்டையும் அடிங்க
மொத்தத்துல நல்லா இருங்க! :)

Sunday, March 11, 2007

சினிமா பாடல்கள் பாட part-time பாடகர்கள் தேவை

 
பாட்டுக்கு பாட்டு சங்கிலிப் பதிவு ஆரம்பிச்சு சூடா போயிக்கிட்டிருக்கு.

19 பாட்டு இதுவரைக்கும் தொடர்ல இருக்கு.

பல பேர் கலந்துக்க வெட்க்கப்பட்டு இன்னும் ஒதுங்கியே இருக்கீங்க.

பாடரது ஒரு ஜாலியான விஷயம். படிக்கர காலத்துல அதுக்கெல்லாம் வாய்ப்பிருந்தும் ஸ்டேஜ் பயத்தால ஒதுங்கியே இருந்திருப்போம். இங்கதான் ஸ்டேஜ் இல்லியே, வந்து அடிச்சு ஆடுங்க லேடீஸ் & ஜென்டில்மென்.

கடைசியா, 'வ'கரத்தில், வனிதாமணி வனமோகினி பாட்ட நான் பாடி (hee hee hee), இப்போ, டு அல்லது உ வரிசைல பாட அனாமிகா கிட்ட மைக் கொடுத்தாச்சு.

அனாமிகாவ தொடர்ந்து, ஷைலஜா, ஷக்தி, SriShiv, செந்தழல் ரவி, சர்வேசன் பாட ரெடியா இருக்கோம்.

பெயர் கொடுக்காதவங்க பெயர் கொடுங்கள்.

தொட‌ர் வேக‌மா வ‌ள‌ர‌, பின்னூட்ட‌ம் மாட‌ரேஷ‌ன் தூக்கியாச்சு. வ‌ரிசைல‌ அடுத்த பாட்ட பாடப் ‌போற‌வ‌ங்க‌, என்ன‌ பாட்டு பாட‌றீங்க‌, எதுல‌ முடிப்பீங்க‌ன்னு சொல்லிட்டா அடுத்த‌ ஆள் ரெடியாயிட‌லாம். அதே போல், பாடி முடித்த‌தும் MP3 file esnips மாதிரி த‌ள‌த்தில் நீங்க‌ளே அப்லோட் செய்து, உர‌ல் பின்னூட்டிடுங்க‌. நான் நேர‌ம் கிடைக்கும்போது, பாட்டுக்கு பாட்டு வ‌ரிசைப் பெட்டியில் சேர்த்துவிடுவேன்.

ந‌ன்றீஸ். ஜ‌மாய்ங்க‌!

பி.கு: நேயர் விருப்ப‌த்தையும் கொஞ்ச‌ம் க‌வ‌னிங்க‌.

அரட்டை அரங்கத்தையும் கவனிங்க‌

-சர்வேசன்

Monday, March 05, 2007

நேயர் விருப்பம் - நான் நடித்த படத்திலிருந்து ஒரு பாடல் & more...

தேன்கூட்டில் 'நேயர் விருப்பம்' பதிவை சேர்க்க இயலாததால், ஒரு கயமை பதிவு, சர்வே‍‍‍‍‍சனிலிருந்து.

நான் நடித்த படம் பற்றி அறிய கீழே க்ளிக்கவும். :)

ஆறாவது நேயர் விருப்பம் பதிவு இங்கே

சாரி! :)

Friday, March 02, 2007

ஈ.மெயிலில் வந்தது

Olny srmat poelpe can raed.
cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid,
aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it deosn't mttaer in waht oredr the ltteers in a wrod are, the olny iprmoatnt tihng is taht the frist and lsat ltteer be in the rghit pclae.
The rset can be a taotl mses and you can sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe.
Amzanig huh? yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt!தமிழுக்கு இது பொறுந்துமா? மேல படிங்க:

புசாத்லிதிளாகல் மடுட்ம் தான் பக்டிக முயுடிம்.

மேலே உளள்தை பக்டிக முயுடிம் எபன்தை எனான்ல்

நபம்வே முயவில்டிலை.


மனித மூயிளைன் அரிபமாதன சதிக்யை

என்ன்பனெது.


காப்ம்ட்ரிஜ் பழலைகக்வ்ல்கவ்த்ல் செய்த ஆச்ய்ராயிசில்,

வாதையிர்த்ல் முதலும் கடைசி எக்கத்ழுதுள் தான் சயாரிய் இமாணுருகக்ம், மற்ற

எக்கத்ழுதுள் எபப்டி இலுதாந்ரும் மனித மூளை புந்ரிது கொமாளுள்ம்.
என்ன புரிஞ்சுதா மக்கள்ஸ்? :)


Hஆv எ க்rஏட் வீk எnட்!!!

பி.கு:
சர்வேசன், SK, Jeeves பாடித் தள்ளியிருக்கும், தம்பியின் விருப்பப் பாடல், உனக்கென்ன மேலே நின்றாய் கேட்டாச்சா?

ரொம்ப வெட்டியா இருந்தா அரட்டை அரங்கம் வாங்க.

தூக்கத்தை கெடுக்கும் கேள்விக்கு பதில் சொல்லியாச்சா?

அப்படியே, புது டெம்ப்ளேட் கலரிங், லே-அவுட் பத்தியும் கருத்து சொல்லிட்டுப் போங்க.